புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏனிந்தப் போலித்தனம்? Poll_c10ஏனிந்தப் போலித்தனம்? Poll_m10ஏனிந்தப் போலித்தனம்? Poll_c10 
95 Posts - 52%
heezulia
ஏனிந்தப் போலித்தனம்? Poll_c10ஏனிந்தப் போலித்தனம்? Poll_m10ஏனிந்தப் போலித்தனம்? Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
ஏனிந்தப் போலித்தனம்? Poll_c10ஏனிந்தப் போலித்தனம்? Poll_m10ஏனிந்தப் போலித்தனம்? Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ஏனிந்தப் போலித்தனம்? Poll_c10ஏனிந்தப் போலித்தனம்? Poll_m10ஏனிந்தப் போலித்தனம்? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஏனிந்தப் போலித்தனம்? Poll_c10ஏனிந்தப் போலித்தனம்? Poll_m10ஏனிந்தப் போலித்தனம்? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஏனிந்தப் போலித்தனம்? Poll_c10ஏனிந்தப் போலித்தனம்? Poll_m10ஏனிந்தப் போலித்தனம்? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஏனிந்தப் போலித்தனம்? Poll_c10ஏனிந்தப் போலித்தனம்? Poll_m10ஏனிந்தப் போலித்தனம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏனிந்தப் போலித்தனம்? Poll_c10ஏனிந்தப் போலித்தனம்? Poll_m10ஏனிந்தப் போலித்தனம்? Poll_c10 
35 Posts - 58%
heezulia
ஏனிந்தப் போலித்தனம்? Poll_c10ஏனிந்தப் போலித்தனம்? Poll_m10ஏனிந்தப் போலித்தனம்? Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
ஏனிந்தப் போலித்தனம்? Poll_c10ஏனிந்தப் போலித்தனம்? Poll_m10ஏனிந்தப் போலித்தனம்? Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஏனிந்தப் போலித்தனம்? Poll_c10ஏனிந்தப் போலித்தனம்? Poll_m10ஏனிந்தப் போலித்தனம்? Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏனிந்தப் போலித்தனம்?


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Aug 08, 2012 8:02 am

ஏனிந்தப் போலித்தனம்? Images+(5)

லாட்டரிச் சீட்டு வாங்காமலேயே தனக்குக் கோடி ரூபாய் பரிசு விழ வேண்டும் என்று நினைப்பவரை எள்ளிநகையாடும் நாம், விளையாட்டில் எந்தவித ஆர்வமும் காட்டாமல், ஒலிம்பிக் போட்டியில் மட்டும் பதக்கங்களை இந்தியா அள்ளி வர வேண்டும் என்று பேராசைப்பட்டால் எப்படி?

ஒலிம்பிக் தடகளப் போட்டிக்குத் தகுதிபெற்றுப் பங்கேற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 14-ஐத் தாண்டாதபோது, நிறையப் பதக்கங்களைக் கனவுதான் காண முடியுமே தவிர, நடைமுறையில் அது எப்படிச் சாத்தியம்?இன்றைய தேதிவரை நாம் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ககன் நரங், விஜயகுமார் இருவரது வெற்றியால் ஒரு வெண்கலம், ஒரு வெள்ளி பெற்றோம். சாய்னா மூலம் ஒரு வெண்கலம் கிடைத்தது. மேரி கோம் அரையிறுதியில் நுழைந்துள்ளதால் வெண்கலம் உறுதி, தங்கம், வெள்ளி கிடைப்பது போட்டியைப் பொறுத்தது. ஆக, 13 விளையாட்டுகளில் பங்கேற்கச் சென்ற 83 பேர் கொண்ட இந்திய அணி இதுவரை பெற்றிருப்பது நான்கே நான்கு பதக்கங்கள்!

பாட்மிண்டன் போட்டியில் சாய்னா தங்கம் வெல்வார் என்று அவரது தரவரிசையைக் கருத்தில்கொண்டு நம்பிக்கை வைத்தோம். அவர் வெண்கலம்தான் பெற முடிந்தது. அடுத்த நம்பிக்கை கிருஷ்ணா பூனியா வட்டெறிந்து சாதனை நிகழ்த்துவார் என்று நம்பினோம். அவரால் ஏழாவது இடத்துக்குத்தான் வர முடிந்தது. இது இவர்களின் தவறு அல்ல. இவர்களது திறமையை மேலும் பட்டைதீட்டத் தவறிய இந்திய அரசின் தவறு. ஒலிம்பிக் நேரத்தில் மட்டும் இவர்களைத் திரும்பிப் பார்ப்பதும் மற்ற நேரங்களில் மறந்துவிடுவதும் இந்திய விளையாட்டுத் துறையின் தவறு.

ஒலிம்பிக்கில் மற்றவர்களோடு போட்டியிட்டு விளையாடி, தகுதித்தேர்வு நிலையிலேயே, அல்லது காலிறுதி, அரையிறுதியில் வெளியேறும் நம் இந்திய வீரர்களை, ஏதோ அவர்கள் தேசத் துரோகம் செய்துவிட்டதைப்போன்று கூனிக் குறுகிப் போகச் செய்கிறது நமது எதிர்பார்ப்புகள்.

அவர்கள் விளையாடத் தேவையான எதையும் செய்து கொடுக்காத இந்திய அரசை நாம் குற்றஉணர்ச்சிக்கு உள்ளாக்காமல், உலகத் தரத்துக்கு இணையாக ஆட இயலாமல் பின்தங்கிப் போன இந்திய வீரர்களின் குற்றஉணர்ச்சியைத் தூண்டி, கண்ணீர் சிந்த வைப்பதால் என்ன பயன்?

ஒலிம்பிக் சென்ற இந்திய வீரர்கள் விருதுகள் பெறாமல் திரும்பினால் அது அவர்கள் குற்றமல்ல. உலகத் தரத்துக்கு இணையான வீரர்களை உருவாக்கத் தவறிய இந்திய அரசின் குற்றம். விளையாட்டுப் போட்டியில் ஆர்வம் செலுத்தாமல், ஆனால், விளையாட்டுக்கான நிதிஒதுக்கீட்டில் முறைகேடு செய்வதில் மட்டும் ஆர்வம் காட்டும் அரசியல்வாதிகளின் குற்றம்.

தற்போது நான்கு விருதுகள் பெற்றவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு ரொக்கப் பரிசை அள்ளி வழங்கும். இதே ஆர்வத்தை விளையாட்டு மேம்பாட்டுக்காக, பயிற்சிக்காக அரசுகள் செலவிடுவதில்லை. இந்த நான்குபேரில் துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் சொந்தத் திறமையால் அதைச் சாதித்தனர். அந்த ஏகலைவர்களுக்கு அர்ஜுனா விருது நிச்சயம்.

ஒலிம்பிக் தடகளத்தில் இதுவரை இறுதிச்சுற்றில் பங்கேற்றவர்கள் மில்கா சிங், பி.டி.உஷா, எஸ்.ஸ்ரீராம், குர்பஜன் சிங், அஞ்சு பாபி ஜார்ஜ். இப்போது ஆறாவது நபராக பூனியா. ஆறே ஆறு பேர் மட்டுமே!இந்த நிலைமைக்காக வருத்தப்படவும், வேதனைப்படவும் செய்யாத இந்தியர்கள், பதக்கங்களை நாம் வென்றெடுக்கவில்லை என்று வருத்தப்படுவதில் அர்த்தம் இல்லை.ஒவ்வொரு விளையாட்டுக்கும் நல்ல பயிற்சிக்களம், பயிற்சியாளர், விளையாட்டுக் கருவிகள் ஊக்கத்தொகை போன்ற எதையுமே வழங்காமல், அதிலும்கூட ஊழல் செய்தால், நாம் விருதுகளை எப்படிப் பெறமுடியும்? பொறியியல் கல்லூரியிலும் மருத்துவக் கல்லூரியிலும் இடம் பெறுவதற்காக மட்டுமே விளையாட்டைப் பயன்படுத்தும் ஊழல்களால் எப்படி சர்வதேச விருது கிடைக்கும்?

பொருளாதார ரீதியில் 9-வது இடத்திலும் மக்கள் தொகையில் இரண்டாம் இடத்திலும் உள்ள இந்தியாவினால் 4 பதக்கங்கள் மட்டுமே வெல்ல முடிந்ததை எண்ணி வருந்தும் இந்தியர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறார்கள்; இத்தகைய நிலைமைக்கு அரசுக்கு எந்த அளவுக்குப் பொறுப்போ அதே அளவு மக்களுக்கும் உள்ளது.இந்தியாவில் எந்த நாளிலும் தொலைக்காட்சியில் காண நேர்ந்த விளையாட்டு, இந்தியர்களுக்கு எல்லா வீரர்களின் பெயரும் அத்துப்படியான விளையாட்டு கிரிக்கெட். நம் துரதிருஷ்டம், அந்த விளையாட்டு ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறவில்லை. கிரிக்கெட் ஒன்றைத் தவிர, எந்த விளையாட்டைப் பற்றியும் என்றைக்கும் கவலைப்படாமல், ஒலிம்பிக் நேரத்தில் மட்டும் நமது வீரர்கள் தங்கப் பதக்கமும், வெள்ளிப் பதக்கமும் பெறவில்லையே என்று நாம் ஆதங்கப்படுவது போலித்தனம் அல்லாமல் வேறென்ன?

ஒவ்வொரு விளையாட்டிலும் பயிற்சிபெறத் தேவையான விளையாட்டுக் களம், சூழல், சிறந்த பயிற்சியாளர்கள் போன்ற அனைத்தையும் உறுதி செய்து, அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு இப்போதே வீரர்களைத் தயார்படுத்திட அரசாங்கத்தை வலியுறுத்துவது எப்படி நமது கடமையோ, அதேபோன்று தங்கள் குழந்தைகளை விளையாட அனுப்பி வைப்பதும் மக்களின் கடமை. குழந்தைகளுக்கு பல விளையாட்டுகளைக் காட்டி, அவர்களுக்கான விளையாட்டைத் தேர்வு செய்ய சுதந்திரம் தர வேண்டும். கிரிக்கெட்டும், செஸ்ஸýம் மட்டுமே விளையாட்டு என்கிற மனோபாவம் ஏற்பட்டிருப்பதில் பெற்றோருக்கும் பங்கு இருக்கிறது.

தங்கள் வீட்டுக் குழந்தைகளைப் பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்யாத எந்த ஒரு இந்தியனுக்கும், லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் விருதுகளை அள்ளி வரவில்லையே எனக் குற்றம் சொல்லும் தார்மிக உரிமை இல்லை!

நன்றி தின மணி

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 08, 2012 8:23 am

சூப்பருங்க :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Aug 08, 2012 8:44 am

மிகவும் உண்மையான கருத்து சோகம் ...பதிவுட்ட முரளிக்கு நன்றி மகிழ்ச்சி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 08, 2012 8:52 am

மிகவும் உண்மையான நேர்மையான கட்டுரை... தினமணிக்கு பாராட்டுக்கள். முரளிக்கும் தான்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக