புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_c10 
26 Posts - 67%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_c10 
11 Posts - 28%
cordiac
ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_c10 
1 Post - 3%
Geethmuru
ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_c10 
153 Posts - 56%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_c10 
2 Posts - 1%
prajai
ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_c10 
1 Post - 0%
cordiac
ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 15 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்


   
   

Page 15 of 36 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 25 ... 36  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 1:22 pm

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****



சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Feb 27, 2014 5:51 pm

அபாரம் ரமணி ஐயா.. கட்டளைக் கலிவிருத்தத்தின் விதிகள் எழுதியிருக்கிறீர்களா.. கட்டளைக் கலித்துறை முயன்றிருக்கிறேன்.. விருத்தம் முயன்றதில்லை..

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Feb 27, 2014 8:17 pm

வணக்கம் திரு. சின்னக்கண்ணன்.

உங்கள் பாராட்டுக்கு நன்றி. கட்டளைக் கலிவிருத்தம் என்று தனியான கலிப்பாவினம் இல்லை. கலிவிருத்தம் கட்டளையாக--அதாவது ஒவ்வோர் அடியிலும் எழுத்துகளின் எண்ணிக்கை ஒன்றுபோல்--அமைந்தால் அதைக் கட்டளைக் கலிவிருத்தம் எனலாம். அடிகள் நிரையசையில் தொடங்கின் ஒற்றுகள் தவிர்த்து 13 எழுத்துகளும், நேரசையில் தொடங்கின் 12 எழுத்துகளும் வரவேண்டும்.

இந்தப் பாடலின் ஓலிநயத்துக்குக் காரணம் அதன் புஜங்க அமைப்பே. சமஸ்கிருத மொழியில் போன்று தமிழிலும் புஜங்க அமைப்பு ’லகு-குரு-குரு’ என்ற நிரலில் ஒவ்வோர் அடியிலும் நான்கு முறை வரவேண்டும். தமிழில் ’லகு’ என்பது ஒரு குறிலாகக் கொள்ளலாம். ’குரு’ என்பது ஒரு நெடிலாகவோ அல்லது ஒற்றடுத்துவரும் குறிலாகவோ கொள்ளலாம். இப்படி வரும்போது அடிகள் நிரையசையில் தொடங்கி (நேரசையில் தொடங்க முடியாது என்பதை அறிக) ஒவ்வோர் அடியிலும் 12 எழுத்துகளே வரும்.

உதாரணங்கள்:

’அருத்தன் நிருத்தன் கருத்தன் விருத்தன்’ .. குறில்+குறிலொற்று+குறிலொற்று
’நிலாவே யுலாவா னிலாதான மீனே’ - குறில்+நெடில்+நெடில்
’இரந்தே கபாலத்தி லேற்றுண்ணு மீசன்’ - இரு வகைகளும் கலந்து வருவது

இந்தப் பாடலை நான் ஆதி சங்கரரின் சமஸ்கிருத துதி ’கணேஶ புஜங்கம்’ அடிப்படையில் முயன்றேன். மூலத் துதியின் ஆங்கில வடிவமும் பாட்டும் கீழே உள்ள சுட்டிகளில்:

https://www.youtube.com/watch?v=T6WAHTyZwGo
http://dailyslogams.blogspot.in/2013/01/sri-ganesha-bhujanga-stotram.html

நீங்களும் மற்ற அன்பர்களும் புஜங்கம் முயன்று பார்க்கலாமே?

அன்புடன்,
ரமணி

*****


சின்னக் கண்ணன் wrote:அபாரம் ரமணி ஐயா.. கட்டளைக் கலிவிருத்தத்தின் விதிகள் எழுதியிருக்கிறீர்களா.. கட்டளைக் கலித்துறை முயன்றிருக்கிறேன்.. விருத்தம் முயன்றதில்லை..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Mar 02, 2014 10:23 am

அன்பின் ரமணி ஐயா,
விரிவான பதிலுக்கு நன்றி.. விருத்தம் பற்றிய விளக்கத்துக்கும் நன்றி..

புஜங்கமா.. நானா..(டிஆர். மகாலிங்கம் குரலில் வாசிக்கவும் புன்னகை ) இருப்பினும் முயற்சி செய்கிறேன்..

அன்புடன்
சின்னக் கண்ணன்..

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Mar 05, 2014 9:00 am

சிவராத்திரி துதி
(எண்சீரடி விருத்தம்: புளிமாங்காய் மா காய் காய் மா கூவிளம் கூவிளம்)

பகலாகும் சக்தி யிரவாகும் சிவமே
. அவைசேரும் தினமே - அர்த்தநா ரீசிவன்!
புகலாகும் சக்தி வுயிராகும் சிவமே ... [புகல் = உடம்பு]
. உருவாகும் மனிதன் - அர்த்தநா ரீசிவன்!
இகலாகும் நெஞ்சில் ஒன்றாகும் எண்ணத்
. தெளிவாகும் உள்ளம் - அர்த்தநா ரீசிவன்!
உகவாயோ நெஞ்சே உனைநீயும் கொண்டே
. உன்மூலம் காண - அர்த்தநா ரீசிவன்! ... 1

இடமாடும் பாதம் வலமாடும் போது
. எழுலோகம் மாறும் - அர்த்தநா ரீசிவா!
விடையாடப் பிறையோ டலைபாயு மாறும்
. இடையாடும் உரிவை - அர்த்தநா ரீசிவா!
படையாவும் ஆடக் காலங்கள் மாறும்
. பரிணாமம் நேரும் - அர்த்தநா ரீசிவா!
தடையாவும் விள்ளும் பரிமாணம் மாறும்
. சடையாகப் பின்னும் - அர்த்தநா ரீசிவா! ... 2

இறவாத வாழ்வும் பிறவாத நிலையும்
. பெறுவேனோ நானும் - அர்த்தநா ரீசிவா!
குறையாத ஞானம் குன்றாத அன்பில்
. உறைவேனோ நானும் - அர்த்தநா ரீசிவா!
மறையாவும் போற்ற மன்றாடும் தேவா
. மனம்வந்தே ஆடு - அர்த்தநா ரீசிவா!
திறையாவும் தீர்ந்த நிறையாக்கி யென்னைப்
. பிறையாகச் சூடாய் - அர்த்தநா ரீசிவா! ... 3

--ரமணி, 27/02/2014, கலி.15/11/5114
(சிவராத்திரி தினம்)

*****


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Mar 05, 2014 2:39 pm

கஷ்டம் தான்..சின்னதா முயன்றிருக்கிறேன்..
புளிமாங்காய் மா காய் மா
காய் மா  கூவிளம் கூவிளம்


கவிதையிலே சிவத்தை துதித்தீரே அழகாய்
..கருணையுடன் அவனும் கண்திறந் துமது
பவித்திரமாம் அன்பைப் பக்குவமாய் உணர்ந்தே
..பலவாறாய்த் தருவான் நாளிலும் நன்மைகள்
தவிக்கின்ற மனதைத் தயங்காமல் தேற்றி
..தங்கமென ஜொலிக்க ஆரமாய் இங்குதான்
நவின்றிடுவீர் இன்னும் நயங்களுடன் பாடல்
..நலமுடனே தரவும் பொங்குமே இன்பமே


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Mar 05, 2014 6:40 pm

அழகு!

பெரியோர்களிடம் கற்றது மறக்குமா என்ன? நிறைய எழுதுங்கள். சந்தவசந்தம் குழுமத்திலும் வாருங்கள்.

ரமணி

சின்னக் கண்ணன் wrote:கஷ்டம் தான்..சின்னதா முயன்றிருக்கிறேன்..
புளிமாங்காய் மா காய் மா
காய் மா  கூவிளம் கூவிளம்


கவிதையிலே சிவத்தை துதித்தீரே அழகாய்
..கருணையுடன் அவனும் கண்திறந் துமது
பவித்திரமாம் அன்பைப் பக்குவமாய் உணர்ந்தே
..பலவாறாய்த் தருவான் நாளிலும் நன்மைகள்
தவிக்கின்ற மனதைத் தயங்காமல் தேற்றி
..தங்கமென ஜொலிக்க ஆரமாய் இங்குதான்
நவின்றிடுவீர் இன்னும் நயங்களுடன் பாடல்
..நலமுடனே தரவும் பொங்குமே இன்பமே


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Mar 10, 2014 6:41 pm

தெய்வ தரிசனம்: அரங்கன் பஞ்சகம்
(கலிவிருத்தம்)

குரங்காட்ட வாழ்வில் கோணல்கள் தானே?
அரங்காட்டு வாரே அரங்கத்தி லாள ... [அரம் = கூர்மை/கருவி]
உரங்காட்டி எம்மை உய்விப்போர் ஆரே? ... [உரங்காட்டுதல் = அன்பு பாராட்டுதல்]
அரங்காவுன் கண்ணால் ஆட்கொண்ட ருள்வாய்! ... 1

குரங்காயுன் தோழர் வலங்காட்டி மனையாள் ... [வலம் = வெற்றி]
உரங்காட்டிக் காத்தே உன்பாதம் கொண்டார்
சிரங்காளு மேனி சிரஞ்ஜீவி யாமோ?
அரங்காவுன் கழலால் ஆட்கொண்ட ருள்வாய்! ... 2

எரங்காட்டில் வீழ்ந்தே எரியுண்ணும் மேனி ... [எரங்காடு = பாழ்நிலம்]
திரங்காட்டிக் காத்தே தீமைகள் சேர்த்தேன் ... [திரம் = உறுதி]
சிரங்காட்டு மனமுள் சிங்காரம் குன்ற
அரங்காவுன் கையால் ஆட்கொண்ட ருள்வாய்! ... 3

அறங்காட்டும் வழியில் ஆளாகிப் போகேன்
திறங்காட்டி வாழ்வில் தீவாகிப் போனேன்
உறங்காமல் உறங்கி உரகமணை யண்ணல் ... [உரகம் = பாம்பு]
அரங்காவுன் அருகே ஆட்கொண்ட ருள்வாய்! ... 4

சிரங்காட்டிக் கரங்காட்டிக் குரங்காட்டி யாகி
உரங்காட்டி யறங்காட்டி மறங்காட்டி யென்னை
பரங்காட்டித் துரங்காட்டித் துறங்காட்டி யென்றும் ... [துரம் = சுமை/பொறுப்பு; துறம் = துறவு]
அரங்காவுன் னுடனே ஆட்கொண்ட ருள்வாய்! ... 5

--ரமணி, 23/02/2014, கலி.11/11/5114

*****


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82462
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 11, 2014 8:59 am

-
மாட்டுக்கு இருப்பது வால், மரத்தை அறுப்பது வாள்
என்று அந்த காலத்திலே பள்ளிக்கூடத்தில் தமிழை
சொல்லிக் கொடுத்தார்கள்...
-
அப்படி படித்தவர்களால்,தமிழை பிழையின்றி எழுதவும்
சங்க இலக்கிய பாடல்களை அர்த்தம் தெரிந்து சுவைக்கவும்
முடிந்தது...
-
அப்படி வார்த்தை சித்துக்களால் கவி புனைந்து ரசிக்க
வைக்கிறீர்கள்...
-
 ரமணியின் கவிதைகள் - Page 15 1571444738 ரமணியின் கவிதைகள் - Page 15 1571444738 
-
ரமணியின் கவிதைகள் - Page 15 2HAWxMU6QmaoDNcPPy2q+god

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Mar 11, 2014 9:27 am

அய்யாசாமி ராம் அவர்களே,

வணக்கம். உங்கள் பாராட்டில் மகிழ்ந்தேன். மிக்க நன்றி.

அன்புடன்,
ரமணி


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue Mar 11, 2014 10:34 am

ரமணியின் கவிதைகள் - Page 15 1571444738 ரமணியின் கவிதைகள் - Page 15 3838410834  பாடல்கள் வெகு அழகு ரமணி ஐயா..

Sponsored content

PostSponsored content



Page 15 of 36 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 25 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக