புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 7 Poll_c10தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 7 Poll_m10தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 7 Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram

31 Posts - 44%
jairam

2 Posts - 3%
mohamed nizamudeen

ஜாஹீதாபானு

1 Post - 1%
சிவா

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்

162 Posts - 51%

114 Posts - 36%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார்.

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Nov 21, 2012 10:02 am

First topic message reminder :

மும்பை: மும்பை தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். அவருடைய கருணை மனுவை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்ததை அடுத்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மும்பை சிறையில் அடைக்கப்பட்ட கசாப்புக்கு தூக்குத்தண்டனை விதித்து, மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்தநிலையில், கசாப் தரப்பில் கடந்த செப்டம்பர் மாதம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை மகாராஷ்டிர அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது. மேலும், கசாப்பின் கருணை மனுவை தள்ளுபடி செய்யும்படி, ஜனாதிபதிக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் கசாப்பின் கருணை மனுவை ஜனாதிபதி பிராணாப் முகர்ஜியும் நிராகரித்தார். இதனையடுத்து , புனேயில் உள்ள எரவாடா சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு கசாப்பிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தகவலை மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பட்டீல் உறுதி படுத்தியுள்ளார்.

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Nov 21, 2012 8:03 pm

யினியவன் wrote:
பூவன் wrote:இல்ல இனிய சர்க்கரை வியாதி
அய்யய்யோ மகா டேஞ்சர் ஆச்சே!!!

தீவிரவாதி அன்று கொல்வான்
சர்க்கரை (வியா)(வா)தி நின்று கொல்வான்...

நீங்கள் எப்படி

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Nov 21, 2012 9:26 pm

அவரவர் விதியை அவரவரே எழுதிக்கொள்கின்றனர்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 22, 2012 1:35 pm

அஜ்மல் கசாபை தூக்கில் போட்டதற்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

காங்கிரஸ்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் கூறியதாவது:–கசாபை தூக்கில் போட்டதை நான் வரவேற்கிறேன். அதுபோல், பாகிஸ்தானில் உள்ள கசாபின் எஜமானர்களுக்கு எதிராகவும் அரசு தனது கவனத்தை செலுத்த வேண்டும். பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு விஷயத்திலும் விரைந்து முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி மனீஷ் திவாரி கூறுகையில், ‘சட்டம் தனது கடமையை செய்துள்ளது‘ என்றார்.

உண்மையான அஞ்சலி

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரஷித் ஆல்வி கூறியதாவது:–கசாப் தூக்கில் போடப்பட்டது, மும்பை தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு உண்மையான அஞ்சலி ஆகும். இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நிலவுகிறது.எனவேதான், கசாப் தனது வாதங்களை கீழ் கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. கருணை மனு தாக்கல் செய்யவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதா

பா.ஜனதா செய்தித்தொடர்பாளர்கள் ஷாநவாஸ் உசேன், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் கூறியதாவது:–கசாப் தூக்கிலிடப்பட்டது, தாமதமாக எடுக்கப்பட்ட சரியான முடிவு. மும்பை மக்களின் காயங்களுக்கு இது மருந்தாக இருந்த போதிலும், அவர்களின் காயம் இன்னும் ஆறாமல் இருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள சதிகாரர்களும் நீதியின் முன்பு நிறுத்தப்பட்டால்தான், அவர்களுக்கு நிம்மதி கிடைக்கும்.அந்த சதிகாரர்களுக்கு இது எச்சரிக்கையாகவும், பாடமாகவும் அமையும். தீவிரவாதிகளுக்கு பயம் ஏற்படுத்துவதற்காக, அப்சல் குருவையும் விரைவில் தூக்கில் போட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

லாலு, பஸ்வான்

ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ் கூறுகையில், ‘சட்டம் தனது கடமையை செய்துள்ளது. காற்றை விதைத்தவர்கள், சூறாவளியை அறுவடை செய்துதான் ஆக வேண்டும்‘ என்றார்.லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் கூறுகையில், ‘கசாப் தூக்கிலிடப்பட்டது வரவேற்கத்தக்கது. அப்சல் குரு வழக்கும் சட்டப்படி நடந்து வருகிறது‘ என்றார்.

பரூக் அப்துல்லா

தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான பரூக் அப்துல்லா கூறியதாவது:–நமது நாட்டுக்குள் புகுந்து எண்ணற்ற அப்பாவி மக்களை கொன்றவன், இறுதியாக தூக்கில் போடப்பட்டுள்ளான். அவனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.மும்பை தாக்குதலில் உறவினர்களை இழந்தவர்கள், தற்போது நிம்மதி அடைந்திருப்பர். சிறிது காலதாமதம் ஆன போதிலும், இறுதியாக நீதி நிலைநாட்டப்படும் என்பதுதான் நமது நீதி நடைமுறை.இவ்வாறு அவர் கூறினார்.

தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 22, 2012 1:47 pm

கசாப்பினை தூக்கிலிட்ட ஹேங்மேனுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம்: அவரை ரகசிய இடத்தில் வைத்தது மகாராஷ்டிரா அரசு

மும்பை: அஜ்மல் கசாப்பை தூக்கில் போடுவதற்கான ஹேங்மேனை தேர்வு செய்ய மகாராஷ்டிரா அரசு ரகசிய ஆள் எடுப்பு நடத்தியது. கசாப்பினை தூக்கலிட்ட ஹேங்மேனுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. அவர் ரகசிய இடத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளார்.

2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதியன்று 166 பேர் பலியாக காரணமான மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான 24 வயது அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணியளவில் மும்பை அடுத்த புனேயில் உள்ள ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான்.

முன்னதாக இவனை தூக்கிலிட தகுந்த ஹேங்மேனை தேர்வு செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்தது. இதற்கு ஆபரேசன் எக்ஸ் என்ற நடவடிக்கையினை மேற்கொண்டது.இது குறித்து மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறியதவாது: கசாப்பை தூக்கிலிட முடிவதற்கு முன்னர் தகுந்த ஹேங்மேனை தேர்வு செய்ய முடிவு செய்தோம். இதற்காக பலரிடம் ரகசிய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அப்போது முதன்முதலாக மீரட் சிறையில் பணியாற்றிவந்த மம்முசிங் என்ற ஹேங்மேன் தான் கசாப்பின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஆர்வம் காட்டினார். இவர் முன்னாள் பிரதமர் இந்திரா கொலையாளிகளை தூக்கிலிட்ட ஹேங்மேனான குல்லுசிங்கின் மகன் தான் மம்முசிங். எனினும் மம்மு சிங் துருதிருஷ்டவசமாக உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு மே மாதம் இறந்துவிட்டார்.

அவருக்கு கசாப்பினை தூக்கலிடும் வாய்ப்பு தவறிவிட்டது. இந்நிலையில் தற்போது கசாப்பினை தூக்கிலிட்ட ஹேங்மேனை நாங்கள் ரகசியமாக தேர்வு செய்த ஹேங்மேனை ரகசியமாக பாதுகாத்து வைத்திருந்தோம். திட்டமிட்டபடி இன்று காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு ஆர்.ஆர்.பாட்டீல் கூறினார்.

ஹேங்மேனுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம்

இந்நிலையில் கசாப்பினை தூக்கிலிட்ட ஹேங்மேனுக்கு கூலியாக மகாராஷ்டிரா அரசு ரூ. 5 ஆயிரம் சம்பளமாக வழங்கியது.இருப்பினும் அவர் யார் என்பதனை படுரகசியமாக வைத்துள்ளது. தவிர மகாராஷ்டிரா அரசு இதுவரை 17 தூக்கு தண்டனைகளை நிறைவேற்றியுள்ளது. கடைசியாக கடந்த 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி ஏர்வாடா சிறையில் ஒருவர் தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Nov 22, 2012 2:55 pm

மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப் நேற்று காலை 7.30 மணிக்கு மிகவும் ரகசியமாக தூக்கில் போடப்பட்டான். இந்த தகவல் சுமார் ஒரு மணி நேரம் கழித்துதான் வெளியாகி காட்டுத்தீ போல பரவியது. நாடெங்கும் உள்ள மக்களிடம் இந்த தகவல் இன்ப அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

எப்படி திடீர்னு தூக்கில் போட்டுட்டாங்க. சின்ன தகவல்கூட வெளியில கசியவில்லையே என்று எல்லோரும் நேற்று ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார்கள். இந்த ஆச்சரியத்துக்கு அடித்தளமாக இருந்தது 17 பேர் குழு என்று தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த 17 பேரும் தான் காதும், காதும் வைத்த மாதிரி மிக, மிக ரகசியமாக செயல்பட்டு காரியத்தை கச்சிதமாக முடித்து விட்டனர். இந்த 17 பேரும் ஏதோ முந்தாநாள் முடிவு செய்து நேற்று கசாப்பை தூக்கில் போட்டு விடவில்லை... சுமார் 2 மாதம் ஓசையின்றி இயங்கி இவர்கள் தங்கள் திட்டத்தை பூர்த்தி செய்துள்ளனர்.

17 பேர் குழு செயல்பட்ட விதத்தை பார்க்கும்போது, அது சினிமா காட்சிகளையும் மிஞ்சும் வகையில் உள்ளது. கசாப் தூக்கு ரகசியத்தின் பின்னணியில் உள்ளதை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமானால், நாம், இந்த மாத தொடக்கத்தில் இருந்து நடந்ததை தெரிந்து கொள்ள வேண்டும்.

அஜ்மல் கசாப், உயிர் பிச்சை கேட்டு அனுப்பிய கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 5-ந்தேதி நிராகரித்தார். அன்றே கசாப் கழுத்தை கயிறு இறுக்கப் போவது உறுதியாகி விட்டது.

ஜனாதிபதி நிராகரித்து அனுப்பிய மனுவில் மத்திய உள்துறை மந்திரி சுசீல்குமார் ஷிண்டே 7-ந் தேதி கையெழுத்திட்டார் கசாப்பை தூக்கில் போடலாம் என்று அவர் ஒப்புதல் அளித்து அனுப்பிய கடிதம் மறுநாள் 8-ந்தேதி மராட்டிய அரசுக்கு வந்தது.

இதையடுத்து மராட்டிய மாநில உள்துறை மந்திரி ஆர்.ஆர்.பாட்டீல் வசம் கசாப் தூக்கு தண்டனை உறுதி மனு கொடுக்கப்பட்டது. அவர்தான் கசாப்பை உடனே தூக்கில் போடும் ரகசிய திட்டத்தை வரையறுத்தார். பாட்டீல் கடந்த 12-ந்தேதி மும்பையில் ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் மராட்டிய மாநில கூடுதல் தலைமை செயலாளர் அமிதாப் ராஜன், சிறைத்துறை முதன்மை செயலாளர் மேதா, மும்பை போலீஸ் கமிஷனர் சத்யபால்சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் கசாப்பை தூக்கில் போடுவது எப்படி என்று விரிவாக விவாதித்தனர். கசாப் தூக்குக்கு அனுமதி கேட்டு நிறைய கடிதம் தயாரிக்க வேண்டியதிருந்தால், கசாப் பெயர் தெரியாதபடி யாரிடமும் தெரிவிக்காமலேயே அவர்கள் கடிதங்கள் தயாரித்தனர். இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் வீடியோவில் படம் பிடிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் கசாப்பை 19-ந் தேதி எர்வாடா சிறைக்கு கொண்டு செல்ல வேண்டும், 21-ந்தேதி காலை தூக்கில் போடவேண்டும் என்று உள்துறை மந்திரி பாட்டீல் தலைமையிலான குழு முடிவு செய்தது. இந்த திட்டத்துக்கு ‘ஆபரேசன் எக்ஸ்’ என்று பெயரிடப்பட்டது.

இதையடுத்து கசாப்பை தூக்கில் போடும் பணிகள் ஓசையின்றி மளமளவென நடந்தது. கசாப்பை தூக்கில் போடுவதற்கு ஒப்புதல் தரும் கடிதங்கள் தயாரிக்கப்பட்டன. அந்த கடிதங்களில் மராட்டிய கவர்னர் சங்கர நாராயணன், முதல்-மந்திரி பிரிவிதிராஜ் சவான் இருவரும் உடனே கையெழுத்து போட்டு கொடுத்தனர்.

பிறகு அந்த கடிதங்கள் கசாப் வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட்டு நீதிபதிக்கு அனுப்பப்பட்டது. அவரும் கசாப்பை தூக்கில் போடலாம் என்று ஒப்புதல் அளித்து கடிதம் கொடுத்தார். தீபாவளி தினத்தன்று அஜ்மல் கசாப்பிடம் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அவனிடம் ‘உன் கடைசி ஆசை என்ன?’ என்று கேட்கப்பட்டது.

ஆர்தர் சாலை ஜெயில் அதிகாரி ஒருவர் இந்த நடவடிக்கையை ரகசியமாக மேற்கொண்டார். தூக்கு தண்டனையை ஏற்கும் இறுதி ஆவணத்தில் கசாப்பிடம் அந்த அதிகாரி கையெழுத்து வாங்கினார். இது அந்த ஜெயிலில் உள்ள மற்ற அதிகாரிகள் யாருக்கும் கடைசி வரை தெரியாது.

இதையடுத்து கவர்னர், முதல்-மந்திரி மற்றும் கசாப் கையெழுத்திட்ட கடிதங்கள் மத்திய உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய உள்துறை மந்திரி சுசீல்குமார் ஷிண்டே உடனடியாக ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டார்.

கசாப் பாகிஸ்தானை சேர்ந்தவன். எனவே இதுபற்றி பாகிஸ்தானுக்கு தெரிவிக்க வேண்டும் என்று சட்டவிதிகளில் உள்ளதால் உள்துறை அமைச்சகம் வெளியுறவு துறை உதவியை நாடியது. வெளியுறவு துறை மூலம் பாகிஸ்தானிடம் இது தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் அரசும் அடுத்த சில மணி நேரங்களுக்குள் ஒப்புதல் கொடுத்து தகவல் அனுப்பியது. இந்த நடைமுறைகள் எல்லாம் 12-ந்தேதி தொடங்கி 18-ந்தேதிக்குள் அதாவது 7 நாட்களுக்குள் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்து விட்டது.

18-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை எல்லா ஒப்புதல்களும் பெறப்பட்டு விட்டன. இதை மத்திய உள்துறை அமைச்சகம் மராட்டிய மாநில அரசுக்கு தெரிவித்தது. மறுநிமிடம் மராட்டிய மாநில அரசு கசாப்பை காலி செய்வதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகளை செய்தது.

கசாப்பை தூக்கில் போடும் நபர், இஸ்லாமிய மதகுரு ஆகியோர் எர்வாடா ஜெயிலுக்கு அழைக்கப்பட்டனர். கசாப் பற்றி சொல்லாமல் வேறு ஒரு கைதி பெயரை சொல்லி அவர்கள் அழைத்து வரப்பட்டு தயார் நிலையில் புனேயில் தங்க வைக்கப்பட்டனர்.

19-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு அஜ்மல் கசாப் மும்பை ஆர்தர் சாலை ஜெயிலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வெளியில் அழைத்து வரப்பட்டான். இதுவரை அவனுக்கு காவல் காத்து வந்தவர்களுக்குகூட அவன் எங்கு அழைத்து செல்லப்படுகிறான் என்று கூறப்படவில்லை.

மும்பையில் இருந்து தனி விமானத்தில் ஏற்றப்பட்ட அவன் புனே கொண்டு செல்லப்பட்டான். அங்கிருந்து காரில் அவனை எர்வாடா சிறைக்கு கொண்டு சென்றனர். நள்ளிரவில் சுமார் 2 மணி நேரத்துக்குள் இந்த இடமாற்றம் நடந்து முடிந்து விட்டது.

கசாப், ஆர்தர் சாலை ஜெயிலில் இருந்து வெளியில் வருவது, சிறப்பு விமானத்தில் ஏற்றப்பட்டது, எல்லாம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இரவோடு, இரவாக எர்வாடா சிறைக்குள் ஒரு குறிப்பிட்ட தனி அறையில் கசாப்பை அடைத்தனர்.

கசாப் அந்த ஜெயிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளான் என்ற தகவல் அந்த சிறைத்துறை அதிகாரி, உதவி அதிகாரி, ஒரு ஜெயிலர் ஆகிய 3 பேர் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

20-ந்தேதி செவ்வாய்க் கிழமை கசாப்பிடம் மீண்டும் கடைசி விருப்பம் என்ன என்று கேட்கப்பட்டது. அன்று முழுவதும் அவன் ரகசியமாக அங்கு வைக்கப்பட்டிருந்தான். இதற்கிடையே எர்வாடா ஜெயிலில் உள்ள தூக்கு மேடை சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது.

இது தெரிந்த சில அதிகாரிகள்கூட யாரோ ஒருவரை தூக்கில் போட போகிறார்கள் என்றே நினைத்து கொண்டிருந்தனர். 21-ந்தேதி புதன்கிழமை காலை 6 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றும் நபர் மற்றும் இஸ்லாமிய மதக்குரு இருவரும் அழைக்கப்பட்டனர்.

7.25 மணிக்கு அங்கு கசாப் அழைத்து வரப்பட்டான். டாக்டர் அவனை பரிசோதித்து ஓ.கே. என்றார். இதையடுத்து தண்டனை விவரம் வாசிக்கப்பட்டது. அப்போதுதான் அங்கு வந்திருந்த இஸ்லாமிய மத குருவுக்கே, தூக்கில் போடப்பட போவது தீவிரவாதி அஜ்மல் கசாப் என்பது தெரிந்தது.

அடுத்த நிமிடம் ஜெயில் வார்டன் உத்தரவிட 7.30 மணிக்கு கசாப் தூக்கில் தொங்கவிடப்பட்டான். கசாப், மூச்சு சில நிமிடங்களில் துடித்து அடங்கிப்போனது. அவன் கொல்லப்பட்டதை 7.45 மணிக்கு ‘ஆபரேசன் எக்ஸ்’ திட்டத்துக்கு தலைமை பொறுப்பு ஏற்றிருந்தவர் மராட்டிய மாநில உள்துறை அமைச்சருக்கு அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.

சுமார் 45 நிமிடம் கழித்து 8.15 மணிக்கு அஜ்மல் கசாப் உடல் தூக்கு மேடையில் இருந்து இறக்கப்பட்டது. அடுத்த 10 நிமிடங்களில் எர்வாடா சிறை வளாகத்துக்குள் ஒரு ரகசிய இடத்துக்கு அவன் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதிகாரிகள் ஏற்கனவே தயாராக பெரிய குழி தோண்டி வைத்திருந்தனர். 8.30 மணிக்கெல்லாம் அந்த குழிக்குள் அஜ்மல் கசாப் உடல் இஸ்லாமிய மத முறைப்படி எல்லா சடங்களும் செய்யப்பட்டு புதைக்கப்பட்டது. இவை அனைத்தையும் ஆபரேசன் எக்ஸ் குழுவினர் வீடியோவில் பதிவு செய்தனர்.

அத்துடன் கசாப் அத்தியாயம் முடிவுக்கு வந்தது. 8.45 மணிக்கு கசாப் தூக்கிலிடப்பட்டான் என்று தொலைக்காட்சிகள் செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் இந்த பரபரப்புக்கு பின்னணியில் இவ்வளவு வேலைகள் ஓசையின்றி நடந்திருப்பது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது

Sponsored content

PostSponsored content

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக