ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Today at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Today at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Today at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Today at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Today at 6:19 am

» ரமணீயன் கவிதைகள்
by kandansamy Yesterday at 10:03 pm

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Yesterday at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Yesterday at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Yesterday at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Yesterday at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by kandansamy Yesterday at 2:04 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» முயற்சி
by kandansamy Yesterday at 1:35 pm

» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» திரைக்கதிர்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மலச்சிக்கலை சரிசெய்வதெப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:48 am

» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» கார்த்திகை ஜோதி காண்போமே!
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் !
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கோளுரை – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:48 am

» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
by ayyasamy ram Yesterday at 7:44 am

» துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Yesterday at 7:31 am

» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு
by ayyasamy ram Yesterday at 7:28 am

» மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் பரிசு: அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 7:24 am

» டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும்,'
by ayyasamy ram Yesterday at 7:22 am

» பிரதமரை வரவேற்க முதல்வர் வர வேண்டாமா? ராவ் கண்டனம்
by ayyasamy ram Yesterday at 7:19 am

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Sat Nov 28, 2020 9:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sat Nov 28, 2020 9:10 pm

» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்
by ayyasamy ram Sat Nov 28, 2020 8:05 pm

» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sat Nov 28, 2020 7:17 pm

Admins Online

எண்ணும் எழுத்தும் உடற்கூறுகணிதம் 21600 மூச்சுக்காற்று

Go down

எண்ணும் எழுத்தும் உடற்கூறுகணிதம் 21600 மூச்சுக்காற்று Empty எண்ணும் எழுத்தும் உடற்கூறுகணிதம் 21600 மூச்சுக்காற்று

Post by Powenraj on Thu Nov 29, 2012 8:50 am

உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும். சித்தர்களின் கணக்குப்படி மனிதனின் மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். சீவ தேகத்தில் இயங்குகின்ற உயிர்க்காற்று, உச்சுவாசம் (உட்செல்லுதல் 10800/நாள்), நிச்சுவாசம் (வெளியேறுதல் 10800/நாள்) சேர்ந்து ஒரு மூச்சாக விளங்குவது. இப்படிஒரு தினத்தில் 21,600 மூச்சு நாம் விடுகின்றோம்.

இம் மூச்சு ஒவ்வொன்றிலும் ஆன்ம சக்திக் கலை (அ+உ = ய) பத்தும் கலந்து வெளிப்பட்டுக் கொண்டே உள்ளது. ஆகையால் நாளொன்றுக்கு வெளிப்படுவது, (21,600 X 10)= 216000 ஆன்ம சக்திக் கலைகள்.
சரம் என்றால் மூச்சுள்ளது. அசரம் என்றால் மூச்சில்லாதது. இவையே சித்தர்கள் உலகை அழைப்பதற்குரிய வார்த்தையாக சராசரம் என்று கூறுகிறார்கள்.

இந்த உலகமே மூச்சை அடிப்படையாக வைத்தது என்பதற்காகவும், அது முட்டையின் வடிவத்தை ஒத்திருப்பது என்பதற்காகவும், அண்ட சராசரம்(அண்டம் என்றால் முட்டை என்று பொருள்) என்று அழைத்து வந்தனர்.

1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது. உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும். ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும,; உடலுறவின் போதும்,கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.

அருளொலி வீசும் ஆன்மா (அ+உ+ம்=) ஓம் என்றும் அதில் அவும் (8) உவும் (2) சேர்ந்து பத்தாக, ம் – ஆறாக உள்ளது. இதில் 10 நாதமாகவும் 6 விந்தாகவும் கூறப்படும். இதன் கலப்பு (10X 6) = 60 நாத விந்து கலையாகவும் கூறப்படும்.
இது கொண்டு, ஆன்மானுபவ ஞானிகள், தினம் வெளிப்படுகின்ற 216000 ஆன்ம சக்திக் கலைகளை, 60 ஆகிய நாத விந்து ஆன்ம கலையாற் பகுத்து, காலக் கணக்கு கண்டுள்ளனர்.

அதாவது 60 கலை ஒரு வினாடி என்றும், 60 விநாடி (60 X 60= 3600 கலை) ஒரு நாழிகை ஆகவும், 60 நாழிகை (60 X 60 X 60 = 216000 கலை ஒரு நாளாகவும் விளங்குகின்றதாம்.

ஒரு நாளில் ஓடக்கூடிய மூச்சுக்களின் எண்ணிக்கை 21,600 என்று பார்த்தோம். சிதம்பரத்தில் உள்ள ஆனந்தமய கோசத்தில் தான், நடராஜர் நடனமிடும் சிற்சபை எனும் பொன்னம்பலம் அமைந்துள்ளது.இந்த சிற்சபைபை உடற்கூறு கணிதத்தின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றது. சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64 கை மரங்கள் உள்ளன. இந்த 64ம் 64வகையான கலைகளாகும். பொன்னம்பலத்தின் 21600 தங்க ஓடுகள் உள்ளன.

இவை ஒரு மனிதனின் ஒரு நாளுக்கான சராசரி மூச்சுக் காற்றுக்கான எண்ணிக்கை. 5 வெள்ளிப் படிகள் உள்ளன. இவை ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தினையும் (பஞ்ச பூதங்களையும்) குறிப்பன.இதையே விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல மதி என்றால் சந்திரன் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.

வான்வெளி ஆராய்ச்சியின் அடிப்படைக் கல்வி என்னவென்றால் மூச்சே நேரம்.இதுவே அனைத்து வேதங்களும், சித்தர்களும், ரிஷிகளும், மகான்களும் சொல்வதும்.

நாம் விடும் மூச்சானது உள்ளே வெளியே என்று இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. காலச்சக்ரம் என்பது நாம் விடும் மூச்சைக் கொண்டும், நேரத்தைக் கொண்டும், வான்வெளியைக் கொண்டும் கணக்கிடப்படுவது.
10 வார்த்தைகளைக் கொண்ட அட்சரத்தை உச்சரிக்க நமக்கு ஒரு மூச்சை அதாவது நான்கு விநாடி செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

மூச்சின் கணக்கு:
1. ஒரு நாள் நாம் விடும் மூச்சு 21600 . இதில் நாளின்முதல் பாதியில் 10800 மறு பாதியில் 10800.
2. ஒரு மூச்சென்பது நான்கு விநாடிகள்.
நேரத்தின் கணக்கு:
1. 24 மணிநேரம் x 60 நிமிடங்கள் = 1440 நிமிடங்கள்
2. 1440 நிமிடங்கள்x 60 விநாடிகள்= 86400 விநாடிகள்; 86400/21600 = 4 விநாடிகள்= 1 மூச்சு
3. 1 கடிகை என்பது 24 நிமிடங்கள்= 1440 விநாடிகள் (=360 மூச்சுக்கள் )
சித்தர் வான்வெளியின் நேரக் கணக்கு:
1. ஒரு சதுர்யுகம் = 1 கல்ப வருடம்/1000
2. 10 வார்த்தைகளைக் கொண்ட அட்சரம் = 1 மூச்சு (மூச்சு= 4 விநாடிகள்) 360 மூச்சுக்கள் = 1 கடிகை (=24 நிமிடங்கள்)
3. 60 கடிகைகள் = 1 நாள்
4. 1 சதுர்யுகம் = 4320000 சூரிய வருடங்கள்
ஒரு யுகம் நான்காக பிரிக்கப்பட்டுள்ளது:
1. கிரேதா யுகம் = 1728000 சூரிய வருடங்கள்
2. திரேதா யுகம் = 1296000 சூரிய வருடங்கள்
3. துவாபர யுகம் = 864000 சூரிய வருடங்கள்
4. கலி யுகம் = 432000 சூரிய வருடங்கள்

நந்தனார் கீர்த்தனையில் ‘எட்டும் இரண்டமறியாத மூடன்’ என்கிறார். 8 என்பது ‘அ’ காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது. இரண்டு என்பது ‘உ’ காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது. இதையே அகார உகாரம் என்று கூறுகின்றார்கள். 8*2=16 அங்குலம் ஓடும் சந்திரகலையை குறிக்கிறது.
‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத்
தகும்’
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

எண்ணும் எழுத்தும் உடற்கூறுகணிதம் 21600 மூச்சுக்காற்று Empty Re: எண்ணும் எழுத்தும் உடற்கூறுகணிதம் 21600 மூச்சுக்காற்று

Post by Guest on Thu Nov 29, 2012 11:18 am

நல்ல பதிவு .. பத்திகளுக்கு இடையே இடைவெளி தேவை ... உங்கள் பதிவு அவ்வாறு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது ..
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum