புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10 
30 Posts - 55%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10 
21 Posts - 38%
Manimegala
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10 
1 Post - 2%
jairam
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10 
12 Posts - 4%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10 
9 Posts - 3%
Jenila
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10 
4 Posts - 1%
Rutu
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10 
3 Posts - 1%
jairam
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 21 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 21 of 84 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 52 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Oct 13, 2013 7:21 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (144)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33


குற்றியலுகரச் சொற்களின் வெவ்வேறு புணர்ச்சி இன்பத்தில் திளைத்து வருகிறோம் !

நமது அடுத்த நூற்பா ! :-

“நமவ  வென்னு மூன்றொடு சிவணி
அகரம் வரினு மெட்டன்மு னியல்பே”   (குற்றியலு . 44)

‘ந ம வ என்னும் மூன்றொடு சிவணி’ -  ந , ம , வ -  ஆகிய மூன்று எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்களும் ,
‘அகரம் வரினும்’ -  ‘அ’வை  முதலாகக் கொண்ட சொற்களும் ,
‘எட்டன்முன் இயல்பே’  -   ‘எட்டு’ என்ற சொல்லோடு புணர்ந்தால் , இயல்புப் புணர்ச்சி ஆகும் !

இதற்கு முன் (குற்றியலு 43) ‘மூன்று’ , ‘ஐந்து’ ஆகிய சொற்களுக்குக் , ‘க ச த ப  வரும்போது மட்டும்தான்’  என்று ஓர் எல்லை கட்டினாரல்லவா? அந்த எல்லையைத் தளர்த்துகிறார் இங்கு , ‘எட்டு’ என்ற பகுதிச் சொல்லுக்கு!

இதன்படி –
                          அளவுப் பெயர்கள்
-----------------------  

எட்டு  +  கலம்   =   எண் கலம்  (அல்வழிப் புணர்ச்சி)  
எட்டு  +  சாடி   =   எண் சாடி  (அல்வழிப் புணர்ச்சி)
 எட்டு  +  தூதை   =   எண் தூதை  (அல்வழிப் புணர்ச்சி)
எட்டு  +  பானை   =   எண் பானை  (அல்வழிப் புணர்ச்சி)  
எட்டு  +  நாழி   =   எண் ணாழி  (அல்வழிப் புணர்ச்சி)
எட்டு  +  மண்டை   =   எண் மண்டை  (அல்வழிப் புணர்ச்சி)  
எட்டு  +  வட்டி   =   எண் வட்டி  (அல்வழிப் புணர்ச்சி)
 எட்டு  +  அகல்   =   எண் ணகல்  (அல்வழிப் புணர்ச்சி)  
எட்டு  +  உழக்கு   =   எண் ணுழக்கு   (அல்வழிப் புணர்ச்சி)

                    நிறைப் பெயர்கள்
-----------------------  

எட்டு  +  கழஞ்சு   =   எண் கழஞ்சு  (அல்வழிப் புணர்ச்சி)
எட்டு  +  தொடி   =   எண்டொடி   (அல்வழிப் புணர்ச்சி)

இளம்பூரணர் இங்கு ‘வேண்டா கூறி வேண்டியது முடித்தல்’ என்ற உத்தியைத் தெரிவிக்கிறார் !

          அஃதாவது , தொகை மரபு நூ . 2இல் (‘ஞ ந ம ய வ … இயல்பாகும்மே’ ) இயல்புப் புணர்ச்சி கூறப்பட்டுவிட்டதால் , இங்கு மீண்டும் கூறவேண்டாம் என்பதால் இச் சூத்திரத்தை (44) ‘வேண்டா கூறல் ’ என்றார் இளம்பூரணர் ! இதனைத் தொட்டுக் காட்டியது , சரசுவதிமகால் நூலகத்தின் உரைக்கொத்து (2009) ஆகும் ! ஆயினும் , அளவு, நிறைப் பெயர்களுக்காக மற்ற எண்களின் புணர்ச்சிகளைக் கூறிவருவதால் ,இங்கு மீண்டும் ‘எட்டு’ தொடர்பான இயல்புப் புணர்ச்சியைக் கூற முற்பட்டார் தொல்காப்பியர் ! இதுவே ‘வேண்டியது முடித்தல்’ !

      அது சரி ! ‘எட்டு’ என்பதுதானே பகுதி ? அஃது எப்படி ‘எண்’ ஆனது ?

    குற்றியலு. நூ . 38ஆல் ஆனது ! அதில் , ‘எட்டன் ஒற்றே ணகாரம் ஆகும்’ என்று கூறினார் ; நாமும் அதை விளக்கமாகப் பார்த்தோம் ! அதனை இங்குக் கொணரவேண்டும் !

மேலே ந ,  ம ,  வ – ஆகிய எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்களோடு , ‘எட்டு’ என்பதைப் பொருத்திப் பார்த்தாரல்லவா ? இதன்பின் , ந , ம ஆகிய இரண்டு எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்களோடு , ‘மூன்று’ , ‘ஐந்து’ ஆகிய பெயர்களைப் பொருத்திப் பார்க்கிறார் ! : -

 “ஐந்து  மூன்று  நமவருங் காலை
வந்த தொக்கு  மொற்றிய நிலையே”  (குற்றியலு. 45)

‘ஐந்து மூன்றும்’ -  ‘ஐந்து’ , ‘மூன்று’  ஆகிய இரு சொற்களோடு,
‘ந ம வருங்காலை’  -  ‘ந’ , ‘ம’  ஆகிய இரு எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்களும் வந்து புணர்ந்தால்,
‘வந்த தொக்கும்  ஒற்றியல் நிலையே’ – வருமொழி முதலில் வந்த எழுத்தின் ஒற்று வடிவம் தோன்றும் !

  இதன்படி –
                            அளவுப் பெயர்
------------------
மூன்று  +  நாழி  =  முந் நாழி (அல்வழிப் புணர்ச்சி) ( ‘நா’வின் ஒற்று ‘ந்’ வந்தது)
மூன்று  +  மண்டை  =  மும் மண்டை (அல்வழிப் புணர்ச்சி) ( ‘ம’வின் ஒற்று ‘ம்’ வந்தது)

மூன்றின்  ‘மூ’ என்பது ‘மு’ ஆனதற்கு ,விதி  குற்றியலு நூ. 35ஐக் ( ‘மூன்று மாறு நெடுமுதல் குறுகும்’) கொள்ளலாம் !
ஐந்து  +  நாழி  =  ஐந் நாழி (அல்வழிப் புணர்ச்சி) ( ‘நா’வின் ஒற்று ‘ந்’ வந்தது)
ஐந்து  +  மண்டை  =  ஐம் மண்டை (அல்வழிப் புணர்ச்சி) ( ‘ம’வின் ஒற்று ‘ம்’ வந்தது)

இவ்விடத்தில் ‘நான்கு’ என்ற சொல்லை எடுத்துக்கொண்டு அதன் புணர்ச்சி விசித்திரத்தைப் பேசுகிறார் இளம்பூரணர் !

நான்கு  +  நாழி  =  நான்கு நாழி ×
    =  நால்  நாழி ×
   =  நானாழி √  (அல்வழிப் புணர்ச்சி) ( ‘ன்’ கெட்டது ;  வருமொழி ‘நா’ → ‘னா’  ஆனது)

  தொல்காப்பியர் சொன்ன இலக்கணம் ‘மூன்று’ ,ஐந்து’ ஆகிய இரு எண்களுக்கு மட்டுமே ! ஆனால் , இடையே உள்ள ‘நான்கு’ எப்படிப் புணரும் என்ற வினா இயல்பாக எழுகிறது !

  இதற்கு விடையை இளம்பூரணர் கூறவேண்டும் ! ஆனால் அதனைத் தொல்காப்பியத்தோடு பொருத்திக் காட்டவேண்டும் ! என்ன செய்வது ? எப்படிப் பொருத்தினார் இளம்பூரணர் ? –

   “மூன்றும் ஐந்தும் என்னாத முறையன்றிய கூற்றினால் , ‘நானாழி’ என்ற முடிபின்கண் விகாரமாகிய நகரத்தின் முன்னர் வருமொழி நகரத் திரிபும் , அது காரணமாகிய  நகரக் கேடும் கொள்ளப்பட்டன”.

  உரையாசிரியர்களின் உத்தி (Technique) இது!

  எதையும் தன் கருத்தாகக் கூறினால் மற்ற ‘பண்டிதர்கள்’ ஒத்துக்கொள்ள மாட்டார்கள் ! அதனால் எப்படியாவது , தொல்காப்பிய மூலத்தின் கொடுக்கைப் பிடித்துக்கொண்டு கூறத் துடித்துள்ளார் !

  தொல்காப்பியர் ‘மூன்றும் ஐந்தும்’ என்று கூறாது , ‘ஐந்தும் மூன்றும்’ கூறியதை ஒரு முறையற்ற  (வரிசைமுறை இல்லாத) கூற்று என்று இளம்பூரணர் கூறியுள்ளார் ! அப்படிப்பட்ட அந்தச் சிறு சந்தில் நுழைந்தார் இளம்பூரணர் ! ‘நானாழி’யை அச் சந்தில் விளக்கினார் !

 உண்மையில் , ‘ஐந்தும் மூன்றும்’ என்று வரிசைமுறையைச் சிறிது மாற்றித் தொல்காப்பியர் கூறியதற்கு வேறு காரணம் உள்ளது !
என்ன காரணம் ?

   ‘வந்த தொக்கும்’ என்ற அடுத்த அடியைப் பாருங்கள் ! அதன் முதல் சீரில் ‘ந்’ உள்ளதல்லவா? அதற்கு எதுகை தேவைப்பட்டது தொல்காப்பியருக்கு !  அதனால் ‘மூன்று’ என்பதை இரண்டாவதாக எழுதி , ‘ஐந்து’ என்பதை முதலாவதாகப் போட்டு எதுகை பிடித்தார் தொல்காப்பியர் ! இதனைச் சாதகமாக்கிக் கொண்டார் இளம்பூரணர் !

    உரையாசிரியர்களின் உரை உத்திகளுக்கு இந்த இடம் ஒரு சான்று !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Oct 14, 2013 10:01 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (145)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘மூன்று’ – மென்றொடர்க் குற்றியலுகர எண்ணுப் பெயர் !

இது ‘வட்டி’ என்ற சொல்லோடு எப்படிப் புணரும் ? :-

“மூன்ற னொற்றே வகாரம் வரும்வழித்
தோன்றிய வகாரத் துருவா கும்மே”  (குற்றியலு. 45)

‘மூன்றன் ஒற்றே’ -  ‘மூன்று’ என்பதன் ஒற்று – ‘ன்’ ,

‘வகாரம் வரும் வழி’ -  ‘வ்’வை முதலாகக் கொண்ட அளவுப் பெயர் வரும்போது ,

‘தோன்றிய வகாரத்து  உருவா கும்மே’ -  ‘ன்’ , ‘வ்’ ஆகும் !

அஃதாவது –

மூன்று + வட்டி  =  முவ்வட்டி  (அல்வழிப் புணர்ச்சி) ( ‘ன்’ → ‘வ்’  ஆனது)

இதுதான் மிகப் பழைய தமிழ்ப் புணர்ச்சி !

ஆனால் , இளம்பூரணர் வேறு இரு புணர்ச்சிகளைச்  சேர்த்துக்  கூறுகிறார் ! :-

மூன்று  +  வட்டி  =  மூவட்டி √ (அல்வழிப் புணர்ச்சி)

மூன்று  +  வட்டி  = முவட்டி √ (அல்வழிப் புணர்ச்சி)

‘மூ’ என்ற மூக்கொலியும் (Nasal)  , ‘வ’ என்ற  பல்லிதழ் ஒலியும் (Labio dental) சேர்வதுதான் இந்த மூன்றுவகைப் புணர்ச்சிகளுக்கும் காரணம் ! வேறு ஒன்றும் இல்லை !

இதே ‘வட்டி’யுடன் ‘நான்கு’ புணர்ந்தால் ? :-

“நான்க  னொற்றே  லகார மாகும்”  (குற்றியலு. 47)

‘நான்கன்  ஒற்றே ’  -  ‘நான்கு’ என்ற சொல்லிலுள்ள ‘ன்’ ,

‘லகாரம் ஆகும்’ -  ‘ன்’ , ‘ல்’ ஆகும் , ‘வட்டி’ என்ற அளவுப் பெயர் புணர வரும்போது !

அஃதாவது –

நான்கு +  வட்டி =  நால் வட்டி  (அல்வழிப் புணர்ச்சி) ( ‘ன்’ → ‘ல்’ ஆனது)

‘வட்டி’யுடன் ‘மூன்று’ , ‘நான்கு’ புணர்ந்ததைக் கூறினார் தொல்காப்பியர் ! இப்போது ‘ஐந்து’ ! :-

“ஐந்த  னொற்றே  முந்தையது கெடுமே”  (குற்றியலு. 48)

‘ஐந்தன் ஒற்றே’ -  ‘ஐந்து’ என்பதன் ‘ந்’ ,
‘முந்தையது’ -  ‘ஐ’க்கு முன்னே உள்ள  ‘ந்து’ ,

‘கெடுமே’ -  ‘ந்து’ கெடும் !

ஐந்து +  வட்டி =  ஐவட்டி  (அல்வழிப் புணர்ச்சி) (  ‘ந்து’ , கெட்டது)

இங்கு இளம்பூரணர் ,  “நகர ஒற்றுக் கெடாது அவ்வகரமாய்த் திரிந்து ஐவ்வட்டி என்றும் ஆம்” என்கிறார் !

அஃதாவது –


ஐந்து  + வட்டி =  ஐவட்டி √ (அல்வழிப் புணர்ச்சி) ( ‘ந்து’ , கெட்டது)
ஐந்து  + வட்டி =  ஐவ்வட்டி √ (அல்வழிப் புணர்ச்சி) ( ‘ந்து’ , கெட்டது; ‘வ்’ தோன்றியது)

‘வட்டி’ வருவாய் அமோகம் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 16, 2013 11:01 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (146)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘ஒன்று’ – மென்றொடர்க் குற்றியலுகர எண்ணுப் பெயர் !

இது , ‘பத்து’ என்பதோடு புணரும்போது , ‘ஒரு’ ஆகும் என முன்பே (குற்றியலு. 33) பார்த்தோம் ! நினைவிருக்கிறதா?

இப்போது , அதே ‘ஒன்று’ , உயிர் எழுத்தை  முதலாகக் கொண்ட அளவுப் பெயர்ச் சொற்களுடன் புணர்ந்தால் , எப்படியாகும் என்று காட்டுகிறார் ! :-

“முதலீ ரெண்ணின்முன் னுயிர்வரு காலை
தவலென  மொழிப  வுகரக்  கிளவி
முதனிலை  நீட  லாவயி னான”   (குற்றியலு . 49)

‘முதலீரென்ணின் முன்’  -   ‘ஒன்று’ ,  ‘இரண்டு’  ஆகிய இரு எண்களின் முன் ,

‘உயிர் வரு காலை’  -  உயிர் எழுத்து வந்து புணரும்போது ,

‘தவலென மொழிப’ -  ‘கெடுக’ என்று சொல்லுவர் ,
‘உகரக் கிளவி’ -  ‘உ’ என்ற எழுத்து!

‘முதல் நிலை நீடல் ஆ வயினான’ -  ‘ஒன்று’ என்பதன் முதல் எழுத்தாகிய ‘ஒ’ என்ற எழுத்து  ‘ஓ’ என நெடிலாகும் ; ‘இரண்டு’ என்பதன் ‘இ’ ,  ‘ஈ’ என நெடிலாகும் !

இதன்படி –

ஒன்று  + அகல் =  ஒரு அகல்  ×
ஒன்று  + அகல் =  ஓரகல்  √  (அல்வழிப் புணர்ச்சி)

ஒன்று  + உழக்கு =  ஒரு உழக்கு  ×
ஒன்று  + உழக்கு =  ஓருழக்கு  √  (அல்வழிப் புணர்ச்சி)

இரண்டு  + அகல் =  இரு அகல்  ×
இரண்டு  + அகல் =  ஈரகல்  √  (அல்வழிப் புணர்ச்சி)

இரண்டு  + உழக்கு =  இரு உழக்கு  ×
இரண்டு  + உழக்கு =  ஈருழக்கு  √  (அல்வழிப் புணர்ச்சி)

சில அளவுப் பெயர்களுடன் , ‘ஒன்று’ , ‘இரண்டு’ புணர்வதை மேலே பார்த்தோம் !

தொடர்ந்து , ‘மூன்று’ , ‘நான்கு’ ,  ‘ஐந்து’  ஆகிய  சொற்கள் அதே உயிரெழுத்தை  முதலாகக் கொண்ட அளவுச் சொற்களுடன் புணர்வதைக் கூறுகிறார் ! :-

“மூன்று  நான்கு  மைந்தன்  கிளவியும்
தோன்றிய  வகரத்  தியற்கை  யாகும் !”  (குற்றியலு . 50)

‘மூன்றும் நான்கும்  ஐந்தன் கிளவியும்’ -  ‘மூன்று’ , ‘நான்கு’ , ‘ஐந்து’  ஆகிய சொற்கள் ,

‘தோன்றிய  வகரத்து  இயற்கை  ஆகும்’  -  குற்றியலு . 46இல்  சொல்லியபடி , ‘மூன்று’ , ‘முவ்’ ஆகவும் , குற்றியலு. 47இல் சொல்லியபடி ‘நான்கு’ , ‘நால்’ ஆகவும் ,  குற்றியலு . 48இன்படி  ‘ஐந்து’ , ‘ஐ’   என்றும்  ஆகும்!

அஃதாவது-

மூன்று  + அகல் =  மூன்றகல்  ×
மூன்று  + அகல் =  முவ்வகல்  √  (அல்வழிப் புணர்ச்சி)

மூன்று  + உழக்கு =  மூன்றுழக்கு  ×
மூன்று  + உழக்கு =  முவ்வுழக்கு  √  (அல்வழிப் புணர்ச்சி

நான்கு  + அகல் =  நான்ககல்  ×
நான்கு  + அகல் =  நாலகல்  √  (அல்வழிப் புணர்ச்சி)

நான்கு  + உழக்கு =  நான்குழக்கு  ×
நான்கு  + உழக்கு =  நாலுழக்கு  √  (அல்வழிப் புணர்ச்சி

ஐந்து  + அகல் =  ஐந்தகல்  ×
ஐந்து  + அகல் =  ஐயகல்  √  (அல்வழிப் புணர்ச்சி)

ஐந்து  + உழக்கு =  ஐந்துழக்கு  ×
ஐந்து  + உழக்கு =  ஐயுழக்கு  √  (அல்வழிப் புணர்ச்சி)


‘முவ்வுழக்கு’ என்பதற்கான விதியை மேலே பார்த்தோமல்லவா?

அதை எழுதிய எழுத்தாணிச் சூடு தணிவதற்குள் , “கொஞ்சம் பொறுங்கள் ! ‘மூவுழக்கு’ என்றாலும் தவறில்லை !” என்று கூற வருகிறார் தொல்காப்பியர் ! : -

 “ மூன்றன் முதனிலை  நீடலு முரித்தே
உழக்கென்  கிளவி  வழக்கத் தான !’  (குற்றியலு . 51)

‘மூன்றென்  முதனிலை’ – ‘மூன்று’ என்ற சொல்லின் முதல் எழுத்தாம் ‘மூ’ ,

‘நீடலும் உரித்தே’ – ‘மூ’ என்பது , ‘மு’ ஆகாது , ‘மூ’ வாகவே , நெடிலாய் நிற்பதும் உண்டு !

‘உழக்கு  என் கிளவி  வழக்கத்தான’ – ‘உழக்கு’  என்ற சொல் வரும்போது !

அஃதாவது –

மூன்று + உழக்கு = முவ்வுழக்கு √  (அல்வழிப் புணர்ச்சி)
மூன்று + உழக்கு = மூவுழக்கு √  (அல்வழிப் புணர்ச்சி)

இளம்பூரணர் இங்கே “  ‘உழக்கு’ என்பதற்கு மட்டுமல்ல , ‘அகல்’ என்பதற்கும் கூடத்தான் ! ”  என்கிறர் !

அஃதாவது –

மூன்று + அகல் = முவ்வகல் √(அல்வழிப் புணர்ச்சி)

மூன்று + அகல் = மூவகல் √(அல்வழிப் புணர்ச்சி)

தமிழ்ப் புணர்ச்சிகளைத் தொடர்ந்து ஆய்ந்துவருவதால் ஒன்றை நான் சொல்லியாகவேண்டும் !

அஃதாவது , பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் இடையே பெரிய வேறுபாடு இருக்கிறது !


‘மூன்று அகலை எடுத்துவா’ , ‘மூன்று அகல் , நல்லாருக்கா?’ என்றெல்லாம் பேசுகிறோம் ! அப்போது தமிழ்ப் புணர்ச்சிவிதி எங்கே போயிற்று ? ஏன் எழுதும்போது மட்டும் அவ்வளவு விதி ?

ஏனெனில் தமிழ் மொழி ஓலைச் சுவடிகளில் வளர்ந்த மொழி ! ஓலைச் சுவடிகளில் சொற்களைச் சேர்த்துச் சேர்த்துதான் எழுத முடியும் ! எனவேதான் அதற்குதக்கவாறு எழுத்திலணத்தை அமைத்துக்கொண்டனர் !


இஃது ஒரு காரணம் !

இன்னொரு காரணம் – தமிழ் , பாடலில் வளர்ந்த மொழி ! பாட்டுக்காகச் சொற்சேர்க்கை இறுக்கமாகத் தேவைப் பட்டது ! அதனால்தான் , ‘மூவகல்’ இருந்தாலும் ‘முவ்வகல்’ என்பதும் தேவைப் பட்டது !

இந்த இரு காரணங்களாலும்தான் பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்குமான இடைவெளி பெருகி , எழுத்துத் தமிழுக்கெனத் தனி  இலக்கணம் கற்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது !


***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 16, 2013 7:27 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (147)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘அகல்’ , ‘உழக்கு’ – ஆகிய சொற்களோடு சில சொற்களைப் புணர்த்திக் காட்டினார் தொல்காப்பியர் !
இப்போது , ‘ஆறு’ என்ற சொல்லோடு இவற்றைப் புணர்த்துகிறார் ! :-

“ஆறென்  கிளவி  முதனீ  டும்மே ”  (குற்றியலு . 52)

‘ஆறென் கிளவி’ -  ‘ஆறு’ எனும் சொல் ,

‘முதல் நீடும்மே’ -  ‘ஆறு’ என்பதன்  ‘ஆ’ , ‘அ’எனக் குறுகாது , ‘ஆ’என்ற நெடிலாகவே இருக்கும் !

அஃதாவது-

ஆறு + அகல் = ஆறு அகல் ×
ஆறு + அகல் = ஆறகல் √ (அல்வழிப் புணர்ச்சி)

ஆறு + உழக்கு = ஆறு உழக்கு ×
ஆறு + உழக்கு = ஆறுழக்கு √ (அல்வழிப் புணர்ச்சி)

அடுத்து , ‘ஒன்பது’ !

இதனுடன் , அளவு, நிறைப் பெயர்களைப் புணர்த்துகிறார் தொல்காப்பியர் ! :-

“ஒன்பா னிறுதி யுருபுநிலை திரியா
தின்பெறல் வேண்டுஞ் சாரியை மொழியே” (குற்றியலு. 53)

வேறு ஒன்றுமில்லை ! ‘இன்’ சாரியை  (Inflectional increment) பெறவேண்டும் என்கிறார் !

                                        அளவுப் பெயர்கள்
                 -----------------------------------

ஒன்பது + கலம் = ஒன்பதின் கலம் √ (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்பது + கலம் = ஒன்பது கலம்  

ஒன்பது + சாடி = ஒன்பதின் சாடி √ (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்பது + சாடி = ஒன்பது சாடி ×

ஒன்பது + தூதை = ஒன்பதின் தூதை √ (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்பது + தூதை = ஒன்பது தூதை  ×

ஒன்பது + பானை = ஒன்பதின் பானை √ (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்பது + பனை = ஒன்பது பானை ×

ஒன்பது + நாழி = ஒன்பதின் நாழி √ (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்பது + நாழி = ஒன்பது நாழி ×

ஒன்பது + மண்டை = ஒன்பதின் மண்டை √ (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்பது + மண்டை = ஒன்பது மண்டை ×

ஒன்பது + வட்டி = ஒன்பதின் வட்டி √ (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்பது + வட்டி = ஒன்பது வட்டி ×

ஒன்பது + அகல் = ஒன்பதி னகல் √ (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்பது + அகல் = ஒன்பது அகல் ×

ஒன்பது + உழக்கு = ஒன்பதி  னுழக்கு √ (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்பது + உழக்கு = ஒன்பது உழக்கு ×

நிறைப் பெயர்கள்
-----------------------------------

ஒன்பது + கழஞ்சு = ஒன்பதின் கழஞ்சு √ (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்பது + கழஞ்சு = ஒன்பது கழஞ்சு ×

ஒன்பது +தொடி = ஒன்பதின் தொடி √ (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்பது + தொடி = ஒன்பது தொடி ×

ஒன்பது + பலம் = ஒன்பதின் பலம் √ (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்பது + பலம் = ஒன்பது பலம் ×

இளம்பூரணர் , ‘ஒன்பதிற் றகல்’ என்றும் ஒன்றைச் சேர்க்கிறார் !

ஒன்பது + அகல் = ஒன்பதிற் றகல் √  (இன் – சாரியையின் ‘ன்’, ‘ற்’ஆகி இரட்டித்தது) (அல்வழிப் புணர்ச்சி) (இளம்பூரணர் கூறியது)
ஒன்பது + அகல் = ஒன்பதி னகல் √  (இன் - சாரியை)(அல்வழிப் புணர்ச்சி) (தொல்காப்பியர் கூறியது)

ஆனால் , நச்சினார்க்கினியர் ‘ஒன்பதிற்றுக் கலம்’ என எல்லாவற்றோடும் ஒட்டுக என்கிறார் !

பார்த்தீர்களா?

‘ஒன்பதின் கலம்’ என்ற ஒரு புணர்ச்சியைத்தான் தொல்காப்பியர் சொன்னார் !
‘ஒன்பதிற் றகல்’ – என்பதையும் கொள்க என்றார் இளம்பூரணர் !

நச்சினார்க்கினியரோ ‘ஒன்பதிற்றுக் கலம்’ , ‘ஒன்பதிற்றுச் சாடி’, ‘ஒன்பதிற்றுத் தூதை’ , ‘ஒன்பதிற்றுப் பானை’ , ‘ஒன்பதிற்று நாழி’ , ‘ஒன்பதிற்று மண்டை’  .... ‘ஒன்பதிற்றுப் பலம்’ என்று கொள்க என்கிறார் !

காலம் தோறும் தமிழ்ப் புணர்ச்சியானது மாறியே வந்துள்ளது அல்லவா?

ஆனாலும் ஒரு வரம்புக்குள் நின்றுதான் மாறுகிறது என்பதைக் கவனிக்கவேண்டும் !


***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Oct 17, 2013 8:41 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (148)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

முன் ஒரு நூற்பாவில் (குற்றியலு. 31) , ‘ஒன்று’ முதல் ‘ஒன்பது’ வரையான எண்கள் , ‘பத்து’ என்பதோடு  எப்படிப் புணர்ந்தன என்று பார்த்தோம் !

 அதுபோலத்தான் அவை , ‘நூறு’ என்பதோடும் புணரும் என்று இங்கு கூறுகிறார் ! :-

“நூறுமுன் வரினும் கூறிய  இயல்பே”   (குற்றியலு. 54)

இதன்படி –

ஒன்று + நூறு  =  ஒரு நூறு √ (அல்வழிப் புணர்ச்சி)
இரண்டு + நூறு  =  இரு நூறு √(அல்வழிப் புணர்ச்சி)


ஆறு + நூறு  =  அறு நூறு √(அல்வழிப் புணர்ச்சி)

ஆறு + நூறு  =  ஆறு நூறு ×

ஏழு + நூறு  =  எழு நூறு √(அல்வழிப் புணர்ச்சி)

ஏழு + நூறு  =  ஏழு நூறு ×

எட்டு + நூறு  =  எண் ணூறு √(அல்வழிப் புணர்ச்சி)

எட்டு + நூறு  =  எட்டு  நூறு ×

மீதி 3 , 4 , 5 ஆகிய எண்கள் ?

இவற்றுக்குத் தனி நூற்பாக்கள் கூறுகிறார் தொல்காப்பியர் ! :-

“மூன்ற  னொற்றே  நகார மாகும்”  (குற்றியலு. 55)

“நான்கு மைந்து  மொற்றுமெய் திரியா” (குற்றியலு . 56)

அஃதாவது-

மூன்று + நூறு = முந்நூறு √(அல்வழிப் புணர்ச்சி)

மூன்று + நூறு = முன்னூறு ×

நான்கு + நூறு = நானூறு √
நான்கு + நூறு = நாநூறு ×

ஐந்து + நூறு = ஐந் நூறு √(அல்வழிப் புணர்ச்சி)

ஐந்து + நூறு = ஐனூறு ×

அப்படியானால் , ‘ஐநூறு’ என்று எழுதுவது தவறா?

நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது !

உங்களுக்காக வாதாட வருகிறார் இளம்பூரணர் -  “ஒற்றின்றி ஐநூறு என வரும் முடிபுங் கொள்க !” .
ஆக-

ஐந்நூறு √  (அல்வழிப் புணர்ச்சி) (தொல்காப்பியர் காலம்)
ஐநூறு √(அல்வழிப் புணர்ச்சி) (இளம்பூரணர் காலம்)

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Oct 20, 2013 10:17 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (149)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

இப்போது , ‘தொள்ளாயிரம்’ !

அறிஞர்கள் பலரும் , “தொல்காப்பியர் கூறிய இலக்கணம் தவறு” என்று காட்டிய இடம் !

ஆனால் , தொல்காப்பியர் கூறியது சரிதான் என்பது எனது ஆய்வு !
பிற புணர்ச்சி முறைகளின்படிதான் இதனையும் கூறியுள்ளார் அவர் !
இதற்கு முன்பு ‘தொண்ணூறு’ பற்றிய ஆய்வில் இதனைத் தெளிவுபடுத்தியிருந்தேன் !
கணக்குப்படி  9 × 100 = 900
எனவேதான் , ‘ஒன்பது’ , ‘நூறு’  என்று தொடங்குகிறார் தொல்காப்பியர் !
இது சரிதானே ?

‘நூறு’ என்று எடுத்தால் , ஏன்  ‘தொள்ளாயிரம்’ என ஆயிரத்தில் முடிகிறது ?

              அதற்கு இன்னொரு வரிசை !

               அஃதாவது , ‘பத்துக்கு ஒன்று குறை’ =  9  (இதனால்தான் ‘ஒன்பது’ எனப் ‘பது’வில் முடிகிறது)
‘நூறுக்கு ஒரு பத்துக் குறை’ = 90  (இதனால்தான் ‘தொண்ணூறு’ என ‘நூறு’வில் முடிகிறது)

‘ஆயிரத்திற்கு ஒரு நூறு குறை’ = 900  (இதனால்தான் ‘தொள்ளாயிரம்’ என ‘ஆயிரத்தில்’ முடிகிறது)
இதுதான் பழந்தமிழர்தம் எண்கணிதம் !

இதற்கு மாறாக மொழியியல் (Linguistics) அடிப்படையில் இதனைத் திருத்தினால்  மொத்தக் கணித முறையுமே குலையாதா?
இப்போது தொல்காப்பியரைப் பின்பற்றுவோம் ! –

ஒன்பது + நூறு → ‘த்’ சேர்வதால்   →  தொன்பது + நூறு  →  ‘ன்’ ,  ‘ள்ள்’ ஆவதால் → தொள்ள் +  நூறு →  ‘நூ’வின் ‘ந்’ கெடுவதால்   → தொள்ள் + ஊறு  →  ‘ஊ’ , ‘ஆ’வாவதால்  → தொள்ள் + ஆறு  →  ‘இ’யும் ‘ர’வும் சேர்வதால்  → தொள்ள் + ஆஇரறு  →  ‘று எனும் ஈறு கெட்டு ’ ‘ம்’ வருவதால் → தொள்ள் + ஆஇரம் → உடம்படுமெய் ‘ய்’ வருவதால் வ→  தொள்ள் + ஆயிரம் →  ள் +ஆ , புணர்வதால் → தொள்ளாயிரம் !



‘ஒன்பது’ என்பதன் ‘ப’ கெட்டதற்கு , “மெய் என்றதனான் , நிலைமொழிக்கண் நின்ற பகரம் கெடுக்க ”  என்ற இளம்பூரணர் வாக்கே  விதி !

                ‘ஒன்பது’ என்பதன் ‘து’ கெட்டதற்கு , “குற்றியலுகரம் மெய்யொடும் கெடுமே” என்பது விதி !அஃதாவது , குற்றியலு. நூ. 28இல்   கூறிய விதிப்படித் ‘து’ கெடும் !

                  இப்போது தொல்காப்பியர் எழுதிய நூற்பா : -

“ஒன்பான் முதனிலை முந்துகிளந்  தற்றே
முந்தை யொற்றே னகார மிரட்டும்
நூறென் கிளவி  நகார மெய்கெட
ஊஆ  வாகு  மியற்கைத்  தென்ப
ஆயிடை  வருத  லிகார ரகாரம்
ஈறுமெய் கெடுத்து மகார மொற்றாம் ! ” (குற்றியலு . 57)

இவ்விடத்தில் தமிழ் வேர்ச் சொற்களின் ஒரு போக்கை நான் சொல்லியாக வேண்டும் !

தமிழில், நம் கண்ணுக்குத் தெரியும் வேர்கள் , கண்ணுக்குத் தெரியா வேர்கள் என்று இரண்டு உள்ளன!

கண்ணுக்குத் தெரியா வேர்கள் மிகமிகப் பழமையானவை !
எழுதப்பட்ட  வரலாற்றைக் கொண்டு கூறுவதானால் ,இருக்கு வேத காலத்திற்கும் முந்தையவை !

அப்படிப்பட்ட பழைய வேர்களோடு,   முன் எழுத்துப் பேறுகள் சேர்ந்து கண்ணுக்குத் தெரியும் புது வேர்கள் உருவாகின்றன !

தொல்லை – பழமை ; இதில் கண்ணுக்குத் தெரியும் வேர் – ‘தொ’ !
இதன் கண்ணுக்குத் தெரியா வேர் ‘ஒ’ !

ஆம் !  ‘ஒல்லை’ – பழமை ; ‘த்’ சேர்ந்துதான் ‘தொல்லை’ ஆயிற்று ! ‘ஒல்’ என்பதோடு ‘த்’ சேர்ந்தபின்தான் ‘தொல்’ என்ற தமிழ்ச்சொல்லே உருவனது !

இவ்வாறு உருவான தமிழ்ச் சொற்கள் பல உள !

‘ஒழு’ என்பதன் முன் ‘த்’ சேர்ந்துதான் ‘தொழு’ ஆயிற்று ! ‘ஒழு’தான் மிகப் பழைய தமிழ்ச் சொல் ! ‘ஒழுக்கம்’ , ‘ஒடுக்கம்’ முதலிய சொற்களைப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும் !

‘த்’ மட்டும்தான் அவ்வாறு முன்னொட்டாக வரும் என நினைக்க வேண்டாம் !   வேறு சில எழுத்துகளும் வந்துள !

ஒச்சம் – குறை ! முன் எழுத்துப் பேறு ‘ச்’ சேர்ந்து , ‘சொச்சம்’ ஆயிற்று !

தமிழ் வேர்ச்சொல் ஆய்வு வரலாற்றில் இப்போக்கு குறிப்பிடத் தக்கது ! சொல்லாராய்ச்சியில் நான் 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து ஆய்ந்துவருவதால் என்னால் இக் கருத்துகளைக் கூறமுடியும் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Oct 21, 2013 9:54 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (150)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

ஒரு + ஆயிரம் = ஒராயிரம் √  (அல்வழிப் புணர்ச்சி) ( ‘ஒரு’வில் ‘உ’ கெட்டது)
இரு + ஆயிரம் = இராயிரம் √  (அல்வழிப் புணர்ச்சி) ( ‘இரு’வில் ‘உ’ கெட்டது)

இதற்குத் தொல்காப்பிய விதி –

“ஆயிரக் கிளவி வரூஉங் காலை
முதலீ  ரெண்ணி  னுகரங்  கெடுமே”  (குற்றியலு . 58)

‘ஓராயிரம்’ , ‘ஈராயிரம்’ – என்பதுதானே நம் வழக்கு ?

இக் கேள்விக்கு அடுத்த நூற்பாவில் விடை கூறுகிறார் தொல்காப்பியர் ! :-

“முதனிலை நீடினு  மான  மில்லை”  (குற்றியலு .59)

‘முதல் நிலை’ -  ‘ஒ’

‘நீடினு மான மில்லை’ -  ‘ஒ’ , ‘ஓ’ஆனாலும் குற்றமில்லை !

ஆகவே –
ஒரு + ஆயிரம் = ஒராயிரம் √  (அல்வழிப் புணர்ச்சி) (இதற்கு விதி – குற்றியலு. 58)

ஒரு + ஆயிரம் = ஓராயிரம் √  (அல்வழிப் புணர்ச்சி) (இதற்கு விதி – குற்றியலு. 59)

ஒன்று + ஆயிரம் = ஓராயிரம் √  (அல்வழிப் புணர்ச்சி) (இதற்கு விதி – குற்றியலு. 49)
ஒன்று + ஆயிரம் = ஒராயிரம் ×  (அல்வழிப் புணர்ச்சி) (இதற்கு விதி – குற்றியலு. 49)

அடுத்து –

‘மூன்று + ஆயிரம்’ !

இதற்குத் தொல்காப்பிய விதி

“மூன்ற  னொற்றே  வகர மாகும்”  (குற்றியலு. 60)

அஃதாவது –

மூன்று + ஆயிரம் = முவ்வாயிரம் √  (அல்வழிப் புணர்ச்சி) (‘ன்’ , ‘வ்’ ஆனது – விதி , குற்றியலு . 60; ‘று’ கெட்டது – விதி , குற்றியலு 28)

மூன்று + ஆயிரம் = மூவாயிரம் √  (அல்வழிப் புணர்ச்சி) (இளம்பூரணர் உரை விதி – “முதல் நீண்டு வகர ஒற்றுக் கெட்டு மூவாயிரம் என்றும் வரும்” , குற்றியலு. 60)

முவ்வாயிரம் √  - தொல்காப்பியர் காலப் புணர்ச்சி
மூவாயிரம் √  - இளம்பூரணர் காலப் புணர்ச்சி
மூன்றாயிரம் √  - வங்கிக் காசோலை போன்றவற்றில் தலை தூக்கும் அவசர வடிவம் !

அடுத்தது ‘நான்கு + ஆயிரம்’ ! :-

“நான்க னொற்றே  லகார மாகும்”  (குற்றியலு . 61)

நான்கு + ஆயிரம்  =   நாலாயிரம் √  (அல்வழிப் புணர்ச்சி) ( ‘ன்’ , ‘ல்’ ஆகும் – விதி , குற்றியலு. 61; ‘கு’ கெடும் – விதி , குற்றியலு 27)
நான்கு + ஆயிரம்  =   நான்காயிரம் ×  (‘நாலாயிர திவ்வியப் பிரபந்தம்’- என வந்தது காண்க !)

இதைப் போன்று ,
“ஐந்த   னொற்றே  யகார மாகும்”  (குற்றியலு . 62)

ஐந்து + ஆயிரம் =  ஐயாயிரம் √  (அல்வழிப் புணர்ச்சி) ( ‘ந்’ → ‘ய்’ ஆனது – விதி , குற்றியலு 62 ; ‘து’ கெட்டது – விதி , குற்றியலு 27)

ஐந்து + ஆயிரம் =  ஐந்தாயிரம் ×

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 23, 2013 10:18 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (151)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

இப்போது , ‘ஆறு + ஆயிரம்’ ! :-

“ஆறன் மருங்கிற் குற்றிய  லுகரம்
ஈறுமெய்  யொழியக் கெடுதல் வேண்டும்” (குற்றியலு . 63)

‘ஆறன் மருங்கின்’ -  ‘ஆறு’ என்ற சொல்லின் ,

‘குற்றியலுகரம்’ -  ‘ஆறு’ என்பதன்  ‘று’விலுள்ள  ‘உ’ ,

‘ஈறுமெய் ஒழியக் கெடுதல் வேண்டும்’ – அது ஏறிய ‘ற்’ என்ற மெய்யோடு கெடும் !

அஃதாவது , இளம்பூரணர் கூறிய உதாரணப்படி –

ஆறு + ஆயிரம் =  அறாயிரம்  (அல்வழிப் புணர்ச்சி)

ஆறாயிரம்’ என வராதா ?

இந்த ஐயத்திற்கு இளம்பூரணர் விடை கூறுகிறார் !  -  “ ‘திரிந்ததன் திரிபது ’ என்னும் நயத்தால் , ஆறன் மருங்கின் என்று ஓதப்பட்டது . ’ஆறு’ என்பது ‘அறு’ எனக் குற்றியலுகரம் , முற்றியலுகரமாக ஓதப்பட்டு நின்றமையின் , அவ்வுகரக் கேடு ஓதப்பட்டது ” .

அஃதாவது ,
‘அறு + ஆயிரம் = அறாயிரம் ’ என்று புணர்ந்துள்ளது;  ‘அறு’வின் ஈற்று உகரம் , முற்றியலுகரம் ; ஆகவேதான் , ‘ஆயிரம்’ என்பதன் முதல் உயிர் ‘ஆ’ வரும்போது , அந்த முற்றியலுகரம் கெட்டது !
– இதுவே இளம்பூரணர் கருத்து !

வருமொழி உயிராக இருக்கும்போது , நிலைமொழி ஈற்றில் முற்றியலுகரம் இருந்தால் , அந்த உகரம் கெடும் என்று தொல்காப்பியர் பல இடங்களில் கூறியுள்ளார் ! (சான்றாக – உருபியல் . 4இல் அது + அன் = அதன் ) .

‘அறு’ என்பதோடுதானே ‘ஆயிரம்’ சேர்வதாக இளம்பூரணர் கூறினார் ? ஆனால் தொல்காப்பியத்தில் ‘ஆறன்’ என்றுதானே  ‘ஆறு’ கூறப்பட்டுள்ளது ?

இதற்கான விடையை ஆய்வோம் !

‘ஆறு’ என்பது  முதலில் ‘அறு’ எனத் திரிந்தது ! பிறகு , இதன் திரிபுதான் ‘ஆறு’ ஆகும் ! இந்த இரண்டாம் திரிபைத்தான் நூற்பாவில் போட்டார் தொல்காப்பியர் ! உண்மையில் திரிந்த ‘அறு’வோடுதான் புணர்ச்சி ! -  இதுதான் ‘திரிந்ததன் திரிபு அது’ என்ற உத்தி ! இதன்படிதான் , ‘அறு + ஆயிரம்’ என்ற புணர்ச்சி ஏற்பட்டது !  
இளம்பூரணர் கருத்திற்கு விளக்கம் இதுவே !

நம் ஐயத்தை  நீக்கும் இளம்பூரணர் விடை பின்னே வருகிறது ! :-

“நெடுமுதல் குறுகாதே  நின்று ஆறாயிரம் என்றும் ஆகும் !”.

இளம்பூரணரின் இக் கருத்துப்படி –

ஆறு + ஆயிரம் = அறாயிரம் √  (அல்வழிப் புணர்ச்சி)
ஆறு + ஆயிரம் = ஆறாயிரம் √  (அல்வழிப் புணர்ச்சி)

அடுத்து , இளம்பூரணர் உரைப்படி ,

ஆறு + ஆகுவதே =  ஆறாகுவதே  √(அல்வழிப் புணர்ச்சி)
=  அறாகுவதே  ×

இவ்வரிசையில் ,  ‘எட்டு’ பற்றித் தொல்காப்பிய நூற்பா இல்லாததால் , அடுத்து இளம்பூரணர் , “மேல் மாட்டேற்றானே  எண்ணாயிரம் என முடிந்தது !” என்கிறார் .

அஃதாவது , குற்றியலு. 44இல் , ‘எண் + அகல் = என்ணகல் ’ என்ற புணர்ச்சியைப் பார்த்தோம் !

அதனை இங்கு கொணரவேண்டும் என்கிறார் இளம்பூரணர் !  ‘மேல் மாட்டேற்றானே’ என்ற அவரது கூற்றுக்கு இதுவே பொருள் !

அஃதாவது-

எட்டு + ஆயிரம் = எண்ணாயிரம் (அல்வழிப் புணர்ச்சி)

எண்ணாயிரம்  -  தொல்காப்பியர் காலப் புணர்ச்சி.
எட்டாயிரம்  -  பிற்காலப் புணர்ச்சி.

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Oct 25, 2013 10:21 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (152)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘ஒன்பது + நூறு’ பற்றி முன்பே பார்த்தோம் !

இப்போது , ‘ஒன்பது + ஆயிரம்’  !

“ஒன்பா னிறுதி  யுருவுநிலை திரியா
தின்பெறல் வேண்டுஞ் சாரியை மரபே” !  (குற்றியலு . 64)

‘ஒன்பான் இறுதி’ – ‘ஒன்பது’ என்பதன் இறுதி ‘து’ ,

‘உருவு நிலை திரியாது’  -  தனது வடிவம்( ‘து’) கெடாது,

‘இன் பெறல் வேண்டும்’  -  ‘இன்’ வரவேண்டும் ,

‘சாரியை மரபே’  -  சாரியை மரபுப்படி !

இதன்படி –

ஒன்பது + ஆயிரம் = ஒன்பதினாயிரம் (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

இங்கு இளம்பூரணர் தரும் கூடுதல் இலக்கணம்

ஒன்பது + கோடி = ஒன்பதிற்றுக் கோடி  (இன் – சாரியை; ‘உ’ , ‘க்’ வந்தன) (அல்வழிப் புணர்ச்சி)

ஒன்பது + தடக்கை = ஒன்பதிற்றுத்  தடக்கை  (இன் – சாரியை; ‘உ’ , ‘த்’ வந்தன) (அல்வழிப் புணர்ச்சி)

ஒன்பது + எழுத்து = ஒன்பதிற்  றெழுத்து  (இன் – சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

அடுத்து ‘நூறாயிரம்’ :-

“நூறா யிரமுன் வரூஉங் காலை
நூற னியற்கை  முதனிலைக் கிளவி” (குற்றியலு 65)

‘நூறாயிரம் முன் வரூஉம் காலை’ – ‘நூறாயிரம்’ எனும் சொல் வருமொழியாக ,

‘முத்னிலைக் கிளவி’ -  ‘ஒன்று’, ‘இரண்டு’ முதலிய நிலைமொழிகள் நிற்க ,

’நூறன் இயற்கை’ – முன்பு ‘நூறு’க்குச் சொன்ன இலக்கணப்படிப் புணரும் !

அஃதாவது –

ஒன்று + நூறாயிரம் = ஒருநூறாயிரம் √ (அல்வழிப் புணர்ச்சி)
இரண்டு + நூறாயிரம்  = இருநூறாயிரம் √(அல்வழிப் புணர்ச்சி)
இரண்டு + நூறாயிரம் = இரண்டு நூறாயிரம் √(அல்வழிப் புணர்ச்சி)
மூன்று + நூறாயிரம் = முந்நூறாயிரம் √(அல்வழிப் புணர்ச்சி)
மூன்று + நூறாயிரம் = மூன்று நூறாயிரம் √(அல்வழிப் புணர்ச்சி)
நான்கு + நூறாயிரம் = நானூறாயிரம் √(அல்வழிப் புணர்ச்சி)
நான்கு + நூறாயிரம் = நான்கு நூறாயிரம் √(அல்வழிப் புணர்ச்சி)
ஐந்து + நூறாயிரம் = ஐந்நூறாயிரம் √(அல்வழிப் புணர்ச்சி)
ஐந்து + நூறாயிரம் =  ஐந்து நூறாயிரம் √(அல்வழிப் புணர்ச்சி)
ஆறு + நூறாயிரம் = அறுநூறாயிரம் √(அல்வழிப் புணர்ச்சி)
ஆறு + நூறாயிரம் = ஆறு நூறாயிரம் √(அல்வழிப் புணர்ச்சி)
எட்டு + நூறாயிரம் = எண்ணூறாயிரம் √(அல்வழிப் புணர்ச்சி)
எட்டு + நூறாயிரம் = எட்டு  நூறாயிரம் √(அல்வழிப் புணர்ச்சி)
ஒன்பது + நூறாயிரம் = ஒன்பது  நூறாயிரம் √(அல்வழிப் புணர்ச்சி)

இளம்பூரணர் இங்கு தரும் கூடுதல் இலக்கணப்படி

ஒன்பது + நூறாயிரம்  =  ஒன்பது  நூறாயிரம்  √(அல்வழிப் புணர்ச்சி)
ஒன்பது + நூறாயிரம்  =  ஒன்பதினூறாயிரம்  √(அல்வழிப் புணர்ச்சி)

அடுத்து - 101 , 102 !  :-

“நூறென் கிளவி  யொன்றுமுத  லொன்பாற்
கீறுசினை  யொழிய வினவொற்று  மிகுமே” (குற்றியலு 66)

‘நூறென் கிளவி’  -  ‘நூறு என்ற சொல்’ ,

‘ஒன்று முதல் ஒன்பாற்கு’ -  ‘ஒன்று’ ,  ‘இரண்டு’ என  ‘ஒன்பது’ வரை ,

‘ஈறு சினை ஒழிய’ -  ‘நூறு’ என்பதிலுள்ள ‘று’ கெடாது நிற்க ,

‘இன ஒற்று மிகுமே’ -  ‘று’வின் இனமாகிய ‘ற்’ எனும் ஒற்றெழுத்துத் தோன்றும் !

அஃதாவது –

நூறு  +  ஒன்று  =  நூற்றொன்று (அல்வழிப் புணர்ச்சி)
நூறு  +  இரண்டு  =  நூற்றிரண்டு (அல்வழிப் புணர்ச்சி)
நூறு  +  மூன்று  =  நூற்றுமூன்று (அல்வழிப் புணர்ச்சி)
நூறு  +  நான்கு  =  நூற்றுநான்கு (அல்வழிப் புணர்ச்சி)
நூறு  +  ஐந்து  =  நூற்றைந்து (அல்வழிப் புணர்ச்சி)
நூறு  +  ஆறு  =  நூற்றாறு (அல்வழிப் புணர்ச்சி)
நூறு  +  ஏழு  =  நூற்றேழு (அல்வழிப் புணர்ச்சி)
நூறு  +  எட்டு  =  நூற்றெட்டு (அல்வழிப் புணர்ச்சி)
நூறு  +  ஒன்பது  =  நூற்றொன்பது (அல்வழிப் புணர்ச்சி)

இளம்பூரணரின் கூடுதல் இலக்கணப்படி –

நூறு  + கோடி =  நூற்றுக் கோடி (அல்வழிப் புணர்ச்சி)
நூறு  + பத்து =  நூற்றுப்  பத்து (அல்வழிப் புணர்ச்சி)
நூறு  + தொண்ணூறு =  நூற்றுத்  தொண்ணூறு (அல்வழிப் புணர்ச்சி)
நூறு  + குறை =  நூற்றுக் குறை (அல்வழிப் புணர்ச்சி)
நூறு  + அடுக்கு =  நூற்றடுக்கு (அல்வழிப் புணர்ச்சி)

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Oct 26, 2013 7:13 pm

***
  தொடத் தொடத் தொல்காப்பியம் (153)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

நூற்றொன்று’ முதலிய புணர்ச்சிகளை முன்பு பார்த்தோம் !

இப்போது , ‘நூற்றுமுப்பது’ என்று இன்று சொல்லும் புணர்ச்சிகள் தொல்காப்பியர் காலத்தில் எவ்வாறு இருந்தன என்று பார்ப்போம் ! :-

“அவையூர்  பத்தினு மத்தொழிற்  றாகும்”  (குற்றியலு . 67)

‘அவை ஊர் பத்தினும்’ -  ‘நூற்றொன்று’ , ‘நூற்றிரண்டு’ முதலியவற்றோடு ‘ப்த்து’ சேரும்போது ,
‘அத்தொழிற்று ஆகும்’ – இன ஒற்று மிகும் ! ‘நூறு’ என்பதன் இடையே ‘ற்’ சேர்ந்து , ‘நூற்று’ ஆகும் !

இளம்பூரணர்  எடுத்துக்காட்டுகள் –

நூறு + ஒரு பஃது = நூற்றொருபஃது  (அல்வழிப் புணர்ச்சி)
நூறு + இரு பஃது = நூற்றிருபஃது  (அல்வழிப் புணர்ச்சி)
நூறு + முப் பஃது = நூற்று முப்பஃது  (அல்வழிப் புணர்ச்சி)
நூறு + நாற் பஃது = நூற்று நாற்பஃது  (அல்வழிப் புணர்ச்சி)
நூறு + ஐம் பஃது = நூற்றைம்பஃது  (அல்வழிப் புணர்ச்சி)
நூறு + அறு பஃது = நூற்றறுபஃது  (அல்வழிப் புணர்ச்சி)
நூறு + எழு பஃது = நூற்றெழுபஃது  (அல்வழிப் புணர்ச்சி)
நூறு + எண் பஃது = நூற்றெண்பஃது  (அல்வழிப் புணர்ச்சி)

‘ஒன்பஃது’ – என்னாயிற்று ? கேட்கிறீர்களா?


‘ஒன்பது + பத்து = தொண்ணூறு’ என்று வந்ததை  (குற்றியலு . 39) நினைத்துக்கொள்க!

‘நூறு + ஒன்று’ சேரும்போது , ‘நூற்று’ என்று பகுதி ஆனதல்லவா ?

அதுபோலத் ,  ‘கலம்’ போன்ற  முகத்தல் அளவைப் பெயர்களும் , ‘தொடி’ போன்ற நிறுத்தல் அளவைப்  பெயர்களும் புணர்ந்தால்?

அதற்கு ஒரு நூற்பா ! :-

“அளவு நிறையு  மாயிய  றிரியா
குற்றிய  லுகரமும்  வல்லெழுத்  தியற்கையும்
முற்கிளந்  தன்ன  வென்மனார்  புலவர் !”  (குற்றியலு . 68)

‘அளவும்  நிறையும் ஆயியல்  திரியா’ -  ‘கலம்’ போன்ற அளவும் , ‘தொடி’ போன்ற நிறையும், அதே முறைப்படி – ‘நூறு’ என்பது ‘நூற்று’ ஆன முறைப்படிப் – புணரும் !

‘குற்றியலுகரமும் வல்லெழுத்து  இயற்கையும்’ -  ‘று’ என்பதும் , அதற்கு முன் (இடப்புறம்) உள்ள ‘ற்’ என்பதும், சந்தியில் வல்லெழுத்து வருதலும்,

‘முற்கிளந்தன்ன என்மனார் புலவர்’ – முன்னே சொன்னது போலக் (குற்றியலு . 66 , 21) கெடாது !

இதன்படி –
                    முகத்தல் அளவைகள்
                     -------------------------------

நூறு + கலம் =  நூற்றுக் கலம் (அல்வழிப் புணர்ச்சி)
நூறு + சாடி =  நூற்றுச் சாடி (அல்வழிப் புணர்ச்சி)
நூறு + தூதை =  நூற்றுத் தூதை (அல்வழிப் புணர்ச்சி)
நூறு + பானை =  நூற்றுப் பானை (அல்வழிப் புணர்ச்சி)
நூறு + நாழி =  நூற்று நாழி (அல்வழிப் புணர்ச்சி)
நூறு + மண்டை =  நூற்று மண்டை (அல்வழிப் புணர்ச்சி)
நூறு + வட்டி =  நூற்று வட்டி (அல்வழிப் புணர்ச்சி)
நூறு + அகல் =  நூற்றகல் (அல்வழிப் புணர்ச்சி)
நூறு + உழக்கு =  நூற்றுழக்கு (அல்வழிப் புணர்ச்சி)

              நிறுத்தல் அளவைகள்
        ------------------------------------

நூறு + கழஞ்சு =  நூற்றுக் கழஞ்சு (அல்வழிப் புணர்ச்சி)
நூறு + தொடி =  நூற்றுத் தொடி (அல்வழிப் புணர்ச்சி)
நூறு + பலம் =  நூற்றுப் பலம் (அல்வழிப் புணர்ச்சி)

‘கலம்’ முதல் ‘உழக்கு’ வரை எழுதியுள்ளதைக் கவனிக்க ! இவை பெரிய அளவிலிருந்து சிறிய அளவு வரை இறங்கு முகமாக (Descending order) வருகின்றன ! ‘கழஞ்சு’ முதல் ‘பலம்’ வரை இவ்வாறே இறங்கு முகமாக வருகின்றன !
தொல்காப்பியம் , இவ்வாறு கணித ஆய்வுக்கும் பெட்டகமாகத் திகழ்கிறது !

‘ஒரு பஃது + ஒன்று ’ எப்படிப் புணரும் ?

“ஒன்று முதலாகிய  பத்தூர் கிளவி
ஒன்றுமுத லொன்பாற் கொற்றிடை மிகுமே
நின்ற வாய்தங் கெடுதல் வேண்டும் !”  (குற்றியலு . 69)

இதன்படி –

ஒரு பஃது + ஒன்று = ஒருபத் தொன்று  (ஃ – கெட்டது ,  ‘த்’ இடை மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

இரு பஃது + ஒன்று = இருபத் தொன்று  (ஃ – கெட்டது ,  ‘த்’ இடை மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

ஒரு பஃது + இரண்டு = ஒருபத்திரண்டு  (ஃ – கெட்டது ,  ‘த்’ இடை மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

இரு பஃது + இரண்டு = இருபத்திரண்டு  (ஃ – கெட்டது ,  ‘த்’ இடை மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

நாற் பஃது + இரண்டு = நாற்பத் திரண்டு  (ஃ – கெட்டது ,  ‘த்’ இடை மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

நாற் பஃது + ஏழு = நாற்பத் தேழு  (ஃ – கெட்டது ,  ‘த்’ இடை மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

அறு பஃது + இரண்டு = அறுபத் திரண்டு  (ஃ – கெட்டது ,  ‘த்’ இடை மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

எண் பஃது + ஒன்பது = எண்பத்  தொன்பது  (ஃ – கெட்டது ,  ‘த்’ இடை மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

‘ஒருபத் தொன்று’ என்ற தொல்காப்பியர் வழக்கு , மறைந்து , இன்று ‘பதினொன்று’ என்பது  நிற்கிறது !

தொல்காப்பியர் கூறிய ‘இருபத் தொன்று’ அதே வடிவில் , இன்றுவரை நிற்கிறது !

இளம்பூரணர் உரையால் –

ஒருபஃது + கலம் = ஒருபதிற்றுக் கலம் ( ஃ – கெட்டது , இன் – சாரியை வந்தது , க் – சந்தி தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)


அறுபஃது + கலம் = அறுபதிற்றுக் கலம் ( ஃ – கெட்டது , இன் – சாரியை வந்தது , க் – சந்தி தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)


நாற்பஃது + கழஞ்சு = நாற்பதிற்றுக் கழஞ்சு ( ஃ – கெட்டது , இன் – சாரியை வந்தது , க் – சந்தி தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

எண்பஃது + பலம் = எண்பதிற்றுப்   பலம் ( ஃ – கெட்டது , இன் – சாரியை வந்தது , ப் – சந்தி தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)


இப்பட்டியலில் விடுபட்டுப் போன எண்களை இதே முறையில் நிரப்பவேண்டும் !

                   ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 21 of 84 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 52 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக