புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 4%
Baarushree
Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 3%
viyasan
Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 3%
prajai
Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 3%
manikavi
Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
Rutu
Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
சிவா
Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சடங்குகள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
24 Posts - 77%

2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 1 match for சடங்குகள்

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (27)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

261 பிங்கா (பாலி)
பிங்கா – பிங்கலம் (நிறம்)
‘மாடு , பிங்கல நிறமுடையது’ என்பர்; பழுப்புக் கலந்த சிவப்பு நிறத்தது என்பது பொருள்.
பிங்கல நிறத்தைப் ‘பொன்னிறம்’ என்கிறது திவாகர நிகண்டு.

பிங்கல நிகண்டு எழுதிய பிங்கலர், இந் நிற அடிப்படைப் பெயர் கொண்டவராக இருத்தல் வேண்டும்; ‘வெள்ளையன்’ போன்ற பெயர்கள் சான்று.

அகராதிகளில் , ‘பிங்கலன்’ என்பதற்கு ‘நெருப்பு’, ‘சூரியன்’ , ‘சிவன்’ என்று பொருட்கள் தரப்பட்டுள்ளன.
ஆகவே, ‘பிங்கலம்’ என்பதற்குரிய தமிழ்த் தன்மை இதனால் தெளிவாகிறது.

262 . பிண்டா (பாலி)
பிண்டா – பிண்டம் (உருண்டை; திரள்பொருள்)
’நீத்தார் நினைவு நாளில் இலையில் பிண்டம் வைத்து வழிபடுவர்’ – வீட்டு வழக்கு.
’பிண்ட பாதம்’ – யானை ; திரண்ட பாதம்.
‘பிண்டப் பொருள் ’ - திரண்ட பொருள்.
குழந்தைக் கருவின் தோற்றத்தைப் ’பிண்டத் தோற்றம்’ என்றனர் தமிழ் மக்கள்.
‘பிண்ட’ எனும் தமிழ்ச் சொல்தான் #இருக்கு #வேதத்தில், ‘திரளை’ , ‘உண்டை’ எனும் பொருட்களைத் தந்துநிற்கிறது எனக் குறிக்கிறது செ.சொ.பேரகரமுதலி.

263 . பிதர் (பாலி)
பிதர் – பெற்றோர்
‘பெற்றவர்’ எனும் தமிழ், ‘பெத்தவர்’ ஆக, அதைப் பாலி, ‘பிதர்’ ஆக்கிக் கொண்டது.
அஞ்ஞான்று, ‘பிதர்’ ஆனது #‘பித்ரு’ ஆயிற்று; சடங்குகளில் அதுவே நிலை பெற்றது.
தமிழ்ச் சொற்களின் மரூஉ, திரிபுகளை நிலைப்படுத்தி, வேற்றுச் சொற்களோ என மருளச் செய்யச் #சடங்குகள்(rituals) பெரும் பங்கு வகித்துள்ளன.

264 . பித்தா (பாலி)
பித்தா – பித்தம்
‘வாதம், பித்தம், கபம்’ எனத் தமிழ்ச் சித்தமருத்துவம் கூறிய மூன்று நாடிகளில் ஒன்று ‘பித்தம்’.
‘அது பித்தவாந்தி’ – கிராம வழக்கு.
‘பித்தம் தலைக்கேறி , மயங்கி விழுந்தாள்’ – மக்கள் அனுபவம்.
‘பித்தக் கரப்பான்’ , ‘பித்தக்கனல்’ என்பனவெல்லாம், ‘பித்தம்’ காரணமாக நம்முள் உருவாகும் நோய்களே!
தமிழ்ச் சித்த மருத்துவக் கலைச்சொல்லை அரைகுறையாகக் கற்றுக்கொண்டவர்கள் ‘பித்தம்’ என்பதைப் ‘பிதா’ என உச்சரித்து அதையே உலகம் முழுதும் பரப்பும் கொடுமையை என்னவென்பது?

265 . பிள்ளக்கா (பாலி)
பிள்ளக்கா – பிள்ளை
‘நீங்கள் எல்லாம் பிள்ளக்காப் பசங்கடா; உங்களுக்கு என்ன தெரியும்?’ – இப்படி நாடகம், திரைப்படங்களில் கேட்டிருக்கலாம்.
அந்தப் ‘பிள்ளக்கா’ , ஒரு பாலிச்சொல் என்பது இன்று தெரியவருகிறது.
அஃதாவது , ‘பிள்ளை’ , ‘பிள்ளைங்க’ , முதலிய தமிழ்ச் சொற்களே ‘பிள்ளக்கா’ ஆகியுள்ளது.
தவிரவும் ‘அக்கா’ எனும் அசைச் சொல் சேர்ப்பது தமிழ் மரபே. ‘கிளியக்கா’ , ‘சுப்பக்கா’ முதலிய இடங்கள் சான்று.

266 . பிசாசா (பாலி)
பிசாசா - பிசாசு
‘இயக்கர் ’ , ’விச்சாதரர்’ , ‘பிசாசர்’ – இவர்கள் ‘பதினெண் கணத்தா’ருள் , தமிழில் குறிப்பிடப்படுவோரே. இவர்கள் அரசர், அரண்மனை, செல்வர் சார்ந்த பணியாளர்களே; தமிழகத்தில் இருந்தோரே; அங்குமிங்கும் இயங்கி வேலை செய்பவர்கள் , ’இயக்கம்’ காரணமாக ‘இயக்கர்’ எனப்பட்டனர்; அவ்வளவுதான்! ‘ஏவல் கூவல் கேட்போர்’ இவரே; ‘இயக்கர்’ என்போரை ‘யக்ஷர்’ என்று நம்மனோர் உச்சரித்து எழுதியதால் தமிழ் வழக்கு மாண்டது!
‘பிசாசு’ என்பதற்கு வேர்ச்சொல் ‘பி’ ; ‘பிற’ , ‘பிறிதானது’ என்ற பொருண்மை கொண்டது .
வழக்கமான கரும்பிலிருந்து வேறுபட்ட கரும்பைப் ‘பேய்க் கரும்பு’ என்பர். பேய் , கரும்பு சாப்பிட்டதா? ‘பேய்க்கொம்மட்டி’ என்று இன்னும் பலவற்றைக் கூறலாம்.
வழக்கமான இயல்பிலிருந்து மாறுபட்ட குணங்களை உடைவனைப் பார்த்து , ‘இவனுக்குப் பேய் பிடித்திருக்கிறது’ என்று கூறலாயினர். வயிற்றுவலியால் துன்புற்ற பெண்ணைப் ‘பேய் பிடித்தவள்’ என்று சொல்லி அவளை அடியோ அடி என்று அடித்ததை நானே பார்த்துள்ளேன். இதெல்லாம் மக்களின் மூடநம்பிக்கைகள்.
தமிழ்ச் சொற்கலைச் சரியாக விளங்கிக் கொள்ளாததும் , தமிழர்களின் மூட நம்பிக்கைகளை நெய்யூற்றி வளர்த்துள்ளது! ‘காலில் சுளுக்குப் பிடித்துள்ளது’ என்போம்; ‘சுளுக்கு’ என்ற பேய் நம் காலைக் கவ்விப் பிடித்துள்ளதா? நல்ல வேளை ‘சுளுக்குப் பேய்’ என்று யாரும் கூறவில்லை!
மற்றவர்கள் செய்யும் வேலையைவிடக் கூடுதலாகச் செய்பவனைப் பார்த்து , ‘ஆள் பிசாசா வேலை செய்கிறான் ஐயா’ என்கிறோம் அல்லவா? அவனுடைய மாறுபட்ட தன்மையைச் சுட்டப் ‘பிசாசு’ வருகிறது பாருங்கள்!

267 . பீடிகா (பாலி)
பீடிகா – பீடம்
பீடு – பெருமை ; சிலப்பதிகாரத்தில் இச் சொல் வருகிறது.
உயர்வான, மேலான, பெருமைக்குரிய இடம் – பீடம்.
பலி கொடுக்கும் இடம் – பலிபீடம்
விக்கிரகம் நிறுத்தும் இடம் – விக்கிரகப் பீடம்
அரசன் அமரும் அரியணை – பீடம்

268 . புச்சா (பாலி)
புச்சா – வால்
புச்சத் தலம் – குதம் (பிங்கல நிகண்டு)
புச்சம் – மயிலின் தோகை
ஆகவே ‘புச்சம்’ என்பதே பாலியில் ‘புச்சா’ என நின்றது எனவாகிறது.
உண்மை இப்படியிருக்க, ‘punar’ என்ற இலத்தீன் சொல்லிலிருந்து ‘புச்சா’ எனும் பாலிச் சொல் வந்திருக்கவேண்டும் என்று எந்தக் கூச்சமும் இல்லாமல் ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர்!
பல அடிப்படையான தமிழ் வரலாறுகள் இப்படி மாண்டொழிந்துள்ளன!

269 . புஞ்ஞா (பாலி)
புஞ்ஞா – புண்ணியம்
‘பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்’ – வடலூர் இராமலிங்கர் .
புண்ணியம் – நல்வினை
‘இதைச் செய்யுங்கள் , உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகும்’ – தமிழ் வழக்கு.
‘புண்ணிய கருமம்’ – நற்செயல்
‘புள்’ – அடிச்சொல்; ‘துளைத்து வருவது’ , ‘முன் செய்த் செயலின் பலன் பின்னும் ச்ர்ல்வது ’ என்ற பொருண்மைகளில் இந்த அடி (stem) வருகிறது.
‘புண்ணியம்’ என்பதை , நம்மனோரிற் சிலர் , மற்ற தமிழர்களை மட்டப்படுத்தும் நோக்கோடு, ‘புண்யம்’ என எழுதி, அரசவை முதலிய இடங்களில் இடம்பிடித்தனர் என்பது நம் மக்கள் வரலாறு.

270 . புடா (பாலி)
புடா – புடம் (container)
‘புடகம்’ – இலைத் தொன்னை
தமிழ்ப் பொற்கொல்லர்கள் தங்கத்தைப் புடம் போட்டுக் கொண்டிருந்தபோது , ‘புடம்’ எனும் சொல் பாலி சென்றுள்ளது.
‘புடபாத விதி’ என்றே புடமுறைகள் பற்றிய ஒரு நூல் இருந்ததாகப் பெயரளவில் அறிகிறோம் (செ.சொ.பேரகரமுதலி).
முன் சொன்ன ‘புள்’ என்பதே இதற்கும் பகுதி; ‘உட்செல்லல்’ எனும் பொருண்மைத்து.
***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com)
***

Back to top