புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 2%
bala_t
Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
prajai
Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
280 Posts - 42%
heezulia
Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 1%
prajai
Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
5 Posts - 1%
manikavi
Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 3 matches for வைட்டமின்



வைட்டமின்கள் உணவில் கிடைக்கும் ஒரு வகை கூட்டுப் பொருள். உடலின் ஆரோக்யத்திற்கு இவை சிறிய அளவே தேவைப்படுகின்றன. இவை இரண்டு பிரிவாக பிரிக்கப்படுகின்றது. அவை, கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் – ஏ, டி, ஈ, கே. தண்ணீரில் கரையும் வைட்டமின்கள் – பி1, பி6, பி7, பி12 பிரிவுகள், வைட்டமின் சி. வைட்டமின் குறைபாடுகள் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.வைட்டமின்கள் எரிசக்தி போல் அதிக அளவில் தேவைப்படாது. இருப்பினும், மருத்துவர்கள் சில சமயங்களில் வைட்டமின் மாத்திரைகளை சிபாரிசு செய்கின்றனர்.


மூன்று விஷயங்களுக்காக இது சிபாரிசு செய்யப்படுகின்றது.

உடலில் காணப்படும் வைட்டமின் சத்து குறைபாடு.குறைபாடு ஏற்படக் கூடிய காலங்களை தவிர்க்க. (உ.ம்) கர்ப்ப காலம், அறுவைசிகிச்சை, நோய் பாதிப்பு.சில நோய் பாதிப்புகளை தவிர்ப்பதற்கான முன் நடவடிக்கையாக மருத்துவரின் அறிவுரையின் பேரிலேயே வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

சைவ உணவு உண்பவர்களுக்கு கண்டிப்பாக வைட்டமின் பி12 சத்து மாத்திரை தேவைப்படும். அன்றாடம் வைட்டமின் சத்து என்பது இன்சூரன்ஸ் பாலிஸி போன்றது. ஆகவேதான் ஒரு மல்டி வைட்டமின் என்பது அதிக சிபாரிசு பெறுகின்றது.

ஆரோக்கியமான உணவிவை உட்கொள்ளுங்கள். மருத்துவ ஆலோசனையோடு ஒரு சத்து மாத்திரையை எடுத்துக் கொள்ளுங்கள்.வைட்டமின் ‘டி’ சத்து தேவையா என அறிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.மிக அதிக அளவிலான வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது சரியாகாது.


நீரில் கரையும் வைட்டமின்கள்



போலேட் எனப்படும் இந்த #வைட்டமின் பிறவி குறைபாடுகளை நீக்கும்.தயமின் எனப்படும் பி1 குறைபாட்டால் சோர்வு, நரம்பு பாதிப்பு, மூளை பாதிப்பு ஏற்படும். ஓட்ஸ், கைகுத்தல் அரிசி, காய்கறி, உருளைக்கிழங்கு, முட்டை இவற்றிலிருந்து இந்த வைட்டமின் கிடைக்கும்.ரிபோப்ளேவின் எனப்படும் பி2 குறைபாட்டால் நாக்கு வீக்கம், வாய் ஓரத்தில் புண் ஏற்படும். இந்த வைட்டமின் பால் பொருட்கள், வாழைப்பழம், பச்சை வாழைப்பழம் இவற்றில் கிடைக்கும்.நியாசின் எனப்படும் பி3 சரும பாதுகாப்பு, ஜீரண செயல்பாடுமுறை, கெட்ட கொழுப்பு நீக்குதல் போன்றவற்றை கொடுக்கும். ஆயினும் அதிகம் உட்கொண்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும்.

அசைவம், மீன், முட்டை, காய்கறி இவற்றில் பி3 வைட்டமின் சத்து கிடைக்கும்.பன்டோதினிக் ஆசிட் எனப்படும் பி5 வைட்டமின் உடல் உணவிலிருந்து சத்து எடுத்துக் கொள்ள உதவும். சில ஹார்மோன்கள், கொலஸ்டிரால் உருவாக்கவும் உதவுகின்றது. குறைபாடு ஏற்படும் பொழுது பராஸ்திஷியா என்ற பாதிப்பு ஏற்படும். வைட்டமின் பி5 அதிகமானால் வயிற்றுப் போக்கு, பிரட்டல், நெஞ்நெரிச்சல் பி5 சத்து அசைவ உணவு, மீன், முட்டை, காய்கறி இவற்றிலிருந்து கிடைக்கின்றது.பிரிடாக்ஸின் எனப்படும் பி6 வைட்டமின் சத்து உடலின் ரசாயன மாற்றங்களுக்கு உதவுகின்றது. இரத்த சோகை இதன் குறைபாட்டால் ஏற்படும். இந்த சத்து அதிகமானால் நரம்பு பாதிப்பு ஏற்படும்.

அசைவம் காய்கறி, கொட்டைகள், வாழைப்பழம் இவற்றில் பி6 வைட்டமின் சத்து கிடைக்கிறது.பயோடின் எனப்படும் பி7 வைட்டமின் சத்தில் குறைபாடு ஏற்பட்டால் சரும பாதிப்பு, குடல் பாதிப்பு ஏற்படும். முட்டை, கடலை, கீரை இவற்றில் எளிதாய் இச்சத்து கிடைக்கும்.சயன கோபாளமின் எனப்படும் வைட்டமின் பி12 ரத்த அணுக்கள் நரம்பு மண்டல செயல்பாடு ஆகியவற்றுக்கு அத்தியாவசமானது. இதன் குறைபாட்டால் ரத்த சோகை ஏற்படும். அசைவ உணவிலேயே இது அதிகம் கிடைக்கின்றது. வைட்டமின் சி தான் உடலில் அதிகமாக காணப்படும் கொலாஜன் எனப்படும் புரதம் உருவாக காரணம் ஆகின்றது. பல், சருமம், எலும்பு, ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருக்க இந்த வைட்டமின் மிகவும் அவசியமாகின்றது. பழங்கள், காய்கறிகள், கல்லீரல் இவற்றில் அதிகம் கிடைக்கின்றது. ஆய்வுகள் பி வைட்டமின் பிரிவுகள் ஞாபகத்திறனை காப்பதாகக் கூறுகின்றன.

இதே போன்று வைட்டமின் சி, ஈ, பீட்டாகரோட்டின் இவைகளும் மூளை நரம்புகளை காத்து வலிவூட்டுகின்றன. ஆயினும் ஆய்வுகள் கீரை, பருப்பு, ஆரஞ்சு, சோயா இந்த மாதிரி உணவுப் பொருட்களின் மூலம் பெறுவதையே வலியுறுத்துகின்றன. வைட்டமின் பி பிரிவு குறைபாடுகளை சோர்வு, அதிக படபடப்பு, வெளிர்ந்த சருமம், வறண்ட நாக்கு, ஈறில் இரத்த கசிவு, வயிறு பாதிப்பு, எடை குறைதல் போன்ற அறிகுறிகளின் மூலம் அறிய முடியும்.அதிக வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதும் ஆபத்தே என்பதனை நன்கு உணர வேண்டும். வைட்டமின் ஏ, டி, ஈ, கே ஆகியவை கொழுப்பில் கரையும் வைட்டமின்களாகும். இவை அதிக நாட்கள் உடலில் தங்கும். அதிக அளவு எடுத்துக் கொள்வதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

வைட்டமின்



ரெடினால் என்றும் சொல்லப்படும். இந்த வைட்டமினுக்கு உடலில் பல வேலைகள் உள்ளன. அதிக வெளிச்சம், குறைந்த வெளிச்சம் இவற்றிக்கு கண் தன்னை சரி செய்து கொள்வது இந்த வைட்டமினால்தான். எலும்பு வளர்ச்சி, பல் வளர்ச்சி, திசுக்களின் வளர்ச்சி நோய் எதிர்ப்பு சக்தி இவை அனைத்திற்கும் இந்த வைட்டமின் பொறுப்பு.சருமம், கண், வாய் உள்தசை, மூக்கு, தொண்டை, நுரையீரல் இவை ஈரப்பதத்தோடு இருப்பதும் இந்த வைட்டமினையே சார்ந்துள்ளன. மேலும் ஒரு சில வகை புற்று நோய்களையும் வைட்டமின் ‘ஏ’ தவிர்க்கும். பல வகை உணவுகள் உண்ணும் பொழுது அதாவது பால் பொருட்கள், மீன், கல்லீரல் இவற்றிலிருந்து வைட்டமின் ஏ கிடைக்கின்றது.

தாவர வகையிலிருந்து அடர்ந்த பச்சை நிறம் கொண்ட இலைகள், காய்கறிகள்,கேரட், பரங்கிகாய் இவையெல்லாம் வைட்டமின் ‘ஏ’ கிடைக்கும் உணவுப் பொருட்கள். சராசரி தேவையாக ஆணுக்கு 900 மைகி 1 பெண்ணுக்கு 700 மைகி அளவு இது தேவைப்படுகின்றது. வைட்டமின் ‘ஏ’ கல்லீரலில் தேக்கி வைக்கப்படுகின்றது.அதனால் தான் இச்சத்து குறைபாடு ஏற்படும் பொழுது 2 வருடம் வரை கூட அறிகுறிகள் தெரிவதில்லை. இரவு கண் தெரியாமை, சொரசொரப்பான வறண்ட சருமம், எளிதில் உடல் நோய் வாய்ப் படுதல், எலும்பு வளர்ச்சி குறைபாடு போன்றவை வைட்டமின் ‘ஏ’ குறைபாட்டால் ஏற்படும் நோய்கள். வைட்டமின் ‘ஏ’ அதிகம் இருந்தால்; அதாவது அன்றாடம் 3000 மைகி மேல் உடல் பெற்றால் வறண்ட சருமம், அரிக்கும் சருமம், தலைவலி, வயிற்றுப் பிரட்டல், பசியின்மை, பார்வை சரியின்மை, தலைசுற்றல், இடுப்பு எலும்பு முறிவு போன்றவை ஏற்படும்.

வைட்டமின் டி



உடல் உபயோகத்திற்கான கால்ஷியம், பாஸ்பரசில் வைட்டமின் டி மிக முக்கிய பங்காற்றுகின்றது. சிறு குடலில் இருந்து நன்கு கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் உருவாகவும், பாதுகாக்கப்படவும் இந்த வைட்டமின் ‘டி’யே காரணமாகின்றது. திசுக்களின் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவுகின்றது.குழந்தைகளுக்கு நல்ல எலும்பும், பல்லும் பெற வைட்டமின் ‘டி’ மிக அவசியம். பால், பால் பொருட்கள், மீன், மீன் எண்ணெய் இவற்றிலிருந்து வைட்டமின் ‘டி’ கிடைக்கின்றது. இத்தோடு சூரிய ஒளியில் சருமமே வைட்டமின் ‘டி’யை உற்பத்தி செய்கின்றது. ஒரு வயது முதல் ஐம்பது வயது வரை ஒருவருக்கு 15 மைகி வைட்டமின் ‘டி’ தேவைப்படுகின்றது.

இளம் காலை வெயில், மாலை வெயில் பொழுதில் கை, கால், முகத்தில் வெயில் படும் படி 10 நிமிடங்கள் இருக்கலாம். அதிக நேரம் வெயிலில் இருப்பவர்கள் ‘சன் ஸ்கீரின்’ அவசியம் உபயோகிக்க வேண்டும். வைட்டமின் ‘டி’ குறைபாடு ஏற்படும் பொழுது குழந்தைகளுக்கு ரிக்கட்ஸ் எனப்படும் வளைந்த கால்கள், பெரியோருக்கு எலும்பு அடர்த்தி குறைதல் ஏற்படுகின்றது.குழந்தைகளுக்கு பின் தலை தட்டையாகின்றது. புற்று நோய் பாதிக்கும் அபாயம் அதிகமாகின்றன. ரத்தக் கொதிப்பு, நோய் பாதிப்பு எளிதில் ஏற்படுகின்றது. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் தாய்பால் மட்டும் பெறும் சிறு குழந்தைகள், அடர்ந்த நிறம் கொண்டோர், முதியோர் நோயாளிகள் ஆகியோருக்கு வைட்டமின் ‘டி’ குறைபாடு ஏற்படுகின்றது. அதிக அளவு வைட்டமின் ‘டி’ ரத்தத்தில் அதிக கால்ஷியம், உடல், மன வளர்ச்சி குறைவு, வயிற்று குமட்டல், வாந்தி இவற்றினை ஏற்படுத்தும்.

வைட்டடமின் ஈ



வைட்டமின் ஈ உடலில் வைட்டமின் ஏ,சி, சிகப்பு அணுக்கள் நல்ல அமினோ அமிலங்கள் இவற்றை காக்கின்றது. நல்ல பழங்கள், காய்கறிகள் மூலமே இவற்றைப்பெற முடியும் என சமீபத்திய ஆய்வுகள் வலியுறுத்துகின்றன. சூரிய காந்தி எண்ணெய், சோயாபீன்ஸ், பழங்கள், காய்கறிகள், கொட்டைகள் இவைகள் மூலம் வைட்டமின் ஈ சத்து கிடைக்கின்றது. ஆணும், பெண்ணும் 14 வயதிற்கு மேல் 15 மைகி அளவு அன்றாடம் வைட்டமின் ஈ பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.

வைட்டமின் கே



வைட்டமின் கே பாக்டீரியாவால் குடலில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படுகின்றது. ரத்தம் கெட்டிப்பட, எலும்பின் ஆரோக்கியம், ரத்தம், எலும்பு, சிறுநீரகம் இவற்றிக்கான புரதம் அளிக்க உதவுகின்றது. முட்டைக் கோஸ் பச்சை முட்டைக்கோஸ், காலிப்ளவர், பச்சை நிற இலைகள், தாவர எண்ணெய் இவற்றிலிருந்து வைட்டமின் கே கிடைக்கின்றது. போதுமான அளவு வைட்டமின் கே உடலில் இல்லை எனில் சிறு காயத்திலும் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். தொடர் வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு வைட்டமின் கே. குறைபாடு ஏற்படும். மிக அதிக அளவு வைட்டமின் கே; திசுக்களுக்கும் கல்லீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.


தெரிந்துகொள்ள வேண்டியவை



கொழுப்பில் கரையும் வைட்டமின் ஏ,டி,ஈ,கே இவை நீண்ட காலம் உடல் சேகரிப்பில் இருக்கும்.பீட்டா கரோட்டினை உடல் வைட்டமின் ‘ஏ’வாக மாற்றும். இது காய்கறி பழங்களில் அதிகம் உள்ளது.குறைவான வைட்டமின் டி, உடலுக்குத் தேவையான சூரிய வெளிச்சம் இன்மை இவை இன்றைய மருத்துவ பொதுநல கவலையாக உள்ளது. வைட்டமின் ஈ உடலின் பாதுகாப்பு. குடலில் உள்ள பாக்டீரியாக்களால் உருவாகும் வைட்டமின் கே, கீரைகளில் அதிகம் உள்ளது.

குங்குமம் டாக்டர்
Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Picsar35

சமீபகாலமாக ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வழியாக உடல்நலம் சார்ந்தும் நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்தும் பல விஷயங்களைப் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுடன் கஷாயம், லேகியம், பானங்கள், பொடிகள், மந்திர தந்திரங்கள் ஆகியவற்றைச் சேர்த்து உட்கொள்வதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று அதில் கூறப்படுகிறது.

நிபுணர் என்று அதில் வரும் சிலர் அனுபவ அறிவைப் பகிர்கின்றனர். இன்னும் சிலர் இவை எதுவும் தெரியாமல் பேசுகிறார்கள். ஆனால் இவர்கள் சொல்லும் தகவலை உண்மை என ஏராளமானோர் நம்புகின்றனர்.

ஏன் சாப்பிட வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும்? எது சிறந்தது? எது நல்லது எது கெட்டது?

இவை முழுமையாகத் தெரியாத ஒரு குழப்பம் பலருக்கும் இருக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியின் பயன் என்ன?



நம் உடலை அனைத்து நோயிலிருந்தும் பாதுகாக்க, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. நமது உடலிலுள்ள வெள்ளை ரத்த அணுக்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

நோயிலிருந்து பாதுகாப்பது, நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு நோய்க்கிருமியைக் கொல்வது தான் நமது உடலில் வெள்ளை ரத்த அணுக்களின் முக்கிய வேலை. இத்துடன் நோய்த்தொற்று மீண்டும் வராமல் இருக்க அவை உருவாக்கும் ஆன்டிபாடிகளின்(antibodies) செயல்பாடு முக்கியமானது.

இதுமட்டுமின்றி, தடுப்பூசிகளும் நம் ரத்த அணுக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கின்றன.

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, நாம் தினசரி "சமமான விகிதத்தில் உணவு" சாப்பிட வேண்டும்.

குறிப்பாக, நமது உணவில் போதுமான புரதங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிக்கலாம்?



தினமும் பழங்கள், காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலமும் மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமும் உடலில் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்த முடியும். யோகா, தியானம் போன்ற முறைகளையும் நாம் பின்பற்றலாம்.

ஆனால் இதைச் செய்யாமல், நோய் எதிர்ப்பு சக்தியை எளிதாக அதிகரிக்கலாம் என்னும் விளம்பரங்களைப் பார்த்தும், கேட்டும் ஏமாறுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல.

நம் நோய் எதிர்ப்பு சக்தியை வாழ்நாள் முழுவதும் பராமரிக்க தினமும் சிறிய முயற்சிகளை எடுக்க வேண்டும்.

அதைச் செய்ய எளிமையான வழிமுறைகள் ஏதுமில்லை. நம் வாழ்வின் கடைசி நாள் வரை செயல்படப் போகும் இந்த உடலுக்கு உரிய மரியாதையை நாம் கொடுக்க வேண்டும்.

உணவை உணவாகக் கருத வேண்டும். அதில் மருத்துவ குணம் இருக்கிறது என்று சொல்வதைக் கேட்டு ஏமாறாதீர்கள்.

Infusion எனப்படும் தண்ணீரில் மூலிகை, பழங்களை வைத்து அருந்துவது எந்த நன்மையையும் அளிக்காது. இப்படிச் செய்வதால் அமிலத்தன்மை உடலில் அதிகரிக்கிறது. அதனால் தேவையில்லாமல் உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளவேண்டாம்.

ஆவி பிடிப்பது, கொதிக்க வைப்பது போன்ற முறைகளால் வைரஸ் இறக்காது. வைரஸ் கிருமிகள் நமது உடலுக்குள் மூக்கு, வாய், தொண்டை வழியாக நுழையாது.

வைட்டமின் மாத்திரைகளை தினமும் சாப்பிடுவதால் எந்தப் பலனும் இல்லை. உடலில் ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாதவரை அந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் எந்தப் பயனும் கிடைக்காது.

இருப்பினும், வைட்டமின் குறைபாடு இருக்கிறதா, இல்லையா என்பதை உறுதிப்படுத்த மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும்.

காய்கறி, பழங்கள் எப்படி விளைவிக்கப்படுகின்றன என்பதை பொறுத்து ஊட்டச்சத்தில் சில மாறுபாடுகள் ஏற்படலாம். ஆனால் அதன் அளவு மிகச் சொற்பமானதே.

பிரதானமாக நமது உணவுப் பழக்கம், வாழ்க்கை முறையால் தான் ஊட்டச்சத்துக் குறைபாடு சிலருக்கு ஏற்படுகிறது.

எதனால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது?



ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படப் பல காரணிகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகளை உண்பது.

அதேபோல போதுமான உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பது, உதாரணமாக அலுவலகத்தில் சேரில் அமர்ந்து 8 மணி நேரம் வேலை பார்க்கும் நபர்கள் நடை பயிற்சி உள்ளிட்ட அடிப்படை பயிற்சிகளை மேற்கொள்வதைத் தவிர்ப்பது.

இது மட்டுமின்றி, குளிர்பானங்கள்(Carbonated drinks) அருந்துவது, வெயிலில் அதிகம் செல்லாமல் இருப்பது, புகையிலை, மதுபானம் உள்ளிட்ட பழக்கத்திற்கு அடிமையாவது போன்ற காரணங்களும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட முக்கிய காரணிகளாக உள்ளன.

மேற்கூறிய காரணங்களில் ஒன்றோ அல்லது அதற்கும் மேற்பட்ட பழக்கங்களோ நமது தினசரி வாழ்க்கை முறையில் இருந்தால் அவை நமது நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்தும்.

தினசரி வாழ்வியல் முறையில் மாற்றங்களைக் கொண்டு வராமல், ஒரு மாத்திரையின் மூலமாக மட்டும் ஆரோக்கியமாக இருக்க முடியாது.

கவனிக்க வேண்டியவை



உடல்நலத்தை மேம்படுத்துவதற்காக செம்புக் கோப்பையில்(Copper bottle) தண்ணீர் குடித்துவிட்டு செம்புப் பாத்திரங்களை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது என்று சிலர் நம்புகிறார்கள்.

ஆனால் அப்படிப் பயன்படுத்தும் நபர்கள், தாமிரக் குறைபாடு(copper deficiency) இருக்கிறதா, அதை அதிகரிக்க வேண்டுமா என யோசிக்கத் தவறுகிறார்கள்.

மேலும், பிளாஸ்டிக் கொள்கலன்களைப்(plastic containers) பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை. குறிப்பாக சூடான உணவு, பானம் ஆகியவற்றை அதில் வைத்து சாப்பிடுவது, குடிப்பதால் என்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று நாம் கவனத்தில் கொள்ளத் தவறுகிறோம். ஏனெனில் அவை எளிதில் கிடைக்கின்றன.

சைவ உணவு உண்பவர்களுக்கு புரதத்திலிருந்து கிடைக்கும் சில வைட்டமின்கள் குறைபாடு இருப்பது இயற்கையானது.

வயதானவர்கள், நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், செரிமான அமைப்பில் பிரச்னை உள்ளவர்களுக்கு, சில ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவது இயற்கையானது. குறிப்பாக இவர்களுக்கு வைட்டமின் B12 குறைபாடு ஏற்படும்.

மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும் வைட்டமின் B1, ஃபோலிக் அமிலம் போன்றவை அதிகம் தேவை. எனவே, அந்தக் குறைபாடுகளை மாத்திரைகள் மூலம் சரி செய்து கொள்ளலாம்.

ஆயினும், மேற்கூறிய பல காரணங்களால் உடல் மற்றும் மன வளர்ச்சி குறைபாடு வளரும் பருவத்தில் உள்ள சில குழந்தைகளுக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக உப்பு சத்துக் குறைபாடு காரணமாக இந்த பிரச்னை குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

எனவே குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அவர்களின் தினசரி உணவில் வழங்கும் காய்கறி, பழங்கள் மூலமாக வழங்க வேண்டும்.

உணவு மூலமாக ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொள்ள முடியாத நபர்கள் மட்டும் மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் மாத்திரை மூலம் எடுத்துக் கொள்ளலாம்.

குறிச்சொற்கள் #ஊட்டச்சத்து #உடல்நலம் #வைட்டமின்

பிபிசி தமிழ்
Topics tagged under வைட்டமின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Xgjxr8F

எலும்புதான் நம் உடலின் ஆதாரம். காயம்பட்டாலோ, விபத்துகளில் சிக்கினாலோ `ஃப்ராக்சர் எதுவும் இருக்கக் கூடாது’  என்பதுதான் எல்லோரின் வேண்டுதலாக இருக்கும். காரணம், எலும்பில் பாதிப்பு ஏற்பட்டால், உடலின் மொத்த இயக்கமும் பாதிக்கப்படலாம். உச்சந்தலை முதல் பாதம்வரை உடலின் அனைத்துப் பகுதிகளையும் உறுதியாக வைத்திருக்கக்கூடியவை எலும்புகள் என்பதால், அவற்றின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சில நேரங்களில், மூட்டுத் தேய்மானம், ஊட்டச்சத்துக் குறைபாடு, ஆர்த்ரைட்டிஸ், ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ், எலும்புப்புரை போன்ற பிரச்னைகளாலும் எலும்புகள் பாதிப்படையலாம். எலும்புகளின் ஆரோக்கியத்தில் உணவுகளுக்கும் முக்கியப் பங்குண்டு. என்ன மாதிரியான உணவுகள் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று பார்ப்போம்.


எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், குறைபாடு காரணமாக எலும்புகளில் வரும் பிரச்னைகளை முன்கூட்டியே தடுக்கவும் கால்சியம், வைட்டமின் சி மற்றும் டி, மக்னீசியம், புரதம், பாஸ்பரஸ், ஃபோலேட் ஆகிய சத்துகள் தேவை. இவற்றில் மிக முக்கியமானவை கால்சியம், வைட்டமின் டி, மக்னீசியம் என்பதால் அவை அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.


கால்சியம்: பால், தயிர், சீஸ், வெண்ணெய் போன்ற பால் உணவுகளில் கால்சியம் நிறைந்திருக்கும். `லாக்டோஸ் இன்டாலரன்ஸ்’ (Lactose Intolerance) எனப்படும் பால் உணவுகள் சார்ந்த ஒவ்வாமை உள்ளவர்கள் மேற்கூறிய உணவுகளுக்கு பதில் கசகசா, பச்சைநிறக் காய்கறிகள், கீரை வகைகள், புரொக்கோலி, எள், சியா விதைகள், பாதாம் போன்றவற்றை எடுத்துக்கொண்டால் கால்சியம் சத்து கிடைக்கும்.

வைட்டமின் டி: சூரிய ஒளியில் இந்தச் சத்து அதிகம் உள்ளது. காலை 6 மணி முதல் 9 மணிவரையும், மாலை 4 மணி முதல் 6 மணிவரையும் உள்ள ஒளியில் வைட்டமின் டி அதிகம் இருக்கும். எனவே, அந்த நேரங்களில் உடலில் சூரிய ஒளி படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். உணவைப் பொறுத்தவரை முட்டை, மீன், மீன் எண்ணெய், காளான் போன்றவற்றைச் சாப்பிடலாம். கால்சியம் சத்தை முழுமையாகவும் முறையாகவும் உட்கிரகிக்க வைட்டமின் டி அவசியம். எலும்பு ஆரோக்கியம் மட்டுமன்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது உதவும்.


மக்னீசியம்: கீரை வகைகள், சூரியகாந்தி, பூசணி, எலுமிச்சை விதைகள், வால்நட், பாதாம், முந்திரி, பருப்பு வகைகள், சிறுதானியங்கள், கோதுமை, புழுங்கலரிசி, அவகேடோ போன்றவற்றில் மக்னீசியம் இருப்பதால், அவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு சத்துக்கும் தனித்தனியாக உணவு உட்கொள்வதைவிட, `கம்பைண்டு’ உணவுகளாகச் (Combined Foods) சாப்பிடுவது நல்லது.

கம்பைண்டு உணவுப் பட்டியலுக்கு ஓர் உதாரணம்


எள் + அடை - உடன் ஒரு பழம் (ஆரஞ்சு)

குறிப்பு: எள்ளைப் பொடியாக்கி அடைமீது தூவியோ அல்லது சட்னியாக அரைத்தோ காலை உணவாகச் சாப்பிடுவது நல்லது. கால்சியம் அதிகம் கிடைக்கும்.

சிறுதானியம் + கீரை

குறிப்பு: இதை, மதிய உணவாக எடுத்துக்கொள்ளலாம். கீரையில் மக்னீசியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்திருக்கும்.

அவகேடா பழம் (ஒன்று) உலர் பழங்கள் + மில்க்‌ஷேக்

குறிப்பு: மாலை வேளையில் ஸ்நாக்ஸாக இவற்றைச் சாப்பிடலாம். அவகேடோவில், தாதுச்சத்துகள் நிறைந்திருக்கின்றன.

புரொக்கோலி + பச்சைநிறக் காய்கறிகள் சேர்த்த சூப்

குறிப்பு: மாலைநேர ஸ்நாக்ஸாகச் சாப்பிடலாம். புரொக்கோலி, கால்சியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்தது. பச்சைநிறக் காய்கறிகள் அனைத்திலும் வைட்டமின் ஏ, கே, ஃபோலேட் சத்துகள் நிறைந்திருக்கும்.

எண்ணெய் குறைவாகப் பயன்படுத்தி வறுத்த மீன்

குறிப்பு: மதிய உணவுடன் இதைச் சாப்பிடலாம். மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருக்கும். வைட்டமின் டி மற்றும் பி2, இரும்புச்சத்து, பொட்டாசியம் எனப் பல தாதுக்களும் இதில் ஒருசேர நிறைந்திருக்கின்றன.

தண்ணீரில் 4-5 மணி நேரம் ஊறவைத்த சியா விதைகள் + பால் / பாதாம் பால் + ஏதேனும் ஒரு பழம் + நட்ஸ்

குறிப்பு: புட்டிங் (Pudding) வகை ரெசிபிபோலச் செய்து இதை உட்கொள்ளலாம். மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.

ஆம்லெட் + வெங்காயம் + குடமிளகாய், கீரை, காளான், புரொக்கோலி

குறிப்பு: முட்டையிலிருந்து புரதச்சத்தும், கீரை, காளான் போன்றவற்றிலிருந்து தாதுச்சத்துகளும் கிடைக்கும்.

கீரை + காய்கறிகள் + முட்டை்ப பொடிமாஸ்

குறிப்பு: முட்டையில் கலோரி குறைவாக இருக்கும். பொடிமாஸாகச் செய்து சாப்பிடுவதால் கலோரிகள் அதிகரிக்கும். இதனால் உடலுக்கு நல்ல கொழுப்பு அதிகம் கிடைக்கும்.

முட்டைப் பொடிமாஸ் + டோஃபு (Tofu) / பனீர் புர்ஜி

குறிப்பு: புரதம், கால்சியம், மக்னீசியம், துத்தநாகம், இன்னும் சில தாதுச்சத்துகள் கிடைக்கும்.

குறிச்சொற்கள் #எலும்பு #வைட்டமின் #கால்சியம் #வைட்டமின்_டி #மக்னீசியம்

குங்குமம் டாக்டர்

Back to top