புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
13 Posts - 25%
Baarushree
Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 4%
prajai
Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 4%
Rutu
Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 2%
சிவா
Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 2%
viyasan
Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 8%
Rutu
Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 1 match for ஸ்ரீராமர்

சிவா
Wed Mar 29, 2023 11:28 pm

Search in: இந்து
Topic: ஸ்ரீ ராம நவமித் திருநாள்
Replies: 2
Views: 371

Topics tagged under ஸ்ரீராமர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Sri-rama-navami

பங்குனியில் நவமி திதியும், புனர்பூசம் நட்சத்திரமும் இணையும் நாளில் கொண்டாடப்படுவது. மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ராமாவதாரம்.

சாஸ்திரங்களின்படி, ஸ்ரீராமரின் பிறந்தநாள் சைத்ரா மாதத்தில் சுக்ல பக்ஷத்தின் ஒன்பதாம் நாளில் கொண்டாடப்படுகிறது. இது சைத்ர நவராத்திரியின் ஒன்பதாவது மற்றும் கடைசி நாள். ஆனால் இந்த ஆண்டு ராமநவமி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. புராணங்களின்படி, தசரத ராமர், சகலவிதமான ஸ்ரீராமர், சைத்ர சுத்த நவமி, புனர் பூச நட்சத்திரத்தின் கடக லக்னத்தில், துல்லியமாக அபிஜித் முஹூர்த்தத்தில், அதாவது மதியம் 12 மணிக்கு, நடுவில் பிறந்தார்.

ஸ்ரீ ராமநவமி விழா 2023 ம் ஆண்டில் மார்ச் 30 ம் தேதி வியாழக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. நவமி திதியானது மார்ச் 29 ம் தேதி இரவு 11.49 மணிக்கு துவங்கி, மார்ச் 31 ம் தேதி அதிகாலை 01.40 மணி வரை உள்ளது. அதற்கு பிறகே தசமி திதி வருகிறது. அதனால் மார்ச் 30 ம் தேதி நாள் முழுவதும் நவமி திதி காணப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி, இந்த ராமநவமியின் போது சிறப்பு யோகங்கள் உருவாகும் என்பது நம்பிக்கை. ஸ்ரீராம நவமி அன்று அமிர்த சித்தி யோகம், குரு புஷ்ய யோகம், சுப யோகம், சர்வார்த்த சித்தி யோகம், ரவி யோகம் உருவாகிறது.

மகாவிஷ்ணு எடுத்த ஒன்பது அவதாரங்களில் மிகவும் முக்கியமான அவதாரம் ராம அவதாரம் ஆகும். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமன் ராமராக அவதாரம் எடுக்க வேண்டும் என முடிவு செய்த போது, அவர் இல்லாமல் எப்படி வைகுண்டத்தில் இருப்பது என மகாலட்சுமி, ஆதிசேஷன் உள்ளிட்ட அனைவரும் வருந்தினர்.

அவர்களின் துயரத்தை போக்குவதற்காக மகாலட்சுமி சீதா தேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும், பெருமாளின் கையில் இருக்கும் சங்கும் சக்கரமும், பரதன் மற்றும் சத்ருகனனாக அவதாரம் எடுத்து, பெருமாளுடனேயே இருக்கும் பாக்கியத்தை பெற்றனர். ராமர் அவதரித்த தினத்தை நாள் ராமநவமியாக கொண்டாடுகிறோம்.

இந்த வருடம் ராம நவமி வியாழன் அன்று வருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஸ்ரீராமர் விஷ்ணுவின் 7வது அவதாரம். விஷ்ணுவுக்கு வியாழன் மிகவும் பிரியமான வாரம்.. வியாழன் அன்று ராம்ஜன்மோத்ஸவா நடைபெறுவதால் அதன் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது.ராம நவமி நாளில், ஒரு கிண்ணத்தில் கங்கை நீரை எடுத்து'ஓம் ஸ்ரீ ஹ்ரீம் ராம்சந்த்ராய ஸ்ரீ நம' என்று 108 முறை உச்சரிக்கவும். வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தெளிக்கவும். இதனால் வீட்டின் வாஸ்து தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீராமநவமி வழிபடும் முறைகள்



ஸ்ரீராமநவமி அன்று வீடு, வாசல், பூஜை அரை அனைத்தையும் சுத்தம் செய்து இறைவனுக்கு விளக்கேற்றி புதிய மலர்கள் அணிவிக்க வேண்டும். ஸ்ரீராமநவமி அன்று ராமர் பட்டாபிஷேகம் படத்தை வைத்து வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும்.

ராம நவமி விரதம் இருப்பது எப்படி அன்றைய தினம் ஒரு வேளையாவது விரதம் இருந்து ஸ்ரிராமநாமத்தை உள்ளன்போடு சொல்ல வேண்டும். ராமநாமத்தை சொல்வதோடு மட்டுமல்லாமல் எழுதுவதும் மிக சிறந்ததாகும்.

இவ்வாறு செய்வதன் மூலம் அனைத்து கஷ்டங்களும் நீங்கி வாழ்வில் பல்வேறு சிறப்புகள் உண்டாகும். ராமநவமி அன்று ராமரை வழிபடுவதோடு மட்டுமல்லாமல் ராம பக்தரான அனுமனை வழிபடுவதும் சிறப்பான ஒன்றாகும்.

சுவாமிக்கு நெய்வேத்தியமாக நீர்மோர், பானகம், பாயாசம் வைத்து வழிபடலாம். வழிபாடு முடிந்த பின் தீப ஆரதானை காண்பித்த பின்னர் பானகத்தை அனைவருக்கும் கொடுத்து நாமும் உண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

ஸ்ரீராமநவமி அன்று அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று ராம பஜனைகள் நடைபெறுவதை கேட்கலாம். இறுதியாக ராமர், சீதா கல்யாண வைபோகத்தை கண்டுகளிக்க வேண்டும். திருமணம் ஆகாதவர்கள், திருமண வாழ்வில் சங்கடங்கள் உள்ளவர்கள் அனைவரும் திருக்கல்யாணத்தை கான வேண்டும். இதனால் திருமண தடைகள் அனைத்தும் தகர்ந்து விரைவில் திருமணம் நடைபெறும்.

அன்றைய தினம் ராம பக்த்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் செய்து நீர்மோர், பானகம் கொடுப்பது சிறப்பாகும்.

யார் வழிபாடு செய்யவேண்டும்?



இந்த ராமநவமி அன்று வெகு நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் விரதமிருந்து வழிபாடு செய்யலாம். திருமணம் ஆகியும் குழந்தை பேறு இல்லாதவர்கள் ராமரை வணங்கி பிரார்த்தனை செய்யலாம். கணவன் மனைவி இடையே மனஸ்தாபம் உள்ளவர்கள் ,பிரிந்து வாழ்பவர்கள் ராமநவமி அன்று ஸ்ரீராமரை வணங்கினால் இல்வாழ்க்கையில் பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம். அண்ணன் தம்பி சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் இடையேயான மனஸ்தாபங்கள் நீங்க ராமநவமியன்று ராமரை வழிபடலாம்.

எப்படி வழிபடுவது


இராம நாமம் சொல்லுங்கள்



"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சன்மமும் மரணமு மின்றித் தீருமே
இன்மையே ராமவென் றிரன் டெழுத்தினால்"


என்பது கம்பரின் வாக்கு. ராம நவமியில் மகிமைமிகு ராம நாமத்தை இடைவிடாது உச்சரிப்பதால் இல்லத்தில் நற்காரியங்களும், செல்வ வளமும் வளர்ந்தோங்கும். நாம் செய்த பாவங்கள் கரைந்து புண்ணியங்கள் கூடும்.

ராம நவமியில் தானம் கொடுங்கள்



ராம நவமியில் ராமனுக்கு நைவேத்தியமாக நீர்மோர் படைப்பது மிக முக்கியமாகும். ராஜரிஷி விசுவாமித்திரருடன் இருந்தபோதும், அதன்பின், பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தின்போதும், ராமபிரான் நீர்மோரையும், பானகத்தையும் தாக சாந்திக்காக அருந்தினார். அதன் நினைவாகவே, நீர்மோரும், பானகமும் ஸ்ரீ ராமனின் அவதார தினமான ஸ்ரீ ராம நவமி அன்று நிவேதனப் பொருட்களாகப் படைக்கப்படுகின்றன. இதைத்தவிர, பொங்கல், பருப்பு வடை போன்றவற்றையும் நிவேதனம் செய்து, பகிர்ந்து உண்பார்கள். ஸ்ரீ ராமன் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டதால், அவருடைய பிறந்த நாளில் எளிய பானங்களான நீர்மோர், பானகம் வழங்குவதையும், விசிறி தானம் செய்வதையும் வழக்கமாக அமைத்தனர்.

ராமனின் அருள் கிடைக்கும்



பெரிய அளவில் நைவேத்தியம் படைக்க முடியாவிட்டாலும் ராமர் பட்டாபிஷேக படத்தின் முன்பாக வாழைப்பழம், பால் போன்ற எளிய பொருட்களை அர்ப்பணித்தும், ஸ்ரீ ராம நாமம் சொல்லியும் ஸ்ரீ ராமனை வணங்கி அருள் பெறலாம். ஆலயத்திலும் சரி, இல்லத்திலும் சரி, பூஜையின்போது, ராமபிரானை வணங்கியபிறகு, பூஜையில் கலந்துகொள்ளும் பெரியோர்களையும், ராம பக்தர்களையும்கூட வணங்கி அவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற வேண்டும்.

அனுமன் அருள் கிடைக்கும்



ராம நவமியன்று, ராம நாமம் உச்சரிக்கப்படும் இடங்களிலும், இராமாயணம் படிக்கப்படும் இடங்களிலும் அங்குள்ள அடியவர்கள் மீது ஸ்ரீ ஆஞ்சநேயர் எழுந்தருள் செய்து ஆனந்திப்பாராம். எனவே, அடியவர்களை வணங்குவதன்மூலம் அனுமனின் அருளையும் பெறலாம்.

ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே


என, எந்நாட்டவர்க்கும் இறைவனாம் ஈசனே, ஸ்ரீ ராமரைப் போற்றிப் புகழ்ந்து, உமையாளுக்கு உபதேசம் செய்து மகிழ்ந்த மந்திரம் ராம நாம மந்திரமாகும். அதாவது, " அழகிய முகத்தவளே, ஸ்ரீ ராம ராம ராம என்று, மனதுக்கு இனியவனாகிய ராமனிடத்தில் நான் ஆனந்தம் அனுபவிக்கிறேன். அந்த ராம நாமம், சஹஸ்ர நாமத்துக்கு சமமானது " என்று பார்வதிதேவியிடம் இராம நாமத்தின் மகிமையைச் சிவபெருமான் கூறி மகிழ்ந்தாராம்.

ஆகவே, நாமும் ஸ்ரீ ராம நாமம் கூறி உயர்வடைவோமாக.

ராம நவமியை வட இந்தியாவில் தொடர்ந்து எட்டு நாட்கள் விழாவாகக் கொண்டாடுகின்றார்கள். நாமும், ஸ்ரீ ராம நவமிக்கு முன் ஒன்பது நாட்கள் வீட்டில் பூஜை செய்து, பெரியவர்கள் மூலமாக ராமாயணம் படித்து, கடைசி ஸ்ரீ ராம நவமி நாளான பத்தாம் நாளன்று இராமாயண பாராயணத்தை நிறைவு செய்வதால் நம் பாவங்கள் அகன்று, மோட்சப் பேறு கிடைக்கும் என்பது நிச்சயம்.


குறிச்சொற்கள் #ஸ்ரீராமநவமி #ராமநவமி #ஸ்ரீராமர் #ஜெய்ஸ்ரீராம்

Back to top