புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரிதல்! Poll_c10புரிதல்! Poll_m10புரிதல்! Poll_c10 
30 Posts - 56%
heezulia
புரிதல்! Poll_c10புரிதல்! Poll_m10புரிதல்! Poll_c10 
21 Posts - 39%
Manimegala
புரிதல்! Poll_c10புரிதல்! Poll_m10புரிதல்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
புரிதல்! Poll_c10புரிதல்! Poll_m10புரிதல்! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
புரிதல்! Poll_c10புரிதல்! Poll_m10புரிதல்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புரிதல்! Poll_c10புரிதல்! Poll_m10புரிதல்! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
புரிதல்! Poll_c10புரிதல்! Poll_m10புரிதல்! Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
புரிதல்! Poll_c10புரிதல்! Poll_m10புரிதல்! Poll_c10 
12 Posts - 4%
prajai
புரிதல்! Poll_c10புரிதல்! Poll_m10புரிதல்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
புரிதல்! Poll_c10புரிதல்! Poll_m10புரிதல்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
புரிதல்! Poll_c10புரிதல்! Poll_m10புரிதல்! Poll_c10 
3 Posts - 1%
jairam
புரிதல்! Poll_c10புரிதல்! Poll_m10புரிதல்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
புரிதல்! Poll_c10புரிதல்! Poll_m10புரிதல்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
புரிதல்! Poll_c10புரிதல்! Poll_m10புரிதல்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
புரிதல்! Poll_c10புரிதல்! Poll_m10புரிதல்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரிதல்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 22, 2014 1:20 pm

மாலை, 7:00 மணி; பார்த்தசாரதி சுவாமி கோவில் தூணில் சாய்ந்து இருந்தார் விஸ்வநாதன். அவரையும் அறியாமல், கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.

காலையில், மருமகள் பேசிய வார்த்தைகளே, நினைவில் நின்று, கண்ணீரை வரவழைத்தது.
'ஏங்க உங்க அப்பாவுக்கு, கொஞ்சமாவது அறிவு இருக்கா... ஆபீஸ் போற அவசரத்தில, நானே அரக்க பரக்க வேல செய்துகிட்டு இருக்கேன்... அந்த நேரத்தில, டீ கொண்டா, பேப்பர் வந்திருச்சா, சுடு தண்ணீர் கொடு, மாத்திரை எடுத்துத்தான்னு ஒரே இம்சை...
'மதிய நேரம் சும்மா தானே உட்காந்து இருக்காரு. சமையல் கட்டுல வந்து, சாப்பாட எடுத்து போட்டு சாப்பிட மாட்டாரா... டிபனை டைனிங் டேபில்ல வையின்னு ஒரு ஆர்டர். வீட்டுல தானே இருக்காரு, மெதுவா காபி குடிச்சிட்டு பேப்பர் பாக்க வேண்டியது தானே...' என்று, புலம்பி தள்ளினாள்.

இதை காதில் கேட்டவர் தான், பச்சை தண்ணீர் கூட குடிக்காமல், கோவிலுக்கு வந்து உட்காந்து விட்டார் விஸ்வநாதன்.
தன் நண்பர் ராகவனுக்காக காத்திருந்தார். ஆனால், மூன்று நாட்களாகவே அவர் கோவிலுக்கு வராதது உறுத்தவே, உடல் நல குறைவோ என, பயமும், கவலையும் கொண்டார்.விஸ்வநாதனும், ராகவனும் ஒரே அலுவலகத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர்கள். இருவரும், ஒரே ஊரில் வசிப்பதால், இவர்களது நட்பு, இன்னும் தொடர்கிறது.

இருவருக்கும் மனைவியர் இல்லை. மகன்களிடம், சிக்க வைத்து விட்டு, இருவரும் சுதந்திரமாக சென்று விட்டதாக கூறிக் கொள்வர்.
இன்றும் நண்பர் ராகவன் கோவிலுக்கு வராததால், நாளையாவது வீட்டுக்கு சென்று பார்த்து வரலாம் என, நினைத்துக் கொண்டு, வீட்டிற்கு கிளம்பிப் போனார் விஸ்வநாதன்.

காலை, 7:00 மணி; அழைப்பு மணி ஒலித்தது. டீ குடித்துக் கொண்டிருந்த ராகவன், யார் இந்த நேரத்தில் என்று யோசித்துக் கொண்டே, எழுந்து போய் கதவை திறந்தார். வெளியில் நின்றிருந்தார் விஸ்வநாதன்.
''விச்சு நீயா...'' என்று, ஆச்சரியப்பட்டவர், ''வா... வா,'' என்று கூறி, விஸ்வநாதன் கையைப் பிடித்து அழைத்து வந்து, சோபாவில் அமர வைத்தவர், உள்ளே சென்று டீ கொண்டு வந்து கொடுத்தார்.

''நான் போட்ட டீ; குடிச்சு பாத்திட்டு சொல்லு,''என்றார் ராகவன்.
அளவான இனிப்பு, இஞ்சி வாசம், டீ தூள் மணம் அருமையாய் இருந்தது.
''ரொம்ப நல்லா இருக்கு ராகவா; மூணு நாளா நீ கோவிலுக்கு வராததால, பாத்துட்டு போகலாம்ன்னு வந்தேன். ஆமா... ஏன் வீடு ரொம்ப அமைதியா இருக்கு... மகன், மருமக, பேரப் பசங்கள காணோம். ஊருக்கு போயிட்டாங்களா, அதனால தான், கோவிலுக்கு வரலயா?'' என்று கேட்டார்.

அவர் கேட்டுக் கொண்டிருக்கையிலேயே, பெட்ரூம் கதவை திறந்து, மகன் பாலாவும், மருமகள் கீதாவும் தூங்கி எழுந்து வந்தனர். பேரக் குழந்தைகள் தூங்கிக் கொண்டு இருந்தனர். இரவில் எழுதிய நோட்டு புத்தகங்கள் சிதறிக் கிடந்தன.
''சாரிப்பா நல்லா தூங்கிட்டேன்,'' என்றாள் மருமகள் கீதா.
''எதுக்குமா சாரி... மொதல்ல நீ போய் குளிச்சிட்டு வா. டீ போட்டுக் கொடுக்கறேன்.'
வியப்பாய் இருந்தது விஸ்வநாதனுக்கு. 'மணி, 7:00 ஆயிருச்சு. இனி சமையல் முடிச்சு, ரெண்டு பேரும் எப்ப ஆபீஸ் கிளம்பறது...' என்று யோசித்தார்.

''கீதா...'' என்று, கூப்பிட்டார் ராகவன்.
''என்னப்பா...''
''இட்லி நாலு தட்டு எடுத்துட்டேன்; தேங்காய் சட்டினி அரைச்சுட்டேன். குக்கர்ல அரிசி போட்டு வச்சு இருக்கேன். சாம்பாருக்கு பருப்பை வேக வச்சு, காய்கறி நறுக்கிட்டேன். ரசத்துக்கு புளி, தக்காளி கரைச்சு வச்சு இருக்கேன். புளிப்பு, உப்பு சரியா இருக்கான்னு பாத்துக்கம்மா,'' என்றார்.

ராகவன் சொல்ல சொல்ல, விஸ்வநாதனுக்கு அதிர்ச்சியாக இருந்தது; அதுவும் மருமகள் கீதா, 'அப்பா' என்று கூப்பிடுவது.
அன்றைய நாளிதழை கையில் கொடுத்து, ''விச்சு இத பாத்திட்டு இரு. பத்து நிமிஷத்தில வந்துடறேன்,'' என்று சொல்லி சென்றவர், பேரக் குழந்தைகளை தயார்படுத்தி, பள்ளி வேனில் அனுப்பினார். 'தாத்தா சாய்ங்காலம் அமாவாசை கதை சொல்லணும்...' என்று சொல்லி, டாடா காட்டி சென்றனர்.

மகனுக்கும், மருமகளுக்கும் சிறு சிறு உதவிகள் செய்தார். மதியத்துக்கு, டிபன் பாக்சில் உணவு போட்டு விட்டார். கேனில் தண்ணீர் ஊற்றி, மருமகளின் ஹேண்ட் பேக்கில் வைத்தார்.

அலுவலகத்திற்கு கிளம்பி வெளியில் வந்த கீதா, ''அப்பா... சாப்பாடு டைனிங் டேபிள்ல வச்சு இருக்கேன்; காலைக்கும், மதியத்துக்கும் சாப்பிட மாத்திரையும், தனித்தனியா எடுத்து வச்சு இருக்கேன். வீட்டுல இனி, ஒரு வேலையும் செய்யக் கூடாது. மதியம் நல்லா படுத்து தூங்கணும். மூட்டு வலி ஆயின்மென்டு தீந்திடுச்சுன்னு சொன்னீங்க... வர்றப்ப, நானே வாங்கிட்டு வர்றேன்பா,'' என்றவள், விஸ்வநாதனைப் பார்த்து, ''அங்கிள் நீங்க கண்டிப்பா சாப்பிட்டு தான் போகணும்,'' என்று சொல்லி, கணவனுடன் சென்றாள்.

அவர்கள் அலுவலகம் புறப்பட்டு சென்ற பின், விஸ்வநதான், ''ராகவா... எனக்கு ஆச்சரியமாக இருக்கு. உம் மருமக, உன்னை அப்பான்னு கூப்பிடறது,''என்றார்.
''ஆமா, விச்சு. எனக்கு பெண் குழந்தைகன்னா, ரொம்ப இஷ்டம்ன்னு உனக்கு தெரியும்ல்லே... ஆனா, பாலாவோட சரி. மறுபடி குழந்தை பாக்கியத்த அந்த கடவுள் எனக்கு கொடுக்கல. வர்ற மருமகள, மகளா நினைச்சுக்குவோம்ன்னு என் மனைவி சொன்னா. அதேபோல, கடவுள் ஒரு நல்ல மகள கொடுத்துட்டார். கீதா இந்த வீட்டுக்கு மருமகளா வந்த மறுநாளே, 'மாமா, நான் அப்பா இல்லாம வளந்தவ; இனி மேல், நீங்க தான் எல்லாம். உங்கள அப்பான்னு தான், கூப்பிட போறேன்'னு சொன்னா. இந்த எட்டு வருஷமா, அப்பான்னு தான் கூப்பிடுறா. என் மனைவி இறந்த பின், பாலாவும், கீதாவும் என் மேலே ரொம்ப அன்பா, என் மனைவி இல்லேங்கிற குறை தெரியாம பாத்துக்குறாங்க.

''விஸ்வநாதா... இத்தனை கஷ்டப்பட்டு ஓடி ஓடி சம்பாதிக்கிறாங்களே எதுக்காக? நம்ம மகன், பேரப் புள்ளைங்க, நல்லா இருக்கணும்ன்னு தானே. இப்ப ஆபிசுக்கு கிளம்பி போறவங்க சாயங்காலம், 6:00 மணிக்கு தான் வருவாங்க. அது வரைக்கும், நாம நல்ல ஓய்வு எடுக்கலாம்; தூங்கலாம். அதனால, அவங்க கிளம்பறப்ப, நம்மால முடிஞ்ச சின்ன சின்ன உதவிகள செஞ்சா, அவங்களுக்கு உதவியா இருக்கும்; நமக்கும் சந்தோஷமாக இருக்கும்,'' என்றார் ராகவன்.

தன்னை மருமகள் திட்டியதில் தவறே இல்லை என்று உணர்ந்த விஸ்வநாதன், தானும், இது போல் மருமகளுக்கு உதவி செய்ய வேண்டும் என, முடிவெடுத்தார்.
''சரி ராகவா, நா கிளம்பறேன். சாய்ங்காலம் கோவில்ல பாக்கலாம்,''என்றார் விஸ்வநாதன்.
''இரு விச்சு, சாப்பிட்டு போகலாம்.''

''வேண்டாம் ராகவா, அங்க, என் மக தனியா வேலை செய்திட்டு இருப்பா. இனிமே, நானும் உன்ன மாதிரி சின்ன சின்ன உதவிகள செய்யப் போறேன், '' என்று சொல்லி சிரித்தார் விஸ்வநாதன்.
அங்கு, ஒரு புரிதல் ஆரம்பம் ஆனது.

மலர்விழி




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 22, 2014 4:37 pm

நல்ல கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக