புதிய பதிவுகள்
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரட்சி என்ற பெயரில் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுப்பதா?: டாக்டர் ராமதாஸ் கண்டனம் Poll_c10புரட்சி என்ற பெயரில் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுப்பதா?: டாக்டர் ராமதாஸ் கண்டனம் Poll_m10புரட்சி என்ற பெயரில் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுப்பதா?: டாக்டர் ராமதாஸ் கண்டனம் Poll_c10 
57 Posts - 55%
heezulia

41 Posts - 40%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரட்சி என்ற பெயரில் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுப்பதா?: டாக்டர் ராமதாஸ் கண்டனம் Poll_c10புரட்சி என்ற பெயரில் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுப்பதா?: டாக்டர் ராமதாஸ் கண்டனம் Poll_m10புரட்சி என்ற பெயரில் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுப்பதா?: டாக்டர் ராமதாஸ் கண்டனம் Poll_c10 
99 Posts - 58%

62 Posts - 36%

5 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரட்சி என்ற பெயரில் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுப்பதா?: டாக்டர் ராமதாஸ் கண்டனம்

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 15, 2014 2:45 pm

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பாவது:–

சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ‘அன்பு முத்தம்’ என்ற பெயரில் போராட்டம் நடத்திய மாணவ, மாணவியர் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ளனர். அன்பை பரிமாறிக் கொள்வதற்கான சுதந்திரம் என்ற பெயரில் மாணவ, மாணவிகள் அரங்கேற்றியுள்ள செயல் அதிர்ச்சியளித்தது மட்டுமின்றி, கலாச்சாரத்தின் எதிர்காலம் குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக் கோட்டில் தேனீர் விடுதி ஒன்றில் சில இளைஞர்களும், இளம்பெண்களும் முத்தமிடுவதை அங்குள்ள சில அமைப்புகள் கண்டித்தன. கலாச்சாரத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டவர்களை அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அடித்து விரட்டியுள்ளனர்.

பொது இடங்களில் முத்தம் கொடுப்பதைத் தடுப்பது தங்களின் சுதந்திரத்தில் தலையிடும் செயல் என்று கூறிக் கொண்டு கேரளத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அன்பு முத்தம் என்ற பெயரில் பொது இடங்களில் கூடி கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் போராட்டம் நடத்திவருகின்றனர். மற்ற மாநிலங்களுக்கும் பரவிய இப்போராட்டம் இப்போது தமிழகத்திலும் தலையை நுழைத்துள்ளது. சுதந்திரம் எது?, பாதுகாப்பு எது? என்பதை அறியாமலேயே ‘சுதந்திரத்தை பாதுகாக்கிறோம்’ என்ற பெயரில் இப்படி ஒரு போராட்டத்தை நடத்திய மாணவ, மாணவியரின் அறியாமையை நினைத்து பரிதாபம் தான் ஏற்படுகிறது.

சென்னை ஐ.ஐ.டியில் நடத்தப்பட்ட இப்படிப்பட்ட போராட்டத்தை ஐ.ஐ.டி. நிர்வாகமும், காவல்துறையும் எப்படி அனுமதித்தன? என்பது தெரியவில்லை. கலாச்சாரத்தை சீரழிக்கும் இது போன்ற போராட்டங்களும், அதற்கு துணைபோகும் வகையிலான அரசு அமைப்புகளின் செயல்பாடுகளும் கண்டிக்கத்தக்கவை.

கேரளத்தில் பொது இடத்தில் முத்தம் கொடுத்துக் கொண்டவர்கள் மீது வன்முறை ஏவப்பட்டதை வேண்டுமானால் தவறு என்று கூறலாம். அதே நேரத்தில் இத்தகைய கலாச்சார சீரழிவுகளை சரி என்று கூறி நியாயப்படுத்துவதோ, இதைக் கண்டிப்பதை தவறு என்று விமர்சிப்பதோ ஏற்றுக்கொள்ள முடியாதது.

பொது இடங்களில் முத்தம் கொடுப்பதை குற்றமென சொல்ல முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாக அன்பு முத்த போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்திய தண்டனைச் சட்டத்தின் 294(ஏ) பிரிவின்படி மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் செய்யப்படும் எந்தவிதமான ஆபாச செயலும் 3 மாதங்கள் வரை சிறை தண்டனை அளிக்கும் அளவுக்கான குற்றம் ஆகும்.

ஆபாச செயல் என்பதற்கான வரையறை இந்திய தண்டனைச் சட்டத்தில் தெளிவாக இல்லாததால் தான் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை அளித்ததே தவிர, பொது இடங்களில் முத்தம் கொடுப்பதை அனுமதிக்கவோ, ஊக்குவிக்கவோ இல்லை. ஒருவேளை சட்டப்படி இது சரியாக இருந்தால் கூட கலாச்சாரப்படி தவறான இச்செயல்களை அனுமதிக்கக் கூடாது.

பொது இடங்களில் குப்பை போடுவது குற்றம்; பொது இடங்களில் எச்சில் துப்புவது குற்றம் என்று சட்டமும், சான்றோர்களும் கூறுகின்றனர். அவ்வாறு இருக்கும் போது அவற்றைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ‘பொது இடங்களில் கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் செயலை’ எவ்வகையில் அனுமதிக்க முடியும் என்று தெரியவில்லை. சென்னை ஐ.ஐ.டி.யில் பயிலும் மாணவ, மாணவியரில் பெரும்பான்மையானோர் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

அவர்கள் தமிழ் கலாச்சாரம் குறித்து அறியாமல் இதைச் செய்திருக்கலாம். இதைப் பின்பற்றி தமிழகத்திலுள்ள மற்ற கல்வி நிறுவனங்களின் மாணவர்களும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், அது நினைத்துப்பார்க்கவே முடியாத மோசமான கலாச்சார மற்றும் பண்பாட்டு சீரழிவுகளை ஏற்படுத்திவிடும். சுதந்திரம் என்ற பெயரில் மாணவர்கள் செய்யும் இத்தகைய செயல்களை சமூகவிரோதிகள் தங்களின் வக்கிரங்களுக்கு வடிகாலாக தவறாக பயன்படுத்திக் கொள்ளும் ஆபத்து இருக்கிறது.

அப்படி நடந்தால் பொது இடங்களில் பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடமாடவே முடியாத நிலையை ஏற்பட்டு விடும் என்பதை சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக போராடுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் சொல்வதால் என்னை கலாச்சாரக் காவலர் என்றோ, பிற்போக்குவாதி என்றோ சில போலி புரட்சியாளர்கள் விமர்சிக்கக் கூடும். சமூக நலனுக்காக எத்தனையோ விமர்சனங்களைத் தாங்கிக் கொண்ட நான் இதற்கெல்லாம் கவலைப்பட போவதில்லை. அடிப்படையில் தமிழ் சமுதாயம் பெண்மையை போற்றும் தன்மை கொண்டதாகும்.

‘பெண்மை போற்றுதும்’ என்று கவிதைகளில் முழங்கிய மகாகவி பாரதியார் பெண்களுக்கு ஆதரவாக எத்தனையோ முற்போக்கு கருத்துக்களைக் கூறியுள்ளார். பெண்களை உலகின் மகா சக்தி என்று வர்ணித்த பாரதியார், கல்வி, கலை, சமூகம், அரசியல் உள்ளிட்ட துறைகளில் அவர்கள் முன்னேற வேண்டும் என்று வலியுறுத்தினாரே தவிர பொது இடங்களில் கட்டியணைத்து முத்தம் கொடுக்க வேண்டும் என ஒருபோதும் அறிவுறுத்தவில்லை.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக 14 வயதிலேயே அறவழியில் போராடிய தில்லையாடி வள்ளியம்மை, ஆயுதமேந்தி போராடிய ராணி வேலுநாச்சியார், விண்வெளியில் ஆய்வு செய்த கல்பனா சாவ்லா போன்று சாகசங்களைச் செய்வதில் தான் பெண்கள் ஆர்வம் காட்ட வேண்டுமே தவிர, தவறான வழிகாட்டுதலுக்கு இரையாகி தவறான வழியில் சென்று விடக்கூடாது. எனவே, தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான எந்த செயலிலும் இளைய தலைமுறையினர் ஈடுபடக்கூடாது; அத்தகைய செயல்களை தமிழக அரசும், காவல்துறையினரும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
-maalaimalar

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 15, 2014 4:21 pm

வாங்க சாமி வாங்க. உங்க சவுண்டுக்காகத்ததான் காத்திருந்தோம்.... நீங்க பண்ற அரசியல் கேவலத்துக்கு இது ஒன்றும் பெரிய விசயமே இல்லை.....

சட்டக் கல்லூரி மாணவர்கள் அடித்து செத்த போது வேடிக்கை மட்டுமே பார்த்த காவல் துறை, இன்றும் அப்படியே இருந்து இருக்கிறது....
வேறு ஒன்றும் இல்லை மருத்துவரே............

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 15, 2014 4:39 pm

எதற்கு எதை முடுச்சு போடுகிறீர்கள் நண்பரே. அரசியலோடு இவர்கள் செய்த கேவலத்தை ஒப்பிடக்கூடாது . அரசியல்வாதியாய் அவர் செய்தது சரியே.
அரசியல் கேவலத்தை சரிபடுத்த முயற்சிபதைவிட இத்தகைய கேவலங்கள் நம் இளைய தலைமுறையினர் இடையே பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்வதில் முயற்சி எடுத்தல் சிறந்தது.

குறிப்பு: வீண் விவாதம் வேண்டாம்

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

புரட்சி என்ற பெயரில் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுப்பதா?: டாக்டர் ராமதாஸ் கண்டனம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82408
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 15, 2014 4:44 pm

மகளிர் சங்கங்கள் என்ன சொல்கின்றன...?
-

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 15, 2014 4:45 pm

M.Saranya wrote:எதற்கு எதை முடுச்சு போடுகிறீர்கள் நண்பரே. அரசியலோடு இவர்கள் செய்த கேவலத்தை ஒப்பிடக்கூடாது . அரசியல்வாதியாய் அவர் செய்தது சரியே.
அரசியல் கேவலத்தை சரிபடுத்த முயற்சிபதைவிட இத்தகைய கேவலங்கள் நம் இளைய தலைமுறையினர் இடையே பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்வதில் முயற்சி எடுத்தல் சிறந்தது.

குறிப்பு: வீண் விவாதம் வேண்டாம்

மேற்கோள் செய்த பதிவு: 1103758

உங்கள் குறிப்பை பார்த்த பின்பும் நான் பதில் இடுகிறேன் என்றால்,

இப்போது சுதந்திரம் என்ற ஒரு வார்த்தையை அனைவரும் கெட்டியாய் பிடித்து கொண்டிருக்கிறார்கள், மேலும் நாலு பேருக்கு தெரிவது போலத்தான் இந்த தப்பை செய்கிறார்கள்... இது சரி என்பது என் வாதமல்ல, இருப்பினும் ஒரு அரசியல் வாதி செய்வது சரி என்று நீங்கள் கூறுவது மிக வேடிக்கையாய் இருக்கிறது ....

தனது கட்சியின் கொள்கை என்ன, என்பதை தாமே அறியாத கூட்டம்
அவர்கள் செய்வது அரசியல்வாதியாய் அவர் செய்தது சரியே.
என்பது உங்கள் வாதம்...

வருத்தம்தான் வருகிறது, கொள்கை இல்லா, மூடர் பின்னே நம் சமூகம்......

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 15, 2014 4:47 pm

இன்னும் பகிரங்கமாய் சொல்ல வேண்டுமென்றால் தர்மபுரியில் நடந்த ஒரு காதல் கதையும், அந்த காதலால் வீடு இழந்த மக்களும், அதே காதலால் தன் உயிரை இழந்த ......................??????????????????

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 15, 2014 4:49 pm

M.Saranya wrote:
அரசியல் கேவலத்தை
மேற்கோள் செய்த பதிவு: 1103758

இதற்கு அர்த்தம் என்ன தோழியே

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 15, 2014 4:52 pm

உங்கள் பின்னூடத்திற்கு நன்றி ...
நான் இத்தகைய கேவலத்தை அந்த அரசியல் வாதி எதிர்த்திருக்கிறார்.நானும் எதிர்க்கிறேன்..நீங்களும் எதிர்கிறீர்கள்...இது பொது விஷயம். நீங்கள் அவருடைய அரசியலை பற்றி இதில் நுழைப்பது தான் வேடிக்கை விந்தை... எல்லோரும் மனிதர்கள் தானே ..

கொள்கை பிடிப்பு இல்லாத மனிதர் அரசியல் வாதி இல்லை...
ஆனால் தனி வாழ்வில் அவரும் ஒரு மனிதர் ... கருத்து கூற அனைவருக்கும் உரிமை உண்டு. அதை நினைவில் கொள்ள வேண்டும்...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

புரட்சி என்ற பெயரில் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுப்பதா?: டாக்டர் ராமதாஸ் கண்டனம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 15, 2014 4:55 pm

ஜாதிக்கு, மதத்திற்கு முக்கியத்துவம் தரும் எந்த தலைவரையும் எனக்கு பிடிப்பதில்லை..
நீங்கள் என் கருத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

புரட்சி என்ற பெயரில் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுப்பதா?: டாக்டர் ராமதாஸ் கண்டனம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 15, 2014 4:56 pm

M.Saranya wrote:உங்கள் பின்னூடத்திற்கு நன்றி ...
நான் இத்தகைய கேவலத்தை அந்த அரசியல் வாதி எதிர்த்திருக்கிறார்.நானும் எதிர்க்கிறேன்..நீங்களும் எதிர்கிறீர்கள்...இது பொது விஷயம். நீங்கள் அவருடைய அரசியலை பற்றி இதில் நுழைப்பது தான் வேடிக்கை விந்தை... எல்லோரும் மனிதர்கள் தானே ..

கொள்கை பிடிப்பு இல்லாத மனிதர் அரசியல் வாதி இல்லை...
ஆனால் தனி வாழ்வில் அவரும் ஒரு மனிதர் ... கருத்து கூற அனைவருக்கும் உரிமை உண்டு. அதை நினைவில் கொள்ள வேண்டும்...
மேற்கோள் செய்த பதிவு: 1103769

அந்த கருத்தை கூற தனி தகுதி வேண்டும்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக