புதிய பதிவுகள்
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
48 Posts - 46%
heezulia
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
1 Post - 1%
Shivanya
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
12 Posts - 2%
prajai
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
9 Posts - 2%
jairam
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கி அடிச்சுருவேன் !


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 13 Mar 2016 - 10:41

கோயம்பேடு என்னும் ஊரில் ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார் . அவர் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார் . எனவே திருமண புரோக்கர் பொன்னம்பலத்திடம் , தனக்கு  ஒரு நல்ல அழகான , வசதியானப் பெண்ணைப் பார்க்கும்படிச் சொன்னார் . பொன்னம்பலமும் சரியென்று சொன்னார் .

ஒரு நல்ல நாளில் புரோக்கர் பொன்னம்பலம் , மூன்று பெண் ஜாதகங்களுடன் கோயம்பேடு செல்வந்தரை அணுகினார் .

" வாங்க ! பொன்னம்பலம் ! என்ன ஜாதகம் கொண்டு வந்திருக்கீங்களா ? "

" ஐயா ! ஒன்றல்ல , மூணு ஜாதகம் கொண்டு வந்திருக்கேன் ! பொண்ணப் பாருங்க ; உங்களுக்குப் பிடிச்சிருந்தா அடுத்த முகூர்த்தத்துலேயே முடிச்சிடலாம் ! மே மாதம் 16 நல்ல முகூர்த்த நாள்.

" சரி ! நான் போட்ட கண்டிஷன் எல்லாம் சொல்லிட்டீங்களா ?"

" சொல்லிட்டேன் ஐயா ! "

" சரி ! முதல் ஜாதகத்தைக் காட்டுங்க ! "

" ஐயா ! இந்த ஜாதகம் உள்ளூர் ஜாதகம் ! ஊர் கோபாலபுரம் ; ரொம்ப செல்வாக்கு உள்ள குடும்பம் . ஒரு வேலையும் செய்யாம உக்காந்து தின்னாக் கூட , ஏழு தலைமுறைக்கு சாப்பிடலாம் ;அவ்வளவு சொத்து சேத்து வச்சிருக்காங்க !

55 பவுன் நகை போடத் தயாராய் இருக்காங்க ; கொஞ்சம் அடிச்சிப் பேசுனா 60 பவுன் வரைக்கும் தேத்தலாம் . அப்புறம் மாப்பிள பேர்ல  5 பங்களா எழுதி வைக்கவும் ரெடின்னு  சொல்லிட்டாங்க ; ஆனா........

என்னய்யா ஆனான்னு இழுக்குறீங்க ?

அதாவது வீட்டோட மாப்பிளாய் வச்சிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க . நான் எவ்வளவோ கெஞ்சிப் பாத்தேன் . முடியாதுன்னு சொல்லிட்டாங்க ! வேணும்னா தீபாவளிக்கு 50 பவுன் நகை போடறதா சொல்றாங்க ! சம்மதமான்னு கேட்டு வரச் சொன்னாங்க !

அது கிடக்கட்டும் ; அடுத்த ஜாதகத்தைக் காட்டு.

ஐயா ! இது டெல்லி ஜாதகம் ! பொண்ணோட அப்பா ரொம்ப செல்வாக்கு உள்ளவர்; ரொம்பவும் பிஸி மேன். வீட்லயே தங்க மாட்டாரு ; உலகம் பூரா சுத்திகிட்டே இருப்பாரு ! 100 பவுனுக்கு மேல போடறதா சொல்லியிருக்காங்க ;கல்யாண செலவெல்லாம் அவங்களே ஏத்துக்குவாங்க ; மேலும் ரொக்கமா நீங்க எவ்வளவு கேட்டாலும் தருவாங்க ! இன்னும் நீங்க கேட்டதெல்லாம் செய்யத் தயாரா இருக்காங்க !ஆனா...

என்னய்யா ஆனா....

இவிங்களும் உங்களை வீட்டோட மாப்பிளையா வச்சிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க ..

சரி ! மூணாவது ஜாதகத்தைக் காட்டு !

ஐயா ! இதுவும் உள்ளூர் ஜாதகம்தான் ; நாலு குடும்பம் சேர்ந்த கூட்டுக் குடும்பம் ; பிக்கல் பிடுங்கல் உள்ள குடும்பம் ; எப்ப அடிச்சிகிட்டு பிரிஞ்சி போவாங்கன்னு சொல்லமுடியாது ; நீங்க எவ்வளவு பவுன் நகை கேட்டாலும் போடுவாங்க ...

அதுசரி ! என்னை வீட்டோட மாப்பிள்ளையாய் ஏத்துக்குவாங்களா ?

ஏத்துக்குவாங்க ; ஆனா அந்த இடம் வேணாமுங்க ; ஏன்னா அவங்களுக்குள்ள குடுமிப்பிடி சண்டை எந்தநேரமும் நடக்கலாம் ;  உங்களுக்கு நிம்மதி இருக்காது ; அதனால முதல்ல சொன்ன ரெண்டு இடத்துல ஒன்னு பாருங்க !

சரி ! டெல்லி வீட்டுக்காரங்களை என்னை வந்து பாக்கச் சொல்லுங்க !

நாளைக்கே வரச் சொல்லவா ?

வரச் சொல்லுங்க !

( மறுநாள் டெல்லியிலிருந்து கரகோஷ் வடஜேகர் என்பவர் கோயம்பேடு சென்று மாப்பிள்ளையைப் பார்க்கிறார்; மாப்பிள்ளை பிடி  கொடுக்காமல் பேசி அனுப்பிவிட்டார்  )

இரண்டுநாள் கழித்து புரோக்கர் பொன்னம்பலம் கோயம்பேடு செல்கிறார் .

வாங்க புரோக்கர் !

என்ன ஐயா ! டெல்லிகாரங்க வந்தாங்களா ?

வந்தாங்க !

என்ன பேசுனிங்க ? அவிங்க என்ன சொன்னாங்க ?

கல்யாணத்தப் பத்திப் பேசல !

கல்யாணத்தைப் பத்தி பேசலையா ? பின்ன எதுக்கு வந்தாங்க ?

சும்மா மரியாதை நிமித்தமா சந்திச்சுப் பேசவந்தாங்க !

என்னய்யா சொல்றீங்க ! மரியாதை நிமித்தமா பேசவா இவ்வளவு செலவு பண்ணிக்கிட்டு டெல்லியிலிருந்து வந்தாங்க ? அவங்க என்ன லூசா ? ஒருவேளை நீங்க பேசுறது அவிங்களுக்குப் புரியலையா ?

என்னய்யா சொல்றே ? மரியாதையா  பேசு ; இல்லன்னா தூக்கி அடிச்சுருவேன் ; ஜாக்கிரதை !

ஐயா !  மன்னிச்சுடுங்க ; ஏதோ அவசரத்துல வார்த்தைய விட்டுட்டேன் !

மன்னிப்பா ! தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை அது !

சரிங்க ! மறுபடி நான் எப்ப வரட்டும் ?

நீ ஒன்னும் வரவேண்டாம் ; ரெண்டுநாள் கழிச்சு எனக்குப் போன் பண்ணு ; என் முடிவைச் சொல்றேன் !

சரிங்க ஐயா !

ரெண்டுநாள் கழித்துப் புரோக்கர் பொன்னம்பலம் கோயம்பேடுக்கு போன் செய்கிறார் .

ஐயா ! வணக்கமுங்க !

யாரு ? புரோக்கர் பொன்னம்பலமா ?

ஆமாங்கய்யா ! நான்தான் பேசறேன் !

சொல்லய்யா !

நேத்து கோபாலபுரம் போயிருந்தேன் . அவிங்க ரொம்ப நம்பிக்கையோட இருக்காங்க !

என்ன சொன்னாங்க !

பழம் கனிஞ்சி போச்சி ; நிச்சயம் அது பாலில் விழும்னு சொன்னாங்க !

அவங்க "பால் "ன்னு சொன்னாங்களா ?

ஆமாய்யா ! நீங்க பழம்னா அவிங்க பால்தானே ?

" த்தூ ! "

என்னய்யா காறித் துப்புறீங்க ?

அது பால் இல்லை ; ஆலகால விஷம் ! இந்தப் பழம் சாக்கடையில விழுந்தாலும் விழுமே தவிர , அந்த ஆலகால விஷத்தில் விழாது ! ஏய் பொன்னம்பலம் !

ஐயா ! சொல்லுங்க !

என் முடிவைச் சொல்றேன் ; எழுதி வச்சுக்க ! எனக்குக் கல்யாணமும் வேணாம் ;கருமாந்திரமும் வேணாம் !
ஒண்டிக்கட்டையா வாழ்நாள் பூரா இருக்குறதா தீர்மானம் பண்ணிட்டேன் ! தனியாவே இருக்கப் போறேன் !

ஐயா! என் பொழப்புல மண் அள்ளிப் போட்டுட்டிங்களே ! என்று சொல்லி பொன்னம்பல புரோக்கர் கீழே சாய்கிறார் .







இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82177
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 13 Mar 2016 - 10:54

 தூக்கி அடிச்சுருவேன் ! GmA2c4xGTAepd0jwOpMK+Tamil_News_large_1476786
-
கடைசியா, அந்த செல்வந்தர் இவர் பேச்சைக் கேட்டுதான்
முடிவெடுத்தாராம்...!!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 13 Mar 2016 - 15:17

ட்ராபிக் ராமசாமி சொல்லித்தான் விஜயகாந்த் இந்த முடிவை எடுத்தார் என்பது " குருவி உட்கார பனம்பழம்
விழுந்த " கதைதான் .

எந்த இடத்திலும் பேரம் படியவில்லை என்பதே உண்மை ! இல்லையென்றால் இந்த முடிவை மூன்று மாதங்களுக்கு முன்பே சொல்லியிருக்கலாமே !

" நான் தனியாகத்தான் நிற்கப் போகிறேன்; கூட்டணிக்காக யாரும் என்னை அணுகவேண்டாம் ! " என்று முன்பே சொல்லியிருந்தால் அவரது நேர்மையை பாராட்டியிருக்கலாம் !

இந்த விஷயத்தில் PMK தெளிவாகத் தன் முடிவை முன்பே சொல்லிவிட்டார்கள் .அவர்களிடம் எந்தக் குழப்பமும் இல்லை .

ஆனால் இவரோ தானும் குழம்பி , மற்றவர்களையும் குழப்பி தெளிவில்லாத அரசியலை நடத்தி வருகிறார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 13 Mar 2016 - 16:11

M.Jagadeesan wrote:ட்ராபிக் ராமசாமி சொல்லித்தான் விஜயகாந்த் இந்த முடிவை எடுத்தார் என்பது " குருவி உட்கார பனம்பழம்
விழுந்த " கதைதான் .

எந்த இடத்திலும் பேரம் படியவில்லை என்பதே உண்மை ! இல்லையென்றால் இந்த முடிவை மூன்று மாதங்களுக்கு முன்பே சொல்லியிருக்கலாமே !

" நான் தனியாகத்தான் நிற்கப் போகிறேன்; கூட்டணிக்காக யாரும் என்னை அணுகவேண்டாம் ! " என்று முன்பே சொல்லியிருந்தால் அவரது நேர்மையை பாராட்டியிருக்கலாம் !

இந்த விஷயத்தில் PMK தெளிவாகத் தன் முடிவை முன்பே சொல்லிவிட்டார்கள் .அவர்களிடம் எந்தக் குழப்பமும் இல்லை .

ஆனால் இவரோ தானும் குழம்பி , மற்றவர்களையும் குழப்பி தெளிவில்லாத அரசியலை நடத்தி வருகிறார் .
 தூக்கி அடிச்சுருவேன் ! 3838410834  தூக்கி அடிச்சுருவேன் ! 3838410834 , தங்கள் பின்னூட்டத்தை நானும் வழிமொழிகிறேன் ஐயா ...

தமிழக அரசியலில் கருணாநிதி , ஜெயலலிதா , ராமதாஸ் இவர்களை பிடிக்காத ஒரே காரணத்தால் வேறு வழியில்லாமல் ஓட்டு போட்ட மக்களால் வளர்ந்த கட்சி இந்த தேமுதிக , மற்றபடி இவர்களுக்கோ அல்லது இவர்களின் தலைமைக்கோ எந்த வித கொள்கைகளோ அல்லது தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறையோ கிடையாது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 13 Mar 2016 - 17:06

அழகான கதை உருவில் தேமுதிக அரசியலை இல்லைஇல்லை விஜயகாந்தின் அரசியலை
புட்டு புட்டு வச்சு இருக்கீங்க , Jagadeesan . அருமை .
Traffic Ramasamy ஒரு செவத்துக் கோழி .
வேண்டாத விஷயத்திற்கு எல்லாம் PIL போடுபவர் .
இவர் உண்மையிலேயே ஜனசேவை செய்ய நினைத்தால் , சென்னையில் கண்ட மேனிக்கு மீட்டர் போடாமல்
ஓட்டும் ஆடோக்களுக்கு ஒரு தீர்வு காண சொல்லுங்கள்

ரமணியன்

பிகு ;நல்லத் தலைப்பு



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 13 Mar 2016 - 17:35

ராஜா, ரமணியன் ஆகியோர் பாராட்டுக்கு நன்றி ! ஐயாசாமிராம் அவர்களின் பின்னூட்டத்திற்கும் நன்றி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக