புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இராம காவியம் - Page 7 Poll_c10இராம காவியம் - Page 7 Poll_m10இராம காவியம் - Page 7 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
இராம காவியம் - Page 7 Poll_c10இராம காவியம் - Page 7 Poll_m10இராம காவியம் - Page 7 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
இராம காவியம் - Page 7 Poll_c10இராம காவியம் - Page 7 Poll_m10இராம காவியம் - Page 7 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
இராம காவியம் - Page 7 Poll_c10இராம காவியம் - Page 7 Poll_m10இராம காவியம் - Page 7 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
இராம காவியம் - Page 7 Poll_c10இராம காவியம் - Page 7 Poll_m10இராம காவியம் - Page 7 Poll_c10 
1 Post - 1%
Kavithas
இராம காவியம் - Page 7 Poll_c10இராம காவியம் - Page 7 Poll_m10இராம காவியம் - Page 7 Poll_c10 
1 Post - 1%
bala_t
இராம காவியம் - Page 7 Poll_c10இராம காவியம் - Page 7 Poll_m10இராம காவியம் - Page 7 Poll_c10 
1 Post - 1%
prajai
இராம காவியம் - Page 7 Poll_c10இராம காவியம் - Page 7 Poll_m10இராம காவியம் - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராம காவியம் - Page 7 Poll_c10இராம காவியம் - Page 7 Poll_m10இராம காவியம் - Page 7 Poll_c10 
293 Posts - 42%
heezulia
இராம காவியம் - Page 7 Poll_c10இராம காவியம் - Page 7 Poll_m10இராம காவியம் - Page 7 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
இராம காவியம் - Page 7 Poll_c10இராம காவியம் - Page 7 Poll_m10இராம காவியம் - Page 7 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இராம காவியம் - Page 7 Poll_c10இராம காவியம் - Page 7 Poll_m10இராம காவியம் - Page 7 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
இராம காவியம் - Page 7 Poll_c10இராம காவியம் - Page 7 Poll_m10இராம காவியம் - Page 7 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இராம காவியம் - Page 7 Poll_c10இராம காவியம் - Page 7 Poll_m10இராம காவியம் - Page 7 Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
Kavithas
இராம காவியம் - Page 7 Poll_c10இராம காவியம் - Page 7 Poll_m10இராம காவியம் - Page 7 Poll_c10 
4 Posts - 1%
manikavi
இராம காவியம் - Page 7 Poll_c10இராம காவியம் - Page 7 Poll_m10இராம காவியம் - Page 7 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராம காவியம்

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Feb 17, 2009 11:56 pm

First topic message reminder :

இராம காவியம்

தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார்

[You must be registered and logged in to see this image.]

ஞானக்கண் கண்ட காட்சி

உலகம் யாவையுந் தாமுல வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 01, 2010 11:40 pm

வாலி முத்தி

இராமர் அநுமானுடைய ஆலோசனையை ஏற்றுக் கொண்டார். எல்லாரும் வாலி வாழ்கின்ற கிஷ்கிந்தையை அடைந்தார்கள். ஒரு சோலையில் தங்கினார்கள். இராமபிரான், "தம்பீ! சுக்ரீவா! நீ வாலியை அழைத்துப் போர் செய். நான் வாலியை வதைப்பேன்.. ." என்றார். வாலியைப் போருக்கு அழைக்கின்ற ஆற்றலும் தைரியமும் சுக்ரீவனுக்கு இல்லை. வாலி மகா மேருகிரி போன்றவன். சுக்ரீவன் கூழாங்கல் போன்றவன். வாலியின் வீரம் எங்கே? சுக்ரீவன் வீரம் எங்கே? இராமபிரானுடைய கட்டளையைத் தட்ட முடியாதவனாகி. மிகவும் முயற்சி செய்து தைரியத்தை வரவழைத்துக் கொண்டான்.

"அடா வாலீ! அடா வாலீ!" என்று உரத்த குரலால் அழைத்தான். அப்படி அழைத்தது, விலங்கு அரசாகிய ஒரு சிங்கத்தை, குட்டி யானை போருக்கு அழைத்ததுபோல் இருந்தது. அதிகாலை, வாலி தன் மனைவி தாரையுடன் பஞ்சாணையில் படுத்திருந்தான். வாலிக்கு அது சுக்ரீவனுடைய குரல் என்று தெரியவில்லை. நீண்ட காலத்துக்குப்பின் அவனுடைய குரலைக் கேட்கின்றான்.

இது சுக்ரீவன் குரலா? என் பேரை சொல்லிப் போருக்கு அழைக்கும் ஆற்றல் அவனுக்கு ஏது? ஆனையைப் பூனை எதிர்க்குமா? என்று எண்ணினான்.

வந்தேன், வந்தேன் என்று முழங்கி நரசிம்மம்போல் எழுந்தான். அந்த ஓசை இந்திரன் திசைமுதல் எட்டுத் திசைகளும் கேட்டன.

உடுக்குலங்கள் உதிர்ந்தன. குலமலைகள் அசைந்தன. அவனுடைய கோபக்கனலால் ஏழு கடல்களும் கொந்தளித்தன. வீராவேசத்துடன் எழுந்தான்.

அப்பொழுது வாலியின் மனைவியாகிய தாரை அவனைத் தடுத்தாள். "என் இன்னுயிர்த் துணைவரே! தாங்கள் தங்கள் தம்பியுடன் போர் புரியப் போக வேண்டாம். சுக்ரீவனுக்குத் துணையாக இராமச்சந்திரர் வந்திருப்பதாக என் இனிய அன்பர்கள் கூறினார்கள். இராமபிரான் சமானம் இல்லாதவர். அவரை வெல்ல முடியாது" என்றாள்.

வாலி, "பெண்ணரசே! பெண் புத்தி பின்புத்தி என்ற பழமொழியின் படி பேசுகின்றனை. இராமபிரான் தரும மூர்த்தி தருமம் தன்னைத்தானே அழிக்குமா? அந்த நல்லற மூர்த்தி குரங்குடன் கூட்டுச் சேர்வாரா? மாற்றாந்தாய் கூற, தனது சாம்ராஜ;யத்தைத் தம்பிக்கு வழங்கிய குணப்பெருங்குன்றம் அவருடைய அருமையும் பெருமையும் தெரியாது பேசுகின்றாய். என்னைத் தடுக்காதே, விலகு" என்று கூறிச் சுக்ரீவனை யணுகிப் போர் புரிந்தான்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 01, 2010 11:40 pm

வாலியும் சுக்ரீவனும் வீர உணர்ச்சியுடன் போர் புரிகின்ற திறத்தைக் கண்டு இராமர் வியந்தார். "தம்பி லட்சுமணா! இந்த வாநர வீரனாகிய சுக்ரீவனுடைய போர் திறத்தை பார்த்தாயா?" என்றார்.

"அண்ணா! உடன் பிறந்த அண்ணன் தெய்வம் போன்றவன். தமையனுடன் போர் புரிகின்ற இவனுடைய பண்பு உயர்வு அன்று" என்றார் லட்சுமணர்.

"தம்பீ! உடன் பிறந்த தம்பியரெல்லாம் பண்புடன் இருந்தால் பரதனுக்குப் புகழ் உண்டாகுமா?" என்றார் ராமர்.

வாலியும் சுக்ரீவனும் மண்ணிலும் விண்ணிலும் பாய்ந்து போர் புரிந்தார்கள். அடிப்பார், கடிப்பார், கால்களால் உதைத்தும் மார்பினால் இடித்தும் தாக்கினார்கள். வாலியிடம் நன்கு அடிப்பட்ட சுக்ரீவன் உதிரம் கக்கியவனாய் இராமரிடம் வந்து வணங்கினான். "கருணையே ஓருவடிவாய பரம்பொருளே! நான் என்ன குற்றம் புரிந்தேன்? வாலியிடம் என்னை அடிபடச் செய்துவிட்டுச் சும்மா இருந்தடீரே!" என்று அழுது முறையிட்டான்.

இராமர், "அன்பனே! உனக்கும் வாலிக்கும் வேற்றுமை தெரியவில்லை. அதனால், பாணம் தொடுக்கவில்லை. இந்தா! இந்தக் கொடிப் பூமாலையை அணிந்து போருக்குப் போ. இதுவே உனக்கு வெற்றிமாலை. இந்த மாலையினால் அடையாளந் தெரிந்து வாலியை வதை செய்வேன்" என்று மலர் மாலையைச் சூட்டியனுப்பினார்.

சுக்ரீவன் மீண்டும் வந்து வாலியுடன் போர் புரிந்தான். வாலி மிகப் பெருஞ் சீற்றமடைந்தான். சுக்ரீவனுடைய தொடையிலும் கழுத்திலும் கைவைத்துப்பற்றி, மண் மீது அடித்துக் கொல்ல அவனைத் தலை கீழாகத் தூக்கினான்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 12:44 am

இராமர் கணை தொடுத்தல்

[You must be registered and logged in to see this image.]

இராமச்சந்திரமூர்த்தி அவனுடைய மார்பில் கணையைத் தொடுத்தார். அந்த அம்பு வாலியின் மார்பைத் தொளைத்தது. மகாமேருகிரி வேருடன் வீழ்ந்தது போல் வாலி மண்ணில் வீழ்ந்தான். அந்த அம்பு ஊடுருவிப் போகா வண்ணம் கரங்களாலும், வாலினாலும் பற்றித் தடுத்தான். வாலியின் வீரச்செயலைக் கண்டு கூற்றுவனும் மெச்சித் தலையசைத்தான். விண்ணோரும் வியந்தார்கள். விழுந்த வாலி, எழுந்து உலகங்களை அழிப்பேன் என்று எண்ணினான், என்மீது கணை தொடுத்தார் யாவர்? தேவரோ? என ஐயுற்றான், தேவர்க்கு இந்த ஆற்றல் உளதோ? என்று பலவாறு எண்ணினான். இராம சரத்தைப் பின்னுற ஈர்த்தான். அவனுடைய மார்பில் அருவிபோல உதிரம் பெருகியது. அதனைக் கண்ட சுக்ரீவன் உடன் பிறந்த பாசத்தால் பெரிதும் உருகி "அண்ணா" என்று கதறி நிலத்தில் வீழ்ந்தான்.

வாலி இராம சரத்தை உற்று நோக்கினான், ராமா என்ற மந்திரம் உலகம் அனைத்துக்கும் மூல மந்திரமாகும். ரா என்ற எழுத்து நுனி நா மேல் அண்ணத்தை வருடுவதால் தோன்றுவது.

"அண்ண நுனி நா வருட ரழ வரும்" என்பது நன்னூல்.

மனத்தாலே, வாக்காலே, காயத்தாலே செய்த பாவங்களை ரா என்ற எழுத்து வெளியே விரட்டியடித்து விலக்குகின்றது. ம் என்ற எழுத்து இரு இதழ்களும் மூடுவதால் தோன்றுகிறது.

மீ கீழ் இதழுறப் பம்மப் பிறக்கும் என்பது நன்னூல்.

ம் என்ற எழுத்து வெளியே சென்ற பாவத்தை மீண்டும் உள்ளே புகாதபடி தடுத்து நிறுத்துகின்றது. இந்த ராமா என்ற மந்திரம் அநாதியே உண்டு.

தசரத ராஜகுமாருக்கு ராமா என்ற பேர் சூட்டினார்கள். இந்த அயோத்தியில் வாழ்ந்த தசரத ராஜகுமாரர் பிறப்பதற்கு 21 தலைமுறைக்கு முன் இருந்தவர் ரிசீக முனிவர். இவருடைய மகன் ஜமதக்கினி. இந்த ஜமதக்கினி முனிவருக்கு ஐந்து புதல்வர்கள். இதில் கடைசி மகனுக்கு ராமன் என்று பேர் இட்டார்கள். இந்த இராமன் தவஞ்செய்து சிவபெருமானிடம் பரசு என்ற ஆயுதம் பெற்றார். அதனால், பரசுராமன் என்று பேர் பெற்றார். ஆதலால், ராமா என்ற மந்திரம் மிகவும் தொன்மையானது. ஆன்மாக்களுக்கு நன்மை பயப்பது.

இக்காலத்தில் ஒரு தலைமுறை என்பது 100 வருடங்களாகும்.. அந்தக் காலத்தில் 5000 ஆண்டு 6000 ஆண்டுகளாகும். துசரதர் அறுபதினாயிரம் ஆண்டுகள் அரசு புரிந்தார் என்பதனால் அறிக. மும்மை சால் உலகம் என்றது "அவன் அவள் அது எனும் அவைமூ வினமையின்" என்று வரும் சிவஞான போத சூத்திரத்தைக் குறிக்கும்.

"இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை" என்ற சொற்றொடர் மிக உயர்வானது.

தாவரம், நீர்வாழ்வன, ஊர்வன, பறப்பன, நடப்பன, மனிதர், தேவர் என்ற ஏழுவகையான பிறவி நோய்க்கு இது மருந்தாகித் துணை புரிகின்றது.

வாலி இம்மந்திரத்தை ஏற்கனவே உள்ளத்தில் கண்டிருந்தான். இப்போது கண்களில் கண்டான்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 12:45 am

தன் மார்பைத் துளைத்து இராமபாணம் என்று தெரிந்த வாலி பெரிதும் நாணினான். திரிபுரம் எரிந்த விரிசடைக் கடவுள் போலச் சிரித்தான். அம்பு வந்த திசையைப் பார்த்தான். அரச நீதியை இராமர் அழித்து விட்டார் என்று கூறுகின்ற வாலியின் முன்னே அரச நீதியைக் காக்கவந்த காகுத்தன் காட்சியிளித்தார்.

இராமரைப் பார்த்துப் பெருஞ்சீற்றத்துடன் வாலி பேசுகிறான். "ராகவா மனுக்குலத்தில் மூத்தவனுக்குத்தான் அரசுரிமை. இது வழிவழியாக வந்த மரபு.. . இந்த மரபைக் காக்க வேண்டும் என்றால் கைகேயியிக்குத் தந்த வாய்மை அழிகின்றது. இந்த வாய்மையைக் காக்க வேண்டுமானால் மரபு அழிகின்றது. ஆகவே, வாய்மையையும், மரபையும் காக்கத் தன் இன்னுயிரை வழங்கிய வள்ளலாகிய தயரத மாமன்னவனுடைய மைந்தனா நீ?"

இராமா உத்தம குணக்குன்றாகிய பரதனுக்கு அண்ணனா நீ மனுநு}ல் என்பது மனுக்குலத்தில் பிறந்த உனக்கே உரிமையானது. ஓவியத்தில் எழுதவொண்ணாத பேரழகனே ஜனக மன்னரின் புதல்வியாகிய அன்னம் போன்ற தேவியைப் பிரிந்ததால் உனக்கு எது அறம் எது மறம் என்று தெரியாது திகைப்புற்றிருக்கின்றாய். இராமா அரக்கர் வேந்தன் உன் மனைவியைக் கவர்ந்தற்காக, வானர வீரனாகிய என்னைக் கொல்ல மனு தருமம் கூறியிருக்கின்றாதோ? கருணை நிறைந்த நீ கருணையைத் துறந்தனை. பனை மரததில் தேள் கொட்டினால் தென்னை மரத்தில், நெரிகட்டுவதா? இராவணன் செய்த பிழைக்கு என்னைத் தண்டித்தனையே

நான் உனக்கு என்ன பிழை செய்தேன்? நீ இந்தத் தீமைசெய்தால் புகழைத் தாங்க வல்லார் யார்? இராமா கூட்டுத் சேராத கொற்றவா இந்தக் குரங்குடன் கூடினாயே. உன் அரசை உன் தம்பிக்குத் தந்து நாட்டில் ஒரு செயலைச் செய்தாய், என்னைக் கொன்று என் தம்பிக்கு இந்த அரசைத் தந்து காட்டில் இச்செயலைச் செய்தாய், தமையனைக் கொன்று தம்பிக்கு அரசு தரும் செய்கை இத்துடன் முடிந்ததா, இன்னும் இருக்கின்றதா? தோல்வியறியாத பரம பராக்கிரமசாலியாகிய என்னை வதைத்து. . இந்தச் சுக்ரீவனைத் துணை பற்றினாயே, இது அறிவுடைமையாகுமா? சிங்கத்தைக் கொன்று முயலைத் துணை பற்றியதுபோல் உளது.

இரகுவீர இராவணன் என் இனிய நண்பன். என்னிடம் மிகுந்த அச்சம் உள்ளவன். என் வால் அசைந்தால் அவனுடைய செங்கோல் அசையாது. நான் கூறினால் அடுத்த விநாடியே சீதையைக் கொணர்ந்து விடுவானே. நகத்தினால் கிள்ள வேண்டியதைக் கோடரி கொண்டு வெட்டுகின்றனையே உன்னுடைய ஆட்சியில் என் உடல் பாரமா? இது வீரமா? நீ வாலியைக் கொல்லவில்லை. அரச நீதியின் வேலியைக் கொன்று விட்டாய். நிராயுதபாணி மீது பாணந்தொடுத்துக் கொன்றது என்ன நியாயம்? அன்றி மறைந்திருந்து கணை தொடுத்தனையே? "

இராமபிரான் இத்தனையையும் பொறுமையுடன் கேட்டு, வாலியின் வாதத்தை மறுத்துக் கூறுகின்றார்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 12:45 am

"வாலி தம்பியின் மனைவி மகள் போன்றவள். நீ உன் தம்பியின் மனைவியைக் கவர்ந்து அவளைக் களங்கப்படுத்தினாய். இதைவிடப் பெரிய குற்றம் ஒன்று உளதா? அதனால், உன்னைத் தண்டித்தேன்" என்றார்.

"இராமா விலங்குகட்குத் தாய், மனைவி, மகள் என்று பாகுபாடு கிடையாது. நீ மனித தருமத்தைக் கருதி என்னைத் தண்டித்தது தவறு" என்றான் வாலி.

"வாலி தருமங்களைப் பற்றி அணுஅணுவாக நுனித்துப் பேசுகின்றனையே மனிதன் விலங்கு என்பது உடம்பினால் அன்று. அறிவின் திறமே காரணமாகும்."

தக்க இன்ன தகாதன இன்ன என்று உணராதவர்கள் மனிதர்களே யானாலும் விலங்கேயாகும். நீ தேவரின் புதல்வன், தருமத்தின் சூட்சமத்தை நன்கு உணர்ந்தவன். கசூஜந்திரனை யானை என்று கூறலாமா? ஜடாயுவைப் பறவையென்று பகரலாமா? நீ கல்லாத கலை இல்லை .. . அதனால் உன்னைத் தண்டித்தேன் என்றார் ராமர்.

"நீ கூறியதை ஒப்புக் கொள்கிறேன். மறைந்திருந்து கணை தொடுத்தது என்ன நியாயம்?"என்று கேட்டான் வாலி.

"களவு செய்தவனைக் காவல் துறைத் தலைவர் நேரே வந்துதான் பிடிக்க வேண்டும் என்பது இல்லை. நீ இந்திரன் - இராவண சம்மாரம் பொருட்டுப் பிறந்த நீ பகைவனுடன் நட்பு கொண்டது பிழை. அவதார நோக்கத்தை அழித்த உன்னை மறைந்து இருந்து கணை தொடுத்தது பிழையாகாது" என்றார்.

வாலி எம்பிரானுடைய அருள் மொழிகளைக் கேட்டுத் தன் பிழையை உணர்ந்து, இறைவனை இறைஞ்சித் துதி செய்கின்றான்.

"அறநெறி வழுவாத அண்ணலே சிறியேன் செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டும். குரங்கினமாகிய அடியேனிடம் தருமத்தின் நுட்பத்தைக் காண முடியாதுதானே.. .. என் தம்பி சுக்ரீவன் இந்தக் குரங்கரசைப் பெற்று இந்திர பதவியை எனக்குத் தந்தான். ஐயனே என் தம்பி எனக்கு நல்லது செய்தான்.

பெருமானே அடியேனுக்கு ஒரு வரந்தரல் வேண்டும். என் தம்பி சுக்ரீவன் மது உண்டு மதிமயங்கி ஏதாவது குற்றஞ்செய்வானாகில் என்மேல் ஏவிய பாணத்தை என் தம்பிமேல் விடாதே. இவன் தமையனாரைக் கொல்வித்தவன் என்று உன் தம்பியர் இகழ்வார்களேயானல் நீ அவர்களைத் தடுக்க வேண்டும். எம்பெருமானே மனுகுல மகாத்மாவே இந்தச் சுக்ரீவன் நன்றி மறவாதவன். சீதையைச் சிறை மீட்க உதவுவான் என்று கூறினான். தன்னைப் பார்த்து அழுகின்ற தம்பியை நோக்கி, தம்பி வருந்தாதே. வேதங்களும் முனிவர்களும் காண முடியாத கடவுள் இராமபிரானாக அவதரித்து உலகை உய்விக்க வந்தார். இவரைச் சரணம் அடைவாய்" என்றான்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 12:46 am

"எந்தையே இதோ இருக்கின்ற அநுமன் உமது திருத்தோளில் விளங்குகின்ற கோதண்டம் போன்றவன் இவன் எல்லாம் செய்ய வல்லவன்" என்று கூறினான்.

அப்போது அங்கதன் வந்து அழுது நின்றான். வாலி "மகனே அழாதே பரம்பொருள் இராமனாக வந்துள்ளது. இவர் பிறவிப் பிணிக்கு மருந்தாவார்" என்று கூறி, அங்கதனை இராமரிடம் அடைக்கலமாகத் தந்தான். இராமபிரான் அங்கதனிடம் தம் உடைவாளைத் தந்து அருள் புரிந்தார்.

வாலி இராமரைத் தன் கண்களால் பார்த்துக்கொண்டே முக்தியுலகஞ் சேர்ந்தான். வாலி மார்பைத் துளைத்த இராம சரம் வான கங்கையில் முழுகி இராமருடைய அம்புப் புட்டிலில் வந்து ஒடுங்கிற்று.

இந்திரன், இராவண வதம் புரிய வாலியாக வந்தான். அவ்வாறு வந்த அவன் இராவணனுடன் உறவு செய்து கொண்டான். உனக்கு உறவு, எனக்கு உறவு, உனக்கு பகை, எனக்கு பகை என்று இருவரும் ஒன்றுபட்டார்கள். இராமர் வாலியுடன் சென்ற இராவண சம்மாரம் நிகழ்த்த இயலாது. பகையாக வந்தவன் உறவு ஆக இணைந்தான். அதனை அவன் உணருமாறு இராமர் உணர்த்தினார்.

தாரை புலம்புதல் வாலியின் மனைவி தாரை விரைந்து வந்து கணவன் மீது வீழ்ந்து புலம்புகின்றாள். தாரையின் புலம்பில் மிகுந்த பொருட் செறிவுடன் கூடியது.

அதிகாலையில் பஞ்சணையில் பார்த்த கணவன். இப்போது உதிரச் சேற்றில் இருக்கின்றான். அவன் தினந்தோறும் திசைகளின் முடிவிற்போய் அன்று அல்ந்த மலர்களால் மூன்று வேளை சிவபூஜை செய்வான். இப்போது வழிபாடு செய்யாமல் மாண்டு கிடக்கின்றான். பிராணபதி போருக்குப் போக வேண்டாம் என்று தடுத்தேனே. ஏன் சொல்லைத் தட்டி வந்து மாண்டு கிடக்கின்றீரே

சிவபெருமானுடைய வழிபாட்டுக்குப் பாலும் தயிரும் பஞ்சாமிருதமும் தேனும் இளநீரும் ஆயத்தமாக இருக்கின்றனவே. பூக்குடலை ஆணியில் தொங்குகின்றனவே. வழிபாடு செய்யாமல் படுத்திருக்கின்றீரே

பெருமானே பாற்கடலைக் கடைந்;து அமுதம் அமரருக்கு அன்ற வழங்கினீரே அமுதம் உண்டவர்களில் அறக்கடவுளும் இருந்தாரே. அமுதம் வழங்கிய உமது உயிரைப்பற்றிச் சென்றாரே. நன்றியுணர்வு அறக்கடவுளுக்கு இல்லையா? உப்பிட்டவரை உள்ள நாள்வரை நினைக்க வேண்டுமே? நீர் அமுதத்தை வழங்கினீரே

உயிர்த் துணைவரே, கணவன் உள்ளத்தில் மனைவியிருப்பாள். மனைவியின் உள்ளத்தில் கணவன் இருப்பான். தங்கள் உள்ளத்தில் நான் இருந்தால் இராம பாணம் என்னையுங் கொண்டிருக்கும். என் உள்ளத்தில் நீர் இருப்பது உண்மையாயில் நான் உயிரோடு இருப்பதனால் நீரும் வாழ வேண்டும். ஆதலால், என் உள்ளத்தில் நீரும் இல்லை, உம் உள்ளத்தில் நானும் இல்லை., இனி எப்பிறப்பில் தங்களைக் காண்பேன்? என்ற கதறியழுதாள்.

இராமர் அனுமாரை ஏவி ஆறுதல் செய்வித்தார். வாலிக்கு நெருப்புக்கடன், நீர்க்கடன்கள் செய்தார்கள். நல்ல நாளில் இராமருடைய கட்டளைப்படி இலட்சுமணர், சுக்ரீவனுக்கு முடி சூட்டினார். வேத மந்திரங்களுடன் ஆசியுரை கூறினார்கள். குரங்குகள் நடனம் புரிந்தன.

சுக்கரீவன் பட்டாபிஷேகக் கோலத்துடன் சென்று இருவரைப் பணிந்தான்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 12:46 am

இராமருக்கு உள்ளம் குளிர்ந்தது. அவனை வாயார வாழ்த்தினார். "சுக்ரீவா, உன் அரசு ஓங்குக. நான் இளமையில் வேலைக்காரி கூனியின் முதுகில் மண்ணுருண்டை எய்ததன் விளைவு என்ன ஆயிற்று என்று கண்டனையா? தந்தையார் மாண்டார். பரதன் நந்தியம் மலையில் தவம் புரிகின்றான். சீதை போன இடம் தெரியவில்லை. ஆதலால், உன் அரண்மனையில் வாழும் பணியாளர்களின் மனம் நோக நடக்காதே.

பெண்களால் துன்பம் எய்தும். வாலியின் மரணத்துக்குக் காரணம் பெண்ணாசைதானே. வாலி மிகச் சிறந்த சிவபூஜை செய்தும், ஒழுக்கம் இன்மையால் மாண்டான்.

சீதாதேவி மானைக் கேட்டுத்தானே இத்தனைத் துயரங்கள் விளைந்தன. மழைக்காலம் கடந்த பின் சீதையைத் தேடலாம். நீ போய் அரசு செய்" என்ற உத்தரவு தந்தார்.

சுக்ரீவன் அரண்மனை சென்று தாரையின் காலில் வீழ்ந்து வணங்கினான். அங்கதனுக்கும் இளவரசுப்பட்டம் கட்டப்பட்டது. சுக்ரீவன் தன் மனைவி ருமாதேவியுடன் இன்புற்று வாழ்கின்றான்.

கிஷ்கிந்தை முறைப்படி முடிசூட்டிக் கொண்ட சுக்ரீவன் நன்றியுணர்வுடன் இராமபிரானைப் பணிந்தான், துயரந் தணிந்தான், அவருடைய திருவடியைச் சென்னியில் அணிந்தான். இராமரைத் தனது நகரில் வந்து அரண்மனையில் தங்குமாறு வேண்டினான்.

காட்டில் இருக்க வந்து நாட்டில் இருப்பது முறையன்று. அன்றிச் சீதாதேவி துன்பப்படுகின்றபோது நான் இன்புறுவது பிழையாகும் என்று எம்பெருமான் எல்லாரையும் கிஷ்கிந்தைக்கு அனுப்பிவிட்டு, வேறு ஒரு குன்றில் தங்கினார்.

மழைக்காலம் வந்தது. மனைவியைப் பலகாலம் பிரிந்திருந்த சுக்ரீவன் அவன் மனைவி ருமாவுடன் இன்புற்று உலகை மறந்திருந்தான். இளவரசனாகிய அங்கதன் மாட்சியுடன் ஆட்சி புரிந்தான். அநுமார் நீதி நெறியைப் பரப்பி மக்களை நல்வழிபடுத்தி நலம் புரிந்தார்.

வானம் மையெடுத்தது போல இருண்டு மழை பொழிந்தது மின்னலும் இடியுமாக, இடையறாது மேகம் பொழிந்தது.

இராமபிரான் சீதையை நினைத்த வேதனையுற்றார். இலட்சுமணர் ஆறுதல் கூனினார். எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இராமர் எங்கும் போக முடியாத நிலை. உணவு தேடியும் வெளியே போக முடியாத நிலை.

காற்றம் மழையும் கலந்து துன்புறுத்தின. போர்வையில்லை. நாகங்களும் தேள் முதலிய நச்சுப் பிராணிகளும் நிறைந்த வனம்.

தம்பீ லட்சுமணா தூக்கணாங்குருவி தன் மனைவியுடன் கூட்டினுள் சுகமே தூங்குகின்றது. இந்தக் குருவி செய்த புண்ணியங்கூட நான் செய்தேனில்லை. சீதை எங்கே என்ன துன்பத்தை அனுபவிக்கின்றாளோ? வனவாசம் என்பது எத்தனைக் கொடுமையானது. இத்துன்பம் பகைவனுக்கும் வரக்கூடாது என்றார்.

கார்காலம் கழிந்தது. மரகதக் கம்பளம் விரித்தது போலப் பசும்புல் தழைத்து நிலமகளை அழகு செய்தது. வெயில் சுரீர் என்று வீசியது. மரங்கள் பூத்து குலுங்கின.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 12:47 am

இராமபிரான் தம்பியைப் பார்த்த, தம்பீ கார்காலம் கழிந்தவுடன் வருகின்றேன் என்ற கூறிச்சென்ற சுக்ரீவன் அதுபடி வந்தானில்லை. நன்றியை மறந்து நட்பினைத் துறந்தான் போலும். புல்லை எடுத்தால்தான் நெல்லை வளர்க்க முடியும். அரச வாழ்வில் மயங்கிவிட்டான் போலும். செய்ந்நன்றி மறந்த தீயவனை அழிப்பது அரச தருமமேயாகும். ஓரு வேளை வாலியைக் கொன்றபின் பாணம் தீர்ந்து விட்டது என்ற எண்ணுகின்றானோ? வாலியைக் கொன்ற பாணம்போல் ஆயிரம் ஆயிரம் பாணங்கள் இருக்கின்றன என்று அவனுக்குக் கூறவாயாக, வாலியைக் கொல்லத்துணை தேடினான். இப்போது நம்மைக் கொல்ல வேறு துணை தேடினாலும் தேடுவான்.

சித்திரத்திலும் குரங்கை எழுதாமல் செய்வேன். வாநரம் என்ற பேரே உலகில் இல்லாதவாறு செய்வேன். தம்பி அவன் அறநெறியில் மாறுபட்டு ஏதாவது கூறவானாயின் அவன் கூறியதை என்னிடம் வந்து கூறுக. நீ ஒன்றும் செய்து விடாதே. உன்னை ஒப்பார் மூன்று உலகங்களிலும் இல்லை. போய் வருக என்ற கூறி விடை கொடுத்தார்.

மனோவேகமும் இராம சரத்தின் வேகமும் பிற்பட எரிமலை நடப்பது போல் நடந்தது. இலட்சுமணர் கிட்கிந்தையைச் சேர்ந்தார். வாநரங்கள், இலட்சுமணர் கோபத்துடன் வருவதைக் கண்டு பயந்து நடுங்கி ஒடுங்கி, வணங்கி வரவேற்பு செய்யாமல் கோட்டைக்கதவைச் சாற்றிக் குன்றுகளையடுக்கி மரங்களை வேருடன் பறித்துக் கையில் ஏந்தி நின்றன.

இது எரிகின்ற தீயில் நெய்விட்டதுபோல் ஆயிற்று.

இலட்சுமணர் சீற்றத்துடன் வருகின்றார் என்ற செய்தி ஒரு வானரம் அங்கதனிடம் அறிவித்தது. அங்கதன் சுக்ரீவனுடைய மாளிகை சென்று அவனை வணங்கி, சித்தப்பா இலட்சுமணர் கோபத்துடன் வருகின்றார். அவருடைய நாசியிலும் செவிகளிலும் கனல் பொறிகள் பறக்கின்றன. நமக்கு அழிவுகாலம் வந்து விட்டது என்று கூறினான். மதுவுண்டு உலகத்தையும் தன்னையும் மறந்திருந்தான் சுக்ரீவன்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 12:47 am

மதிநலம் படைத்த மாருதி, இந்த நேரத்தில் இலட்சுமணரை யாராலும் சமாதானப் படுத்து முடியாது என்பதை உணர்ந்தான். கங்கா நதியின் பிரவாகத்தை உப்பு மூட்டைகள் தடுத்து நிறுத்தமாட்டா. இதற்கு ஒரே ஒரு வழி தஞ்சம் புகுதல் என்று கருதி, தாரை இருக்குமிடஞ் சென்று அவளது தாள் மலர்மீது வீழ்ந்து வணங்கி, அம்மா இந்த வேளையில் நீங்கள்தான் எல்லாருக்கும் உயிர்ப்பிச்சை தர வேண்டும். இளைய பெருமாள் சீற்றத்தோடு வருகின்றார். சுக்ரீவன் மதுக்கடலில் மூழ்கியிருக்கின்றார். நீங்கள் பெண்மணிகளுடன் சென்று வாயிலை மறைத்து நின்று. அவருடைய கோபத்தை ஆற்ற வேண்டும் என்று கூறினான்.

தாரை, அநுமனே கருணைக் கடலாகிய இராமச்சந்திர மூர்த்தி மழை, பனி, காற்று முதலிய துன்பங்களை நுகர்ந்து வெந்துயர்க் கடலில் வீழ்ந்திருக்க நீங்கள் சுகபோகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது முறையா? என்று கடிந்து கூறினாள்.

இருப்பினும் தங்கள் உற்றார் உறவினர்களைக் காப்பாற்ற வேண்டிச் சேடிப் பெண்களுடன் புறப்பட்டாள். தாரை பல மாதர்கள் சூழு நுழைவாயிலை அடைத்து நின்றாள். இலட்சுமணருக்கு நல்வரவு கூறி, தரும மூர்த்தியே கற்பக்கோடி தவஞ் செய்தால்தான் தங்கள் திருவடித் தாமரை வணங்கக் கிடைக்கும். தங்கள் திருவடி வைத்தனால் தான் இந்த நாடும் நகரும் அரசும் மேன்னையடைந்தன. நாங்கள் பன்னெடுங்காலம் செய்த தவப்பயனால் தங்களைப் பணிகின்ற பாக்கியம் பெற்றோம். இனி, எங்களுக்கு எந்தச் துன்பமும் விளையாது. தங்களுக்கு நல்வரவு என்று இனிமையாக கூறினாள். இவ்வாறு, இனிமையாகப் பேசுவது யாரென்று மாமியர் குழாத்து நின்ற மருமகன் போல் நின்ற இலட்சுமணர் சிறிது முகத்தைத் தூக்கிப் பார்த்தார்.

மங்கல அணிகலன்களும் மலர்களுமின்றிப் பகல் வந்த சந்திரனைப்போல் ஒளிகுன்றி நிற்கும் தாரையைக் கண்டார். நமது தாய்மார்களும் இவ்வாறுதானே வெள்ளைப்புடைவை கட்டிக் கொண்டு விதந்துகளாக இருப்பார்கள் என்று எண்ணிக் கண்ணீர் விடுத்தார். கோபம் நீங்கிச் சாந்தியடைந்தார்.

அம்மா அநுமன் எங்கே? என்று வினவினார். அந்த வேளையில் அநுமார் வந்து அவரை வணங்கினார். இலட்,சுமணர் அநுமாரைப் பார்த்துப் புன்முறுவல் செய்து, அறிவின் மிக்க அநுமனே தாமதத்துக்கு என்ன காரணம்? என்று கேட்டார். தங்கள் பிழையை உணர்ந்த அநுமன். இலட்சுமணரை நிலந்தாழ வணங்கினார்.

பெருமானே நாங்கள் அணுவளவும் தாமதிக்கவில்லை. வனங்கள் தோறும் மரங்கள்தோறும் வாழ்கின்ற வானர சேனைகளைத் திரட்டுவது பெரும்பாடு.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 1:25 am

கணையாழி

[You must be registered and logged in to see this image.]

அநுமார் மேலும் சொன்னார், "தாய், தந்தை, குரு, பசு, குழந்தைகள், பெண்கள் இவர்களை வதைத்தாவர்களுக்கும் கழுவாய் உண்டு. நன்றி கொன்றவனுக்குக் கழுவாய் இல்லை. தினையளவு நன்றி செய்தவரையே எழுமையும் நினைக்க வேண்டும். மலையளவு நன்றி செய்த தங்களை நாங்கள் மறக்க முடியுமா? எங்கள் வாநர சேனைகளைத் திரட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டது. மன்னித்தருள வேண்டும்" என்றார்.

அங்கதன் சுக்ரீவனை மீண்டும் அணுகி, இளைய பெருமாளின் வரவைக் கூறினான். இப்போது மது மயக்கந் தெளிந்திருந்த சுக்ரீவன் இலட்சுமணரின் வரவை ஏன் முன்னமே எனக்குத் தெரிவிக்கக்கூடாது என்று கோபத்துடன் கேட்டான். "தந்தையயே நீங்கள் மதுவுண்டு மயங்கிக் கிடந்தீர்கள். மாதர் குழாம் சூழ என் அன்னை சென்று அவரைச் சாந்தப்படுத்தினாள். தாங்கள் சீக்கிரம் வந்து இளையவரைச் சந்திக்க வேண்டும்" என்றான்.

சுக்ரீவன், "ஓ நான் மதுவினால் மயங்கிக் கிடந்தேனா? நான் பெருந்தவறு செய்துவிட்டேனே. மதுவுண்டவனுக்கு யார் தாய், யார் மகள் என்ற தெளிவில்லாமல் போகும். கள்ளில் நெளிகின்ற புழுவை நீக்கி அதை உண்டு மயங்கி உருளுகின்ற தன்மை எத்தனை அறியாமையால் விளைகின்றது. அந்தோ மதுவின் கொடுமையை எண்ணும்போதே மனம் மருளுகின்றது. நஞ்சு உண்டவனைக் கொல்லுமேயன்றி நரகத்தை நல்காது. மது உண்டவனை நரகத்திலே தள்ளும். மதுவுண்ணலை விடக் கொடியது யாதொன்றுமில்லை. இனி மதுவை மனத்தாலும் தீண்டேன். இராகவன் மேல் ஆணை" என்று சத்தியம் செய்தான்.

மனைவியுடன் வந்து இளைய பெருமாளைப் பலமுறை வணங்கினான். "ஐயனே அருட்பெருங்கடலே சிறியேன் செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டும். எங்கள் வாநர சேனை வனங்களிலும் மரங்களிலும் வாழ்கின்ற வாழ்க்கையை உடையன. அவற்றை ஒருங்கு திரட்டுவதில் கால தாமதம் ஆயிற்று" என்று இன்னுரை கூறி, அரண்மனைக்குள்ளே அழைத்துக் கொண்டு போய் ஒரு சிறந்த ஆசனத்தில் இருக்கு மாறு வேண்டினான்.

இலட்சுமணர், கண்கள் குளமாகி, "அன்பனே எம்பெருமான் துன்பக் கடலில் மூழ்கியிருக்கின்றபோது நான் இந்த ஆசனத்தில் இருக்கலாமா? அது முறையா?" என்று கூறினார். சுக்ரீவன் இலட்சுமணரை உணவு உண்ணுமாறு வேண்டினார்.

இலட்சுமணர் சுக்ரீவா எம்பெருமான் உண்ட "பச்சிலை, காய், கிழங்கு இவைகளின் மிகுதியைத்தான் உண்பது முறை. பெருமான் அங்குப் பட்டினி கிடக்க நான் இங்கு உண்ணலாமா? அவருக்கு உணவு தேடித் தரும் பொருட்டு நான் விரைந்து போக வேண்டும்" என்றார்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக