புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இராம காவியம் - Page 8 Poll_c10இராம காவியம் - Page 8 Poll_m10இராம காவியம் - Page 8 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
இராம காவியம் - Page 8 Poll_c10இராம காவியம் - Page 8 Poll_m10இராம காவியம் - Page 8 Poll_c10 
13 Posts - 25%
Baarushree
இராம காவியம் - Page 8 Poll_c10இராம காவியம் - Page 8 Poll_m10இராம காவியம் - Page 8 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இராம காவியம் - Page 8 Poll_c10இராம காவியம் - Page 8 Poll_m10இராம காவியம் - Page 8 Poll_c10 
2 Posts - 4%
prajai
இராம காவியம் - Page 8 Poll_c10இராம காவியம் - Page 8 Poll_m10இராம காவியம் - Page 8 Poll_c10 
2 Posts - 4%
viyasan
இராம காவியம் - Page 8 Poll_c10இராம காவியம் - Page 8 Poll_m10இராம காவியம் - Page 8 Poll_c10 
1 Post - 2%
Rutu
இராம காவியம் - Page 8 Poll_c10இராம காவியம் - Page 8 Poll_m10இராம காவியம் - Page 8 Poll_c10 
1 Post - 2%
சிவா
இராம காவியம் - Page 8 Poll_c10இராம காவியம் - Page 8 Poll_m10இராம காவியம் - Page 8 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இராம காவியம் - Page 8 Poll_c10இராம காவியம் - Page 8 Poll_m10இராம காவியம் - Page 8 Poll_c10 
10 Posts - 83%
Rutu
இராம காவியம் - Page 8 Poll_c10இராம காவியம் - Page 8 Poll_m10இராம காவியம் - Page 8 Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
இராம காவியம் - Page 8 Poll_c10இராம காவியம் - Page 8 Poll_m10இராம காவியம் - Page 8 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராம காவியம்


   
   

Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Feb 17, 2009 11:56 pm

First topic message reminder :

இராம காவியம்

தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார்

[You must be registered and logged in to see this image.]

ஞானக்கண் கண்ட காட்சி


உலகம் யாவையுந் தாமுல வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 1:25 am

இதைக் கேட்டு எல்லாரும் கண்ணீர் வடித்தார்கள். சுக்ரீவன் அனுமனைப் பார்த்துச் "சேனைகளைக் கூட்டி அழைத்துக் கொண்டு வா" என்று கட்டளையிட்டுவிட்டு, இலட்சுமணருடன் சென்று இராமபிரானைப் பணிந்து, கண்ணீரால் இவருடைய பாதமலர்களை அலம்பி, அழுது தொழுது நின்றான்.

இராமர் சுக்ரீவனைத் தழுவி, வாழ்த்தியருளினார். "சுக்ரீவா எல்லாரும் நலந்தானே உன் ஆட்சி மாட்சியுடன் இருக்கின்றதா? எங்கே அநுமன்?" என்று வினாவினார்.

"அநுமன் சேனையுடன் நாளை வருவான்" என்று சுக்ரீவன் கூறினான்.

மறுநாள் கடல் திரண்டது போல் எழுபது வெள்ளம் வாநர சேனைகள் அங்கு வந்து சேர்ந்தன. தனிப்பெருஞ் சேனைத் தலைவன் நீலனும் சாம்பவந்தனும் சதவலி, கேசரி, தூமிரன், தரீமுகன், கவயன், துன்முகன், மயிந்தன், துமிந்தன், குமுதன், பதுமுகன், இடபன் முதலிய படைத் தலைவர்களும் வந்து சேர்ந்தார்கள்.

சுக்ரீவன் இராமரைத் தொழுது அழைத்துக் கொண்டு போய் வாநர சேனைகளை காட்டினான். இராமர் அளவற்ற சேனைகளைக் கண்டு அதிசயம் அடைந்தார். ஈசன் வடிவத்தையும் ஐம்பெரும் பூதங்களையும் சமயவாதிகளின் பிணக்குகளையும் அளக்க முடியாததுபோல் அந்தச் சேனைகள் காட்சி தந்தன. அந்தச் சேனைகளின் முடிவைக் காண முடியாமல் அகமிக மகிழ்ந்தார். இனி நான்கு திசைகளிலும் எட்டுக் கோணங்களிலும் வாநர சேனைகளை அனுப்பிய சீதை இருக்குமிடத்தைக் கண்டு பிடிக்கவேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

சுக்ரீவன் நான்கு திசைகளுக்கும் இரண்டிரண்டு வெள்ளம் சேனைகள் தேடுமாறு அனுப்பினான். ஒரு மாதத்துக்குள் வர வேண்டுமென்று ஆணையிட்டான்.

இராவணன் தென் திசை நோக்கிச் சென்றதனால் அநுமாரும் சாம்பவந்தனும் அங்கதனும் நீலனும் ஆகிய முக்கியமான வீரர்கள் தென்திசை சென்று நியமித்தான்.

தென்திசை போகும் அநுமார் முதலியோருக்குச் சுக்ரீவன், அவர்கள் போகும் மார்க்கத்தைத் தெளிவாகக் கூறலானான்.

தென்திசை நோக்கிச் சொல்லுகின்றபோது ஆயிரம் யோசனை கடந்தால் விந்தமலை வரும். பின்னர் நருமதா நதி வரும். அங்கும் தேடுங்கள் பின்னர் ஏம கூட மலையைக் கண்டு தேடுங்கள். அதைக் கடந்து பெண்ணை நதியைப் பார்த்துத் தேடுங்கள். பின்னர் தண்டக நாட்டை அணுகித்தேடுங்கள். அதனைத் தொடர்ந்து பாண்டு மலையில் தேடுங்கள். பின்னர், புண்ணிய நதியாகிய கோதாவரியை அடைந்து அதன் பிரதேசத்திலும் தேடுங்கள் சுவணம் என்ற நதியையும் அதன் அருகிலுள்ள நகரங்களையும் கண்டு தேடுவீர்களாக. அங்கிருந்து தென்திசை நோக்கிப் பல நாடுகளையும் கடந்து கொங்கணம், குலிந்தம் என்ற நாடுகளில் தேடுங்கள். அங்கிருந்து தெற்கு நோக்கிச் சென்றால், அருந்ததி என்ற ஒரு பெருமலையைக் காண்பீர்கள். அம்மலையின் உச்சியை யாராலும் அடைய முடியாது. சமயவாதிகள் சிவன்தான் பெரியவர் என்பர், விஷ்ணுதான் பெரியவர் என்பர். ஆனால், இரண்டும் ஒன்று என்று அவர்கள் அறியார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 1:26 am

ஓரு கடிதத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதபோல் கடவுளுக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒருபக்கம் சிவம், மற்றொரு பக்கம் விஷ்ணு. சிவமூர்த்தி இருபத்தைந்து பேதங்களில் கேசவார்த்த மூர்த்தி என்ற ஒரு மூர்த்தி உண்டு. அதில் பாதி சிவம், பாதி விஷ்ணு,

சிவன் - சூடு

விஷ்ணு - குளிர்ச்சி

உலகம் வாழ வேண்டுமானால் வெப்ப தட்பங்கள் சரியாக இருக்க வேண்டும். வெப்பமான சிவம் எரிகின்ற மயானத்தில் எரியைக் கையில் வைத்துக்கொண்டு நடனம் புரிகின்றது. தட்பமாகிய விஷ்ணு நீரிடை உறங்குகிறது.

வெப்பமாகிய சிவத்துக்குக் குளிர்ச்சி தருகிற வில்வத்தை அர்ச்சனை செய்கிறார்கள். தட்பமாகிய விஷ்ணுவுக்கு உஷ்ணத்தைத் தரும் துளசியை அர்ச்சிக்கிறார்கள். தத்துவ ஞானிகள் சிவத்தையும் விஷ்ணுவையும் ஒன்றாக பார்ப்பார்கள். அதனால், சிவனை உயர்த்தி விஷ்ணுவைத் தாழ்த்தி, விஷ்ணுவை உயர்த்திச் சிவத்தைத் தாழ்த்தியும் பேசுவோர் பரகதி அடையமாட்டார்கள்.

ஈசன் விஷ்ணுவைச் சேவைசெய் வோர்தமை இகழ்வோர்கள்
ஈனர் இத்தனை பேர்களும் ஏழ்நரகு உழல்வாரே.

- என்று அருணகிரிப் பெருமான் அருளிச் செய்கின்றார். அதுபோல் நீங்களும் அருந்ததி மலையின் உச்சியைச் சென்று அடைய முடியாது. சென்று காலத்தை வீணாக்காதீர்கள்.

பின்னர், மரகத மலை சென்று தேடுங்கள். தமிழ் நாட்டுக்கு வடக்கு எல்லையாய் விளங்குவதும் தன்னை அடைந்தார் பாவம் நீங்கிப் பரகதி அடைய வைப்பதும், அமரரும் முனிவரும் அனுதினமும் வணங்குவதுமான திருவேங்கட மலையை அடைவீர்கள், அம்மலை தம்மை அடைந்தாரைப் பரகதியில் சேர்க்க வல்லது, அதலினால், அம்மலையைத் தொலைவிலிருந்தே சேவித்துச் செல்லுங்கள்.

பின்னர் சான்றோர்கள் பலர் வாழுகின்ற தொண்டை நாட்டை அடைவீர்கள். அங்கே முத்தி தரும் ஏழு தலங்களில் ஒன்றாகிய காஞ்சி மாநகரை அடைவீரகள். தொண்டை நாடு, "தொண்டை நாடு" என்று சொல்லி கொண்டிருக்கும். ஒரு மனிதன் தொண்டினால்தான் உயர முடியும். அதனால்தான் தொண்டர் புராணத்தைப் பெரியபுராணம் என்று பெரியோர்கள் கூறுகின்றார்கள்.

பின்னர், தொண்டை நாட்டை கடந்து ஏழ்தலம் புகழ் காவேரியால் வளம் பெருகுகின்ற சோழ நாட்டை அடைவீர்கள். அங்குக் காவிரி ஆற்றின் இருகரையகளிலும் சிவ விஷ்ணு தேவாலயங்கள் பல திகழ்கின்றன. சிதம்பரம், திருவாரூர், திருவேரகம் என்ற பல திருத்தலங்கள் மாட்சியுடன் காட்சி தருகின்றன. நீங்கள் பயபக்தியுடன் அங்குத் தேவியைத் தேடுங்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 1:26 am

அதைக் கடந்தால் முத்தும, முத்தமிழும் தருகின்ற பெருநையாறு பாய்கின்ற பாண்டி நாட்டை அடைவீர்கள். பாண்டிய நாட்டைக் கடந்தால் தமிழ்நாட்டின் தெற்கெல்லையாகிய பொதிய மலையை அடைவீர்கள். அங்குச் செந்தமிழ் தந்த அந்தமில் பெருமையுடைய அகத்திய முனிவருடைய தமிழ்ச் சங்கததைப் பார்ப்பீர்கள். அங்குச் சென்றால், அத்தமிழ் மொழியின் இனிமையால் உள்ளம் உருகி, அங்கேயே தங்கிவிட நேரும். ஆதலால், காதலால் அச்சங்கத்தைத் தொலைவிருந்தே வணங்கிவிட்டுச் செல்லுங்கள். பின்னர், மகேந்திர மலையை அடைவீர்கள். மகேந்திர மலையில் தேடிவிட்டு ஒரு மாதத்துக்குள் இங்கு வந்து அடைய வேண்டும் என்று கட்டளையிட்டான்.

அநுமனிடம் இராமர் கணையாழி தருதல் இராமபிரான் அநுமனைத் தனியே அழைத்து, "அறிவில் மிகுந்த அநுமனே நீ சீதையைக் காண்பாய் என்று உறுதியுடன் எண்ணுகிறேன். சீதை பேரழகு உடையவள். சமானமில்லாத அங்கக்களை உடையவள். அவளிடம் இக்கணையாழிகை அடையாளமாகக் கொடுத்து என்னுடைய நலத்தைக் கூறவாயாக" என்று கூறி, சீதையின் திருமேனி நலன்களை அடையாளமாகக் கூறி வாழ்த்தி விடை கொடுத்தனுப்பினார்.

இவ்வாறு தேவியைத் தேடிக்கொண்டு அநுமன் முதலியோர்கள் செல்லுகின்ற வழியில், கொதிக்கின்ற ஒரு பாலைவனத்தை அடைந்தார்கள். அதன் வெப்பத்தைத் தாங்காமல் தவித்தார்கள். அங்கே ஒரு பிலம் தெரிந்தது. வெப்பத்தைக் தாங்காத வாநர வீரர்கள் அந்தப் பிலத்துக்குள் நுழைந்தனர், இருளில் இடர்பட்டார்கள். அநுமார் தன் வாலை நீட்டி அதனைப் பற்றிக் கொண்டு வாருங்கள் என்று கூற, திருவாரூர் தேர் வடம் பிடிப்பதுபோல், அநுமாருடைய நீண்ட வாலை நீட்டி அதனைப் பற்றிக்கொண்டு நடந்தார்கள். அங்கே, மனித சஞ்சாரமமே இல்லாத ஒளி நிறைந்த ஒரு நகரத்தைக் கண்டார்கள். சோலைகளும் கொடிப் பந்தல்களும் வானாவிய பூமரங்களும் நிறைந்திருந்தன. ஒரு பக்கத்தில் இனிய உணவுகளும் உடைகளும் இருந்தன. இதுதான் இராவணன் சீதையைச் சிறை வைத்துள்ள இடமோ என்று ஜயுற்றார்கள். அங்கே ஓர் அழகிய மண்டபத்தில் ஒரு பெண்மணி அமர்ந்து தவஞ்செய்து கொண்டிருந்தாள். அவள் பேர் சுயம்பிரபை. வானார்கள். சுயம்பிரயை கண் விழித்துப் பார்த்தாள். யாரென்று வினாவினாள் நாங்கள் இராமபிரானுடைய அடியார்கள். "தாங்கள் யார்? ஏன் இங்குத் தனிமையில் இருக்கின்றீர்கள்?" என்று வாநர வீரர்கள் கேட்டனர்.

சுயம்பிரபை, "இராம பக்தர்களே என் பேர் சுயம்பிரபை ஏமை என்கின்ற தேவ மாதுடன் மயன் என்பவன் கூடா ஓழக்கத்துடன் வாழ்ந்தான். அதற்கு நான் துணை புரிந்தேன். அதனால், இந்திர பகவான் சீற்றமடைந்து மயனைக் கொன்று ஏமையைத் தேவ மாதருடன் சேர்த்துவிட்டு, என்னை இங்கே தனித்திருக்குமாறும் கூறினார். இராம தூதன் அநுமாராக உனக்கு விமோசனம் கிடைக்கும் என்றார். நான் இத்தனைக் காலம் உங்கள் வரவை நோக்கி மாதவம் செய்து கொண்டிருந்தேன். எனக்கு அருள் புரிந்து இதிலிருந்து விடுவித்து வீடு, பேறு தருவீர்கள்" என்று கூறினாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 1:27 am

அநுமார் விஸ்வரூபம் எடுத்து ஆயிரத்து நானூறு யோசனையுள்ள அந்தப் பிலத்தை வேருடன் பிடுங்கி, அது நிலமட்டம் வரும்போது வாநர வீரர்களை மண்ணில் இறங்குமாறு செய்து அந்தப் பிலத்தை மேற்கடலில் எறிந்து விட்டார். சுயம்பிரபை தேவலோகம் சேர்ந்தாள். வாநர வீரர்கள், ஓர் இனிய வனத்தையும் பொய்கையையும் கண்டார்கள். அங்குள்ள காயும் கனியும் தேனும் உண்டு இளைப்பாறிப் பொய்கைக் கரையில் படுத்தயர்ந்து தூங்கி விட்டார்கள்.

துமிரன் நடு இரவில் மலை போன்ற பெரிதும் உடலும் நீண்ட கரங்களும் கரிய உருவமும் கொண்ட ஓர் அரக்கன் வந்து. என்னுடைய ஆட்சியிலுள்ள பொய்கைக் கரையில் இவர்கள் வந்து உறங்கலாமா? என்று கூறி, அங்கதன் மார்பில் குத்தினான். அங்கதன் எழுந்து அவனுடன் கடும் போர் புரிந்து கொன்றான். மாண்டு கிடக்கின்ற அரக்கனைக் கண்டு அனைவரும் அதிசயம் அடைந்தார்கள். சாம்பவந்தர் இவன் துமிரன் என்ற பேருடைய பொல்லாத அரக்கன். இவனை அங்கதனையன்றி யாராலும் கொல்ல முடியாது என்று கூறினார்.

வாநர வீரர்கள் மீண்டும் தேவியைத் தேடினார்கள். விதர்ப்ப நாடு, தண்டக வனம், பாண்டு மலை, கோதாவரி நதி முதலிய பல இடங்களில் துருவித், துருவித் தேடினார்கள். பிராட்டியைக் காணாது வாடினார்கள். முண்டகத்துறை சென்று தேடினார்கள். பாண்டு மலையையடைந்து தேடினார்கள். அருந்ததி மலையையடைந்து தேடினார்கள். பின்னர் திருவேங்கட மலையை அடைந்தார்கள். சித்தர்களும், முத்தர்களும் பக்தர்களும் வந்து பணிந்து, வினைதணிந்து நலம் பெறுகின்ற அந்த வேங்கட மலையை வணங்கித் தேவியைத் தேடினார்கள்.

வாநர வீரர்கள் அந்தணர் வடிவை எடுத்துக்கொண்டு சான்றோர்கள் வாழும் தொண்டை நாட்டையடைந்து தேடினார்கள். வடமொழியும் தென் மொழியும் கற்று அதன் முடிவைக் கண்ட மூதறிஞர்கள் அங்கு வாழ்கின்றார்கள். அந்நாட்டில் தேடி, காவேரியால் வளம் பெறுகின்ற சோழ நாட்டில் தேடினார்கள். பின்னர் முத்தும் முத்தமிழும் தருகின்ற பாண்டி நாட்டையடைந்து தேடினார்கள். எங்குத் தேடியுங் காணாது தென் கடலையடைந்தார்கள்.

கடலில் அலைகள் எழுந்து தாழ்கின்ற காட்சி வாநர வீரர்களே எம்பிராட்டி கடல் நடுவில் உள்ள இலங்கையில் இருக்கின்றாள் வாருங்கள் , வாருங்கள் என்று கைநீட்டி அழைப்பதுபோல் இருந்தன.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 1:27 am

சம்பாதியைச் சந்தித்தல்

முன்னே ஏமகூட மலையில் பிரிந்த இரண்டு வெள்ளம் வாநரங்களும் இப்போது தென் கடலில் வந்து ஒன்று கூடின. சீதா தேவியைக் காணாது கவலை மிகுந்து உள்ளம் வெந்து நொந்து, வாநர வீரர்கள் வருந்தினார்கள்.

"இராமபிரானுடைய அவருளை நாடிய நாம் தேவியைக் கண்டோமில்லை. இனி நாம் அரிய தவத்தைச் செய்வோமா? கொடிய நஞ்சை உண்டு மாய்ந்து போவோமா? சுக்ரீவ மன்னர் நமக்குத் தந்த தவணை நாள்களும் கழிந்துவிட்டன" என்று கூறி வருந்தினார்கள்.

"அங்கதன், அன்பர்களே, நாம் மேற்கொண்ட முயற்சியை முடிக்கவில்லையே. என் தந்தை கோபிப்பார் இராமச்சந்திர மூர்த்தி பெருந்துயரம் அடைவார். இனி வாழ்ந்து என்ன பயன்? நான் இங்கு மாண்டு போவேன். என் அன்புடை அன்னைக்கும் என் சிறிய தந்தைக்கும் என் மரணத்தை சொல்லிவிடுங்கள்" என்று மிக்க வருத்தத்துடன் கூறினான்.

நீலன், நாம் இனி கிஷ்கிந்தை போகக்கூடாது. இங்கே தங்கிவிடுவோம் என்றான்.

மாருதி, "அன்பர்களே இராமருடைய கட்டளையை நிறை வேற்றாமல் மாள்வது அறிவுடைமை ஆகாது. நாம் தேடுவதற்கு உலகங்கள் பல இருக்கின்றன. நாம் தேடியது சில இடங்கள் தான். ஊக்கம் குன்றாமல் மீண்டும் தேடுவோம். தேடியும் தேவி கிடைக்கவில்லையானால் ராம கைங்கர்யமாக ஜடாயு தன் உயிரைத் தியாகம் செய்ததுபோல் நம் உயிரைத் தியாகம் செய்வோம்" என்றார்.

இவ்வாறு அநுமார் கூறிய வார்த்தைகளைச் சம்பாதி (நன்கு பறக்க வல்லவன்) என்ற பறவையரசு கேட்டார். சம்பாதி என்பவர் ஜடாயுக்குத் தமையனார். சூரியனுடைய தேர்ச் சாரதியாகிய அருண பகவானுடைய புதல்வர். சம்பாதி தன் உயிரினும் இனிய தம்பி ஜடாயுவின் மரணத்தைக் கேட்டு மனம் வருந்தி உள்ளம் துடித்துக், கண்ணீர் வடித்து வாநர வீரர்கள் இருக்கும் இடத்தை நடந்து வந்து சேர்ந்தார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 1:27 am

சம்பாதியை அரக்கன் என்று எண்ணி வாநரங்கள அஞ்சி ஓடின. அநுமார் வாநரங்களை தடுத்து நிறுத்தினார். "வாநர வீரர்களே என் அருமைத்தம்பி எப்படி மாண்டான்? அவன் அளவற்ற ஆற்றல் உடையவன். அவனைக் கொன்றவர் யார்?" என்று கேட்டார். அநுமார், "ஐயா சீதா தேவியை இராவணன் கவர்ந்து சென்றபோது ஜடாயு தடுத்துப் போர் புரிந்தார். இராவணன் சிவன் தந்த வாளால் ஜடாயுவைக் கொன்றுவிட்டான்" என்றார்.

இதனைக் கேட்ட சம்பாதி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். "இராம கைங்கர்யமாக உலகமாதா சீதா தேவியின் பொருட்டு மாண்ட என் தம்பி புண்ணியசாலி. இது வீரமரணம், தியாக மரணம். தவத்தால் என் தம்பி இந்த இனிய மரணத்தை எய்தினான்.

"அன்பர்களே என் பேர் சம்பாதி. என் தம்பி ஜடாயு. நாங்கள் அருண பகவானுடைய மைந்தர்கள். நானும் என் தம்பியும் சூரியனைத் தரிசிக்கும் பொருட்டு வானில் பறந்தோம். என் தம்பி சூரிய வெப்பத்தைத் தாங்கமாட்டாமல் தவித்தான். நான் என் தம்பிக்கு நிழல் தந்தபோது என் சிறகுகள் எரிந்து விட்டன. நான் பெரிதும் வருந்தினேன். இராம தூதர்களாகிய வாநர பக்தர்கள் இராம நாமம் கூறினால் எரிந்த சிறகுகள் முளைக்கும் என்று அசரீரி வாக்கு உண்டாயிற்று. அன்று முதல் இன்று வரை உங்கள் வரவை எதிர்நோக்கி நின்றேன். நீங்கள் ராமநாமத்தை ஓதுங்கள், என் சிறகுகள் வளர்ந்து தழைக்கும்" என்றார்.

இதனைக் கேட்ட ராம பக்தர்கள் ஆகிய வாநர வீரர்கள் பக்தியுடன் "ராம, ராம, ராம, ராம" என்று ராமநாமத்தை ஓதினார்கள். அந்த மந்திர சக்தியால் சம்பாதிக்கு எரிந்த சிறகுகள் முளைத்தன. அவர் பறந்து மகிழ்ந்தார்.

இந்த அற்புத நிகழ்ச்சியைக் கண்ட வாநரர் அதிசயம் அடைந்தார்கள். இராம பக்தியில் திளைத்து உள்ளம் உருகினார்கள். ராம நாமத்தால் எரிந்த சிறகுகள் முளைத்தனவே. இராம நாமத்தின் மகிமை என்னே என்று கூறிப் புகழ்ந்தார்கள் மகிழ்ந்தார்கள்.

சம்பாதி, "வாநர வீரர்களே உங்களுக்கு வணக்கம். சீதா தேவியை இலங்கையில் இராவணன் சிறை வைத்திருக்கின்றான். கழுகுகட்கு நீண்ட பார்வையுண்டு. நான் இங்கிருந்தே சீதா தேவியைக் காண்கின்றேன். இலங்கை நூறு யோசனை தூரம் உளது. இத்தனைப் பேருமே போக இயலாது. யாராவது ஒருவர் சென்று கண்டு திரும்புங்கள். உங்கட்கு நன்றி. என் குலத்தினரைக் காண நான் போகிறேன்" என்று கூறிவிட்டு வானில் பறந்து சென்றார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 6:57 am

அசோக வனத்தில் மடக் கொடி


சம்பாதி வானிடை பறந்து சென்றபின், வாநர வீரர்களுக்கு இலங்கை மாநகரில் சீதாதேவி இருக்கின்றாள் என்பது புரிந்தது. அதனால், வறியவனுக்குப் புதையல் கிடைத்தது போல பெரு மகிழ்ச்சியடைந்தார்கள்.

இனி நாம் இலங்கைக்குப் போக வேண்டும். "நம்மில் போக வல்லார் யார்?" என்று வாநர வீரர்கள் சிந்தித்தார்கள். சிறந்த வாநர வீரர்கள், "நூறு யோசனை பரப்புள்ள கடலை எங்களால் கடப்பது இயலாது" என்று தங்கள் இயலாமையைக் கூறினார்கள்.

நீலன் என்ற சேனைத் தலைவன், நான் எழுபத்தைந்து யோசனை தூரம் தாண்டுவேன் என்ற யோசனை இல்லாமல் சொன்னான். பேராற்றல் படைத்த அங்கதன். நான் நூறு யோசனையும் தாண்டி விடுவேன். திரும்பி வர இயலாது என்றாள். ஜாம்பவந்தன இந்தச் சிறிய கடலை நான் வாய்க்காலைத் தாண்டுவதுபோல், எத்தனை முறை வேண்டுமானாலும் தாண்டுவேன். ஆனால், இப்பொழுது இயலாது. எனக்கு இளமைபோய் முதுமையடைந்திருக்கிறது. நாராயணர் திரிவிக்கரம அவதாரம் எடுத்து உலகை ஓரடியாக அளந்தபோது நான் வெற்றி முரசு அறைந்து உலகாத்தை வலம் வந்த போது, மேரு மலையின் காலிடறி வீழ்ந்து ஊனமுற்றேன். ஆதலால், இப்பொழுது என்னால் இயலாது என்று கூறினான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 6:59 am

அநுமன் ஆற்றல்


எல்லாரும் இவ்வாறு கூறியபோது அநுமார் ஒன்றும் பேசாமல் சும்மா இருந்தார். தங்கமணிக்கு ஓசை யிருக்காது, வெங்கலமணிக்கு ஓசையிருக்கும், பச்சோலைக்கு ஓசையிருக்காது. உலர்ந்த சருக சலசல என்று ஒலிக்கும். கையாலாகாதவர்கள் வாய்ச்சொல் வீரராக, கடலைக் குடிப்பேன், மலையை இடிப்பேன், வானில் பறப்பேன் என்ற வாய்ப்பறையறைவார்கள். ஆனால், கையால் ஒன்றும் ஆகாது, அதுபோல், எல்லாரும் பேச, அறிவும் ஆற்றலும் ஒருங்கே படைத்த ஆஞ்சயேர் மௌனமாக இருந்தார். அவருக்கு எவ்வளவு ஆற்றல் இருக்கிறது என்பது அவருக்கே தெரியாது.

ஜாம்பவான் அநுமாரை நோக்கி அடியில் வருமாறு கூறத் தொடங்கினான்.

"அநுமனே * உன்னை அஞ்சலிக்கிறேன். எல்லாருடைய தலையிலும் எழுதி விதிக்கின்ற பிரமதேவர் மாயினும் மாயாத மிகுந்த வாழ்நாளையுடைவரே * சிரஞ்சீவிகளில் ஒருவரே * நீர் கல்லாத கல்லையில்லை. தருமங்களை அதிநுட்பமாக நீர் அறிந்தவர். தங்களைக் கண்டு கூற்றுவனும் அஞ்சுவான். காலனை உதைத்த ஆலமுண்ட நீலகண்டனைப்போல் யாரையும் அடக்கும் பேராற்றல் படைத்தவர். உமக்கு ஐம்பூதங்களாலும் அழிவு கிடையாது. தெய்வப் படைக்கலன்களினால் உமக்கு மரணம் கிடையாது. உமக்கு நிகர் நீர்தான். அண்டத்துக்கு அப்பாலும் குதிக்க வல்லவர். சூமருமலைக்கும் மேம்பட்டு உயரமாக நிற்கும் தன்மையுடையவர். அதேசமயத்தில் மழைத் தூறலுக்கு நடுவே சென்று உடம்பு நனையாமல் செல்லக்கூடிய வல்லமையுடையவர். இந்த மண்ணுலகத்தை ஒரு கையால் எடுக்க வல்லவர். இங்கிருந்து சூரியனையும் தீண்டும் திறனுடையவர். நீதி நெறியில் நின்றவர். மனத்தாலும் மாதரைத் தீண்டாதவர். வேதங்கள் அனைத்தையும் ஓதியுணர்ந்தவர். ஊழியையுங் கடந்தவர். அடுத்துப் பிரமதேவனாக வரும் தகுதியுடையவர். தங்களால் ஆகாது யாதொன்றும் இல்லை. தங்களுடைய பேராற்றலுக்கு இந்தப் பெருங்கடல் வாய்க்கால் போன்றது. ஆகவே, தாங்கள் சென்று பிராட்டியைக் கண்டு மீண்டு வந்து இராமருடைய கவலையை மாற்றி வாநர குலத்திற்குப் பெருமையைத்தர வேண்டும்" என்றான்.

இவ்வாறு, ஜாம்பவான் கூறிய புகழுரையைக் கேட்டு ஆஞ்சநேயர் நாணத்தோடு நின்றார். அறிஞர்கள் தம்மைப் புகழ்வதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஒருவர் புகழ்ந்தாலும் நாணுவார்கள். வாநர வீரர்களை வணங்கி, வீரர்களே * இராமபிரானுடைய கருணையும் உங்கள் ஆசியும் எனக்கு இரு சிறகுகளாகத் துணை செய்யக் கடலைக் கடந்து கவலையையுங் கடந்து எம்பிராட்டியைக் கண்டு மீளுவேன் என்று கடலைக் கடப்பதற்கு ஆயத்தமாகிப் பேருருவுடன் நின்று காட்சியளித்தார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 7:00 am

சுந்தர காண்டம்


அநுமார் நின்ற காட்சி உலகத்தை ஓரடியாக அளக்க திருமால் எடுத்த விசுவரூபம்போல் இருந்தது. இரண்டு கால்களையும் ஊன்றி "இராமா" என்று வானத்திலே பாய்ந்தார். அந்த மகேந்திர மலையே நடுங்கிற்று. விண்ணவர்கள் மலர் மழை பெழிந்தார்கள். இரண்டு கரங்களை முன்னே நீட்டி இருந்தது. இராமலட்சுமணர்கள் அவருக்கு துணை வருவதுபோல் இருந்தது. பின்னே தொங்கிய வலிமை நிரம்பியவால் இமயனுடைய பாசக்கயிறு ஒளிந்து கொண்டு இலங்கைக்குப் போவதுபோல் இருந்தது. அநுமார் விண்வழியில் வேகமாகச் செல்லும்பொழுது மைந்நாகம் என்ற மலைமேலெழுந்து அவருக்கு உதவி செய்ய வந்தது.

மைந்நாக பர்வதம் இந்திரன் வச்சிரப் படையால் மலைகளின் சிறகுகளை அரிந்தபோது வாயு தேவனால் கடலில் தள்ளி உதவி பெற்றது. வாயுதேவன் செய்த உதவிக்காக வாயுதேவன் மகன் அநுமாருக்கு உதவி செய்ய வந்தது. அநுமார், நான் இராம கைங்கர்யமாகச் செல்லும்பொழுது வழியில் தங்குவது நன்றன்று. உன் அன்புக்கு நன்றி என்று கூறிவிட்டு விண்வழியே சென்றார்.

சுரசை என்ற தேவமாது தேவர்களின் வேண்டுகோளின்படி அநுமாருக்கு நலஞ்செய்யும் பொருட்டு விண்ணில் மிகப்பெரும் வாயைப் பிளந்து நின்றாள். அநுமார் பெண்பிள்ளைக்கு இவ்வளவு வாயா என்று பரிகசித்து, ஒரு கணத்துக்குள் சிறிய உருவுடன் அவள் வாயில் நுழைந்து வெளிப்பட்டார். அவர் அமிர்தமயம் ஆனவள், அதனால் அநுமாருக்கு அமிர்த சம்பந்தம் உண்டாயிற்று. பின்னர். வழியில் அங்காரத்தாரை என்று பேர் பெற்ற கொடிய அரக்கி எதிர்ப்பட்டாள். இவள் பிராணிகளின் நிழலைப்பற்றியே அந்தப் பிராணிகளை உண்ணும் ஆற்றல் படைத்திருந்ததால் சாயாக்கிரகிணி என்ற பேரும், சிம்மிகை என்ற பேரும் படைத்தவள். ஆலகால நஞ்சை விடக் கொடியவள். இவள் விண்ணுக்கும் மண்ணுக்கும் எல்லையாகப் பெருவாயைப்பிளந்து நின்று அநுமாரைத் தடுத்தாள். பேராற்றல் படைத்த அநுமார் அவள் வாயில் புகுந்து பேருருக்கொண்டு அவள் வாயையும் வயிற்றையும் கிழித்துக்கொண்டு வெளிப்பட்டார். சாயக்கிரகணி மாண்டொழிந்தாள்.

அநுமார் இராம நாமத்தை இடையறாது செபித்துக் கொண்டு சென்றார். எனக்கு வழியில் இடர் அனைத்தும் நீங்க உதவுவது இராமநாமம் ஒன்றே ஆகும். என்னால் ஆவது யாதொன்றுமில்லை. எல்லாம் இராமபிரானது கருணையே யாகும் என்றெண்ணி இலங்கையில் உள்ள பவள மலையில் இறங்கினார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 7:01 am


தேவியைத் தேடுதல்


அநுமார் இலங்கையின் எழிலைக் கண்டு வியந்தார். அங்குள்ள வீடுகள் அனைத்தும் நவரத்தினங்கள் இழைத்து உவகைக் கடலைத் தந்து ஓங்கி நின்றன.

அந்நகர் ஆடலும் பாடலும் ஊடலும் கூடலும் அன்றி வாடலும் வருந்தலுமின்றி இன்ப வெள்ளத்தில் மிதந்து நின்றது.

அநுமார் சிறிய உருவத்தை எடுத்துக் கொண்டார். எங்கும் இருள் சூழ்ந்தது. இலங்கையில் தேவர்கள் எழுதிய சித்திரம் பேல் சென்று காலங்கடந்து வருவதைக் குறித்து இராவணன் சீறுவானே என்றஞ்சி, மேல் ஆடை சரிய ஓடுகின்ற காட்சியை அநுமார் கண்டார். அப்பொழுது சந்திரன் உதித்தான்.

இலங்கையின் மதில்களின் உயரத்தையும் நுழைவாயிலின் திறத்தையும் அங்குக் காவல் செய்கின்றவர்களின் தரத்தையும் பார்த்து வியப்புற்றார். மதிலின் மீதேறித் தாவுவதற்கு முயன்றார். இலங்கையைக் காவல் செய்யும் நகர தேவதையாகிய இலங்கா தேவி அநுமாரை முன்னே செல்லவிடாமல் தடுத்தாள். நான்கு சிரங்களும் ஆயுதம் ஏந்திய எட்டுக் கரங்களும் உடைய அவள் "ஏ குரங்கே, என் அனுமதியின்றி உள்ளே நுழையக் கூடாது" என்று தடுத்தாள். "இந்த ஊரில் மூவரும் தேவரும் நுழைய அஞ்சுவார்கள். இலைகளையும், மலர்களையும் தின்கின்ற வாநரமாகிய நீ என் அனுமதியில்லாமல் போகலாமா?" என்று கூறினான்.

"அநுமார், காவற்காரியே * ஊர் பார்க்கும் ஆவலுடன் செல்லும் என்னை ஏன் தடுக்கின்றாய்? நான் சென்றால் உனக்கு என்ன இழவு நேரும்?" என்றார். இலங்கனி அநுமார் மேல் சூலத்தை எறிந்தாள். அநுமார் அந்தத் திரிசூலத்தைப் பிடித்து ஒடித்து அவள் முகத்தில் எறிந்தார். அவள் எறிந்த ஆயுதங்களையெல்லாம் ஒடித்துத் துகளாக்கினார். தன்னையடிக்க வந்த இலங்காதேவியின் எட்டுக் கைகளையும் பற்றி, அநுமார் ஓங்கியடித்தார். அவள் இடியேறுண்ட நாகம் போல் கீழே விழுந்தாள்.

அவள் எழுந்து அநுமாரைத் தொழுதாள். "ஐயனே, நான் இலங்கையின் காவல் தெய்வம். பிரம தேவருடைய கட்டளையினால் இந்நகரைக் காவல் செய்து கொண்டிருந்தேன். ஒரு குரங்கினால் நீ தாக்கப்படும் வரை இந்தக் காவல் தொழிலைச் செய்வாய்" என்று கூறியிருந்தார். ஆதலினால், என் காவல் தொழில் நிறைவு பெற்றது. நான் விண்ணுலகம் போகின்றேன்.

"உனது வீரத்தைக் காட்டி அசுர குலத்தை வாட்டி, உன் புகழை நீட்டிச் செல்லுக" என்று கூறிவிட்டு வானிடை சென்றாள்.

அநுமார் மதிலேறிக் குதித்து நகருக்குள் சென்றார். எங்கும் எம்பிராட்டியாரை தேடுவாரானார்.

ஓருவனுக்கு சுகம் முன் செய்த தவத்தினால்தான் எய்தும். தவம் செய்யாமல் சுகத்தை நாடுவது இரும்பை விதைத்துக் கரும்பை நாடுவது போலாகும். தவஞ்செய்தவர்கள் எல்லா நலன்களும் பெற்ற இனிது வாழ்வார்கள். இதில் யாருக்வாவது சந்தேகம் இருந்தால் இந்த இலங்கையிலே வந்து பாருங்கள். கதிர்போல் இருக்கின்ற கரிய அரக்கிமார்களை இடையே இல்லாத பொன்மேனியுடைய தேவ மாதர்கள் நீராட்டுகிறார்கள். இது அவர்கள் தவத்தால் விளைகின்றது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக