ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 ayyasamy ram

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 T.N.Balasubramanian

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
 SK

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 SK

மற்ற ஹீரோக்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன வேறுபாடு: ரீல் தந்தை தகவல்
 SK

கச்சிதமான உடையைத் தேர்வு செய்ய
 SK

நான் செய்யாததை என் மகள் செய்துவிட்டாள்: மீனா நெகிழ்ச்சி!!
 SK

ஆனந்த விகடன் & ரிப்போர்ட்டர்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

என்னுள் மையம் கொண்ட புயல்! - 4 - தயாராகுங்கள்... நவம்பர் 7 மொத்தமும் சொல்கிறேன்!

View previous topic View next topic Go down

என்னுள் மையம் கொண்ட புயல்! - 4 - தயாராகுங்கள்... நவம்பர் 7 மொத்தமும் சொல்கிறேன்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 12, 2017 7:59 pm

அமெரிக்க ஃபார்மா கம்பெனிகளின் கைக்கூலியைப்போல் என்னைச் சித்திரிப்பது அரசியல் பித்துக்குளித்தனம். காழ்ப்போ பொறாமையோ, காசு வாங்கிவிட்ட விசுவாசமோ எனக்கில்லை. மானுடச் சேவை எனப் போற்றப்படும் கல்வி, மருத்துவம், அரசியல் இவையனைத்தையும் கண்மண் தெரியாது வியாபாரமாக மாற்றிவிட்ட கயவர்கள்பால் மாளாக் கோபமுண்டு எனக்கு.

அலோபதிபால் அசைக்க முடியாத நம்பிக்கையோ, மற்ற ஆசிய மருத்துவ முறைகள்பால் வெறுப்போ உள்ளவன் அல்ல நான். 21 வயதுமுதல் 12 வருடங்களாக அல்சர் எனப்படும் குடல் புண்ணால் அவதிப்பட்டவன் நான். அலோபதி மருந்துகளை நம்பி 12 வருடங்கள் காத்திருந்தேன். மருந்துகளின் பெயர்களும் வீரியமும் மாறி மாறி வந்தவண்ணமிருந்தன. வலி போனபாடில்லை. இது நோயல்ல, பிணி. வாழ்நாள் முழுக்கவும் அனுபவிக்க வேண்டியதுதான் என்றது அலோபதி விதி. அறுவை சிகிச்சைக்குத் தயாராக இருக்கும்படி அறிவுரைகள் தந்தனர். நானும் தயாரானேன். வலி என்னைத் தயார்ப்படுத்திவிட்டது என்பதே உண்மை.
நன்றி
விகடன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4801
மதிப்பீடுகள் : 1353

View user profile

Back to top Go down

Re: என்னுள் மையம் கொண்ட புயல்! - 4 - தயாராகுங்கள்... நவம்பர் 7 மொத்தமும் சொல்கிறேன்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 12, 2017 7:59 pm

அதற்கும் ஒரு வருடம் முன்பாக கேரளம் சென்றபோது என் நண்பர் ஒருவரின் கேரள நாட்டு வைத்தியர் எனக்கு வாழைக்காய்ப் பொடி தந்தார். நிவாரணம் தேடி அலைந்த எனக்கு ஒரு Placebo Effect-ல் வலி குறைந்ததுபோல் ஒரு மனமாயை. உடல் பருமன் கூடியதே அன்றி வலி மீண்டும் குடலைக் கலக்கியது. திருநெல்வேலிக்கு ஒரு கார் ஷோரூம் திறப்பு விழாவிற்கு வலியோடு சென்று திரும்பிய என்னுடன், ஒரு டாக்டர் அம்மையார் பிரயாணம் செய்தார். நான் பல மாத்திரைகள் விழுங்குவதைப் பார்த்த அவர், நலம் விசாரித்தார். விரைவில் அறுவை சிகிச்சைக்குத் தயார் ஆகிக்கொண்டிருப்பதைச் சொன்னேன். தயவுசெய்து அறுவைசிகிச்சை வேண்டாம் என்றதோடு நிறுத்தாமல், என்னை அடுத்த நாள் பரிசோதித்தார்.

தான் அலோபதி படித்திருந்தாலும் தற்போது ஆயுர்வேத ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபட்டிருப்பதையும் சொன்னார். அறுவை சிகிச்சை, அலோபதி மாத்திரைகளுக்கு மாற்றாக ஒரு பத்தியமும் சொன்னார். மாட்டுப்பால் சார்ந்த பண்டங்களை உண்பதை அறவே தவிர்க்கச் சொன்னார். ஒரு வாரம் பூசணிக்காய்ச் சாறு குடிக்கச் சொன்னார். அவர் அறிவுரைப்படி செய்தேன், பக்க விளைவுகள் ஏதும் இருக்காது என்ற நம்பிக்கை இருந்ததனால். ஒரே வாரத்தில் அறுவை சிகிச்சையைத் தள்ளிப் போடும் தைரியம் வந்தது. ஒரே மாதத்தில் வலி மறந்தே போனது. இது நடந்து 29 வருடங்கள் ஆகின்றன. இன்றுவரை அல்சர் திரும்பவில்லை.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4801
மதிப்பீடுகள் : 1353

View user profile

Back to top Go down

Re: என்னுள் மையம் கொண்ட புயல்! - 4 - தயாராகுங்கள்... நவம்பர் 7 மொத்தமும் சொல்கிறேன்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 12, 2017 8:00 pm

இப்போதுவரை நான் பாலை உணவில் சேர்ப்பதில்லை. எப்போதாவது மோர், அதுவும் சமீபமாகச் சேர்த்துக்கொள்கிறேன். இதனால் பால் வியாபாரிகள் என்பால் கோபப்படத் தேவையில்லை. என் அனுபவத்தின்மூலம் நான் சொல்ல வருவது எல்லோரும் பாலைத் தவிர்க்க வேண்டும் என்பதல்ல. சிலருக்கு, பால் உடலுக்கு ஒவ்வாத விஷயமாகிறது என்பதே. இதை lactose intolerance என்று அலோபதி சொல்கிறது. உணவே மருந்தாக வேண்டும் என்ற கூற்றை நம்புபவன்தான் நான். ஆனால், அதைப் பிரித்தறியும் பகுத்தறியும் வைத்தியரும் வேண்டும் என்று வலியுறுத்துபவன்.

சரியான ஆதாரங்கள் இல்லாமல் திடீர் வைத்தியர்களாகுபவர்கள் அபாயமானவர்கள். அவர்கள் அலோபதிக்கு வக்காலத்து வாங்கினாலும் சரி, வேறு வைத்திய முறைகளுக்கு வக்காலத்து வாங்கினாலும் சரி, மருந்து விநியோகம் வரைமுறையின்றித் தனிமனிதர்கள் தண்ணீர்ப் பந்தல் போல் வைத்து அளவின்றி விநியோகம் செய்வது ஏற்புடையதல்ல. அதனாலேயே நிலவேம்புக் கஷாய விநியோகத்தை வைத்தியர் துணையின்றி நாமே விநியோகம் செய்ய வேண்டாம் என்று என் நற்பணி இயக்கத்தாரிடம் வேண்டிக்கொண்டேன்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4801
மதிப்பீடுகள் : 1353

View user profile

Back to top Go down

Re: என்னுள் மையம் கொண்ட புயல்! - 4 - தயாராகுங்கள்... நவம்பர் 7 மொத்தமும் சொல்கிறேன்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 12, 2017 8:01 pm

அலோபதி ஃபார்மாக்கள் உலக அளவில் செய்யும் பல ஊழல்கள் இன்று வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுவிட்டன. எந்த நோயையும் பூரணமாய் குணப்படுத்திவிடும் மருந்துகளில் மேற்கத்திய ஃபார்மாக்கள் ஆர்வம் காட்டாததன் காரணம் எல்லையற்ற பேராசைதான். மேற்கத்திய ஆராய்ச்சி மையங்கள் சில வெளியிடும் எல்லாத்தகவல்களையும் நம்பிவிட முடியாது. காரணம், அந்த ஆராய்ச்சிமையங்களுக்குப் பல ஃபார்மா கம்பெனிகளே பண உதவிகள் செய்கின்றன என்பதுதான்.இதனால், பச்சைப் பொய் சொல்லாவிடினும், இந்த ஆராய்ச்சி மையங்கள் சொல்லாமல் விட்டுவிடும் உண்மைகள் பொய்களைவிட அபாயம் விளைவிக்கும். எத்தகைய மருத்துவமாயினும் மக்கள் விழிப்புடன் கேள்விகேட்டு, தேவையென்றால் மட்டுமே மருந்துகளை உட்கொண்டால் போதும்.

காய்ச்சல் வராதிருக்க முன்னேற்பாடாக, தேவையற்ற மருந்துகளை உண்பதை தயவாய்த் தவிர்க்கவும். நீரிழிவு நோய் (Diabetes) இல்லாதவர்கள் எதற்கு இன்சுலின் போட்டுக்கொள்ள வேண்டும்? சில மருந்துகள் வரும்முன் காக்காது. இதுவே என் கருத்து.

சரி, மூன்று வாரமாக 30, 40 வருட முனகல்களை முனகியாகிவிட்டது. குறைகளையும் கொள்ளைகளையும் பட்டியலிட்டுப் பிரயோஜனமில்லை. ஆவன செய்வோம் என்ற அதிகாரிகளின் குரல் நம்மை சாந்தப்படுத்தாது. `ஆவன ஆகும்போது ஆகும்’ என்று காத்திருந்தது போதும். ஆகவேண்டியதையெல்லாம் அவசர சிகிச்சையாகச் செய்யவேண்டிய தருணம் வந்துவிட்டது. ஆயுதப் புரட்சி ஒரு புராதன வழி. ஆள்சேதமும் அதிகமாகக்கூடும். அதைவிட நவீன முயற்சிகள்மூலம் சமுதாய சாதனைகள் செய்து காட்டப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாகிவிட்டது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4801
மதிப்பீடுகள் : 1353

View user profile

Back to top Go down

Re: என்னுள் மையம் கொண்ட புயல்! - 4 - தயாராகுங்கள்... நவம்பர் 7 மொத்தமும் சொல்கிறேன்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 12, 2017 8:02 pm

பழைய பெரியவர்களை அப்படியே நகலெடுக்காமல் அவர்களின் கருத்துகளை வடிகட்டி இன்றைய உலகுக்கு ஏற்றபடி வடிவமைத்துக்கொள்ள சிற்பிகள் தயாராகிவிட்டனர். அவர்கள் 18 வயது முதல் 35 வயதுக்குள்ளானவர்கள். அவர்கள்பால் எனக்குப் பெருநம்பிக்கை உண்டு. என் வாழ்க்கையில் பெருமையாக நான் நினைத்துக்கொள்ளும் சிந்தனைகள், லட்சியங்கள் எல்லாம் இந்த வயது வரம்புக்குள் எனக்கு ஏற்பட்டவைதாம். அனுபவமும் வயதும் கூடக் கூட அச்சிந்தனைகளை, லட்சியங்களை மற்றவருக்கும் புரியும்படி வார்த்தைப்படுத்தும் பக்குவம் அல்லது நயம் வந்திருக்கலாம்.

ஆகவே, இளைஞர் படை ஒன்று காத்திருப்பதை என்னால் உணரமுடிகிறது. அவர்களை ஒருங்கிணைக்க வேண்டிய கடமையும் தேவையும் எனக்கு வந்துவிட்டது. வரும் நவம்பர் 7-ம் தேதி அவர்களுடன் தொடர்புகொள்ளத் தடையில்லாமல் உரையாடும் வழி ஒன்றை ஏற்படுத்தி அறிவிக்கவுள்ளேன். அவர்களுடன் அளவளாவுவதற்கல்ல; பாசறைகள், பயிற்சி முகாம்கள் ஏற்படுத்தி ஆகவேண்டிய காரியங்களுக்கான செயல்திட்டம் தீட்ட. திறமையாளர்கள், படிப்பாளிகள், உழைப்பாளிகள் அனைவரையும் சாதிவரையறைகள் தாண்டி ஒன்றுகூட வைக்கும் சங்கநாதம் தனியே தேவையில்லை. அது ஏற்கெனவே நம் மனங்களில் ரீங்கரிக்கத் துவங்கி நாள்கள் பல ஓடிவிட்டன.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4801
மதிப்பீடுகள் : 1353

View user profile

Back to top Go down

Re: என்னுள் மையம் கொண்ட புயல்! - 4 - தயாராகுங்கள்... நவம்பர் 7 மொத்தமும் சொல்கிறேன்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 12, 2017 8:03 pm

இனியும் தாமதியாது கூடுவோம். பட்டிமன்றம் போட்டுப் பேச அல்ல; செயல் திட்டங்கள் தீட்ட. திட்டங்களுடன் நான் கூட்ட நினைப்பது வெறும் தொண்டர் கூட்டத்தை மட்டுமல்ல; தலைவர்களின் பெருங்குழுவை. இதை ஒரு தியாகமாக நினைத்து முன்வருபவர்கள் இப்போதே தயவுசெய்து ஒதுங்கிக் கொள்ளுங்கள். தியாகமாக நினைத்து வருபவர்கள் எதையோ இதற்காக இழப்பது போன்ற உணர்வுடன் வந்து எம்மைத் தேவையில்லாமல் கடன்படச் செய்வார்கள். தமிழகத்திற்குச் செய்ய வேண்டிய கடமையாக நினைத்து வருபவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். செய்வார்கள் எனக் காத்திருந்தது போதும். நம்மால் முடியும், என்னால் முடியும். என்னால் முடியும் என்றால் உன்னாலும் முடியும்.

நமது இயக்கத்துடன் சேர்ந்து பணி செய்யப் பல இயக்கங்கள் தயாராக உள்ளன. அவர்களுடன் பேசியதில் வந்த புரிதலும் அடக்கமும், நாம் அவர்களுடன் சேர்ந்து பணி செய்து தமிழகத்திற்கு பலம் சேர்க்கவேண்டும் என்பதே. உதாரணமாக, இரண்டு வருடங்களாக இயங்கிவரும் அறப்போர் இயக்கம் பல கோணங்களில் ஊழலை நேர்கொண்டு தாக்கும், நீக்கும் இயக்கம். இதற்குப் பின்னால் வெறும் வீரம் மட்டுமல்ல... அயராத துப்பறிவும் புலனாய்வும் தீராத்தேடலும் இருக்கின்றன.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4801
மதிப்பீடுகள் : 1353

View user profile

Back to top Go down

Re: என்னுள் மையம் கொண்ட புயல்! - 4 - தயாராகுங்கள்... நவம்பர் 7 மொத்தமும் சொல்கிறேன்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 12, 2017 8:03 pm

உதாரணத்திற்கு... சென்னை, எழும்பூர்க் கண் மருத்துவமனையின் இயக்குநர் கையும் களவுமாய்ப் பிடிபட்ட தொலைபேசி உரையாடலின் தொகுப்பு. ஒலிப்பதிவு செய்த அறப்போர் இயக்கத்திற்கு நன்றி.

நாம் தொடர்பில் இருக்கவும், நம் இயக்கத்தார் மக்களுடனும் என்னுடனும் தொடர்புகொள்ள வசதியாக இருக்கவும் சில ஏற்பாடுகள் நடக்கின்றன. அதைப் பற்றிய அறிவிப்பு, வரும் நவம்பர் 7-ம் தேதி வெளியாகும்.

`இந்த வாரம் எழுத அதிகமில்லையா... என்ன இப்படிச் சுருக்கிவிட்டீர்கள்?’ எனக் கேட்கலாம். அதற்கான பதில் கேள்விகளாய் வரும். நானே பேசிக்கொண்டிருப்பதைவிட, கேள்விகளுக்குப் பதில் சொல்ல யத்தனிப்பது ஒரு விதத்தில் கொள்கை விளக்கமாக மாற வாய்ப்புண்டு. ஒத்த சிந்தையுள்ள பல நண்பர்களும், மாற்றுச் சிந்தைகளைக் கொண்ட சில தோழர்களும் கேள்வி மாலையைத் தொடுக்கத் துவங்குவார்கள். அவர்களின் கேள்விகளுக்கு இணையாகவோ அல்லது அத்தரத்தையும் விஞ்சியோ கேள்விகள் கேட்க நீங்களும் முற்படலாம். அடுத்த வாரத்திற்கு அடுத்த வாரம் முதல் நீங்களும் நானும் உரையாட, என் புயல் நம் புயலாகும். வாருங்கள், நியாயத்தூள் கிளப்புவோம்!

- உங்கள் கரையை நோக்கி!
நன்றி
விகடன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4801
மதிப்பீடுகள் : 1353

View user profile

Back to top Go down

Re: என்னுள் மையம் கொண்ட புயல்! - 4 - தயாராகுங்கள்... நவம்பர் 7 மொத்தமும் சொல்கிறேன்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum