புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_c10 
3 Posts - 6%
Baarushree
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 4%
prajai
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 4%
சிவா
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_c10 
1 Post - 2%
viyasan
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_c10 
1 Post - 2%
Rutu
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 15%
Rutu
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ் திரைப்படங்கள்


   
   

Page 5 of 17 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 17  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 03, 2017 5:13 pm

First topic message reminder :

தமிழ்  சினிமாவை  பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள்  இருக்கு. அனுப்பலாமா?

நன்றி Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Dec 28, 2017 1:01 pm

அசோக் குமார் கதை நன்றாக இருக்கிறது



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 28, 2017 2:36 pm

28 .12 .2017 

அசோக்குமார் கதை ............... நல்லா இருக்கா? 

அப்போ, அப்போ, மத்ததெல்லாம் இன்னும் படிக்கலியா............. படிக்கலியா?

சொல்லுங்க SK, சொல்லுங்க. 

Heezulia 

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Dec 28, 2017 5:32 pm

இப்போது தான் படித்தேன்

தாசி அபரஞ்சி 1944

இது நாளை தான்

மீண்டும் சந்திப்போம்



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Dec 28, 2017 5:39 pm

தாசி அபரஞ்சி 1944

இதையும் படித்துவிட்டேன் பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 3838410834 பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 3838410834



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 28, 2017 7:07 pm

28 .12 .2017 


படிங்க படிங்க. விடா.................ம படிங்க. 

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 1571444738யோ............ பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 1571444738

Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 28, 2017 8:55 pm

28 .12 .2017 

பழைய தமிழ் படங்கள் 

8  ராதா கல்யாணம் 1935

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 ?ui=2&ik=25ecfa0c99&view=fimg&th=15ebdf961e06fd2a&attid=0

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 ?ui=2&ik=25ecfa0c99&view=fimg&th=15ebdf961e06fd2a&attid=0


S ராஜம் [சுந்தரம் ராஜம்] – கிருஷ்ணன்
MR சந்தானலட்சுமி – ராதா & விரஜை  
KS தேவுடு அய்யர் – நாரதர்
CM துரை – விஷ்ணு
ஸ்ரீஜானகி, B சாரதா, மாஸ்டர் TV கிருஷ்ணமூர்த்தி, H எக்னேஸ்வர பாகவதர், காமெடியன் KS சங்கர அய்யர், M லட்சுமணன், S ராஜாமணி, K சாந்தாதேவி, R ராஜம், சௌந்தரவல்லி, K லட்சுமி, மீனாம்பாள்

இசை : ஹரிகேசனல்லூர் எல்.முத்தையா பாகவதர், 
உதவி : நாராயண அய்யர்
இயக்குனர் : CK சச்சி 

இந்தப் படத்தின் ஹீரோ சுந்தரம் ராஜம். நாலே நாலு தமிழ் படத்தில தான் நடிச்சிருந்தாராம். புராண கதையில் கிருஷ்ணனைவிட ராதா மூத்தவராமே. அதனாலதான் இந்தப் படத்திலும், கிருஷ்ணனாக நடிச்ச ராஜத்தைவிட மூத்தவரான MR சந்தானலட்சுமி ராதாவாக நடிச்சாராம்.

நாரதராக நடிச்ச தேவுடு அய்யர் சிறந்த நாடக நடிகரும், சிறந்த பாடகருமாம். டைரக்டர் சச்சி  அப்போ இருந்த முக்கிய புள்ளிகளில் ஒருத்தராம். எழுத்தாளர் RK நாராயணனின் உறவினராம். RK நாராயணன் எல்லிஸ் ஆர் டங்கன் சரித்திர படம் சதிலீலாவதி எடுக்கும்போது, அவருக்கு உதவியாளரா இருந்தாராம்.

வசனம், பாடல்கள் எழுதியவர்களைப் பத்தி விவரம் கிடைக்கலியாம். ஆனால் பாபநாசம் சிவம் பாடல்கள் எழுதியிருக்கலாம்னு பேச்சு அடிபட்டுச்சாம். சென்னை கீழ்பாக்கத்திலுள்ள நேஷனல் மூவிடோன்ஸ் ஸ்டூடியோவில், மீனாட்சி ஃபிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாம். இந்த இடத்தில் இப்போ ஒரு பள்ளிக்கூடம் இருக்குதாம்.

ராதா கல்யாணம் படம் சுமாராத்தான் ஓடுச்சாம். புராணக் கதையை படமா எடுத்ததுக்காகவும், ராஜம் & சந்தானலட்சுமி நடிப்புக்காகவும் ஓடுச்சாம்.

பாபநாசம் சிவன் வாழ்வதற்காக சென்னை மைலாப்பூருக்கு போனாராம். அங்க பேர் பெற்ற ஒரு வக்கீல் இருந்தாராம், V சுந்தரம் அய்யர். அவர்தான் பாபநாசம் சிவனை ஆதரிச்சாரம். தன் வீட்டிலேயே தங்க வச்சு, சாப்பாடும் போட்டாராம். இதற்கு பிரதிபலனாக, பாபநாசம் சிவன் சுந்தரத்தின் teenage மகன் சுந்தரம் ராஜத்துக்கும், இவருடை சகோதரி ஜெயலட்சுமிக்கும் கர்னாடக சங்கீதம் சொல்லிக் கொடுத்தாராம். இவங்களுக்கு சங்கீதம் சொல்லிக் கொடுக்கும்போது, ஒரு ஏழு வயசுப் பையன் கேட்டுட்டே இருந்தானாம். கேள்வி ஞானத்திலேயே அந்தப் பையன் ம்யூசிக்ல மட்டுமில்ல, திரைப்படத்துறை இன்னும் பலவற்றிலும் சிறந்தவரானாராம். அந்தப் பையன் யார்னு நெனக்கிறீங்க. அவர்தான் ............................

வீணை பாலசந்தர். ஆமாங்க, சுந்தரம் ராஜத்தின் தம்பிதான் இவரு.

1933ல ‘சீதா கல்யாணம்’ னு ஒரு படம் வந்துச்சாம். அப்போ ராஜத்துக்கு 16 வயசாம். அவர் இந்தப் படத்தில ராமரா நடிச்சாராம். அப்புறமாதான் ராதா கல்யாணம் படத்துல ராஜம் நடிச்சாராம். ஹீரோயின் MR சந்தானலட்சுமி ராதா, விரஜைனு ரெண்டு வேஷத்தில நடிச்சாராமே, ராதா தெரியும். இந்த விரஜை யாரு? தெரிஞ்சவங்க சொல்லுங்க. பேர் புதுசா இருக்கே, கேள்விப்படாத பேரா இருக்கே, எனக்கு.

அமெரிக்க- இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் எல்லிஸ் ஆர். டங்கன், 1937 ல அம்பிகாபதின்னு ஒரு படத்தை டைரக்ட் செஞ்சாராம். அதுல ஹீரோவா நடிச்ச தென்னிந்தியாவில் அப்போதைய சூப்பர்ஸ்டார் தியாகராஜ பாகவதருக்கு ஜோடியாக இந்த சந்தானலட்சுமிதான் நடிச்சாராம். இவர் ஹீரோயினா அப்ப ரொம்ப பிஸியாம். வயசானப்புறம் பெரியவங்க ரோல்ல நடிச்சாராம். அப்படித்தான் ஆரியமாலா படத்துல பார்வதியா நடிச்சாராம்.

சச்சி, ஒரு வக்கீலா [அந்த வால்போஸ்ட்ல பாருங்க, சச்சி, B.A.,B.L.னு போட்டிருக்கு] இருந்துட்டே இங்கிலாந்துக்கு போயி, திரைப்படத்தை டைரக்ட் செய்றத பத்தி அரைகுறையா படிச்சுட்டு வந்தாராம். இந்த அரைகுறை அறிவையும், அதிகமான ஆர்வக்கோளாறாலும் படங்களை டைரக்ட் செஞ்சுட்டு இருந்தாராம். 

எழுதினது எப்படி இருக்குன்னு சொல்லுங்க. 

Heezullia 

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Dec 29, 2017 5:53 pm

ராதா கல்யாணம் 1935

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 3838410834
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jan 01, 2018 5:47 pm

01 .01 .2018

8. நவீன சதாரம் 1935

நடிச்சவங்க : 

SD சுப்புலட்சுமி - ஹீரோயின் சதாரம் 
இந்துபாலா - அம்மா 
பார்வதிபாய் - இளவரசி  
வித்வான் சங்கரலிங்கம் - இளவரசன் 
G பட்டு அய்யர் - திருடன்
 
MD ராஜம், SS மணி பாகவதர், குஞ்சிதபாதம் 

இயக்குனர் & தயாரிப்பாளர் : K சுப்பிரமணியன்  
இசை & பாடல்கள் : பாபநாசம் சிவன் 

மராத்தியில் 'மித்ரா' ன்னு ஒரு நாடகம் நடந்துச்சாம்.  இந்த நாடகத்தை தழுவி குப்பி வீரண்ணா என்பவர் 'சதாரமே' ன்னு கன்னடத்தில் ஒரு மேடை நாடகம் நடத்தினாராம்.. இவர் மேடை நாடகத்திலும், திரைப்படங்களிலும் பேர் பெற்றவராம். 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இந்த  'சதாரமே' நாடகம் பல வருஷங்களாக புகழ் பெற்று விளங்கியதாம். 

இந்த நாடகம் ஒரு பெண்ணைப் பற்றிய கதையாம். அந்தப் பெண் பல சாதனைகளை செஞ்சு வெற்றி  பெறுகிறாள். அவளை ஒரு ராசாமவன் லவ்வுறான். இந்த நாடகத்தில் 'பக்கா கள்ளா' ன்னு ஒரு திருடன் பாத்திரம். இந்த பாத்திரத்தில் அந்த வீரண்ணாவே நடிச்சாராம்.  

சதாரமே நாடகம் 1935 வருடத்தில் கன்னட திரைப்படம் 
ஆச்சாம். இந்தப் படத்தில் அஸ்வத்தாமா என்பவர் ஹீரோவா முதல் முதலா நடிக்க ஆரம்பிச்சாராம். இவர் அந்த சமயத்தில சூப்பர் சிங்கராம். நாடகத்தில் நடிச்ச அதே பக்கா கள்ளன் வேஷத்தில் வீரண்ணா நடிச்சிருந்தாராம். அப்போ புகழ்பெற்ற இயக்குனர் ராஜா சந்திரசேகர் டைரக்ட் செஞ்சாராம். படம் ஹிட். 

சும்மா இருக்க முடியாம இந்த வீரண்ணா, 1956ல இந்தப் படத்தை மறுபடியும் எடுத்தாராம். இந்த படத்தில சௌகார் ஜானகியும், கல்யாண்குமாரும் நடிச்சாங்களாம். 1935ல திருடனா நடிச்ச வீரண்ணா, இந்த 1956 படத்திலேயும், வயசாயிருந்தாலும், அதே திருடன் ரோல்லியே நடிச்சாராம். 

அப்பாடா, நவீ ....................... ன சதாரம். இதை K சுப்பிரமணியம் இயக்கி  தயாரிச்சாராம். தன் மனைவி SD சுப்புலட்சுமியையே ஹீரோயினா நடிக்க வச்சாராம். அப்போல்லாம் பல தயாரிப்பாளர்கள் பல கதைகளை திரைப்படமா எடுத்தாங்களாம். அதனால வித்தியாசம் தெரிறதுக்குத்தான் 'நவீன' ன்னு சேத்துகிட்டாங்களாம். 2013 ல ஒரு 'நவீன சரஸ்வதி சபதம்' னு வந்துச்சே அது மாதிரி போல. 

சதாரமா நடிச்ச சுப்புலட்சுமி ஒரு திருடன்ட்ட இருந்து தப்பிக்கிறதுக்காக ஆண் வேஷத்துல நடிச்சாராம். இவர் வேஷம் போட்டிருக்கிறது தெரியாம, அவர் ஆம்பளன்னு நெனச்சு, ஒரு இளவரசி அவரை லவ்வுறாராம். சதாரம் என்னான்னா ஒரு இளவரசனை லவ்வுறார். வித்தியாசமான ஒரு முக்கோண காதல். கதை எப்படி முடியுதுன்னா, இந்த ரெண்டு பேரையுமே இளவரசன் கண்ணாலம் செஞ்சுகிறான். அப்போ அநேகமா ராஜா ராணி கதைதான் எடுத்தாங்களோ? 

அந்த கால கட்டத்தில் தியேட்டர்களில் ஒரு பாரம்பரியம் இருந்துச்சாம். திரைப்படத்தின் ஆரம்பத்தில பொதுவா  ஒரு இறைவழிபாடு பாட்டு இருக்குமாம். நவீன சதாரம்  படத்தில் பாபநாசம் சிவனும் அவருடைய மருமகன் SS மணி என்பவரும்  சேர்ந்து அப்படி ஒரு பாட்டு பாடினாங்களாம். இந்தப் பாட்டை ரெக்கார்டில் பதிவு செய்யலியாம். அதனால 1938ல K சுப்பிரமணியன் இயக்கிய 'ஸேவாஸதனம்' என்கிற படத்தில அந்தப் பாட்டை MS சுப்புலெட்சுமியை பாட வச்சாராம். MSS க்கு இது முதல் படமாம். 

SDS அப்போ கவர்ச்சியான சிறந்த நடிகையாம். இவர் இந்தப் படத்தில ஆணாகவும், பெண்ணாகவும் சூப்பரா நடிச்சிருந்தாராம். இந்துபாலா ரெக்கார்டில் பாட்டு பாடுபவராம். இவர் இந்தப் படத்தில அம்மாவா நடிச்சு ரெண்டு பாட்டு பாடியிருக்காராம். அதுல ஒரு பாட்டு தமிழ் பாட்டாம். அப்போ உள்ள வழக்கப்படி, 28 பாட்டுகள்ல அநேக பாட்டு ஹிந்தி ட்யூனை கொண்டது. ஆனா பாபநாசம் சிவனும், மணியும் முதல்ல பாடிய அந்த இறைவழிபாடு  பாட்டைத் தவிர வேற ஒரு பாட்டும் எடுபடாலியாம். 

ஆக மொத்தத்தில், சுப்புலட்சுமியின் ரெட்டை வேஷ நடிப்பும், சுப்பிரமணியத்தின் சிறந்த டைரக் ஷனும், இறைவழிபாடு பாட்டும் மக்கள் மனசுல நின்னுச்சாம்

Heezullia 

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jan 01, 2018 6:06 pm

01 .01 .2018


9. சுபத்ரா பரிணயம் 1935
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 5 ?ui=2&ik=25ecfa0c99&view=fimg&th=15ed476f6b7972cf&attid=0


SV சுப்பையா பாகவதர் – அர்ஜுனன்
TS வேலம்மாள் – சுபத்திரா
பஃப்ஃபூன் சண்முகம் – காமெடியன்
TK ருக்மிணி அம்மாள், காரைக்குடி கணேஷ அய்யர், காசி விஸ்வநாத், ராமசாமி பிள்ளை
 
தயாரிப்பு : சாமிகண்ணு வின்சென்ட்  
டைரக்டர் : Profulla Ghosh
 
சாமிக்கண்ணு வின்சென்ட்னு ஒருத்தராம். இவர் டைரக்டரான்னு கேட்டா இல்ல. ரெயில்வே துறைல கிளார்க்கா வேலை செஞ்சுட்டு இருந்தாராம். அப்புறமா
தென்னிந்திய தமிழ் சினிமாவின் முன்னோடி ஆகிட்டாராம். 

1935ல 28 தமிழ் படங்கள் தயாரிக்கப்பட்டுச்சாம். இந்தப் படங்களில  வெற்றிகரமா ஓடினதுல சுபத்திரா பரிணயமும் ஒண்ணாம். கல்கத்தாவில் உள்ள பயோனியர் ஃபிலிம் கம்பெனியின் சொந்த ஸ்டூடியோ இருந்துச்சாம். அங்கதான் சாமிக்கண்ணு இந்தப் படத்தை தயாரிச்சாராம்.
 
தெரிஞ்ச புராண கதைதான். கிருஷ்ணன், தங்கை சுபத்ரா, அர்ஜுனன், சுபத்ராவும் அர்ஜுனனும் பல தடைகளை தாண்டி எப்படி கண்ணாலம் கட்டிகினாங்கங்ற கதைதான். இந்த கதை ஹரிகதா என்கிற பேர்ல  மேடை நாடகங்களாவும், திரைப்படங்களாவும்  பல மொழிகளில் நடத்தப்பட்டுச்சாம். 1930களின்  ஆரம்பத்துல ஹிந்தியில சுபத்ரா ஹரண் என்ற திரைப்படம் ஓஹோன்னு ஓடுச்சாம்.
 
இந்தப் படத்தின் டைரக்டர் வங்காள நாட்டை சேர்ந்தவராம். இருந்தாலும் எடுத்த தமிழ் படங்கள் ஓரளவுக்கு வெற்றியும் அடைந்துச்சாம். சுப்பையா பாகவதர், நாடகங்களிலே கிருஷ்ணா நடிச்சு புகழ் பெற்றாராம். இவர் கிருஷ்ணனா நடிக்கிறபோ, சில்க்கில் டிரஸ் உடுத்தி, கிருஷ்ணனா நடிக்கிறதுக்கான அடையாளமாக அவர் wig கில் மயிலிறகு ஒன்றை வச்சிருப்பாராம். மேடையில் இவர் பாடுவாராம், ஆடுவாராம். இது ஜனங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். பயங்கரமா எல்லாரும் கை தட்டி, விசில் அடிச்சாங்களாம்.
 
சுபத்திராவா நடிச்ச வேலம்மாள் அப்போ புகழ் பெற்ற நடிகையாம். சுப்பையா பாகவதர் முறையா சங்கீதம் கத்துகிட்டவராம். நல்ல குரல் வளமாம் அவருக்கு.  சினிமாவில நடிக்கும்போது நாடகத்தில நடிக்கிறமாதிரியே சைகைகள் செஞ்சும், பாடியும் நடிச்சாராம். இது, படம் பாக்கிறவங்களுக்கு பிடிக்குமாம். ஜெய ஜெய கோகுல பாலா”ன்னு பாடிகிட்டே இவர் இந்தப் படத்திலே வருவாராம். தனித்தும், டூயட்டாவும் 19 பாட்டை இந்தப் படத்தில பாடியிருந்தாராம். இவர் பாடிய இன்னொரு பாட்டு வள்ளலார் பாட்டாம். “வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம்.”  
 
அப்போ உள்ள படங்களை மாதிரி, இந்தப் படத்தின் இசையமைப்பாளரை பத்தியும் பாட்டுக்களைப் பத்தின விவரம் எதுவும் தெரியலயாம். 42 பாட்டு இருந்துச்சுன்னு மட்டும் தெரிஞ்ச விஷயமாம். இந்தப் படம் அப்போ நல்லா ஓடினதா விமர்சனம் சொல்லுச்சாம்.
 
கொஞ்ச நாளைக்கப்புறம் இந்த கதை தமிழ்ல சுபத்திரா அர்ஜுனா என்ற பேர்ல படமா எடுக்கப்பட்டதாம். இந்தப் படத்தில  அந்தகால நடிகர் செருகளத்தூர் சாமா கிருஷ்ணனா நடிச்சாராம். VS மணி அர்ஜுனனா நடிச்சாராம். G சுப்புலட்சுமி சுபத்ராவா நடிச்சாராம்.
 
சுபத்திரா பரிணயம் படம் அதில நடிச்ச நடிகை நடிகைகளின் நடிப்பினால நல்லா ஓடுச்சாம்.
 
Heezullia 

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jan 01, 2018 6:59 pm

01.01.2018 

10. பக்த குசேலா 1936

SD சுப்புலட்சுமி [ரெட்டை வேஷம்] - கிருஷ்ணன் & குசேலரின் மனைவி 
பேபி R பாலசரஸ்வதி தேவி - சின்ன வயசு கிருஷ்ணன் 
பாபநாசம் சிவன் - குசேலன் 
G பட்டு அய்யர், ஜாலி கிட்டு, KK பார்வதி, வித்வான் சங்கரலிங்கம்

இயக்குனர் : சுப்பிரமணியம் 
இசை : பாபநாசம் சிவன் 

கிருஷ்ணசாமி சுப்பிரமணியம் ஒரு வக்கீலாம்.  இவர் எடுத்த பக்த குசேலா எல்லாருக்கும் தெரிஞ்ச கதைதான். நட்புக்கு இலக்கணமாக வாழ்ந்த கிருஷ்ணன், 27 குழந்தைகளை வச்சுட்டு கஷ்டப்பட்ட குசேலன், இவங்களோட கதை. 

இந்தப் படத்தில் சுப்புலட்சுமி கிருஷ்ணராகவும், குசேலரின் மனைவியாவும் ரெட்டை வேஷத்தில நடிச்சிருந்தாராம். ஒண்ணு, வறுமையால் கஷ்டப்படும் ஒரு அம்மா,    இன்னொன்று  அவதாரம். 

கிருஷ்ணனாக சுப்புலட்சுமி அழகாக இருந்தாராம். படத்த  பார்த்தவங்க, கிருஷ்ணனா நடிச்சவர் ஒரு பொண்ணுன்னு நம்பவே மறுத்தாங்களாம். அப்போ ஆனந்த விகடனில் சினிமா விமர்சனம் எழுதிட்டு இருந்த கல்கி, இந்தப் படத்தைப் பத்தி விமர்சனம் எழுதும்போது, கிருஷ்ணனாக நடிச்ச சுப்புலட்சுமியின் அழகான  சிரிப்பு "முல்லை சிரிப்பு" ன்னு எழுதியிருந்தாராம். ஜனங்கள் சுப்புலட்சுமியின் கிருஷ்ணன்  முகத்தையே  வருஷக்கணக்கா நெனச்சுட்டு இருந்தாங்களாம். அப்புறமா மறந்துட்டாங்களாம்.  ஏன்னா  அதுக்கப்புறமாதான்  NTR கிருஷ்ணனா நடிக்க வந்துட்டார்ல.

அப்போ சின்ன பாப்பாவா இருந்த பாலசரஸ்வதி பாப்பா, சின்ன வயசு கண்ணனா நடிச்சிருந்தாராம். அந்த வேஷத்துக்கு ரொம்ப பொருத்தமா இருந்தாராம். மறுபடியும் பாருங்க, ஒரு பாப்பா சின்ன பையனா நடிச்சிருந்தாரு. இப்படி பெண்களை ஆண்களாக நடிக்க வைக்கிற புதுமையான யோசனைகள் அப்பவே ஒரு இயக்குனருக்கு வந்திருக்கு பாருங்க. 

பாபநாசம் சிவன் பக்த குசேலா படத்துக்கு இசையமைச்சதோடு மட்டுமில்லாம, குசேலராவும் நடிச்சிருந்தார். அவர் அப்போ ஒல்லியா இருந்தாராம். குசேலர் வேற வறுமையில் இருந்தவராச்சே ? அதனால அந்த வேஷத்துக்கு பொருத்தமா இருந்தாராம். 

இந்தப் படத்தில 30 பாட்டுக்கு மேல இருந்துச்சாம்.  அப்போ உள்ள வழக்கப்படி, ஹிந்தி பாட்டு ட்யூன்ல. பாபநாசம் சிவனும், சுப்புலெட்சுமியும் டூயட்லாம் பாடியிருக்காங்களாம், இந்தப் படத்தில. ஆனா அதுக்கான பாட்டு ரெக்கார்ட் இல்லியாம். 

இந்தப் படம் 1935ல கொல்கத்தாவில தொடங்கப்பட்டுச்சாம். 

சுப்பிரமணியமுக்கு  திரைப்படங்களை டைரக்ட் செய்யணும்னு ஒரு ஆச வந்தப்போ, 1934ல ஒரு படம் டைரக்ட் செஞ்சாராம். அதுல தியாகராஜ பாகவதரையும்,  தன்   மனைவி  SD சுப்புலெட்சுமியையும் introduce செஞ்சாராம். படம் பவளக்கொடி. 

பக்த குசேலா படத்தில நடிச்ச பாப்பா பாலசரஸ்வதி பெரியவரா ஆன பிறகு, தமிழ், தெலுங்கு படங்களில் முக்கியமான பாத்திரங்களில் நடிச்சாராம். ஆனா இவர் புகழ் பெற்றது பாட்டுலதான். பல மொழிகளில் பாடினார். தமிழ்ல 'ராஜி என் காண்மனி படத்தில பாடினாரே ஒரு பாட்டு, "மல்லிகைப்பூ மாலை ரோஜா", இனிமையான,   புகழ் பெற்ற ஒரு பாட்டு. நான் கேட்டிருக்கேன். 

சுப்பிரமணியம் 1935ல நவீன சதாரம் எடுத்தாராம். இந்தப் படத்தில "மாரமணன் உமாரமணன்" னு ஒரு பாட்டாம். டைட்டில் பாட்டு. இந்தப் பாட்டுக்கு பாபநாசம் சிவன் பின்னணி குரல் கொடுத்திருந்தாராம். இதுக்கும் ரெக்கார்ட்  இல்லையாம். இப்போ கூட கர்னாடக சங்கீத கச்சேரிகளில் இந்தப் பாட்டு பாடுறது  வழக்கமாம். 


1938ல சேவாசதனம்னு ஒரு படம் நல்லா ஓடுச்சாம். அந்த படத்தில MS சுப்புலட்சுமி அறிமுகமானாராம். பாபநாசம்  சிவன், நவீன சதாரம் படத்தில பாடின "மாரமணன் உமாரமணன்" பாட்டை சேவாசதனம் படத்தில MSS பாடினாராம். இவர் பாடிய பாட்டை மக்கள் ரொம்ப ரசிச்சாங்களாம். 

இந்தப் படம் தயாராகும்போது, இன்னொரு படமும் தயாராகிக்கொண்டு இருந்துச்சாம். நந்தனார் -                  சுந்தராம்பாள் நடிச்சது. இதிலேயும் பாருங்க, சுந்தராம்பாள் நந்தன்ங்கிற ஆம்பள  வேஷத்ல. 


பக்த குசேலா படத்ல சுப்புலட்சுமியும், நந்தனார் படத்தில சுந்தராம்பாளும் ஆம்பளையா நடிச்சதனால, இந்த ரெண்டு படங்களிலேயும் வித்தியாசமான வேஷங்கள் பத்தி மக்கள் காதுக்கு  போச்சாம். அவங்களுக்கு ஒரே ............. எதிர்பார்ப்பு,  எந்தப்படம் சீக்கிரமா ரிலீஸ் ஆகும்னு ஆசையா எதிர்பார்த்துட்டு இருந்தார்களாம். 

நந்தனார் 1935ல ரிலீஸ் ஆச்சாம். படம் டணால். கல்கி இந்தப் படத்தை பத்தி கச்சாமுச்சானு விமர்சனம் எழுதிட்டாராம்.  1936ல ரிலீஸ் ஆன பக்த குசேலா ஓஹோன்னு ஓடுச்சாம். 

வித்தியாசமான,  புதுமையான வேஷங்கள், இனிமையான இசை, சுப்புலட்சிமியின் நடிப்பு இவைதான் படத்தின் வெற்றிக்கு காரணமாம்.  

Heezulia

Sponsored content

PostSponsored content



Page 5 of 17 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக