ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by பிஜிராமன் Today at 9:43 pm

» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by மகா பிரபு Today at 9:43 pm

» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கே. பாலா Today at 9:38 pm

» வேலன்:-திருக்கழுக்குன்றம் கழுகுகள் உணவருந்தும் அரிய வீடியோ காட்சிகள்
by மகா பிரபு Today at 9:35 pm

» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 9:28 pm

» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by மகா பிரபு Today at 9:21 pm

» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 9:20 pm

» கண்ணீரில் பூத்த காதல் ................
by அய்யம் பெருமாள் .நா Today at 9:16 pm

» ரசிக்க சில புகைப்படங்கள்
by சிவா Today at 9:15 pm

» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by பிஜிராமன் Today at 8:59 pm

» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by சிவா Today at 8:57 pm

» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 8:25 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by பிஜிராமன் Today at 8:21 pm

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சார்லஸ் mc Today at 8:20 pm

» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by சார்லஸ் mc Today at 8:15 pm

» தினம் ஒரு website
by தம்பி வெங்கி Today at 7:53 pm

» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm

» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm

» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm

» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm

» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm

» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm

» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm

» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm

» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm

» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm

» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm

» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm

» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm

» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm

» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm

» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm

» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm

» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Post by இரா.எட்வின் on Thu May 27, 2010 1:32 am

First topic message reminder :

பாசம் பேருந்தில்
பகை ராக்கெட்டில்

ஏறத்தாழ ஏழெட்டு ஆண்டுகள் கடந்திருக்கும் இது நடந்து. கிஷோர் அப்போது நான்கு அல்லது ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நேரம்.

ஒரு வெய்யில் ஞாயிறு நண்பகல். நண்பர் ஒருவர் வீட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன்.

தெருவில் குழந்தைகள் "கயிறு பஸ்" விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

முதலில் "கயிறு பஸ்" என்றால் என்ன என்று விளக்கி விடுவதுதான் உத்தமம்.

கிரிக்கெட்டும் , தொலைக் காட்ச்சியும், வீடியோ கேம்ஸும் மென்று, தின்று , ஏப்பம் விட்ட விளையாட்டுகளில் "கயிறு பஸ்" மிக முக்கியமான ஒன்று.

சணல் அல்லது நூல் கயிறின் நுனிகளை முடிச்சிட்டு ஒன்றிணைத்து விட்டால் ஒரு கயிறு வளையம் கிடைக்கும். அந்த கயிறு வளையத்திற்குள் குழந்தைகள் ஒரு நீள் வரிசையில் நுழைந்து கொண்டு ஒரே சீரான வேகத்தில் ஓடத் துவங்குவார்கள். இடுதான் "கயிறு பஸ்" விளையாட்டு.

முதலில் ஓடுபவனது வயிறையும் இறுதியாய் ஓடுபவனது முதுகையும் கயிறு இறுக்கும். கயிறு வயிறை இறுக்கினால் அவன் ஓட்டுனர், முதுகை இறுக்கினால் அவன் நடத்துனர். இரண்டும் தப்பித்து விட்டால் அவன் பயணி.

அன்றைய விளையாட்டில் பக்கத்து வீட்டுக் குழந்தை பாத்திமாதான் ஓட்டுனர், கிஷோர் நடத்துனர் . வீட்டூ நூலகத்திலிருந்து ஏதோ ஒரு கவிதை புத்தகத்தை எடுத்து வந்து டிக்கெட் கிழித்துக் கொண்டிருந்தான். ஏதோ அவனால் முடிந்த இலக்கிய சேவை.

பயணிகள் ஏறியதும் பேருந்து கிளம்பியது. என்னருகில் வந்ததும் கையை நீட்டினேன். நகரப் பேருந்துகள் மாதிரி தள்ளிப் போய் நிற்காமல் சரியாய் நின்றது பேருந்து.

” சீக்கிரமா ஏறுங்க மாமா. ஏற்கனவே வண்டி லேட்ல போகுது" பக்காவாய் சர்வீஸ் போட்ட ஓட்டுனராகவே பேசினாள் பாத்திமா. கு ழந்தைகள் கூர்ந்து கவனிக்கிறார்கள்.

”அவரு இப்படித்தான் ஆட்டத்தக் கெடுப்பாரு. நீ ஏன் பாத்தி நிறுத்தின?. விளையாடாம வெலகுப்பா. இல்லாட்டி அம்மாட்ட சொல்லிடுவேன்," எகிறினான் பையன்.

பேருந்து கிளம்புவதற்க்குள் முந்திக் கொண்டேன். " பஸ் எங்கடா போகுது?

"கராச்சிக்கு. நீயெல்லாம் வரமாட்ட. விடுப்பா , நேரமாகுது," ப்றந்த்தான்.

நெசத்துக்கும் கொஞம் மிரண்டுதான் போனேன்.

"கார்கிலுக்கா? , ஏண்டா? "

சகலத்தையும் கட்டுமீறி கசிந்தது பதட்டம்.

" காஷ்மீர் அவுங்க வீட்டுன்னு பாகிஸ்தான் காரன் சொல்றானாம். அதான் முஷாரப்போட சண்ட போடப் போறோம்” கோரஸாக கத்தினார்கள் குழந்தைகள்.

அப்படியே ஆடிப் போனேன் ஆடி. மேம்போக்காய் மேய்பவர்கள் வேண்டுமானால் இதை தேச பக்தியாய் கொண்டு கூத்தாடி மகிழலாம். சராசரிக்கும் கொஞசம் சன்னமான அளவில் விசாலப் பட்ட பார்வைக்கே இதில் உள்ள விஷத்தின் வீரியம் புலப்படும்.

"காஷ்மீர்" இந்தியாவுடையதா? அல்லது பாக்கிஸ்தானுடையதா? இல்லை வேறு யாருடையதோவா? என்று அந்தக் குழந்தைகளுள் யாருக்கும் தெரியாது. பாக்கிஸ்தான் மற்றும் இந்தியப் பெரியவர்களில் பெரும்பான்மையோருக்கும் இது தெரியாத விஷயம்தான்.

எங்கே புரிந்து கொண்டுவிடுவார்களோ என்ற பயத்தில்தான் அவர்களை உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயே வைத்திருக்கப் படாத பாடு பாடுகிறார்கள் இரு மருங்கிலும் உள்ள பெரும்பான்மை அரசியல்வாதிகள்.

எதன் விளைவு இது?

மும்பையில் குண்டு வெடித்தாலும், அல்லது மினி பஸ்ஸே இன்னும் எட்டிப் பார்க்காத குக்கிராமமான சுருமான் பட்டியில் கட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பிடம் மழையில் இடிந்து விழுந்தாலும் அல்லது ஏதோ ஒரு முகத்தோடு இந்தியாவிற்குள் அழிவு வேலை நிகழ்ந்தாலும் அதற்கு காரணம் பாக்கிஸ்தானில் பயிற்சி பெற்ற இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் என்ற பொதுப் புத்தியை ஏற்படுத்திவிட பெரும்பான்மை இந்திய ஊடகங்களும் பெரும்பான்மை அரசியல்வாதிகளும் பெரும்பாடு படுகிறார்கள் என்பதோடு அதில் அவர்கள் பெருமளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.


இந்தியாவை நாசப் படுத்த ஒவ்வொரு முறை முயற்சி நடக்கிறபோதும் ஏற்படும் இந்தியக் கோபத்தை ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் மேல் மடை மாற்றம் செய்வதில் இவர்கள் பெருமளவு வெற்றி கண்டிருக்கிறார்கள் என்பதுதான் அக்கறையுள்ளவர்களை கவலைப் பட வைக்கிறது.

இது ஏதோ இந்தியாவில் மட்டும்தான் என்றும் கொள்ளக் கூடாது.

இதே நேரத்தில் பாக்கிஸ்தானின் ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்தும் குழந்தைகள் கயிறு பஸ்ஸில் " காஷ்மீர் ஒங்க வீட்டுன்னு சொல்றீங்களாமே? என்று மன்மோகன் அவர்களிடம் சண்டை போட டில்லி நோக்கி வந்து கொண்டிருக்கவும் கூடும்.

வெறுப்பையும் பகையையும் விதைப்பதில் அங்குள்ள ஊடகக் காரர்களும் அரசியல்வாதிகளும் நம்மவர்களுக்கு சற்றும் இளைத்தவர்கள் அல்ல.

அவ்வப்போது இரு மருங்கிலும் இருந்து சில நல்லெண்ண முயற்சிகள் எடுக்கப் படுவதென்னவோ உண்மைதான். டில்லியும் கராச்சியும் பேருந்துகளால் இணைக்கப்பட்டதை வீச்சான நல்லெண்ண முயற்சியாகக் கொள்ளலாம். ஆனால் ஒருவருக்கொருவர் பாசத்தை பேருந்திலும் பகையை ராக்கெட்டிலும் அல்லவா பறிமாறிக் கொண்டோம்.

இப்போதெல்லாம் குழந்தைகள் பாட்டி வடை சுட்ட கதையின் முடிவை மாற்றி சொல்கிறார்கள். வடை காகத்திற்கா? நரிக்கா? என்று கேட்டால் நம்மைப் போல் அல்லாமல் "வடை பாட்டியோடது" என்று பளிச்சென சொல்கிறார்கள். இதை யாரேனும் காஷ்மீரோடு பொருத்திப் பார்த்தால் அதற்கு நாம் ஒன்றும் பொறுப்பல்ல.

பாட்டியின் உரிமை வடை என்பதை புரிந்து கொண்ட குழந்தைகள் வருங்காலத்தில் வடை யை காஷ்மீரின் குறியீடாக மட்டுமல்ல யார் பாட்டி என்பதையும் தெளிவாகத் தீர்மானிப்பார்கள்.

சிதைவுகளையும் , ரணங்களையும் , வலிகளையும் மட்டுமேஊடகங்களில் பார்க்கும் வாய்ப்பை பெற்ற நமக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் கொண்டு வந்து சேர்க்கக் கூடிய நிகழ்ச்சிகளும் இருக்கவே செய்கின்றன. அப்படிப் பட்ட நிகழ்ச்சிகள்தான் மத வெறியின் வேரினை அசைக்கும். அது மாதிறி நல்லவைகள் கிடைத்து விட்டால் அவைகளை முடிந்த அளவிற்கு கொண்டு போய் சேர்த்து விட வேண்டும். அப்படிப் பட்ட ஒன்றோடு முடிக்கிறேன்ன்.



வெய்யில் வந்தால் மட்டுமே உருகி ஓடும் "லைடர்" நதிக் கரையில் இருக்கிறது அந்தக் கிராமம்.அந்த ஊரின் பெயரை அநேகமாக " பகல்காம்" என்று உச்சரிக்கலாம். அங்கு ஒரு சிவன் கோவில்.சற்றேரக் குறைய தொள்ளாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ராஜா ஜெய் சூர்யா அவர்களால் கட்டப் பட்டது. மிகவும் சக்தி வாய்ந்த ஆலயமாக இந்துக்களால் அதிலுங் குறிப்பாக காஷ்மீர் பண்டிட்டுகளால் நம்பப் படுகிற ஆலயம். அமர்நாத் செல்லும் பக்தர்கள் நம்பிக்கையோடு வந்து வழிபடும் ஆலயம்.

உறைந்து கிடக்கும் பனிக் கட்டிகளே போர்வை தேடும் ஒரு குளிர் காலை.அந்தக் குளிரையும் பொருட்படுத்தாது மிகுந்த பக்தியோடும் நம்பிக்கையோடும் பக்தர்கள் வரிசையில் நிற்கிறார்கள். சூட மணம் கமழ்கிறது. பூசாரி நீட்டும் ஆரத்தித் தட்டை தொட்டு மிகுந்த பக்த்தியோடு கண்களில் ஒற்றிக் கொள்கிறார்கள் பக்தர்கள்.

இன் செய்த ஜீன்ஸ் பேண்ட்டோடும் நேர்த்தியாக நறுக்கி விடப்பட்ட தாடியோடும் இருக்கிறார் பூசாரி. அவர் பெயர் "குலாம் கஸன்". ஆம் அவர் ஒரு இஸ்லாமியர்.

1989 வாக்கில் பண்டிடுகள் அந்தப் பகுதியை விட்டு புலம் பெயர்ந்தபோது அப்போதைய பூசாரி திரு. ராத கிரிஷனால் தமக்கு கையளிக்கப் பட்ட பணியினை ஈன்று வரை மிகுந்த பக்தியோடும் சிரத்தையோடும் செய்து வருகிறார்.

சொல்கிறார், " சிவன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இது பண்டிட்டுகளின் ஆலயம்.அவர்கள் நிச்சயம் வருவார்கள்". அவரது நம்பிக்கை பலிக்கட்டும்.

இந்துக்களின் சகிப்புத் தன்மையும் அரவணைப்பும் எழுத எழுத மாளாது. இந்தத் தேசம் முழுமையும் அவர்களது பெருந்தன்மையால் நிரம்பிக் கசிகிறது. ஆளாளுக்கு அவைகளையும் அவசியம் பதிவோம்.

இத்தகையப் பதிவுகள்தான் வருங்காலப் பிள்ளைகளுக்கு சரியான பாதையை காட்டும்.


Last edited by இரா.எட்வின் on Mon Apr 11, 2011 12:46 am; edited 1 time in total

இரா.எட்வின்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 784
வசிப்பிடம்: perambalur
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 17

Back to top Go down


Re: பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Post by சம்சுதீன் on Fri May 28, 2010 4:11 am

நல்ல கட்டுரை வாழ்த்துகள் எட்வின்

சம்சுதீன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8220
வசிப்பிடம்: qatar
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 21

http://shams.eegarai.info/

Back to top Go down

Re: பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Post by இரா.எட்வின் on Fri May 28, 2010 4:13 am

உதயசுதா wrote:நன்றி எல்லாம் ethukku எட்வின்.உங்க கட்டுரை அருமையா இருந்ந்துச்சு சொன்னேன்.

நான் துபாயில என் கணவரோடும்,மகளொடும் இருக்கேன்.இங்க எனக்கு அக்கவுண்ட்ஸ் & அட்மின்ல வேலை


அந்தப் பெருந்தன்மைக்குத்தான் நன்றி சொன்னேன். உங்கள் படைப்புகளை இனிதான் படிக்க வேண்டும்

பாப்பா பேர் என்ன சுதா?

இரா.எட்வின்

இரா.எட்வின்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 784
வசிப்பிடம்: perambalur
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 17

Back to top Go down

Re: பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Post by இரா.எட்வின் on Fri May 28, 2010 4:16 am

சம்சுதீன் wrote:நல்ல கட்டுரை வாழ்த்துகள் எட்வின்


வணக்கமும் நன்றியும் சம்சுதீன்.
என்ன பன்றீங்க தோழா?
ஆமாம், ரெண்டு பொம்மைகள் கை தட்டுதே. என்ன அர்த்தம்?

இரா.எட்வின்

இரா.எட்வின்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 784
வசிப்பிடம்: perambalur
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 17

Back to top Go down

Re: பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Post by இரா.எட்வின் on Fri May 28, 2010 4:19 am

மனோஜ் wrote:தங்களின் ஆக்கம் பலரின் ஊக்கம் ஆகுக, எட்வின் அவர்களே !
கட்டுரை அருமை அதை எழுதியவிதமும் அருமை !
பதிவுக்கு நன்றி!


வணக்கம் மனோஜ்,
தங்களின் பெருந்தன்மைக்கு நன்றி தோழா.
என்ன பணி செய்கிறீர்கள் தோழா?

இரா.எட்வின்

இரா.எட்வின்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 784
வசிப்பிடம்: perambalur
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 17

Back to top Go down

Re: பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Post by சம்சுதீன் on Fri May 28, 2010 4:20 am

இரா.எட்வின் wrote:
சம்சுதீன் wrote:நல்ல கட்டுரை வாழ்த்துகள் எட்வின்


வணக்கமும் நன்றியும் சம்சுதீன்.
என்ன பன்றீங்க தோழா?
ஆமாம், ரெண்டு பொம்மைகள் கை தட்டுதே. என்ன அர்த்தம்?

இரா.எட்வின்


அந்த கை தட்டலுக்கு அர்த்தம் (மகிழ்ச்சி)

சம்சுதீன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8220
வசிப்பிடம்: qatar
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 21

http://shams.eegarai.info/

Back to top Go down

Re: பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Post by mini on Fri May 28, 2010 12:21 pm

அருமையான கட்டுரை வாழ்த்துக்கள் எட்வின்

mini
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3292
வசிப்பிடம்: அன்பு உள்ளங்களில்
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 39

Back to top Go down

Re: பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Post by இரா.எட்வின் on Fri May 28, 2010 1:39 pm

nmeena wrote:அருமையான கட்டுரை வாழ்த்துக்கள் எட்வின்


வணக்கம்.

நன்றி தோழா

இரா.எட்வின்

இரா.எட்வின்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 784
வசிப்பிடம்: perambalur
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 17

Back to top Go down

Re: பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Post by ராஜா on Fri May 28, 2010 1:45 pm

மிக அருமையான கட்டுரை எட்வின் , மிக்க நன்றி

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 12349
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 523

http://www.eegarai.net

Back to top Go down

Re: பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Post by இரா.எட்வின் on Fri May 28, 2010 2:05 pm

nmeena wrote:அருமையான கட்டுரை வாழ்த்துக்கள் எட்வின்



வணக்கம் மீனா,

தங்களது பெருந்தன்மைக்கு நன்றி

இரா.எட்வின்

இரா.எட்வின்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 784
வசிப்பிடம்: perambalur
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 17

Back to top Go down

Re: பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Post by இரா.எட்வின் on Fri May 28, 2010 3:09 pm

ராஜா wrote:மிக அருமையான கட்டுரை எட்வின் , மிக்க நன்றி


வணக்கம் ராஜா,

தங்களது பாராட்டு தங்களது பெருந்தன்மையின் வெளிப்பாடு.

நன்றி

இரா.எட்வின்

இரா.எட்வின்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 784
வசிப்பிடம்: perambalur
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 17

Back to top Go down

Re: பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Post by கோவை ராம் on Fri May 28, 2010 5:14 pm

இந்தியா பாகிஸ்தான் ,காஷ்மீர் ப்ர்சனையில் ஊடகங்கல் எவ்வளவு விஷத்தை குழந்தைகலிடம் ஏர்படுத்தி உள்ளது என அழகாக விளக்கி உல்லதர்கு பாராட்டுகல் .மறைமுகமாக இந்திய மற்றும் தமிழக அரசினை இலங்கை விவகாரத்தில் குறை கூரி மக்கள் மனதில் விஷம் தெளிக்கும் சிலறும் இதனை பார்த்து திருந்தவும்

ராம்

கோவை ராம்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 977
வசிப்பிடம்: கொங்குநாடு
சேர்ந்தது: 16/03/2009
மதிப்பீடு: 48

Back to top Go down

பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Post by இரா.எட்வின் on Sat Jul 10, 2010 7:48 am

rarara wrote:இந்தியா பாகிஸ்தான் ,காஷ்மீர் ப்ர்சனையில் ஊடகங்கல் எவ்வளவு விஷத்தை குழந்தைகலிடம் ஏர்படுத்தி உள்ளது என அழகாக விளக்கி உல்லதர்கு பாராட்டுகல் .மறைமுகமாக இந்திய மற்றும் தமிழக அரசினை இலங்கை விவகாரத்தில் குறை கூரி மக்கள் மனதில் விஷம் தெளிக்கும் சிலறும் இதனை பார்த்து திருந்தவும்

ராம்


இலங்கை விசயம் முற்றிலும் வேறானது தோழர்

இரா.எட்வின்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 784
வசிப்பிடம்: perambalur
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 17

Back to top Go down

Re: பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Post by நவீன் on Sat Jul 10, 2010 9:31 am


நவீன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 4520
வசிப்பிடம்: பெங்களூர்
சேர்ந்தது: 29/05/2009
மதிப்பீடு: 29

Back to top Go down

பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Post by இரா.எட்வின் on Sat Jul 10, 2010 10:14 am

நவீன் wrote:


நன்றி நவீன்

இரா.எட்வின்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 784
வசிப்பிடம்: perambalur
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 17

Back to top Go down

பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Post by இரா.எட்வின் on Wed Jul 21, 2010 12:17 am

உதயசுதா wrote:உண்மையிலுமே அருமையா இருக்கு எட்வின்


ரொம்பப் பெருந்தன்மை சுதா

இரா.எட்வின்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 784
வசிப்பிடம்: perambalur
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 17

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum