ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by naka Today at 10:57 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by முத்துராஜ் Today at 10:16 am

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Go down

பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Post by இரா.எட்வின் on Thu May 27, 2010 1:32 am

First topic message reminder :

பாசம் பேருந்தில்
பகை ராக்கெட்டில்

ஏறத்தாழ ஏழெட்டு ஆண்டுகள் கடந்திருக்கும் இது நடந்து. கிஷோர் அப்போது நான்கு அல்லது ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நேரம்.

ஒரு வெய்யில் ஞாயிறு நண்பகல். நண்பர் ஒருவர் வீட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன்.

தெருவில் குழந்தைகள் "கயிறு பஸ்" விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

முதலில் "கயிறு பஸ்" என்றால் என்ன என்று விளக்கி விடுவதுதான் உத்தமம்.

கிரிக்கெட்டும் , தொலைக் காட்ச்சியும், வீடியோ கேம்ஸும் மென்று, தின்று , ஏப்பம் விட்ட விளையாட்டுகளில் "கயிறு பஸ்" மிக முக்கியமான ஒன்று.

சணல் அல்லது நூல் கயிறின் நுனிகளை முடிச்சிட்டு ஒன்றிணைத்து விட்டால் ஒரு கயிறு வளையம் கிடைக்கும். அந்த கயிறு வளையத்திற்குள் குழந்தைகள் ஒரு நீள் வரிசையில் நுழைந்து கொண்டு ஒரே சீரான வேகத்தில் ஓடத் துவங்குவார்கள். இடுதான் "கயிறு பஸ்" விளையாட்டு.

முதலில் ஓடுபவனது வயிறையும் இறுதியாய் ஓடுபவனது முதுகையும் கயிறு இறுக்கும். கயிறு வயிறை இறுக்கினால் அவன் ஓட்டுனர், முதுகை இறுக்கினால் அவன் நடத்துனர். இரண்டும் தப்பித்து விட்டால் அவன் பயணி.

அன்றைய விளையாட்டில் பக்கத்து வீட்டுக் குழந்தை பாத்திமாதான் ஓட்டுனர், கிஷோர் நடத்துனர் . வீட்டூ நூலகத்திலிருந்து ஏதோ ஒரு கவிதை புத்தகத்தை எடுத்து வந்து டிக்கெட் கிழித்துக் கொண்டிருந்தான். ஏதோ அவனால் முடிந்த இலக்கிய சேவை.

பயணிகள் ஏறியதும் பேருந்து கிளம்பியது. என்னருகில் வந்ததும் கையை நீட்டினேன். நகரப் பேருந்துகள் மாதிரி தள்ளிப் போய் நிற்காமல் சரியாய் நின்றது பேருந்து.

” சீக்கிரமா ஏறுங்க மாமா. ஏற்கனவே வண்டி லேட்ல போகுது" பக்காவாய் சர்வீஸ் போட்ட ஓட்டுனராகவே பேசினாள் பாத்திமா. கு ழந்தைகள் கூர்ந்து கவனிக்கிறார்கள்.

”அவரு இப்படித்தான் ஆட்டத்தக் கெடுப்பாரு. நீ ஏன் பாத்தி நிறுத்தின?. விளையாடாம வெலகுப்பா. இல்லாட்டி அம்மாட்ட சொல்லிடுவேன்," எகிறினான் பையன்.

பேருந்து கிளம்புவதற்க்குள் முந்திக் கொண்டேன். " பஸ் எங்கடா போகுது?

"கராச்சிக்கு. நீயெல்லாம் வரமாட்ட. விடுப்பா , நேரமாகுது," ப்றந்த்தான்.

நெசத்துக்கும் கொஞம் மிரண்டுதான் போனேன்.

"கார்கிலுக்கா? , ஏண்டா? "

சகலத்தையும் கட்டுமீறி கசிந்தது பதட்டம்.

" காஷ்மீர் அவுங்க வீட்டுன்னு பாகிஸ்தான் காரன் சொல்றானாம். அதான் முஷாரப்போட சண்ட போடப் போறோம்” கோரஸாக கத்தினார்கள் குழந்தைகள்.

அப்படியே ஆடிப் போனேன் ஆடி. மேம்போக்காய் மேய்பவர்கள் வேண்டுமானால் இதை தேச பக்தியாய் கொண்டு கூத்தாடி மகிழலாம். சராசரிக்கும் கொஞசம் சன்னமான அளவில் விசாலப் பட்ட பார்வைக்கே இதில் உள்ள விஷத்தின் வீரியம் புலப்படும்.

"காஷ்மீர்" இந்தியாவுடையதா? அல்லது பாக்கிஸ்தானுடையதா? இல்லை வேறு யாருடையதோவா? என்று அந்தக் குழந்தைகளுள் யாருக்கும் தெரியாது. பாக்கிஸ்தான் மற்றும் இந்தியப் பெரியவர்களில் பெரும்பான்மையோருக்கும் இது தெரியாத விஷயம்தான்.

எங்கே புரிந்து கொண்டுவிடுவார்களோ என்ற பயத்தில்தான் அவர்களை உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயே வைத்திருக்கப் படாத பாடு பாடுகிறார்கள் இரு மருங்கிலும் உள்ள பெரும்பான்மை அரசியல்வாதிகள்.

எதன் விளைவு இது?

மும்பையில் குண்டு வெடித்தாலும், அல்லது மினி பஸ்ஸே இன்னும் எட்டிப் பார்க்காத குக்கிராமமான சுருமான் பட்டியில் கட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பிடம் மழையில் இடிந்து விழுந்தாலும் அல்லது ஏதோ ஒரு முகத்தோடு இந்தியாவிற்குள் அழிவு வேலை நிகழ்ந்தாலும் அதற்கு காரணம் பாக்கிஸ்தானில் பயிற்சி பெற்ற இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் என்ற பொதுப் புத்தியை ஏற்படுத்திவிட பெரும்பான்மை இந்திய ஊடகங்களும் பெரும்பான்மை அரசியல்வாதிகளும் பெரும்பாடு படுகிறார்கள் என்பதோடு அதில் அவர்கள் பெருமளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

இந்தியாவை நாசப் படுத்த ஒவ்வொரு முறை முயற்சி நடக்கிறபோதும் ஏற்படும் இந்தியக் கோபத்தை ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் மேல் மடை மாற்றம் செய்வதில் இவர்கள் பெருமளவு வெற்றி கண்டிருக்கிறார்கள் என்பதுதான் அக்கறையுள்ளவர்களை கவலைப் பட வைக்கிறது.

இது ஏதோ இந்தியாவில் மட்டும்தான் என்றும் கொள்ளக் கூடாது.

இதே நேரத்தில் பாக்கிஸ்தானின் ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்தும் குழந்தைகள் கயிறு பஸ்ஸில் " காஷ்மீர் ஒங்க வீட்டுன்னு சொல்றீங்களாமே? என்று மன்மோகன் அவர்களிடம் சண்டை போட டில்லி நோக்கி வந்து கொண்டிருக்கவும் கூடும்.

வெறுப்பையும் பகையையும் விதைப்பதில் அங்குள்ள ஊடகக் காரர்களும் அரசியல்வாதிகளும் நம்மவர்களுக்கு சற்றும் இளைத்தவர்கள் அல்ல.

அவ்வப்போது இரு மருங்கிலும் இருந்து சில நல்லெண்ண முயற்சிகள் எடுக்கப் படுவதென்னவோ உண்மைதான். டில்லியும் கராச்சியும் பேருந்துகளால் இணைக்கப்பட்டதை வீச்சான நல்லெண்ண முயற்சியாகக் கொள்ளலாம். ஆனால் ஒருவருக்கொருவர் பாசத்தை பேருந்திலும் பகையை ராக்கெட்டிலும் அல்லவா பறிமாறிக் கொண்டோம்.

இப்போதெல்லாம் குழந்தைகள் பாட்டி வடை சுட்ட கதையின் முடிவை மாற்றி சொல்கிறார்கள். வடை காகத்திற்கா? நரிக்கா? என்று கேட்டால் நம்மைப் போல் அல்லாமல் "வடை பாட்டியோடது" என்று பளிச்சென சொல்கிறார்கள். இதை யாரேனும் காஷ்மீரோடு பொருத்திப் பார்த்தால் அதற்கு நாம் ஒன்றும் பொறுப்பல்ல.

பாட்டியின் உரிமை வடை என்பதை புரிந்து கொண்ட குழந்தைகள் வருங்காலத்தில் வடை யை காஷ்மீரின் குறியீடாக மட்டுமல்ல யார் பாட்டி என்பதையும் தெளிவாகத் தீர்மானிப்பார்கள்.

சிதைவுகளையும் , ரணங்களையும் , வலிகளையும் மட்டுமேஊடகங்களில் பார்க்கும் வாய்ப்பை பெற்ற நமக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் கொண்டு வந்து சேர்க்கக் கூடிய நிகழ்ச்சிகளும் இருக்கவே செய்கின்றன. அப்படிப் பட்ட நிகழ்ச்சிகள்தான் மத வெறியின் வேரினை அசைக்கும். அது மாதிறி நல்லவைகள் கிடைத்து விட்டால் அவைகளை முடிந்த அளவிற்கு கொண்டு போய் சேர்த்து விட வேண்டும். அப்படிப் பட்ட ஒன்றோடு முடிக்கிறேன்ன்.

வெய்யில் வந்தால் மட்டுமே உருகி ஓடும் "லைடர்" நதிக் கரையில் இருக்கிறது அந்தக் கிராமம்.அந்த ஊரின் பெயரை அநேகமாக " பகல்காம்" என்று உச்சரிக்கலாம். அங்கு ஒரு சிவன் கோவில்.சற்றேரக் குறைய தொள்ளாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ராஜா ஜெய் சூர்யா அவர்களால் கட்டப் பட்டது. மிகவும் சக்தி வாய்ந்த ஆலயமாக இந்துக்களால் அதிலுங் குறிப்பாக காஷ்மீர் பண்டிட்டுகளால் நம்பப் படுகிற ஆலயம். அமர்நாத் செல்லும் பக்தர்கள் நம்பிக்கையோடு வந்து வழிபடும் ஆலயம்.

உறைந்து கிடக்கும் பனிக் கட்டிகளே போர்வை தேடும் ஒரு குளிர் காலை.அந்தக் குளிரையும் பொருட்படுத்தாது மிகுந்த பக்தியோடும் நம்பிக்கையோடும் பக்தர்கள் வரிசையில் நிற்கிறார்கள். சூட மணம் கமழ்கிறது. பூசாரி நீட்டும் ஆரத்தித் தட்டை தொட்டு மிகுந்த பக்த்தியோடு கண்களில் ஒற்றிக் கொள்கிறார்கள் பக்தர்கள்.

இன் செய்த ஜீன்ஸ் பேண்ட்டோடும் நேர்த்தியாக நறுக்கி விடப்பட்ட தாடியோடும் இருக்கிறார் பூசாரி. அவர் பெயர் "குலாம் கஸன்". ஆம் அவர் ஒரு இஸ்லாமியர்.

1989 வாக்கில் பண்டிடுகள் அந்தப் பகுதியை விட்டு புலம் பெயர்ந்தபோது அப்போதைய பூசாரி திரு. ராத கிரிஷனால் தமக்கு கையளிக்கப் பட்ட பணியினை ஈன்று வரை மிகுந்த பக்தியோடும் சிரத்தையோடும் செய்து வருகிறார்.

சொல்கிறார், " சிவன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இது பண்டிட்டுகளின் ஆலயம்.அவர்கள் நிச்சயம் வருவார்கள்". அவரது நம்பிக்கை பலிக்கட்டும்.

இந்துக்களின் சகிப்புத் தன்மையும் அரவணைப்பும் எழுத எழுத மாளாது. இந்தத் தேசம் முழுமையும் அவர்களது பெருந்தன்மையால் நிரம்பிக் கசிகிறது. ஆளாளுக்கு அவைகளையும் அவசியம் பதிவோம்.

இத்தகையப் பதிவுகள்தான் வருங்காலப் பிள்ளைகளுக்கு சரியான பாதையை காட்டும்.

Last edited by இரா.எட்வின் on Mon Apr 11, 2011 12:46 am; edited 1 time in total

இரா.எட்வின்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 784
வசிப்பிடம்: perambalur
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 17

Back to top Go down

Re: பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Post by இரா.எட்வின் on Mon Apr 11, 2011 12:33 am

மீண்டும் மக்களது வாசிப்புக்காக முதல் பக்கத்தில் மீள் பதிவு செய்கிறேன்

இரா.எட்வின்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 784
வசிப்பிடம்: perambalur
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 17

Back to top Go down

Re: பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Post by இரா.எட்வின் on Fri Apr 15, 2011 11:23 pm

ராஜா wrote:மிக அருமையான கட்டுரை எட்வின் , மிக்க நன்றி

நானல்லவா நன்றி சொல்ல வேண்டும்

இரா.எட்வின்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 784
வசிப்பிடம்: perambalur
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 17

Back to top Go down

Re: பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Post by மகா பிரபு on Sat Apr 16, 2011 7:33 am

காஷ்மீருக்கு சுயாட்சி அதிகாரம் அளிப்பது தான் தீர்வா? இப்படி பார்த்தால் ஆயுதம் எடுக்கும் எந்த ஒரு மாநிலத்திற்கும் தனி நாடு அந்தஸ்த்து வழங்க வேண்டியிருக்கும்.

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8403
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Post by கலைவேந்தன் on Sat Apr 16, 2011 9:46 am

மிகச்சிறந்த இந்த பதிவு என் கண்ணில் படாமல் போனது துரதிருதிருஷ்டமே..

* நாமெல்லாம் விளையாடிக் களித்து மறந்துபோன ஒரு விளையாட்டை நினைவு படுத்தியது அருமை.

* காஷ்மீரின் உண்மை நிலை அறியாமல் அவரவர் தத்தம் பார்வைகளுக்கு ஏற்ப தீர்வு சொல்லி அலைவதை நாசூக்காகச் சொல்லி இருக்கிறீர்கள்.

* சிறுவயது முதற்கொண்டே இந்து இஸ்லாமிய குழந்தைகளுக்கு காஷ்மீர் பிரச்சினை மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையே துவேஷத்தை வளர்த்து வருவது எத்தனை பெரிய தீங்கு என்று தெளிவாக வலியுறுத்தி இருக்கிறீர்கள்.

* பேருந்து அனுப்பி மக்களை ஏமாற்றும் இரண்டு நாடுகளின் அரசியல்வாதிகள் உண்மையில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்னும் பேருந்துதல் மனங்களில் கொள்ளாமல் இரண்டு நாட்டு மக்களையும் முட்டாளாக்கி வருகின்றனர் என்பதை அழகாக சொல்லி இருப்பது வியப்பு.

* வடை காக்காவுக்கா நரிக்கா அல்லது பாட்டிக்கா என்பதை விட அந்த வடை சீர்கெட்டு பயனில்லாமல் போகுமுன் அதன் பயனை அடைய முழுமுயற்சி எடுக்காதது வருந்தத் தக்கது.

* அப்பம் பங்கு போட்ட கதையாக அமெரிக்கா என்னும் குரங்கு இந்தியா பாகிஸ்தான் என்னும் இரண்டு பூனைகளை ஏமாற்றி வருவதை என்றுதான் புரிந்து கொள்ளப்போகிறோம் என்னும் ஆயாசம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அருமையான சிந்தனைகளுக்கு வழிகோலிய கட்டுரை வழங்கியமைக்கு நன்றியும் பாராட்டுகளும் எட்வின்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Post by இரா.எட்வின் on Sat Apr 16, 2011 6:34 pm

கலை wrote:மிகச்சிறந்த இந்த பதிவு என் கண்ணில் படாமல் போனது துரதிருதிருஷ்டமே..

* நாமெல்லாம் விளையாடிக் களித்து மறந்துபோன ஒரு விளையாட்டை நினைவு படுத்தியது அருமை.

* காஷ்மீரின் உண்மை நிலை அறியாமல் அவரவர் தத்தம் பார்வைகளுக்கு ஏற்ப தீர்வு சொல்லி அலைவதை நாசூக்காகச் சொல்லி இருக்கிறீர்கள்.

* சிறுவயது முதற்கொண்டே இந்து இஸ்லாமிய குழந்தைகளுக்கு காஷ்மீர் பிரச்சினை மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையே துவேஷத்தை வளர்த்து வருவது எத்தனை பெரிய தீங்கு என்று தெளிவாக வலியுறுத்தி இருக்கிறீர்கள்.

* பேருந்து அனுப்பி மக்களை ஏமாற்றும் இரண்டு நாடுகளின் அரசியல்வாதிகள் உண்மையில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்னும் பேருந்துதல் மனங்களில் கொள்ளாமல் இரண்டு நாட்டு மக்களையும் முட்டாளாக்கி வருகின்றனர் என்பதை அழகாக சொல்லி இருப்பது வியப்பு.

* வடை காக்காவுக்கா நரிக்கா அல்லது பாட்டிக்கா என்பதை விட அந்த வடை சீர்கெட்டு பயனில்லாமல் போகுமுன் அதன் பயனை அடைய முழுமுயற்சி எடுக்காதது வருந்தத் தக்கது.

* அப்பம் பங்கு போட்ட கதையாக அமெரிக்கா என்னும் குரங்கு இந்தியா பாகிஸ்தான் என்னும் இரண்டு பூனைகளை ஏமாற்றி வருவதை என்றுதான் புரிந்து கொள்ளப்போகிறோம் என்னும் ஆயாசம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அருமையான சிந்தனைகளுக்கு வழிகோலிய கட்டுரை வழங்கியமைக்கு நன்றியும் பாராட்டுகளும் எட்வின்..!

மிக்க நன்றி கலை. ஆகச் சுமாருக்கும் கொஞ்சம் நெருங்கி வரும் படைப்புகளையும் அணைத்துக் கொண்டாடும் உங்கள் பெருந்தன்மைக்கு கடமைப் பட்டிருக்கிறேன் தோழர்.

இரா.எட்வின்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 784
வசிப்பிடம்: perambalur
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 17

Back to top Go down

Re: பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Post by மஞ்சுபாஷிணி on Sat Apr 16, 2011 10:28 pm

எட்வின் கலைக்கிட்ட பாராட்டு என்பது வசிஷ்டர் கையால் பிரம்மரிஷி பட்டம் பெறுவதை போன்றது....கலை எது சொன்னாலும் அது நூறு சதவீதம் சரியாவே இருக்கும்பா சூப்பருங்க

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9683
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Post by இரா.எட்வின் on Sat Apr 16, 2011 10:43 pm

மஞ்சுபாஷிணி wrote:எட்வின் கலைக்கிட்ட பாராட்டு என்பது வசிஷ்டர் கையால் பிரம்மரிஷி பட்டம் பெறுவதை போன்றது....கலை எது சொன்னாலும் அது நூறு சதவீதம் சரியாவே இருக்கும்பா சூப்பருங்க

அப்படியெல்லாம் நான் ஒன்றும் பிரும்ம ரிஷி இல்ல சுபா.
உழைக்கும் மக்களின், ஒடுக்கப் பட்ட ஜனத் திரளின் , சாதாரண எழுத்து ஊழியன் நான். இந்தக் கட்டுரை வெளி வந்தபோதும், பிறகு என் கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்ற போதும் மிரட்டப் பட்டேன். இனிய தோழர் கலை மற்றும் உங்களைப் போன்ற எழுத்துப் பிரபலங்கள் ஆகியோரின் அன்பும் அரவணைப்பும். இவைதான் என்னை முப்பது ஆண்டுகளாக எழுதவும் இயங்கவும் உந்தித் தள்ளுகின்றன. நன்றி சுபா

இரா.எட்வின்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 784
வசிப்பிடம்: perambalur
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 17

Back to top Go down

Re: பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Post by Aathira on Sat Apr 16, 2011 11:06 pm

அன்பு எட்வின்,
நான் தான் இந்தக் கட்டுரையின் கடைசி பார்வையாளர் என்று நினைக்கிறேன்(இந்தத் திரியில்). கட்டுரைத் தொகுப்பில் (புத்தகத்தில்) உங்கள் வலைப்பூவில் என்று படித்ததனால் ஒரு வேளை இங்கு படிக்க அவகாசம் கிடைக்கவில்லையா என்று தெரிய வில்லை. எல்லோரும் என்னன்னவோ கூறி பாராட்டிய பின்பு எழுத்துலகில் நான் ஒரு துரும்பு. நான் என்ன சொல்லி பாராட்ட? அமைதியாக ரசிக்கிறேன் உங்கள் எழுத்தை வழக்கம் போல.....

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Post by இரா.எட்வின் on Sat Apr 16, 2011 11:57 pm

Aathira wrote:அன்பு எட்வின்,
நான் தான் இந்தக் கட்டுரையின் கடைசி பார்வையாளர் என்று நினைக்கிறேன்(இந்தத் திரியில்). கட்டுரைத் தொகுப்பில் (புத்தகத்தில்) உங்கள் வலைப்பூவில் என்று படித்ததனால் ஒரு வேளை இங்கு படிக்க அவகாசம் கிடைக்கவில்லையா என்று தெரிய வில்லை. எல்லோரும் என்னன்னவோ கூறி பாராட்டிய பின்பு எழுத்துலகில் நான் ஒரு துரும்பு. நான் என்ன சொல்லி பாராட்ட? அமைதியாக ரசிக்கிறேன் உங்கள் எழுத்தை வழக்கம் போல.....

நன்றி பானு .

இரா.எட்வின்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 784
வசிப்பிடம்: perambalur
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 17

Back to top Go down

Re: பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Post by கலைவேந்தன் on Sun Apr 17, 2011 3:06 am

இரா.எட்வின் wrote:
மஞ்சுபாஷிணி wrote:எட்வின் கலைக்கிட்ட பாராட்டு என்பது வசிஷ்டர் கையால் பிரம்மரிஷி பட்டம் பெறுவதை போன்றது....கலை எது சொன்னாலும் அது நூறு சதவீதம் சரியாவே இருக்கும்பா சூப்பருங்க

அப்படியெல்லாம் நான் ஒன்றும் பிரும்ம ரிஷி இல்ல சுபா.
உழைக்கும் மக்களின், ஒடுக்கப் பட்ட ஜனத் திரளின் , சாதாரண எழுத்து ஊழியன் நான். இந்தக் கட்டுரை வெளி வந்தபோதும், பிறகு என் கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்ற போதும் மிரட்டப் பட்டேன். இனிய தோழர் கலை மற்றும் உங்களைப் போன்ற எழுத்துப் பிரபலங்கள் ஆகியோரின் அன்பும் அரவணைப்பும். இவைதான் என்னை முப்பது ஆண்டுகளாக எழுதவும் இயங்கவும் உந்தித் தள்ளுகின்றன. நன்றி சுபா

தன்னடக்கம் என்பதைத் தங்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் நண்பரே..! சூப்பருங்க

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Post by இரா.எட்வின் on Sun Apr 17, 2011 8:48 am

கலை wrote:
இரா.எட்வின் wrote:
மஞ்சுபாஷிணி wrote:எட்வின் கலைக்கிட்ட பாராட்டு என்பது வசிஷ்டர் கையால் பிரம்மரிஷி பட்டம் பெறுவதை போன்றது....கலை எது சொன்னாலும் அது நூறு சதவீதம் சரியாவே இருக்கும்பா சூப்பருங்க

அப்படியெல்லாம் நான் ஒன்றும் பிரும்ம ரிஷி இல்ல சுபா.
உழைக்கும் மக்களின், ஒடுக்கப் பட்ட ஜனத் திரளின் , சாதாரண எழுத்து ஊழியன் நான். இந்தக் கட்டுரை வெளி வந்தபோதும், பிறகு என் கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்ற போதும் மிரட்டப் பட்டேன். இனிய தோழர் கலை மற்றும் உங்களைப் போன்ற எழுத்துப் பிரபலங்கள் ஆகியோரின் அன்பும் அரவணைப்பும். இவைதான் என்னை முப்பது ஆண்டுகளாக எழுதவும் இயங்கவும் உந்தித் தள்ளுகின்றன. நன்றி சுபா

தன்னடக்கம் என்பதைத் தங்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் நண்பரே..! சூப்பருங்க

நீங்க வேற கலை,
உண்மையைத்தான் சொன்னேன். உங்களைப் போன்றவர்களின் அன்பும் அரவணைப்பும்தான் என்னை இயக்கும் சக்திகள்.

இரா.எட்வின்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 784
வசிப்பிடம்: perambalur
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 17

Back to top Go down

Re: பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்

Post by இரா.எட்வின் on Sun Apr 17, 2011 10:02 am

இரா.எட்வின் wrote:பாசம் பேருந்தில்
பகை ராக்கெட்டில்

ஏறத்தாழ ஏழெட்டு ஆண்டுகள் கடந்திருக்கும் இது நடந்து. கிஷோர் அப்போது நான்கு அல்லது ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நேரம்.

ஒரு வெய்யில் ஞாயிறு நண்பகல். நண்பர் ஒருவர் வீட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன்.

தெருவில் குழந்தைகள் "கயிறு பஸ்" விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

முதலில் "கயிறு பஸ்" என்றால் என்ன என்று விளக்கி விடுவதுதான் உத்தமம்.

கிரிக்கெட்டும் , தொலைக் காட்ச்சியும், வீடியோ கேம்ஸும் மென்று, தின்று , ஏப்பம் விட்ட விளையாட்டுகளில் "கயிறு பஸ்" மிக முக்கியமான ஒன்று.

சணல் அல்லது நூல் கயிறின் நுனிகளை முடிச்சிட்டு ஒன்றிணைத்து விட்டால் ஒரு கயிறு வளையம் கிடைக்கும். அந்த கயிறு வளையத்திற்குள் குழந்தைகள் ஒரு நீள் வரிசையில் நுழைந்து கொண்டு ஒரே சீரான வேகத்தில் ஓடத் துவங்குவார்கள். இடுதான் "கயிறு பஸ்" விளையாட்டு.

முதலில் ஓடுபவனது வயிறையும் இறுதியாய் ஓடுபவனது முதுகையும் கயிறு இறுக்கும். கயிறு வயிறை இறுக்கினால் அவன் ஓட்டுனர், முதுகை இறுக்கினால் அவன் நடத்துனர். இரண்டும் தப்பித்து விட்டால் அவன் பயணி.

அன்றைய விளையாட்டில் பக்கத்து வீட்டுக் குழந்தை பாத்திமாதான் ஓட்டுனர், கிஷோர் நடத்துனர் . வீட்டூ நூலகத்திலிருந்து ஏதோ ஒரு கவிதை புத்தகத்தை எடுத்து வந்து டிக்கெட் கிழித்துக் கொண்டிருந்தான். ஏதோ அவனால் முடிந்த இலக்கிய சேவை.

பயணிகள் ஏறியதும் பேருந்து கிளம்பியது. என்னருகில் வந்ததும் கையை நீட்டினேன். நகரப் பேருந்துகள் மாதிரி தள்ளிப் போய் நிற்காமல் சரியாய் நின்றது பேருந்து.

” சீக்கிரமா ஏறுங்க மாமா. ஏற்கனவே வண்டி லேட்ல போகுது" பக்காவாய் சர்வீஸ் போட்ட ஓட்டுனராகவே பேசினாள் பாத்திமா. கு ழந்தைகள் கூர்ந்து கவனிக்கிறார்கள்.

”அவரு இப்படித்தான் ஆட்டத்தக் கெடுப்பாரு. நீ ஏன் பாத்தி நிறுத்தின?. விளையாடாம வெலகுப்பா. இல்லாட்டி அம்மாட்ட சொல்லிடுவேன்," எகிறினான் பையன்.

பேருந்து கிளம்புவதற்க்குள் முந்திக் கொண்டேன். " பஸ் எங்கடா போகுது?

"கராச்சிக்கு. நீயெல்லாம் வரமாட்ட. விடுப்பா , நேரமாகுது," ப்றந்த்தான்.

நெசத்துக்கும் கொஞம் மிரண்டுதான் போனேன்.

"கார்கிலுக்கா? , ஏண்டா? "

சகலத்தையும் கட்டுமீறி கசிந்தது பதட்டம்.

" காஷ்மீர் அவுங்க வீட்டுன்னு பாகிஸ்தான் காரன் சொல்றானாம். அதான் முஷாரப்போட சண்ட போடப் போறோம்” கோரஸாக கத்தினார்கள் குழந்தைகள்.

அப்படியே ஆடிப் போனேன் ஆடி. மேம்போக்காய் மேய்பவர்கள் வேண்டுமானால் இதை தேச பக்தியாய் கொண்டு கூத்தாடி மகிழலாம். சராசரிக்கும் கொஞசம் சன்னமான அளவில் விசாலப் பட்ட பார்வைக்கே இதில் உள்ள விஷத்தின் வீரியம் புலப்படும்.

"காஷ்மீர்" இந்தியாவுடையதா? அல்லது பாக்கிஸ்தானுடையதா? இல்லை வேறு யாருடையதோவா? என்று அந்தக் குழந்தைகளுள் யாருக்கும் தெரியாது. பாக்கிஸ்தான் மற்றும் இந்தியப் பெரியவர்களில் பெரும்பான்மையோருக்கும் இது தெரியாத விஷயம்தான்.

எங்கே புரிந்து கொண்டுவிடுவார்களோ என்ற பயத்தில்தான் அவர்களை உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயே வைத்திருக்கப் படாத பாடு பாடுகிறார்கள் இரு மருங்கிலும் உள்ள பெரும்பான்மை அரசியல்வாதிகள்.

எதன் விளைவு இது?

மும்பையில் குண்டு வெடித்தாலும், அல்லது மினி பஸ்ஸே இன்னும் எட்டிப் பார்க்காத குக்கிராமமான சுருமான் பட்டியில் கட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பிடம் மழையில் இடிந்து விழுந்தாலும் அல்லது ஏதோ ஒரு முகத்தோடு இந்தியாவிற்குள் அழிவு வேலை நிகழ்ந்தாலும் அதற்கு காரணம் பாக்கிஸ்தானில் பயிற்சி பெற்ற இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் என்ற பொதுப் புத்தியை ஏற்படுத்திவிட பெரும்பான்மை இந்திய ஊடகங்களும் பெரும்பான்மை அரசியல்வாதிகளும் பெரும்பாடு படுகிறார்கள் என்பதோடு அதில் அவர்கள் பெருமளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

இந்தியாவை நாசப் படுத்த ஒவ்வொரு முறை முயற்சி நடக்கிறபோதும் ஏற்படும் இந்தியக் கோபத்தை ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் மேல் மடை மாற்றம் செய்வதில் இவர்கள் பெருமளவு வெற்றி கண்டிருக்கிறார்கள் என்பதுதான் அக்கறையுள்ளவர்களை கவலைப் பட வைக்கிறது.

இது ஏதோ இந்தியாவில் மட்டும்தான் என்றும் கொள்ளக் கூடாது.

இதே நேரத்தில் பாக்கிஸ்தானின் ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்தும் குழந்தைகள் கயிறு பஸ்ஸில் " காஷ்மீர் ஒங்க வீட்டுன்னு சொல்றீங்களாமே? என்று மன்மோகன் அவர்களிடம் சண்டை போட டில்லி நோக்கி வந்து கொண்டிருக்கவும் கூடும்.

வெறுப்பையும் பகையையும் விதைப்பதில் அங்குள்ள ஊடகக் காரர்களும் அரசியல்வாதிகளும் நம்மவர்களுக்கு சற்றும் இளைத்தவர்கள் அல்ல.

அவ்வப்போது இரு மருங்கிலும் இருந்து சில நல்லெண்ண முயற்சிகள் எடுக்கப் படுவதென்னவோ உண்மைதான். டில்லியும் கராச்சியும் பேருந்துகளால் இணைக்கப்பட்டதை வீச்சான நல்லெண்ண முயற்சியாகக் கொள்ளலாம். ஆனால் ஒருவருக்கொருவர் பாசத்தை பேருந்திலும் பகையை ராக்கெட்டிலும் அல்லவா பறிமாறிக் கொண்டோம்.

இப்போதெல்லாம் குழந்தைகள் பாட்டி வடை சுட்ட கதையின் முடிவை மாற்றி சொல்கிறார்கள். வடை காகத்திற்கா? நரிக்கா? என்று கேட்டால் நம்மைப் போல் அல்லாமல் "வடை பாட்டியோடது" என்று பளிச்சென சொல்கிறார்கள். இதை யாரேனும் காஷ்மீரோடு பொருத்திப் பார்த்தால் அதற்கு நாம் ஒன்றும் பொறுப்பல்ல.

பாட்டியின் உரிமை வடை என்பதை புரிந்து கொண்ட குழந்தைகள் வருங்காலத்தில் வடை யை காஷ்மீரின் குறியீடாக மட்டுமல்ல யார் பாட்டி என்பதையும் தெளிவாகத் தீர்மானிப்பார்கள்.

சிதைவுகளையும் , ரணங்களையும் , வலிகளையும் மட்டுமேஊடகங்களில் பார்க்கும் வாய்ப்பை பெற்ற நமக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் கொண்டு வந்து சேர்க்கக் கூடிய நிகழ்ச்சிகளும் இருக்கவே செய்கின்றன. அப்படிப் பட்ட நிகழ்ச்சிகள்தான் மத வெறியின் வேரினை அசைக்கும். அது மாதிறி நல்லவைகள் கிடைத்து விட்டால் அவைகளை முடிந்த அளவிற்கு கொண்டு போய் சேர்த்து விட வேண்டும். அப்படிப் பட்ட ஒன்றோடு முடிக்கிறேன்ன்.

வெய்யில் வந்தால் மட்டுமே உருகி ஓடும் "லைடர்" நதிக் கரையில் இருக்கிறது அந்தக் கிராமம்.அந்த ஊரின் பெயரை அநேகமாக " பகல்காம்" என்று உச்சரிக்கலாம். அங்கு ஒரு சிவன் கோவில்.சற்றேரக் குறைய தொள்ளாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ராஜா ஜெய் சூர்யா அவர்களால் கட்டப் பட்டது. மிகவும் சக்தி வாய்ந்த ஆலயமாக இந்துக்களால் அதிலுங் குறிப்பாக காஷ்மீர் பண்டிட்டுகளால் நம்பப் படுகிற ஆலயம். அமர்நாத் செல்லும் பக்தர்கள் நம்பிக்கையோடு வந்து வழிபடும் ஆலயம்.

உறைந்து கிடக்கும் பனிக் கட்டிகளே போர்வை தேடும் ஒரு குளிர் காலை.அந்தக் குளிரையும் பொருட்படுத்தாது மிகுந்த பக்தியோடும் நம்பிக்கையோடும் பக்தர்கள் வரிசையில் நிற்கிறார்கள். சூட மணம் கமழ்கிறது. பூசாரி நீட்டும் ஆரத்தித் தட்டை தொட்டு மிகுந்த பக்த்தியோடு கண்களில் ஒற்றிக் கொள்கிறார்கள் பக்தர்கள்.

இன் செய்த ஜீன்ஸ் பேண்ட்டோடும் நேர்த்தியாக நறுக்கி விடப்பட்ட தாடியோடும் இருக்கிறார் பூசாரி. அவர் பெயர் "குலாம் கஸன்". ஆம் அவர் ஒரு இஸ்லாமியர்.

1989 வாக்கில் பண்டிடுகள் அந்தப் பகுதியை விட்டு புலம் பெயர்ந்தபோது அப்போதைய பூசாரி திரு. ராத கிரிஷனால் தமக்கு கையளிக்கப் பட்ட பணியினை ஈன்று வரை மிகுந்த பக்தியோடும் சிரத்தையோடும் செய்து வருகிறார்.

சொல்கிறார், " சிவன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இது பண்டிட்டுகளின் ஆலயம்.அவர்கள் நிச்சயம் வருவார்கள்". அவரது நம்பிக்கை பலிக்கட்டும்.

இந்துக்களின் சகிப்புத் தன்மையும் அரவணைப்பும் எழுத எழுத மாளாது. இந்தத் தேசம் முழுமையும் அவர்களது பெருந்தன்மையால் நிரம்பிக் கசிகிறது. ஆளாளுக்கு அவைகளையும் அவசியம் பதிவோம்.

இத்தகையப் பதிவுகள்தான் வருங்காலப் பிள்ளைகளுக்கு சரியான பாதையை காட்டும்.

நிறைய மகிழ்ச்சியாயிருக்கிறது. இரண்டாயிரமாவது பார்வையாளனாக நான். வழ்க்கமாக சலனப் படாதவன். கொஞ்சமாய் இன்று. இந்த இரண்டாயிரம் தடவைகளில் ஒரு முன்னூறு முறை நானே கடந்திருப்பேன். ஐனூறு என்றே வைத்துக் கொண்டாலும் ஆயிரத்து ஐனூறு முறை தோழர்கள் பார்த்திருக்கிறார்கள். மகிழ்ந்து, கடமைபட்டு, நன்றி சொல்கிறேன். மிக எளிமையான மொழி நடையில் பதியப் பட்ட ஆகச் சாதாரண்மான பதிவினை அன்போடு வருடிக் கொண்டாடிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இரா.எட்வின்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 784
வசிப்பிடம்: perambalur
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 17

Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum