புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Today at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Today at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:08 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனு முறைகண்ட வாசகம் Poll_c10மனு முறைகண்ட வாசகம் Poll_m10மனு முறைகண்ட வாசகம் Poll_c10 
41 Posts - 59%
heezulia
மனு முறைகண்ட வாசகம் Poll_c10மனு முறைகண்ட வாசகம் Poll_m10மனு முறைகண்ட வாசகம் Poll_c10 
22 Posts - 32%
mohamed nizamudeen
மனு முறைகண்ட வாசகம் Poll_c10மனு முறைகண்ட வாசகம் Poll_m10மனு முறைகண்ட வாசகம் Poll_c10 
2 Posts - 3%
cordiac
மனு முறைகண்ட வாசகம் Poll_c10மனு முறைகண்ட வாசகம் Poll_m10மனு முறைகண்ட வாசகம் Poll_c10 
1 Post - 1%
Geethmuru
மனு முறைகண்ட வாசகம் Poll_c10மனு முறைகண்ட வாசகம் Poll_m10மனு முறைகண்ட வாசகம் Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
மனு முறைகண்ட வாசகம் Poll_c10மனு முறைகண்ட வாசகம் Poll_m10மனு முறைகண்ட வாசகம் Poll_c10 
1 Post - 1%
Barushree
மனு முறைகண்ட வாசகம் Poll_c10மனு முறைகண்ட வாசகம் Poll_m10மனு முறைகண்ட வாசகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனு முறைகண்ட வாசகம் Poll_c10மனு முறைகண்ட வாசகம் Poll_m10மனு முறைகண்ட வாசகம் Poll_c10 
168 Posts - 55%
heezulia
மனு முறைகண்ட வாசகம் Poll_c10மனு முறைகண்ட வாசகம் Poll_m10மனு முறைகண்ட வாசகம் Poll_c10 
105 Posts - 35%
mohamed nizamudeen
மனு முறைகண்ட வாசகம் Poll_c10மனு முறைகண்ட வாசகம் Poll_m10மனு முறைகண்ட வாசகம் Poll_c10 
11 Posts - 4%
T.N.Balasubramanian
மனு முறைகண்ட வாசகம் Poll_c10மனு முறைகண்ட வாசகம் Poll_m10மனு முறைகண்ட வாசகம் Poll_c10 
11 Posts - 4%
prajai
மனு முறைகண்ட வாசகம் Poll_c10மனு முறைகண்ட வாசகம் Poll_m10மனு முறைகண்ட வாசகம் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மனு முறைகண்ட வாசகம் Poll_c10மனு முறைகண்ட வாசகம் Poll_m10மனு முறைகண்ட வாசகம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
மனு முறைகண்ட வாசகம் Poll_c10மனு முறைகண்ட வாசகம் Poll_m10மனு முறைகண்ட வாசகம் Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
மனு முறைகண்ட வாசகம் Poll_c10மனு முறைகண்ட வாசகம் Poll_m10மனு முறைகண்ட வாசகம் Poll_c10 
1 Post - 0%
cordiac
மனு முறைகண்ட வாசகம் Poll_c10மனு முறைகண்ட வாசகம் Poll_m10மனு முறைகண்ட வாசகம் Poll_c10 
1 Post - 0%
JGNANASEHAR
மனு முறைகண்ட வாசகம் Poll_c10மனு முறைகண்ட வாசகம் Poll_m10மனு முறைகண்ட வாசகம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனு முறைகண்ட வாசகம்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:41 am

காப்பு
நேரிசை வெண்பா

அன்ன வயல்சூழ் அணியாரூர் வாழ்மனுவாம்
மன்னன் முறைகண்ட வாசகத்தைப் - பன்னுதற்கு
நேய மிகத்தான் நினைப்போர்க் கருள்புழைக்கைத்
து‘ய முகத்தான் துணை.

கங்கைச் சடையான்முக் கண்ணுடையான் அன்பர்தம்முள்
அங்கைக் கனிபோல் அமர்ந்திருந்தான் - அங்கை
முகத்தான் கணங்கட்கு முன்னின்றான் மூவாச்
சுகத்தான் பதமே துணை.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:42 am

கடல்சூழ்ந்த உலகத்திலுள்ள எல்லாத் தேசங்களிலுஞ் சிறப்புடையதாய், காவிரி என்னுந் தெய்வத்தன்மையுள்ள நதியினால் எந்தக் காலத்திலுங் குறைவுபடாத நீர்வளப்ப முடையதாய் வாழைச் சோலை, பலாச்சோலை, மாஞ்சோலை, தென்னஞ்சோலை, கமுகஞ்சோலை, கருப்பஞ்சோலை முதலாகிய பலனுள்ள சோலைகள் அணியணியாக ஒன்றையொன்று சூழ்ந்தோங்க, அசோகு, குருக்கத்தி, சண்பகம், பாதிரி முதலான விருக்ஷங்களால் நெருங்கி, வண்டுகள் பாடுகின்ற மலர்ச்சோலைகளும், தாமரைத் தடாகங்களும், நீர் நிறைந்து அல்லி நீலம் முதலான புட்பங்கள் மலர்கின்ற ஓடைகளுடத, பொய்கைகளும், ஏரிகளும், குளங்களும் பலவிடங்களிலு முள்ளதாய், செந்நெல் முதலாகிய பயிர்கள் மாறாது முப்போகமும் விளைகின்ற குறைவற்ற விளைவையுடைய வயல்கள் நெருங்கி யுள்ளதாய், சிதம்பரம், பஞ்சநதம், மத்தியார்ச்சுனம், சம்புகேச்சுரம் முதலான திவ்வியக்ஷேத்திரங்கடள இடையிடையி லுள்ளதாய், இல்லற தருமத்தில் எள்ளளவும் பிழைபடாது செல்வத்திலும் கல்வியிலும் நிறைவுள்ள குடிகளுக்கிடமானதாய், பல வளப்பங்களுங் கொண்டு பூமிதேவிக்கு முகம்போல விளங்குகின்ற சோழதேசத்தில்; பாதாளலோகத்தைப் பார்த்திருக்கின்ற ஆழமுள்ள அகழியினாற் சூழப்பட்டு, இந்திரலோகத்தை எட்டிப்பார்க்கின்ற உன்னதமுள்ள கோபுரங்களையுடைய மதிலும், உய்யானம் நந்தவரீளீ பூஞ்சோலை முதலானவைகளும்,தெய்வதீர்த்தம், பிரமதீர்த்தம், வசந்தவோடை, செங்குவளையோடை முதலான நீர்நிலைகளு முள்ளதாய், தேர்நிலைகள், யானைக் கூடங்கள், குதிரைப்பந்திகள், சேனையிடங்கள், ஆஸ்தான மண்டபம், அரசமண்டபம், விசித்திரமண்டபம், விநோதமண்டபம், நியாயமண்டபம், நிருத்தமண்டபம், கல்விமண்டபம், கணக்கறிமண்டபம், பாடல்மண்டபம், பரிசனமண்டபம், சித்திரைமண்டபம், தேவாசிரியமண்டபம், சித்திரத்தெற்றி, சிலம்பக்கூடம், ஆயுதச்சாலை, அமுதசாலை, அறச்சாலைகளும் உடையதாய், ரத்ன பீடிகைகளும், கனக மாளிகைகளும், பளிங்கு மாடங்களும், மணிப்பந்தல்களும், மகரதோரணங்களும், மங்கல கோஷங்களுமுள்ள கடைவீதி, கணிகையர்வீதி, சூத்திரர்வீதி, வைசியர்வீதி, அரசர்வீதி, அந்தணர்வீதி, ஆதிசைவர்வீதி, சைவர்வீதி, வைதிகர்வீதி, தபோதனரிருக்கை, சைவமுனிவர்மடம், உட்சமயத்தார் உறையுள் முதலான வளப்பங்களை உடையதாய், தியாகராஜப்பெருமான் எழுந்தருளிய கமலாலயம் என்னும் திருக்கோயிலை உள்ளே உடையதாய், சோழராஜர்கள் பரம்பரையாக அரசாட்சி செய்வதற்கு உரிய ராஜதானியாய், நிலமகள் திருமுகத்திலிட்ட திலகம் போல் விளங்கிய திருவாரூர் என்கிற நகரத்தில்;

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:43 am

மூன்று சுடர்களிலும் முதற்சுடராகிய மேன்மையடைந்த சூரியகுலத்திற் பிறந்து அரசாட்சி செய்துவந்த சோழராஜர்களில் சிறந்தவராய், அறுபத்து நான்கு கலைகளிலும் வல்லவராய், உயிருக்கு உறுதியைத் தருகின்ற நல்ல கேள்விகளை யுடையராய், எல்லா உயிர்களுக்கும் இதஞ்செய்கின்றவராய், வேதமோதுதலும், யாகஞ்செய்தலும், இரப்பவர்க்கீதலும், பிரஜைகளைக் காத்தலும், ஆயுதவித்தையில் பழகுதலும், பகைவரை அழித்தலும் என்னும் ஆறு தொழில்களும், வீரமுள்ள சேனைகளும், செல்வமுள்ள குடிகளும், மாறாத பொருள்களும், மதிநுட்பமுள் மந்திரியும், அன்புள்ள நட்பும், பகைவரால் அழிக்கப்படாத கோட்டையும் உடையவராய், வழக்கை அறிவிப்பவரையும் தங்களுக்குள்ள குறையைச் சொல்லிக்கொள்பவரையும் இலேசிலே தமது சமுகத்துக்கு அழைப்பித்து அந்த வழக்கைத் தீர்த்தும் அக்குறையை முடித்துங் கொடுப்பவராய், பாலொடு பழஞ்சேர்ந்தாற்போல முகமலர்ச்சியோடு இனியவசனஞ் சொல்லுகின்றவராய், பின்வருவதை முன்னே அறிந்துகொள்வதும் உறவினர், அயலார், சினேகர், பகைவர், இழிந்தோர், உயர்ந்தோர் முதலான யாவரிடத்தும் காலவேற்றுமையாலும், குணவேற்றுமையாரும் உண்டாகின்ற நன்மை தீமைகளை உள்ளபடி அறிந்து கொள்வதுமாகிய விவேகமுள்ளவராய், அகங்காரம் காமம் கோபம், லோபம் மோகம் பொறாமை வஞ்சகம் டம்பம் வீண் செய்கை முதலான குற்றங்களைத் தினையளவுங் கனவிலும் காணாதவராய், துர்க்குணங்களையுடைய சிறியோர்களைச் சேர்த்துக் கொள்வதை மறந்தாயினும் நினையாமல் நற்குணங்களில் நிறைந்து செய்வதற்கு அரிதான செய்கைகளையுஞ் செய்து முடிக்கவல்ல பெரியோர்களைச் சகாயமாகக் கொண்டு செய்யத்தக்க காரியங்களைத் தெரிந்து செய்தும், செய்யத்தகாத காரியங்களைத் தெரிந்து விடுத்தும், பகைவலியும் தன்வலியும் துணைவலியும் காலநிலைமையும், இடநிலைமையும் அறிந்து காரியங்களை நடத்தியும், அடுத்தவர்களது குணம் வல்லமை ஊக்கம் முதலான தன்மைகளை ஆராய்ந்து தெளிந்து அவரவர் தரங்களுக்குத் தக்க உத்தியோகங்களை அவரவர்க்கக் கொடுத்தும், பழமைபாராட்டியும், சுற்றந்தழுவியும், கண்ணோட்டம் வைத்தும், சாதியியற்கை, ஆசிரமவியற்கை, சமயவியற்கை, தேசவியற்கை, காலவியற்கை, முதலான உலகியற்கைகளை அறிந்து அவ்வவற்றிற்குத் தக்கபடி ஆராய்ந்து செய்தும் நல்லொழுக்கத்துடன் நடப்பவராய், குடிகளுக்கு அணுவளவு துன்பம் நேரிடினும் அதை மலையளவாக எண்ணித் தமக்கு வந்ததுபோல் இரக்கங்கொண்டு மனமுருகுவதனால் தாயை யொத்தவராய்,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:43 am

அத் துன்பத்தைவிட்டு இன்பத்தை அடையத்தக்க நல்வழியை அறியும்படி செய்விப்பதனால் தந்தையை யொத்தவராய், அவர்களுக்கு அந்த நல்வழியைப் போதித்து அதிலே நடத்துகின்றபடியால் குருவை யொத்தவராய், அந்தக் குடிகளுக்கு இகபர சுகத்தைக் கொடுப்பதற்கு முன்னின்று அது பற்றி முயற்சி செய்யும்போது வரும் இடையூறுகளை நீக்குகின்றபடியாலும் அந்த ஒழுக்க வழியிலிருந்து தவறினால் அந்தக் குற்றத்துக்குத் தக்க தண்டனை யொத்தவராய், குடிகளுக்கு ஆபத்து நேரிடும்போது கட்டியவஸ்திரம் அவிழ்ந்தவன் கைபோல் உடனே அந்த ஆபத்திலிருந்து நீங்கும்படி காரியமது என்று காட்டுகிறபடியால் கண்போன்றவராய், குடிகளுக்கு அச்சம் அவலம் முதலானவை நேரிடாமல் காத்து வருதலால் உயிர் போன்றவராய், குடிகள் தம்மை நினைக்குந்தோறும் 'இப்படிப்பட்ட நற்குண நற் செய்கைகளையுடைய புண்ணியமூத்த்தையை அரசனாகப் பெற்ற நமக்குடக குறை யொன்றுடத இல்லை' என்று களிக்கின்றபடியால் பொன்புதையலை யொத்தவராய், கைம்மாறு வேண்டாது கொடுத்தலால் மேகத்தை யொத்தவராய், அறிவே ஆயிரங் கண்களாகவும் கைகளே கற்பகமாகவும் கண்களே காமதேனுவாகவும் திருமுகமே சிந்தாமணியாகவும் மனோதிடமே வச்சிராயுதமாகவுங் கொண்டபடியால் இந்திரனை யொத்தவராய், சிங்காதனமே செந்தாமரையாகவும் அறம் பொருள் இன்பம் வீடென்னுடத நான்கு பொருளுடம் அடைதற்குரிய நான்கு மார்க்மே நான்கு முகமாகவுங்கொண்டு அந்தந்த மார்க்கங்களில் அந்தந்தப் பொருள்களை விருத்தி பண்ணுகிறபடியால் பிரமனை யொத்தவராய், ஆக்கினாசக்கரமே சக்கராயுதமாகவும் செங்கோலே திருமகளாகயும் சிறந்த பெரும்புகழே திருப்பாற்கடலாகவும் யுக்தமல்லாத காரியங்களை யொழிந்திருப்பதே யோகநித்திரை யாகவுங் கொண்டு மண்ணுலகிலுள்ள உயிர்களைக் காத்து வானுலகிலுள்ள தேவர்களுக்கு யாகங்களால் அமுது கொடுத்து வருகின்றபடியால் திருமாலை யொத்தவராய், சோர்வில்லாமை து‘ய்மை வாய்மை என்னும் மூன்றுமே மூன்று கண்களாவும் துணிவுடைமையே சூலமாகவுங் கொண்டு பாவங்களை யெல்லாம் நிக்கிரஞ் செய்து வருகின்றபடியால் உருத்திர மூர்த்தியை யொத்தவராய், வாட்டத்தை நீக்கி மகிழ்ச்சி செய்கின்ற அருளுள்ள படியால் அமுதத்தை யொத்தவராய், சிவபக்தியில் மிகுந்தவராய், பொறுமையில் பூமியை யொத்தவராய், தருமமே உருவாகக் கொண்டு நடுநிலையிலிருந்து மனுநீதி தவறாது விளங்கிய மனச்சோழர் என்னும் பெயரையுடைய சக்கரவர்த்தியானவர், கலிங்கர் குலிங்கர் வங்கர் கொங்கர் அச்சியர் கொச்சியர் தெங்கணர் கொங்கணர் தெலுங்கர் முதலான தேசத்தரசர்க ளெல்லாம் திறைகட்டி வணங்க, உலக முழுவதையும் ஒருகுடை நிழலில் வைத்துச் செங்கோல் செலுத்தி அரசாட்சி செய்யுங்காலத்தில்: உலகமெங்கும் புலியும்பசுவும் கூடிப்போய் ஒரு துறையில் நீர்குடித் துலாவியும், சிங்கமும் யானையும் சேர்ந்து திரிந்தும், பருத்துங் கிளியும் பழகி மகிழ்ந்தும், கூகையுங் காகமும் கூடிப் பறந்தும், பூனையும் எலியும் பொருந்தி யிருந்தும், இந்தப்படி மற்றுமுடளள விரோதமாகிய உயிர்களுடத ஒன்றுக் கொன்று விரோதமில்லாமல் சினேகஞ்செய்து வாழ்ந்திருக்கவும்,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:43 am

மரங்கள் புல்லுகள் முதலான நடையில்லாத உயிர்களும் வாடுதல் உலர்தல் உதிர்தல் வெட்டுண்ணல் முதலான குறைகளில்லாமல் வளர்ந்தோங்கி வாழ்ந்திருக்கவும், பெருங்காற்று பெருவெள்ளம் பெருமழை தீப்பற்றல் இடிவிழுதல் முதலான உற்பாதங்கள் சிறிதுமில்லாமல் சுகுணமான காற்றும் மிதமான வெள்ளமும் பருவமழையும் தவறா மல் உண்டாயிருக்கவும், பசிநோய் உடம்புநோய் அவமிருந்து உயிரச்சம் முதலான துக்கங்களொன்றுடத சேராமல் சுகமே சூழ்ந்திருக்கவும், பிரம க்ஷத்திரிய வைசிய சூத்திரர் என்கின்ற ஜாதியாரும், பிரமசாரி கிரகஸ்தன் வானப் பிரஸ்தன் சந்நியாசி என்கின்ற ஆசிரமத்தாரும், சைவர் வைணவர் வைதிகர் என்கின்ற சமயத்தாரும், தங்கள் தங்களுக்குரிய ஆசாரங்களில் குறைவுபடாமல் வாழ்ந்திருக்கவும், அன்னதானம் சொர்ணதானம் கோதானம் பூதானம் முதலான தானங்களும் தேவாலயங் கட்டுவித்தல் திருக்குளமெடுத்தல் செழுஞ்சோலை வைத்தல் தண்¬ர்ப்பந்தல் வைத்தல் சத்திரங் கட்டுவித்தல் முதலான தருமங்களும், சாந்திராயண முதலான விரதங்களும், தியானஞ்செய்தல் ஜெபஞ்செய்தல் முதலான தவங்களும் தவறுபடாமல் ஓங்கியிருக்கவும், தியாகேசப் பெருமானுக்கும் மற்றுமுள்ள தெய்வங்களுக்கும் திரிகால பூசைகளும் திருப்பணிகளும் திருவிழா முதலான சிறப்புகளுடத குறைவில்லாமல் நடக்கவும் அவரது ஆக்கினையே செய்வித்து வந்தது.

அவர் ஆளுகைக்குட்பட்ட உலகங்களில், பூவே பறிபடுவது, புனலே சிறைபடுவது, காற்றே அலைபடுவது, கல்லே கடின முடையது, மாவே வடுப்படுவது, வாழையே குலைபடுவது, வண்டே மதுவுண்பது, நெற்கதிரே போர்படுவது, வயலே வளைபடுவது, மாதரிடையே குறைபடுவது, தரித்திரமே தரித்திரப்படுவது, துக்கமே துக்கப்படுவது பொய்யே பொய்படுவது. இவையல்லாமல், பொருள் பறிக்கப்படுவோரும், சிறைச்சாலையில் வைக்கப்படுவோரும், பகைவரால் அலைக்கப்படுவோரும், கடின மனமுள்ளவர்களும், வடுப்படுவோரும், கட்டுண்போரும், குத்துண்போரும், போரிற்படுவோரும், வளைபடுவோரும், குறைபடுவோரும், தரித்திரப்படுவோரும், துக்கப்படுவோரும், பொய்படுவோரும் வேறேயில்லாமல் மேன்மையே விளங்கியிருந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:44 am

இந்தப் பிரகாரமாக மந்திரி முதலான உறுதிச் சுற்றங்களுடன் உலகாண்டிருந்த அம் மனுச்சோழரென்னும் சக்கரவர்த்தியானவர் புத்திரப் பேறில்லாமல் மனம் வருந்தி அதுபற்றியும் அறுபது வருஷ காலமாக அனேக தானங்களும் தருமங்களும் யாகங்களும் விரதங்களுஞ் செய்தும் புத்திரோற்பத்தி இல்லாமையால், "புத்திரச் செல்வம் பெறாதவர் பொருட்செல்வம் பெற்றும் பயனில்லையே; புத்திரன்போல் நமக்கு இந்த அரசச் செல்வம் இம்மை மறுமை இன்பங்களைக் கொடாதே; சந்ததியில்லாவிட்டால் பிற்காலத்தில் கண்களில்லாத முகமும் சூரியனில்லாத பகலும்போல, அரசனில்லாது இவ்வுரகந் தலைதடுமாறிப்போமே; ஆதலால் இனிப் புத்திரனைப் பெற்றுக் கொள்வதற்குத் தக்க முயற்சி நமது ஆண்டவனாகிய தியாகராஜப் பெருமானை வழிபடுதே யல்லது வே றொன்றுமில்லை; ஆனால் மோக்ஷப் பேறு குறித்து நிஷ்காமியமாக இத்தனை நாளும் வழிபட்டு வந்த நாம் இப்போது புத்திரப்பேறு குறித்துக் காமியமாக நமதாண்டவனை வழிபடுவது தகுதியல்ல வாயினும், 'தீராக் குறைக்குத் தெய்வமே முடிவு' என்கின்றபடி எவ்விதத்திலும் தீராத புத்திரனில்லாக் குறையைச் சிவ பெருமானது திருவருளாலேதான் தீர்த்துக்கொள்ள வேண்டும்" என்று ஆலோசித்துத் துணிவுகொண்டு, தமது மனைவியாருடன் ஆகமவிதிப்படி கமலாலயம் என்னும் புண்ணிய தீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்து பயபக்தியுடன் பூங்கோயிலைப் பஞ்சாவரண வலமுஞ் செய்து உட்புகுந்து, தியாகராஜப் பெருமானது சந்நிதிக்கெதிரே அஷ்டாங்க பஞ்சாங்கமாக நமஸ்கரித்து, வணங்கிய முடியும், மலர்ந்த முகமும், நீர் பொழிகின்ற கண்ணும், துதிக்கின்ற நாவும், கூப்புகின்ற கையும், புளகமெழும்புகின்ற உடம்புங் கொண்டு நின்று, 'புத்திரப் பேறில்லாத குறையைத் தீர்த்தருள வேண்டும் என்று விண்ணப்பித்துப்பலவிதமாகத் தோத்திரஞ்செய்து தமது அரண்மனைக்குச் சென்று இந்தப் பிரகாரமே நாள்தோறும் போய் வழிபட்டுப் பிரார்த்தித்துக் கொண்டே வந்தார். அவர் செய்யும் வழிபாட்டுக்கும் வந்தனைக்கும் இரங்கித் தியாகராஜப் பெருமான் புத்திரப் பேறுண்டாகும்படி அனுக்கிரகஞ்செய்ய, அந்த அனுக்கிரகத்தால் மகாராஜனுக்கு மகிழ்ச்சியுண்டாகும்படி வலம்புரிச் சங்கு விலையுயர்ந்த வெண்முத்தினைக் கருப்பங்கொண்டதுபோலத் தேவியார் தமது திருவயிற்றில் கருப்பங்கொண்டு, பத்து மாதமுஞ் சென்று நல்ல சுபதினத்தில், தர்மதேவதை தாண்டவமாடவும் வானகத்தார் மலர் சொரிந்து வாழ்த்தவும் வையகத்தார் மனங் களிக்கவும், அதிதியாரானவர் ஆதித்தனைப் பெற்றதுபோலவும் மல்லிகைக்கொடி மணமுள்ள மலரைப் பூத்ததுபோலவும், எவ்வௌர்களும் அதிசயிக்கத் தக்க சர்வ லட்சங்களும் நிறைந்த வடிவுடளள ஒரு புத்திரனைப் பெற்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:44 am

புத்திரன் பிறந்த சந்தோஷமான சமாசாரத்தைப் பாங்கிகள் அதிசீக்கிரமாக வந்து தம்மை மறந்த மனக் களிப்புள்ளவர்களாக எதிர் நின்று "ஆண்டவனே! எங்கள் தலைவியார் திருவயிற்றிலிருந்து தேவரீர் புகழே வடிவாகவும் புண்ணியமே உயிராகவும் கொண்டு பொன்னலகத்தைக் காக்கின்ற புரந்தரனும் நாணமடையப் பூவுலகத்தைக் காக்கத் தக்க வல்லமையுள்ள புத்திர சிகாமணி உதயஞ்செய்தது" என்று விண்ணப்பஞ்செய்யக் கேட்ட மனுச்சக்கரவர்த்தியானவர், து‘ரதேசத்திற் போயிருந்த கப்பல் துறைமுகத்தில் வந்ததென்று சொல்லக்கேட்ட வர்த்தகனைப் போலவும், கூடிப் பிரிந்த மங்கையின் குரலோசை கேட்ட நாயகனைப்போலவும், தாகங்கொண்டு தவிக்குங் காலத்தில் சமீபத்தே தண்-ருண்டென்று சொல்லக்கேட்ட தேசசஞ்சாரியைப் போலவும், மனங்குளிர்ந்து உடல் பூரித்து அளவிடப்படாத களிப்புடையவராய், அந்தப் பாங்கிகளுக்கு விலையுயர்ந்த ஆடையாபரணங்களை வெறுப்படையும்படி பரிசு கொடுத்து, தாம் நீராடி நியமங்கள் முடித்து, வேதவித்துக்களாகிய பிராமணர்களுக்கு விதைதானம் சொர்ணதானம் கன்னிகாதானம் அசுவதானம் கஜதானம் பூதானம் கோதானம் முதலான தானங்களைக் கொடுத்து, புத்திரன் பிறந்த நாள்தொட்டுப் பன்னிரண்டு வருஷமட்டுங் குடிகள் வரிகொடாமல் சர்வ மானியமாகத்தாமே அனுபவித்துக்கொள்ளவும், திறை கட்டி வரும் அரசர்கள் ஏழு வருஷமட்டும் அந்தத் திறைகளைக் கட்டாமல் தாங்களே எடுத்துக்கொள்ளவும், சிறைச்சாலையிலிருந்த சத்துருக்களை விட்டுவிடவும், பொக்கிஷசாலையைத் திறந்துவிட்டு நகரிலும் நாட்டிலும் உள்ளோர் யாவரும் தங்கள் தங்களுக்க வேண்டிய மட்டில் ஏழு நாள் வரையில் எடுத்துக் கொண்டு போகவும், தேவாலயங்களிலெல்லாம் புதிதாகத் திருப்பணிகளும் திரு விழா முதலான சிறப்புகளும் செய்விக்கவும் கட்டளையிட்டு, பின்பு தாம் முன் தேடிவைத்த திரவியத்தைத் தெரியக் கண்டு கொண்டவனைப்போலத் திரை மறைவிலிருந்த அச்செல்வக் குழந்தையை வெளிப்படக்கண்டு மனமகிழ்ச்சியடைந்து இளஞ் சூரியோதயம்போல இந்தப் புத்திரன் இவ்விடத்தில் உதயஞ்செய்தது சிவானுக்கிரகமேயல்லது வேறல்லவென்று வியப்படைந்து, சோதிட சாஸ்திரங்களில் வல்லமையுள்ள பெரியோர்களைக் கொண்டு ஒப்பற்ற செல்வம் கல்வி வெற்றி முதலிய அதிர்ஷ்டங்கள் நடனஞ் செய்கின்ற சாதக பலனைக் கறித்து, தியாகராஜப் பெருமானது திருவருளால் வந்ததுபற்றி அக்கடவுளின் திருப்பெயர் கொண்டு வீதிவிடங்கள் என்னும் நாமகரணமும் அன்னப்பிராசனம் சௌளம் முதலான சடங்குகளும் மிகுந்த விபவமாகவும் வேதயுக்தமாகவம் அது அது செய்யத்தக்க பருவங்களில் செய்வித்து, அந்தப் புதல்வனை வாச நீராட்டுவித்தும், இனிய உணவுகளை ஊட்டுவித்தும், பொன்னாலும் இரத்தினங்களாஞ் செய்த பூஷணங்களைப் பூட்டுவித்தும், மார்மேலும் தோள்மேலும் மடிமேலும் வைத்து வைத்து முத்தாடியும் திருந்தாத குதலைச் சொற்களைக் கேட்டு மகிழ்ந்தும், கற்பக விருக்ஷத்தின் கனியைக் கேட்கினும் அந்தக் கணமே தருவித்துக் கொடுத்தும், சிறிய விளையாடல்களைச் செய்யக் கண்டுகளித்தும், கற்புள்ளவன் கணவனை உபசரிப்பதுபோல் உபசரித்தும், படிப்பில் ஆசையை வைத்தவன் பாடத்தைப் பாராட்டுவது போலப் பாராட்டியும், தன்னை உயர்ந்தவனாக்க நினைத்தவன் தருமத்தை வளர்ப்பதுபோல வளர்த்தும், முன் சிறுமையடைந்து பின் செல்வத்தைப் பெற்றவன் அச்செல்வத்தைப் பாதுகாப்பதுபோலப் பாதுகாத்தும், புத்திரசம்பத்தினால் வரும் பயனை அடைந்தவரா யிருந்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:44 am

இந்தப்படி இணையில்லாத செல்வப் பெருக்கத்தினால் வளர்க்க வாழையிளங் குருத்துப் போல வளர்ந்து வருகின்ற புத்திரனுக்கு, ஐந்தாம் வயதில் அட்சராப்பியாசஞ் செய்வித்து, ஏழாம் வயதில் சகல தேசத்தரசர்களுக்குந் தெரிவித்து, நகரை அலங்காரஞ் செய்வித்து பத்மராகம் கோமேதகம் வயிம் வைடூரியம் முதலான இரத்தினகசிதமான கல்யாண மண்டபத்தில் வேத வேதாங்கங்களில் வல்லவரான பிராமணர்களும் சாபானுக்கிரக சாமர்த்தியமுள்ள தபோதனர்களும் ஆசீர்வதிக்கவும் மன்னர் மண்டலீகர் பட்டவர்த்தனர் மகுடவர்த்தனர் அமைச்சர் உறவினர் சினேகர் முதலானவர்கள் கண்டு களிக்கவும் சுமங்கலப் பெண்கள் சோபனம் பாடவும் பேரி, சங்கம், மிருதங்கம் முதலான மங்கல வாத்தியங்கள் முழங்கவும் நல்ல சுப முகூர்த்தத்தில் வேதவிதிப்பிரகாரம் உபநயன கல்யாணஞ் செய்வித்து, பலவகைத் தானங்களும் செய்து சகல வேதாகம சாஸ்திரங்களிலும் வல்லமையுள்ள ஆசாரியரைக் கொண்டு வித்தியாரம்பஞ் செய்வித்தார். சில நாள்களுக்குள்ளே வீதிவிடங்கனென்னும் அப்புத்திரனானவன் வேதங்கள் சாஸ்திரங்கள் புராணங்கள் ஸ்மிருதிகள் இதிகாசங்கள் முதலான கலைகளில் ஆசாரியனைப் பார்க்கிலும் எண்மடங்கு வல்லமையுள்ளவனாகி யானையேற்றம், குதிரையேற்றம், ரதாரோகணம், வில்வித்தை, வாள்வித்தை இந்திரஜாலம், மகேந்திரஜாலம் முதலான ஸமஸ்த வித்தைகளையுங் குறைவறக் கற்றுக்கொண்டு, ஆதிசேடனைப்போல் அறிவும், காமனைப்போல் கட்டழகும், ஆண்சிங்கம் போல் ஆண்மையும், மதயானைபோல் நடையும், மார்த்தாண்டன்போல் வாய்மையும், கற்பகவிருக்ஷம்போல் கொடையும் உடையவனாகி; சிவபக்தி, சீவகாருண்ணியம், பொறுமை, அன்பு, ஆசாரம், ஒழுக்கம் ஊக்கம், சாந்தம், சற்சனநேயம் முதலான நற்குணங்களுடன் உயிர்க்கு முடிவு நேரிடுமானாலும் உண்மையே பேசுவதும், உறுதியே சொல்லுவதும், இன்சொல்லே கூறுவதும், இதமே செய்வதும், பயனுடளள காரியங்களை பாராட்டுவதும், பிராமணர் தவத்தோர் முதலான பெரியோர்களைக் கண்டால் அன்போடும் அச்சத்தோடும் எதிர்கொண்டு தலையால் வணங்கி வாயால் வாழ்த்துவதுமாகிய நற்செய்கைகளைப் பெற்று மாதா பிதாக்களது மனக்குறிப்பறிந்து அவர் இச்சையின்வழி நடந்து மகிழும்படி செய்வித்து, இளமைப் பருவத்திற்றானே எல்லாம் அறிந்தவனாகி, கண்டோர் கொண்டாடவும் கேட்டோர் மனங் களிக்கவும், இளவரசுப் பட்டத்துக்குத் தகுந்த பருவத்துட னிருந்தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:44 am

அப்படியிருந்த நாள்களில் ஒருநாள் அவ் வீதிவிடங்கனென்னும் இராஜபுத்திரன் தன் பருவத்துக்கொத்த இராஜகுமாரர்களும் மந்திரிகுமாரர்களும் சூழ்ந்துவர தன் பிதாவாகிய மனுச்சோழருடைய சமுகத்துக்கு வந்து பிதாவினது திருவடிகளுக்கு அஷ்டாங்க பஞ்சாங்கமாகத் தண்டனிட்டு எழுந்து து‘சொதுக்கியும் உடம்பொடுக்கியும் கைகட்டியும் வாய்புதைத்தும் எதிரே நிற்க அப்போது மனுச்சக்கரவர்த்தியானவர் நெடுநாள் பிரிந்திருந்த கன்னறினைக் கண்ட பசுவைப்போலவும் இடந் தெரியாதிருந்த புதையலை யெதிர்ப்படக் கண்டவனைப் போலவும் கண்கள் களிகூரக் கண்டு, உள்ளமும் உடலும் பூரித்துக் தமது இரண்டு கைகளாலும் தழுவி அணைத்தெடுத்து மடிமேல் வைத்து உச்சிமோந்து முதுகைத் தடவி "எனக்கு நெடுநாளாக விருந்த மனக்குறையைத் தவிர்த்து இம்மை மறுமைப் பயனைக் கொடுக்கும்படி பிறந்த அருமையாகிய அமுதத்தை யொத்த என் புத்திரனே! உன் மனதில் ஏதோவொரு எண்ணமுண்டானதாகத் தோன்றுகின்றது; அவ்வெண்ணம் இன்னதென்று வெளிப்படுத்த வேண்டும்" என்று கேட்க, அது கேட்ட வீதிவிடங்கன் "மூன்றுலகத்திலுங் கேடில்லாத கீர்த்தியை நாட்டிய பெருந்தன்மையுடைய தேவரீரைப் பிதாவாகப் பெற்ற அடியேனுக்கு எண்ணங் கொள்வதற்கு என்ன குறையிருக்கின்றது? நமது குலதெய்வமாகியும் இஷ்ட தெய்வமாகியும் கமலாலயத்தில் எழுந்தருளிய தியாகராஜப் பெருமானைத் தரிசித்துவர வேண்டுமென்னும் எண்ணம் ஒன்றுமாத்திரமுண்டு; இவ்வெண்ணம் இடையூறில்லாமல் நிறைவேறும்படி தேவரீர் திருவுள்ளங் கொள்ளவேண்டும்" என்று விண்ணப்பஞ் செய்தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:44 am

அது கேட்டு அரசானாவர் "சர்வ வல்லமையுள்ள சுயம்புவாகியும் கருணைக்கடலாகிய கடவுளாகியும் பிள்ளைக்கலி தீர்த்த பெருமானாகியும் விளங்கிய தியாகராஜப் பெருமானைச் சேவிப்பதற்குத் தடையுண்டோ? தனக்கிணையில்லாத தரும மூர்த்தையைத் தரிசிக்க வேண்டுமானால் தடுப்பவர் யார்? புண்ணியந் தேடப் புத்திரன் தொடங்கினால் தந்தை தடை செய்வானோ? நானே கற்பிக்கவேண்டிய நல்விஷயத்தை நீயே தெரிந்து செய்யத் தொடங்குவது நான் பூர்வஞ்செய்த புண்ணியமல்லவோ? 'பிள்ளை தேடும் புண்ணியம் பிதாவுக்கும் உண்டு' என்று பெரியோர் சொல்வது பிழைபடாதென்பதை நானறியனோ? நெல் முதலான பயிர்க்கு நீர்விடுவோரையும், குருடர்க்குக் கோல் கொடுப்போரையும், இரவில் வந்தவர்க்கு இடங் கொடுப்போரையும், அஞ்சி வந்தடுத்தவர்க்கு அபயம் கொடுப்போரையும், தாகங் கொண்டோர்க்குத் தண்¬­ர் கொடுப்போரையும், பசிகொண்டு பரிதபிப்போர்க்கு அன்னங் கொடுப்போரையும், சேற்றில் விழுந்து திகைக்கின்றோர்க்குக் கைகொடுப்போரையும், ஆற்று வெள்ளத்தில் அகப்பட்டோரைக் கரையேற்றுவோரையும், சத்திரங்கட்டித் தருமஞ் செய்வோரையும் தடுத்தாலும், குருதரிசனம் சிவஞானிதரிசனம் சிவதரிசனம் செய்வோரை ஒருகாலுந் தடுக்கப்படாது; ஆதலால் புத்திரனே உனக்குவேண்டிய சிறப்புக்களுடன் சுகமாய்ப்போய் ஆண்டவனைத் தரிசனஞ் செய்து சிவஞானமும் தீர்க்காயுளும் பெற்று வருவாய்" என்று கட்டளையிட்டார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக