புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனு முறைகண்ட வாசகம் - Page 4 Poll_c10மனு முறைகண்ட வாசகம் - Page 4 Poll_m10மனு முறைகண்ட வாசகம் - Page 4 Poll_c10 
60 Posts - 48%
heezulia
மனு முறைகண்ட வாசகம் - Page 4 Poll_c10மனு முறைகண்ட வாசகம் - Page 4 Poll_m10மனு முறைகண்ட வாசகம் - Page 4 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
மனு முறைகண்ட வாசகம் - Page 4 Poll_c10மனு முறைகண்ட வாசகம் - Page 4 Poll_m10மனு முறைகண்ட வாசகம் - Page 4 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மனு முறைகண்ட வாசகம் - Page 4 Poll_c10மனு முறைகண்ட வாசகம் - Page 4 Poll_m10மனு முறைகண்ட வாசகம் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மனு முறைகண்ட வாசகம் - Page 4 Poll_c10மனு முறைகண்ட வாசகம் - Page 4 Poll_m10மனு முறைகண்ட வாசகம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனு முறைகண்ட வாசகம் - Page 4 Poll_c10மனு முறைகண்ட வாசகம் - Page 4 Poll_m10மனு முறைகண்ட வாசகம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மனு முறைகண்ட வாசகம் - Page 4 Poll_c10மனு முறைகண்ட வாசகம் - Page 4 Poll_m10மனு முறைகண்ட வாசகம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனு முறைகண்ட வாசகம்


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:41 am

First topic message reminder :

காப்பு
நேரிசை வெண்பா

அன்ன வயல்சூழ் அணியாரூர் வாழ்மனுவாம்
மன்னன் முறைகண்ட வாசகத்தைப் - பன்னுதற்கு
நேய மிகத்தான் நினைப்போர்க் கருள்புழைக்கைத்
து‘ய முகத்தான் துணை.

கங்கைச் சடையான்முக் கண்ணுடையான் அன்பர்தம்முள்
அங்கைக் கனிபோல் அமர்ந்திருந்தான் - அங்கை
முகத்தான் கணங்கட்கு முன்னின்றான் மூவாச்
சுகத்தான் பதமே துணை.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:50 am

அதுகேட்டு மற்றொரு மந்திரியானவர் அரசனைத் தொழுது "மகாராஜனே! சுருதியில் எல்லா உயிர்களையும் உயர்வு தாழ்வு நோக்காது சமனாக நோக்கவேண்டுமென்று உத்தரபாகத்தில் விதித்திருக்கின்றது அந்தணரொழுக்கத்துக் கன்றி அரசரொழுக்கத்துக்குப் பொருந்தாதே; அது பொருந்துமானால், பிராமணர் முதலான குலாசாரமும் பிரமசாரி முதலான ஆசிரம ஆசாரமும் பெரியோர் சிறியோர் நல்லவர் தீயவர் என்கிற கிரமப்பாடுகளம் வேறுபட்டு உலகநிலை தவறி அரசாட்சி மழுங்கிவிடுமே, இது ஒழுக்கத்தைக் கடக்கின்ற குற்றமென்று சொல்வதற்கு இடங் கொடுக்குமே, ஆதலால் பூர்வபாகத்தில் விதித்த விதிப்படி அறநு‘ல்களிற் குறித்த நியாயங்களைக் கொண்டு தீர்ப்பிடுவதே நெறியாகும்" என்று சொன்னார்.

அதுகேட்டு மனுச்சோழர் நகைத்து "அமைச்சரே! நீர் வழிக்குத் துணையாக வருவான்போல் வந்து நடுக்காட்டிற் பயங்காட்டிப் பணம் பறிக்கின்றவன் போலப் பயம் காட்டுகின்றீர். பரமேசுவரன் அவ்வவ்வுயிர்களிடத்திலும் வேறுபடாமல் விளங்குகின்றபடியால் எவ்வுயிர்களையும் பொதுவாக நோக்கவேண்டும் என்ற உத்தரபாகத்தின் விதியை நான் அனுசரித்துக்கொண்டது உயிர்க்கொலையாகிய பாவநிவர்த்திக்கு மாத்திரமே யல்லது மற்றெதன்றிலுமல்ல. இக் கருத்தை அறிந்து கொள்ளாமல் 'கருத்தறியாதவன் சொன்னமே கொள்வான்' என்பதுபோலக் கொண்டு ஒழுக்கங்கடந்த குற்றம் வருமென்று கூறினீர். ஆனால் மற்றவை யெல்லாம் நிற்க, கொலைப்பாதக நிவர்த்திக்கு மாத்திரம் எவ்வுயிர்களையுஞ் சமமாகக் கொள்ளவேண்டுமென்பது எவ்வகையாலென்பீரேல்: உயிர்களெல்லாஞ் சிற்சத்தியினுருவமாகலானும் எல்லா உயிர்களுக்கும் இறைவனே தனுகரணங்களைக் கொடுத்தலானும், அவனது சிற்சத்தியாகிய உயிர்களை அவன் கொடுத்தருளிய உடம்பினின்றும் நீக்குதல் நினைக்கப்படாத அபராதமாகவானும், எந்தெந்த உயிர்களும் இயல்பினால் அல்லாமல் இம்சையினால் உடம்பை விட்டுப் பிரியும்படி நேரிட்டால் அந்தந்த உயிர்களுக்கும் அவ்வவ் வுடம்பை விட்டு நீங்கும்போதுண்டாகும் வருத்தம் பெரிதாக இருக்கமாகலானும், அன்றியும் கொலை செய்யுமிடத்து, கரும்பையும் எள்ளையும் ஆலையிலுஞ் செக்கிலும் வைத்தாட்டும்போது நெருக்கிலகப்பட்டு அரைபட்டு நசுக்குண்டு சின்னாபின்னப்பட்டு அக்கரும்பிலும் எள்ளிலுமிருந்து ரசமும் நெய்யும் எப்படிக் கலங்கி வருமோ அப்படியே, உடல் நசுக்குண்டு அரைபட்டுச் சின்னமாக அதிலிருந்து நடுநடுங்கி அறிவுகெட்டுத் திகைப்படைந்து கலங்கி வருவது எவ்வுயிர்களுக்கும் பொதுவாகலானும், தமக்குக் கொலை நேரிடுவதை அறிந்தபோது உடம்பு நடுங்கியும், பதைத்தும், வியர்த்தும் தடதடத்துந் தள்ளாடியும், கால்சோர்ந்தும், கண்கலங்கியும், இருளடைந்தும், காதுகள் கும்மென்று அடைபட்டும், நாசி துவண்டும், வாய்நீருலர்ந்தும், நாக்குழறியும், வயிறு பகீரென்று திகிலடைந்தும், மனம் திகைத்துப் பறை யடித்தாற்போற் பதபதவென்று அடித்துத் துடித்துத் துக்கமுஞ் சோர்வுங் கொண்டு மயங்கவும், பாய்மரச் சுற்றி லகப்பட்ட காக்கை போலவும், நீர்ச்சுழியி லகப்பட்ட வண்டு போலவும், சுழல் காற்றில் அகப்பட்ட துரும்பு போலவும், உயிர் சுழன்று சுழன்று அலையவும் உண்டாகின்ற பயங்கரம் எவ்வுயிர்களுக்கும் இயல்பாகலானும், இறந்தவுடன் அவ்வுயிர்கள் இழப்பினாற்பட்ட இம்சையுமன்றி உடனே பிறப்பினாலும் வருத்தமடைந்து துக்கப்பட வேண்டுமாகலானும், நாம் வேண்டி ஓருயிரைப் பிறப்பிப்பதற்குடச சுதந்தரமில்லாதபடியால் நாம் வேண்டி ஓருயிரை இறப்பிப்பதற்கும் சுதந்திரமில்லை; இறப்பிப்பதற்கும் பிறப்பிப்பதற்கும் இறைவனே சுதந்தரமுள்ளவனென் றெண்ணாமல் ஆகாமியத்தால் கொலை செய்வதனால் மீளாநரகம் நேரும் என்றறிந்து கொள்வீர்; ஆதலால் எவ்வுயிர்களிடத்துங் கொலைப்பாதகத்தைச் சமமாகக் கொள்ளவேண்டும். இந்த நியாயத்தின்படி என்புதல்வனைப் பழிக்குப் பழியாகக் கொன்று விடுவதே முடிவு" என்று சொன்னார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:50 am

அதுகேட்டு வேறொரு மந்திரியானவர் மனுச்சோழரை வணங்கி "அரசனே! உமது பெயரினால் விளங்கும் மனுநு‘லிற் குடுமியையும் முகரோமத்தையும் க்ஷவரஞ் செய்து, தான் கொன்ற பசுத்தோலைப் போர்த்துப் பசுமந்தையினிடத்தில் வாசஞ் செய்து, கோசலத்தினால் ஸ்நானம் பண்ணி, இந்திரியங்களை அடக்கியிருத்தல், கஞ்சிகுடித்தல், அவிசுபண்ணியுண்டல், பட்டினியிருத்தல், பசுமந்தையினுடன் போதல், பசுக்களுக்கு உபசாரஞ் செய்தல், பசுதானஞ் செய்தல் முதலான செய்கைகளைப் பசுக்கொலை செய்தோர்க்குப் பிராயச்சித்தமாகச் செய்விக்க வேண்டு மென்று விதித்திருக்கின்றதே; அதற்கு மாறாகப் புதல்வனைக் கொலை செய்வீரானால் விதிமாறாட்டமென்னுங் குற்றம் வருவதாகத் தோன்றுகின்றதே" என்று சொன்னார்.

அதுகேட்ட மனுச்சக்கரவர்த்தியானவர் "மந்திரி! நீர் சொன்னது பால்வேண்டி யழுகின்ற குழந்தைக்குப் பழத்தை எதிர்வைத்துப் பராக்குக் காட்டுவது போலிருக்கின்றது, விதிமாறாட்டமென்னுங் குற்றம் வருவதாகத் தோன்றுகின்ற தென்று சொன்னீர். அந்த மனுநு‘ல் அநித்தயமாகிய தேகத்தில் அபிமானமும் அசுத்தமாகிய பிரபஞ்சபோகத்தில் ஆசையும் வைத்த கர்மிகளுக்கே அவ்விதி கூறிய தல்லது, நித்தியமாகிய சிவத்தில் அபிமானமும் சுத்தமாகிய சிவபோகத்தி லாசையும் வைத்த என்பிதா மூதாதை முதலானவர்களுக்குக் கூறியதல்ல. உயிர்க்கொலை நேரிட்டால் உயிர்விடக் கடவரென்றே குறிப்பினாற் கூறியிருக்கின்றது. என் பிதா மூதாதைக்கு எவ்விதியோ அவ்விதியே எனக்கும் என் புத்திரனுக்கும் வேண்டத்தக்கது. ஆதலால் விதிமாறாட்ட மாகாது. இந்த நியாயத்தால் என் புத்திரனை யிழந்து விடுவதே முடிவு" என்று சொன்னார்.

அதுகேட்ட மற்றொரு மந்திரியானவர் மகாராஜனை வணங்கி "உலகந் தோன்றியது முதல் இது பரியந்தம் தெய்வ கடாக்ஷத்தினாலும் வல்லமையினாலும் நீதியுடன் உலகாண்ட அரசர்கள் தாங்கள் ஆளுங்காலங்களிற் பசுமுதலான மிருகவர்க்கங்களுள் ஒவ்வொன்றை அகங்காரத்தால் அடித்துக் கொன்ற அந்நியமானவர்களையும் பிராயச்சித்தஞ் செய்வித்தார்களே யல்லது, கொலை செய்வித்தவர்கள் உண்டென்று கேட்டதில்லை. அப்படியிருக்க, உமது புத்திரன் இந்தப் பசுவின் கன்றைக் கொல்லவேண்டுமென்று கறுவுகொண்டு கொன்றவனல்லன். நீரெப்படி அவனைக் கொலைசெய்யும்படி தீர்ப்பிடலாம்? அவ்வாறு தீர்ப்பிட்டால் முன்னோர் செய்கைக்கு முரணான தென்னுங் குற்ற முண்டாகுமே?" என்றார். அதுகேட்டு மனுச்சோழரானவர் "மந்திரி! நீர் மரபறியாதவன் மணம் பேச வந்ததுபோற் பேசவந்தீர். முன்னோர் செய்கைக்கு முரணான தென்னுங் குற்றம் வருமே யென்றீர். ஆனால் நான் சொல்வதை நன்றாகக் கேளும். பூர்வம் என் முன்னோர்கள் ஆளுங் காலங்களில் இப்படிப்பட்ட கொலை நேர்ந்ததேயில்லை. ஏகதேசங்களில் ஒவ்வொரு கொலைப்பாதகம் நேரிட்டபோது தம்முயிரையுங் கொடுத்துப் பழிக்கு ஈடுகட்டி யிருக்கின்றார்கள். அவர்கள் நிற்க, மற்ற அரசர்களோ வென்றால் தாங்கள் ஆளுங் காலங்களில் தேசாசார முதலான கற்பனைகளைப்பற்றி நு‘தன நு‘தனமாக நியாயங்களை யேற்படுத்திக்கொண்டு அவைகளின்படி நடத்தினார்கள். அவ்வரசர்கள் என்னொடு சேர்க்கப்பட்டவர்களல்லர். ஆதலால் என் தீர்ப்பின்படி நடத்துவதே துணிவு" என்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:50 am

அதுகேட்டு மற்ற மந்திரிகளெல்லாம் சேர்ந்து வணங்கி நின்று, "மஹாராஜனே! கூறியதே கூறுகின்றார்களென்று கோபஞ் செய்யாமல் யாங்கள் சொல்லும் வார்த்தையைக் கேட்டருள்வீராக; இந்தப் பசுவோ ஐயறிவுள்ள மிருகவர்க்கத்துள் ஒன்று; இது பெற்ற கற்றோ பால் கொடுத்தற்குரிய பசுவாகத்தக்கதன்று. ஏருழுதற்குரிய எருதாகத்தக்க சேங்கன்று; உமது புத்திரனோ ஆறறிவுள்ள ஆண்மக்களிற் சிறந்த நல்லறிவுடையவன்; அவனோ அக்கன்றைக் கொல்ல வேண்டுமென்று கொன்றவனல்லன்; இக்கொலையோ கன்றினுடைய ஊழ்வினையென்று உலகமெல்லாஞ் சொல்லும்; ஆதலால் இதற்குத் தக்க பிராயச்சித்தஞ் செய்விப்பதேமுறை" என்று சொன்னார்கள்.

அதுகேட்டு அரசன் "மந்திரிகளே! நீங்கள் உண்மையைக் கண்டறிந்து சொல்வதற்குச் சக்தியற்றவர்கள்போல் இலேசாகக் சொல்லுகின்றீர்கள்; நல்லது, நான் சொல்லுகின்றதைக் கேளுங்கள். 'இப் பசுவோ ஐயறிவுள்ள மிருகவர்க்கத்தி லொன்று' என்று சொன்னீர்கள். நன்றாயிருக்கின்றது உங்கள் நியாயம்! உயர்வு தாழ்வுகளை உயிர்களின் அறிவினிடத்து வைத்துத் தாழ்ந்த அறிவுள்ள மிருகங்களைக் கொன்றால் பிராயச்சித்த மென்றும் உயர்ந்த அறிவுள்ள மனிதர்களைக் கொன்றால் கொலை செய்வதென்றும் சொல்லுகின்ற உங்கள் வார்த்தையின்படியே, இப்பசு மனிதரறிவைப் பார்க்கினுஙட உயர்ந்த அறிவுள்ளதாகவிருக்கின்றது. எவ்வாறெனில், எந்த உலகத்தில் எந்தக் காலத்தில் எந்தப்பசு இந்தப் பசுவைப்போலக் கன்று இறந்ததைக் குறித்து ஆற்றப்படாத துக்கத்தோடும், அதிகாரிகளாலும் பகைவராலும் அயலாராலும் மற்ற உயிர்களாலும் ஒருவர்க்கக் கறை நேரிட்டால் அக்குறையை அரசன் தனக்கத் தெரிவிப்பதற்கு அரண்மனைவாயிலில் ஆராய்ச்சிமணி கட்டுவித்திருக்கிறானென்று சாதாரண மனிதர்களாலும் அறியப்படாத இந்தக் காரியத்தை அறிந்து வந்து அந்த மணியைக் கொம்பினா லடித்துச் சத்தமெழுப்பிக் கதறிக் கண்¬­ர் வடித்துக்கொண்டு நின்றது? இதனை யெப்போதாவது கேட்டிருக்கின்றீர்களோ? இல்லையே, இந்தப் பசு மாத்திரம் அப்படி அறிந்து செய்ததை யின்று பார்த்து நின்றீர்கள், ஆதலால் இது முன் தவக்குறையால் பசுவுடம்பெடுத்த தாயினும், மனிதப் பிறப்பில் உயர் குலத்தில் மேலான அறிவோடு பிறந்திருக்கின்றாதாகவே கொள்ள வேண்டும். அன்றியும் பசு எல்லாப் பிறப்பிலும் உயர்வுள்ளதென்றும் அதன் கொம்பினடியில் பிரம விஷ்ணுக்கள் இருக்கின்றார்க ளென்றும், காவிரி முதலான புண்ணிய தீர்த்தங்கள் அந்தக் கொம்பி னுனியில் இருக்கின்றன வென்றும், சிவபெருமான் சிரசிலும் சிவசக்தி நெற்றியிலும் இருக்கின்றார்களென்றும், சுப்பிரமண்யக் கடவுள் நாசியிலும், அசுவினிதேவர் காதுகளிலும், சந்திரசூரியர் கண்களிலும், வருணன் நாவிலும், சரஸ்வதி குரலிலும், கந்தருவர் மார்பிலும், இந்திரன் கழுத்திலும், உருத்திரர் முதுகிலும், சத்தமாதர்கள்குறியிலும், இலக்குமி குதத்திலும், கங்கை மூத்திரத்திலும், பூமிதேவி வயிற்றிலும், யமுனை சாணத்திலும், திருப்பாற்கடல் முலையிலும், யாகாக்கினி வயிறு முகம் இதயம் என்னும் உறுப்புக்களிலும், அருந்ததி முதலான கற்புள்ளவர்கள் உடம்பிலும் இருப்பார்களென்றும் சொல்லியிருக்கின்றதே. அன்றியும் பரமசிவன் திருமுடிக்க அபிஷேகஞ் செய்ய யோக்கியமான பால் முதலான திரவியங்களைக் கொடுக்கின்றதே. அன்றியும் திருவெண்¬ற்றின் காரணமான திரவியம் பிறப்பதற்கும் இடமாக விருக்கின்றதே. அன்றியும் நான்கு வேதமும் கால்களாகவும், கருமமும் ஞானமும் கண்களாகவும், ஆகமங்களும் சாத்திரங்களும் கொம்புகளாகவும், தருமமே உடலாகவும், தவமே நடையாகவுங் கொண்டு பரமேசுவரனுக்கு வாகனமாக விளங்கிய தருமவிடபத்துக்கு இனமாகவும் இருக்கின்றதே. இப்படிப்பட்ட மேன்மையுள்ள பசுவை ஐயறிவுடைய மிருகவர்க்கத்துள் ஒன்றென்று சொல்லப்படுமோ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:50 am

"இதன் கன்றோ பால்கொடுத்தற்குரிய பசுவாவதில்லை, ஏருழுதற்குரிய எருதாகத் தக்க சேங்கன்று' என்று சொன்னீர்க தேவர்களெல்லாம் பிறப்பதற்குத் தவஞ் செய்கின்ற மகத்துவ முள்ள இந்தத் திருவாரூரிலே பிறந்த எல்லா உயிர்களும் சிவகணங்க ளென்கிற சித்தாந்தப்படி, இந்த க்ஷேத்திரத்திலே பிறந்த இக்கன்றைச் சிவகணமென்று கொள்வதை விட்டு, சேங்கன்றென்று சொல்லப்படுமோ? 'புத்திரனோ ஆறறிவுள்ள ஆண் மக்களிற் சிறந்த நல்லறிவுள்ளவன்' என்றீர்க சிவதரிசனஞ் செய்யத் தேரூர்ந்து போய்ச் செல்வ மறைப்பினாற் கண்மறைந்து கன்றைக் கொன்றவன் நல்லறிவுள்ளவனென்று சொல்லப் படுவனோ? கன்றிறந்ததை ஊழ்வினையென்று உலகஞ் சொல்லு மென்றீர்கள்; பிராரத்துவ வாதிகளுக்கல்லாமல், காமக் குரோதாதிகளாற் பாவங்களைச் செய்வதற்குச் சீவனே ஆகாமிய கர்த்தாவென்று கொள்ளுகிற உத்தமமார்க்கத்தை யுடையோர்க்கு ஊழ்வினை யென்று சொல்லத் தகுமோ? 'இதற்குத் தக்க பிராயச்சித்தஞ் செய்விப்பதே முறை' யென்றீர்கள்; மலையை யெடுத்துண்டு வயிறு நோகின்றவனுக்குச் சுக்கிடித்துக் கொடுத்துச் சொஸ்தப் படுத்துவார்களோ? அதுபோலக் கொலைப்பாதகஞ் செய்தோர்க்குப் பிராயச்சித்தஞ் செய்வித்துப் பாவநிவர்த்தி செய்யப்படுமோ? அவ்வாறு செய்வேனானால் என்றும் மீளா நரகத்தில் என் புத்திரனை விழுத்துவதுமன்றி, யானும் விழுந்து வருந்துவேன்; இவ்வுலகத்தினும் மீளாத பழிக்கு ஆளாகச் சமைவேன்; அன்றியும் எண்ணிறந்த பெருமை பெற்ற இரவி குலத்திற்கம் என்னை யடுத்திருக்கின்ற உங்களுக்கும் ஓரிழுக்கு வார்த்தையும் உண்டாகும். ஆதலால், இனி என் சொல்லுக்கிரண்டில்லை; இந்தப் பசுவின் கன்றைக் கொன்ற பழிக்கு ஈடாக என் புத்திரனைக் கொலை செய்வதே நிச்சயமாகிய தீர்ப்பு" என்று சொல்லிவிட்டு, பின்பு மந்திரிகளுக்குள் கலாவல்லபன் என்கிற மந்திரியைப் பார்த்து "மந்திரி! என் புத்திரனை யழைத்துப்போய் அந்தக் கன்று இறந்து கிடக்கின்ற வீதியிற் கடத்தி, நீ தேரிலேறிக் கொண்டு அவனுடம்பின்மேற் தேர்ச்சக்கர மேறும்படி செய்து கொலை செய்து வருவாய்" என்று கட்டளையிட்டார். அப்போது மற்ற மந்திரிகளெல்லாம் கைநெரித்துக் கொண்டு கண்களிலே நீரரும்ப மனங்கலங்கிப் பிரமைகொண்டு நின்றார்கள்.

கலாவல்லப னென்கிற மந்திரியானவன், கடுந்தவம் புரிந்து பெற்ற கவுத்துவ மணியைக் கடலிலெறிந்து விட்டு வாவென்றும், பலநாள் வருந்தி வளர்த்த பஞ்சவர்ணக் கிளியைப் பருந்துக் கிரையிட்டு வாவென்றும், செய்தற்கரிய தவஞ் செய்து பெற்ற தேவாமுதத்தைச் சேற்றிற் கழித்த வாவென்றும் சொல்லக் கேட்டவன்போல் திடுக்கிட்டு உணர்வழிந்தும், திகைப்பூண்டு மிதித்தவன்போல் மயங்கி நின்றும், சற்று உணர்வுதோன்ற அது விஷயத்தில் மனமில்லாதவனா யிருந்தும் அரசன் ஆணையைத் தடுப்பதற்கு அஞ்சி வணங்கி விடைபெற்றுக் கொண்டு, அவ்விடம் விட்டுப் புறப்பட்டுத் தளர்ந்த நடையோடு முகங்கருகி நெடுமூச்ச விட்டுக்கொண்டு, "சிவசிவா! சம்போ! சம்போ! இந்தப் பாதகஞ் செய்யத்தானோ நான் மந்திரியாக ஏற்பட்டேன்! கொலையென்று சொல்லுகின்றோர்களைப் பார்த்தாலும் பயங் கொள்ளுகின்ற எனக்கத்தானோ இப்படிப்பட்ட விதி வரவேண்டும்! இந்தக் காரியத்தைச் செய்யாது விடுவோ மென்றால் அரசன் கட்டளையைக் கடந்தா னென்னுங் குற்றம் நேரிடுமென்றும், அல்லது செய்வோமென்றால் நமது உயிர்போற் சிறந்த வீதிவிடங்கன் விஷயத்தில் எப்படிக் கொலைசெய்யத் துணிவு உண்டாகுமென்று எண்ணி யெண்ணி என் மனம் இருதலைக் கொள்ளிக்குள் அகப்பட்ட எறும்புபோல் திகைக்கின்றதே! இதற்கு என்ன செய்வேன்! என்ன செய்வேன்!" என்று வருந்தி வருந்தி ஒரு கால் முன் வைப்பதும் மற்றொரு கால் பின் வைப்பதுமாகி ஊசலாடுகின்றவனைப் போல் அலைந்தும், வேந்தன் விஷமுண்ணென்று கட்டனையிடினும் உண்ணவேண்டிய உரிமை நமக் கிருக்கிறபடியால் போய்த் தொலைப்போம் என்று சற்றே நடந்து, 'எண்ணுதற்கும் யோக்கியமல்லாத இப்பாதகத்தை யெப்படிச் செய்வோம்' என்று சற்றே நின்று நடைத்து‘க்கங் கொண்டவன்போல் தெளிந்தும் மயங்கியும், பித்தம் பிடித்தவன்போல் பிதற்றியும், கண்­¬ர் சொரிந்து கலங்கினாவனாகிப் பின்பு தெளிந்து, அரசன் நமக்கும் தந்தையாதலால் வீதிவிடங்கன் செய்த குற்றத்தை நாமேற்றுக் கொண்டு நம்முயிரைக் கொடுத்துவிடுவோம்' என்று துணிவுகொண்டு, அக்கன்று இறந்து கிடக்கிற வீதியினிடத்து அணைகடந்த வெள்ளம்போல் அதிவேகமாக வந்து நின்று, தன்னரையி லிருந்த உடைவாளை உறையிலிருந்துருவியெடுத்துக்கொண்டு, தனது கழுத்தில் வைத்து ஊட்டியை அரிந்துகொண்டு உயிரிழந்து விழுந்தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:51 am

அதுகண்டு சில ஒற்றர்கள் அதிசீக்கிரமாகப்போய் மனுச்சோழரிடத்தில் "ஆண்டவரே! தேவரீர்க்குக் கண்போல் விளங்கிய கலாவல்லபனென்னும் மந்திரியானவர் சேங்கன்றிறந்து கிடக்கின்ற தெருவிற்போய் அரையிலிருந்த உடைவாளைக் கொண்டு தமது கழுத்தை யரிந்துகொண் டிறந்துவிட்டார்" என்று விண்ணப்பஞ் செய்தார்கள்.

அதுகேட்ட அரசன் அளிந்த புண்ணில் அம்பு பட்டதுபோல் துடிதுடித்து மிகவும் மனங் கலங்கி "ஓஹோ இதென்ன பாவம்! இதென்ன பாவம்! ஐயோ! கலாவல்லபனென்கிற மந்திரியானவன் நானிட்ட ஏவலைச் செய்வதற்குச் சம்மதித்தவன்போல் சென்றது 'நம் அரசனுக்குக் கன்றைப்பற்றி வந்த பழி மாத்திரம் போதாது, நாமும் பழி சுமத்துவோம்' என நினைத்துத்தானோ! எனக்கு நேரிட்ட இடரை யறிந்தும் எரியுங் கொள்ளியை யேறத்தள்ளுவது போலவும், நீண்டெரியும் நெருப்பில் நெய்விடுவது போலவும், அவ்விடருக்குமே லிடருண்டாகும்படி செய்தானே! கப்பல் உடைந்து கலங்கும்போது மந்திரி பழியும் வளைத்துக் கொண்டதே! எனக்கு வந்த துன்பமெல்லாந் தனக்கு வந்ததாக வெண்ணி, என்னை இரவும் பகலும் காத்திருந்த மதியுள்ள மந்திரியை யினி எக்காலத்திற் காண்பேன்! இதைக் கேட்டவர்களெல்லாம் 'இதென்ன கொடுமையோ! கொள்ளை கொண்டவனை விட்டுக் குறுக்கே வந்தவன்மேற் குற்றம் நாட்டியதுபோலவும், கொண்ட மனையாளிருக்கக் கூலிவாங்க வந்தவளைத் தாலிவாங்கச் சொன்னது போலவும், பசுங்கன்றைக் கொன்ற தன் புதல்வனிருக்கவும், அவனைவிட்டு அப்பழியை அமைச்சன்மேல் வைத்து அவனுயிரை வாங்கச் சொன்ன இவ்வரசன் அநியாயக்காரன்' என்று இகழ்ச்சி செய்வார்களே! அறிவில்லாதவன் செய்த காரியம் பயன்படாதது மாத்திரமோ? பழியும் பாவமும் கொடுக்குமென்ற பெரியோர் வார்த்தைக்கு இலக்காயினேன்! ஐயோ! நான் என்ன காரியஞ் செய்தேன்! என்ன காரியஞ் செய்தேன்!" என்றும், 'திருவாரூர்ப் பூங்கோயிலினிடத்தெழுந்தருளிய தெய்வமே! அடுத்தவர்களுக்கு அருள்செய்கின்ற ஆண்டவனே! உன்னை நம்பியிருக்கின்ற அடியேனை இப்படிப்பட்ட சோதனையுஞ் செய்யலாமோ! உன் திருவடிகளுக்கு ஆளாகியிருக்கிற அடியேனை இப்படிப்பட்ட பழிக்கும் ஆளாக்கலாமோ! என்றும் பலவிதமாகப் புலம்பிப் பரிதபித்துக்கொண்டு, "பின்னே துக்கம் தருவதான காரியங்களை முன்னே அறிந்து அக்காரியத்தைச் செய்யாதுவிடவேண்டும்; ஆலோசித்தறியாது செய்துவிட்டால் அதுபற்றித் துயரப்படாமல் மேல் செய்யத்தக்க காரியங்களை ஆலசியப்படுத்தாமல் செய்ய வேண்டுமாதலால், வருவது தெரியாது மந்திரியை யனுப்பிய நாம் துக்கப்படுவதிற் பயனென்ன? இனி நாமே போய்ப் புத்திரனைத் தேர்க்காலி லு‘ர்ந்து, மந்திரி பழிக்கு நம்முயிரைக் கொடுத்துவிடுவோம்" என்றெண்ணி, அரண்மனைக்குப் புறத்தில் வந்து, தமது புத்திரனை யழைத்து வரும்படி காவற்காரர்களுக்கக் கட்டளையிட்டார்.

அவர்கள் கண்­¬ர் வடிந்த முகத்துடன் "ஐயோ! மனுநீதி தவறாத மன்னவனுக்கும் இப்படிப்பட்ட ஆபத்து நேரிடலாமோ! நமது இளவரசனாகிய வீதிவிடங்கனிடத்திற் சென்று 'ஐயா! உம்மை அரசன் அழைத்துவரச் சொன்னார்' என்று எவ்வாறு சொல்வோம்! என்ன செய்வோம்!" என்று துயர்கொண்டு வீதிவிடங்கன் இருக்கும் அரண்மனைக்குச் சென்றார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:51 am

அதற்கு முன்னதாகவே, பெரியோர்களிடத்துப் பிராயச்சித்தவிதியைக் கேட்கப்போன வீதிவிடங்கன் தமது பிதாவினிடத்தில் பசுவானது வந்து முறையிட்ட சமாசாரத்தை ஒற்றர்களாலே கேள்விப்பட்டு 'இனி நமக்கென்ன பிராயச்சித்த மிருக்கின்றது! நமது பிதாவானவர் செய்கிற தீர்ப்பின்படி நடந்துகொள்ளுவோம்' என்று தேகமெலிந்து மேனி வேறுபட்டு, மனந்தளர்ந்து, முகஞ் சோர்ந்து தனது அரண்மனையிடத்து வந்திருந்தான். அப்போது அரசன் அனுப்பிய காவற்காரர்கள் அவ்வீதிவிடங்கனைக் கண்டு கைகுவித்து எதிர் நின்றார்கள். அவர்களைப் பார்த்து 'நீங்கள் என்ன காரியமாக என்னிடத்தில் வந்தீர்கள்? என்று கேட்க, அவர்கள் ஒன்றுஞ் சொல்லாது ஊமைகளைப்போல விம்மிவிம்மி அழுது கண்¬­ர் வடித்துக் கொண்டு நின்றார்கள். அதுகண்டு வீதிவிடங்கன், 'இவர்கள் ஏதோ ஒரு துன்பமான சமாசாரத்தைச் சொல்ல வந்தவர்கள் நாவெழாமல் நடுங்குகின்றார்கள்' என்று அறிந்து "ஓ காவற்காரர்களே! வந்த காரியம் இன்னதென்று சொல்லாமல் துக்கப்படுவதில் பலனில்லை; அந்தக் காரியம் எனக்குந் தெரியும், ஆயினும் துயரப்படாமல் சொல்லுங்கள்" என்றான். அதுகேட்டு "ஐயா! எப்படிச் சொல்வோம்! என்ன செய்வோம்! எங்கே போவோம்! எல்லார் குடியையுங் கெடுக்க எங்கே இருந்தோ தாட்சண்யமில்லாத தலையீற்றுப் பசுவானது ஒன்று வந்து ஆராய்ச்சி மணியை யசைத்து இனி உலகத்தை ஆள்வாரில்லாமல் அழிந்துபோகும்படி உம்மை அரசன் அழைத்து வரச் செய்வித்தது" என்று சொன்னார்கள்.

அதுகேட்டு வீதிவிடங்கனைச் சூழ்ந்திருந்த உறவினர் சினேகர் முதலானோ ரெல்லாம் "இப்படிப்பட்ட அவதி நேரிடத்தானோ தியாகேசர் கோயிலுக்குப் போகத் தொடங்கியது! எள்ளளவும் இப்படிவரும் என்று அறியோமே! இதற்கு என்ன செய்வோம்! என்று அழுது சோர்ந்தார்கள். அந்தப் பிரகாரமே அரண்மனையிலுள்ள மற்றவர்களும் புலம்பி ஆவலித்தார்கள். இந்த அழுகையொலியை வீதிவிடங்கன் தாயானவள் கேட்டு இதென்ன காரணமென்று விசாரித்து, இன்ன காரணமென்று அறிந்து, கொழுகொம்பற்ற கொடியைப்போல் கீழே விழுந்து மூர்ச்சையடைந்து, சற்றே அறிவுவரத் தெளிந்து "பாவியாகிய விதி என் பாக்கியத்தை யழித்ததே! தீமையாகிய வினைப்பயன் என் செல்வத்தை யழித்ததே! வஞ்சமாகிய ஊழ் என் வாழ்வை யழித்ததே! பலநாள் வருந்திப் பெற்ற என் வயிறு பற்றுகின்றதே! பகீரென்று பதைக்கின்றதே! ஐயோ! என் புத்திரன் செய்த குற்றத்திற்கு என்னைக் கொன்றாலாகாதோ!" என்று பலவிதமாகச் சொல்லிக் கைநெரித்துக்கொண்டு கண்­ர் விட்டுக்கொண்டு வயிறு பிசைந்துகொண்டு மாரடித்துக்கொண்டு வாயில் அறைந்து கொண்டு மனம் பதைத்துக்கொண்டு மண்ணிற் புரண்டு கொண்டு கோ வென்று அழுதழுது புலம்பினாள்.

அப்போது வீதிவிடங்கனென்கிற இராஜபுத்திரன் அழுகின்ற தாய் முதலானவர்களைப் பார்த்து, "வீணாக நீங்கள் அழுது புலம்புகின்றதில் என்ன லாபம்! பிரமதேவன் முதலான கர்த்தர்களுக்கானாலும் விதியைக் கடக்கக் கூடுமோ! எலும்பு நரம்பு தோல் முதலான அசுத்தங்களாற் கட்டிய இந்தச் சிறுவீட்டை நிலையென்று நம்பப்படுமோ! என்று பிறந்தார்களோ அன்றே இறந்தார்களென்று நினைக்கவேண்டும்; ஆறிலுஞ்சாவு நு‘றிலுஞ்சாவென்றும், நிலத்தில் முளைத்த பூண்டுகள் நிலத்திலே மடியுமென்றும், சாமானியரான அசேதனர்களும் சொல்லிக் கொள்ளுகின்றார்களே; அறிவுள்ள உங்களுக்குத் தெரியாமற் போனதென்ன? இதுபற்றி எவ்வளவுந் துயரப்பட வேண்டுவதில்லை" என்று பலவிதமான உறுதி வார்த்தைகள் கூறி, அவ்விடத்திலிருந்து புறப்பட்டு மனதில் நாணமும் நடுக்கமும் உண்டாகத் தந்தையாரிடத்திற்கு வந்து தொழுது வணங்கித் து‘ரத்தே நின்றான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:51 am

அப்படி நின்ற புதல்வனை மனுச்சக்கரவர்த்தியானவர் நேரே பாராதவராய் வேறொருவன் முகத்தைப் பார்த்து, "இவன் இளங்கன்றை யெவ்வாறு கொன்றானோ, அவ்வாறு கொலை செய்யப்படுதற்குத் தக்க குற்றவாளி யாயினான்" என்றார். அப்பொழுது புத்திரன் "பசுங்கன்றை கொன்ற அப்போதே உயிர்விட்டுப் பழிக்குப்பழி சரிகட்டுவேன்; ஆனால் தேவரீர் கட்டளை எதிர் பார்த்திருந்தேன்" என்று விண்ணப்பம் பண்ணிக்கொண்டான். உடனே அரசரானவர் கொலை வீரர்களை அழைப்பித்து, "இந்தக் குற்றவாளியை ஏற்பாட்டின்படி கடுங்காவல் செய்து கன்று இறந்து கிடக்கின்ற வீதியிற் கொண்டு போய்க் கிடத்துங்கள்" என்று கட்டளையிட்டார். அந்தக் கட்டளைக்கு அஞ்சி அவ்வீரர்கள் உருவிய கத்தியோடு சூழ்ந்து நடுவே இராஜபுத்திரனைக் காவல் செய்து நடத்திக்கொண்டுபோக, மனுசக்கரவர்த்தியும் மலை போல் உயர்ந்த ஒரு தேரிலேறிக்கொண்டு பின்னே நடந்தார்.

அதுகண்ட அந்நகரத்திலுள்ள ஜனங்களெல்லாம் "இந்த இராஜகுமாரனுக்கு ஐசுவரியமும் அழகும் அறிவும் குறைவில்லாது கொடுத்த தெய்வம் இடையிலே இந்தப் பழிக்கு ஆளாகச் செய்து, நல்லவிதி நடுவே யிருக்கக் கோணியவிதி குறுக்கே வந்ததென்று சொல்வதற்குச் சரியாக்கியதே! இன்பத்தை யனுபவிக்கின்ற இளமைப் பருவத்தில் எடுக்கப்படாத பழி வந்து சூழ்ந்து, சோறுண்ணும்போது தொண்டை விக்கிக் கொண்டதென்பதுபோல் துன்பத்தை யுண்டுபண்ணியதே! கல்யாணக் கோலங்கொள்வதற்கு இசைந்துவரும் பருவத்தில் செல்வத் திருமேனிக்குத் தீங்கு உண்டாகும்படி, வெண்ணெய் திரண்டு வரும் போது தாழி யுடைந்ததென்பதுபோல் நேரிட்டதே! சிவதரிசனத்துக்கப் போனவிடத்தில் சேங்கன்றின் பழி வந்து, கிணறு வெட்டப் போனவிடத்தில் பூதம் புறப்பட்டதுபோல் தோன்றியதே! கடைகொள்ளப் போகும்போது கள்ளன் எதிர்ப்பட்டதுபோல், அருள் பற்றுவரப் போகும்போது இந்தப் புத்திரனுக்கு அந்தக் கன்றானது எமனைப்போல் எங்கேயிருந்து எதிர்ப்பட்டதோ! இந்தக் குமாரனைப் பற்றி நமக்கெல்லாமுண்டாகிய இரக்கம் பழிவாங்கவந்த பசுவுக்கும் உண்டாயிருக்குமானால், ஆராய்ச்சிமணியை யசைத்து முறையிட்டுக் கொள்ளாதே! ஐயோ! இந்தப் பசுவானது சூரியவமிசத்தை யழிக்கத் துசங் கட்டிக்கொண்டதே! இனி நம்மரசனுக்குப் பிற்காலத்தில் நீதியுடன் அரசாட்சி செய்யத்தக்க அரசனைப் பெறாமல் எல்லா உயிர்களும் நிலைதடுமாறி நின்று மயங்குமே; இந்த இராஜபுத்திரன் முன்பு சேனை சூழத் தேரிலேறி வந்த மங்கலமாகிய கோலத்தைக் கண்டு மகிழ்ச்சி யடைந்த நாம் இப்போது இப்புத்திரன் காவல்சூழக் காலால் நடந்து வருகின்ற பரிதாபமாகிய கோலத்தைப் பார்ப்பதற்கு என்ன பாவஞ் செய்தோமோ! இந்தப் புத்திரனுயிர்க்கு ஈடாக நம்முயிரை யெல்லாங் கொடுத்துவிடுவோமென்றாலும் அரசன் சம்மதிக்கமாட்டாரே! இந்தப் புத்திரன் உயிரிழந்தால் பின்பு அரசனும் உயிரிழப்பார், பின்பு நாமிருந்து என்ன செய்வது! இதற்குமுன் இறந்து விடுவதே சுகமாக விருக்கின்றதே! ஆ! ஆ!! நம்மரசனைப் போல இப்படிப்பட்ட அருமையான நீதியோடு அரசு செய்கிறவர்கள் முன்னுமில்லை பின்னுமில்லையே! தியாகராஜப் பெருமான் நமது இராஜனுடைய மனத்தைச் சோதிக்கும்படியாகவே இப்படிச் செய்வித்ததாகத் தோன்றுகிறதே! தரும தேவதை நமது அரசனது உண்மையாகிய நீதியின் தன்மையைச் சோதிக்கும்படி இவ்விதஞ் செய்ததாகத் தோன்றுகின்றதே!" என்று பலவிதமாக அவரவர்களுந் தங்கள் தங்களுக்கு நேரிட்ட ஆபத்தென்று நினைத்தம் புலம்பியும் அதிசயித்தும் நின்றார்கள்.

ஆகாயத்தினிடமாக இவ்வதிசயத்தைப் பார்க்கும்படி வந்திருக்கின்ற தேவர்களெல்லாம் "இந்த மனுச்சக்கரவர்த்தியானவன் செய்யத் துணிந்த காரியம் இவனுக்க முன்னிருந்த அரசர்களுக்குச் சொல்லத்தான் கூடுமோ? அல்லது நினைக்கத்தான் கூடுமோ? இம்மனிதர்களைப் பார்க்கிலும் உயர் பிறப்பினராகிய நம்மவர்களுக்குத் தான் செய்யக் கூடுமோ? இவ்வரசன் நீதியிலும் மனோதிடத்திலும் சிறந்தவனாக விருக்கின்றான். இவனுக்குச் சிவகடாக்ஷம் கைகூடுமல்லது மற்றவர்களுக்கக் கூடுமோ? ஆயினும், இன்னும் நடக்கப் போகிற அற்புதங்களை யெல்லாம் பார்த்தறிவோம்" என்று புகழ்ந்து சொல்லி நின்றார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:51 am

இந்தப் பிரகாரமாகச் சொல்லிக்கொண்டு நிற்க, மனுச்சக்கரவர்த்தியானவர் அந்தப் பசுங்கன்று இறந்து கிடக்கின்ற வீதியிற் போய், தமது புத்திரனைக் காவல் செய்து முன்னே நடத்தி வந்த கொலைவீரத்களைப் பார்த்து "இனிக் காலதாமதம் பண்ணாமல் இந்தப் பசுங்கன்றை யெடுத்து அப்புறத்தே வைத்து, அவ்விடத்தில் இவ்வீதிவிடங்கனைக் கிடத்தி வையுங்கள்" என்று கட்டளையிட்டார்.

அதுகேட்டுக் கொலைவீரர்கள் மனம் பதைத்து மதிமயங்கி நின்றார்கள். அப்பொழுது தந்தையாகிய மனுச்சக்கரவர்த்தியின் கட்டளையைக் கேட்டு மயங்கி நிற்கின்ற கொலைவீரர்களை வீதிவிடங்கன் பார்த்து, "நீங்களேன் மயங்கி வருந்துகின்றீர்கள்? அந்தக் கட்டளையின்படி நானே செய்து கொள்ளுகிறேன்" என்று சொல்லித் தியாகராஜப் பெருமான் சந்நிதிக்கெதிராகத் திரும்பி இரண்டு கைகளையுங் குவித்துச் சிரசின்மேல் வைத்துக்கொண்டு "சிறு பிள்ளைக்குத் திருப் பாற்கடலை அழைத்துக் கொடுத்த தியாகராஜப் பெருமானே! அகண்ட பரிபூரண சச்சிதானந்த சுயம்பிரகாச சாட்சாத்கார சிதாகாச சொரூப சின்மயனாகிய சிவசங்கரனே! அடியேன் பசுங்கன்றைக் கொன்ற பாதகனாயினேன். அதுவும் போதாமல் ஐயோ! எனக்கு நல்வழியைக் கற்பித்துக் கண்போல் விளங்கிய நின்னடிமையிற் சிறந்தவனாகிய மதியுள்ள கலாவல்லபனென்கிற மந்திரியையும் இறப்பிப்பதற்குக் காரணமாகியிருந்தேன்? இப்படிப்பட்ட என்போல் பாவிக ளெங்கேயுண்டு? என் பிதா தண்டிக்கப்போகிற தண்டனை என் பாதகத்துக்குத் தக்க தண்டனையுமல்லவே! என்ன செய்வேன்! பாவியாயினும் எனக்கு வேறொரு கதியுமில்லாதபடியால், முன் தாயைக் கூடித் தந்தையைக் கொலை செய்தவனது மாபாதகத்தை மன்னித்து அனுக்கிரகஞ் செய்ததுபோல், அடியேனுக்கும் அனுக்கிரகஞ் செய்ய வேண்டும்; என் பிதாவுக்கும் எனக்கும் உரித்தாகியிருந்த மற்றவர்களுக்கும் என்னைப் பற்றி வந்த பழி பாவங்களை நீக்கியருள வேண்டும்; என்பொருட்டு இறந்த மந்திரியை யெழுப்பிக் கொடுத்தருள வேண்டும்; இதோ இந்தப் புலாலுடம்பைப் போட்டுவிட்டு வருகிறேன்; என்னையுந் திருவடி நீழலிற் சேர்த்துக்கொள்ள வேண்டும்; இந்தப் பிறப்பிலே யெனக்குத் திருவடி கிடையாதானால் வரும் பிறப்பிலாயினுங் கிடைக்கத் தக்க நல்லறிவும் பேரன்பும் உள்ளவனாகப் பிறப்பிக்க வேண்டும்" என்று சொல்லி விண்ணப்பஞ் செய்துகொண்டு திரும்பி நின்று, மாதா பிதா குரு முதலானவர்களுக்கும் மனத்தினால் வந்தனஞ் செய்து, "இம் மனுச்சோழருடைய செங்கோல் மாறாது நிலைபெற்றிருக்க வேண்டும்" என்று இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்தித்துக் கொண்டு பஞ்சாட்சரத்தை யுச்சரித்துக் கொண்டு விழுந்து வடக்கே தலையும் தெற்கே காலும் வைத்துக் கொண்டு இரண்டு கண்களையும் மூடிக் கொண்டு சிந்தையைச் சிவபெருமான் திருவடித் தியானத்தில் வைத்துக்கொண்டு யோகநித்திரை செய்பவன்போல உடம்பைக் கிடத்தினான்.

அப்போது மனுச்சக்கரவர்த்தியானவர் சிவத்தியானஞ் செய்துகொண்டு, தியாகேசர் சந்நிதியை நோக்கி "அடியேனை யாட்கொண்ட ஆண்டவனே! இவ் வீதிவிடங்கனென்பவன் பசுங்கன்றைக் கொலை செய்தானென்பது பிரத்தியட்சமாக உண்மையென்று வெளிப்பட்டபடியால், இந்தக் குற்றவாளியின் கொலைப் பாதகந் தீரத் தக்க தண்டனை செய்வதற்குச் சக்தியில்லாத அடியேன், தேவரீர் திருவுளப்பாங்கின்படி மேலோர் ஏற்படுத்திய தரும நு‘ல்களில் கொலை செய்தவனைக் கொலை செய்யக் கடவரென்று விதித்திருக்கின்ற விதியின்படி, விதி மாறாட்ட முதலான குற்றங்களுக்குச் சிறிது மிடங்கொடாமல், இவனைக் கொலை செய்யும்படித் திரிகரண சுத்தியாகத் தீர்ப்பிட்டுக் கொண்டு, இதோ தேர்க்காலிலு‘ர்ந்து கொலை செய்யத் தொடங்குகின்றேன், இத் தீர்ப்பினிடத்துத் தேவரீர் திருவடி சாட்சியாக என் மனமறிந்து யாதொருபிசகும் நேரிட்டதில்லை. என்னையுமறியாது ஏதாகிலுங் குறை நேரிட்டிருக்குமானால் அதைத் தேவரீர் மன்னித்துக்கொள்ள வேண்டும். இந்தக் குற்றவாளியின் பாவாத்மாவை அப்பாவத்தினின்று நீங்கும் வண்ணந் தக்க தண்டனை செய்வித் தருளி, மறுபிறப்பிலாயினும் கடைத்தேறும் வழியைத் கடாக்ஷக்கவேண்டும்" என்று விண்ணப்பஞ் செய்துகொண்டு, தேரிற்கட்டிய குதிரைகளை விழுந்து கிடக்கின்ற வீதிவிடங்கன் கழுத்தடியிற் சக்கரமழுந்தும்படி நேராக முடுக்கித் தேரை நடத்தினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:51 am

அப்போது தேர்ச்சக்கரமானது வீதிவிடங்கன்மேல் அழுந்திக் கறகறவென்று இழுத்துக்கொண்டு அதிவேகமாகச் செல்ல, உடல் குழம்பிச் சின்னாபின்னப்பட்டு நசுக்குண்டு, கையாற் பிசைந்து ரசம் பிழிந்த மாங்கனியின் கோதுபோல, உடல்வேறு உயிர்வேறாக இறந்தான்.

அதுகண்ட தேவர்களெல்லாம் "அருமையாகப் பெற்ற புத்திரனை நோக்காமல் புண்ணியத்தை நோக்கிய கண்ணியவானே! உனக்குச் சுபகர முண்டாவதாக!" என்று வாழ்த்திக் கற்பகப் பூமாரி பொழிந்தார்கள். தேவதுந்துபிகள் அதிர்ந்தன. அந் நகரத்தா ரெல்லாம் "இப்படிப்பட்ட நீதி செலுத்துகின்ற மஹாராஜனை என்ன தவஞ்செய்து பெற்றுக் கொண்டோம்" என்றும், ஐயோ! இனி எக்காலத்தில் வீதிவிடங்கனைக் காண்போம்" என்றும் இன்பக் கண்­¬ரும் துன்பக்கண்­¬ரும் விட்டுக்கொண்டு நின்றார்கள். உடனே மனுச்சக்கரவர்த்தியானவர் மந்திரியின் பழிக்காகத் தன் உயிரைக் கொடுக்கத் துணிந்து தேரிலிருந்து கீழே யிழிந்தார். அப்போது ஸ்ரீகண்டர், அனந்தேசர், காலச்செந்தீயுருத்திரர், துவாதசருத்திரர், ஏகாதசருத்திரர், புத்தியட்டகர், கூர்மாண்டர், ஆடகர், சதவுருத்திரர், அஷ்டமூர்த்திகள், நீலலோகிதர், கங்காளகபாலர், அசுவாரோகணர், அஷ்டபயிரவர், வீரபத்திரர், சக்ரதரர், நான்முகர் முதலான பதமூர்த்திகளும், கபாலிகன், அசன், புதன், வச்சிரதேகன், பிநாகி, கிருதசாதிபன், உருத்திரன், பிங்கலன், சாந்தன், க்ஷயாந்தகன், பலவான், அதிபலவான், பாசாத்தன், மகாபலவான், சுவேதன், ஐயபத்திரன், தீர்க்கபாகு, ஜலாந்தகன், மேகவாகனன், சௌமியகேசன், சடாதரன், லட்சுமிதரன், ரத்நந்திரன், ஸ்ரீதரன், பிரசாதன், பிரகாசன், வித்தியாதிபன், ஈசன், சர்வஞ்ஞன், பலிப்பிரியன், சம்பு, விபு, கணாத்தியக்ஷன், கிரியக்ஷன், திரிலோகனன் முதலான பதத்தலைவர்களும்; இந்திரர், சந்திரர், சூரியர், முதலான தேவர்களும்; வசிட்டர், அகத்தியர், புலத்தியர், பராசரர், வியாசர் முதலான முனிவர்களும், கண்ணுவர், கருக்கர், சதானந்தர் முதலான இருடிகளும்; அசுரர், அந்தரர், ஆகாயவாசிகள், விஞ்சையர், வித்தியாதரர், கருடர், காந்தருவர், இயக்கர், கின்னரர், கிம்புருடர், சித்தர், நிருதர், பூதர், பைசாசர், போகபூமியர், உரகர் முதலான கணங்களும்; நந்தி, பிங்கிருடி, சண்டன், பிரசண்டன், சங்குகன்னன், வாணன், அந்தகன், கும்போதரன், விரூபாக்ஷன் முதலான பிரமத கணங்களும் சூழ்ந்து துதித்து வரவும்; பேரிகை, மத்தளம், தாளம், சங்கம், சச்சரி, தடாரி, முதலான வாத்தியங்கள் முழங்கி வரவும்; "எல்லாம் வல்ல இறைவன் வந்தான்! நல்லோர்க்கருளும் நாயகன் வந்தான்! முப்புரமெரித்த முன்னோன் வந்தான்! தப்பிலார்க் கருள்செயுந் தயாநிதி வந்தான்; வள்ளல் வந்தான்! மஹாதேவன் வந்தான்! எள்ளிலெண்ணெய்போ லிருப்பவன் வந்தான்! அன்பர்க்கருளும் ஐயன் வந்தான்! இன்பங்கொடுக்கும் இறைவன் வந்தான்! முத்தொழில் நடத்தும் முதல்வன் வந்தான்! பத்தர்கள் புகழும் பதத்தோன் வந்தான்! தேவர்கள் போற்றுந் தியாகன் வந்தான்! மூவர்கள் வாழ்த்தும் முக்கணண் வந்தான்!" என்று சின்னங்கள் பிடித்து வரவும்; தும்புருநாரதர் யாழிசை பாடிவரவும்; உருத்திரகணிகையர் நடனஞ்செய்து வரவும்; ஒற்றை வெண்குடை, சாமரை முதலான மங்கல விருதுகள் நெருங்கி வரவும்; ஆனைமுகக் கடவுளும் ஆறுமுகக் கடவுளும் இருபக்கங்களினு மிசைந்து வரவும்; உலகமாதாவாகிய உமாதேவியார் இடது பக்கத்திலிருக்க, சடாமகுட திரிநேத்திர காளகண்ட சதுர்ப்புஜம் முதலானவை விளங்க, தர்மசொரூபமாகிய இடபவாகனத்தின்மேல் சர்வ மங்கல சக்தியே திருமேனியாகக் கொண்ட தியாகராஜப் பெருமான் எழுந்தருளி, மனுச்சோழ ராஜனுக்கு முன் தரிசனங் கொடுத்தருளி, குளிர்ந்த நிலவு துளம்பி வீசுகின்ற புன்னகைகாட்டி, அரசனுக்கு ஜில்லென்று உடம்பும் உள்ளமும் உயிரும் குளிரும்படி செய்வித்து, கருணை யென்னும் வெள்ளம் நிறைந்து பொங்கித் ததும்பிப் பெருக்கெடுத்து ஒளி கொண்டோங்கி மடைதிறந்தோடுகின்ற மலர்போன்ற திருக்கண்களால் அருள்நோக்கஞ் செய்து, அவ்வரசனுக்குண்டாயிருந்த விடாய் முழுதுந் தீர்த்து, "நம்மிடத்து நம்பிக்கையும் பேரன்பும் வைத்து மனுநீதிதவறாது அரசாட்சி செய்கின்ற மனுச்சோழனே! நீ நடத்துகின்ற நீதியின் பெருமையை உலகத்தவர் செவ்வையாகத் தெரிந்து கொள்ளும்படி நாமே இவ்வாறு சோதித்தோம், இனி ஒன்றுக்கும் அஞ்சவேண்டாம்" என்று திருவாய் மலர்ந்தருளி, இறந்துகிடக்கின்ற பசுங்கன்றும் கலாவல்லபனென்னும் மந்திரியும் வீதிவிடங்கனென்னும் இராஜ குமாரனும் உயிர் பெற்று எழுந்திருக்கும்படி கடாக்ஷத்தருளினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:52 am

அந்தக்கணமே நித்திரை நீங்கி யெழுகின்றதுபோல், இளங்கன்றானது உயிர்பெற்றெழுந்து தன் தாய்ப் பசுவினிடத்தில் சென்றது. மந்திரியும் புதல்வனும் உயிர்பெற்றெழுந்து, ஆண்டவனை வணங்கி அருகே மலர்ந்த முகத்தோடு வந்தனை செய்துகொண்டு மகிழ்ந்து நின்றார்கள். அதுகண்டு அந்நகரத்திலுள்ள ஜனங்களும் மற்றவர்களும் தம்மை யறியாத பெருங் களிப்புடையவர்களாய்ச் சிலர் "அற்புதம்! அற்புதம்! அற்புதம்! அற்புதம்! என்று ஆடினார்கள்; சிலர் "பண்ணிய பூசை பலித்தது பலித்தது!" என்று பாடினார்கள்; சிலர் "சூரியகுலந்தோன்றியது! தோன்றியது! என்று துதித்தார்கள்; சிலர் "துக்கம் நீங்கியது! சுகம் கிடைத்தது!" என்று துள்ளினார்கள்; சிலர் "குறையெல்லாந் தீர்ந்தது! குறையெல்லாந் தீர்ந்தது!" என்று கொண்டாடினார்கள்; சிலர் "கும்பிட்ட தெய்வம் குறுக்கேவந்தது!" என்று குதித்தார்கள்; சிலர் "எம்பெருமான் எதிர்ப்பட்டால் என்ன முடியாது!" என்று எக்களித்தார்கள்; சிலர் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டு ஒரு காதமட்டும் ஓடித் திரும்பினார்கள்; சிலர் தோள் தட்டிக் கொண்டும் தொடை தட்டிக்கொண்டும் முகரோமத்தை முறுக்கிக்கொண்டும் முகமலர்ந்துகொண்டும் உடல் நிமிர்த்துக்கொண்டும் உலாவி நின்றார்கள்; சிலர் "வாழ்வு வந்தது!" என்று மனம் பூரித்தார்கள்.

இப்படி அவரவர்களும் அளவில்லாத ஆனந்தமுடையவர்களாய் இழந்துவிட்ட பொருள் எதிர்வரப் பெற்றவர்கள்போல் சந்தோஷகோஷஞ் செய்து நிற்க, மனுச்சக்கரவர்த்தியானவர் கங்கையும் இளம்பிறையும் விளங்குகின்ற சடாமகுடத்தையும், திரிபுண்டரமுந் திலகமும் திருநோக்கும் விளங்குகின்ற நெற்றியையும், அருள் ததும்பி வழிகின்ற திருநோக்கங்களையும், சங்கு குண்டலமணிந்து தாழ்ந்த செவிகளையும், நறுங்குமிழ் போன்று விளங்குகின்ற நாசியையும், வேதமாகிய தெள்ளமுதத்தைக் கொள்ளைகொண்டு உண்ணும்படி அன்பர்களுக்கு அருளிச் செய்கின்ற செம்பவளம் போன்ற திருவாய் மலரையும், வானவர்க்கு உயிர் கொடுத்த மணிகண்டத்தையும், கொன்றைமாலை யணிந்து குலவரைகள்போல் உயர்ந்த திருத்தோள்களையும், மானும் மழுவும் வரதமும் அபயமுங் கொண்ட மலர்க்கரங்களையும், சிவந்துமெல்லென்று திருவருள் பழுத்து ஆனந்தமொழுகிப் பத்தர்கள் மனத்தில் தித்தித்திருக்கும் பாதமலர்களையும், செம்பவளமாலை போன்ற திருமேனியையும், பச்சைக்கொடி படர்ந்ததுபோன்று பார்வதியார் மகிழ்ந்து விளங்குகின்ற பாகத்தையும் கண்குளிரக் கண்டு களிப்படைந்து ஆனந்தநீர் ஊற்றுநீர் போலச் சுரந்து சுரந்து விழுந்து விழுந்து மார்பினிடத்து வண்டலாடவும், உடல் குழைந்து விதிர்விதிர்த்துச் சிலிர்சிலிர்த்து மயிர்க்கூச்செறிந்து என்பு நெக்குவிட்டுருகியும், மனங் கனிந்துகனிந்து கசிந்துகசிந்து நெகிழ்ந்துநெகிழ்ந்து படபடவென்று பதறிப்பதறி உருகியுருகி ஆனந்த வெள்ளத்தி லழுத்தியழுந்திப் பரவசமாகியும், "சிவசங்கர சிவசங்கர சிவசங்கர சிவசங்கர சிற்பர தற்பர சிற்குண சின்மய சிவசிவசிவ" என்று வாய்நீர்சுரந்து பாடிப்பாடி நாக்குழறித் தழும்பேறியும், "ஹர ஹர" என்று ஆனந்தக் கூத்தாடியும், தண்டுபோல் அனந்த முறை கீழே விழுந்து விழுந்து வணங்கி உடம்பிற் புழுதியாடியும், குளிர்ச்சி பொருந்திய சந்திரபிம்பம் போன்ற முகத்தின்கண் முத்துமாலை யணிந்ததுபோல வியர்வரும்பி இளநகை தோன்றி மலர்ந்து விளங்கக் கைகளைக் கூப்பிச் சிரசின் மேல் வைத்துக்கொண்டு, அன்பே வடிவமாகி நின்று, "பிரமன் முதலாகிய பெரிய தேவர்களெல்லாம் அரியதவஞ் செய்தும் கனவினுங் காண்பதற் கருமையாகிய கடவுளே! அன்பு அணுவளவு மில்லாத அடியேனுக்கு அருமையாகிய திருமேனியை நனவிலே எளிதாகத் காட்டியருளிய தேவரீர் பெருங்கருணையை யென்னென்று துதிப்பேன்! பொய்யுலகத்தை மெய்யென்று நம்பிப் புன்மையாகிய போகத்தை விரும்பி, புவியாண்டு மீளாநரகில் விழத் துணிந்திருந்த அஞ்ஞானத்தையுடைய அடியேனையும் ஓர் பொருளாகத் திருவுள்ளத்திற் கொண்டு காட்சி கொடுத்தருளிய கருணைக் கடலே! கண்ணுண் மணியே! கரும்பின் சுவையே! கற்பகக் கனியே! கருணாநிதியே! தேவரீர் திருவருட்பெருமையை யென்னென்று சொல்லுவேன்! யான் என்கின்ற ஆணவப் பேயும், எனதென்கின்ற இராட்சதப் பேயும், மாயையென்கின்ற வஞ்சப் பேயும், பெண்ணாசை யென்கின்ற பெரும்பேயும், மண்ணாசை யென்கின்ற மானிடப்பேயும், பொன்னாசை யென்கின்ற பொல்லாப் பேயும், குரோத மென்கின்ற கொள்ளிவாய்ப்பேயும், உலோப மென்கின்ற உதவாப்பேயும், மோகமென்கின்ற மூடப் பேயும், மதமென்கின்ற வலக்காரப்பேயும், மாச்சரிய மென்கின்ற மலட்டுப்பேயும், மனப்பேயோடு கூடி இரவும் பகலும் ஆட்ட, ஆடியாடி யிளைக்கின்ற அடியேனைக் காத்தருளத் திருவுள்ள மிரங்கித் தரிசனங் கட்டளையிட்டுத் துன்பத்தை நீக்கி யின்பத்தை யளித்த எம்பெருமானே! என்னாண்டவனே! என் தந்தையே! என் தாயே! என் குருவே! என் தெய்வமே! என் குலதெய்வமே! என்னுயிர்த் துணையே! என்னறிவுக் கறிவாகிய இறைவனே! தேவரீர் திருவடிப்புகழை வேதங்களு மறியாது விழித்துக் கொண்டு தேடித்தேடி இளைக்கின்றன வென்றால், கிருமி கீடங்களிலுங் கீழ்ப்பட்ட அசேதனனாகிய அடியேன் எப்படியறிந்து துதிப்பேன்! தேவரீர் திருவடிக் காட்சி பலிக்கும்படி செய்வித்த இந்தப் பசுவுக்குங் கன்றுக்கும் என்னை யடிமையாகக் கொடுப்பேன் அல்லது வேறென்ன கைம்மாறு செய்வேன்! தேவரீர் திருமேனிக்காட்சி கிடைப்பதற்குக் காரணமாகிய வீதிவிடங்கனென்னும் புத்திரன் இன்றுதான் எனக்குப் புத்திரனாயினான்! தேவரீரது திருவருட் கோலத்தைக் காணப்பெற்ற அடியேனுக்கு இனி என்னகுறை இருக்கின்றது! அன்பர்களுக்கு இன்பமளிக்கின்ற ஆண்டவனே! தேவரீர் கிருபாநோக்கஞ் செய்யப் பெற்று உடல்பூரித்தேன்! உள்ளங்குளிர்ந்தேன்! உயிர் தழைத்தேன்! பசுங்கன்றும் மந்திரியும் மைந்தனும் உயிர்பெற்று எழுந்திருக்கவும் வரம்பெற்றேன்! வாழ்வடைந்தேன்! துக்க மெல்லாம் நீங்கினேன்! சுகப்பட்டேன்! மனத்துக்கு அடங்காத மகிழ்ச்சிகொண்டு நின்றேன்! இனி அடியேனுக்குத் தேவரீர் திருவடியினிடத்துத் தவறாத தியானமும் சலியாத அன்பும் தந்தருளி யென்னை அடிமை கொள்ளவேண்டும். குற்றஞ் செய்தாலும் குணமாகக் கொள்கின்ற குணக்குன்றே! பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த பரம்பொருளே! புலிமுலையைப் புல்வாய்க்குக் கொடுத்த புண்ணியமூர்த்தியே! கல்லடிக்கும் வில்லடிக்குங் கருணைபுரிந்த கருத்தனே! திருவாரூர்ப் பூங்கோயிலி லெழுந்தருளிய தியாகராஜப் பிரபுவே! போற்றி! போற்றி!" என்று தோத்திரஞ் செய்து தொழுதுநின்றார்.

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக