ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Yesterday at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:07 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு 5 5 2

புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Jul 03, 2011 6:07 pm

First topic message reminder :

தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள், பதினெண் மேல் கணக்கு நூல்கள். கீழ் கணக்கு நூல்கள் வாழ்விற்கு தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும். மேல் கணக்கு நூல்கள் எட்டுத் தொகை, பத்து பாட்டு நூல்கள் ஆகும். எட்டுத் தொகை நூல்களுள் அறம், போர், வீரம் போன்ற புற வாழ்க்கை பற்றி கூறும் நூல் புற நானூறு. மொத்தம் நானூறு பாடல்களை கொண்டது.

தற்காலத்தில் நாம் ஒருவரிடம் உதவி கேட்டு, கேட்டது கிடைத்தால் அவரை பாராட்டுகிறோம். உதவியை மறுத்தாலோ, குறைத்து கொடுத்தோலோ அவரை பற்றி குறை கூறுவோம். அப்படி உதவியை தேடிப்போய் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் நாம் அவரை பழிக்கக்கூடாது என்பதை மிக அழகாக இந்த பாடல் உணர்த்துகிறது. தமிழின் இனிமையும், வாழ்வியல் உண்மையும் இந்த சங்கப் பாடல்கள் மிக அழகாக எடுத்து காட்டுகிறது.

பாடல் 1: அதனினும் உயர்ந்தது
பாடியவர் : கழைதின் யானையார்
பாடப்பட்டோன் : வல் வில் ஓரி
திணை : பாடாண் துறை : பரிசில்

ஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயென் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள் எனக் கொடுத்தல் உயர்தன்று,
அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமையத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி ; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் ! நின்னே


பொருளுரை:

பிச்சை எடுப்பது இழிவான செயல் இல்லை, அதை விட
இழிவான செயல் பிச்சை இடாமல் இருப்பது
ஒருவனுக்கு கொடுத்தல் உயர்வான செயல் இல்லை, அதை விட
கொடுப்பதை வேண்டாம் என்று மறுத்தல் உயர்வானது
நுரை பொங்கும் கடல் நீர் மிகப் பெரியதாக இருந்தாலும்
தாகம் உள்ளவருக்கு குடிநீராகாது ; ஆனால்
பசுக்களும், மற்ற விலங்குகளும் சென்று நீர் அருந்தி
சேறு நிறைந்த சிறு குளம் ஆனாலும், மனிதர்கள்
தாகத்திற்கு அந்த குளத்து நீரையே அருந்துவர்.
அது போல் மிகப் பெரியவர் பலர் இருந்தாலும்
அவர்கள் கடல் நீரை போன்றவர்கள், எங்களின் துயர் துடைக்க மாட்டார்கள்,
நீ வறுமை அடைந்து வசதி குறைந்து இருந்தாலும்
பலன் எதிர் பார்க்காமல் கொடுக்கும் வானத்து மேகம் போல்
அள்ளி அள்ளி எங்களுக்கு வழங்குவாய்,
ஆனால் இன்று நீ வழங்காது இருப்பது எங்கள் குறையே,
நாங்கள் புறப்படும் வேளையில் பறவை செய்த சகுணங்கள் சரியில்லை,
எங்களின் நேரம் சரியில்லை.
கேட்டவர்க்கு கொடுக்கும் வள்ளல் ஓரியே, நீ நீடோடி வாழ்க


Last edited by சதாசிவம் on Mon Jul 11, 2011 6:24 pm; edited 2 times in total

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down


Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Wed Jan 18, 2012 6:19 pm

யாருக்கு முதல் மரியாதை

போரில் ஆண்கள் அனைவரும் தான் ஈடுபடுகின்றனர். இப்படி ஈடுபடுபவர்கள் அனைவருக்கும் ஒரே மரியாதை தான் கிடைக்கிறதா. இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் பாடல்கள் வாயிலாக பார்க்கும் போதும், இன்றுள்ள தலைவர்கள் போல் இல்லாது, அன்றைய மன்னர்கள் வீரத்துடன் நேரடியாக பேரில் பங்கு பெற்றனர். இப்படி பங்கு பெரும் மன்னனின் உயிர் மிகவும் மதிப்பு மிக்கதாக இருந்தது. போரில் ஈடுபடும் மன்னனைக் காக்க தனி மெய்க் காவல் படை வீரர்கள் இருந்தனர். இவர்கள் வழிவழியாக (பரம்பரை பரம்பரையாக) மன்னனின் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு இவர்கள் உயிர் இழந்து மன்னனின் உயிரை காப்பாறி உள்ளனர். பொன்னியின் செல்வனிலும் கல்கி வேளாளப்படை பற்றிய குறிப்புகளைச் சொல்கிறார். இவர்களுக்கு அரசனிடமும், அரண்மனையிலும் தனி மரியாதை இருந்ததாக கூறப்படுகிறது. உயிரைத் துச்சமாக மதித்து மன்னனின் உயிரை காப்பதாலும், இவர்களில் பெரும்பாலும் அற்ப ஆயுளில் போரில் இறந்து விடுவதாலும் இந்த சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இப்படி உள்ள வீரனுக்கு முதல் மரியாதை, முதல் சலுகைகளை மன்னன் வழங்கினான், வழங்க வேண்டும் என்பதை இந்த புறப் பாடல் நமக்கு எடுத்துக் கூறுகிறது.

பாடல் 22: மறப்புகழ் நிறைந்தோன் (பாடல் 290)
பாடியவர் :ஔவையார்
பாடப்பட்டோன் பற்றிய குறிப்பு பாடலில் இல்லை
திணை : கரந்தை துறை : குடிநிலை உரைத்தல்

இவற்கு ஈத்து உண்மதி, கள்ளே; சினப் போர்
இனக் களிற்று யானை, இயல் தேர்க் குருசில்!
நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை,
எடுத்து எறி ஞாட்பின் இமையான், தச்சன்
அடுத்து எறி குறட்டின், நின்று மாய்ந்தனனே;
மறப் புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்,
உறைப்புழி ஓலை போல,
மறைக்குவன் பெரும! நிற் குறித்து வரு வேலே


பொருள் விளக்கம்

முதலில் இவனுக்கு கள்ளை கொடு, குடித்து மகிழட்டும். அன்று நடந்த பெரும் சேதத்தை விளைவித்த போரில், ஆண் யானை மேல் இருந்த ஒருவன் அழகான தேரில் அமர்ந்து இருந்த உன் பாட்டன் மேல் (தந்தையின் தந்தை) எறிந்த அம்புகளை எறியும் போது , இந்த வீரனின் பாட்டன் (தந்தையின் தந்தை) கண் இமைக்காமல் தச்சனின் ஆரச் சக்கரக் குடம் (கேடயம்) போல் தடுத்து உயிர் விட்டான். அந்த புகழ் நிறைந்த வீரப் பரம்பரையில் வந்த மறக் குடியில் பிறந்த வீரன் இவன்.

பனை ஓலையில் செய்யப்பட்ட குடை மழையைத் தடுப்பது போல் இவன் உன் மேல் பகைவர் பொழியும் வேல்களைத் தடுப்பான். உனக்கு இவன் மெய்க்காப்பாலனாக இருப்பான். குடி மரபு இது. இவனுக்கு முதலில் சிறப்பு செய்க. கள் வார்த்துக் கொடு, இவனே முதல் மரியாதைக்குரியவன்.

இப்படி மன்னன் கொடுக்கும் கள்ளுக்கா இவன் ஆசைபடுகிறான். இப்படி உள்ள வீரன் ஆசைப்படுவது என்ன, அடுத்த பாடலில் காண்போம்.

புறம் வளரும்



சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Jan 22, 2012 1:04 pm

தமிழ் வீரனின் ஆசை

மன்னனிடம் முதல் மரியாதை வாங்குவது மிகச் சிறந்த வீரனின் ஆசை. இப்படி முதல் மரியாதையில் மன்னன் கையில் கிடைக்கும் கள்ளுக்காகவா ஒரு சுத்த வீரன் ஆசைபடுகிறான் ? நன்கு படித்த மாணவன் எப்போது தேர்வு வரும், முதல் மதிப்பெண் எடுக்கலாம் என்று காத்து இருப்பான், நன்கு கவிதை புனையும் கவிஞன் எப்போது கவிதைப் போட்டி வரும் என்று காத்து இருப்பான். அதுபோல் சுத்த வீரன் காத்திருப்பது அவன் வீரத்தை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும் போர்க்களத்தை தான். அப்படி ஒரு தமிழ் வீரன் ஆசைப் படுவது போர்க்களமே என்று இந்தப் புறப் பாடல் கூறுகிறது.


பாடல் 22:
ஆயும் உழவன் (பாடல் 289)
பாடியவர் : கழாத்தலையார்
திணை , துறை : கிடைக்கவில்லை

ஈரச் செவ்வி உதவினஆயினும்,
பல் எருத்துள்ளும் நல் எருது நோக்கி,
வீறு வீறு ஆயும் உழவன் போல,
பீடு பெறு தொல் குடிப் பாடு பல தாங்கிய
மூதிலாளருள்ளும், காதலின்
தனக்கு முகந்து ஏந்திய பசும் பொன் மண்டை,
'இவற்கு ஈக!' என்னும்; அதுவும் அன்றிசினே;
கேட்டியோ வாழி பாண! பாசறை,
'பூக் கோள் இன்று' என்று அறையும்
மடி வாய்த் தண்ணுமை இழிசினன் குரலே?


பொருள் விளக்கம்

ஈரம் மிகுந்த வளமான செழிப்பான வயல்களாக இருந்தாலும், அதில் விளைவிக்க உழவு செய்ய வேண்டும். பல எருதுகள் இருந்தாலும், நன்கு கடினமாக உழைக்கும், பலம் பொருந்திய எருதுகளைத் தேடித் தேடி தேர்ந்தெடுக்கும் உழவனைப் போல், பெருமை பல உள்ள பரம்பரையில் உதித்த வீரம் நிறைந்த வீரர்கள் பல இருந்தாலும் அதில் சிறந்து விளங்கும், இவனை அன்பினால் கௌரவித்து கள் அளித்து நாட்டு அரசன் சிறப்பித்தான். இவனுக்கே மதுவை முதலில் தருக என்று ஊக்குவித்தான்.

பாடல் பாடும் பாணனே இதை கண்டு வியக்கிறாய். அதோ பூ கொள்க என்று பறை அறைந்து தெரிவிக்கும் போர்ச் செய்தி கேட்டாயா !!!அவனுக்குக் கள் பெரிதன்று களமே பெரிது.

பாடலின் சிறப்பு

வயல் வளமாக இருந்தாலும் அதை உழுதால் தான் வயல் செழிப்படையும். அது போல் ஒரு நாடு எத்தனை வளமுடன் இருந்தாலும், அந்த நாட்டைக் காக்க போர் வீரர்கள் அவசியம் என்று அழகிய உதாரணத்துடன் விளக்குகிறது.

ஒலிம்பிக் செல்ல நினைக்கும் விளையாட்டு வீரன் உள்ளாட்டு சிறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கினால் மட்டுமே மேலும் மேலும் வளர்ந்து ஒலிம்பிக் செல்ல முடியும். ஒரு சிறந்த விளையாட்டு வீரனைத் தேர்ந்தெடுத்து தான் பெரிய போட்டிக்கு அனுப்புகிறார்கள். அது போல் தான் போரும், வீரத்தில் சிறந்து விளங்கி, உயிரை துச்சமாக நினைக்கும், நாட்டின் மேல் பற்று இருக்கும் மிகச் சிறந்த தமிழ் வீரனைத்தான் போர்க்களம் அனுப்பியதாக இந்த பாடல் மூலம் அறியலாம். சுத்த தமிழ் வீரன் வெறும் விருத்துக்கும் கேளிக்கைகளுக்கும் கள்ளுக்கும் ஆசைபடவில்லை. அவன் ஆசைப்படுவது போர்க்களமே என்று இந்த பாடல் அழகாகக் எடுத்துக் கூறுகிறது.

தொடரும்.....

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Feb 05, 2012 6:13 pm

சொன்ன சொல் தவறாதவன்

போர்க்களம் செல்லும் வீரன் விரும்புவது வெற்றியைத் தான். இன்று ஒவ்வொரு விளையாட்டு வீரன் குறித்து நாம் எவ்வளவு பெருமைப்படுகிறோம்.இவர் விளையாட்டு களத்தில் நுழைந்தால் கண்டிப்பாக சதம் அடிப்பார். குழுவின் வெற்றிக்கு இவரே காரணம் என்று. இப்படி கூறும் விளையாட்டு வீரனை விட உயிரை துச்சமாக நினைத்து காலம் சென்று போரிடம் வீரன் மிகச் சிறந்தவன். தமிழ் மரபில் இருக்கும் ஒரு வழக்கம் சூளுரைத்தல், ஒன்றைச் செய்வேன் என்று சபதம் செய்தல். மகாபாரத் போரிலும் தன் மகன் அபிமன்யுவைக் கொன்றவனை மறுநாள் சூரிய அஸ்தமனம் முன்பு கொள்வதாக அர்ஜுனன் சபதம் செய்கிறான். இப்படி ஒரு சபதம் செய்த வீரனைப் பற்றிய புறப்பாடல் இது. ஒருவர் சபதம் செய்யும் போது அவனின் சொன்ன சொல் தவறாத தன்மையை கேள்விப்பட்டு எதிரிகள் பயப்படுகிறார்கள். அந்தப் பாடலை இப்போது காண்போம்.

பாடல் 23: எம்முன் தப்பியோன் (புறம் 304)
பாடியவர் : அரிசில்கிழார்
திணை : தும்பை துறை : குதிரை மறம்

கொடுங் குழை மகளிர் கோதை சூட்டி,
நடுங்கு பனிக் களைஇயர் நார் அரி பருகி,
வளி தொழில் ஒழிக்கும் வண் பரிப் புரவி
பண்ணற்கு விரைதி, நீயே; 'நெருநை,
எம்முன் தப்பியோன் தம்பியொடு, ஒராங்கு
நாளைச் செய்குவென் அமர்' எனக் கூறி,
புன் வயிறு அருத்தலும் செல்லான், வன் மான்
கடவும் என்ப, பெரிதே; அது கேட்டு,
வலம் படு முரசின் வெல் போர் வேந்தன்
இலங்கு இரும் பாசறை நடுங்கின்று


பொருள் விளக்கம்

ஏவலனே (ஏவல் செய்வபனே = வேலைக்காரன்) காதில் அழகிய குழைகள் (கம்மல்) அணிந்த மகளிர் உனக்கு மாலை சூட்டிப் பின் அவர்கள் வார்த்துக் கொடுக்கும் கள்ளை குளிர் நீக்க பருகுக. காற்றுக்கு தொழில் எதிர்ப்பு விசையை ஏறுபடுத்துதல், அப்படி எதிர்க்கும் காற்றின் தொழிலை ஒழிக்கும் வண்ணம் காற்றைக் கிழித்து கொண்டு செல்லும் வலிமையான குதிரையை தேர்ந்தெடுத்து கொடுத்தவுடன் அதனை போருக்கு அலங்கரித்து தயாராக வைக்க என்று உனக்கு கட்டளையிட்டுள்ளான்.

எனக்கு மூத்தவனை கொன்றவனையும், அவனது தம்பியையும் ஒன்றாக நாளை போரில் கொல்வேன், என்று அந்த எதிரிகள் மேல் சூளுரைத்துள்ளான். பசிக்கும் வயிறுக்கு உணவு உண்ணக் கூடச் செல்லவில்லை, குதிரைப் கொட்டகையில் இருந்த பல குதிரைகளில் நல்ல திறமையான குதிரையை தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக இருக்கிறான்.

இவன் சூளுரைத்ததை ஒற்றன் மூலம் கேட்டுத் தெரிந்த பகை மன்னனின் பாசறையில் இருந்த வீரர்கள் நடுங்குகிறார்கள். அவன் சொன்ன சொல் தவறான். சொன்னைத் செய்பவன் கண்டிப்பாக அவன் சொன்னது போல் நம் மன்னனைக் கொல்வான் என்று கூறியவாறே நடுங்குகிறார்கள்.

பாடலின் சிறப்பு:

ஒரு நாட்டில் பேசும் செய்தி அறிந்து அதை அடுத்த நாட்டில் உள்ள தன் மன்னனுக்குச் சொல்லும் ஒற்றர்களின் திறமையை இந்தப் பாடல் புலப்படுத்துகிறது. சொன்னச் சொல் தவறாதவன் என்று கூறும் போது அந்த மன்னனின் திறமை, இதற்கு முன் செய்த செயல்கள், அவனது வரலாறு இந்த ஒற்றனுக்கும், எதிரிப் படை வீரர்களுக்கும் தெரிந்து இருக்கிறது.

தொடரும்

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by T.PUSHPA on Sun Feb 05, 2012 6:25 pm

"சொன்ன சொல் தவறாதவன்" மட்டும் தான் படித்தேன். அருமையாக இருக்கிறது. மற்றவைகளையும் படிக்கிறேன். நன்றி. தொடருங்கள்....

T.PUSHPA
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 96
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 05/01/2011
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Feb 05, 2012 8:28 pm

T.PUSHPA wrote:"சொன்ன சொல் தவறாதவன்" மட்டும் தான் படித்தேன். அருமையாக இருக்கிறது. மற்றவைகளையும் படிக்கிறேன். நன்றி. தொடருங்கள்....


நன்றி தோழி,

வாசியுங்கள் நம் பழம் பெரும் பெருமை வாய்ந்த தமிழ்பாட்டன் பாடிய பாடல்களை வாசியுங்கள்.



சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by கபாலி on Sun Feb 05, 2012 9:28 pm

மிகச்சிறந்த திரி. நான் முதலில் இருந்து வாசித்து என் கருத்துகளைக் கூறுகிறேன் நண்பரே..

கபாலி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 510
வசிப்பிடம்: கண்ணம்மா பேட்டை
சேர்ந்தது: 09/04/2011
மதிப்பீடு: 66

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by கபாலி on Sun Feb 05, 2012 9:49 pm

முதல் பக்கம் வாசித்தேன் நண்பரே... ஔவையின் பாடலும் கடமைகள் குறித்த புறநானூற்றுப் பாடல்களின் பொருள் விளக்கம் மிக அருமை.

சில அருஞ்சொற்களின் பொருளைக் கீழே தந்தால் இன்னும் பயனுடையதாக இருக்கும்.

நான் வேண்டுமானால் உதவத்தயார். என் சிற்றறிவுக்கு ஏற்ப பொருள் தருவேன்.

இன்னும் பிற பக்கங்களைத் தொடர்கிறேன்.

ஈகரையின் தலை சிறந்த திரிகளில் இதுவும் ஒன்று. நன்று.

கபாலி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 510
வசிப்பிடம்: கண்ணம்மா பேட்டை
சேர்ந்தது: 09/04/2011
மதிப்பீடு: 66

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by வாத்தியார் on Sun Feb 05, 2012 9:56 pm

அந்த காலத்தில் சொன்ன சொல் தவறாதவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கையில் மிகவும் பிரம்மிப்பாக உள்ளது. இப்ப இருக்குறவங்களை நினைச்சா சிரிப்பு சிரிப்பா வருது புன்னகை

அருமையான விளக்கம் சதாசிவம் - பாராட்டுகள்


[You must be registered and logged in to see this link.]

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Feb 06, 2012 11:23 am

கபாலி wrote:முதல் பக்கம் வாசித்தேன் நண்பரே... ஔவையின் பாடலும் கடமைகள் குறித்த புறநானூற்றுப் பாடல்களின் பொருள் விளக்கம் மிக அருமை.

சில அருஞ்சொற்களின் பொருளைக் கீழே தந்தால் இன்னும் பயனுடையதாக இருக்கும்.

நான் வேண்டுமானால் உதவத்தயார். என் சிற்றறிவுக்கு ஏற்ப பொருள் தருவேன்.

இன்னும் பிற பக்கங்களைத் தொடர்கிறேன்.

ஈகரையின் தலை சிறந்த திரிகளில் இதுவும் ஒன்று. நன்று.


நன்றி கபாலி,

அருஞ்சொற் பொருளைத் தந்தால் பள்ளிக்கூட உரை படிப்பது போன்ற மாயை இருக்கும் என்று கருதியதால் சேர்க்கவில்லை. பாடலின் பொருளைப் படித்து பாடலை ஒருமுறை வாசித்து உணர வேண்டும் என்பதால் இந்த முறையைக் கையாண்டுள்ளேன்.

உங்கள் பங்களிப்பும் தாருங்கள்.அருஞ்சொற் பொருள் இணைக்க எனக்கு ஆட்சேபனை இல்லை.





சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Feb 06, 2012 11:24 am

அசுரன் wrote:அந்த காலத்தில் சொன்ன சொல் தவறாதவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கையில் மிகவும் பிரம்மிப்பாக உள்ளது. இப்ப இருக்குறவங்களை நினைச்சா சிரிப்பு சிரிப்பா வருது புன்னகை

அருமையான விளக்கம் சதாசிவம் - பாராட்டுகள்


நன்றி அசுரன்
சூப்பருங்க

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Feb 19, 2012 1:04 pm

போர்வீரனின் பொருளாதார நிலைமை

நாட்டுக்கு போர் பல புரிந்து, பல பதக்கங்கள் பெற்றாலும், பெருமைகளை வென்றாலும் போர் வீரர்களின் பொருளாதார நிலைமை பின் தங்கி தான் உள்ளது. போர், போர்ப்பயிற்சி, விளையாட்டு, கேளிக்கை என்று அவனது காலம் செல்வதால் பொருளாதார தேவைகளை நிறைவேற்றும் பணம் சம்பாதிக்கும் எண்ணம் குறைந்துவிடுகிறது. அல்லது நம் நாடு, நம் மக்கள் நம்மை அரசு கவனிக்கும் என்று எண்ணி தங்களை கவனிக்க விட்டு விடுகின்றனர். போரில் வீரத்துடன் போரிடும் வீரனுக்கு வழங்கப்படும் சலுகைகள் பெரும்பாலும் போர்முனை பாரா போர்வீரனுக்கோ, அல்லது அங்கு ராணுவத்தில் வேலை செய்யும் வேறு வகை பணியாளர்கள் தான் அனுபவிக்க வேண்டிய சூழல் அமைகிறது. பிணங்களில் சட்டை பைகளிலும் காசு கிடைக்குமா என்று எண்ணும் மனிதனைப் போல், சிலநேரங்களில் இவர்களின் சலுகைகளிலும் ஊழல் செய்து பணம் பறிக்கும் அரசியல்வாதிகள் தான் இன்று நிலவுகிறது. அன்றைய தமிழகத்தில் ஊழல் இல்லையென்றாலும் வீரத்துடன் போரிட்ட தமிழக வீரன் பணம் பொருளுக்கு ஆசைப்படவில்லை, தன் சுய தேவைக்கு வேண்டிய பணத்தையும் சம்பாதிக்கவில்லை என்று இந்தப் பாடல் கூறுகிறது. தனக்கு கிடைத்ததையும் அடுத்தவருக்கு கொடுத்து, பிறரிடம் இருந்து கடன் வாங்கி தன் குடும்பத்தை காக்கும் போர் வீரனின் நிலைமையை இந்த புறப்பாடல் எடுத்துக் கூறுகிறது.

பாடல் 24: வரகின் குப்பை (புறம் 327)
பாடியவர் : பெயர் தெரியவில்லை
திணை : வாகை துறை : மூதின் முல்லை

எருது கால் உறாஅது, இளைஞர் கொன்ற
சில் விளை வரகின் புல்லென் குப்பை,
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாணர் உண்டு, கடை தப்பலின்,
ஒக்கல் ஒற்கம் சொலிய, தன் ஊர்ச்
சிறு புல்லாளர் முகத்து அவை கூறி,
வரகு கடன் இரக்கும் நெடுந் தகை
அரசு வரின் தாங்கும் வல்லாளன்னே


பொருள் விளக்கம்

எருது கால்களைக் கொண்டு உழாமல், இளைஞர்கள் காலால் மிதித்து பதப்படுத்திய சிறு விளைநிலத்தில் விளைந்த, புல் உடன் ஒத்து இருக்கும் குப்பை போன்ற வரகு பயிர்கள். இதில் இருந்து விளைந்த கொஞ்சம் அளவு உள்ள வரகை கடன் வாங்கியவருக்குக் கொடுத்தது போக மீதி இருக்கும் கொஞ்சம் வரகையும் தன் இல்லத்தை தேடி வரும் பசித்த பாணனுக்கு கொடுத்து உதவுவான் இந்த வீரன். அதுவும் தீர்ந்து விட்டால் வறுமையுடன் இருக்கும் தன் மனைவி, குழந்தை, சொந்த பந்தங்களுக்கு உதவுவதற்கு கடன் கொடுக்கும் அற்பர்களிடன் சென்று மீண்டும் கடன் வாங்குவான். போர் வந்தால் பெரு நில மன்னனுக்காக போரிட்டு வெற்றி பெரும் வீரம், நம்பிக்கை அவனிடம் உள்ளது. வெற்றிப் பெற்று மன்னனிடம் இருந்து கொண்டு வரும் பொருளைக் கொண்டு அவனது கடன் அடைப்பான்.

பாடலின் சிறப்பு :

எருது கொண்டு உழும் அளவுக்குக் கூட இந்தப் போர் வீரனுக்கு நிலம் இல்லை. வெறும் காலால் உழுது வரகு விதைக்கிறான். புல் போன்று இருக்கும் விளைந்து இருக்கும் குப்பையில் இருந்து கிடைக்கும் கொஞ்சம் வரகை (கேழ்வரகு) எடுக்கிறான். அதில் கிடைத்ததை கடன் வாங்கியவனுக்கு கொடுத்து விடுகிறான். இருக்கும் மிச்சதையும் வீட்டு வாசலில் வந்து காத்து இருக்கும் பாணனுக்கு கொடுத்து விடுகிறான். தன் தேவைக்கு மறுபடி கடன் வாங்குகிறான். நெல் விளைவிக்கும் அளவுக்கு நிலமும் இல்லை, வசதியும் இல்லை. வசதி குறைந்த காலத்திலும் தன்னை நாடி வந்த ஒருவனுக்கு இருப்பதை கொடுக்கும் உண்ணத குணம் அவனிடம் இருக்கிறது. போர் வந்தால் மட்டுமே பொருள், அது இல்லாத காலத்தில் போர் வீரர்கள் வறுமையில் இருந்தனர் என்பதை இந்த பாடல் மூலம் உணரலாம்.


தொடரும்........

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Mar 25, 2012 2:51 pm

மன்னனின் இழப்பு

போர் வெற்றியை மட்டும் தருவதில்லை, பல உயிர்களின் இழப்பையும் தருகிறது. வீரம், ஆண்மை, பெருமை, பீடு, குடிமரபு என்ற பல பேசினாலும் இழப்பு இழப்பு தான், ஈடு செய்ய இயலாதது மனித உயிரின் இழப்பு. வெற்றிக் கொண்டாட்டம், கூத்து, கள், களிப்பு என்ற வாழ்க்கை போரின் ஒரு புறம் இருந்தாலும், மறு புறம் அமங்கலி, தந்தை இழந்தவன், கை இழந்தவன், கால் இழந்தவன் என்ற நிலையும் இருக்கிறது. அன்று மட்டுமல்ல, இன்று வரை.........

இப்படி நடந்த ஒரு வீரப் போரில் உயிரை இழந்து இருக்கும் மன்னனின் நாட்டில் இருக்கும் கவலையான நிலைமையை இந்த புறப் பாடல் விளக்குகிறது.

பாடல் 25: முல்லையும் பூத்தியோ (புறம் 242)
பாடியவர் : குட வாயிற் தீரத்தனார்
பாடப்பட்டோன் : ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தான்
திணை : பொதுவியல் துறை : கையறுநிலை

இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி யணியாள்
ஆண்மை தோன்ற வாடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ வொல்லையூர் நாட்டே.


பொருள் விளக்கம்

போருக்குச் செல்லும் இளைஞர்கள் சூட மாட்டார்கள், வளையல் அணிந்த பெண்கள் சூட மாட்டார்கள், நல்ல யாழ் கொண்டு பாட்டுப் பாடி மக்களை, மன்னனை மகிழ்விக்கும் பாணனும் சூட மாட்டான், அவன் துணைவி பாடினி (பாணினியும்) சூட மாட்டாள், இப்படி யாரும் சூடாமல் இருக்கும் இந்த ஒல்லை ஊரில் வீணாக ஏன் பூத்துக் கிடைக்கிறாய் முல்லைப் பூவே.... தன் ஆண்மையின் வீரத்தால் எதிரிகளைக் கடந்து வலிமையான வேல் எறியும் பெருஞ் சாத்தான் இறந்த பின்னும் பூத்தியோ முல்லைப் பூவே........கவலையில் கலை இழந்து இருக்கும் இந்த ஒல்லை ஊரில் யார் உன்னைச் சூடப் போகிறார்கள்..

புறம் வளரும் ........

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Sun Mar 25, 2012 6:12 pm

நல்ல தமிழ் அறிவோம் - இலக்கியம் அறிதல் மிகப் பெரிய மானுட செயலாக இப்போது இருக்கிறது. தங்களின் தமிழ்ப் பணி மாந்தர்தம் தமிழறிவு தாகப் பிணிக்கு மருந்தாக அமைந்துள்ளது.

இயல்பாய் கவிதைகள் நவீனம், புதுக்கவிதை மற்றும் ஹைக்கூ என எழுதும் எனக்கு இந்த இலக்கியங்களைப் புரட்டும் போது வாழ்நாள் இன்னும் நீடித்திருக்க வேண்டும் என இறைவனை இறைஞ்சுகிறேன். அத்துணை இலக்கியங்களையும் இந்த வாழ்வு முடிவத்ர்க்குள் படித்தாகவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.


கா.ந.கல்யாணசுந்தரம்

[You must be registered and logged in to see this link.]
மனிதம் வாழ வாழு

கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2833
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 310

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by Aathira on Sun Mar 25, 2012 9:38 pm

சூடாத முல்லையைப் பாடி ஒல்லையின் போர்க்கு முற்றுப் புள்ளி வைக்க எண்ணிய போர்நிறுத்தப் பாடல் அருமை. இதே போல ஒளைவையார் தூது சென்ற பாடல் இரண்டு உள்ளன புறநானூற்றில். பொதுவாக காதலும் வீரமும் மட்டுமே சங்க காலம். அதில் புலவர்கள் மன்னனின் வீரத்தைப் பாடிப் பாடி உசுப்பேற்றி விடுவார்கள் எனறு பரவலாக நிலவி வரும் கருத்துக்குப் புரனானது இப்பாடல்கள்.

அழகிய தேவையான பதிவுக்கு நன்றி சதாசிவம். நன்றி


[You must be registered and logged in to see this link.]

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by sinthiyarasu on Sun Mar 25, 2012 9:42 pm

உண்மையாகவே அருமையான பதிவு. மகிழ்ச்சி

sinthiyarasu
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 541
வசிப்பிடம்: கொழும்பு, சிறிலங்கா.
சேர்ந்தது: 27/02/2012
மதிப்பீடு: 70

Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum