ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Yesterday at 6:12 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு 5 5 7

காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Wed Aug 03, 2011 4:09 pm

First topic message reminder :

காதல் சுரங்கம் குறுந்தொகை

காதல் உங்களை கடக்கவில்லை என்றாலும், காதலை நீங்கள் கடக்கவில்லை என்றாலும் வாழ்ந்ததுக்கான அர்த்தம் குறைவு. காதல் என்ற சொல் காதுக்கு இனிமையானது, பலரின் வாழ்க்கையில் கசப்பானது. காதல் என்ற சொல்லின் இருந்து தான் கவிதை, காவியம், கருணை, கல்யாணம், கலவி, காமம், கவலை, கண்ணீர், கைகலப்பு, கல்லறை என்ற சொல்லுக்கு வழி செல்கிறது. காதல் உச்சரிக்க, உணர சுகமானது, ஆனால் பலருக்கு வாழ கடினமானது. பட்டாம்பூச்சிகள் பறக்க, தேனீக்கள் ரீங்காரம் பாட, மலரினும் மென்மையாக தொடங்கி, பல சந்தோசத் தருணங்களை அள்ளித் தருவது.

காதல் இல்லை என்றால் இன்றைய சினிமாவில் டூயட் பாடல்களோ, சோகப் பாடல்களோ இடம் பெறாது. சிறகுகள் இல்லாமல் நம்மை பறக்கச் செய்வது, காயமோ, வெட்டோ இல்லாமல் வலிக்கச் செய்வது.

குறுந்தொகையின் சிறப்பு:

தமிழில் காதல் பற்றி கூறும் நூல்கள் ஏராளம். பதினெண் மேல் கணக்கு நூல்களுள் அகப் பாடல்களே அதிகம் இடம் பெற்றுள்ளன. அப்படி உள்ள பாடல்களில் காதலின் பல்வேறு கூறுகளை பற்றி கூறும் சிறப்பான தொகுப்பு (தொகை) நூல் குறுந்தொகை ஆகும். குறுந்தொகை நான்கு முதல் எட்டு அடிகள் கொண்ட பாடல்களை கொண்டு இருப்பதால் குறுந்தொகை என்று அழைக்கப் படுகிறது. கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த சுமார் இருநூறு புலவர்களால் பாடப் பெற்ற நானூறு பாடல்கள் கொண்ட தொகுப்பு நூலாகும்.

காதலிப்பவர்கள், காதலிக்க நினைப்பவர்கள், காதலில் துன்பப்பட்டவர்கள், காதல் கவிதை எழுதுவோர் என்று அனைவருக்கும் இதில் பாடல்கள் உள்ளது.

புறப்பாடல்களில் அப்பாடல் யாருக்குக்காக பாடப்பட்டது என்ற குறிப்பு இருக்கும், இதை கொண்டு தான் நாம் அதியமானை, கபிலரை, வல் வில் ஓரியை, பாரியை அடையாளம் காண முடிகிறது. ஆனால் தொல்காப்பியம் கூறும் இலக்கண மரபுப்படி அகப்பாடல்களில் இன்னாருக்கு இது பாடப்பட்டது என்ற குறிப்பு குறுந்தொகை பாடல்களில் இல்லை. (இது இவர்களின் அந்தரங்க விஷயம் என்ற காரணத்தால், பாடப்பட்டவரின் குறிப்பு இல்லாமல் பாடும் நாகரீகம் தமிழ் மரபில் இருந்தது). தலைவன், தலைவி, பாங்கன், தோழி, செவிலி என்ற பாத்திரங்கள் அடிப்படையில் தான் பாடல்கள் எழுதப்பட்டது.

தமிழின் சிறப்பு

மற்ற மொழிகளில் இல்லாத ஒரு பெரும் சிறப்பு தமிழில் காணப்படும் திணை இலக்கணமும், அதற்குரிய பாடல் அமைப்பும் தான், பொதுவாக எல்லா மொழிகளும் கூறும் காலம் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று மூன்று கூறுகள் தான். இடம், காலம், நேரம் பொறுத்து மாறுவது மனித மனதின் குணமாகும். நன்றாக குளிர் உள்ள இடத்தில், பனிக்காலத்தில் இருக்கும் காதல் நெருக்கம், வறண்ட நிலத்தில், வேனிர் காலத்தில் இருப்பதில்லை. இப்படி உள்ள இடம், சூழ்நிலை, காலம், நேரம் ஆகியவைகளை பிரித்து ஐந்திணை இலக்கணமாக கூறுவது தமிழில் உள்ள தனிப் பெரும் சிறப்பாகும். மேலும் மறை பொருள் அல்லது இறைச்சி என்று கூறப்படும் உள்ளார்ந்த அர்த்தமும், ஆழ்ந்த கருத்துகளும் அகப்பாடல்களின் சிறப்பு அம்சமாகும்.

குறுந்தொகையை ரசிப்பதற்கு முன்னர் இந்த ஐந்திணை என்றால் என்ன, அவற்றின் உட்கூறுகள் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

வளரும்.........

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

[You must be registered and logged in to see this image.]


Last edited by சதாசிவம் on Sat Aug 27, 2011 11:39 am; edited 3 times in total

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down


Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by பிஜிராமன் on Sun Oct 23, 2011 12:20 pm

ஐயா.........கடைசியாக பதிந்த பாடலைப் படித்தேன்......அருமையான விளக்கம்..........முல்தான் மாட்டி என்பது எனக்கு புதுமையான சொல், இதை அழகு நிலையங்களில் உபயோகிக்கின்றனரா?

நான், மூன்றாம் பாலுக்கு கவிதை எழுதும் பொழுது, உங்களின் இந்தப் பதிவுகள் கை கொடுக்கும் என்பதில் எனக்கு எந்த விட ஐயமும் இல்லை,

மிக்க நன்றிகள் ஐயா...... :நல்வரவு: மகிழ்ச்சி நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Oct 24, 2011 4:27 pm

பிஜிராமன் wrote:ஐயா.........கடைசியாக பதிந்த பாடலைப் படித்தேன்......அருமையான விளக்கம்..........முல்தான் மாட்டி என்பது எனக்கு புதுமையான சொல், இதை அழகு நிலையங்களில் உபயோகிக்கின்றனரா?

நான், மூன்றாம் பாலுக்கு கவிதை எழுதும் பொழுது, உங்களின் இந்தப் பதிவுகள் கை கொடுக்கும் என்பதில் எனக்கு எந்த விட ஐயமும் இல்லை,

மிக்க நன்றிகள் ஐயா...... :நல்வரவு: மகிழ்ச்சி நன்றி


நன்றி ராமன்,,,,,, நன்றி அன்பு மலர்

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by kitcha on Mon Oct 24, 2011 4:36 pm

சம்பந்தமே இல்லதே கேள்வி கேட்கிறேன் என்று நினைக்க வேண்டாம் தமிழில் தொல்காப்பியம் மிகச் சிறந்த ஒன்றாக கருதப் படுவது ஏன்.கொஞ்சம் விளக்கம் சொல்ல முடியுமா திரு.சதாசிவம் அவர்களே

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Oct 24, 2011 5:01 pm

நன்றி கிச்சா

தொல் என்றால் பன்மையான (பழமையான) என்று பொருள். தமிழ் இலக்கண நூல்களில் பழமையான நூலாக இது கருதப்படுகிறது. மேலும் சமஸ்கிரத இலக்கண முன்னுலான பாணினி எழுதிய நூலுக்கும் முன் எழுதப்பட்டது. இலக்கண மரபுகள் கூட அழகிய இலக்கிய வடிவம் அமைத்திருப்பது, இதன் சிறப்பு. தமிழ் அறிந்த ஒருவன் படித்தால் கூட இதில் உள்ள பல மரபுகள் சுலபமாகப் புரியம் வண்ணம் அமைந்துள்ளது. எளிதில் புரிவது, அனைவரையும் சுலபமாக சென்று அடையும்..தமிழின் சிறப்பை இதில் நன்கு அறியலாம், நூறு வருடம் முன்பு ஆங்கிலத்தில் புலி குட்டியை இப்படி கூப்பிட வேண்டும், மாட்டுக் குட்டியை கூப்பிட வேண்டும் என்று வகுத்திருப்பது போல், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் ஒவ்வொரு மிருகத்தின் குட்டியை எப்படி கூப்பிட வேண்டும் என்று இலக்கணம் வகுத்திருக்கிறான் என்ற உண்மை இதை படிக்கும் போது நாம் அறியலாம். அது மட்டுமல்லாமல் தாவரம், மரம் பற்றிய கூற்றுகள் கூட இதில் உண்டு.

மேலும் விவரங்களுக்கு,

[You must be registered and logged in to see this link.]

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by kitcha on Mon Oct 24, 2011 5:27 pm

சதாசிவம் wrote:நன்றி கிச்சா

தொல் என்றால் பன்மையான (பழமையான) என்று பொருள். தமிழ் இலக்கண நூல்களில் பழமையான நூலாக இது கருதப்படுகிறது. மேலும் சமஸ்கிரத இலக்கண முன்னுலான பாணினி எழுதிய நூலுக்கும் முன் எழுதப்பட்டது. இலக்கண மரபுகள் கூட அழகிய இலக்கிய வடிவம் அமைத்திருப்பது, இதன் சிறப்பு. தமிழ் அறிந்த ஒருவன் படித்தால் கூட இதில் உள்ள பல மரபுகள் சுலபமாகப் புரியம் வண்ணம் அமைந்துள்ளது. எளிதில் புரிவது, அனைவரையும் சுலபமாக சென்று அடையும்..தமிழின் சிறப்பை இதில் நன்கு அறியலாம், நூறு வருடம் முன்பு ஆங்கிலத்தில் புலி குட்டியை இப்படி கூப்பிட வேண்டும், மாட்டுக் குட்டியை கூப்பிட வேண்டும் என்று வகுத்திருப்பது போல், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் ஒவ்வொரு மிருகத்தின் குட்டியை எப்படி கூப்பிட வேண்டும் என்று இலக்கணம் வகுத்திருக்கிறான் என்ற உண்மை இதை படிக்கும் போது நாம் அறியலாம். அது மட்டுமல்லாமல் தாவரம், மரம் பற்றிய கூற்றுகள் கூட இதில் உண்டு.

மேலும் விவரங்களுக்கு,

[You must be registered and logged in to see this link.]


மிக்க நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by பிஜிராமன் on Mon Oct 24, 2011 6:07 pm

தொல்காப்பியதிற்கு சிறந்த விளக்கம் ஐயா.....மிக்க நன்றிகள்........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Oct 29, 2011 3:34 pm

காதலின் இணக்கம்

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

காதலன் காதலி சந்திப்பு மிகவும் ரம்மியமானது, சிருங்காரச் சுவை உடையது. காதலிக்கும் போது காதலன் காதலி சந்திப்பு பல மணி நேரம் நிகழ்ந்தாலும் ஒரு சில வினாடிகளில் கழிந்தது போல் ஒரு மாயத்தோற்றத்தை நமக்கு கொடுக்கிறது. பேசப் பேச இனிக்கிறது, சீ, ரொம்ப மோசம், அப்புறம், அப்புறம் என்று ஒன்றும் இல்லை என்றாலும் நான்கு மணி நேரம் ஆனாலும் சுவையாக பேச முடிகிறது. இப்படி ஆள் இல்லாத இடத்தில் தலைவனை காண வந்த தலைவியின் தோழி, தலைவனுக்கு கூறும் பாடல், காலையில் ஆரம்பித்த உங்கள் சந்திப்பு மாலை வரை தொடர்கிறது, நேரம் ஆகிவிட்டது, பொழுது சாய்ந்து விட்டது, நீங்கள் பேசியது போதும் பிறகு பேசலாம், நாங்கள் செல்ல வேண்டும் என்று கூறும் அழகான பாடல். இன்று கூட காதலிக்கும் தோழியரைப் பார்த்து அவர்களின் தோழிகள் கேட்கும் கேள்வி அப்படி என்னத்த தான் பேசுவீங்களோ, எப்பவும் போனும் கையும்மா இருக்கிற, இது சரியில்லை. அது போல் இருக்கும் ஒரு பாவனையில் எழுந்த பாடல்.

பாடல் 11:நாரை மிதிக்கும் என் மகள்
திணை : நெய்தல் (தோழியின் கூற்று)
பாடியது : பொன்னாகனார்

நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி,
நின்குறி வந்தனென், இயல் தேர்க் கொண்க!-
செல்கம்; செல வியங்கொண்மோ-அல்கலும்,
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும், என் மகள் நுதலே


பொருள் விளக்கம்:

கடற்கரையில் நெய்தல் மலர் கிடத்தி என் பொம்மையை வைத்து விட்டு உன்னை சந்திக்க வந்திருந்தாள் என் தலைவி, அழகிய தேரை உடைய தலைவனே, என் மகள் போல் நான் பாவிக்கும் பொம்மையின் நெற்றியை ஆரால் மீனை நன்கு உண்டு வயிறு பெருத்த நாரை மிதித்து விடும், பொழுது சாய்ந்து இருட்டி விட்டது, நான் புறப்படுகிறேன் அவளை என்னுடன் அனுப்பிவிடு.

பாடலில் சிறப்பு:

பொம்மையை தன் மகள் என்று கூறுவது, பெண்கள் பாவை பொம்மையை தங்கள் குழந்தையாக வைத்து விளையாடும் பழக்கம் இருப்பதையும், தலைவியை பொம்மையாக கருதுவதையும் இந்த பாடல் அழகாகக் கூறுகிறது. உவமை நயம் உள்ள வரிகள். பொம்மையை அழிக்கும் நாரை போல், பொழுது சாய்ந்ததால் தலைவியின் பெண்மையை தலைவன் அழிக்கும் முன்னர் அவளை திரும்ப அழைக்கும் தோழியின் பயத்தை வெளிப்படுத்தும் பாடல்.

காதல் வந்தால் எவ்வளவு கஷ்டம், பார்க்காமல் இருந்தாலும் கஷ்டம், பார்த்து கொஞ்சம் நேரம் பேசினாலும் கஷ்டம்.

காதல் வளரும் .........


Last edited by சதாசிவம் on Sat Nov 12, 2011 2:34 pm; edited 1 time in total

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Nov 12, 2011 1:06 pm

காதலின் தவிப்பு

காதல் வந்தால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எத்தனை முறைப் பார்த்தாலும் எவ்வளவுத் தான் பேசினாலும் காதலிக்கும் காலங்கள் சலிப்பதில்லை. இன்றைய காலகட்டத்தில் உள்ள பெண்களுக்கு ஹவர் (hour) கணக்குல பேசினாலும் அவருடைய கணக்குல பேசுவதால் சலிப்பதில்லையோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

இன்று உள்ள நவீன காலச் சூழ்நிலையில் கூட ஒருவரை ஒருவர் பார்ப்பது அவ்வளவு சுலபமல்ல, தோழியரிடம் பொய் சொல்லி, பெற்றவரிடம் பொய் சொல்லி, யாரும் தன்னை அடையாளம் கண்டு விடக்கூடாது என்று தலையில் முக்காடு இட்டு காதலருடன் நெருக்கமாக பைக்கில் செல்வது எவ்வளவு சுகமானது. அப்பப்பா எத்தனை பெயரை சமாளிக்க வேண்டி உள்ளது.

இந்த காலத்திலே இப்படி உள்ளது என்றால், அந்த காலத்தில் எவ்வளவு கட்டுப்பாடு இருந்திருக்கும் என்று நீங்கள் ஊகிக்கவும். எந்த காலமாய் இருந்தால் என்ன ? எத்தனை பேர் தடுத்தால் என்ன? காதலர் காண்பதை யார் தடுக்க முடியும் ? காதல் சுவை எல்லாத் தடைகளையும் தாண்டும் சக்தியை தருகிறது.

இப்படி தனக்கு தடையாக இருக்கும் பெற்றவரை எண்ணி புலம்பி, தன்னை காணவரும் காதலனை காண தவிக்கும் தலைவியின் சூழலை அழகாகச் சித்தரிக்கும் பாடல் இது.

திணை - குறிஞ்சி
பாடல் 11- என்ன செய்வேன்? (பாடல் எண் : 244)
காணவரும் தலைவனை காண துடித்து தலைவி தவிக்கும் பாடல் இது.
பாடியவர் - கண்ணனார்

பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்
துரவுக்களிறு போல்வந் திரவுக்கதவ முயறல்
கேளே மல்லேங் கேட்டனம் பெரும
ஓரி முருங்கப் பீலி சாய
நன்மயில் வலைப்பட் டாங்கியாம்
உயங்குதொறு முயங்கு மறனில் யாயே.


பொருள் விளக்கம்


எல்லோரும் தூங்கும் நள்ளிரவில், யாருக்கும் பயப்படாத முரட்டு யானையைப் போல வந்திருக்கிறாய். நீ கதவை தட்டுவது என் காதில் வீழாமல் இல்லை. கேட்டேன் தலைவா. தலை கொண்டை கலைய , தோகை சரிய வேடன் வலையில் அகப்பட்டுள்ள மயில் போல மாட்டிக் கொண்டிருக்கிறேன். என் தாய் என்னை கட்டிக்கொண்டு படுத்து இருப்பதால் என்னால் எழுந்து வர முடியவில்லை. பொறுமையாய் இரு. அவளை ஏமாற்றி விட்டு வருகிறேன்.

பாடலின் சிறப்பு:

தலைவனை முரட்டு யானையாக உருவகப்படுத்துதல், அதாவது சாதாரண யானை, யானைப்பாகனின் அங்குசத்திருக்கு கட்டுப்படும் பயப்படும் . ஆனால் காதல் என்னும் மதம் ஏறியதால் தலைவன் முரட்டு யானைப் போல் எதற்கும் பயப்படாமல் நள்ளிரவில் வந்துள்ளான். மயிலின் அழகு அதன் தோகையும், அழகான கொண்டையும் தான், மயில் வேடனின் வலையில் அகப்படும் போது அதன் கொண்டையும், தோகையும் சிலிர்த்து மகிழ்ச்சியுடன் ஆட முடியாது. அது போல் பெற்றோரின் பாச வலையில் அகப்பட்டுள்ள பெண்கள் தங்களின் தலைவனுடன் கூடி சிலிர்க்கும் மகிழ்ச்சியை அடையமுடியாமல் தவிக்கும் தவிப்பை உணர்த்தும் அழகான பாடல் இது. ஆயிரம் கலாச்சாரம் மாறினாலும், ஐ‌டி துறை வந்தாலும் காதல் காதல் தான், அது தீரா விருந்து.

காதல் வந்தால் தூக்கம் போகும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் தவிப்பு என்ன ? அடுத்த பாடலில் பார்ப்போம்.

காதல் வளரும்.....


சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Thu Dec 15, 2011 8:23 pm

தூக்கம் இழந்த காதலி

தூக்கம் நன்றாக இல்லையென்றால் நம் உடம்புக்கு துக்கம் வந்து விடுகிறது. அதேபோல் மனதுக்கு துக்கம் இருக்கும் போது தூக்கம் வர மறுக்கிறது. காதலின் இனிய தருணங்கள் கழிந்த பின் அடுத்த என்ன செய்யலாம் என்ற ஆலோசனை காதலனுக்கு முன், காதலிக்கு வந்து விடுகிறது. கல்யாணம் செய்து கொள்ளவும் துணிவு வரவில்லை, காதலை விடவும் துணிவு வரவில்லை. உலகளில் உள்ள ஆச்சரியங்களில் வியக்கத்தது காதல் தான். காதலிக்கும் போது விரும்பி, உருகி, நம்மை உருக்கி காதலிக்கும் தலைவிக்கு ஊரார் அறிந்தவுடன் தயக்கம் வருகிறது. காதலிக்கும் போது உள்ள துணிவு, கல்யாணத்திற்கு வருவதில்லை. அப்போது தான் வாழ்க்கையின் அனைத்து கெடுதல்களும் அவள் கண் முன்ன வருகிறது. பெண் என்னதான் பேசினாலும், யாரோ ஒருவரை சார்ந்து தான் வாழ வேண்டி உள்ளது. ஒரு கிளையில் இருந்து மறு கிளைக்கும் தாவும் போது, தாவும் கிளை பலம் உள்ளதா என்று ஊகிக்கும் மந்தியின் நிலை தான் பெண்ணின் மனம். முதலில் பெற்றோர், கல்யாணம் ஆனா பிறகு கணவன், பிள்ளைகள் வளர்ந்து விட்டால் பிள்ளைகள் என்று யாராவது ஒருவரின் தோள்கள் தேவைப்படுகிறது. இப்படி காதலின் அடுத்த நிலைக்கு போக நினைக்கும் தலைவியின் நிலையைத் தான் இந்த பாடல் கூறுகிறது.

அந்த காலத்தில் வீட்டில் கொல்லை புறத்தில் மாட்டுத் தொழுவம் இருக்கும். இப்படி இருக்கும் தொழுவத்தில் மாடுகள் கொசு, ஈயின் தொல்லையில் உடலை ஆட்டிக் கொண்டும், சிலிர்த்துக் கொண்டும் தூங்கும். இது இரவு முழுவதும் தொடரும். இப்படி ஆட்டும் போது கழுத்தில் கட்டப்பட்டு இருக்கும் மணி தொடர்ந்து ஒளித்து கொண்டு இருக்கும். கவலை இல்லாமல் இருக்கும் ஒருவர் சுலபமாக தூங்க முடியும். பக்கத்தில் பட்டாசு வெடித்தாலும் அவர்கள் தூக்கம் கலையாது. ஆனால் மனதில் கவலையும், யோசனையும் உள்ளவர்கள் தூங்கினாலும் லேசான சத்தம் கேட்டாலும், தூக்கம் கலைந்து விடும். காதல் சோகத்தில் உள்ளவர்களை கேட்கவே வேண்டாம். அவர்களுக்கு தூக்கமே வருவதில்லை. இப்படி தூக்கம் இல்லாமல் இருக்கும் போது நம்மை சுற்றி இருக்கும் சத்தங்கள் நன்கு கேட்கிறது. இரவில் சத்தம் இடும் வாகனங்கள், கூர்க்கா கொடுக்கும் விசில் சத்தம், விடியற்காலையில் கேட்கும் கோவில் மணியோசை, மசூதியில் வரும் பாங்கு சத்தம் என்று பலதும்.

இந்த பாடலும் இப்படி தூங்காமல் தவிக்கும் தலைவிக்கு இரவில் தன் தலையை ஆட்டும் மாடுகளின் கழுத்துகளில் கட்டப்படும் மணியோசை தான் கேட்கிறது.

திணை : குறிஞ்சி
பாடல் 12: சேயரி மழைக்கன் (பாடல் 86)
தலைவனை நினைத்து தூக்கம் இல்லாமல் புலம்பும் தலைவியின் பாடல்.
பாடியவர் : வெண் கொற்றன்

சிறை பனி உடைந்த சேயரி மழைக் கண்
பொறை அரு நோயொடு புலம்பு அலைக் கலங்கி,
பிறரும் கேட்குநர் உளர்கொல்?-உறை சிறந்து,
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து,
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே.


பொருள் விளக்கம்

மேகங்களில் இருந்து உடைந்து வழிந்து துளித் துளியாக விழும் மழைத் துளி போல் கண்ணீருடன் நான் புலம்புவதை கேட்க ஆள் இருக்கிறார்களா? மழைத்துரலில் வாடைக்காற்று வீசும் பனிக்காலத்தில் ஈயின் தொந்தரவு தாங்காமல் தலையை ஆட்டும் எருது தலை அசைக்க சப்தம் கேட்கும் மணியோசையை நள்ளிரவில் தூங்காமல் கேட்டு நான் புலம்பும் புலம்பலை கேட்க ஆள் இல்லையா?

ஊரு சனம் தூங்கிடுச்சி,
ஊத காத்து அடிச்சிடுச்சி
பாவி மனம் தூங்கலையே,
அதுவும் ஏனோ தெரியலையே


என்று பாடும் சினிமா பாட்டு இந்த குறுந்தொகைப் பாடலின் சாயல் தான்.

காதல் தொல்லையில் தூக்கம் மட்டுமா போகிறது, எவரைப் பார்த்தாலும் கோவம் வருகிறது, ஓ என்று கத்தலாமா என்று தோணும். இப்படி துடிக்கும் ஒரு பாடலை அடுத்து காண்போம்.

காதல் வளரும் .......

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Dec 26, 2011 11:20 am

காதலன் பிரிவு

காதல் செய்யும் போது காதலர் பிரிவு மிகவும் வருத்தம் தரக்கூடியது. காதலி காதலனைக் காண நினைக்கும் போது அவனை காண சூழ்நிலை சரியில்லாத நிலையில் அவளுடைய வருத்தம் மேலும் ஓங்குகிறது. காதலிக்கும் போது மட்டுமல்ல கணவன் காதலனாக இருக்கும் போதும் இந்த நிலை தான். பெரும்பாலான பெண்களுக்கு காதலித்தவன் கணவனாக அமைவதில்லை. கணவனாக அமைந்த ஆண் மகனோ தன்னை காதலிப்பதில்லை. இவர்கள் கடமைக்காகத் தான் வாழ்கின்றனர். இப்படி வாழும் வாழ்க்கையில் கணவனின் அல்லது மனைவியின் பிரிவோ நெருக்கமோ பெரும் துக்கத்தையோ மகிழ்ச்சியையோ தருவதில்லை. பக்கத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே மாதிரி தான் இருக்கும். இன்னும் சிலருக்கு எப்படா ஆளு ஊருக்கு கிளம்புவான் என்றும், அப்பாடி ஒரு வழியா இவ கிட்ட இருந்து ஒரு சின்ன விடுதலை என்று சந்தோஷம் கொள்ளும் ஆண் மகன்களும் உண்டு. இப்படி கடமைக்காக வாழாமல் காதலுடன் வாழும் மனைவி, பொருள் தேடி அந்நிய தேசம் சென்ற தன் தலைவனின் பிரிவால் பாடும் பாடல் இது. மனைவியை உள்ளூரில் விட்டு விட்டு வெளிநாட்டில் பணம் சம்பாதிக்க செல்லும் கணவன் கவனிக்க வேண்டிய பாடல் இது.

திணை : பாலை
பாடல் 13 : முட்டுவேன் கொல் (பாடல் எண்: 28)
பாடியவர் : ஔவையார்
கூற்று : தலைவனின் பிரிவால் வாடும் தலைவி பாடிய பாடல்

முட்டு வேன் கொ றாக்கு வேன் கொல்
ஓரேன் யானு மோர் பெற்றி மேலிட்டு
ஆ, அ ஒல்லெனக் கூவு வேன் கொல்
அலமர லசைவளி யலைப்ப என்
உயவு நோ யறியாது துஞ்சு மூர்க்கே.


பொருள் விளக்கம்

முட்டிக்கொள்வேனா ! என்னை நானே தாக்கிக் கொள்வேனா !!
ஆ ஊ என்று அலறவா ? மெல்லிய காற்று அசைக்கும் என் காதல் (காம) நோயை அறியாது, என் உணர்வுகளை புரியாது அமைதியாக தூங்கும் இந்த ஊரைப் பார்த்து.

பாடலின் சிறப்பு

கணவனைப்/ காதலனைப் பிரிந்த பெண் படும் பாட்டை இந்த பாடல் அழகாகக் கூறுகிறது. வெளிநாட்டில் வேலை செய்யும் கணவன், கை நிறைய பணம், வசதி, நகை என்று ஊரார் பொறாமை படும் பெண்களின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஆழமான பாடல் இது. மாமியார், நாத்தனார், உடன் வேலைப் பார்ப்பவர்கள், அண்டை அசலார் எல்லாம், அவளுக்கென்ன அவள் கணவன் வெளிநாட்டில் லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறான். கொடுத்து வைத்தவள் என்று ஊரார் நினைக்க, அவள் தூங்காமல் கழித்த இரவுகளை யாருக்குத் தெரியும். அந்த வேதனையை உணர்த்தும் பாடல் தான் இது. என்ன தான் தேவைக்கேற்ற வீடு, பணம், வசதி, வாய்ப்பு என்று அனைத்தும் இருந்தாலும் ஆசை அருவியாகப் பொங்கும் போதும், ஆதரவு தேடும் போதும், மனமும் உடலும் அசதியாக இருக்கும் போதும், அடிவயிறு வலிக்கும் போதும், தோள் சாய நினைக்கும் போதும் அரவனைக்கும் அன்பான கணவன் அருகில் இல்லையே என்று புலம்பும் பெண்ணின் வருத்தம் தான் இந்த பாடல்.

காதலன் அருகில் இல்லை என்றால் காதலியின் நிலை என்ன ஆகும். அதை அழகான உவமையுடன் விளக்கும் அழகிய பாடலை அடுத்துக் காண்போம்.



காதல் வளரும்.....



சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Jan 14, 2012 7:53 pm

அணிலாடும் முற்றம்

காதலர் / கணவன் அருகில் இருக்கும் போது காதலிக்கு / மனைவிக்கு வேறு உலகம் தேவையில்லை. "ராமன் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தி" என்று கூறும் பழமொழியும் இதன் வழி வந்ததுதான். அப்படி என்ன ஒரு சந்தோஷம் அவர்களுக்கு, ஆணுக்கு அன்றிலிருந்து இன்று வரை வீட்டுக்கு வெளியே ஆயிரம் பணியும், பொழுதுபோக்கும் இருந்தது. ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை, வேலை சென்றாலும் பெண்களை அன்புடன் கவனிக்கும் கணவன், காதலிக்காக காத்திருக்கும் காதலன் என்று இவர்களின் இணைப்பு, அருகாமை பெண்களுக்கு இனம் புரியாத சந்தோஷத்தை தருகிறது. வெளிநாடு வேலை செய்யும் கணவன் எப்போது வீடு திரும்புவான் என்று காத்திருக்கும் மனைவியும் இந்த நிலை தான். இப்படி பொருள் தேடி பிரிந்த தலைவன் இல்லாத நான் யாரும் இல்லாத வீட்டின் நிலை போல் உள்ளது என்பதை கூறும் அழகான குறுந்தொகைப் பாடல் இது.

திணை : பாலை
பாடல் 14: அணிலாடும் முற்றம் (பாடல் 41)
பாடியர் : பெயர் தெரியவில்லை, அவருக்கு வைத்த பெயர் அணிலாடு முன்றிலார்
கூற்று : தலைவனைப் பிரிந்த தலைவி பாடும் பாடல்

காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றிற்
புலப்பில் போலப் புல்லென்று
அலப்பெண் தோழி அவர் அகன்ற ஞான்றே


பொருள் விளக்கம்

காதலன் அருகில் இருக்கும் போது, ஊர் முழுதும் மனிதர்கள் நிறைந்து எங்கும் மகிழ்ந்து கொண்டாடும் திருவிழா கூட்டம் நடுவில் இருப்பது போல் நான் மகிழ்ந்து இருந்தேன். அவர் இல்லாத இந்த தருணத்தில் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் அணில் வந்து ஆடும் நடு முற்றம் போல் கேட்பாரற்று பொலிவிழந்து கிடக்கிறேன் தோழி.

பாடலின் சிறப்பு

குறுந்தொகைப் பாடலின் சிறப்பு அதில் வரும் உவமை நயம் தான். மிகப்பெரிய சோகத்தை அழகான உதாரணத்தில் ஒரு சில வரிகளில் வடிப்பது குறுந்தொகையின் சிறப்பு. அப்படி ஒரு உதாரணம் தான் அணில் ஆடும் முற்றம். காதல் செய்யும் தருணத்தில் கல்லூரியிலோ, அலுவலகத்திலோ நம் துணை அருகில் இருக்கும் போது வேறு யார் இருந்தாலும் ஏன் இறந்தாலும் நம்மை அது சலனம் செய்வதில்லை. காதலனோ காதலியோ இல்லையென்றால் ஏதோ பாலைவனத்தில் நடுவில் உள்ளது போல் இருக்கும். அவர்களை எப்போது காண்போம் என்று மனம் துடிக்கும். அணில் மிகவும் பயந்த சுபாவம் உள்ள விலங்கு, ஒரு சிறு சலனம் கேட்டாலும் ஓடி விடும், அது தைரியமாக வந்து விளையாடும் முற்றம் என்றால் வீட்டில் ஒருவரும் இல்லை என்ற மறை பொருள் இதில் ஒளிந்துள்ளது. அது போல் தலைவன் இருக்கும் போது ஊரே உடன் அருகில் இருப்பது போல் உணர்வதும், அவன் அருகில் இல்லாத போது வீட்டில் அம்மா, அப்பா, அண்ணா, அக்கா என்று யார் இருந்தாலும் ஒருவரும் இல்லாத வீடு போல் என் நிலை உள்ளது என்று புலம்பும் தலைவியின் சோகத்தை அழகாகக் கூறும் பாடல் இது.

தொடரும்

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Jan 23, 2012 11:43 am

காதலித்த நாட்கள்

காதலிக்கும் நாட்கள் எத்தனை சுகமானது, நெருக்கத்திலும் சுகம், நெருடி ஊடல் கொண்டு கோபிப்பதும் சுகம். கோபித்து ஊடல் தணிந்து கூடுவதும் சுகம். இப்படி காதலிக்கும் காலங்கள் அத்தனையும் சுகமானது. ஆனால் காதலிக்கும் காலங்கள் வெகு விரைவாக சென்று விடுகிறது. காதலித்து கொண்டே இருக்கலாம் என்று நினைக்கும் போதே காதலிக்கும் காலங்கள் கழிந்து விடுகிறது. இப்படி விரைவாக கழிந்த காலங்களை எண்ணி வருந்தும் தலைவியின் கூற்றின் அமைந்த பாடல் இது.

திணை : குறிஞ்சி
பாடல் 15: மீனெறி தூண்டில் (பாடல் எண் : 54)
கூற்று : தலைவனுடன் கழித்த நாள்கள் குறித்த தலைவியின் கூற்று
பாடியவர் : பெயர் தெரியவில்லை, பாடலின் வரிகளை வைத்து அவருக்கு வைத்த பெயர் மீனெறி தூண்டிலார்

யானே ஈண்டையேனே என் நலனே
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங் கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனோடு ஆண்டு ஒழிந்தன்றே


பொருள் விளக்கம்

நானோ இங்கு இருக்கிறேன், என் நிலைமை கவண் கள் வீசுபவர் ஒலி கேட்டு பயந்து நடங்கிய காட்டு யானை சாப்பிட நினைத்து வளைத்த மூங்கில் தழைகளை கைவிட்டது போல் உள்ளது. மீனகப்பட்ட தூண்டிலை தூண்டில் எரிந்தவன் விரைவாக எடுத்து விடுவது போல் அவனுடன் சந்தோஷமாக பழகி இருந்த நாள்கள் கழிந்தன.

பாடலின் சிறப்பு

பெண்ணின் மென்மையான குணமும், அவளின் நிலையும் இந்த பாடல் எடுத்துக் கூறுகிறது. யானை மூங்கில் தழைகளைத் தின்ன அதை தும்பிக்கையால் வளைத்து ஒடித்து தின்னும். யாரோ வருவது கேட்டவுடன் ஒடித்த கிளையை அப்படியே விட்டுச் சென்று விடும். மரத்தில் இருந்து ஒடிக்கப்பட்ட கிளை மீண்டும் மரத்தில் ஒட்டாது, ஒரு சில நாட்களில் அந்த கிளை காய்ந்து சருகாய் மாறும். அது போல் தான் இந்த தலைவியின் நிலைமையும் தலைவனாலும் அனுபவிக்கப்பட வில்லை. மீண்டும் குடும்பத்தில் ஒட்ட மனமுமில்லை. குடும்பதிலிருந்து விலகவும் தைரியமில்லை. பாதி மரத்தில் ஒடிந்து தொங்கும் கிளை போல் இங்கேயும் இல்லாமல் அங்கேயும் இல்லாமல் அந்தரத்தில் உசாலாடுகிறது தலைவியின் மனம். தலைவனுடன் கழித்த நாட்கள் வெகு விரைவாக கழிந்து விட்டதே, அவன் மீண்டும் எப்போது வருவான் என்று ஏக்கப்படும் கவலை இந்தப் பாடலில் வெளிப்படுகிறது.

காதல் வளரும்.

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Jan 28, 2012 6:18 pm

காதலன் அணைப்பு

காதலிக்கும் போது கரைகடப்பதும் ஒரு சுகம், ஆயிரம் ஒழுக்கம் பேசினாலும் ஆண் பெண் ஈர்ப்பை கடந்தவர் வெகுக் குறைவு. இப்படி ஒரு ஈர்ப்பில் காதலனும், காதலியும் தழுவிக் கொள்கின்றனர். காதலில் அன்பு, ஆர்வம் அரவணைப்பு, ஆதங்கம், ஆசை, அருள், அமைதி இப்படி கட்டி அணைக்கும் போது வெளிப்படுகிறது. ஆண் காமத்தை நோக்கி நகர்ந்தாலும், காதலை நோக்கி நகரும் தன்மை பெண்களுக்கு இயற்கையிலே உண்டு. இவர்களின் எதிர்ப்பார்பு உண்மையான காதலும், தங்களை கைக்குள் அடக்கும் ஆண்மையும், ஆசையுடன் அரவனைக்கும் அரவணைப்பும் தான். இப்படி அணைத்த காதலனின் அழகான மார்பை நினைத்து வருந்தும் தலைவியின் கூற்றில் அமைந்த பாடல் இது.

திணை : குறிஞ்சி
பாடியவர் : மாடலூர் கிழார்.
பாடல் : என்ன இந்த நோய்
கூற்று : இரவை உணர்த்திய தோழிக்கு தலைவியின் பதில்

சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழி
வான மீனின் வயின்வயின் இமைக்கும்
ஓங்கு மலைநாடன் சாந்து புலர் அகலம்
உள்ளின், உள் நோய் மல்கும்;
புல்லின், மாய்வது எவன்கொல்?-அன்னா
ய்

பொருள் விளக்கம்

பரண் மேல் குறவன் கொளுத்திய கொள்ளி விண்மீன்களைப் போல் மினுமினுக்கும். இப்படி அவ்வப்போது மின்னும் விண்மீன்கள் போல் சந்தனமும் ஜவ்வாதும் சேர்த்து பூசிய அழகான மலை நாட்டைச் சேர்ந்த என் தலைவனின் அகலமான சந்தன மார்பை நினைத்தால் என் நோய் அதிகரிக்கிறது, அவன் மார்பை அணைத்தால் இது குறையும். இது எப்படி தோழி ? இது எந்த வகை நோய் ?

பாடலின் சிறப்பு

வசதி குறைந்த குறவன் வீட்டில் ஒளியேற்ற தீப்பந்தம் பயன்படுத்தப்பட்டது என்பதை இந்த பாடல் எடுத்துக் கூறுகிறது. இப்படி எரியும் பந்தத்தில் இருந்து புறப்படும் சிறு தீப்பொறிகள் சற்று தூரம் பறந்து மறைந்து விடும். இதை வானில் மின்னும் விண்மீன்களோடு ஒப்புமை செய்தது சிறப்பாகும். இப்படி மின்னும் தீப்பொறிக்கு ஆயுள் குறைவு. இது போல் மினுமினுக்கும் தலைவனின் மார்பை அணைத்த சுகமும் குறைந்த ஆயுளை உடையது. சுகமாக இருந்தது, ஆனால் விரைவில் முடிந்தது. அதனை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது, அவனை அணைத்தால் வருத்தம் போகிறது. இது என்ன நோய் தோழி என்று தோழியிடம் புலம்பும் புலம்பல். வயிறு நிறைந்து உண்ட பின்பும் இலையில் பரிமாறும் பாயாசம் இன்னொரு கரண்டி கிடைத்தால் சுகமாக இருக்கும் என்று நமக்கு தோணும் நினைப்பை போல்.
இரவை உணர்த்திய தோழிக்கு இரவில் வரும் விண்மீன்களை உவமையாகச் சொன்னது இந்த பாடலில் உள்ள சிறப்பு,

காதல் வளரும்.


சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by இளமாறன் on Sat Jan 28, 2012 7:57 pm

அவ்வப்போது மின்னும் விண்மீன்கள் போல் சந்தனமும் ஜவ்வாதும் சேர்த்து பூசிய அழகான மலை நாட்டைச் சேர்ந்த என் தலைவனின் அகலமான சந்தன மார்பை நினைத்தால் என் நோய் அதிகரிக்கிறது, அவன் மார்பை அணைத்தால் இது குறையும். இது எப்படி தோழி ? இது எந்த வகை நோய் ?


அழகான விளக்கம் அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by செல்ல கணேஷ் on Sun Jan 29, 2012 10:45 am

தோழமைக்கு,
மிக்க நன்றி! உங்களின் பதிவுகளுக்கு.
குறுந்தொகை போன்ற நல்ல காதல் இலக்கியம் வேறு ஒன்றும் இல்லை. இது வெறும் வார்த்தைகள் அல்ல. காதல் தெறிப்புகள். குறுந்தொகை போன்று போதை தரும் ஒன்று இல்லை தான். மனதை காதலால் நிரப்பி கிறங்க செய்யும் விந்தை.

செல்ல கணேஷ்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 295
வசிப்பிடம்: தேசாந்திரி
சேர்ந்தது: 04/08/2011
மதிப்பீடு: 75

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum