ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:58 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by ரா.ரமேஷ்குமார் Today at 6:57 am

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by ரா.ரமேஷ்குமார் Today at 6:51 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

2-வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியா வெற்றி

View previous topic View next topic Go down

2-வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியா வெற்றி

Post by இளமாறன் on Sat Dec 03, 2011 1:13 am

விசாகப்பட்டிணம்: இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிக்களுக்கிடையேயான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில்
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவரில், 9 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்தது. சிம்மன்ஸ் 78 ரன்களும், பொல்லார்டு 35 ரன்களும், ராம்பால் 86 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து, 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 48.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: 2-வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியா வெற்றி

Post by இளமாறன் on Sat Dec 03, 2011 1:16 am

விசாகப்பட்டினம்: சொந்த மண்ணில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. நேற்று நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விராத் கோஹ்லி(117), ரோகித் சர்மாவின்(90) அசத்தல் ஆட்டம் கைகொடுக்க, 5 விக்கெட் வித்தியாசத்தில் சுலப வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ராம்பாலின் அதிரடி ஆட்டம் வீணானது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. கட்டாக்கில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது.

மழையால் தாமதம்: லேசான மழை காரணமாக, இப்போட்டி சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக துவங்கியது. முதல் போட்டியில் விளையாடிய அதே இந்திய வீரர்கள், நேற்றும் களமிறங்கினர். வெஸ்ட் இண்டஸ் அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. அந்தோனி மார்டினுக்கு பதிலாக ரவி ராம்பால் விளையாடினார். "டாஸ் வென்ற இந்திய கேப்டன் சேவக், "பீல்டிங் தேர்வு செய்தார்.

திணறல் துவக்கம்: இந்திய "வேகங்கள் உமேஷ் யாதவ், வினய் குமார் போட்டுத் தாக்க, வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் மடமடவென சரிந்தன. அட்ரியன் பரத் (0), சாமுவேல்ஸ் (4), டேரன் பிராவோ (13), ஹயாத் (0), ராம்தின் (2) சொற்ப ரன்களில் வெளியேறினர். ஒருகட்டத்தில் 63 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

சிம்மன்ஸ் அரைசதம்: விக்கெட் ஒருபக்கம் சரிந்தாலும், மறுபக்கம் பொறுப்பாக ஆடிய சிம்மன்ஸ், ரவிந்திர ஜடேஜா பந்தில் ஒரு சூப்பர் பவுண்டரி அடித்து, தனது 10வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அஷ்வின் வீசிய ஆட்டத்தின் 24வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் விளாசிய போலார்டு (35), அதே ஓவரில் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் டேரன் சமி (2), ரசல் (11) பெரிய அளவில் சோபிக்கவில்லை.

ராம்பால் அபாரம்: பின், சிம்மன்சுடன் இணைந்த ரவி ராம்பால், அதிரடியாக ரன் சேர்த்தார். இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்ட சிம்மன்ஸ் (78), ஜடேஜாவின் துல்லிய "த்ரோவில் ரன்-அவுட்டானார். அடுத்து வந்த கீமர் ரோச்சுடன் இணைந்த ராம்பால், ஒருநாள் அரங்கில் தனது முதலாவது அரைசதத்தை பதிவு செய்தார். அஷ்வின், ஜடேஜா, ஆரோன் ஆகியோரது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ராம்பால், அணியின் ஸ்கோரை உயர்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது. ராம்பால் 66 பந்தில் 86 ரன்கள்(6 சிக்சர், 6 பவுண்டரி), ரோச் 24 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3, வினய் குமார், ரவிந்திர ஜடேஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

மழை குறுக்கீடு: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு பார்த்திவ் படேல் (2) ஏமாற்றினார். அடுத்து வந்த காம்பிர் (12) நிலைக்கவில்லை. அதிரடியாக ஆட நினைத்த சேவக், இரண்டு முறை கண்டம் தப்பினார். இந்திய அணி 11.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் சேவக் (26) அவுட்டானார்.

இளமை எழுச்சி: அடுத்து இணைந்த இளம் வீரர்களான விராத் கோஹ்லி, ரோகித் சர்மா ஆட்டத்தை தங்களது கையில் எடுத்துக் கொண்டனர். அபாரமாக ஆடிய விராத் கோஹ்லி, ஒருநாள் அரங்கில் தனது 8வது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு தந்த ரோகித் சர்மா, தனது 10வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். நான்காவது விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்த போது கோஹ்லி (117) வெளியேறினார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா (0) ஏமாற்றினார். பின், ரோகித் சர்மாவுடன் இணைந்த ரவிந்திர ஜடேஜா, ரசல் வீசிய ஆட்டத்தின் 49வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 48.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் (90), ஜடேஜா (9) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை விராத் கோஹ்லி தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் 5ம் தேதி ஆமதாபாத்தில் நடக்க உள்ளது.

ராம்பால் உலக சாதனை: இந்தியாவுக்கு எதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரவி ராம்பால், 66 பந்தில் 86 ரன்கள் (6 சிக்சர், 6 பவுண்டரி) எடுத்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டி அரங்கில், பத்தாவது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனை படைத்தார். முன்னதாக 2009ல், அபுதாபியில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தானின் முகமது ஆமிர், பத்தாவது வீரராக களமிறங்கி 73 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

"சூப்பர் ஜோடி: நேற்று பத்தாவது விக்கெட்டுக்கு இணைந்த வெஸ்ட் இண்டீசின் ரவி ராம்பால் (86), கீமர் ரோச் (24) ஜோடி கடைசி வரை அவுட்டாகாமல் 99 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஒருநாள் போட்டி அரங்கில், பத்தாவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடிகள் வரிசையில் மூன்றாவது இடம் பிடித்தது. முதலிரண்டு இடத்தில் வெஸ்ட் இண்டீசின் ரிச்சர்டு-ஹோல்டிங் (106 ரன்கள், எதிர்-இங்கிலாந்து, ஆண்டு-1984), பாகிஸ்தானின் முகமது ஆமிர்-சயீத் அஜ்மல் (103 ரன்கள், எதிர்-நியூசிலாந்து, ஆண்டு-2009) ஜோடிகள் உள்ளன.

"ரன் வள்ளல் அஷ்வின்: நேற்று "சுழலில் சொதப்பிய தமிழக வீரர் அஷ்வின், பத்து ஓவரில் ஒரே ஒரு விக்கெட் மட்டும் கைப்பற்றி 74 ரன்கள் கொடுத்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டி அரங்கில், முதல் முறையாக 70 ரன்களுக்கு மேல் கொடுத்தார். கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் நடந்த போட்டியில் இவர், 10 ஓவரில் இரண்டு விக்கெட் கைப்பற்றி 66 ரன்கள் கொடுத்தார்.

* வெஸ்ட் இண்டீஸ் சார்பில் நேற்று மொத்தம் ஒன்பது சிக்சர்கள் அடிக்கப்பட்டன. இதில் அஷ்வின் பந்தில் மட்டும் ஆறு சிக்சர்கள் விளாசப்பட்டன. ஆரோன் (2), ரவிந்திர ஜடேஜா (1) ஆகியோரது பந்தில் தலா ஒரு சிக்சர் அடிக்கப்பட்டன.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: 2-வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியா வெற்றி

Post by வை.பாலாஜி on Sat Dec 03, 2011 12:34 pm

வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு வாழ்த்துக்கள் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297

Back to top Go down

Re: 2-வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியா வெற்றி

Post by நியாஸ் அஷ்ரஃப் on Sat Dec 03, 2011 12:37 pm

சேர்ந்திசை சேர்ந்திசை சேர்ந்திசை

நியாஸ் அஷ்ரஃப்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1313
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 15/06/2010
மதிப்பீடு: 92

Back to top Go down

Re: 2-வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியா வெற்றி

Post by ரா.ரமேஷ்குமார் on Sat Dec 03, 2011 3:23 pm

நடனம் குதூகலம் நடனம் குதூகலம் நடனம்

ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2651
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 497

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum