|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 6:58 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by ரா.ரமேஷ்குமார் Today at 6:57 am
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by ரா.ரமேஷ்குமார் Today at 6:51 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மூன்றாவது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
Page 1 of 1 • Share •
மூன்றாவது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
அகமதாபாத், டிச 5 -
இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி அகமதாபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சேவாக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக சிம்மன்ஸ் - ஹயாட் களமிறங்கினர். சிம்மன்ஸ் ஒரு ரன் எடுத்திருந்த போது வினய்குமார் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்பு ஹயாட்டுடன் ஜோடி சேர்ந்த மார்லன் சாமுவேல்ஸ் நிதானமாக ஆடினார். ஹயாட் 20 ரன்கள் எடுத்திருந்த போது அபிமன்யூ மிதுன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடி அரை சதம் கண்ட சாமுவேல்ஸ், 58 ரன்கள் எடுத்திருந்த போது அஸ்வின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
டேரன் பிராவோ 26 ரன்கள் எடுத்திருந்த போது தசைபிடிப்பு ஏற்படவே ரிடையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். தினேஷ் ராம்தின் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய பொல்லார்டை தனது அட்டகாசமான கேட்சால் வெளியேற்றினார் ரவீந்திர ஜடேஜா. பொல்லார்டின் கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 28 ரன்கள் கிடைத்தது.
இதனையடுத்து களமிறங்கிய ஆந்த்ரே ரஸ்ஸலும், கேப்டன் டேரன் சமியும் இணைந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அந்த அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினர். டேரன் சமி 17 பந்துகளை சந்தித்து 2 சிக்ஸர், 5 பவுண்டரிகள் உள்பட 41 ரன்கள் குவித்தார். ரஸ்ஸல் தன் பங்கிற்கு 18 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகள் உள்பட 40 ரன்கள் குவித்தார். கடைசி மூன்று ஓவர்களில் மட்டும் இந்திய அணியினர் (18 பந்துகளில்) 52 ரன்களை விட்டுக் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
50 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி சார்பில் வினய் குமார் இரண்டு விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், அபிமன்யூ மிதுன், ரவி அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக பார்த்தீவ் படேலும், சேவாக்கும் களமிறங்கினர். தொடக்கமே இந்திய அணிக்கு பலத்த பேரிடியாக இருந்தது. ராம்பால் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் இந்திய அணியின் கேப்டன் சேவாக், தான் சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட் இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய காம்பீரும் ராம்பால் வீசிய அடுத்த பந்திலேயே எல்பிடபிள்யூ ஆனார். இதனால் இந்திய அணி 8 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து பரிதாபகரமான நிலையில் இருந்தது.
தொடர்ந்து களமிறங்கிய கோக்லி - படேல் ஜோடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை நிதானமாக கையாண்டது. எனினும் வெஸ்ட் இண்டீசின் அபாரமான பந்துவீச்சால் கோக்லி 20 ரன்கள் எடுத்த நிலையில் நரேன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அவரைத் தொடர்ந்து படேல் 39 ரன்களுக்கும், ரெய்னா 2 ரன்களுக்கும், ஜடேஜா 11 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
முந்தைய இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி ரோகித் சர்மா இந்தப் போட்டியிலும் தனது அபாராமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்து அஸ்வினும் இந்திய அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர். வெஸ்ட் அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக கையாண்டது இந்த ஜோடி.
சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 50 ரன்களை கடந்தார். அஸ்வின் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நரேன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வினய்குமாரும் தன் பங்குக்கு 3 ரன்கள் எடுத்து ரோச் பந்துவீச்சில் ஸ்டம்புகளை பறிகொடுத்தார்.
51 பந்துகளுக்கு 61 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா 95 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சமி-யால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால் இந்திய அணி தோல்வியை நோக்கி பயணமானது.
தொடந்து கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கிய மிதுன்-உமேஷ் யாதவ் ஜோடியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மிதுன் சாமுவேல்ஸ் பந்தில் ஒரு சிக்சரும், நரேன் பந்தில் ஒரு சிக்சரும் விளாசினார். இறுதியில் 22 பந்துகளுக்கு 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் விளையாடிய இந்த ஜோடியில் மிதுன் 23 ரன்கள் எடுத்த நிலையில் ராம்பால் வீசிய பந்தில் துரதிருஷ்டவசமாக எல்பிடபிள்யூ ஆனார்.
கடைசியில் இந்திய அணி 46.5 ஒவர் முடிவில் 244 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெடுகளையும் இழந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. யாதவ் 11 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ராம்பால் 4 விக்கெட்டுகளும், நரேன் 2 விக்கெட்டுகளும், ரோச், சாமுவேல்ஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். சிறப்பாக பந்துவீசிய ராம்பால் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெஸ்ட் அணி இந்த வெற்றியின் மூலம் 1-2 என்ற நிலையில் உள்ளது.

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: மூன்றாவது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வாழ்த்துக்கள் ..
இந்திய அணி தொற்ப்பதை விரும்பவில்லை, வெஸ்ட் இண்டீஸ் அணி வெல்வதை வெறுக்கவில்லை ..

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297
Re: மூன்றாவது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
வாழ்த்துக்கள் வெஸ்ட் இண்டீஸ்

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: மூன்றாவது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
தோல்விகளையே சந்தித்துக்கொண்டிருக்கிற அணி வெற்றி பெறட்டுமே

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3239
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 745
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum