புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
prajai
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம்


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 4:46 pm

First topic message reminder :

வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம்

1. முன்னேற்றத்தின் மூலமந்திரம்

""நான் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் யாரும் எனக்கு எதையும் கற்றுத் தருவதில்லை'' என்று சில இளைஞர்கள் புலம்புகிறார்கள்.

அவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

உங்களுக்கு யாரும் எதையும் கற்றுத் தரமாட்டார்கள். நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.

யாரும் உங்களுக்கு எதையும் ஊட்டமாட்டார்கள். ஆனால், நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச் சாப்பிடலாம். யாரும் தடுக்க முடியாது.

தலைவராவது எப்படி என்று காந்திஜிக்கு யாராவது வகுப்பு நடத்தினார்களா? இராணுவம் அமைப்பது எப்படி என்று நேதாஜிக்கு யாராவது சொல்லிக் கொடுத்தார்களா?

கற்றுத் தரமாட்டார்கள்... நீங்களாகக் கற்றுக் கொள்ளுங்கள். இதுதான் முன்னேற்றத்தின் மூலமந்திரம்.

எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் மிக நன்றாகச் சமைப்பார். "சமைப்பது எப்படி?' என்ற புத்தகத்தை அவர் படித்ததும் இல்லை; அவரது தாயார் அவருக்குச் சமையல் சொல்லிக் கொடுத்ததும் இல்லை. அவருடைய தாயாரிடம் கோலம் போடுவதைச் சொல்லித் தரும்படி அவர் கேட்டபோது அவர் அம்மா சொன்ன வாசகம்:

""இந்தா பார்... கண் பார்த்ததைக் கை செய்யணும். இதுல கத்துக் குடுக்க என்ன இருக்கு?'' என்றாராம்.

இது உண்மை. சொல்லிக் கொடுப்பதால் ஒருவர் திறமைசாலி ஆக முடியும். நான் மறுக்கவில்லை. ஆனால் சொல்லிக் கொடுப்பதால் திறமைசாலியாக ஜொலித்ததைவிட, கற்றுக் கொண்டதால் திறமைசாலியாக ஜொலித்தவர்களே அதிகம்.

ஒரே ஆசிரியர் பத்து மாணவருக்கு நாட்டியம் கற்றுத் தந்தால் பத்துப் பேருமா ஜொலிக்கின்றார்கள்? கிராஸ்பிங் என்கிற உள்வாங்குதிறன் - உறிஞ்சுதிறன் உள்ளவர்களே உயர உயரப் பறக்கிறார்கள்.

இன்றைக்குப் பல இளைஞர்கள் அரட்டை அடிக்கும்போது, பயணிக்கும் போது தங்களை வெளியிட, வெளிக்காட்டப் பரபரக்கும் அளவு, சுற்றி நிகழ்வதை, அதன் நுட்பங்களை உள்வாங்குவதில்லை. வெளிக்காட்டும் வேகத்தைத் தவிர்த்து உள்வாங்கும் திறனை அதிகரித்தால் வெற்றி நிச்சயம்.

பிறர் கற்றுத் தந்தால் என்ன என்கிற எதிர்பார்ப்பு சார்பு மனப்பான்மையை உருவாக்குகிறது. செயல்திறனைக் குறைக்கிறது. உங்கள் சிந்தனைச் சக்தியைக் குறைக்கிறது.

"சமைத்துப்பார்' புத்தகத்தை வைத்துக் கொண்டு ஒரு பெண் பூரி செய்தாள். புத்தகத்தில் போட்டிருந்தபடியே நடந்து கொண்டாள்.

""எண்ணெய்ச் சட்டியை அடுப்பில் வை.'' வைத்தாள்.

""பிசைந்த கோதுமை மாவை உருண்டையாக உருட்டிக் கொள்''. உருட்டிக் கொண்டாள்.

""பலகையில் வைத்து வட்ட வட்டமாக இட்டுக் கொள்''. இட்டுக் கொண்டாள்.

""ஐந்து நிமிடம் கழித்து, வட்டமாக இட்ட பூரியை எண்ணெயில் போடு''. போட்டாள்.

பூரி உப்பிக் கொண்டுவரும் என்று புத்தகத்தில் போட்டிருந்தது. ஆனால் அவளுக்குப் பூரி உப்பவேயில்லை.

ஏன்? அடுப்பு பற்றவைக்கவே இல்லை.

ஏன்? அடுப்புப் பற்றவை என்று புத்தகத்தில் போடவேயில்லை. புத்தகத்தில் போடாவிட்டாலும் அடுப்பைப் பற்ற வைக்காமல் சமையல் செய்ய முடியுமா? சமைத்துப்பார் புத்தகத்தில் ஒவ்வொரு ஐட்டங்களின் முன்னாலும் அடுப்பைப் பற்ற வை என்று போடுவார்களா?

எல்லா விஷயங்களையும் கற்றுத் தரமாட்டார்கள். நாமாகச் சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

சீன தேசத்தில் ஒரு அரசர். வித்யாசமான பேர்வழி. மாமிச உணவின் ரசிகர். அதிலும் மாட்டு மாமிசம் மனிதருக்கு மிகமிக இஷ்டம். அவரே தினம்தோறும் மாட்டைத் தேர்ந்தெடுப்பார். அவர் எதிரிலேயே அந்த மாடு வெட்டப்படும். அந்த மாட்டை வெட்டுகிறவரும் ஒரே நபர்.

தினம்தோறும் அரண்மனைக்கு வருவார். அரசர் தேர்ந்தெடுத்த மாட்டை ஒரே வெட்டில் கோடாரியால் வெட்டி விடுவார். தலை வேறு, உடல் வேறாகிவிடும். எந்த மாட்டையும் அவர் அரைகுறையாக வெட்டி மறுமுறை வெட்டியதாக வழக்கமே இல்லை.

அரசருக்கு ஒரே ஆச்சரியம். ""இந்தக் கோடாரியைத் தினம்தோறும் சாணை பிடிப்பாயா?'' என்று கேட்டார். ""இல்லை... சரியாக வெட்டுகிற பாணியில் வெட்டினால் கூர் மங்காது'' என்றார்.

""அது என்ன சரியான பாணி?'' என்றார் அரசர்.

முதல் நாள் இடது கைப் பக்கமாகச் சரித்துக் கொண்டு வெட்டுவேன். அடுத்த நாள் வலது கைப் பக்கமாகச் சரித்துக் கொண்டு வெட்டுவேன். இப்படி மாறிமாறி வெட்டுவதால் இருபக்கமும் சமமான கூர்மையுடன் இருக்கும். அதுமட்டுமல்ல... வெட்டுகிறபோது கொடுக்கிற அழுத்தம் ஒரே மாதிரியாக இருக்கும். மாறாது. அதனால் இடது, வலது என்று மாறி மாறி வெட்டினால் கூர் தீட்டப்பட்ட மாதிரி ஆகிவிடும்'' என்றார் மாட்டை வெட்டுபவர்.

""இந்தக் கலையைக் கற்றுத் தர முடியுமா?'' என்று கேட்டார் அரசர்.

""மகாராஜா... அதுமட்டும் என்னால் முடியாது. காரணம் எனக்கு யாரும் இதைக் கற்றுத் தரவில்லை. என் தாத்தா வெட்டும்போது தள்ளி நின்று பார்த்தேன். என் தகப்பனார் வெட்டும்போது அருகில் நின்று கவனித்தேன். அவர்கள் யாரும் எனக்கு எதையும் சொல்லித் தரவில்லை. எந்தக் கலையுமே ஒருவர் மனசிலிருந்து அடுத்தவர் மனசுக்கு வருவது. இதை உள்வாங்கிக் கொள்ளலாமே ஒழிய சொல்லித் தந்துவிட முடியாது'' என்றார் மாட்டை வெட்டுபவர்.

கண்ணையும் காதையும் கருத்தாகத் திறந்து வைத்துக் கொண்டு உள்வாங்கப் பழகுங்கள்


avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 4:55 pm

காந்திஜியால் அறிவாளி என்று ஒப்புக்கொள்ளப்பட்ட ராஜாஜியின் பின்னால் மக்கள் திரளவில்லை! மக்கள் மீது எல்லை கடந்த பரிவு வைத்திருந்த காந்திஜி பின்னால்தான் மக்கள் திரண்டார்கள். பிறகு ராஜாஜிக்கும் காமராஜருக்கும் இடையே மோதல் நேர்ந்தபோது ராஜாஜியின் கூர்மையான அறிவைவிட காமராஜரின் மக்கள் அன்பே மக்களால் ஏற்கப்பட்டது! இது உலக இயல்பு. உலகத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

இயேசு பிரான் தமது அறிவின் மூலம் உலகை வென்றார் என்பதைவிட ஆழமான அன்பின் மூலமே உலகை வென்றார் என்பதே உண்மை. காரணம், ஆற்றலுக்கு வெற்றி தோல்வி உண்டு. ஆனால் அன்புக்குத் தோல்வியே இல்லை.

பண்டித ஜவாஹர்லால் நேருவின் புகழுக்குக் காரணங்கள் பல நாம் சொல்லுகிறோம். ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையாளர் சொன்ன காரணம் சுவையானது. ஒரு நாள் நள்ளிரவு... நேரு, மாடியில் உள்ள தமது தனியறைக்குப் போனபோது அவரது அறையைக் காவல் காத்துக் கொண்டிருந்த முதியவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். உடன் வந்தவர்கள் அவரை எழுப்பப் போனபோது, ""பாவம்... வயதானவர். அயர்ந்து தூங்கிகிறார். எழுப்ப வேண்டாம்'' என்று சொல்லிவிட்டுத் தமது பாக்கெட்டில் இருந்து மாற்றுச் சாவியைத் துழாவி எடுத்து, முதியவருக்குத் தொல்லை இன்றி ஓசைப்படாமல் கதவை திறந்தார் நேரு. இந்த மனிதாபிமானத்தையே மிகப் பெரிய வெற்றி ரகசியம் என்று வெளிநாட்டுப் பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார்.


தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை தமது அரசின் முரசுக் கட்டிலில் களைப்பால் உறங்கிய மோசிகீரன் என்ற தமிழ்ப் புலவனைக் கண்டதும் காவலனிடம் கையை நீட்டினான். "வெட்டவோ' என்று நீட்டிய வாளைத் தட்டிவிட்டுப் புலவனுக்கு "வீசவே' என்று வெண்சாமரம் கேட்ட பண்பல்லவா பாட்டுப் பெற்றது... பாராட்டுப் பெற்றது.


ஒன்று புரிந்து கொள்ளுங்கள், திறமை உள்ளவருக்கு வெற்றி நிச்சயம். திறமை உள்ளவர்கள் மக்கள் சமூகத்தின் மீது அன்பும் நம்பிக்கையும் உள்ளவரானால் வெற்றி சர்வ நிச்சயம்.



குறிப்பு: இந்தக் கட்டுரை எவரையும் குறைவுபடுத்துவதாகத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். திறமையைவிட மக்களன்பு உள்ளவர்களையே மக்கள் வெற்றி பெறச் செய்கிறார்கள் என்கிற உண்மையை உணர்த்தவே எழுதப்பட்டது.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 6:55 pm

7. சொல்லத்தான் நினைக்கிறேன்!

சொல்ல வந்ததைச் சரியாகச் சொல்லுபவர்கள் எத்தனை பேர்? நூற்றுக்குப் பத்துப் பேருக்கு இந்தத் திறமை இருந்தால் ஆச்சர்யம்! உலகத்தில் தோற்றவர்கள் தொண்ணூறு பேர்; ஜெயித்தவர்கள் பத்து பேர் என்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?

பேசும்போதும் எழுதும்போதும் உரையாடும்போதும் பட்டுக் கத்தரித்த மாதிரி, பளிச்சென்று சொல்ல வந்த விஷயத்தைப் பிறர் புரிந்துகொள்ளும்படிச் சொல்லுவது உன்னதமான கலை.

உச்சரிப்பில் பிழை; வார்த்தைகள் தேர்வதில் பயிற்சியின்மை; சொல்ல வந்த விஷயத்தில் தெளிவும் தீர்க்கமும் இல்லாமை; பதட்டம்; பரபரப்பு; கேட்டுக்கொண்டிருப்பவர் மீது நம்பிக்கையின்மை; கேட்பவர்களைக் குறைத்து மதிப்பிடுதல் இவை எல்லாம்தான் தோல்விக்கான காரணங்கள்.

Communication Skill, Art of Communication என்று மேலை நாடுகள் இவ்வாற்றலை வெகுவாகக் கொண்டாடுகின்றன. இந்தியாவிலும் இலக்கியங்களில் இத் திறன் கொண்டாடப்படுகிறது. நடைமுறையில் நம்மவர்கள் இந்தக் கலையில் அதிகக் கவனம் செலுத்துவது இல்லை.

ஒரு பள்ளிக் காலத்து அனுபவம்... ஆறாம் வகுப்பு சேர்ந்த புதிது. கையில் குச்சியுடன் வெள்ளை அங்கியுடன் கால் முளைத்த பூதமாய்த் தலைமை ஆசிரியர். புதிதாய்ச் சேர்ந்த மாணவர்கள் ஒவ்வொருவரையும் மதிய உணவு வேளையில் நிறுத்திப் ""பெயர் என்ன?'' என்பார். இது வெறும் சம்பிரதாயமான கேள்வியன்று. பள்ளிக்கூடத்தில் படிக்கும் அத்தனை மாணவர்கள் ஜாதகமும் அவருக்கு அத்துப்படி! அப்படி ஒரு பெர்சனல் அட்டென்ஷன் உடையவர். கிராமப்புறத்தில் இருந்து வந்திருந்த ஒரு மாணவனைப் பார்த்து ""உன் பேரு என்ன?'' என்றார்.

""சொல்ல மாட்டேன்'' என்று பதில் கணீரென்று வந்தது. தலைமையாசிரியரின் தங்கக் கிரீடம் தரையில் உருண்ட அதிர்ச்சியில் ""என்ன சொன்னே?'' என்று உறுமினார்.

""சொல்ல மாட்டேன்'' அழுத்தம் திருத்தமாகக் கையைக் கட்டிக்கொண்டு சத்தமாகச் சொன்னான் அந்த மாணவன். அடுத்த விநாடி தலைமையாசிரியர் அங்கிக்குள் குடியிருந்த கருநாகம் (மூங்கில் குச்சி) மாணவனைக் கொத்து கொத்து என்று கொத்தித் தள்ளிவிட்டது. பையன் கதறிவிட்டான். மீண்டும் அதே கேள்வி. மீண்டும் அதே பதில். இப்போது தலைமையாசிரியர் சுதாரித்துக் கொண்டார். வகுப்பாசிரியரை வரவழைத்து விசாரித்த பின்னர் தலமையாசிரியர் ஆடிப்போய்விட்டார்.

மாணவன் பெயர் சுடலைமாடன். அதைத்தான் அவன் அட்சரசுத்தமாய் ""சொல்லமாட்டேன்'' என்று ஒலி வர உச்சரித்திருக்கிறான். சுடலைமாடன் என்பதைச் சொல்லமாட்டேன் என்று உச்சரித்தால் பிறருக்கு எப்படிப் புரியும். communication skill என்பதில் உச்சரிப்பு மிக முக்கியம். இன்றைக்குப் பல தமிழாசிரியர்களே தவறுதலாக உச்சரிக்கிறார்கள்... அவர்களை எந்தக் குச்சியை வைத்து விளாசுவது?

உச்சரிப்பை அடுத்து வார்த்தைத் தேர்வு முக்கிய விஷயம். ஒரு திருமணம், பார்ட்டி போகவேண்டும் என்றால் இதைப் போடலாமா? அதைப் போடலாமா? என்று துணியை எடுத்து எடுத்து இறுதியாக ஒன்றைத் தேர்வு செய்கிறோம் அல்லவா? அப்படி யாருடனாவது பேசும்போது இந்த வார்த்தை சரியா? அந்த வார்த்தை சரியா? என்று மாறி மாறி மனசுக்குள் பேசிப் பார்த்தது உண்டா? The Best வார்த்தையைத் தேடித் தேடிக் கண்டதுண்டா? உண்டு என்றால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

சிலர் பேச நினைப்பதே வேறு. பேசி முடிப்பதே வேறு. ஏன் இந்தக் கோளாறு? இதை எப்படித் தவிர்ப்பது? டாக்டர் அவ்வை நடராசன் என்ற வெற்றிகரமான பேச்சாளரை, தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரை பல்லாண்டுகளாக நான் அறிவேன். அவர் பேசப்போகும் விஷயங்கள் பற்றி மனசுக்குள் பலமுறை பேசிப் பேசிப் பார்ப்பார். அழகான, சரியான வார்த்தைகளைத் தேடிப் பிறகு மாற்றி அமைத்து மக்கள் முன் பேசுவார். மேடைப் பேச்சில் அவர் தோற்றதே இல்லை. இப்படிப் பேசினால் கல்லடி விழாது... வெற்றி காலடியில் விழும். அனுமன்கூட அசோகவனத்தில் சீதையிடம் பேசும்போது யோசித்து யோசித்து மனசுக்குள் ஒத்திகை பார்த்தான் என்று வால்மீகி ராமாயணம் சொல்லுகிறது, போதுமா?

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 6:56 pm

அமைதியான ஒருவரை ""சார்... பசு மாதிரி சாது'' என்றால் சந்தோஷப்படுவார் அதற்குப் பதிலாக ""சார்... மாடு மாதிரி'' என்று சொல்லிப் பாருங்கள்... மனுஷர் உங்களை முட்ட வருவார்.

அடுத்து, தெளிவாகச் சொல்லுதல். ""ஏழு மணிக்கு உங்களைச் சந்திக்கிறேன்'' என்பதைவிடக் ""காலை ஏழு மணிக்கு'' என்று தெளிவுடன் சொல்லுவது அவசியம். அதற்காக ""ஆறு மணிக்கு அப்புறம் வருகிற ஏழு... எட்டு மணிக்கு முன்னால் வருகிற ஏழு...'' என்று படுத்தக்கூடாது. கூடுமான வரை குழப்பம் வராதபடி சொல்லுவது நல்லது.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு... இப்போதுள்ள Computer Reservation ரயில்வேயில் இல்லாத காலம். நான் திருநெல்வேலியில் இருந்து திருச்சி வந்து பிறகு வைகை எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை திரும்ப வேண்டும். அப்போது எனக்கு ஓயாத பயணம் இருக்கும். திருச்சியில் பேராசிரியர் அமரர் ராதாகிருஷ்ணன் என்ற பிரபல பேச்சாளருக்கு ""எனக்கு வைகையில் டிக்கட் எடுத்து வைக்கவும்'' என்று கடிதம் எழுதியிருந்தேன். திருச்சி வந்ததும் டிக்கட்டைக் கேட்டபோது அவர் சொன்ன பதில் அதிர்ச்சியாக இருந்தது.

""டிக்கட் எடுக்கலை... மொட்டையா வைகையில் எடுக்கவும் என்று எழுதினா எப்படி எடுக்கறது? வைகை திருச்சியில் இருந்து மதுரைக்குப் போகுது- சென்னைக்கும் போகுது. எதுக்கு எடுக்கிறதாம்?'' என்றார். எனக்கு அழுகை வந்துவிட்டது. ஒரு மாசமாகச் சுற்றிக்கொண்டே இருக்கிறேன். அன்றும் வீடு திரும்ப முடியாது என்றால் என்ன ஆவது என்று வருத்தம்.

அடுத்த நிமிடம் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் இரண்டு டிக்கட்டுகளை எடுத்து என் முன் வேகமாகப் போட்டார். ""ஒண்ணு மதுரைக்கு... இன்னொண்ணு சென்னைக்கு... இரண்டு Direction- லையும் டிக்கட் இருக்கு... எங்க போகணுமோ போ...'' என்றார். நான் குழப்பமாகச் சொல்லியிருக்கிறேன் என்பதை அவர் தெளிவாகப் புரிய வைத்தார்.

இன்று என் பேச்சில் ஒரு தெளிவு (Clarity) இருப்பதாகப் பலர் பாராட்டுகிறார்கள். அதற்குக் காரணம் அமரர் ஆர்.ஆர். என்கிற பேராசிரியர் ராதாகிருஷ்ணன். எதைப் பேசினாலும் குழப்பம் வராதபடி தெளிவுடன் பேசுங்கள். வெற்றி நிச்சயம்.

இன்னொரு விஷயம். உடன்பாட்டையும் எதிர்மறையையும் எப்போதும் சேர்த்துப் சேர்த்துப் பேசாதீர்கள். கேட்பவர்கள் குழம்பிவிடுவார்கள். உங்கள் நோக்கத்திற்கு நேர்மாறாகக் காரியம் செய்துவிடுவார்கள்.

""சாம்பார் வை... ரசம் வைக்காதே... நீலக் கலர் சட்டையைப் பெட்டியில் வை... சிவப்புச் சட்டையை வைக்காதே... காபி போடு... டீ போடாதே'' என்று உடன்பாட்டையும் எதிர்மறையையும் மாறி மாறிச் சொன்னால் எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதில் குழப்பம் வரும். ""சாம்பார் வை'' என்று மட்டும் சொல்லுங்கள். ""நீலக் கலர் சட்டை கொண்டு போக வேண்டும்... காபி குடிக்கிறேன்'' என்று உடன்பாடான விஷயங்களை மட்டும் சொல்லுங்கள். கேட்பவர்கள் மனதில் சரியாகப் பதியும். குழம்ப மாட்டார்கள். Clarity in Communication உள்ளவர்கள் வெற்றி பெறுவது நிச்சயம்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 6:58 pm

8. நீங்கள் எந்த வகை?

சுயமாக முன்னுக்கு வருவதை விடப் பிறரைக் காப்பி அடித்து முன்னுக்கு வருவது சுலபம். பலர் இந்தப் பாதையைத்தான் விரும்புகிறார்கள். நான் இதை வெறுக்கிறேன். வித்தியாசமாக விளங்குவதுடன் வேறுபட்டு அரசியல் தனித் தன்மை காட்டுவதும் அவசியம் என்கிறேன். அவர்கள் பெறுகின்ற வெற்றி அசைக்க முடியாதது என்று கருதுகிறேன். இதுதான் கெüரவம் என்கிறேன்.

தெருவோரத்தில் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து மசால் வடைக் கடை போட்டு ஒருவர் காசு சம்பாதித்தால் இன்னொரு தமிழனுக்கு (இந்தியனுக்கு) பொறுக்காது. உடனடியாக அதே மாதிரி மசால் வடைக் கடையை எதிரிலேயே தொடங்கப் பார்ப்பான். உளுந்துவடை என்று கூட ஐட்டத்தை மாற்றமாட்டான். எதிர்க்கடை மசால்வடையை ஜெராக்ஸ் எடுத்த மாதிரி வடை போட்டு அடுத்தவன் வியாபாரத்தில் மண் அள்ளிப்போடுவார்கள். இந்த ஈனப்புத்தி தேவையில்லை.

"பெரிதே உலகம்; பேணுநர் பலரே' என்ற சங்கத் தமிழன் சொல்லை விளங்கிக் கொண்டு ஒன்றையே சாராமல் புதிது புதிதாகப் பலப்பல செய்து பணம் சம்பாதிக்கப் பழகுவது அவசியம்.

மனிதர்கள் மூன்று வகை.

1. எல்லோரும் செய்வதையே தானும் செய்து செத்துப் போகிறவர்.

2. எவரும் செய்யாததைத் தான் செய்து வாழ்ந்து காட்டுகிறவர்கள்.

3. எவரும் செய்யமுடியாததைச் செய்து மரணத்தைக் கொல்கிறவர்கள்.

இதில் நாம் எந்த வகை என்று பிரித்துப் பார்க்க வேண்டும்.

ஊரோடு ஒத்துவாழ், உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்ற அறிவுரையைத் தவறுதலாக அர்த்தம் செய்து கொண்டு பிறரைக் காப்பியடித்து வாழும் வாழ்க்கையை நான் வெறுக்கிறேன். எல்லோரும் செய்யாததைச் செய்பவராக இருப்பவர்களை மதிக்கிறேன். எவரும் செய்யாததைச் செய்பவர்களைத் துதிக்கிறேன்.

பள்ளிக் காலத்தில் என் உடன்படித்த நண்பர் ஒருவர் மருத்துவம் படித்துவிட்டுப் பிறகு சட்டம் படித்தார். அவரை எல்லோரும் பிழைக்கத் தெரியாத பைத்தியம் என்றார்கள். அவர் இன்று ஐ.நா.சபையில் உலக நாடுகள் சுகாதாரம் பற்றியும் அது குறித்து அந்த நாடுகள் வகுத்துள்ள சட்டங்கள் பற்றியும் கண்காணிக்கும் பெரும் பணியில் இருக்கிறார். அவருடைய படிப்புத் தகுதி யங்ழ்ஹ் தஹழ்ங் என்ற பிரிவு. உலக நாடுகள் முழுவதும் சுற்றுகிறார்.

வயலினை வெறும் பக்கவாத்தியமாக வைத்திருந்த இசை உலகில் வயலினுக்குப் பக்கவாத்தியமாக முரட்டு மேளத்தை வைத்துக்கொண்டு அமர்க்களப்படுத்தியவர் கலைமாமணி குன்னக்குடி வைத்தியநாதன். தங்கள் அபூர்வ சாதனையில் வலையப்பட்டி சுப்பிரமணியன் அவர்களும் குன்னக்குடியும் ஈட்டிய புகழும் செல்வமும் ஏராளம். வித்யாசத்திற்கு உலகம் கொடுத்த வெகுமதி அது.

"லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்' என்று அமெரிக்காவில் அத்தனை பேரும் அரைத்த மாவையே அரைத்த போது "பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' என்று வித்யாசமாக விளித்ததால்தான் விவேகானந்தர் கவனிக்கப்பட்டார். மதிக்கப்பட்டார். பின் துதிக்கப்பட்டார்.

எங்கும் எப்போது தனித் தன்மையுடன் வித்யாசமாக இருங்கள். நீங்கள் கவனிக்கப்படுவீர்கள்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 7:02 pm

வித்யாசம் வேறு; விபரீதம் வேறு. வேறுபாட்டை விளங்கிக் கொள்ளவில்லை என்றால் வித்யாசமான விபரீதங்கள் உங்களுக்கு விளையும். அதையும் விளக்கிச் சொல்லிவிடுகிறேன்.

புது மணத் தம்பதிகள் தேனிலவுக்கு எங்கே போவது என்று பேச்சு வந்தது. ""இதுவரை தேனிலவுக்கு வித்யாசமா எந்த ஜோடியும் போகாத இடத்துக்கு என்னைக் கூட்டிப் போகவேண்டும்'' என்றாள் மனைவி. ""ஸ்கூட்டரில் ஏறு'' என்று மனைவியைக் கூட்டிக் கொண்டு சுடுகாட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்து நிறுத்தினான் கணவன். ""சீச்சீ...சுடுகாட்டு ஹனிமூனா?'' சீறினாள் மனைவி. கணவன் ""அ...இந்த இடத்தை என்ன அவ்வளவு மட்டமா நினைக்கிறே? இங்கே வர்றதுக்கு அவனவன் சாவுறான்'' என்று சுடுகாட்டின் மேன்மையைச் சொன்னான். இது வித்யாசம் அல்ல. விபரீதம்.

உலக நாடுகளில் விடுதலைப் போர் நடத்திய எல்லாத் தலைவர்களும் கத்தி, துப்பாகிக்கி, பீரங்கி, கப்பல், விமானம் என்பதை நம்பிப் போராடினார்கள். குஜராத்திலிருந்து புறப்பட்ட அந்த ஒற்றை மனிதன் எந்த ஆயுதமும் எடுக்காமல் போர்க்களத்தில் புகுந்தான். ""இந்த நாடு என்னுடையது. உன்னுடையது அல்ல...'' என்ற ஒற்றை உண்மையை பிரிட்டிஷார் முன் வைத்துப் போராடினான். அந்த சத்தியத்தின் முன் எல்லா ஆயுதங்களும் கூர் மழுங்கிப் போயின. யார் அவர்? மகாத்மா காந்தி.

""நிராயுதபாணியாய் நின்று போராடும் ஒற்றை மனிதனின் போராட்டத்தை வலிமை வாய்ந்த ஆயுதங்கள் வைத்திருக்கும் பிரிட்டிஷ் சர்க்காரால் நசுக்க முடியவில்லையா?'' என்று எதிர்க்கட்சிகள் பாய்ந்த போது சர்ச்சில் சொன்ன பதில் ஆழமானது. ""அந்த மனிதன் கத்தியை எடுத்தால் நான் துப்பாக்கியை எடுப்பேன். துப்பாக்கியைத் தூக்கினால் நான் பீரங்கியால் நசுக்கியிருப்பேன். பீரங்கி எடுத்துப் போராடினால் நான் குண்டுமழை பொழிந்து அழித்திருப்பேன். அவர் சத்தியத்தை அல்லவா எடுத்துக் கொண்டு போராடுகிறார். சத்தியத்தை எதிர்க்கும் ஆயுதம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை நண்பருக்குச் சொல்லிக் கொள்ளவிரும்புகிறேன்'' என்றார் சர்ச்சில்.

வித்யாசமான ஆயுதத்தைக் கையில் எடுத்தார். காந்தி கவனிக்கப்பட்டார். உலகம் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை உலகத்தைப் பாதித்த 100 பேர் என்ற பட்டியல் எழுதினால் அதில் மகாத்மா காந்தியும் ஒருவர். உலக வரலாறு அவரை ஒருபோதும் ஒதுக்காது.


வித்யாசமாக விளங்குபவர்கள் கவனிக்கப்படுவார்கள். விபரீதமாக இருப்பவர்கள் விலக்கப்படுவார்கள்.


பத்தாயிரம் ரூபாய் பட்டுப் புடவையுடன் பல பேர் பவனி வரும் திருமண வீட்டில் பளிச்சென்று கைத்தறிப் புடவையைக் கஞ்சி போட்டு கட்டிக் கொண்டு ஒற்றை ரோஜாவைத் தலையில் வைத்திருக்கும் பெண்ணாக இருங்கள். சகோதரிகளே.... நீங்கள் கண்டிப்பாகக் கவனிக்கப்படுவீர்கள்.


வித்தியாசமாக இருங்கள். வெற்றி நிச்சயம்!

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 7:03 pm

9. தோற்றவர் வென்றார்!

வெற்றி - தோல்விகளைப் பற்றி உலகம் வைத்திருக்கிற அபிப்ராயங்கள், அளவுகோல்கள் எப்போதும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. உலகின் நடைமுறைகள், தோல்வியுற்றதாக அறிவித்தவர் வெற்றி பெற்ற வரலாறுகள் உண்டு. சில சமயம் சிலரது வெற்றிகளைப் புரிந்து கொள்ளும் சக்தியே உலகத்துக்கு இல்லாமல் போவதும் உண்டு. எனவே உலகம் அறிவிக்கின்ற வெற்றி - தோல்விகளைப் பற்றிக் கவலையே இல்லாமல் உழைப்பதும் வெற்றி பெறுவதும் மிக மிக முக்கியம்.

மராட்டிய மாநிலத்தில் தேர்வில் தேர்ச்சி பெறாதவனாக அறிவிக்கப்பட்ட மாணவன் ஒருவன் மறுகூட்டல் கேட்டபோது அதிர்ச்சி காத்திருந்தது. அவன்தான் மாநிலத்திலேயே முதலாவதாக மதிப்பெண் பெற்றவன். சில நாள்களில் வெற்றி, தோல்வி தலைகீழாகிவிட்டது. பிறரது அளவுகோல்களால் நிர்ணயிக்கப்படுகிற வெற்றி - தோல்விகளால் தயவுசெய்து பாதிக்கப்படாதீர்கள்.

சென்னை விவேகானந்தா கல்லூரியில் நான் பி.ஏ. பொருளாதாரம் படித்தபோது நடந்த நிகழ்ச்சி. மாணவர் தலைவர் தேர்தல். போட்டியிட்டு 32 ஓட்டுகள் குறைவாகப் பெற்று நான் தோல்வி அடைந்தேன். நான் அறிவும் விழிப்பும் பெற்றதற்கு மூல காரணம் அந்தத் தோல்வி. எத்தனையோ வகையில் அந்தப் பதவிக்குத் தகுதி எனக்கிருந்தும் நான் மாணவர்களால் நிராகரிக்கப்பட்டேன். பிறரது அங்கீகாரம் அல்லது அனுமதி பெறுகிற வெற்றி ஒரு வெற்றியே அல்ல என்று அப்போதுதான் நான் முடிவெடுத்தேன். என் வாழ்க்கை மாற்றம் அதனால் நிகழ்ந்தது. நமக்குள்ள தகுதியைப் புரிந்து கொள்கிற தகுதி பிறருக்கு இல்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும்?

அந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற்றிருந்தால் அரசியலுக்குப் போய் நிறைய ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருப்பேன். ஆனால் எழுத்தும் பேச்சும் சமூக விழிப்பும் என் வாழ்வாகித் தோல்வியே அற்ற வெற்றிகளை நான் இன்று சந்திக்கிறேன். தேர்தலில் என்னைத் தோல்வியுறச் செய்த என் நண்பர் அரசியல் கட்சிகளில் சிக்குண்டு அவதிப்பட்டார். சில ஆண்டுகளுக்கு முன் நான் அவரைச் சந்தித்தபோது கண்ணீருடன் என் கைகளைப் பிடித்துக் கொண்டு, ""தேர்தலில் நான் வெற்றி பெற்றேன். ஆனால் நீ வாழ்க்கையில் வெற்றி பெற்றாய்'' என்றார். எனவே வெளியில் நிர்ணயமாகும் வெற்றி - தோல்விகள் ஒரு பெரிய விஷயம் அல்ல என்று நான் புரிந்துகொண்டேன். நீங்கள்..?

பெருந்தலைவர் காமராஜர் இந்தியாவில் ஒரு தமிழனும் அடைய முடியாத பெரும் புகழ் அடைந்த தமிழன். இமயம் முதல் குமரி வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்த பல முதலமைச்சர்களையும் பிரதம மந்திரிகளையும் தன் உத்தரவுக்குக் கட்டுப்பட வைத்த வலிமையான காங்கிரஸ் தலைவர் அவர். அவர் மட்டுமே. அவருக்கு முன்னும் பின்னும் அப்படி ஒரு மக்கள் தலைவரைத் தமிழ் மண் கண்டதில்லை. பின்னும் இதுவரை ஒரு தலைவனைத் தமிழ் மண் தரவேயில்லை. ஆனால் அவரை அவரது விருதுநகர் மண்ணிலேயே ஒரு கல்லூரி மாணவர் தோற்கடித்தார். எப்படி முடிந்தது?

உணர்ச்சி வசப்படுகிற மக்கள் தீர்மானிக்கிற வெற்றி - தோல்விகள் பெரிய விஷயமே அல்ல. அதை விளக்கியவர் பேரறிஞர் அண்ணா. ஒரு விழாவில் பேசிய ஒருவர், ""பெருந் தலைவர் காமராஜரைத் தோற்கடித்த திரு. சீனிவாசன்'' என்று பேசிய போது பேரறிஞர் அண்ணா குறுக்கிட்டு, ""தேர்தலில் வெற்றி பெற்ற சீனிவாசன் என்று சொல்லுங்கள். "பெருந்தலைவர் காமராஜரைத் தோற்கடித்த' என்று சொல்லாதீர்கள். அவரை ஒரு போதும் யாராலும் தோற்கடிக்க முடியாது. அவர் வெற்றியை வரலாறு சொல்லும்'' என்று கூறினார். வாழ்வின் வெற்றி - தோல்விகள் ஒரு சில சம்பவங்களின் வெற்றி - தோல்விகளையே அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்பதைத் தயவு செய்து விளங்கிக் கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 7:04 pm

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தோற்கவில்லை என்பதை இந்திய வரலாறு சொல்கிறது. நண்பர் ஒருவர் சொன்ன இன்னொரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். நண்பர் திருச்சியில் இருந்து நெல்லை செல்லும் தனியார் விரைவுப் பேருந்தில் பயணம் செய்திருக்கிறார். அவருக்குப் பக்கத்தில் இருந்த இருக்கையில் இருந்த பெரியவர் ஒருவர் கை கால் வலியால் அவதிப்படுகிறவர். பேருந்து எங்காவது நிற்காதா... கொஞ்சம் கையைக் காலை நீட்டிச் சோம்பல் தீர நடக்க மாட்டோமா என்று ஏங்கிப் புலம்பியிருக்கிறார். தனியார் பேருந்து... எனவே எங்கும் நிற்காமல் பேருந்து பறந்து போய்க் கொண்டே இருந்தது. முடிவில் ஓர் இடத்தில் இரவுக் கடை முன் பேருந்துகள் நிற்கும் இடத்தில் வண்டி நின்றது. ""ஐயா... ரொம்ப நேரமா இறங்கணும்னு சிரமப்பட்டீங்களே... இங்க இறங்கி நிக்கலாம் வாங்க...'' என்று பெரியவரை அழைத்திருக்கிறார். ""இது எந்த ஊருப்பா...'' என்றபடியே வெளியே எட்டிப் பார்த்த பெரியவர் ""சே... இங்க மனுஷன் இறங்குவானா?'' என்று மறுத்துவிட்டார். நண்பர் "ஏன்' என்று திகைத்தவுடன் பெரியவர், ""இது விருதுநகர். பெருந்தலைவரைத் தோற்கடிச்ச ஊருப்பா... இதுல கால் பட்டாக்கூடப் பாவம்'' என்றாராம்.

இப்போது புரிகிறதா? ஊரும் உலகமும் நிர்ணயித்த வெற்றி - தோல்விகளுக்கு அப்பாலும் சில வெற்றிகள் இருக்கின்றன. இன்னொன்று சொல்கிறேன். தத்ரூபமாகச் சிலை வடிக்கும் போட்டி ஒன்று நடந்தது. இரு சிற்பிகள் ஒரே மாதிரி இரு சிலைகளைச் செய்திருந்தனர். அவர்களுக்குள் கடும் போட்டி நிலவியது. நடுவர் குழு ஒருவரை வெற்றி பெற்றதாக அறிவித்தது. காரணமும் சொன்னது. ஒரு இளம்பெண் தலையில் திராட்சைப் பழக் கொத்துகளைச் சுமந்து செல்வது போல் சிலைகள் இருந்தன. ஒருவர் சிலையில் இருந்த திராட்சைக் கொத்துகளை நிஜம் என நம்பிக் காக்கைகள் கொத்த வந்தன. அதனால் அவர் வெற்றி பெற்றார் என்றனர் நீதிபதிகள்.

ஆனால் மற்றவர் செய்த சிலையில் இருந்த பெண்ணையும் அவர் கையில் இருந்த குச்சியையும் நிஜம் என்று பயந்த காக்கைகள் அந்தச் சிலை மீதிருந்த திராட்சைகளைக் கொத்தாமல் விட்டன. இது நீதிபதிகளுக்குப் புரியாமல் போய்விட்டது. அந்த நீதிபதியைப் பார்த்துக் காக்கைகள் தமக்குள் கேலியாகச் சிரித்தன. யாருடைய வெற்றி உண்மையான வெற்றி?

வெற்றி - தோல்விகள் வாழ்வின் ஓரிரு சம்பவங்களை மட்டுமே சார்ந்தவை அல்ல. அவை முழு வாழ்வையும் சார்ந்தவை. இதைப் புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்!

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 7:05 pm

10. என்ன படிக்கலாம்? எப்படி ஜெயிக்கலாம்?

ஒரு சின்னக் குழந்தையின் கையில் புத்தகம் இருந்தால் பார்ப்பவர்கள் என்ன சொல்லுவார்கள்? ""குழந்தே... சமத்தா இருக்கணும். புத்தகத்தைக் கிழிச்சிடக் கூடாது'' என்பார்கள். ஆனால் கவிக்கோ அப்துல் ரகுமான் வித்தியாசமாகக் கவலைப்பட்டார்.

"புத்தகங்களே சமர்த்தாக இருங்கள்...

குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்'

என்று எழுதினார். இது நிரம்பவும் யோசிக்க வேண்டிய விஷயம்.

பாடத் திட்டத்தில் என்ன படிப்பது என்பது முதல் பிரச்சினை. பாடத்தைத் தாண்டிப் பாரத புத்திரன் என்ன படிப்பது என்பது அடுத்த பிரச்சினை. படிப்பதா, வேண்டாமா என்பதேகூடப் பலருக்குப் பிரச்சினை! முதலில் பாடத்தைப் படி... அத்தோடு வாழ்க்கைப் பாடத்தைப் படி... படி... படி... படிப்படியாய் வெற்றியடையலாம்!

பொறியியலும் மருத்துவமும் மட்டும்தான் படிப்பு என்பதில்லை. நூற்றுக்கணக்கான படிப்புகள் உலகத்தில் இருக்கின்றன. முதலில் இந்த விசாலமான பார்வை சின்னப் பிள்ளைகளுக்கு வேண்டும். அதைவிடச் சின்னப் பிள்ளைகளின் சின்னப் பெற்றோர்களுக்கு முக்கியமாக வேண்டும். வறுமையாலும் வாய்ப்பின்மையாலும், தான் படிக்க முடியாத படிப்பைத் தன் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று சில பெற்றோர்கள் பிள்ளைகளைக் கல்விச் சிலுவையில் அறைகிறார்கள். இது சரியல்ல.

மாணவனின் திறன், விருப்பம், கொள்ளளவு, படிக்கும் பழக்கம், இயல்பு என்று பல விஷயங்கள் படிப்பை முடிவு செய்யக் கூடியவை. கொஞ்சம் முன்பின்னான மணவர்களைப் பெற்றோர் தயாரிப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால் முற்றிலும் நேர்மாறான இயல்புடைய பிள்ளைகளைத் தங்கள் கனவுகளைச் சுமக்கும் பிணந்தூக்கிகளாகச் சில பெற்றோர்கள் செய்வது நல்லதல்ல.

நர்ஸிங் ஹோம்களைக் கட்டி வைத்துவிட்ட பெற்றோர்கள் அதைக் கட்டிக் காக்கும் ஆசையில் மட்டுமே பிள்ளைகளை மருத்துவக் கல்லூரிக்குள் நுழைத்த கதை உண்டு. தேர்வுத் தோல்விகள் மனத்தை வருத்த, பெற்றோர் படுத்தல் மகிழ்வைக் குறைக்க, போதை மாத்திரை தின்(ற)னும் மருத்துவ மாணவர் ஒரு சிலர் உண்டு!

பெற்றோர்கள் பிள்ளைகளை ஜிவ்வென்று உயர்த்தும் சிறகாக இருக்க வேண்டுமே ஒழிய அழுத்தும் சிலுவையாக இருக்கக் கூடாது. ஈடுபாட்டுடன் ஆர்வமாகப் பிள்ளைகள் படிக்க விரும்பும் படிப்பில் அடைகிற வெற்றியை ஆர்வமில்லாத படிப்பின் மூலம் அடைய முடியாது. அடிமை இந்தியாவில் நடந்த, பல்லாண்டுக்கு முந்தைய சுவையான செய்தி சொல்லுகிறேன்.

தலையில் கட்டுக் குடுமி, காதில் கடுக்கன். அவன் நெற்றியில் பளிச்சென்று திருநீறு. ஒளி உமிழும் கண்கள் கொண்ட சிறுவன் சாமிநாதன். அந்தப் பையன் மேலே என்ன படிப்பது என்பது விவாதப் பொருள்.

கூடத்தில் சேரில் சாய்ந்திருந்த குடும்பப் பெரியவர் குரல் ஓங்கி ஒலித்தது. ""இதபார்... ஒண்ணு சம்ஸ்கிருதம் படி... அல்லது இங்கிலீஷ் படி. இங்கிலீஷ் படிச்சா இந்த லோகத்திலேயே சவுக்கியமா இருக்கலாம். சம்ஸ்கிருதம் படிச்சா இங்க இல்லேன்னாலும் பரலோகத்துல சவுக்கியமா இருக்கலாம். நீ என்ன படிக்கப் போற?''

""தமிழ் படிக்கப் போறேன்'' என்றான் சிறுவன்.

""ஏன்?'' உறுமினார் பெரியவர்.

""இங்கிலீஷ் படிச்சா இங்க நன்னா இருக்கலாம். சம்ஸ்கிருதம் படிச்சா அங்க நன்னா இருக்கலாம். தமிழ் படிச்சா இரண்டு இடத்தலேயும் நன்னா இருக்கலாம்'' என்று பளிச்சென்று பதில் சொன்னான் சிறுவன் சாமிநாதன். அவர் தமிழ் படித்ததால்தான் இன்று தமிழே நன்றாக இருக்கிறது. அவர்தான் தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர்.

எல்லோரும் தமிழ் படியுங்கள் என்பது என் செய்தி அல்ல. உகந்ததைத் தேர்ந்தெடுத்து உறுதியாகப் படிப்பவர்கள் உருப்படுகிறார்கள்... உயர்கிறார்கள் என்பதே என் செய்தி. குறிப்பிட்ட படிப்பு உயர்வானது என்றால் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அதில் ஆர்வம் ஏற்படுத்துங்கள்... அக்கறை உண்டாக்குங்கள். அதைப் படிக்கும் முடிவைப் பெற்றோர்களே திணிக்காதீர்கள். மாணவனே அந்த முடிவை எடுக்கும்படி உணர்வூட்டுங்கள்.

நான் பள்ளியில் படித்த கதை ஒன்று. மென்ஷியால் என்ற ஒரு மேல்நாட்டுச் சிறுவனைப் பற்றியது. அவன் தந்தையை இழந்தவன். தாயோ கடினமான நெசவுத் தொழில் மூலம் துணி நெய்து, விற்றுப் பொருள் ஈட்டித் தன் மகனைப் படிக்க வைத்தாள். ஆனால் மென்ஷியாலுக்குப் படிப்பில் நாட்டம் இல்லை. ஊர் சுற்றிக் கொண்டிருந்தான். இனி பள்ளிக்கூடம் போகக் கூடாது என்று முடிவெடுத்து வீடு திரும்பி வந்தான்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 7:08 pm

அவனது தாய் விலை உயர்ந்த துணியை நெய்து கொண்டிருந்தாள். அழகான அந்தத் துணியை ஆசையாகப் பார்த்தபடி ஓடிவந்து தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, ""அம்மா... எனக்குப் பள்ளிக்கூடம் போகப் பிடிக்கவில்லை... நானும் உன்னுடன் இருந்து இந்த அழகான துணி நெய்ய உதவுகிறேன்'' என்றான்.

அடுத்த நிமிடம் கோபத்துடன் ஆவேசமாகத் தாய் அந்த விலை உயர்ந்த துணியைக் கிழித்து எறிந்தாள். மகன் பதறிப்போய், ""என்னம்மா இப்படிச் செய்துவிட்டாய்... விலை உயர்ந்த துணியாயிற்றே...'' என்றான்.

""விலை மதிப்பில்லாத கல்வியை நீ இழக்கிறாய்... எதிர்காலத்தைப் பாழாக்குகிறாய்! அதைவிடவா இது பெரிய அழிவு!'' என்கிறாள் அம்மா. தாயைக் கட்டிக்கொண்டு அழுத மகன் பள்ளிக்கூடம் போக ஒப்புக் கொண்டான். உருவாக்குவதுதான் பெற்றோர்கள் வேலை. உருக்கி ஊற்றுவது பெற்றோர்கள் வேலை அல்ல..!

விரும்பி, படிக்க வேண்டிய கல்வியைத் தேர்ந்தெடுத்துப் படிப்பவர்கள் உயர்வது திண்ணம். உதாரணம் டாக்டர் உ.வே.சா. அப்படி இன்றைய இளைஞனும் இருக்கப் பழகினால் வெற்றி நிச்சயம்!

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 7:12 pm

11. நம்பர் ஒன்னா? நம்பர் டூவா?

உலகத்திலேயே மிகமிக அதிர்ஷ்டசாலி யார்? எல்லா வசதி வாய்ப்புகளும் பெற்று எந்தவிதக் கவலையும் சிக்கலும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழக் கூடிய வாய்ப்பு ஒருவருக்கு உண்டா? உண்டு என்றால் அவர் யார்?

இந்தக் கேள்விக்குப் பதில் என்ன தெரியுமா? அமெரிக்காவின் துணை ஜனாதிபதி. அவர்தான் சகல வசதி வாய்ப்புகளுடன் எந்தச் சிக்கலும் இல்லாமல் வாழும் வாய்ப்பு உடையவர். அவரைப் பற்றி பிரசித்தி பெற்ற ஜோக் ஒன்று உண்டு.

காலைத் தூக்கம் கலைந்ததும் படுக்கையில் இருந்து எழாமலேயே, "ஜனாதிபதி நன்றாக இருக்கிறாரா?' என்று கேட்டு, "ஆம்' என்று பதில் வந்தால், மறுபடியும் போர்வையைப் போர்த்திக்கொண்டு தூங்கப் போய்விடலாம். அவருக்கு என்று அமெரிக்காவில் எந்தப் பொறுப்பும் எந்த வேலையும் கிடையாது. ஆனால் ஜனாதிபதிக்கு நிகரான வாழ்க்கை வசதிகள் உண்டு.

ஜனாதிபதி இறந்தால் மட்டுமே அவரது இயக்கம் ஆரம்பம் ஆகும்! சகல வசதி வாய்ப்புடன் எந்தவித வேலைப் பளுவும் இல்லாத இந்த உதவி - துணை என்கிற பதவிகளைச் சிலர் விரும்புவார்கள். காரணம், முதலாவதாக இருப்பதில் பெருமை இருக்கிற அளவு பொறுப்பும் பாரமும் துன்பமும் விமர்சனமும் உண்டு. ஆனால் நம்பர் 2 ஆக இருப்பதில் சுகமும் போகமும் மட்டுமே உண்டு.

ஆனால் இந்த நம்பர் 2-ல் திருப்தி அடைவது வாழ்க்கையே அல்ல. போராட்டங்கள் நிறைந்த நம்பர் ஒன்னாக இருக்கவே ஆசைப்படுங்கள்.

ஆனந்த் தியேட்டர் அதிபர் அமரர் உமாபதி அவர்களைப் பற்றிய சுவையான செய்தி ஒன்று உண்டு.

எந்த விழாவுக்குப் போனாலும் முதல் வரிசையில் இடம் இருந்தால்தான் அமருவார். இரண்டாவது வரிசையில் இருக்க அவருக்குப் பிடிக்காது என்று சிலம்பொலி செல்லப்பன் ஒருமுறை சொன்னார்கள். எனக்கும் இந்த இயல்பு உண்டு.

எல்லோருக்கும் முதல் வரிசையில் இடம் கிடைக்குமா? எல்லோரும் நம்பர் ஒன் ஆக முடியுமா என்று தத்துவ வினாக்கள் எழுப்ப வேண்டாம்! அந்த விவாத நேரத்தைக்கூட வீணாக்காமல் நம்பர் ஒன் ஆவதற்கு முயலுங்கள்.

பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின் சீனியாரிட்டிபடிப் பார்த்தால் கலைஞர் தி.மு.க.வின் தலைவராகவும் முதல்வராகவும் ஆகியிருக்க முடியாது. அமரர் எம்.ஜி.ஆர். கூடக் கலைஞரை முதல் இடத்தில் ஒப்புக்கொண்டார்.

அமரர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் இன்றைய தமிழக முதல்வரும் சீனியாரிட்டிகளைப் புறக்கணித்து நம்பர் ஒன் என்று தன்னை நிரூபித்தார். அவர் நம்பர் 2 ஆக இருக்க விரும்பியதே இல்லை!

நம்பர் டூ பாதுகாப்பானது... ஆனால் விரும்பத்தக்கது அல்ல.

ஆபத்துகளை, விமர்சனங்களை எதிர்கொள்ளும் மனிதர்களே எப்போதும் நம்பர் ஒன் என்ற முதலிடம் பெறுகிறார்கள்.

கஷ்ட காலத்தில் ஒரு குழுவைக் கட்டுக்குலையாமல் கொண்டு செலுத்தும் துணிவுடையவர்கள் பிறவித் தலைவர்கள். அவர்களிடம் இருந்து அந்தப் பண்பை நாம் படித்தாக வேண்டும்.

சைவ சமயத்தில் இறைவனைக் குறித்துப் பாடிய நாயன்மார்கள் பாடலை நம்பியாண்டார் நம்பி என்பவர் வரிசைப்படுத்தி முறைப்படுத்தினார். காலத்தால் பிந்திய- வயதில் சின்னவரான ஞானசம்பந்தர் பாடல்களைத்தான் முதல் திருமுறை என்று அறிவித்தார். சைவ சமயத் தலைவர்களை வரிசைப்படுத்தும்போது முதலில் ஞானசம்பந்தர் என்றே வரிசைப்படுத்துவார்கள்.

ஏன்?

Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக