புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 5 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 5 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 5 Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 5 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 5 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 5 Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 5 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 5 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 5 Poll_c10 
53 Posts - 60%
heezulia
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 5 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 5 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 5 Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 5 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 5 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 5 Poll_c10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 5 Poll_m10வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம் - Page 5 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம்


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 4:46 pm

First topic message reminder :

வெற்றி நிச்சயம் பகுதி 2- சுகி சிவம்

1. முன்னேற்றத்தின் மூலமந்திரம்

""நான் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் யாரும் எனக்கு எதையும் கற்றுத் தருவதில்லை'' என்று சில இளைஞர்கள் புலம்புகிறார்கள்.

அவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

உங்களுக்கு யாரும் எதையும் கற்றுத் தரமாட்டார்கள். நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.

யாரும் உங்களுக்கு எதையும் ஊட்டமாட்டார்கள். ஆனால், நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச் சாப்பிடலாம். யாரும் தடுக்க முடியாது.

தலைவராவது எப்படி என்று காந்திஜிக்கு யாராவது வகுப்பு நடத்தினார்களா? இராணுவம் அமைப்பது எப்படி என்று நேதாஜிக்கு யாராவது சொல்லிக் கொடுத்தார்களா?

கற்றுத் தரமாட்டார்கள்... நீங்களாகக் கற்றுக் கொள்ளுங்கள். இதுதான் முன்னேற்றத்தின் மூலமந்திரம்.

எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் மிக நன்றாகச் சமைப்பார். "சமைப்பது எப்படி?' என்ற புத்தகத்தை அவர் படித்ததும் இல்லை; அவரது தாயார் அவருக்குச் சமையல் சொல்லிக் கொடுத்ததும் இல்லை. அவருடைய தாயாரிடம் கோலம் போடுவதைச் சொல்லித் தரும்படி அவர் கேட்டபோது அவர் அம்மா சொன்ன வாசகம்:

""இந்தா பார்... கண் பார்த்ததைக் கை செய்யணும். இதுல கத்துக் குடுக்க என்ன இருக்கு?'' என்றாராம்.

இது உண்மை. சொல்லிக் கொடுப்பதால் ஒருவர் திறமைசாலி ஆக முடியும். நான் மறுக்கவில்லை. ஆனால் சொல்லிக் கொடுப்பதால் திறமைசாலியாக ஜொலித்ததைவிட, கற்றுக் கொண்டதால் திறமைசாலியாக ஜொலித்தவர்களே அதிகம்.

ஒரே ஆசிரியர் பத்து மாணவருக்கு நாட்டியம் கற்றுத் தந்தால் பத்துப் பேருமா ஜொலிக்கின்றார்கள்? கிராஸ்பிங் என்கிற உள்வாங்குதிறன் - உறிஞ்சுதிறன் உள்ளவர்களே உயர உயரப் பறக்கிறார்கள்.

இன்றைக்குப் பல இளைஞர்கள் அரட்டை அடிக்கும்போது, பயணிக்கும் போது தங்களை வெளியிட, வெளிக்காட்டப் பரபரக்கும் அளவு, சுற்றி நிகழ்வதை, அதன் நுட்பங்களை உள்வாங்குவதில்லை. வெளிக்காட்டும் வேகத்தைத் தவிர்த்து உள்வாங்கும் திறனை அதிகரித்தால் வெற்றி நிச்சயம்.

பிறர் கற்றுத் தந்தால் என்ன என்கிற எதிர்பார்ப்பு சார்பு மனப்பான்மையை உருவாக்குகிறது. செயல்திறனைக் குறைக்கிறது. உங்கள் சிந்தனைச் சக்தியைக் குறைக்கிறது.

"சமைத்துப்பார்' புத்தகத்தை வைத்துக் கொண்டு ஒரு பெண் பூரி செய்தாள். புத்தகத்தில் போட்டிருந்தபடியே நடந்து கொண்டாள்.

""எண்ணெய்ச் சட்டியை அடுப்பில் வை.'' வைத்தாள்.

""பிசைந்த கோதுமை மாவை உருண்டையாக உருட்டிக் கொள்''. உருட்டிக் கொண்டாள்.

""பலகையில் வைத்து வட்ட வட்டமாக இட்டுக் கொள்''. இட்டுக் கொண்டாள்.

""ஐந்து நிமிடம் கழித்து, வட்டமாக இட்ட பூரியை எண்ணெயில் போடு''. போட்டாள்.

பூரி உப்பிக் கொண்டுவரும் என்று புத்தகத்தில் போட்டிருந்தது. ஆனால் அவளுக்குப் பூரி உப்பவேயில்லை.

ஏன்? அடுப்பு பற்றவைக்கவே இல்லை.

ஏன்? அடுப்புப் பற்றவை என்று புத்தகத்தில் போடவேயில்லை. புத்தகத்தில் போடாவிட்டாலும் அடுப்பைப் பற்ற வைக்காமல் சமையல் செய்ய முடியுமா? சமைத்துப்பார் புத்தகத்தில் ஒவ்வொரு ஐட்டங்களின் முன்னாலும் அடுப்பைப் பற்ற வை என்று போடுவார்களா?

எல்லா விஷயங்களையும் கற்றுத் தரமாட்டார்கள். நாமாகச் சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

சீன தேசத்தில் ஒரு அரசர். வித்யாசமான பேர்வழி. மாமிச உணவின் ரசிகர். அதிலும் மாட்டு மாமிசம் மனிதருக்கு மிகமிக இஷ்டம். அவரே தினம்தோறும் மாட்டைத் தேர்ந்தெடுப்பார். அவர் எதிரிலேயே அந்த மாடு வெட்டப்படும். அந்த மாட்டை வெட்டுகிறவரும் ஒரே நபர்.

தினம்தோறும் அரண்மனைக்கு வருவார். அரசர் தேர்ந்தெடுத்த மாட்டை ஒரே வெட்டில் கோடாரியால் வெட்டி விடுவார். தலை வேறு, உடல் வேறாகிவிடும். எந்த மாட்டையும் அவர் அரைகுறையாக வெட்டி மறுமுறை வெட்டியதாக வழக்கமே இல்லை.

அரசருக்கு ஒரே ஆச்சரியம். ""இந்தக் கோடாரியைத் தினம்தோறும் சாணை பிடிப்பாயா?'' என்று கேட்டார். ""இல்லை... சரியாக வெட்டுகிற பாணியில் வெட்டினால் கூர் மங்காது'' என்றார்.

""அது என்ன சரியான பாணி?'' என்றார் அரசர்.

முதல் நாள் இடது கைப் பக்கமாகச் சரித்துக் கொண்டு வெட்டுவேன். அடுத்த நாள் வலது கைப் பக்கமாகச் சரித்துக் கொண்டு வெட்டுவேன். இப்படி மாறிமாறி வெட்டுவதால் இருபக்கமும் சமமான கூர்மையுடன் இருக்கும். அதுமட்டுமல்ல... வெட்டுகிறபோது கொடுக்கிற அழுத்தம் ஒரே மாதிரியாக இருக்கும். மாறாது. அதனால் இடது, வலது என்று மாறி மாறி வெட்டினால் கூர் தீட்டப்பட்ட மாதிரி ஆகிவிடும்'' என்றார் மாட்டை வெட்டுபவர்.

""இந்தக் கலையைக் கற்றுத் தர முடியுமா?'' என்று கேட்டார் அரசர்.

""மகாராஜா... அதுமட்டும் என்னால் முடியாது. காரணம் எனக்கு யாரும் இதைக் கற்றுத் தரவில்லை. என் தாத்தா வெட்டும்போது தள்ளி நின்று பார்த்தேன். என் தகப்பனார் வெட்டும்போது அருகில் நின்று கவனித்தேன். அவர்கள் யாரும் எனக்கு எதையும் சொல்லித் தரவில்லை. எந்தக் கலையுமே ஒருவர் மனசிலிருந்து அடுத்தவர் மனசுக்கு வருவது. இதை உள்வாங்கிக் கொள்ளலாமே ஒழிய சொல்லித் தந்துவிட முடியாது'' என்றார் மாட்டை வெட்டுபவர்.

கண்ணையும் காதையும் கருத்தாகத் திறந்து வைத்துக் கொண்டு உள்வாங்கப் பழகுங்கள்


avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 9:03 pm

20. சின்ன தொடக்கம் பெரிய சாதனை!

பெரிய பெரிய காரியங்களைச் சாதிக்க வேண்டும் என்று பெரிய பெரிய கனவு காண்கிற சிலர் எதையுமே தொடங்கமாட்டார்கள். "ஏன்?' என்று கேட்டால், "எல்லாம் ஒரே நேரத்தில் கூடிவர வேண்டும். சின்ன அளவில் எதையும் நான் செய்ய முடியாது... ஆரம்பமே பிரமாண்டமாக இருக்க வேண்டும்' என்று கதை அளப்பார்கள்.

பிரமாண்டமான ஆலமரம் எதுவுமே பிரமாண்டமாகவே தோன்றியதில்லை. மீன் முட்டை போன்ற விதையும், விதையில் விழித்த தாவரக் கோடும்தான் தழைத்துப் பருத்துப் பெருத்துப் பிரமாண்டம் என்கிற நிலையை எட்டியது. தாய் வயிற்றில் விழுந்த ஒற்றைப் புள்ளிதான் பிள்ளையாய் விளைந்தது. தரையில் விழுந்து, வாலிபமாய் வளர்ந்தது. பெரிய பிள்ளைகளாய் யாரும் பிறப்பதே இல்லை.

ஆடு தாண்டும் அகலத்தில் பிறந்த சின்னக் காவிரிதான் ஆனை தாண்ட முடியாத அகண்ட காவிரியாக அகலப்பட்டது. பெரிய பெரிய விஷயங்கள் எல்லாம் சின்னச் சின்னத் தொடக்கங்களால்தான் ஏற்பட்டன என்பதைப் புரிந்துகொண்டு தொடங்குங்கள்... வளருங்கள்... பெரிதாகவே பிறக்க வேண்டும் என்ற பேதைத்தனமான பிடிவாதத்தை விடுங்கள்.

உடுத்து மாற்றத் துணி இல்லாமல் உட்கார்ந்திருந்த ஐந்து சன்னியாசிகளின் சங்கல்பம்தான் இன்று உலகெங்கும் விரிந்து கிடக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் தெரியுமா? தட்சிணேஸ்வரத்தில் கங்கைக் கரையோரத்தில் மிகச் சின்ன அளவில் தொடங்கப்பட்டதுதான் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம். இன்று அப்படியா? ராமகிருஷ்ணர் மீது வைத்த திடமான பக்தியும் விவேகானந்தர் பலமும் சேர்ந்து கோடி கோடிப் பக்தர்களையும் கோடி கோடிச் சொத்துகளையும் உடைய அறநிறுவனம் ஆகிவிட்டது அது!

ஐயா... அது பழங்கதை என்றால், புதுக்கதை சொல்லுகிறேன். சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சோத்துப்பாக்கம் தாண்டியதும் ஒரு தகரக் கொட்டகை இருந்தது. ஒரு புற்று மண்டபம் இருந்தது. நாலைந்து பேர் உட்கார்ந்து ஏதோ குறி கேட்டுக் கொண்டிருந்தார்கள். இன்று அந்த இடம் அப்படியா இருக்கிறது? மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மிகப் பெரிய தூய மருத்துவமனை, மாபெரும் பல்கலைக்கழகத்துக்கான ஏற்பாடு... சிறிய விமான நிலையத்துக்கான எதிர்பார்ப்பு என்று விரிந்துகொண்டே போகிறது மேல்மருவத்தூர்.

தகரக் கொட்டகையும் புற்று மண்டபமும் விதை. விமான நிலையமும் பல்கலைக் கழகமும் விருட்சம்! சின்னச் சின்ன விதைகளிலிருந்து பெரிய பெரிய விருட்சங்கள். பெரிய பெரிய பள்ளிக்கூடங்கள், பல்கலைக் கழகங்கள் நாலைந்து மாணவர்களுடன், ஒற்றை ஆசிரியருடன், கூரைக் கொட்டகைகளில் உண்டாயின என்ற செய்தி நம்ப முடிகிறதா?

இப்போது பல்வேறு தொழில்களில் பாதம் பதித்துப் பல கோடி மூலதனங்கள் என்று பட்டியல் இடுகிற ஸ்ரீராம் சீட்டு நிறுவனம் தொடக்கத்தில் இருபது வாடிக்கையாளர்களுடன் சில ஆயிரம் மூலதனத்தில் தொடங்கப்பட்டது என்கிறார்கள்...

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 9:25 pm

ஆச்சரியமாக இல்லையா? தாஜ்மஹால் ஒரே நாளில் கட்டப்பட்டதா? தஞ்சைப் பெரிய கோயில் ஒரே நாளில் உருவாக்கப்பட்டதா? கொஞ்சம் கொஞ்சமாகத்தான் எல்லாப் பெரிய விஷயங்களும் உருவாகின்றன. அடி அடியாகத்தான் கவிதைகள் பிறக்கின்றன. வரி வரியாகத்தான் கட்டுரைகள் பிறக்கின்றன.

மந்திரத்தில் மாங்காய் மாதிரி எந்தக் காப்பியமும் கண நேரத்தில் பிறந்ததில்லை. "உலகெல்லாம்' என்ற ஒற்றை வரியிலிருந்துதான் "பெரிய புராணம்' பிறந்தது. எனவே பெரிய பெரிய முடிவுகளை எதிர்பார்த்திருந்தாலும் சின்னச் சின்னத் தொடக்கங்கள்தான் அவற்றின் ஆரம்பம் என்று அறிந்து கொள்ளுங்கள். ஆரம்பியுங்கள். ஒரே நாளில் எவனையும் தலைவனாக உலகம் உருவாக்குவதில்லை.

ஏதோ பெரிதாகச் சாதிக்கப் போகிறேன் என்று பிறரையும் ஏமாற்றித் தன்னையும் ஏமாற்றும் கோமாளித்தனம் வேண்டாம். ஒரு கோடி ரூபாய் லாட்டரியில் தனக்கே விழும்; அதன் பிறகு உலகமே தன்னை மதிக்கும் என்று ஒருவர் பெருமையடித்துக் கொண்டார். அது சரி... ஆனால் ஒரு ரூபாய் கொடுத்து ஒரு டிக்கெட் வாங்கும் வேலையைக்கூட அவர் செய்யவே இல்லை! எதையுமே தொடங்காமல் ஏதாவது பெறுவது எப்படிச் சாத்தியம்?

உங்கள் ஊர் உருப்பட வேண்டுமா? நாலைந்து பேர் இதுபற்றிப் பேசிப் பேசி மாய்ந்து போகிறீர்களா? நாம் என்ன செய்ய முடியும் என்று அங்கலாய்த்துக் கொள்ளுகிறீர்களா? இந்தப் பெட்டைப் புலம்பலை (பாரதி பாஷையில்) உடனே நிறுத்துங்கள். உங்கள் ஊரை மாற்றியமைக்க நீங்கள் நாலைந்து பேர் போதும். கட்சி, சாதி, மதம் கடந்து நீங்கள் சின்ன அளவில் ஒன்று சேர்ந்தால், ஒரு சங்கம் அமைத்தால் நாளை இந்த நாடே மாறும். உருப்படியாக ஏதாவது செய்யுங்கள். நல்லதைத் தொடங்குங்கள். வெற்றி நிச்சயம்.

ஏமாளித்தனமாக எவனுக்காவது ரசிகனாகி எடுபிடியாகச் செத்துத் தொலைக்க வேண்டாம். அது தற்கொலைக்குச் சமம். நீங்கள் உயர, உங்களைச் சுற்றி உள்ள சமூகம் உயர ஏதாவது செய்யுங்கள். "நாளைக்கு அதைச் செய்யப் போகிறேன், இதைச் செய்யப் போகிறேன்' என்று ஜம்பம் பேசாமல் இன்றைக்கே எது முடியுமோ அதைத் தொடங்குங்கள்.

பெரிய பெரிய கட்சிகள்கூடச் சின்னச் சின்ன அறைகளில்தான் தொடங்கப்பட்டன. பெரிய பெரிய புரட்சிகள்கூடச் சின்னச் சின்னச் சண்டைகளில் இருந்தே பிறந்தன. ஏழே ஸ்வரங்களில் இருந்துதான் எல்லா ராகங்களும் ஜனித்தன.

இன்றைய இசை மேதைகளின் புகழ், பணம், கார், பங்களா, விருதுகள் எல்லாமே ஏழு ஸ்வரங்களைப் பிடித்ததால் - சரியாகப் பிடித்ததால் - கிடைத்தவை. மறக்க வேண்டாம். சின்னச் சின்னக் கூட்டங்களில் பத்துப் பேருக்கும் பதினைந்து பேருக்கும் பேசிய கிருபானந்தவாரிதான் பிற்காலத்தில் வாரியார் சுவாமிகள் ஆனார். பத்தாயிரம் பேர் மத்தியில் சிரமம் இல்லாமல் பேசும் வாய்ப்புப் பெற்றார்.

படித்தவர் பலர் இருக்கும் சபைகளில்கூட "தேசிய கீதம்'... என்று அறிவித்ததும் ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள். தேசிய கீதமா, தெரியாது! யார் தொடங்குவது என்பதுதான் பிரச்சினை. தேசிய கீதத்துக்கே "ஸ்டார்ட்டிங் ட்ரபிள்'! யாராவது "ஜனகண...' என்றால், எல்லாரும் சேர்ந்து கொள்ளுகிறார்கள்.

தொடக்கம்தான் பிரச்சினை. நண்பர்களே, எது செய்ய நினைத்தாலும் உடனே தொடங்குங்கள். வெற்றி நிச்சயம்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 9:28 pm

21. சவாலே சமாளி!!!

நமது வெற்றி தோல்வியை நமது மனோபாவங்கள்தான் நிர்ணயிக்கின்றன. ஒரு சவால் - பிரச்சினை நம் எதிரில் நிற்கும்போது நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே நம் வெற்றி தோல்வி அமைகிறது. பிரச்சினைகளை, சவால்களை இரண்டு வகைகளாக மட்டுமே எதிர்கொள்ள முடியும். எப்படி? ஒன்று Fight மற்றொன்று Flight. அதாவது எதிர்ப்பது ஒரு வகை! எகிறிக் குதித்துத் தப்பி ஓடுவது மறுவகை. நீங்கள் எந்த வகை? யோசித்தது உண்டா? வாழ்க்கையே ஒரு சவால். அதைச் சந்திப்பது எப்படி? சொல்கிறேன்.

மனித குலம் காடுகளில்தான் தன் வாழ்க்கையைத் தொடங்கியது. ஒவ்வொரு கணமும் மரணத்தை எதிர்த்துப் போராடியே மனித இனம் தன்னைத் தக்க வைத்துக் கொண்டது. கொடிய விலங்குகள், மலைப் பாம்புகள், விஷ ஜந்துகள் என்று மரணம் மனிதனை விழுங்கப் பார்த்தது. எதிர்த்துப் போராடுவதன் மூலமே மனிதன் ஜெயித்துக் காட்டினான். மழை, இடி, வெள்ளம், பூகம்பம் என்று இயற்கையும் மனிதனை எதிர்த்து எப்போதும் யுத்தம் நடத்துகிறது.

இந்தச் சவால்களைச் சந்தித்து, முறியடிப்பது மூலமே நாம் ஜீவிக்கிறோம்.

எனவே எகிறிக் குதித்து ஓடும் கோழைத்தனத்தைவிட எதிர்த்துப் போராடும் துணிவும், தெளிவுமே நம்மை வாழ வைக்கிறது. அதற்காக, அசட்டுத்தனமாக எல்லாவற்றையும் எதிர்த்துப் போராடும் மூர்க்கத்தனம் கூடாது. ஆனால் வாழ்வின் சவால்களைச் சம்மதத்துடன் ஏற்கும் கம்பீரம் நமக்கு வேண்டும். எழுபது எண்பது வயதுவரை உயிர் வாழ்ந்தால் கூடச் சிலர் முப்பது நாற்பது வயதிலேயே செத்துப் போனவர்கள்! எப்படி! சவால்களை எதிர்கொள்ள மறுக்கும் அந்தக் கணமே மனிதன் செத்துவிட்டதாக அர்த்தம்.

இதையே பெர்னார்ட்ஷா, ""சில மனிதர்களை இறப்பதற்கும், புதைப்பதற்கும் மத்தியில் முப்பது நாற்பது வருடங்கள் கடந்து விடுகின்றன'' என்று கேலி செய்கிறார். வாழ்விலிருந்து விலகி ஓடும் மனிதர்களைவிட, எதிர்த்து நின்று போராடும் மனிதர்கள்தான் உன்னதமான இடம் பெறுகிறார்கள்.

அடிமை இந்தியாவில் அடிமைத்தனத்தை நிராகரித்து, எதிர்த்து நின்ற மகாத்மா காந்தியைத்தான் ஐந்நூறு ரூபாய் நோட்டில் அச்சடித்துக் கொண்டாடுகிறோம். கோழைகளை அல்ல. வெள்ளையரை விரட்ட கப்பலையும் விமானத்தையும் கையாண்ட வ.உ.சியையும் நேதாஜியையும் சிலை வைத்துச் சிறப்பிக்கிறோம். எனவே வாழ்க்கையின் சவால்களைச் சந்திக்கத் தயார் ஆகுங்கள். வெற்றி நிச்சயம்.

சினிமாப் படங்களில் எப்போது கை தட்டுகிறார்கள்? கொடுமைப்படுத்தும் கூட்டத்தை ஆக்ரோஷமாகக் கதாநாயகன் அல்லது நாயகி எதிர்த்துப் பேசும்போது, வீராவேசமாகப் போரிடும்போது கொட்டகையில் விசிலும் கைதட்டலும் வருகிறதே... என்ன அர்த்தம்? கைதட்டல் என்பது மக்கள் அங்கீகாரத்தின் அடையாளம். வெற்றி மகுடத்தின் அறிவிப்பு. சவாலைக் கண்டு அஞ்சியோடும் கோழைகளைச் சமூகம் கண்டு கொள்வதில்லை. ஆனால் சவால்களைத் துணிச்சலுடன் சந்திக்கும் நபரைச் சமூகம் கைதட்டிப் பாராட்டுகிறது. சவால்கள் உறுதியுடன் சந்திக்கப்படும் ஒவ்வொரு கணமும் மக்களுக்கு அளவற்ற ஆனந்தத்தை அளிக்கிறது.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 9:29 pm

பிரச்சினைகளில் இருந்து அருச்சுனன் தப்பியோட நினைக்கும்போதுதான் பகவத்கீதையே பிறந்தது. அவனை அப்படித் தப்பியோட கிருஷ்ணன் அனுமதிக்கவில்லை. சவாலை எதிர்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். ஒன்று புரிந்து கொள்ளுங்கள். சந்திக்கப்பட வேண்டிய சவால்களை அடையாளம் காண்பதும், அவற்றைத் துணிவுடன் எதிர்கொள்ளத் தீர்மானிப்பதும் வெற்றிப் பாதையின் பாதி தூரம்... ஜெயித்தல் என்பது மீதி தூரமே!

பண்ணையார் ஒருவர் ஏழை விவசாயிக்கு நிறையக் கடன் கொடுத்தார். அவரது உள்நோக்கம் கொடுமையானது. அந்தக் கிழட்டுப் பண்ணையாருக்கு விவசாயியின் அழகான இளம்பெண் மீது ஒரு கண். எப்படியாவது அவளைத் திருமணம் செய்துகொள்ள சூழ்ச்சி செய்தார். ஒரு நாள், ""கடனை எல்லாம் திருப்பிக் கொடு, அல்லது பெண்ணைத் திருமணம் செய்து கொடு'' என்று நச்சரித்தார். விவசாயி மகள் தீவிரமாக எதிர்த்தாள்; மறுத்தாள். ரொம்பவும் நல்லவர் போல் பண்ணையார் நடித்தார். ""மாரியம்மன் கோவிலில் இப்பவே திருவுளச் சீட்டு குலுக்கிப் போட்டு எடுப்போம். அந்தப் பெண்ணே எடுக்கட்டும். கல்யாணம் செய்துகொள்... என்று சீட்டில் வந்தால் திருமணம் நடக்கும்'' என்று உறுமிவிட்டுத் தன் கையில் இருந்த இரண்டு சீட்டுகளையும் குலுக்கிக் காட்டினார். விவசாயி மகள் அசரவில்லை, கொஞ்சம் யோசித்தாள். பண்ணையாரின் வஞ்சனை புரிந்துவிட்டது. திருவுளச்சீட்டு எழுதிப்போடும்போது இரண்டிலுமே திருமணம் செய்துகொள் என்று எழுதியே பண்ணையார் போடப் போகிறார். அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. பண்ணையாரைக் காட்டிக் கொடுக்காமல் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்தாள். மாரியம்மன் கோவிலில் ஊரே கூடி இருந்தது. சீட்டைக் குலுக்கிப் பண்ணையார் போட்டதும் ஒரு சீட்டை எடுத்து டபக்கென்று வாயில் போட்டு மென்று தின்றாள் விவசாயி மகள். ""அடடா அந்தச் சீட்டில் என்ன எழுதி இருந்தது என்று எப்படிக் கண்டுபிடிப்பது?'' என்று ஊர்ப் பஞ்சாயத்துக் கேட்டது. ""இதிலென்ன கஷ்டம்? அந்த இன்னொரு சீட்டை எடுத்துப் பாருங்கள். நான் எடுத்த சீட்டு அதற்கு எதிரானது. அவ்வளவுதானே!'' என்றாள் அந்தப் புத்திசாலிப் பெண். பண்ணையாருக்கு அசடு வழிந்தது. இன்னொரு சீட்டும் ""திருமணம் செய்து கொள்'' என்று வந்ததால் முதல் சீட்டு எதிர்மறை என்று ஊர் முடிவு செய்தது. சவாலைச் சந்திப்பது என்று முடிவு செய்து விட்டால் எப்படிச் சந்திப்பது என்கிற வழிமுறை நிறைய தோன்றும்.

இந்தத் தீரர்களுக்கு வெற்றிநிச்சயம்!

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 9:30 pm

22. இளைஞர்களிடம் இல்லாத "மை' !

இன்றைய இளைய தலைமுறையிடம் இருக்கிற உன்னதமான "மை' திறமை. இல்லாத "மை' பொறுமை. காத்திருப்பது என்பதும் ஒரு கலைதான். நம்முடைய Turn வரும் வரை பொறுமையாக இருப்பது என்பது அவசியம். அதற்கு நம் மீது நமக்கு ஆளுமை வேண்டும்.

ஆறு மாதம் விளையும் அரிசியை மூன்று மாதத்தில் விளைய வைத்தது விஞ்ஞானம். ஆறு வருஷத்தில் காய்க்கும் தென்னையை மூன்று வருஷத்தில் காய்க்க வைத்தது விவசாயம். விளைவு..... இந்தக் குறுவைப் பயிர்களையும் அவசர கால விவசாய விளைவுகளையும் உண்ணும் இளைய தலைமுறை அலாதியான அவசரத்தில் இருக்கிறது. படபடப்பு... பரபரப்பு... பதற்றம்... அவசரம்... ஆத்திரம்... இவை எதையுமே சாதிக்கப் போவதில்லை. கொழுத்த மீன் வரும் வரை காத்திருக்கும் "கொக்கொக்க' என்ற குறள் இளைய தலைமுறைக்கு அவசியம் புரிய வேண்டும்.

பஸ்ஸýக்கோ, ரயிலுக்கோ, சாப்பிடவோ, திருமணத்திற்கோ எதற்குமே காத்திருக்கத் தயாராக இல்லை.. அவசரப்பட்டால் முதுமையும் முந்தி வரும். மரணமும் விரைவில் வரும். அவசரப்படாத, நிதானம் பல ஆபத்துகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். படபடக்காமல் பிரச்னைகளைக் கையாண்டால் புதிய பிரச்னைகள் தவிர்க்கப்படும். இது பழைய தலைமுறையிடமிருந்து புதிய தலைமுறை படிக்க வேண்டிய கட்டாயப் பாடம்!

இந்திய விடுதலைப் போராட்டம் உச்சகட்டமாக இருந்த காலம் அது. இந்திய விடுதலை வீரர்களையும், தலைவர்களையும் துல்லியமாக ஆங்கில அரசு வேவு பார்த்துக் கொண்டிருந்த காலம் அது. பால கங்காதரத் திலகர் அப்போது விடுதலைப் போரின் பெருந் தளபதி. ஆறு மாத காலமாக அவர் வீட்டில் சமையல் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமையல்காரர் தாம் வேலையில் இருந்து நிற்க விரும்புவதாக அறிவித்தார். திலகர் "ஏன்?' என்றார். ""நீங்கள் தரும் சம்பளம் ஆறு ரூபாய்..... அது போதவில்லை'' என்றார். ""அது சரி... சமைப்பதற்கு நான் தரும் சம்பளம் ஆறு ரூபாய்... ஆனால் என் நடவடிக்கைகளை வேவு பார்ப்பதற்கு உனக்கு பிரிட்டிஷ் சர்க்கார் தரும் சம்பளம் இருபத்தி நாலு ரூபாய்... ஆக முப்பது ரூபாய் சம்பாதிக்கிறாய். அப்படி இருந்துமா உனக்குச் சம்பளம் போதவில்லை!'' என்று இடி இடி என்று சிரித்தார் திலகர். உண்மையில் அந்தச் சமையல்காரர் பிரிட்டிஷ் அரசு அனுப்பிய ஒற்றர். ஆறு மாதத்திற்கு முன்பே இது திலகருக்குத் தெரியும். ஆனால் தெரிந்ததாகத் திலகர் காட்டிக் கொள்ளவே இல்லை. பிரிட்டிஷ் அரசு அந்த ஒற்றரை நம்பி ஏமாந்து போனது. அவர் ஒற்றர் என்பதால் திலகர் ஜாக்கிரதையாக இருந்தார். இந்த நிதானம் - பழைய தலைமுறையின் பாராட்டத்தக்க பண்பு. இது இன்றைக்கு இருக்கிறதா?

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 9:32 pm

அளவுக்கு மீறிய பொறுமையை நான் வற்புறுத்தவில்லை. பத்து வயதிலேயே நாற்பது வயதுக்குரிய நாற்காலிகளை அடைய நினைப்பதும், பதினைந்து வயதிலேயே இருபத்தைந்து வயதுக்குரிய கட்டில்களைப் பகிர்ந்து கொள்வதும், முப்பது வயதிலேயே அறுபது வயதுக்குரிய முதுமையில் தளர்வதும் சகிக்கும்படியாக இல்லை. இந்த அவசரம் இளமைக்கு அவசியமா?

பஞ்ச தந்திரக் கதைகளிலே அருமையான கதை ஒன்று உண்டு. ஒரு குட்டிக் குரங்கு படாத பாடுபட்டு ஒரு தோட்டம் போட்டது. செடிகள் வளர்ந்து மரமாகிப் பூத்துக் குலுங்கி காய்கனிகள் கொட்டும். ஆசை ஆசையாய் அள்ளித் தின்னலாம் என்று கணக்குப் போட்டது. என்ன கொடுமை! எதுவுமே முளைக்கவில்லை. ஆசை நிராசையானது. அது ஒரு நாள் சீனியர் குரங்கிடம் போய் ஆலோசனை கேட்டது. ""எதுவுமே முளைக்கவில்லை'' என்று ஒப்பாரி வைத்தது. சமாதானப்படுத்திய சீனியர் குரங்கு ""விதை போட்டா தண்ணி ஊத்தணும். நீ தண்ணி ஊத்தியிருக்க மாட்டே'' என்றது. ""ஆங்... ஒரு விதைக்கு எட்டு பக்கெட் தண்ணி தினம் தினம் காலையும் மாலையும் ஊற்றுவேன்'' என்று குட்டிக் குரங்கு குற்றச்சாட்டை மறுத்தது.

""அடடா... எட்டு பக்கெட் தண்ணி விட்டா விதை என்னாகும்... அழுகிப் போயிருக்கும்... அதான் முளைக்கல'' என்று தீர்ப்பு வழங்கியது சீனியர். குட்டிக் குரங்கோ... ""ஒரு விதை கூட அழுகல'' என்று உறுதியாக உறுமியது. ""அதெப்படி உனக்குத் தெரியும்'' என்றது சீனியர். ""நான் தான் விதை முளைச்சிருச்சான்ணு தினம் எடுத்து எடுத்துப் பாக்கறனே'' என்றது குட்டிக் குரங்கு.

தினம் தினம் விதையை எடுத்து எடுத்துப் பார்த்தால் எப்படி முளைக்கும்? அது அதற்கு என்று ஒரு காலம் இருக்கிறது. அந்தக் காலம் வரை காத்திருக்க வேண்டியது அவர் அவர் கடமை. அதற்குத் தேவை பொறுமை. ""பொறுத்தது போதும் பொங்கி எழு'' என்கிற குட்டித் தலைவர்கள் வெட்டிப் பேச்சை நம்பி, பொங்கிக் கொண்டே இருந்தால் வளர முடியுமா? திறமையோடு கூடப் பொறுமையும் கலந்தால் இளைய தலைமுறைக்கு வெற்றி நிச்சயம்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 9:33 pm

23. யார் சொன்னாலும் கேளுங்கள்!

பிறரது விமர்சனங்களால் பாதிக்கப்படாதீர்கள்; ஒரு பாதுகாப்பு வளையம் போட்டுக் கொள்ளுங்கள் என்று ஒருமுறை சொன்னேன். அதற்காக யார் எது சொன்னாலும் கேட்க வேண்டாம் என்பது பொருள் அல்ல. "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்...' என்று வள்ளுவர் எழுதினார்.

அப்படியானால் யார் யார் சொன்னாலும் கேளுங்கள் என்றுதானே பொருள். கேட்க வேண்டும். தரமான யோசனைகளைத் தள்ளக் கூடாது... கொள்ள வேண்டும். காதுகளை அடைத்துக் கொள்வதோ... அல்லது எல்லாமே எனக்குத் தெரியும் என்று மண்ணை அள்ளித் தலை மேலே போட்டுக் கொள்வதோ கூடாது! கூடவே கூடாது.

உங்கள் கண்ணும் காதும் திறந்திருந்தால், கருத்தும் இதயமும் திறந்திருந்தால், எங்கிருந்தோ கேட்கும் யோசனைகள் எவ்வளவு பயன் தரும் என்பது புரியும்.

பலமுறை தேர்தலில் தோல்வியைத் தழுவிய ஆப்ரஹாம் லிங்கன் ஜனாதிபதியாக முதல் முறை வெற்றி பெற்றார். நன்றி தெரிவிப்புக் கூட்டத்தில் ஒரு சிற்றூரில் பேசும்போது அந்த ஊரில் உள்ள ஒரு சிறுமியின் பெயரைச் சொல்லி மேடைக்கு அழைத்தார். தான் இந்த முறை பெற்ற வெற்றிக்குக் காரணம் அந்தச் சிறுமி என்று புகழ்ந்தார்.

அப்படி அந்தச் சிறுமி லிங்கனுக்கு என்ன உதவி செய்தாள், வெற்றி பெற...

ஆப்ரஹாம் லிங்கன் ஒல்லியான உடல்வாகு உடையவர். அவர் கன்னங்கள் ஒட்டிப்போய் முகத்தில் பள்ளமாக இருந்தன. அம்மைத் தழும்பு வேறு... அப்போது அவர் தாடி வளர்க்கவும் இல்லை. முகம் விகாரமாக இருந்தது. இதை உற்றுக் கவனித்த சிறுமி அவருக்கு ஓர் ஆலோசனை எழுதி இருந்தாள். ""தாடி வளர்த்துக் கொண்டால் உங்கள் முகம் அழகாக, கம்பீரமாக இருக்கும். இப்போதுள்ள உங்கள் முகத்தைப் பெண்கள் விரும்புவதில்லை'' என்ற உண்மையை அவள் வெளிப்படுத்தி இருந்தாள்.

அவளது கடிதத்தைக் குப்பைக் கூடையில் லிங்கனின் தேர்தல் பொறுப்பாளர்கள் போடும் சமயத்தில் அங்கு வந்த லிங்கன் அந்தக் கடிதத்தை எடுத்துப் படித்தார். அந்தச் சிறுமியின் யோசனையை ஏற்றுத் தாடி வளர்த்தார். கம்பீரமாக, களையாகக் காட்சியளித்து ஜெயித்தார். அதற்காக அந்தச் சிறுமியைத் தேடி நன்றி தெரிவித்தார் லிங்கன்.

நமது பெரிய பெரிய சிக்கல்களுக்குப் பெரிய பெரிய நிறுவனங்கள், பெரிய பெரிய மருத்துவமனைகள், பெரிய மனிதர்கள்தான் யோசனை சொல்ல வேண்டும் என்பதில்லை. எங்கிருந்தோ வரும் எளிய யோசனைகள் பெரிய வெற்றிகளை விளைவிக்கும்.

ஒரு பற்பசை கம்பெனியில் விற்பனையை அதிகரிப்பது பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. நிர்வாகவியல், பொருளாதார நிபுணத்துவம் வாய்ந்த மார்க்கெட்டிங் மன்னர்கள் பலர் வந்திருந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை சொன்னார்கள். விளம்பரத்தைக் கூட்டுவது... இலவச இணைப்பு தருவது... பரிசுக் கூப்பன் வைப்பது... போட்டிகள் நடத்துவது என்று அதிகச் செலவாகும் யோசனைகளை அள்ளிவிட்டனர். நிர்வாகம் அவற்றை ஏற்கத் தயாராக இல்லை. அப்போது அங்கு பணிநிமித்தம் நின்ற கடைநிலை ஊழியர் ஒருவர் ஒரு சின்ன யோசனை சொன்னார். பற்பசை வெளிவரும் டியூபின் வாயைச் சிறிது அகலப்படுத்தலாம் என்றார்.

சுற்றி இருந்தவர்கள் கொல்லென்று சிரித்துவிட்டார்கள்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 9:33 pm

இதென்ன மடத்தனம்... இதெப்படி விற்பனையைக் கூட்டும் என்று கேலி பேசினர். ஆனால் அவர் சொன்ன யோசனையை நிர்வாகம் ஏற்றது... அது அபாரமான பலன் அளித்தது.

எப்படி?

வாய் பெரிதான பிறகு வழக்கம்போல் உபயோகப்படுத்தும் வாடிக்கையாளர் வழக்கம்போல் பின்பக்கம் அழுத்தும்போது கூடுதலான பசை வெளியேறியது! முப்பது நாள்கள் ஒரே பேஸ்ட் ட்யூபைப் பயன்படுத்தி வந்தவர்களுக்கு இருபத்து ஐந்து நாள்களில் பசை தீர்ந்து போனது... கூடுதலாக வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது... விற்பனை கூடிவிட்டது.

சின்னச் சின்ன யோசனைகளை அலட்சியப்படுத்தாமல் முடிவெடுத்தால் வெற்றி நிச்சயம்.

இன்னொரு சுவையான நிகழ்ச்சி...

அமெரிக்காவின் பிரபலமான ஹோட்டல் ஒன்றில் எல்லாம் சிறப்பாக இருந்தன. ஆனால் பல மாடி கொண்ட கட்டடத்தில் மேலே போய்வரும் லிஃப்ட் வெகு மெதுவாக இயங்கியது பலருக்குப் பிடிக்கவில்லை. வெளியே லிஃப்டுக்குக் காத்திருப்பவர்கள் கோபம் அடைந்தார்கள். உள்ளே, மெதுவாக மேலே போகும்போது உள்ளிருப்பவர்கள் எரிச்சல் அடைந்தார்கள். புகார் புத்தகத்தில் அதே குறை திரும்பத் திரும்ப எழுதப்பட்டது. லிஃப்டை மாற்றினால் ஹோட்டலுக்குப் பல லட்சம் செலவாகும். விரைவுபடுத்த வாய்ப்பே இல்லை. பல முறை ஆலோசனைக் கூட்டம் நடத்தியும் பலனே இல்லை.

முடிவில் ஒரு சாதாரண ஹோட்டல் ஊழியர் லிஃப்டின் உள்ளேயும் வெளியேயும் முகம் பார்க்கும் பெரிய கண்ணாடிகளைப் பொருத்தச் சொன்னார். உள்ளிருக்கும் நபர்கள் தங்கள் முகத்தைத் திருப்பித் திருப்பிப் பார்க்கும் ஜோரில் லிஃப்டின் தாமதத்தை மறந்தனர். வெளியே இருப்பவர்கள் காத்திருக்கும் நேரத்தில் தங்கள் தோற்றத்தைச் சரிசெய்து கொள்வதில் செலவழித்தனர்.

புகார் புத்தகம் தப்பித்தது! உங்கள் காதும் கருத்தும் கூர்மையாக இருந்தால் வெற்றி நிச்சயம்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 9:36 pm

24. அந்தக்காலம் வரும்

அரசாங்கமும் கல்லூரிகள், பள்ளிகள் நடத்துகிறது. தனியார் நிர்வாகத்திலும் கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன. இரண்டிலும் ஓர் அநீதி நடக்கிறது. தனியார் நிர்வாகத்தில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் குறைந்த சம்பளம் பெறுகிறார்கள். நிறைந்த வேலை பார்க்கிறார்கள். அரசாங்க நிர்வாகத்தில் குறைந்த வேலை பார்க்கிறார்கள். நிறைந்த சம்பளம் வாங்குகிறார்கள். விதிவிலக்கும் உண்டு.

கடினமான வேலை பார்த்துக் குறைந்த கூலி வாங்கும் இளைஞனுக்கு ஓர் உள்ளக் குமுறல் இருக்கும். ஆத்திரம் இருக்கும். அவனுக்கு ஓர் ஆறுதல் சொல்கிறேன். கொஞ்சம் பொறு... கொஞ்சம் பொறு... ஜெயிக்கலாம்! உலகில் உழைப்புக்கும் ஊதியத்துக்கும் ஜோடிப் பொருத்தம் எப்போதும் இருப்பதே இல்லை! தொழில் தொடங்கினாலும், வியாபாரம் செய்தாலும், வேலைக்குப் போனாலும் பணம் வருவதில் வேறுபாடு இருந்துகொண்டே இருக்கும். எடுத்த எடுப்பிலேயே உடனேயே உழைப்புக்கு ஏற்ற ஊதியமோ, லாபமோ ஒருபோதும் கிடைக்காது. வாழ்க்கையைத் தொடங்கும்போது நாம் எதிர்பார்க்கும் ஊதியம் கிடைக்கவில்லையே என்று சலிப்பும் வேதனையும் அடைவதோ, வேலையை விட்டுவிடுவதோ, அடிக்கடித் தொழிலை மாற்றுவதோ அறிவுடைமை ஆகாது. காலம் வரும்... கொஞ்சம் பொறு. காலம் வரும் என்று ஜோதிடர் பாணியில் நான் கூறவில்லை. காலம் எப்படி வரும் என்று ஆதாரபூர்வமாக விளக்குகிறேன்.

ஒவ்வொரு தொழிலிலும் மூன்று காலகட்டங்கள் - பிரிவுகள் உள்ளன. கவனமாக அதனை உணருங்கள். முதல் காலம்: உழைப்புக்குத் துளியும் பொருந்தாத மிகக் குறைவான ஊதியம் பெறுதல்.

இரண்டாம் காலம்: அளவான உழைப்பு. அளவான சம்பளம். உழைப்பும் ஊதியமும் சமமாக இருத்தல்.

மூன்றாம் காலம்: மிகக் குறைந்த உழைப்பு; பல மடங்கு ஊதியம்.

இந்த மூன்றையும் கூட்டிக்கழித்துச் சராசரியாகப் பார்த்தால் வாழ்க்கையின் வரவும் செலவும் சரியாகவே இருக்கும். ஆனால் அந்தக் காலம் வரப் பொறுமை வேண்டும். நெடுந்தொலைவு நோக்கும் தீர்க்கதரிசனம் வேண்டும்.

இதை ஓர் இளைஞனுக்கு நான் விளக்கிக்கொண்டிருந்தபோது அவசரமாக அவன், ""முதல் காலம் தாண்டுவதற்குள் இறந்துபோய்விட்டால்'' என்று குறுக்கிட்டான். ""இவ்வளவு எதிர்மறைச் சிந்தனை (Negative thought) உள்ள நீ உலகிற்கு அவசியம் இல்லை என்று உலகம் தீர்மானித்தது என்று அர்த்தம்'' என்றேன்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 17, 2009 9:36 pm

இன்று கோடிகோடியாக ஜவுளி வியாபாரம் செய்யும் தமிழகத்தின் பிரமாண்டமான ஜவுளி மாளிகை அதிபர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். ஒரு காலத்தில் அவர்கள் ஜவுளியை மூட்டை கட்டித் தலைமேல் சுமந்துகொண்டு போய் ஊர் ஊராக விற்றவர்கள். உழைப்பிற்கும் ஊதியத்திற்கும் ஏணி வைத்தால்கூட எட்டாத வேறுபாட்டை உணர்ந்தவர்கள். இப்போதோ அதன் மாறுபாட்டை அனுபவிப்பவர்கள்.

ஒரு காலத்தில் கல்லும் மண்ணும் சுமந்த கட்டடக் கலைஞர் ஒருவர் ஓடி ஓடி முப்பதும் நாற்பதும் சம்பாதித்தார். இன்று உட்கார்ந்த இடத்தில் கோடி கோடியாகச் சம்பாதிக்கும் ரயில்வே காண்ட்ராக்டர் அவர். வாழ்க்கையில் மூன்று கட்டக் கொள்கையில் இருந்து யாரும் தப்ப முடியாது.

வாழ்க்கையின் தொடக்கத்தில் உழைப்பிற்கும் ஊதியத்திற்கும் பொருத்தம் இராது. முடிவில் ஊதியத்திற்கும் உழைப்பிற்கும் பொருத்தம் இராது. இதைப் புரிந்துகொண்டால் உங்களுக்கு வருத்தம் வராது. மாதச் சம்பளக்காரர்களுக்கு இந்தக் கோட்பாடு ஓரளவே பொருந்தும். வியாபாரம், தொழில் புரிவோர்க்கு, கலைஞர்களுக்கு இந்தக் கோட்பாடு வெகுவாகப் பொருந்தும். எண்ணெய்ச் சட்டியில் ஜாங்கிரியும் அடுப்புக்கு எதிரே தானுமாய் வெந்துகனிந்த ஓர் உழைப்பாளியின் கடின வெற்றிதான் இன்று பிரபலமான ஓர் இனிப்பு நிறுவனம் - சர்க்கரை சாம்ராஜ்யம்.

ஹோட்டலில் டேபிள் கிளீன் செய்பவர், முதல் ஹோட்டல் தொடங்குவது கஷ்டம். தொடங்கிய பின் அடுத்து அடுத்துக் கிளைகள் தொடங்குவது சுலபம். இது சென்னையிலேயே நடந்திருக்கிறது. உலகின் செயின் ஹோட்டல்கள் இப்படித்தான் வளர்ந்தன.

ஒரு முதலாளியிடம் நீங்கள் வேலை பார்க்க நேர்ந்தால் உங்கள் உழைப்புக்குத் தகுந்த கூலி முதலில் கிடைக்கவில்லையே என்று வருந்த வேண்டாம். முதலாளியைத் திட்ட வேண்டாம். நீங்கள் எதிர்பார்க்கும் சம்பளத்திற்கும் முதலாளி தரும் சம்பளத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கணக்கிடுங்கள்; அந்தத் தொகையை ஒரு தொழில் கற்றுக்கொள்ள உதவியாக இருந்த முதலாளிக்கு நீங்கள் தரும் சம்பளமாக (Tuition fees) மகிழ்ச்சியுடன் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். வாழ்க்கை முன்னேற்றத்தின் இந்த மூன்று காலகட்டத்தையும் புரிந்துகொண்டால் வெற்றி நிச்சயம்.

Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக