ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 9:10 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...?

View previous topic View next topic Go down

இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...?

Post by ஜாஹீதாபானு on Sat Jan 21, 2012 3:29 pm

மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரர் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர் பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்க மாட்டார்.

ஒரு முறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கும் வரும் போது தனது பணப்பையைத் தொலைத்து விட்டார்.

வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப்பையை தேடிப் பார்த்து அது கிடைக்காமல் புலம்பினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டுப் பார்த்தும் கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். அப்போது அவரது மனைவியார் “உங்க பணப்பையைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்கள்... யாராவது கொண்டு வந்து கொடுப்பார்கள்" என்றார்.

அவரும் மனைவியின் சொற்படி அவர் பணப்பையைக் கொண்டு வந்து கொடுப்பவர்க்குப் பரிசு என்று அறிவித்தார். ஊர் மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து பரிசு பெறலாம் என்று நினைத்தார்கள். அவர்களும் தேடிப் பார்த்தனர். யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் பின்பு அருகிலிருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இருந்தாலும் மரியாதையுடன் வாழ வேண்டுமென்று விருப்பப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவும் எண்ணமுடையவர். அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்ய முடியவில்லை, வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது ஒரு வேலை செய்து, சம்பாதித்து, பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப்பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்குப் போய் வேண்டிக் கொண்டார்.

அப்படி காட்டுவழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிபட்டுக் கீழே கிடந்தது,அதைப் பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்தப் புறாவைத் தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்குக் கொண்டு சென்று தண்ணீரை எடுத்து, அந்தப் புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்தப் புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்து விட்டு வந்தார். அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை. அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டுவிட்டுப் போயிட்டாங்க, அதைத் தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்துக் கொடுத்து விட வேண்டும் என்று அந்த ஊருக்குள் விரைந்தார்.

அப்போது ஊருக்குள் சென்ற போது அங்கிருந்த சிலரிடம் விசாரித்தார். இந்தப்பணப்பை சோமனுடையது என்றும் அதைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து கொடுப்பவர்களுக்குப் பரிசு கொடுப்பதாக அறிவித்திருப்பதாகவும் சொன்னார்கள்.

பூபாலனும் அவர்கள் சொன்ன சோமன் வீட்டைத் தேடிப் பிடித்துச் சென்று தனக்குப் பணப்பை கிடைத்த விபரத்தைச் சொன்னார், சோமனும் மகிழ்ச்சியுடன் அந்த பணப்பையை வாங்கிக் கொண்டார், அந்த நேரம் அவருடைய மனதில் ஒரு கெட்ட எண்ணமும் உருவானது. நமக்குத்தான் பணப்பை கிடைத்து விட்டது, பணமும் சரியாக இருக்கிறது, இவனுக்குப் பரிசு கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

கெட்ட எண்ணம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து “நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை, அதை மரியாதையாகக் கொடுத்து விடு, நான் உன்னைச் சும்மா விடமாட்டேன்” என்று கத்தினார்.

பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் அந்தப் பணப்பையில் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே, இவரிடம் பரிசு வாங்குவதை விட இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார்.

சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார், பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியைச் சொன்ன அந்த ஊர்க்காரகளில் சிலர், சோமன் பணப்பை கொண்டு வந்தவருக்கு என்ன பரிசு கொடுக்கப் போகிறார் என்று அறியும் ஆவலுடன் மேலும் சிலரை அழைத்து வந்தனர். அங்கு பூபாலன் குற்றவாளி போல் நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சனையை மரியாதை ராமனிடம் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.

சோமன், பூபாலன், ஊர் மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும், பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள்.

ஏற்கனவே சோமன் அறிவித்த அறிவிப்பு பற்றி மரியாதை ராமனுக்குத் தெரியும், அந்த அறிவிப்பில் வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான். சோமன் பரிசு கொடுக்காமல் ஏமாற்ற நினைப்பதையும் தெரிந்து கொண்ட மரியாதை ராமன், சோமனுக்குச் சரியான தண்டனை கொடுக்க நினைத்து தனது தீர்ப்பைக் கூறினார்.

“சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போது பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது, ஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊர் வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன் கோயில் செலவுக்குக் கொடுத்து விட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக் கொள்ளலாம், ஆக பூபாலன் அந்தப் பணத்தை தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக் கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையைக் கண்டுபிடித்தவுடன் சோமனே பரிசு கொடுப்பார்”

மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும், சோமன் காணாமல் போன பணம் கிடைத்தும் பரிசு கொடுக்காமல் தான் ஏமாற்ற நினைத்ததற்கு சரியான தண்டனை கிடைத்தது என்று எண்ணிக் கொண்டு வருத்தத்துடன் பணப்பையை பூபாலனிடம் கொடுத்து விட்டு வீட்டுக்குட் சென்றான். பூபாலன் தனக்குக் கிடைத்த பணத்தில் 10 பங்குத் தொகையை அம்மன் கோயிலுக்குக் கொடுத்து விட்டு, மீதிப்பணத்தை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்தார்.


நன்றி தமிழ்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...?

Post by முஹைதீன் on Sat Jan 21, 2012 3:32 pm

தன் வினை தன்னை சுடும் என்பது இதுதானோ
நல்ல கதை

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 754

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...?

Post by ஜாஹீதாபானு on Sat Jan 21, 2012 3:36 pm

முஹைதீன் wrote:தன் வினை தன்னை சுடும் என்பது இதுதானோ
நல்ல கதை


நன்றி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...?

Post by சார்லஸ் mc on Sat Jan 21, 2012 3:39 pm

பேராசை பெரு நஷ்டம் - சோமனுக்கு.
உண்மையுள்ள மனுஷன் பாிபூரணமாக ஆசீா்வதிக்கப்படுவான் - ஏழை பூபாலன்.

மொத்தத்தில் கதை சூப்பரோ


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...?

Post by இளமாறன் on Sat Jan 21, 2012 3:41 pm

சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...?

Post by உமா on Sat Jan 21, 2012 3:57 pm

உண்மையிலே சூப்பர் கதை.
நல்லவர்களுக்கு எப்போதுமே நல்லது தான் நடக்கும்.
பேராசை கொண்டு பிறரை ஏமாற்ற நினைத்தால் அவருக்கும் ஏமாற்றமே மிஞ்சும்.....
ராமன் - சூப்பருங்க
பூபாலன் - அருமையிருக்கு
சோமன் - ஊத்திக்கிச்சு

கதை சூப்பருங்க



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...?

Post by ஜாஹீதாபானு on Sat Jan 21, 2012 4:31 pm

சார்லஸ் mc wrote:பேராசை பெரு நஷ்டம் - சோமனுக்கு.
உண்மையுள்ள மனுஷன் பாிபூரணமாக ஆசீா்வதிக்கப்படுவான் - ஏழை பூபாலன்.

மொத்தத்தில் கதை சூப்பரோ

நன்றி நன்றி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...?

Post by பிளேடு பக்கிரி on Sat Jan 21, 2012 6:04 pm

நல்ல கதை... மகிழ்ச்சி அதிகமா ஆசை இருந்தா இப்படி தான்




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 381

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...?

Post by ஜாஹீதாபானு on Sat Jan 21, 2012 6:09 pm

பிளேடு பக்கிரி wrote:நல்ல கதை... மகிழ்ச்சி அதிகமா ஆசை இருந்தா இப்படி தான்

நன்றி அன்பு மலர்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (21/01/12 பானு)வைர மோதிரத்தைக் காணோமே...?

Post by இரா.பகவதி on Sat Jan 21, 2012 6:56 pm

அருமையிருக்கு

இரா.பகவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 5278
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 582

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum