ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by Aathira Today at 7:53 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by முரளிராஜா Today at 7:53 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

தி.மு.க. 4 பெட்டிக் கடைகளாக... சிதறுண்டு போகும்! - குமுறுகிறார் பெரம்பூர் கந்தன்

View previous topic View next topic Go down

தி.மு.க. 4 பெட்டிக் கடைகளாக... சிதறுண்டு போகும்! - குமுறுகிறார் பெரம்பூர் கந்தன்

Post by பிரசன்னா on Thu Feb 02, 2012 12:50 pm

தி.மு.க. 4 பெட்டிக் கடைகளாக... சிதறுண்டு போகும்! - குமுறுகிறார் பெரம்பூர் கந்தன் (தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்)

தி.மு.க.வின் கொள்கைகளையும் லட்சியங்களையும் ஆழக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு "தம் குடும்பம் மட்டுமே கழகக் குடும்பம்' என்று கலைஞர் செயல்படுவதால் எதிர்காலத்தில் கட்சி நான்கு பெட்டிக் கடைகளாகச் சிதறுண்டு போகும்,' என்று எச்சரிக்கிறார் பெரம்பூர் கந்தன். இவர் கலைஞர் பாசறையின் அமைப்பாளர். தவிர, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர். தி.மு.க. பொதுக்குழு கூடும் சமயம் கந்தன் வீசுவது சாதாரண குண்டல்ல; கந்தக குண்டு....

"அண்ணா கழகக் குடும்பத்தை எப்படிப் பார்த்தார் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். 1962 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 50 இடங்களில் கழகம் வென்றது. அதே சமயம் தில்லியில் மக்களவைக்கு எட்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தமிழகத்தில் சட்டமன்றக் கட்சிக்கு நெடுஞ்செழியனும், பாராளுமன்ற கட்சிக்கு இரா. செழியனும் தலைவர்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற பேச்சு இருந்தது. அண்ணா, நெடுஞ்செழியன் மற்றும் செழியனைக் கூப்பிட்டார். "சகோதரர்களான நீங்கள் இருவரும் இந்த இரு அமைப்புகளிலும் தலைவர்களாக இருப்பது என்பது, கழகம் ஒரே குடும்பத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவது போலத் தோற்றம் கொடுக்கும். எனவே உங்களில் ஒருவருக்குத்தான் வாய்ப்புக் கொடுக்க முடியும். அது யார் என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்,' என்று சொல்லிவிட்டார். கடைசியில் செழியன் பாராளுமன்றக் கட்சித் தலைவராகப் போடப்படாமல் நாஞ்சில் மனோகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது தான் அண்ணா கழகக் குடும்பத்தை நடத்திய முறை.

ஆனால் இப்போது என்ன நடக்கிறது? மகன் துணை முதல்வர். அவரைவிடத் தகுதியானவர்கள் கழகக் குடும்பத்தில் இல்லையா? மற்றொரு மகன் மத்திய அமைச்சர். மகள் தில்லி மேலவை உறுப்பினர். பேரன் மத்திய அமைச்சராக இருந்தவர். இப்போது கலைஞரின் சிந்தனைகள் கழகத்தின் எதிர்காலம் குறித்து இல்லை. எந்தெந்தப் பதவிகளை யார், யாருக்குப் பங்கு போட்டுக் கொடுத்தால் குடும்பத்தில் பிரச்னை வராது என்பதே அவரது 24 மணி நேர யோசனையாக இருக்கிறது. எந்த வகையில் கழகச் சட்ட திட்டங்களைத் திருத்தினால், வாரிசுகளின் வாரிசுகளுக்குப் பதவிகள் கிடைக்கும் என்று ஆராய்கிறார்கள். இந்த நிலை உருவாவதற்கு, பேராசிரியர் அன்பழகனும் ஒரு காரணமாகிப் போனார். மூத்த தலைவர் என்ற முறையில் நடக்கின்ற தவறுகளைச் சுட்டிக் காட்டாமல், தமக்கு இரண்டாவது இடம் சாஸ்வதமாக இருந்தால் சரி என்று சுயநலத்துடன் செயல்பட்ட பேராசிரியர், இந்த இயக்கம் இப்படித் தறிகெட்டுப் போவதற்குக் காரணமாக அமைந்தவர்களில் ஒருவராகி விட்டார். இந்த வகையில் வரலாறு அவரது நிலைப்பாட்டை விமர்சனப் பார்வையோடுதான் அணுகும்.

மொழி, இனம், பொருளாதாரம், சாதி பேதமற்ற சமதர்ம சமுதாயம் ஆகியவை குறித்து மிகத் தெளிவாகச் சொல்லப்பட்ட கொள்கைகள் கலைஞர் காலத்தில் நீத்துப் போய்விட்டன. உயர்மட்டத்திலேயே சுயநலம் குடிகொண்டதால், கட்சியிலிருக்கும் இளைய தலைமுறையும், பதவி, பணம் என்று அலைபாய்கிறது. யாருக்கும் கொள்கைத் தெளிவு இல்லை. ஒரு உதாரணம். ஜனவரி 25ம் தேதி என்பது தமிழுக்காக உயிர்விட்ட தியாகிகளின் நினைவைப் போற்றுகின்ற தினம். ஆனால் இதையே ஒரு கொண்டாட்டமாக சித்திரிக்கிறார்கள். பேச வரும் தலைவருக்கும் எப்படி வரவேற்பு கொடுப்பது என்று கூட்டம் போட்டு யோசிக்கிறார்கள். இதன் மூலம் சிலரது பிழைப்பு ஓடுகிறது. இன்று இயக்கத்தில் வியாபாரிகள் அதிகமாகி விட்டார்கள். பிரைவேட் லிமிடெட் கம்பெனி போல் ஆகிவிட்டது கட்சி.

கழகத்துக்கு உண்மையாகப் பாடுபட்டவர்களுக்கு மதிப்பில்லை. 1991-1996ல் சட்டமன்றத்தில் ஒற்றை உறுப்பினராக இருந்து கட்சியின் கௌரவத்தைக் காப்பாற்றி, ஜனநாயகத்துக்குப் போராடிய பரிதி இளம்வழுதி, சிலரது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப, கருவேப்பிலையாக ஓரம் கட்டப்படுகிறார். "அண்ணா வழியில் அயராது உழைப்போம்' என்ற கோஷத்தை வெற்று கோஷமாக்கிவிட்டு, அயராது உழைத்த கலைஞரின் குடும்பம் இன்று இந்தியாவின் முன்னணி செல்வந்தர்களில் ஒன்றாகிவிட்டது. கட்சிப் பத்திரிகையான முரசொலி, தொண்டர்கள் உழைத்துக் கொடுத்த பணத்தில் வளர்ந்தது. ஆனால் அதன் நிர்வாகம் கலைஞர் குடும்பத்தின் கையில். அண்ணா அவர்கள் கழக ஏடான "நம் நாடு' பத்திரிகையை, கழக நிர்வாகிகளிடம் அல்லவா ஒப்படைத்திருந்தார்?

இப்போது சொன்னவற்றைவிட மிகப் பெரிய கொடுமை 2009ல் முள்ளிவாய்க்காலில், கொத்துக் கொத்தாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்டபோது மத்திய அரசில் பதவிதான் முக்கியம் என்று நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தமிழினத்துக்கே துரோகம் செய்தாரே... இதை மன்னிக்கவே முடியாது. "இன துரோகி' பட்டத்துக்குப் பொருத்தமானவர் கலைஞரே. இந்த உச்சபட்ச துரோகம்தான் எனக்குத் தீராத மனக்கொதிப்பை ஏற்படுத்திவிட்டது. இனியும் என்னால் கழகத்தில் நீடிக்க முடியாது. எனவே நான் என்னை அதிலிருந்து விடுவித்துக் கொள்கிறேன். தி.மு.க.வின் "கொள்கை' ஊழல் புகாரில் மாட்டிக் கொண்டு ஒரு வருடமாக திகாரில் இருக்கிறது. எனவே வெட்கப்பட்டு வேதனைப்பட்டு என்னை விடுவித்துக் கொள்கிறேன். ஊழல் புகாரில் ஜெயிலில் இருந்தவருக்கு, பட்டுக் கம்பள வரவேற்பு! ஊழலுக்கு தாலாட்டுப் பாடும் கட்சியில் எப்படி இருக்க முடியும்?' என்று கேட்கிறார் கந்தன். "இவர் வீசும் ஏவுகணைகளால் பொதுக்குழுவில் சலசலப்பு ஏற்படும்' என்கிறார்கள் சில மூத்த பிரமுகர்கள். பொதுக்குழுவில் இதைவிட இன்னும் பூதாகாரமான வெடிகள் வெடித்தாலும் ஆச்சரியமில்லை.

- ப்ரியன்

தகவல் பகிர்வு - தினமலர் » கல்கி செய்தி

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: தி.மு.க. 4 பெட்டிக் கடைகளாக... சிதறுண்டு போகும்! - குமுறுகிறார் பெரம்பூர் கந்தன்

Post by சார்லஸ் mc on Thu Feb 02, 2012 12:52 pm

இவரு யாருப்பா திடீா் காமெடி பீசு...


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: தி.மு.க. 4 பெட்டிக் கடைகளாக... சிதறுண்டு போகும்! - குமுறுகிறார் பெரம்பூர் கந்தன்

Post by இளமாறன் on Thu Feb 02, 2012 12:53 pm

சார்லஸ் mc wrote:இவரு யாருப்பா திடீா் காமெடி பீசு...


சியர்ஸ் இவருக்கும் oru பதவி கொடுங்கப்பா


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum