ஈகரை தேடுபொறி
Latest topics
» 17000 பதிவுகள் கடந்த ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....
by ராஜு சரவணன் Today at 10:25 pm

» Font Twist அழக்கான எழுத்துடன் அலங்கார வடிவமைப்பு
by kirikasan Today at 10:22 pm

» ஈகரை முகநூல் பக்கம் Like Page-ஆக மாற்றப்பட்டுள்ளது!
by krishnaamma Today at 10:10 pm

» யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா?
by யினியவன் Today at 10:04 pm

» ஈகரையில் இணைவதில் பெருமகிழ்ச்சி!
by யினியவன் Today at 9:57 pm

» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by positivekarthick Today at 8:37 pm

» உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?
by positivekarthick Today at 8:34 pm

» புகை (கவிதை)
by pon.sellamuththu Today at 8:19 pm

» குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!
by ராஜு சரவணன் Today at 7:39 pm

» நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
by ராஜு சரவணன் Today at 7:35 pm

» மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம்
by Powenraj Today at 6:59 pm

» மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....
by பார்த்திபன் Today at 6:53 pm

» வடகிழக்கு மாநில மாணவர்கள் கட்டாய ஹிந்தி/ இந்திய மொழிகள் திணிப்புக்கு எதிராக போராட்டம்
by ராஜு சரவணன் Today at 6:33 pm

» பள்ளி மாணவர்களை அச்சமூட்டும் தேர்வு பூதம்... தீர்வுதான் என்ன?
by Powenraj Today at 5:29 pm

» கடலில் கொட்டிக் கிடக்கும் யுரேனியம்: விஞ்ஞானிகள் வெற்றி
by பூவன் Today at 5:28 pm

» கல்விக்கு முக்கியம் எது ?
by Powenraj Today at 5:11 pm

» TN TET Exam-2013 - ஆசிரியர் தகுதி தேர்வு 2013 அறிவிப்பு
by Powenraj Today at 4:59 pm

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -8)
by உமா Today at 4:47 pm

» இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?
by balakarthik Today at 4:12 pm

» எப்பொழுதும் (Always- Pablo Neruda)
by maniajith007 Today at 4:06 pm

» கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?
by maniajith007 Today at 3:47 pm

» சிக்கன் பூனா
by பூவன் Today at 3:36 pm

» ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி
by பாலாஜி Today at 3:35 pm

» ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய 9 அழகு இரகசியங்கள்!!!
by MADHUMITHA Today at 3:28 pm

» இந்திய தேசியக் கொடி-வரலாறு...!
by positivekarthick Today at 3:20 pm

» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by positivekarthick Today at 2:59 pm

» இது வேண்டாம்..அது...
by சிவா Today at 2:48 pm

» ஹிஜாப் அணிவதற்கான ஆறு வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
by imz Today at 2:36 pm

» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by positivekarthick Today at 2:34 pm

» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by அருண் Today at 2:26 pm

» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by krishnaamma Today at 2:14 pm

» எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!
by தளிர் அலை Today at 1:47 pm

» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Today at 1:44 pm

» டாக்டர், பஸ்ல ஏறி உட்கார்ந்த உடனேயே தூக்கம் வந்துடுது..!
by Muthumohamed Today at 1:33 pm

» இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?
by Muthumohamed Today at 1:31 pm

» விண்டோஸ் புளு
by Muthumohamed Today at 1:25 pm

» துன்பக்கேணி
by Muthumohamed Today at 1:23 pm

» A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
by பாலாஜி Today at 1:22 pm

» ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!
by Muthumohamed Today at 1:20 pm

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by Muthumohamed Today at 1:19 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

























"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு 5 5 9

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by கே. பாலா on Sat May 19, 2012 2:10 pm

First topic message reminder :

ராஜ் சிவா !

ஈகரை அன்பர்களுக்கு நன்கு தெரிந்த பெயர் ,,,,

2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' என்ற சுவாரசியமான கட்டுரையின் ஆசிரியர் .
அவர் வேறொரு கட்டுரை தொடரை உயிரோசையில் ஆரம்பித்துள்ளார் அதுதான்

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன"

இந்த கட்டுரை பற்றிய அறிமுகத்தில் ராஜ் சிவா இப்படி குறிப்பிடுகிறார்

நான் எழுதப் போகும் அனைத்தும் உங்களால் நம்ப முடியாதவையாகவே இருக்கும். ஆனால் ஒரு நேரத்தில் நம்ப வேண்டிய கட்டாயங்கள் உங்களுக்கு வந்தே தீரும். இவற்றை நீங்கள் நம்ப வேண்டும், நம்பாமல் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் தாண்டி, இப்படியெல்லாம் உலகில் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியப்படுத்துவதே என் முதல் நோக்கமாக இருக்கிறது.

அப்படி என்ன தான் சொல்லபோகிறார் ராஜ் சிவா!

உங்களோடு அறிய நானும் ஆவல்கொண்டிருக்கிறேன் ..படிப்பதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்

இதோ முதல் பகுதி .......

நன்றி :உயிரோசை




Last edited by கே. பாலா on Fri Aug 24, 2012 2:03 pm; edited 18 times in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள்: 5491
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1740

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


Re: "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by நேரு on Wed Jun 13, 2012 12:50 pm

சூப்பருங்க மகிழ்ச்சி

நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 292
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 93

View user profile

Back to top Go down

Re: "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by sshanthi on Wed Jun 13, 2012 2:58 pm

அருமையான மறம் ஆச்சரியமூட்டும் தகவல்கள்

sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 632
சேர்ந்தது: 10/11/2010
மதிப்பீடு: 121

View user profile

Back to top Go down

Re: "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by ரா.ரமேஷ்குமார் on Wed Jun 13, 2012 9:24 pm

கே. பாலா wrote:
இந்தச் செய்தி அனுப்பும் போதே, இதற்குப் பதில் கிடைக்க வேண்டுமென்றால் 25 வருடங்களுக்கு அதிகமான காலம் தேவை என்று கார்ல் சேகன் கணித்தே வைத்திருந்தார். அவர் கணித்தது போலவே 27 வருடங்களுக்குப் பின்னர் ஷில்போல்டனில் அந்தப் பயிர் வட்டங்கள் உருவாயின.

நமது பூமியில் இருந்து தகவல் அவர்களை சென்றடைய 27 வருடங்கள் ஆனது ஆனால் அவர்களிடம் இருந்து மறுமொழிகள் 2 வருடங்களுக்கு உள்ளாகவே நம்மை வந்தடைந்திருக்கிறது எனில் அவர்கள் நம்மை விட எந்த அளவிற்கு தொழில்நுடபத்தில் முன்னோடியாக உள்ளனர்... அதிர்ச்சி
தொடருங்கள் அண்ணா ஆவலுடன் உள்ளோம் அதிசய தகவல்களை அறிந்து கொள்ள...

ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 3520
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 678

View user profile

Back to top Go down

Re: "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by ரா.ரமேஷ்குமார் on Thu Jun 14, 2012 6:36 pm

கே. பாலா wrote:இல்லை ரமேஷ் ! அவர் கணித்தது போலவே 27 ஆண்டுகளுக்கு பிறகே செய்தி வந்துள்ளது செய்தி அனுப்பப்பட்ட ஆண்டு 1974 புன்னகை

அனுப்பப்பட்ட இடம் நமக்கு மிக அண்மையிலுள்ள M13 நட்சத்திரக் கூட்டங்களை
நோக்கி. M13, நமக்கு மிக அண்மையில் உள்ளது என்று நான் சொன்னாலும்,
உண்மையில் அது இருபத்திதைந்து ஒளி வருடங்களுக்கு அப்பால் இருக்கிறது. நாம்
ஒளியின் வேகத்தில் (300000 கிமீ/செக்கன்) சென்றால், அந்த நட்சத்திரக்
கூட்டத்தை அடைய 25 வருடங்கள் நமக்குத் தேவை. அவ்வ்வ்வ்வ்வ்வளவு தொலைவு.
அதாவது நாம் அனுப்பிய செய்தி அங்கு சென்றடையக் குறைந்தபட்சம் 25 வருடங்கள்
தேவை.
 

அண்ணா அங்கு நாம் அனுப்பிய செய்தி சென்றடைய 25 வருடங்கள் ஆவது ஆகும் என கொடுக்கப்பட்டு இருக்கிறது
ஆனால் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நமக்கு அவர்கள் மறுமொழியை கொடுத்து இருக்கிறார்கள் அவர் எதிர்பார்த்தது போலவே...அப்படியென்றால் அவர்களின் தொலைதொடர்பு வேகமும் விஞ்ஞான வளர்ச்சியும் நம்மை விட அபரிவிதமானதாக தானே அண்ணா இருக்கும்...

ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 3520
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 678

View user profile

Back to top Go down

Re: "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by விநாயகாசெந்தில் on Thu Jun 14, 2012 6:59 pm

ஆச்சரியமூட்டும் தகவல்கள் ஒரே திகிலா இருக்கு ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள்: 1165
சேர்ந்தது: 09/05/2012
மதிப்பீடு: 379

View user profile

Back to top Go down

Re: "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by கே. பாலா on Sun Jun 17, 2012 12:18 pm

sshanthi wrote:அருமையான மறம் ஆச்சரியமூட்டும் தகவல்கள்
நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள்: 5491
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1740

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by கே. பாலா on Mon Jun 25, 2012 2:34 pm


"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" =part 6


ஸ்டோன்ஹெஞ்ச் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், இந்த வாரம் எனக்கு வந்த சில மின்னஞ்சல்கள் பற்றி நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். குறிப்பாகச் சிலர் ஒரே மாதிரியான சந்தேகத்தை மின்னஞ்சல் மூலம் கேட்டிருந்தனர். அந்தச் சந்தேகம் உங்களுக்கும் வந்திருக்கலாம். "கார்ல் சேகன் ஏலியன்களுகாக அனுப்பிய செய்தி, M13 நட்சத்திரக் கூட்டத்தைச் சென்றடைய 25 வருடங்கள் எடுக்கும் என்று சொன்னீர்கள். ஆனால் அவர்களிடமிருந்து பதில் எப்படி ஒரு வருடத்திலேயே, பயிர் வட்டமாக கிடைத்திருக்க முடியும்? அந்தச் செய்தி பூமியை நோக்கி வருவதற்கும் 25 வருடங்கள் தேவையல்லவா." இதுதான் அவர்களின் சந்தேகம். உண்மையில் மிகவும் புத்திசாலித்தனமான கேள்வி இது. தொடரில் சொல்லப்பட்ட ஷில்போல்டன் பயிர் வட்டம், M13 நட்டசத்திரக் கூட்டத்தை நோக்கி கார்ல் சேகன் அனுப்பிய செய்திக்கான பதிலாக இருக்கலாம் என்று சொல்லியிருந்தேன். அத்துடன் அந்த நட்சத்திரக் கூட்டம் 25 ஒளி வருடங்களுக்கு அப்பால் இருக்கிறது என்றும் சொல்லியிருந்தேன். கார்ல் சேகன் அனுப்பிய செய்தி அங்கு சென்றடைய குறைந்தபட்சம் 25 வருடங்கள் தேவை. அதே போல அங்கிருந்து பூமிக்கு செய்தி வருவதற்கும் 25 வருடங்கள் தேவை அல்லவா. மொத்தமாக 50 வருடங்கள் தேவையாகும்போது, 26 வருடங்களிலேயே பதில் எப்படி வந்திருக்க முடியும் என்ற கேள்வி நியாயமானதுதான். இது ஒன்றே ஷில்போல்டன் பயிர் வட்டம் ஏலியன்களால் செய்யப்படவில்லை, மனிதர்களால்தான் செய்யப்பட்டது என்பதற்கு சான்றாகவும் அமைந்துவிடும்.

இந்த நியாயமான சந்தேகத்துக்குப் பதிலை நான் இப்பொழுது சொல்லியே ஆகவேண்டும். கடந்த பதிவுகளில் கார்ல் சேகன் எழுதிய காண்டாக்ட் என்னும் புத்தகம், எந்த மாற்றமும் இல்லாமல், ‘காண்டாக்ட்’ (Contact) என்ற பெயரிலேயே படமாக எடுக்கப்பட்டதைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அந்தப் படத்தை முடிந்தால் பாருங்கள் என்றும் சொல்லியிருந்தேன். நிச்சயம் அந்தப் படத்தை உங்களில் பலர் பார்த்திருக்க மாட்டீர்கள். அந்தப் படத்தில் கார்ல் சேகன், மேலே சொல்லப்பட்ட சந்தேகத்துக்குப் பதிலும் சொல்லியிருக்கிறார். விளக்கமாக அந்தப் பதில் சொல்லப்படா விட்டாலும், அறிவியலில் சிறிது ஆர்வம் இருந்தால் அது புரியும் வகையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதை உங்களுக்குப் புரியும் படி விளக்கமாகச் சொல்வதற்கு நான் முயற்சிக்கிறேன். 

‘ காண்டாக்ட்’ படத்தின் கதையை மிகவும் சுருக்கமாக முதலில் நாம் பார்க்கலாம். படத்தில் நாயகியான ஜோடி ஃபோஸ்டர், சிறிய வயதிலிருந்தே வானியல் ஆராய்ச்சியில் நாட்டமுள்ளவள். சிறிய வயதில் தந்தை இறக்க, வானியல் ஆராய்ச்சியாளராகவே தன் படிப்பை முடித்து, போட்டோரிகாவில் உள்ள 'ஆரசிபோ' வானியல் ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிகிறாள் (நிஜத்திலும் இந்த ஆரசிபோ டெலஸ்கோப் மூலமாகத்தான் கார்ல் சேகன் ஏலியன்களுக்கு செய்தி அனுப்பினார் என்பதை முன்னர் சொல்லியிருக்கிறேன்). அங்கு அவள் பிரபஞ்சத்தில் அதியுயர் அறிவைக் கொண்ட உயிரினங்கள் எங்கேயாவது வாழ்கின்றனவா என்று ஆராய்ந்து வருகிறாள். திடீரென வேகா(Vega) என்னும் 26 ஒளிவருடங்களுக்கு அப்பால் இருக்கும் நட்சத்திரம் ஒன்றிலிருந்து பூமியை நோக்கிச் செய்திகள் வருவதை அவதானிக்கிறாள். வந்த செய்திகள் முப்பரிமாணப் படங்களாக வருகிறது. செய்திகளை ஆராய்ந்து பார்த்ததில், வேகாவில் இருப்பவர்களுடன் எப்படித் தொடர்பு கொள்வது என்ற குறிப்புகளும் இருக்கின்றன. மிக வேகமாக சுற்றிக் கொண்டிருக்கும் மூன்று வளையங்களின் நடுவே, ஒரு மனிதன் இருக்கக் கூடிய, பந்து போன்ற அமைப்பு உள்ள ஒரு கருவியின் மூலம் அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்று அந்தச் செய்தியில் காணப்படுகிறது. அந்த செய்திகளில் இருந்தபடி, பாரிய கருவி ஒன்றை உருவாக்குகின்றனர். 

அந்தக் கருவியின் நடுவே உள்ள பந்து போன்ற அமைப்பினுள்ளே, பலவித வீடியோக் கருவிகளைத் தன் உடம்பில் பொருத்தியபடி, வேகா நட்சத்திரத்துக்கான பயணத்துக்கு ஜோடி ஃபோஸ்டர் ஆயத்தமாகிறாள். பிரயாணம் ஆரம்பமாகப் போகும் கடைசித் தருணங்களான கவுண்ட் டவுன் (Countdown) ஆரம்பமாகிறது. 10, 9, 8...... என்று வரும்போதே ஜோடி ஃபோஸ்டர் பலவிதமான வெளிச்சங்களைக் காண்கிறாள். அத்துடன் அவளுக்கும் பூமிக்கும் உண்டான தொடர்பில் தெளிவில்லாமலும் போகிறது. கவுண்ட் டவுனின் பூச்சியத்தில் பிரயாணம் ஆரம்பமாகிறது. இந்த நேரத்தில் படத்தில் இரண்டு விதமாகக் காட்சிகள் அமைகின்றன. அந்தப் பந்தினுள் அமர்ந்திருக்கும் ஜோடி ஃபோஸ்டருக்கு என்ன நடக்கிறது என்ற அவளது பார்வையிலானது. மற்றது, வெளியே இருந்து அந்தப் பயணத்தை அவதானிக்கும் அமெரிக்க அரசு சார்ந்தவர்கள் பார்வையிலானது.

கவுண்ட் டவுன் ஆரம்பமாகியதும் ஜோடி ஃபோஸ்டர், தான் அமர்ந்திருக்கும் பந்தினுள்ளே, முழுவதும் வித்தியாசமான ஒளிகளைக் காண்கிறாள். அப்புறம் பிரயாணம் ஆரம்பமாகியதும், குழாய் போன்ற அமைப்புகளுக்கூடாகச் செல்கிறாள். ஒன்று மாறி ஒன்றாகப் பல குழாய்கள் போன்றவை தோன்ற, அவை வழியாகச் செல்கிறாள். இறுதியில், வேகாவை அடைகிறாள். அங்கு என்ன செய்கிறாள், யாருடன் பேசுகிறாள் என்பது பற்றியெல்லாம் இங்கு நான் சொல்லப் போனால் கதை விரிவடைந்துவிடும். வேகாவுக்குச் சென்றவள் பின்னர் மீண்டும் பூமிக்குத் திரும்புகிறாள். அவளைப் பொறுத்தவரை பயணத்தின் மொத்த நேரம் 18 மணித்தியாலங்கள். ஆனால் பூமியில் அவளின் பயணத்தை அவதானித்துக் கொண்டிருந்தவர்கள் காண்பதோ வேறு காட்சிகள். அவர்களின் பார்வையில், கவுண்ட் டவுன் ஆரம்பமாகி ஸ்டார்ட் பட்டன் அழுத்தப்பட்ட அடுத்த கணம் வேகமாக சுற்றும் கருவியில், தப்புகள் நடந்து பலத்த வெடி விபத்து ஏற்படுகிறது. ஜோடி ஃபோஸ்டர் அமர்ந்திருந்த பந்து அப்படியே கடலினுள் தூக்கியெறியப் படுகிறது. அதாவது பிரயாணம் என்ற ஒன்று நடக்காமலே சில செக்கன்களிலேயே எல்லாம் வெடித்துச் சிதறுகின்றன. உடனே ஜோடி ஃபோஸ்டர் அந்தப் பந்திலிருந்து காப்பாற்றப்படுகிறாள்.

பூமியில் இருந்தவர்களைப் பொறுத்தவரை சில செக்கன்களில், தோல்வியில் முடிந்த அந்தப் பிரயாணம், ஜோடி ஃபோஸ்டரைப் பொறுத்த வரை 18 மணி நேரப் பயணமாகவும், வெற்றிகரமான ஒரு பயணமாகவும் அமைகிறது. அமெரிக்கக் காங்கிரஸ் கமிட்டியின் விசாரணையின் போது, தான் கண்ட காட்சிகளை ஜோடி ஃபோஸ்டர் சொன்னாலும், அதை யாரும் நம்பவில்லை. அவளுடன் இணைக்கப்பட்ட வீடியோ சாதனங்களும், எந்தக் காட்சிகளும் பதிவு செய்யப்படாமல் வெறுமையாகவே இருக்கின்றன. சில செக்கன்களில் நடந்த ஒரு தோல்விப் பயணத்தை, 18 மணி நேரங்கள் நடந்த ஒரு வெற்றிப் பயணமாகச் சென்று வந்தது என்று அவள் சொல்வதற்கான ஒரு சாட்சியத்தையாவது கொடுக்கும்படி கமிட்டி கேட்கிறது. அத்துடன் 25 ஒளி வருடங்கள் தூரத்துக்கு, 18 மணி நேரத்தில் எப்படிப் போய் வரலாம் என்பதையும் விளக்கும்படி கேட்கிறது. அப்போது ஜோடி ஃபோஸ்டர் சொல்லும் விளக்கம்தான் இந்தப் பகுதியின் ஆரம்பத்தில், சிலர் மின்னஞ்சலில் கேட்ட சந்தேகத்துக்கான பதில்களாக இருக்கப் போகிறது. சொல்லப் போனால் ‘காண்டாக்ட்’ படத்தின் மொத்தக் கருவுமே கடைசியில் கொடுக்கப்படும் இந்த விளக்கத்தில்தான் தங்கியிருக்கிறது.

இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். மிகவும் கடினமாகப் புரிந்து கொள்ளக் கூடியதும், புரிய வைக்கக் கூடியதுமான ஒரு விசயத்தை உங்களுடன் பரிமாறிக் கொண்டிருக்கிறேன். நான் சொல்பவை உங்களுக்குப் புரியுமானால், அது நிச்சயம் எனக்கு ஒரு மகிழ்வான தருணமாக இருக்கும். இனி விசயத்துக்கு வருவோம்.

ஜோடி ஃபோஸ்டர் காங்கிரஸ் கமிட்டியிடம் சொல்லும் விளக்கம் இதுதான். "பூமியில் மனிதர்கள் உணர்ந்த நேரம்தான் அந்த சில செக்கன்கள். ஆனால் ஸ்பேஸ் (Space) என்னும் பிரபஞ்ச வெளியில் பிரயாணம் செய்யும் நேரம் என்பது வேறு. ஐன்ஸ்டைனும், ரோசன்பேர்க்கும் சொன்ன 'பாலம்' (Bridge) கோட்பாட்டின்படி, ஒரு வோர்ம் ஹோல் (Wormhole) உருவாகி, அதன் மூலம் நான் மிகக் குறைந்த நேரத்தில் வேகாவுக்கு சென்று வந்திருக்கலாம்" என்று யூடி ஃபோஸ்டர் சொல்கிறாள். 'அது கோட்பாடுதானேயொழிய இன்னும் நிரூபிக்கப்படாதவை' என்று சொல்லி அதை ஏற்க மறுக்கின்றார்கள் கமிட்டியினர். இந்த இடத்தில் நாம் படத்தில் இருந்து விலகி, 'ஐன்ஸ்டைன்-ரோசன்பேர்க் பாலம்' (Enstein-Resenberg Bridge) என்னும் கோட்பாடு பற்றிப் பார்க்கலாம்.



ஐன்ஸ்டைனை யாரென்று உங்களுக்கு நான் புரிய வைக்கத் தேவையில்லை. இன்றுவரை உலகத்தில் முதலாவது விஞ்ஞானியாக கருதப்படுபவர். பிரபஞ்சம் பற்றிய பல கோட்பாடுகளை உருவாக்கியவர். ஐன்ஸ்டைன் பிரபஞ்சத்தில் மூன்று துளைகள் (Holes) இருக்கின்றன என்று சொல்லியிருக்கிறார். ப்ளாக் ஹோல் (Black hole), வைட் ஹோல் (White hole), வோர்ம் ஹோல் (Wormhole) என்பவைதான் அந்த மூன்றும். ப்ளாக் ஹோல் பற்றி அனேகமாக நீங்கள் கேள்விப்பட்டிருந்தாலும், வைட் ஹோல், வோர்ம் ஹோல் என்பவை பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இந்த மூன்று துளைகளும் பிரபஞ்சம் எங்கும் இருப்பதாக ஐன்ஸ்டைன் சொன்னாலும், அவற்றைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு மனித விஞ்ஞானம் இன்னும் வளரவில்லை. இவை இருக்கின்றன என்று ஐன்ஸ்டைன் ஒரு நம்பிக்கையின் அடிப்படையிலோ, எழுந்தமானத்திலோ கூறிவிடவில்லை. மிகவும் சிக்கலான, நுணுக்கமான வானவியல் கணிதச் சமன்பாட்டின் மூலம் அவற்றை நிறுவியிருக்கிறார். இதுவரை இவை இல்லையென்று எந்த ஒரு விஞ்ஞானியும் மறுக்கவில்லை. அதுதவிர, இவற்றைக் கண்டு பிடிப்பதே தற்கால விஞ்ஞானிகளின் நோக்கமாகவும் இருக்கிறது. 

இப்போது நாம் பார்க்கப் போவது வோர்ம் ஹோலைப் பற்றித்தான். ஒரு புழுவைப் போல அமைப்பில் விண்வெளியில் உருவாகும் ஒரு குழாய் போன்ற வடிவத்தைத்தான் வேர்ம் ஹோல் என்பார்கள். விண்வெளியில் ஒரு இடத்திலிருந்து இன்னுமொரு இடத்துக்குப் பிரயாணம் செய்வதற்கு, நேராக அந்த இடத்தை நோக்கி விண்கலத்தில் செல்வதை விட, வோர்ம் ஹோல் மூலமாகப் செல்வது இலகுவானதும், காலத்தை மிச்சம் பிடிப்பதுமாகும் என்கிறார் ஐன்ஸ்டைன். நமது பிரபஞ்சம் (Universum) தட்டையானது என்றே முன்னர் விஞ்ஞானிகள் நினைத்திருந்தனர். ஆனால் அது வளைந்த நிலையில் இருக்கிறது என்ற உண்மை பின்னர்தான் தெரிய வந்தது. இந்த நிலையில் ஐன்ஸ்டைனும், அவரது நண்பருமான ரோசன்பேர்க் என்பவரும் சேர்ந்து ஒரு மாபெரும் புரட்சிகரமான வானியல் விஞ்ஞானக் கோட்பாட்டை வெளியிட்டனர். அதுவே 'ஐன்ஸ்டைன்-ரோசன்பேர்க் பாலம்' எனப்படுகிறது. முதலில் இந்தப் படத்தைப் பாருங்கள். இது வோர்ம் ஹோலினால் உருவாகும் பாலம் கோட்பாட்டுக்கு மிக நல்ல உதாரணமாக இருக்கும். 




படத்தில் நமது பூமிக்கும் 'சிர்ரியஸ்' என்னும் நட்சத்திரத்துக்கும் உள்ள இடைவெளி 90 ட்ரில்லியன் கிலோமீட்டர் என்று காட்டப்பட்டிருக்கிறது. பிரபஞ்சம் வளைந்த நிலையில் உள்ளதால், வோர்ம் ஹோல் மூலமாக சிர்ரியஸ் நட்சத்திரத்துக்குச் செல்லலாம் என்றும் காட்டப்பட்டிருக்கிறது. வோர்ம் ஹோலினூடாக பிரயாணம் செல்லும்போது, காலம் மிகவும் சுருங்கிவிடும் என்பதால், அந்தப் பிரயாணமும் மிகக் குறுகிய நேரத்திலேயே நடக்கிறது. 

இப்படியான ஒரு வோர்ம் ஹோல் மூலமாகத்தான் ‘காண்டாக்ட்’ படத்தின் நாயகி ஜோடி ஃபோஸ்ட்டரும் வேகா நட்சத்திரத்தை அடைகிறாள். ஆனால் அவள் சொல்வதை அமெரிக்கக் காங்கிரஸ் கமிட்டி நம்பவில்லை. ஆனால் படத்தின் இறுதியில் ஒரு முக்கிய சம்பவத்துடன் படம் முடிவடைகிறது. சில செக்கன்களில் நடந்ததை 18 மணி நேரம் நடந்த பிரயாணம் என்று ஜோடி ஃபோஸ்டர் சொன்னதற்குக் காரணம் கேட்கிறது கமிட்டி. அவள் உடம்பில் பொருத்தப்பட்ட வீடியோவில் கூடக் காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை. ஆனால் அந்த வீடியோவை இரகசியமாக ஆராய்ந்த போது, அதில் எந்தக் காட்சியும் இல்லாவிட்டாலும், ரெக்கார்ட் செய்யப்பட்ட நேரம் மொத்தமாக 18 மணி நேரம் ஆகியிருக்கிறது. 18 மணி நேரம் பதிவு செய்யப்பட்டிருக்குமானால், அவள் பிரயாணம் செய்ததும் 18 மணி நேரமாகத்தான் இருக்கும் என்பது  நிரூபனமாகிறதல்லவா? ஆனால் அந்த வீடியோ ஆதாரத்தை அப்படியே யாருகும் தெரியாமல் மறைக்கிறது அமெரிக்க அரசு. ‘ஜோடி’ ஃபோஸ்டருக்குக் கூட அது சொல்லப்படுவதில்லை. "அந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?" என்று சொல்லப்படுவதில்லை.  




நமது பூமிக்கு வரும் ஏலியன்கள் கூட இதே போன்று வோர்ம் ஹோலை உபயோகித்து வந்திருக்கலாம் என்றே பலர் நம்புகின்றனர். ஷில்போல்டனுக்குரிய செய்தி கூட இந்த வகையிலேயே வந்திருக்கலாம் எனவும் சொல்கிறார்கள். பயிர் வட்டங்கள் உருவாவதற்கு காரணமாகச் சொல்லப்படும் ஒளிப் பந்துகள் கூட, வோர்ம் ஹோல்கள்தானோ என்று சந்தேகப்படுபவர்களும் உண்டு. "என்னடா இந்த ஆள் ஏலியன் இருக்கு என்றே சொல்லிவிடுவார் போல இருக்கே!" என்று நீங்கள் நினைக்கலாம். நான் சொல்வது ஒருபுறம் இருக்க, காண்டாக்ட் படத்தில் ஜோடி ஃபோஸ்டருக்கு செய்தி கிடைத்தது போல, நிஜமாகவே பூமிக்கு விண்வெளியில் இருந்து ஒரு சிக்னல் கிடைத்தது. அதுவும் வெகு தொலைவில் இருந்த நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து ரேடியோ சிக்னலாக வந்தது. நம்பவே முடியாத அதிசயம் அது. 



1977ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி ஜெர்ரி ஏமான் (Jerry Ehman) என்னும் வானியல் விஞ்ஞானி, விண்வெளியை ஆராய்ந்து கொண்டிருந்தபோது, செறிவான ரேடியோ சிக்னல் ஒன்று வருவதை அவதானித்தார். அதைப் பதிவும் செய்தார். ஆனால் 72 செக்கன்களின் பின்னர் அது நின்று விட்டது. அப்புறம் வரவேயில்லை. இதை 'வாவ்! சிக்னல்' (Wow! signal) என்கிறார்கள். பெயருக்கு ஏற்றால் போல பூமியில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளையும் 'வாவ்!' என்று வாயைப் பிளக்க வைத்தது அந்த சிக்னல். 

வாவ் சிக்னல் பற்றி விரிவாகவும், இந்தப் பகுதியில் சொல்லாமல் விடுபட்டுப் போன ஸ்டோன் ஹெஞ்ச் பற்றியும் அடுத்த தொடரில் பார்ப்போமா..! 



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள்: 5491
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1740

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by பாலாஜி on Mon Jun 25, 2012 5:07 pm

பகிர்வுக்கு நன்றி பாலா நன்றி


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



பாலாஜி
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 14046
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 2312

View user profile

Back to top Go down

Re: "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Jun 25, 2012 8:45 pm

நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கும் சந்தேகத்தை தீர்த்தமைக்கும்...

ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 3520
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 678

View user profile

Back to top Go down

The author of this message was banned from the forum - See the message

Re: "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by கே. பாலா on Tue Jun 26, 2012 8:02 am

குல்சாரின் கருத்துக்களுக்கு நன்றி,,,,, நன்றி
தொடரை நீட்டிக்கச் செய்யும் வழிதான்.... சீரியல் டைரக்டர்களைப் போல,,

WORMHOLE என்பதைபற்றிய அறிய செய்தியை அறிந்துகொள்ள முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள்: 5491
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1740

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by கே. பாலா on Tue Jun 26, 2012 4:47 pm

இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" part 7




Wow! சிக்னல் பூமியை வந்தடைந்தது பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், சிறிது பௌதிகம் (Phisics) படிக்கலாமா? "பௌதிகம் என்றால் பல்கலைக் கழகத்திலேயே சிதறி ஓடுவோம். அது இங்கேயுமா? இப்போ எதுக்குப் பௌதிகம்" என்கிறீர்களா? பல்லைக் கடித்துக் கொண்டு படியுங்கள். பௌதிகம் ஏனென்று புரியும்.

பிரபஞ்சம் என்பது மிகவும் அமைதியானது. அமைதி என்றால், அவ்வளவு அமைதி. நமது பூமியைப் பாருங்கள். அமைதியே இல்லாமல், இயற்கையானாலும், செயற்கையானாலும் எப்போதும் சத்தத்துடனேயே சுற்றிக் கொண்டு இருக்கிறது. பூமியுடன் ஒப்பிடும் போது, பிரபஞ்சம் ரொம்பச் சாதுவான பிள்ளை. வானத்தில் இடி இடிக்கும் போது, பூமியில் நமக்கு பெரிதாகச் சத்தம் கேட்கிறது. பிரபஞ்சத்திலும் எத்தனையோ வெடிப்புகள் கணத்துக்குக் கணம் ஏற்படுகின்றன. சமயங்களில் நட்சத்திரங்களே வெடித்துச், சிதறுகின்றன. தினமும் ஒன்றுடன் ஒன்று நட்சத்திரங்களோ, கோள்களோ மோதித் தூளாகின்றன. அதனால் ஏற்படும் சத்தங்கள் நமக்கு கேட்கும் பட்சத்தில் நாம் இறந்தே விடுவோம். அவ்வளவு பாரிய சத்தம் உருவாகும். ஆனால் நமக்கு எதுவும் கேட்பதே இல்லை. அதிகம் ஏன்? நமது சூரியனில் கூட, கோடான கோடி ஐதரசன் குண்டுகள் வெடிப்பது போல, தினமும் வெடிப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் எங்கும் அமைதியே காணப்படுகிறது. "இவையெல்லாம் ரொம்பத் தூரத்தில் நடக்கின்றன, அதனால்தான் அந்தச் சத்தங்கள் நமக்குக் கேட்பதில்லை" என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது அல்லக் காரணம். அங்கு ஏற்படும் வெடிப்பின் அளவுக்கு அந்தத் தூரங்கள் ஒன்றுமே இல்லை. நிச்சயம் கேட்டே தீரும். ஆனால் கேட்பதில்லை. சொல்லப் போனால், அவற்றுக்கு அருகில் நின்றாலும், அந்தச் சத்தங்கள் நமக்குக் கேட்பதற்கு சாத்தியம் இல்லை. ஏன் தெரியுமா? இது பற்றி எப்போதாவது யோசனை செய்திருக்கிறீர்களா?  

ஒலி (சத்தம்) என்பது வேறு. ஒலியைக் கேட்பது என்பது வேறு. ஒலி எங்கும் உண்டு. அதைக் கேட்பது என்பதில்தான் நமக்குப் பிரச்சனை. ஒலியை நாம் எப்படிக் கேட்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு இடத்தில் உருவாகும் ஒலி, நமது காதை வந்தடைவதற்கு ஊடகம் ஒன்று தேவை. பூமியில் அந்த ஊடகமாக இருப்பது காற்று. அதாவது அட்மாஸ்பியர். காற்று, சத்தத்தைக் கடத்திக் கொண்டு எமது காதை வந்தடைகிறது. பூமியில் மட்டுமல்ல, பிரபஞ்சம் எங்கும் ஒலி உண்டு. ஆனால் நமக்குக் கேட்பதில்லை. காரணம் பூமியைத் தாண்டி எங்குமே காற்று இல்லை. பிரபஞ்சம் எங்கும் காற்றில்லா வெறுமைதான் உண்டு. சூரியனில் இருந்தோ, நட்சத்திரங்களிலிருந்தோ சத்தத்தைக் கொண்டு வருவதற்குக் காற்றுப் போன்ற ஊடகம் நிச்சயம் தேவை. நமது விஞ்ஞானம் அறிந்தவரை பூமியைப் போன்ற இவ்வளவு நேர்த்தியான அட்மாஸ்பியர் உள்ள கோள் பிரபஞ்சத்தில் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி ஏதாவது கிரகங்களுக்குப் பூமி போன்ற அட்மாஸ்பியர் இருந்தாலும், அது அங்குள்ள சத்தத்தை உள் வாங்குமேயொழிய வெளிவிடாது. மொத்தத்தில் பிரபஞ்சத்தின் பாரிய வெடிப்புகளின் சத்தங்களை நாம் கேட்காமல் இருப்பதற்குக் காரணம், பிரபஞ்சம் காற்றில்லாப் பெருவெளியென்பதுதான். 





ஒலியும், ஒளியும் அலைகளாகத்தான் இருக்கின்றன. அலைகளாகச் செல்லும் அனைத்துக்கும் அலை நீளம் என்ற ஒன்று உண்டு. அலை நீளத்தை அளப்பதற்கு 'ஹேர்ட்ஸ்' (Hertz - Hz) என்னும் அலகை நாம் பயன்படுத்துகிறோம். மனிதனது காதுக்கும், கண்ணுக்கும் ஒரு குறித்த அலை நீளங்களை மட்டுமே கிரகித்துக் கொள்ளும் சக்தி உண்டு. சூரியனில் இருந்து வரும் ஒளியில் மிகமிகச் சிறிய பகுதியான, ஏழு நிறங்கள் மட்டுமே நமது கண்களுக்குத் தெரிகிறது. அந்த ஏழு நிறங்கள் தாண்டிய, புற ஊதாக் கதிர்களும், இன்ஃப்ரா சிவப்புக் கதிர்களும் நம் கண்களுக்குத் தெரிவதே இல்லை. இதே போலத்தான் ஒலியும். 20 Hz இலிருந்து 20 KHz வரை உள்ள ஒலி மட்டும்தான் மனிதனால் கேட்க முடியும். அவை தாண்டிய ஒலிகள் 'கேளா ஒலிகள்' எனப்படும். கேளா ஒலிகளில் முக்கியமானவை ரேடியோ அலைவரிசைகள் Radio Frequency-RF). 3 KHz இலிருந்து 300 GHz வரைக்கும் உள்ள அலை வரிசைகளைத்தான் ரேடியோ அலை வரிசைகள் என்பார்கள். அவற்றைக் கீழே ஒரு அட்டவணையில் தந்திருக்கிறேன்.




ரேடியே சிக்னல்கள் தானாக உருவாவதில்லை. அவை உருவாக்கப்படுபவை. மனிதனாலோ அல்லது வேறு உயிரினங்களினாலோ உருவாக்கப்படுபவைதான் இந்த ரேடியோ சிக்னல்கள். ரேடியோ சிக்னல்களை உருவாக்குவதற்கும், உருவாக்கியவற்றைப் பெற்றுக் கொள்வதற்கும் கருவிகள் தேவை. இப்படியான கருவிகளில் ஒன்றுதான் 'ரேடியோ டெலெஸ்கோப்' என்று சொல்லப்படும், வானியலை ஆராயப் பயன்படுத்தும் டெலெஸ்கோப்புகள். இவற்றுள் மிகப்பெரிய அளவுள்ள டெலெஸ்கோப்புகளை 'வெரி லார்ஜ் அர்ரே' (Very Large Array-VLA) என்பார்கள். 25 மீட்டர்களிலிருந்து 300 மீட்டர்கள் வரை குறுக்களவுள்ளவைகள் அவை.





ரேடியோ டெலெஸ்கோப் உள்ள ஒரு வானிலை ஆராய்ச்சி மையமான, பேர்கின்ஸில் (Perkins- Delaware Ohio) 1977ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி நள்ளிரவு, ஜெர்ரி ஏமான் என்பவர் பணியாற்றிக் கொண்டிருந்த போது, திடீரென கணணித் திரையில் ஒரு அதிசயத்தைக் கண்டார். 220 ஒளி வருடங்களுக்கு அப்பால் இருக்கும் சஜிட்டாரியஸ் (Sagittarius) நட்சத்திரக் கூட்டங்களுக்கிடையில் இருந்து, மிகச் செறிவான ரேடியோ சிக்னல் ஒன்று வருவதைக் கண்டார். நன்றாகக் கவனியுங்கள் ரேடியோ சிக்னல் என்பது நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறுவதாலோ, இரண்டு நட்சத்திரங்கள் மோதுவதாலோ ஏற்படுவதல்ல. அதை யாராவது உருவாக்க வேண்டும்.சஜிட்டாரியஸ் நட்சத்திரக் கூட்டங்களில் உள்ள X1 சஜிட்டாரி, X2 சஜிட்டாரி ( Sagittarii X1,X2 ) ஆகிய இரண்டு நட்சத்திரங்களுக்குமிடையில் இருந்து அந்த சிக்னல் வந்தது. அதாவது அங்குள்ள ஒரு இடத்திலிருந்து வேறு ஒரு இடத்துக்கு ரேடியோக் கருவிகள் மூலம், நடந்த ஒரு சம்பாசனையாகத்தான் அது இருக்க முடியும். ஆனால் அந்த நேரத்தில் இருந்த கருவிகளின் திறண் போதாமையால், அதைத் தொடர்ந்து அவதானிக்க முடியவில்லை.  சரியாக 72 செக்கன்கள் வந்த அந்தச் சிக்னல் படிப்படியாகக் குறைந்து அப்படியே இல்லாமல் போயிற்று. 72 செக்கன்கள் என்பது நமக்குச் சிறிய நேரமாக இருந்தாலும், ஆராய்ச்சியாளர்களுக்கு அது பெரிய அளவு நேரம்தான். இந்த சிக்னலைப் பார்த்ததும் தன்னையறியாமல், Wow! என்று ஆச்சரியத்துடன், ஜெர்ரி அதே காகிதத்தில் எழுதினார். அதனால் அதை Wow! சிக்னல் என்றே விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.



ரேடியோ சிக்னலாக வாவ் சிக்னல் இருந்ததால், அதை நிச்சயம் யாரோ அங்கு உருவாக்கியிருக்கிறார்கள் என்றுதான் விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்தார்கள். அந்த 'யாரோ' என்பவர்கள் நிச்சயமாக ஏலியன்களாகத்தான் இருக்க முடியும். ராக்கெட் மூலம் விண்வெளிக்குச் செல்லும் அஸ்ட்ராநாட்ஸ் எல்லாருமே பூமியுடன் இப்படிப்பட்ட ரேடியோ அலை வரிசை மூலமாகத்தான் உரையாடுவார்கள். அது போல அங்கும் யாரோ, யாருடனோ உரையாடியிருக்க வேண்டும்.

எப்போதோ ஒரேயொரு தடவை நடந்த சம்பவத்தை வைத்துக் கொண்டு, ஏலியன்கள்தான் சிக்னலை அனுப்பினார்கள் என்று எப்படி அடித்துச் சொல்ல முடியும்? ஒருதரம் என்பது எப்போதும் தற்செயலாக இருப்பதற்குத்தான் சாத்தியம் உண்டு. ஆனால் இந்தச் சாத்தியத்தை உடைத்தெறிந்தது இன்னுமொரு சம்பவம்.

மேற்கு வேர்ஜீனியாவில் இருக்கும் கிரீன்பாங்க் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்த டான் மெரிக் (Dr.Don Merick) என்ற விண்வெளி ஆராய்ச்சியாளருக்கு, 23 யூலை 1997ம் ஆண்டு அதிகாலை 3 மணிக்கு, ஒரு ரேடியோ சிக்னல் கிடைத்தது. அந்த சிக்னலைக் கண்டதும் அவர் போர்ட்டா ரிகாவில் இருக்கும் ஆரஷீபோ ஆராய்ச்சி நிலையத்துக்கும், மசாசூசெட்ஸ் ஆராய்ச்சி நிலையத்துக்கு ஃபோன் மூலமாக இந்தச் செய்தியையும், அந்த சிக்னல் வந்த இடத்தையும் அறிவித்தார். அவர்களும் அதே இடத்துக்குத் தங்கள் ரேடியோ டெலஸ்கோப்பைத் திருப்ப, அவர்களுக்கும் அதே சிக்னல் கிடைத்தது. இந்தச் சம்பவமும் விஞ்ஞானிகளைத் தூக்கிவாரிப் போட்ட சம்பவமாக அமைந்தது. ஆனால் இதில் அமெரிக்க அரசு ஏனோ ஒரு தயக்கதைக் காட்டியது. பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பதிலளித்த அரசு அதிகாரி, "அந்தச் சம்பவம் நடந்தது உண்மைதான். ஆனால் அது பற்றி எந்த அபிப்பிராயமும் சொல்லப் போவதில்லை. எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கப் போவதில்லை" என்று சொல்லிவிட்டு, உடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். அமெரிக்கா அங்கு எதை மறைக்க வெளிக்கிட்டது என்பது இன்னும் புதிராகவே இருக்கின்றது. ஆனால் அதைவிட ஒரு ஆச்சரியமான வேலையை அமெரிக்க அரசு அடுத்துச் செய்தது. 'ஏலியன்களுக்கான ஆராய்ச்சிக்காக, 20 பில்லியன் டாலர்களை ஒவ்வொரு வருடத்துக்கும் ஒதுக்குவதாகவும், இது அடுத்த பத்து வருடங்களுக்கு அது தொடரும்' என்றும் அறிவித்தது. இல்லாத ஏலியன்களை இருக்கிறது என்று ஆராய இவ்வளவு அதிகப்படியான பணத்தை அமெரிக்கா ஏன் ஒதுக்க வேண்டும்? உலகிலேயே அமெரிக்கா மட்டும் அல்ல, அனைத்து அரசுகளும் அதிகப்படியான பணத்தைச் செலவு செய்வது விண்வெளி ஆராய்ச்சியில்தான். அதுவும் குறிப்பாக ஏலியன் வேட்டையில்தான். வெளிக்கிரக உயிர்களைக் கண்டுபிடிப்பதற்கென்றே  SETI (Search for ExtraTerrestrial Intelligence) என்ற ஒரு உலகளாவிய அரச அமைப்பையே உருவாக்கி வைத்திருக்கின்றனர் என்றால் பார்துக் கொள்ளுங்கள். 



SETI என்று ஒரு அமைப்பு, அதற்கென்று கோடி கோடியான பணம், அதில் ஈடுபடுவதற்கு ஆயிரக்கணக்கான உலக மகா விஞ்ஞானிகள் என, அனைத்தையும் அரசுகள் உருவாக்கி ஏலியன்களை ஆராய்ந்து கொண்டிருந்தாலும், சாதாரண மக்களான நாம் ஏலியன்கள் பற்றிப் பேசினாலே அது பொய்யென்று அரசுகள் குதித்து கூத்தாடுகின்றன. அவர்களாகக் கண்டுபிடிக்கும் உண்மைகளையும் மறைக்கின்றன. நமது கண் முன்னாலே இருக்கும் பல ஆச்சரியங்களையோ, அதிசயங்களையோ கூட முறைப்படி ஆராய மறுக்கின்றன. கோடிக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் கோள்களுக்கெல்லாம் ராக்கெட்டை அனுப்பி, அங்கு என்ன இருக்கிறது என்று ஆராய்கிறார்கள். ஆனால் பூமியிலேயே இருக்கும் அதிசயங்களை ஆராய மறுக்கிறார்கள். எத்தனை ஆச்சரியங்கள் இன்றும் விடை சொல்லப்படாமல் மிஸ்டரிகளாகவே நம் முன்னால் நிற்கின்றன. 




அப்படி நம் கண்முன்னே நிற்கும் ஒரு அதிசயம்தான் ஸ்டோன் ஹெஞ்ச். 5000 வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் அது அமைக்கப்பட்டிருக்கிறது. கற்கால நாகரீகத்தின் கடைசிக் காலகட்டம் அது. இங்கிலாந்தின் வரலாற்றில் எந்தப் பதிவுகளும் இல்லாத காட்டுவாசி மக்கள் மட்டும் வாழ்ந்த காலம். அந்தக் காலத்தில் 100 டன்களுக்கு அதிகமான எடையுள்ள கற்களை, பல நூறு கிலோ மீட்டர்கள் தூரத்திலிருந்து , வைல்ட் ஷையர் (Wiltshire) என்னுமிடத்துக்கு நகர்த்தி, ஸ்டோன் ஹெஞ்ச் கட்டப்பட்டிருக்கிறது. அதுவும் இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாக இருக்கும் பயிர் வட்டங்களின் வடிவிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஸ்டோன் ஹெஞ்ச் அமைக்கப்பட்டிருக்கும் விதத்தில் நிறைய ஆச்சரியங்களும் மர்மங்களும் உண்டு. அந்த மர்மங்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் நம்மை வியப்பிலாழ்த்தியபடி இருக்கின்றன. "பயிர் வட்டங்கள் பல விதமாக பல இடங்களில் அமைக்கப்பட்டிருக்கிறதே, ஏன் ஸ்டோன் ஹெஞ்ச் மட்டும் ஒன்றுதான் இருக்கிறது?" என்று நீங்கள் கேட்டால், மேலும் ஆசாரியமான தகவல்களே நமக்குக் கிடைக்கின்றன. வட்ட வடிவமாக பலவித ஹெஞ்சுகள் இங்கிலாந்து எங்கும் காணப்படுகின்றன?

இந்த ஸ்டோன் ஹெஞ்ச் எப்படிக் கட்டப்பட்டது? எதற்காகக் கட்டப்பட்டது? அது கட்டப்பட்டதில் உள்ள ஆச்சரியங்கள் என்ன? இது தவிர்ந்து மேலும் உள்ள மற்ற ஹெஞ்கள் எவை? என அனைத்துக் கேள்விகளுக்கான பதில்களுடன், அடுத்த தொடரில் சந்திப்போம். 


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள்: 5491
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1740

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by ராஜா on Tue Jun 26, 2012 5:11 pm

நம்பிக்கை என்பதையும் தாண்டி இந்த கட்டுரைகள் , எண்ணங்களை எங்கெங்கோ அழைத்து செல்கின்றன.

நன்றி

ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 21512
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2317

View user profile http://www.eegarai.net

Back to top Go down

The author of this message was banned from the forum - See the message

Re: "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு

Post by விநாயகாசெந்தில் on Tue Jun 26, 2012 8:57 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள்: 1165
சேர்ந்தது: 09/05/2012
மதிப்பீடு: 379

View user profile

Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum