ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 மூர்த்தி

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி - ஒரு ஆய்வு

View previous topic View next topic Go down

தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி - ஒரு ஆய்வு

Post by ராஜு சரவணன் on Fri Jan 04, 2013 12:57 am

தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது பற்றிய எனது நீண்ட நாளைய கருத்தை இங்கு பதிவிடுகிறேன்.

சொல் என்பது மிக இலகுவாக, சிறியதாக, எளிதில் பொருள் புரியாத வகையில் உருவாக்க வேண்டும் . நம் பழந்தமிழ் சொற்களை பாருங்கள்

இரும்பு,குதிரை,புசுனை, கரடி, - இதற்க்கு என்ன பொருள் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை, மீறி சொன்னால்

இரும்பு - என்றால் கருப்பாக , நல்ல உறுதியான உலோகம் என்று சொல்லலாம்.
குதிரை - என்றால் அது ஒரு விலங்கு என்று சொல்லலாம்.
கரடி - என்றால் அதுவும் ஒரு விலங்கு என்று சொல்லலாம்.
பூசுனை - அது ஒரு வகையான காய்கறி என்று சொல்லலாம்.

இது போல் தான் அன்றைய தமிழன் அணைத்து சொற்களையும் உருவாக்கிய உள்ளான்.இது போன்ற சொற்கள் தான் மக்களின் பேச்சு வழக்கில் எளிதில் அழிய இடம் பொறும்.

ஆனால் இன்றைய தமிழன் உருவாக்கும் தமிழ் சொற்கள் சில
பதிவு வட்டு (Compact Disc ) , தொடர்வண்டி (Train ),மிதிவண்டி (Cycle ),விசைபலகை (keyboard ) , மின்கடத்தி (wire)என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவை சொற்களே இல்லை சொல்தொடர்கள் .இவைகளுக்கு என்ன பொருள் என்று கேட்டால் சின்ன குழந்தை கூட சொல்லிவிடும்.இது சொற்கள் என்று அழைகப்படும் சொல்தொடர்கள், பேச்சு வழக்கில் வரவே வராது.

மேற்கூரிய சொற்களை உதரணமாக பதிகரம்(Compact Disc ) , சாரணம் (train ) என்று அழைத்து பாருங்கள் கேட்பவருக்கு புதிதாக , எளிதில் மனதில் பதிந்துவிடும். அதயே பயன் படுத்தி பேச பழகி விடுவர்.

சரி எப்படி நீங்கள் பதிகரம்(Compact Disc ) , சாரணம் (train ) என்று பெயர் வைக்கலாம் நீங்கள் என்ன தமிழில் பட்டம் பெற்றவர அல்லது தமிழ் புலவரா என்று மனதில் தோன்றும்.

எதற்கு எந்த பட்டமும் தேவை இல்லை புலமையும் தேவை இல்லை, சற்று நமது பழந்தமிழர் உருவாக்கிய சொற்களை பகுத்து ஆராய்ந்தால் போதும்.

நாம் சாதரணமாக பேசும் சொற்கள் சில

1) ஆராய்ந்து (ஆரா + ஆய்ந்து)
2) சாப்பிட்டு (சாப்பாடு + விட்டு(முடித்து)
3) கூப்பிடு (கூப்பாடு + இடு )
4) குதிரை (குதி + விரை) குதித்து விரைவது
5) கரடி (கரம் (கை ) + அடி ) காலை தனது கையாக பயன்படுத்துவது
6) பூசுனை (பூசு + சுனை ) ஒருவகை அரிப்பு பொருளால் பூசப்பட்ட காய்

மேலே உள்ளதைபோல்
பதிகரம்(Compact Disc ) = பதிப்பு + சக்கரம்
சாரனம் (train ) = சாரை(நீண்ட) + வாகனம்
திரணி(pump ) = திரவ + ஏணி


ஆங்கிலத்திலும் என்னக்கு தெரிந்த ஒரு சொல்.

Elephant = help + hand

இது போல் தமிழில் உள்ள சொற்களை பகுத்து ஆராய்ந்தால் உண்மை விளங்கும்.


ஆகவே ஒரு புதிய சொல்லை உருவாக்க இரு பொருள் விளங்காத (எளிதில்) சொற்களை இணைத்து நீளம் குறைந்த சொல்லை உருவாக்குவதே ஒரு சிறப்பான சொல்லாக்கமாக அமையும்.

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி - ஒரு ஆய்வு

Post by றினா on Fri Jan 04, 2013 2:42 pm

இதனை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி - ஒரு ஆய்வு

Post by ராஜு சரவணன் on Sat Jan 05, 2013 12:44 pm

இதோ சில தமிழ் சொற்கள் உருவாக்கபட்டவிதம்

1) இருக்கை (sofa) = இரு + கை (இரு கைகளை கொண்ட அமரும் ஆசனம் )
2) நாற்காலி (chair ) = நான்கு + கால் (நான்கு கால்களை கொண்ட அமரும் ஆசனம்)
3) முகவரி (address ) = முகம் + வரி (ஒரு பொருளின் அடையாளம் + எழுத்து )
4) மூலதனம் (investment ) = மூலம் + தனம் (முதன்மை செல்வம் (அ) பணம்)
5) கோதானம் (பசு கன்று) = கோ(பசு) + தானம் (கன்று குட்டி)
6) கோவில் (Temple ) = கோ (எல்லோருக்கும் முதன்மையனவனின் இல்லம் )
7) திருகை (rotating wheel )= திரு + கை (சுழலும் மர கை)
8) கலப்பை (plow ) = கலப்பு + கை (மண்ணை கலக்கும் மர கை)
9) உலக்கை (Pestle ) = உரல் + கை (உரலை குத்த பயன்படும் மர கை)
10)விஞ்ஞானம் (சயின்ஸ்) = விந்தை + ஞானம் (விந்தையான ஞானம்-அறிவு)

மேற்சொன்ன சொற்களின் பகுப்பு சொற்களை பாருங்கள் அந்த இரு சொற்கள் இணைந்து மிக சரியான பொருளை உணர்த்துகிறது. சொற்களின் நீளத்தை பாருங்கள் , பேச்சு வழக்கில் எளிதாக பயன்பதும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய தமிழ் சொற்களை நம் தற்கால தமிழர் உருவாக்கி இருந்தால் எப்படி இருக்கும்
1) இருக்கை (sofa) = இருகால் அசனம்.
2) நாற்காலி (chair ) = நான்குகால் அசனம்.
3) முகவரி (address ) = அடையாள எழுத்து.
4) மூலதனம் (investment ) = முதல் பணம்.
5) கோவில் (Temple ) = கடவுள் இல்லம்
6) திருகை (rotating wheel ) = வட்ட சுழலி.
7) கலப்பை (plow ) = மன்கலக்கி.
8) உலக்கை (Pestle ) = இடி மரம்.

போன்று தான் உருவாக்கி இருப்பார்கள்.

ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறதுராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி - ஒரு ஆய்வு

Post by சதாசிவம் on Sat Jan 05, 2013 2:09 pm

தங்களின் முயற்சிக்கு பாராட்டுகள் ..... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஆயினும் நீங்கள் கூறுவது போல் தற்காலத் தமிழர்கள் உருவாக்குவதில்லை ..

குறுகிய + தகடு = குறுந்தகடு
கணிக்கும் + பொறி = கணிப்பொறி
வன்மையான தகடு = வன்தகடு

இப்படித் தானே வழங்கப்படுகிறது. சில நேரங்களில் கவிதைகள், இணையத்தில் பதியும் கட்டுரைகளில் இது போன்றத் தவறு நிகழ்கிறது....ஆனால் இன்று வரை அகராதியில் ஏறும் வார்த்தைகள் மொழியறிஞர்களால் தான் உருவாக்கப்படுகிறது.அல்லது சரிபார்க்கப்படுகிறது.

தமிழ் கல்வெட்டுகளைப் படித்தால் பெரும்பாலானவை முழுநீள சொற்றொடர்களாகத் தான் எழுதப்பட்டுள்ளது. எங்கு இடைவெளி விட வேண்டும், எங்கு இணைத்து எழுத வேண்டும் என்ற குழப்பம் நிலவியுள்ளது. இக்குழப்பம் நீங்கி புணர்ச்சி விதிகள் மொழியறிஞர்களால் தெளிவு செய்யப்பட்டது.

புணர்ச்சியில் இயல்பு புணர்ச்சி என்ற வகை உண்டு. அதில் இணையும் வார்தைகள் சிதைவதில்லை,,,நீங்கள் கூறும் compact disc இந்த வகை தான்.....ஒரு வார்த்தையை உருவாக்கும் பொழுது அதில் உள்ள வேர்ச்சொல் சிதைவடையாமல் உருவாக்கவேண்டும்.

சாரணம் என்ற வார்த்தையை புரியாதவர் பிரித்தால் சாவு + ரணம் என்றோ, பதிகரம் என்பதை பதிவு + கரம் என்று பிரித்து தவறாகப் பொருள் கொள்ள வாய்ப்புள்ளது....
ஆனால் தொடர்வண்டி என்ற சொல் குழப்பம் இல்லாதது....தமிழில் ஒரு பொதுப் பெயரும் சிறப்புப் பெயரும் சேரும் பொழுது இணைத்து எழுத வேண்டும் என்பது விதி, அவை ஒரு வாக்கியமாகத் தான் கருத்தப்படுகிறது.

மா + மரம் = மாமரம்
வேப்பமரம் போன்றவை
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி - ஒரு ஆய்வு

Post by ராஜு சரவணன் on Sat Jan 05, 2013 3:18 pm

[quote=சாரணம் என்ற வார்த்தையை புரியாதவர் பிரித்தால் சாவு + ரணம் என்றோ, பதிகரம் என்பதை பதிவு + கரம் என்று பிரித்து தவறாகப் பொருள் கொள்ள வாய்ப்புள்ளது....
ஆனால் தொடர்வண்டி என்ற சொல் குழப்பம் இல்லாதது.... [/quote]

அன்பரே திரும்ப நீங்கள் நான் முதலில் ஆரம்பித்த இடத்திற்கே சென்று விட்டீர்கள்.

என் பதிவில் பாருங்கள் "சொல் என்பது மிக இலகுவாக, சிறியதாக, எளிதில் பொருள் புரியாத வகையில் உருவாக்க வேண்டும்" அதுபோன்ற சொற்கள் தான் பேச்சு வழக்கில் வரும்.

சொல்லின் பொருளை சொல்லை பார்த்தாலே சொல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை.தொடர்வண்டி என்ற சொல் எல்லோருக்கும் புரிகிறது, சொல் என்பது அனைவருக்கும் புரிய வேண்டும் என்று சொல்லும் உங்களிடம் சில கேள்விகள்

1) தொடர்வண்டி என்பது சொல்லா அல்லது சொற்றொடர.
2) தொடர்வண்டி என்ற சொல்லை மக்கள் பேச்சு வழக்கத்தில் பயன்படுத்த மறுப்பது ஏன்.
3) ரயில் என்ற ஆங்கில சொல்லின் ஒலி வீச்சு(சொல் நீளம்) எவ்வளவு தொடர்வண்டி சொல்லின் ஒலி வீச்சு எவ்வளவு.
4) தொடர் என்ற சொல்லுக்கும் வண்டி என்ற சொல்லுக்கும் என்ன அர்த்தம் என்பதை சொல்லவும்.

5) தொடர், வண்டி என்ற சொற்கள் தொடர்வண்டி என்ற சொல்லை போல் பார்த்தவுடன் பொருளை விளங்குவது போல் சொல்லை உருவாக்க நமது பழந்தமிழர் தவறு செய்து விட்டார்களா.

மேலும் இரும்பு , தாமிரம், கல் , கோ போன்ற பல சொற்கள் ஏன் தொடர்வண்டி சொல் போல் பார்த்தவுடன் பொருள் விளங்கவில்லை.

இதுபோன்ற ஆரோக்கியமான விவாதங்கள் தான் நமது கருத்தை வெளி உலகிர்க்கு எடுத்து செல்லும்.

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி - ஒரு ஆய்வு

Post by dhilipdsp on Sat Jan 05, 2013 5:54 pm

சூப்பருங்க
avatar
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2044
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

Re: தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி - ஒரு ஆய்வு

Post by Pakee on Sat Jan 05, 2013 6:52 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு
avatar
Pakee
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 636
மதிப்பீடுகள் : 74

View user profile http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

Re: தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி - ஒரு ஆய்வு

Post by சதாசிவம் on Sat Jan 12, 2013 6:11 pm

இதுபோன்ற ஆரோக்கியமான விவாதங்கள் தான் நமது கருத்தை வெளி உலகிர்க்கு எடுத்து செல்லும்.

தங்களின் வார்த்தையை முற்றிலும் ஏற்கிறேன்....ஒரு சில கருத்துகளை தங்களின் ஆலோசனைக்கு வைக்கிறேன்.

தமிழ்மொழி இலக்கண மரபுகள் நிறைந்த ஓர் அற்புத மொழி...இதில் இருக்கும் சொற்களும், உருவாகும் சொற்களும் இந்த மரபில் ஒத்துப் போக வேண்டும்.

தங்கள் சொல்லும் முறையில் சொற்கள் உருவாக்கும் பொழுது அவை புரிந்து கொள்வதில் சிரமமும் குழப்பமும் நிலவும்..

பேச்சு வழக்கில் இருக்கும் சொற்கள் முறையான சொற்கள் இல்லை என்பது மொழிமரபு..ஆங்கிலத்திலும் இதுபோன்ற சொற்களை informal expression என்று விளிக்கின்றனர்.

உதாரணமாக நாம் பயன்படுத்தும் சைக்கிள், rail, xerox, mobile போன்ற வார்த்தைகள் மொழிமரபில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை . Rail என்ற வார்த்தை தண்டவாளத்தை தான் குறிக்கும், cycle என்ற வார்த்தை சுழச்சியை தான் குறிக்கும். mobile என்பது நகருவதை குறிக்கும். ஆனால் இவை பேச்சு வழக்கில் வேறு பொருளில் ஆளப்படுகிறது.

உருவாகும் சொல் எந்தச் சூழ்நிலையிலும் ஒரே பொருளை கொடுக்க வேண்டும், அப்பொழுது தான் அச்சொல் காலத்தை கடந்து நிற்கும், மேலும் மரபில் அமைந்தால் மட்டுமே ஒருவர் அதை ஆராய முடியும். ஆனால் பேச்சு வழக்குச் சொற்கள் அப்படி செய்வதில்லை.

மேலும் தாங்கள் பகுபத சொல்லுக்கும், சொற்றொடருக்கும் உள்ள வேறுபாட்டை உணர வேண்டும்....

155 எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.

156. பொருண்மை தெரிதலும், சொன்மை தெரிதலும்,
சொல்லின் ஆகும்' என்மனார் புலவர்


ஒரு சொல், ஒரு பொருளையும், அதன் தன்மையையும் விவரிக்க வேண்டும். இதன் படி அமைப்பதே தமிழ் மரபு.

எல்லா மொழிகளிலும் வேர்ச்சொல்லில் இருந்து வந்த பல சொற்றொடர்கள் சொல்லாக ஆளப்படுகிறது.

டெலிவிஷன், டெலிபதி, டெலெஸ்கோப், டெலிஃபோன் போன்றவை....இவை ஒவ்வொன்றுகும் வேறு வேறு சொல் இருப்பின் ஆங்கிலம் கற்பவரின் நிலைமையை யோசித்து பாருங்கள்..

பழந்தமிழிலும் யானைப்பாகன், தேர்ப்பாகன், அரசவை, படைத்தலைவன் போன்ற வார்த்தைகள் ஆளப்பட்டிருக்கிறது...இவைகள் சொற்றொடர்களே

எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய

சொற்றொடர்களும் ஒரு சொல்லாக உச்சரிக்க வேண்டும் என்பது தொல்காப்பிய தமிழ் மரபு....ஆகையால் தொடர்வண்டி ஒரு சொல்லாக உச்சரிப்பதில் குழப்பம் இல்லை.

சொற்கள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்ற தங்களின் எண்ணத்தை வரவேற்கிறேன், ஆயினும் இவை அனைத்திலும் சாத்தியமா என்று தெரியவில்லை..மேலும் தாங்கள் கூறும் முறைமையில் பல வேர்ச் சொல் உருவாகும்....இது மொழியை கற்பவருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்...
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி - ஒரு ஆய்வு

Post by ராஜு சரவணன் on Sat Apr 06, 2013 3:35 pm

ஆங்கிலத்தில் கலைச்சொல் உருவாக்குவதற்கு அந்நாட்டவர் கடைபிடிக்கும் வழிமுறைகள் இதோ உங்கள் பார்வைக்கு. உடனே தமிழும் ஆங்கிலமும் ஒன்றா தமிழ் இலக்கணமும் ஆங்கில இலக்கணமும் ஒன்றா என்று அடம் பிடிக்காமல் தமிழும் ஒரு மொழி தான் , ஆங்கிலமும் ஒரு மொழி தான், ஆங்கிலம் இன்று நல்ல வளர்ச்சி பெற்ற மொழி என்ற வகையில் அவர்கள் கடைபிடிக்கும் சொல்லாக்க வழிமுறைகளை நாம் சற்று ஆராய்வோம்.

ஆங்கில சொற்கள் கீழ்காணும் பல வழிமுறைகளில் உருவாக்கப்படுகின்றன.

1) Borrowing - இரவல்பெறல்
2) Shortening or Clipping - சுருக்குதல் (அ) நறுக்குதல்
3) Functional Shift - செயல் மாற்று
4) Back-formation - மீள் உருவாக்கம்
5) Blends - கலப்புகள்
6) Acronymic Formations - சுருக்க உருவாக்கம்
7) Transfer of Personal or Place Names - நபர் அல்லது இடப்பெயர் மாற்றங்கள்
8) Imitation of Sounds - ஒலிகளின் பிரதிபலிப்பு
9) Folk Etymology - நாட்டுப்புற சொற்பிறப்பியல்
10) Combining Word Elements - சொல்கூறு பிணைப்பு.
11) Literary and Creative Coinages - எழுத்து மற்றும் கற்பனை படைப்பு


Borrowing - இரவல்பெறல்
இன்று ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் சொற்கள் பெரும்பாலான மற்ற மொழிகளில் இருந்து இரவலாக பெற்றது. பெரும்பாலும் ஐரோப்பிய மொழிகளில் இருந்து பெருவாரியான சொற்கள் இரவல் பெறப்பட்டுள்ளது. தற்போது மொத்தம் சுமார் 120 மொழிகளிளின் சொற்கள் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

எடுத்துகாட்டாக தமிழின் பல சொற்கள் ஆங்கிலத்தில் சிறு ஒலி மாறுதலுடன் அப்படியே பயன்படுத்தபடுகின்றன
1) கட்டுமரம் - kattamaran
2) வண்டி - bandy
3) குருந்தம் - corundum
4) மிளகுத்தண்ணி - mulligatawny
5) பறையன் - pariah
6) பச்சலை - patchouli
7) வெறுந்தரை - verandah or veranda
8) யனைகொண்டான் - anaconda
9) பனைமரம் - Palmyra
10) காசு - cash
11) பரடு - Parade
12) கரவித்தை - karathe

இது போன்று நிறைய தமிழ் சொற்கள் அப்படியே ஆங்கிலம் உள்வாங்கிகொண்டது. உள்வாங்கிகொண்டலும் அந்த சொற்களை ஆங்கிலத்தின் மொழி இலக்கனத்திற்கு உட்பட்டு ஒலி மருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழிலும் இது போன்று மற்ற மொழி சொற்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முடிந்தவரை அவற்றை நாம் தவிர்க்கவேண்டும், பேச்சில் வழக்கத்தில் வந்து விட்ட சில சொற்களை அப்படியே விட்டுவிடுவதா இல்லையா என்பது நம் கையில் தான் உள்ளது. எடுத்துகாட்டாக காபி, வீடியோ, ரயில், சைக்கிள், மோட்டார் என சில சொற்களை கூறலாம்.

கவிஞர் ஜெயமோகன் தனது கட்டுரையில் கூறியது

" கலைச்சொல்லாக்கம் நிகழாமல் பிறசொற்களை அப்படியே கடன்வாங்கிக்கொண்டிருக்கும் மொழியில் காலப்போக்கில் மிகப்பெரிய அழிவு நிகழும். அந்த மொழியின் ஒலிநேர்த்தி இல்லாமலாகும். அந்த மொழியைக் கலையிலக்கியங்களுக்குப் பயன்படுத்த முடியாமலாகும்."

எனவே கூடுமனவரை அவைகளுக்கு சரியான, ஆங்கிலத்துடன் போட்டிபோடும் அளவிற்கு சிறந்த சொற்களை உருவாக்கவேண்டும். அதுவும் அந்தந்த துறை தமிழ் புலமை கொண்ட வல்லுனர்கள் அல்லது பொறியாளர்கள் உருவாக்கினால்தான் அது சிறப்பானதாக இருக்கும்.இதை பற்றி பிறகு வரும் பதிவுகளில் அலசுவோம்.

கடைசியில் என்னை பொறுத்தவரை இந்த Borrowing - இரவல்பெறல் முறை ஆங்கிலத்திற்கு மட்டுமே ஒத்துவரகூடியது.
தமிழுக்கு அது ஒத்துவராது, அப்படியும் அதை பின்பற்றினால் கவிஞர் ஜெயமோகன் அவர்கள் கூற்று தான் பலிக்கும்.

அடுத்து( Shortening or Clipping - சுருக்குதல் (அ) நறுக்குதல் )
தொடரும் .....

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி - ஒரு ஆய்வு

Post by யினியவன் on Sat Apr 06, 2013 4:18 pm

தொடருங்கள் ராஜூ - பயனுள்ள பகிர்வுavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி - ஒரு ஆய்வு

Post by raja sekar.v on Sat Apr 06, 2013 4:32 pm

சூப்பருங்க
avatar
raja sekar.v
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 135
மதிப்பீடுகள் : 38

View user profile

Back to top Go down

Re: தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி - ஒரு ஆய்வு

Post by mohu on Sat Apr 06, 2013 5:08 pm

சூப்பருங்க
avatar
mohu
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 125
மதிப்பீடுகள் : 35

View user profile http://www.dhuruvamwm.blogspot.com

Back to top Go down

Re: தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி - ஒரு ஆய்வு

Post by Dr.S.Soundarapandian on Sat Apr 06, 2013 5:33 pm

ராஜூ சரவணன் கருத்து அற்புதமானது ! பாராட்டுகள் ! அதன் மீது சிந்தை செலுத்திய சதாசிவம் கருத்தும் கவனிக்கத்தக்கதே !‘ மக்களிடம் சொல்லானது பரவவேண்டும்’ என்று சதாசிவம் சுட்டிய அடிப்படை உளங்கொளத்தக்கது. எனது கருத்தைக் கூறுகிறேன் :-

ஒரு சொல்லை மக்கள் உருவாக்கும்போது ‘ உடனே அது மற்றவருக்கு விளங்கவேண்டும் ’ என்ற நோக்கே மேலோங்கிநிற்கும் ! ‘சாரணம்’ என்று எடுத்த எடுப்பிலேயே சொல்லியிருந்தால் யாருக்கும் விளங்கியிருக்காது ! ‘தொடர்வண்டி’என்று சொன்னதால்தான் மக்களிடம் பரவிற்று ! ‘தொடர்வண்டி’என்று இன்று பயன்படுத்துகிறார்களா என்ற ஐயம் தேவையில்லை ; பலர் பயன்படுத்துகின்றனர் !
இது சொல்லா தொடரா என்ற வினாவும் தேவையற்றது ! “அதோ அந்த உரலுக்கையை எடுத்துவா” என்றுதான் முதலில் கூறியிருப்பர் ! பிறகு அது மருவி ‘உலக்கை’ ஆனது !
எடுத்த எடுப்பிலேயே கூட்டுச் சொல்லாக இல்லாமல், ராஜூ சரவணன் கூறியதுபோல
சுருங்கிய ஒரு சொல்லாகப் புதுச் சொற்கள் தோன்றினால் நல்லதுதான் ! அது எப்போது நிகழும் என்றால் அரசு அல்லது அதிகார வட்டம் ஈடுபட்டால் நிகழும் ! உதாரணமாக அரசாங்கம் தொடக்கத்தில் தன் அறிவிப்புகளில் ‘சாரணம் வரும் நேரம்’, ‘சாரணம் பதிவு’ என்றெல்லாம் இச்சொல்லைப் பயன்படுத்தியிருந்தால் மக்கள் அவசரம் அவசரமாக அதைத் தெரிந்துகொள்வர் ! ஆகவே , புதுச் சொற்கள் தோன்றும் இந்த இரு முறைகளிலும் நமக்குத் தெளிவு இருக்கவேண்டும் ! -

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்.,டிப். (வடமொழி),பி.எச்டி.,
சென்னை-33
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4442
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி - ஒரு ஆய்வு

Post by ராஜு சரவணன் on Sat Apr 06, 2013 5:41 pm

நன்றி முனைவரே ,

உங்களை போன்றோரின் விமர்சனங்கள் எங்களுக்கு ஒரு ஊக்கத்தையும் தன்னம்பிக்கையும் தருகிறது.

:நல்வரவு:

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி - ஒரு ஆய்வு

Post by சதாசிவம் on Sun Apr 07, 2013 7:24 am

பயனுள்ள பதிவு, சூப்பருங்க தொடருங்கள்

ஒரு சில கருத்துகள்..

தாங்கள் பட்டியிலிட்ட ஆங்கில சொற்களில் உருவாக்கும் முறை பெரும்பாலான மொழிகளில் கையாளப்படும் வழிமுறை தான், தமிழிலும்.

தேகம், விக்கிரகம், ராஜா, சலங்கை இவை கடன்வாங்கியவை
காவிரிபுகும் புகார் = புகும்புகார் = பூம்புகார்
சிற்றம்பலம் = சிதம்பரம் இவை சுருக்கியவை

இதுபோல் பிறமொழியில் இருந்து வந்த சொற்களோ, ஒரு பொருளில் ஆளப்பட்டு வழக்கத்தில் வரும் சொற்களும் மொழியில் ஏற்றுக்கொள்ளாம் என்று தொல்காப்பியம் சொல்கிறது...ஆங்கிலத்தில் சொல்லும் சொற்களின் ஓசைப் பிரிப்பான syllable தான் இங்கே அசை என்று சொல்லப்படுகிறது.

ஆங்கிலம் சொற்களும் மொழிநடையில் பயன்படுத்தும் பொழுது பல இலக்கண கட்டமைப்புக்குள் தான் அமைகிறது....ஆங்கிலச் சொற்களும் ஒரு பொருள் நிறைந்த சொல்லில் இருந்து தான் பிறக்கிறது. பல நேரங்களில் இது பிறமொழியில் இருந்து பெறப்பட்டு பின்பு ஆங்கிலவடிவம் பெறுகிறது.

இந்நிலையில் சொற்களை உருவாக்கும் பொழுது, இலக்கண மரபு அவசியமாகிறது. பொருளில்லா சொற்கள் பரவுவதிலும், நிலைப்பதிலும் சிரமம் ஏற்படும்.

ஒவ்வொரு தமிழ் வார்த்தையும் ஆராய்ந்தால் தமிழ் மொழியின் திறமை தெரியும்... கலைச் சொல்லாக்கம் இம்மொழியில் சுலபம் என்பதை உணரலாம்.


avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி - ஒரு ஆய்வு

Post by தர்மா on Sun Apr 07, 2013 7:52 am

வெள்ளைக்காரன் எந்த ஊருக்கு சென்றாலும் தனக்கு வாயில் அந்த நாட்டு மொழியில் வராத பொருள்களை இடங்களை அவன் வாயில் வருமாறு மாற்றி அதை உலக நியதி ஆக்கி விடுவான் உதாரணம் தான்
தூத்துக்குடி -டுடுகோரின்
கன்னியாகுமரி கேப் கோமரின்

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி - ஒரு ஆய்வு

Post by ராஜு சரவணன் on Sun Apr 14, 2013 2:44 am

Shortening or Clipping - சுருக்குதல் (அ) நறுக்குதல்

ஒரு சொல்லை சுருக்கியோ அல்லது பின்பகுதி நீக்கப்பட்டோ அதே பொருளை கொண்ட மற்றொரு புதிய சொல்லை உருவாக்குதல். எடுத்துகாட்டாக ஆங்கிலத்தில் examination என்ற சொல்லின் பின்பகுதி நீக்கப்பட்டு உச்சரிக்க எதுவாக exam என்று அழைக்கப்படுகிறது. அதேபோல் gymnasium என்ற சொல் gym என்று அழைக்கப்படுகிறது.

சொல்லின் பின்பகுதி மட்டுமின்றி முன் பகுதியையும் நீக்கி புதிய சொல் உருவாக்கப்படுகிறது. உதாரணமாக ஆங்கிலத்தில் telephone என்ற சொல் phone என்று அழைக்கப்படுகிறது. influenza என்ற சொல் flu என்று அழைக்கப்படுகிறது.

இதே போல் தமிழிலும் பல சொற்கள் உள்ளன
செம்மை = செம
மச்சான் = மச்சி
தலைவன் = தல
திருக்குறள் = குறள்.
திருமணம் = மணம்.
தண்ணிர் = நீர்
தென்னைமரம்= தென்னை.

இந்த வகை (சுருக்குதல் (அ) நறுக்குதல் ) நம் தமிழுக்கு உகந்த ஒன்று தான். இதன் மூலம் நீளமாக உள்ள சில சொற்களை சுருக்கி அல்லது நறுக்கி நாம் எளிதில் உச்சரிக்கும் வகையில் மாற்றிகொள்ளலாம். பொரும்பாலும் நம் ஊர்களின் பெயர்கள் இதன் முறையில் தான் மாற்றம் செய்யப்பட்டு அழைக்கப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி - திருச்சி , தஞ்சாவூர்- தஞ்சை, விழுப்புரம்-விழுக்கம், சிங்கப்பூர்- சிங்கை, உதகமண்டலம்-உதகை,திருநெல்வேலி-நெல்லை,புதுகோட்டை-புதுகை, நாகப்பட்டினம் - நாகை.

Functional Shift - செயல் மாற்று

ஒரு சொல்லுக்கு பல பொருள் இருப்பதே செயல் மாற்று என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் Fast என்ற சொல்லுக்கு வேகம் மற்றும் பட்டினி என்ற இரு பொருள் உண்டு. அது பயன்படுத்தும் இடங்களை பொருத்து பொருள் மாறுகிறது.

தமிழிலும் இது போன்ற சொற்கள் நிறைய உள்ளன. இதை நாம் திரிசொல் என்று அழைக்கிறோம்.
எடுத்துகாட்டாக 'ஆவி' இச்சொல்லுக்கு உயிர், பேய், மெல்லிய புகை முதலான பல பொருள்கள் உள்ளன. ஆவி என்பது பெயர்ச்சொல். எனவே இதைப் பலபொருள் குறித்த ஒரு பெயர்த் திரிசொல் என்கிறோம்.

இது போன்று சொற்களை தற்காலத்தில் உருவாக்குவது என்பது உண்மையில் முடியாது என்று தான் சொல்லவேண்டும்.

Back-formation - மீள் உருவாக்கம்

ஒரு சொல்லில் இருந்து மருவி புதிதாக ஒரு சொல் உருவாவதே மீள் உருவாக்கம் என்று அழைக்கப்படுகிறது.அப்படி உருவானாலும் அது குறிக்கும் பொருள் மாறுவதில்லை. ஆங்கிலத்தில் cherise என்ற சொல் பேச்சு வழக்கில் சற்று மருவி cherry என்று அழைக்கப்படுகிறது. enthusiasm என்ற சொல் enthuse என்று அழைக்கப்படுகிறது.

தமிழிலும் இது போன்ற சொற்கள் பல உள்ளன
மல்லிகைபூ - மல்லியப்பூ
கற்கண்டு - கல்கண்டு.
வெற்றிலை - வெத்தலை.

இந்த பதிவில் கூறிய அணைத்து வித ஆங்கில சொல் உருவாக்க முறைகளும், புழக்கத்தில் உள்ள சொற்கள் எவ்வாறு மாற்றமடைந்து மேலும் அதே பொருள் கொண்ட புதிய சொல்லாக மாற்றமடைகின்றன என்பதை மட்டுமே குறிக்கின்றது.

மற்றபடி புதிய சொல் உருவாக்கத்திற்கு இந்த முறைகள் உதவாது என்று தான் சொல்லமுடியும்.

மேலும் தொடரும்..

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி - ஒரு ஆய்வு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum