புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10 
4 Posts - 3%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10 
1 Post - 1%
bala_t
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10 
293 Posts - 42%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10 
6 Posts - 1%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10 
4 Posts - 1%
manikavi
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 17 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 17 of 84 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 50 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 16, 2013 10:38 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (116)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

புள்ளி மயங்கியலில் (Combination of Consonant - finals) , இப்போது ‘ள்’ ஈற்றின் கடைசி நூற்பா ! :-

“மக்க ளென்னும் பெயர்நிலைக் கிளவி
தக்கவழி யறிந்து வலித்தலு முரித்தே”  (புள்ளி மயங்கியல் 109)

               ‘மக்கள்’ என்பது உயர்திணைப் பெயர் (Personal class noun) .

உயர்திணைப் பெயராயின் , ‘எல்லா வழியும் இயல்பாகும்’ என்று முன்பே (தொகை மரபு 10) தொல்காப்பியர் விதித்துள்ளார் !

அதற்கு ஒரு விதிவிலக்குத்தான் இந்த  (புள்ளி மயங்கியல் 109) நூற்பா !

இந்த நுட்பத்தை இளம்பூரணர் உரை தருகிறது !

அந்த விதிவிலக்கு யாது ?

மக்கள் என்னும் சொல் , சில இடங்களில் வலிக்கவும் பெறும் என்பதுதான் !

அஃதாவது , ‘இயல்பாகும்’ என்ற விதிப்படி (தொகை மரபு 10)’

மக்கள் + தலை = மக்கள் தலை
என்றே வரும் என்பது இளம்பூரணர் கருத்து . ஆனால் , இறந்து கிடந்த மக்களாயின் –பிணங்களாயின்- பிணங்களின் தலையைக் குறிக்க , ‘மக்கள் + தலை = மக்கட் டலை’ என்று வரும் ; இதைத்தான் தொல்காப்பியர்(புள்ளி மயங்கியல்109) கூறுகிறார் என்பது இளம்பூரணர் வாதமாக உள்ளது !

நச்சினார்க்கினியரும் இதை ஆதரிக்கிறார் !

நச்சினார்க்கினியர் , “இக் கிடந்தது மக்கட் டலை” என்று எடுத்துக்கட்டுத் தருகிறார் !

“இங்கே கிடந்தது மக்களின் தலை” என்பது இதன் பொருள் !

ஆனால் , “சிறுபான்மை ‘மக்கட் பண்பு’ , ‘மக்கட் சுட்டு’ எனவும் வரும்” என்றும் நச்சினார்க்கினியர் கூறுகிறார் !

‘மக்கட் சுட்டு’ , ‘மக்கட் பண்பு’ முதலிய திரிந்த வடிவங்கள் தொல்காப்பியர் காலத்திலேயே வந்திருக்க வேண்டும் ! அவற்றைக் கொள்ளவேண்டும் என்பதே நச்சினார்க்கினியர் கருத்து !

‘தக்கவழி அறிந்து வலித்தலும் உரித்தே ’ என்று தொல்காப்பியர் (புள்ளி மயங்கியல் 109) கூறிவிட்டதால் , ‘மக்கட் பண்பு’ , ‘மக்கட் பேறு’ , ‘மக்கட் சுட்டு’ ஆகிய திரிந்த வடிவங்களை நாம் கொள்வது தொல்காப்பியருக்கு ஏற்புடையதே !

கை , செவி தலை , புறம் (முதுகு) ஆகிய உறுப்புகளை ‘மக்கள்’ எனும் சொல்லோடு சேர்க்கும்போதுதான் உயிருடன் உள்ள மக்களாயின் , ‘மக்கள் தலை’ , ‘மக்கள் செவி’ , ‘மக்கள் கை’ , ‘மக்கள் புறம்’ எனவும் , இறந்த மக்களாயின் ‘மக்கட் டலை’ , ‘மக்கட் செவி’ , ‘மக்கட் கை’ , ‘மக்கட் புறம்’என்று இளம்பூரணர் கூறினார் ! ‘மக்கட் பேறு’ , ‘மக்கட் செல்வம்’ என்ற சொற் புணர்ச்சிகள்   இருந்தமை இளம்பூரணர் அறிந்ததுதான் !

தொல்காப்பியத்தை நுணுகி ஆய்வோருக்கு ஓர் உண்மை புலனாகும் !

அஃதாவது , தலை, கால், கை , புறம் முதலிய உறுப்புகள் பிற சொற்களோடு புணரும்போது எப்படிப் புணரும் என்பதில் தொல்காப்பியரும் உரையாசிரியர்களும் கவனமாக இருந்துளர் என்பதுதான் அந்த உண்மை !

இந்த உண்மைக்கு ஏற்பத்தான் நாம் தொகை மரபு 10 , புள்ளி மயங்கியல் 109 ஆகியவற்றை அணுக வேண்டும் !

‘மக்கள் தலை’ என்ற மிகப் பழைய புணர்ச்சி குழப்பம் தந்ததால்தான், ‘இன்’ சாரியை புகுந்து , ‘மக்களின் தலை’ என்ற தெளிவைத் தந்தது !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 17, 2013 5:36 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (117)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

பார்க்கப் போவது புள்ளி மயங்கியலின் இறுதி நூற்பா !:-

“உணரக் கூறிய புணரியன் மருங்கின்
கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே”   (புள்ளி மயங்கியல் 110)

இது , புள்ளி மயங்கியலின் ‘புறனடை’ (Exceptions and Additions) !

              அஃதாவது , ‘இதுவரை என்னதான் விதிகள் கூறியிருப்பினும் , அவற்றில் அடங்காத புணர்ச்சிகள் வழக்கினுள் வருவதைப் பார்த்து , அவற்றையும் ஏற்றுக்கொள்க !’ என்பது கருத்து!

(I) ‘ன்’ ஈறு , வேற்றுமையில் , ‘ற்’ ஆக மாறும் என்பது விதி ! (புள்ளி. 37). ஆனால், இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகளின்படி , இவ்விதிக்கு மாறான புணர்ச்சிகளும் தமிழில் உள !:-

விழன் + குளம் = விழற் குளம் ×
விழன் + குளம் = விழன் குளம் √  (வேற்றுமைப் புணர்ச்சி)

விழன் + சேறு = விழற் சேறு ×
விழன் + குளம் = விழன்  சேறு √  (வேற்றுமைப் புணர்ச்சி)

விழன் + தரை = விழற் றரை ×
விழன் + தரை = விழன் தரை √  (வேற்றுமைப் புணர்ச்சி)

விழன் + பழனம் = விழற் பழனம் ×
விழன் + பழனம் = விழன் பழனம் √  (வேற்றுமைப் புணர்ச்சி)

விழன் – நிழல்

(II)   ‘ர்’ ஈற்று வேற்றுமைப் புணர்ச்சியைத்தான் முன்பு (புள்ளி.67) கூறியிருந்தார் தொல்காப்பியர் !

இங்கு , இளம்பூரணர் , அல்வழியில் ‘ர்’ ஈற்றுச் சொற்கள் வருவதை எடுத்துக் காட்டுகிறார் !:-

நீர் + குறிது = நீர் குறிது (அல்வழிப் புணர்ச்சி)

நீர் + சிறிது = நீர் சிறிது (அல்வழிப் புணர்ச்சி)

நீர் + தீது = நீர் தீது (அல்வழிப் புணர்ச்சி)

நீர் + பெரிது = நீர் பெரிது (அல்வழிப் புணர்ச்சி)

 (III) ‘ர்’ ஈற்றுச் சொற்கள் சில ‘உறழும் ’ (வல்லொற்றுப் பெற்றும் பெறாதும் வரும்) என்று காட்டுகிறார் இளம்பூரணர் ! :-

வேர் + குறிது = வேர் குறிது √   (அல்வழிப் புணர்ச்சி)
      = வேர்க் குறிது √   (அல்வழிப் புணர்ச்சி)

(IV)  ‘கண்’ எனும் வேற்றுமை உருபு வராமல், ஆனால் அதனுடைய பொருளில் அமைந்த புணர்ச்சியானது வருமாறு அமையும் என்கிறார் இளம்பூரணர் !:-

அம்பர் + கொண்டான் = அம்பர்க் கொண்டான் (வேற்றுமைப் புணர்ச்சி )
இம்பர் + கொண்டான் = இம்பர்க் கொண்டான் (வேற்றுமைப் புணர்ச்சி )
உம்பர் + கொண்டான் = உம்பர்க் கொண்டான் (வேற்றுமைப் புணர்ச்சி )
எம்பர் + கொண்டான் = எம்பர்க் கொண்டான் (வேற்றுமைப் புணர்ச்சி )

அம்பர் – அவ்விடம் ; இம்பர் – இவ்விடம் ; உம்பர் – அங்கும் இல்லாது இங்கும் இல்லாது நடுவே ; எம்பர் – எவ்விடம் .

அம்பர் + சென்றான் = அம்பர்ச் சென்றான் (வேற்றுமைப் புணர்ச்சி )
இம்பர் + சென்றான் = இம்பர்ச் சென்றான் (வேற்றுமைப் புணர்ச்சி )
உம்பர் + சென்றான் = உம்பர்ச் சென்றான் (வேற்றுமைப் புணர்ச்சி )
எம்பர் + சென்றான் = எம்பர்ச் சென்றான் (வேற்றுமைப் புணர்ச்சி )

அம்பர் + தந்தான் = அம்பர்த்  தந்தான் (வேற்றுமைப் புணர்ச்சி )
இம்பர் + தந்தான் = இம்பர்த்  தந்தான் (வேற்றுமைப் புணர்ச்சி )
உம்பர் + தந்தான் = உம்பர்த்  தந்தான் (வேற்றுமைப் புணர்ச்சி )
எம்பர் + தந்தான் = எம்பர்த்  தந்தான் (வேற்றுமைப் புணர்ச்சி )

அம்பர் + போயினான் = அம்பர்ப் போயினான் (வேற்றுமைப் புணர்ச்சி )
இம்பர் + போயினான் = இம்பர்ப் போயினான் (வேற்றுமைப் புணர்ச்சி )
உம்பர் + போயினான் = உம்பர்ப் போயினான் (வேற்றுமைப் புணர்ச்சி )
எம்பர் + போயினான் = எம்பர்ப் போயினான் (வேற்றுமைப் புணர்ச்சி )

(V)  மேலே , அல்வழியையும் ( ‘நீர் குறிது’) , அல்வழி உறழ்ச்சியையும் ( ‘வேர் குறிது’, ‘வேர்க் குறிது’)  பார்த்தோ மல்லவா?

இளம்பூரணர் , அல்வழியில் , இயல்பில்லாமலும் உறழ்ச்சி இல்லாமலும் வல்லொற்றுப் பெற்றே புணரும் இடத்தைச் சுட்டுகிறார் ! :-

தகர் + குட்டி = தகர் குட்டி ×
                        = தகர்க் குட்டி √  (அல்வழிப் புணர்ச்சி)

‘தகர்க் குட்டி’ என்பதைத்  ‘தகரின் குட்டி’ என விரித்தால் – வேற்றுமைப் புணர்ச்சி ! ; ‘தகராகிய குட்டி’ என விரித்தால் , அல்வழிப் புணர்சி !
தகர் – ஆடு

(VI)   வடக்குப் பக்கக் கூரை , ‘வடசார்க் கூரை’ !   ‘வடக்குச் சார்’ என்பது மருவி , ‘வடசார்’ ஆனது !

இது மரூஉ!
இருப்பினும் , இதில் புணர்ச்சி  விதி எதுவும் மீறப்படவில்லை !

வட + சார் + கூரை = வடசார்க் கூரை

இதே போன்று , ‘இலக்கணத்தோடு பொருந்திய மரூஉ முடிபு’ பெற்ற இன்னொரு சொல்லாக இளம்பூரணர் காட்டுவது :-

‘தென்சார்க் கூரை’

(VII)  பூல் , வேல் , ஆல் ஆகிய மரப்பெயர்கள் வேற்றுமையில் அம்சாரியை பெரும் என்று முன்பு விதி (புள்ளி.80) கூறியிருந்தார் தொல்காப்பியர் !

இங்கு , இதே விதி பொருந்தும் மேலும் சில சான்றுகளை இளம்பூரணர் குறிக்கிறார் ! :-

உசிலம் + கோடு = உசிலங் கோடு (வேற்றுமைப் புணர்ச்சி)

எலியாலம் + கோடு = எலியாலங் கோடு (வேற்றுமைப் புணர்ச்சி)

(VIII)   ‘ல்’ ஈற்றுச் சொற்கள் , அல்வழியில் உறழும் என்று ( கல் குறிது √ ; கற் குறிது √) முன்பு கூறியிருந்தார் (புள்ளி. 73) தொல்காப்பியர் !

இங்கு , புறனடையில் , இளம்பூரணர் ,அல்வழியில் , ‘அம்’ சாரியை பெறுதலையும் சுட்டுகிறார் ! :-
கல் + பாறை = கல்லம் பாறை  (அம் – சாரியை ; அல்வழிப் புணர்ச்சி)

கல்லம் பாறை – கல்லாகிய பாறை .

(IX)  வேற்றுமையில் , அத்துச் சாரியை பெற்று , ‘ மழையத்துக் கொண்டான்’ என்றும்(உயிர் மயங்கியல் 85), ‘வெயிலத்துக் கொண்டான்’  என்றும் (புள்ளி. 82) வருதலைக்  கூறியிருந்தார் தொல்காப்பியர் !

இங்கு , இளம்பூரணர் –

அழல் + கொண்டான் = அழலத்துக் கொண்டான் (அத்து – சாரியை ; வேற்றுமைப் புணர்ச்சி)
என்று புதிய எடுத்துக்காட்டைத் தருகிறார் !

அழல் – நெருப்பு ; (வேள்வித் தீயின் முன் மணம் செய்து கொள்வது – அழற் கொள்வது)

(X)   ‘ல்’ ஈறு , வேற்றுமையில் , ‘ற்’ ஆகும் என்று முன்பு (புள்ளி மயங்கியல் 71)
கூறியிருந்தார் ( கல் + குறை = கற் குறை)தொல்காப்பியர் !

இங்கு , இளம்பூரணர் , ‘ல்’ ஈற்றுச் சொல் , அல்வழியிலும் ‘ற்’ ஆதலைக் காட்டுகிறார் ! :-

அழுக்கல் + போர் = அழுக்கற் போர் (அல்வழிப் புணர்ச்சி)

அழுக்கல் போர் – அழுக்கலாகிய போர் .

அழுக்கல் – அழுக்காறு ; பொறாமை.

‘அழுக்கற் போர்’ தான் , ‘அழுக்கப் போர்’ ஆகிப் , பின் ‘அக்கப் போர்’ ஆனது ! சரியான அக்கப் போர் !

(XI)  ‘ழ்’ ஈற்றில் ,அல்வழியில் , முன்பு (புள்ளி.94,95,96,97,98) சில எண்ணுப் பெயர்களுக்கே விதி கூறியிருந்தார் தொல்காப்பியர் !

இப் புறனடைச் சூத்திர உரையில் , இளம்பூரணர் , ‘ழ்’ ஈற்று அல்வழிப் புணர்ச்சிகள் சிலவற்றைக் கூடுதலாகக் காட்டுகிறார் ! :-

யாழ் + குறிது = யாழ் குறிது (அல்வழிப் புணர்ச்சி)

யாழ் + சிறிது = யாழ் சிறிது (அல்வழிப் புணர்ச்சி)

யாழ் + பெரிது = யாழ் பெரிது (அல்வழிப் புணர்ச்சி)

(XII)   ‘ழ்’ ஈற்று உறழ்ச்சியில் , முன்பு தொல்காப்பியர் , ‘பாழ்’ , ‘கீழ்’ ஆகிய சொற்களுக்கே விதி (புள்ளி.92,100) கூறியிருந்தார் !

இங்கு இளம்பூரணர் , மேலும் ஓர் எடுத்துக்காட்டுத் தருகிறார் !:-

வீழ் + குறிது = வீழ் குறிது √  (அல்வழிப் புணர்ச்சி)
வீழ் + குறிது = வீழ்க் குறிது √  (அல்வழிப் புணர்ச்சி)

(XIII) ‘அக்கு’ச் சாரியை பெற்று முடியும் ‘ழ்’ ஈற்றுச் சொற்களை ( ‘தாழ்’ , ‘தமிழ்’) வேற்றுமையில்தான் தொல்காப்பியர் (புள்ளி. 89 , 90) தந்திருந்தார் !

இங்கு , இளம்பூரணர் , அல்வழியில் ‘அக்கு’ வருவதைத் தருகிறார் ! :-

தாழ் + பாவை = தாழப் பாவை  (அக்குச் சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

தாழ்ந்த உயரத்துப் பொம்மையைக் குறிக்கும் போலும் .

(XIV)  ‘ம்’ ஈற்றுப் புணர்ச்சிகளில் , வேற்றுமையில் , முன்பு (புள்ளி.36), அத்துச் சாரியையோடு ஆன் சாரியை புணரும் விதியையே தொல்காப்பியர் காட்டியிருந்தார் ( ‘மகத்தாற் கொண்டான்’) !

இங்கு , இளம்பூரணர் , அத்தோடு ‘இன்’ வருதலையும் சுட்டுகிறார் ! :-

குளம் + புறம் = குளத்தின் புறம் (அத்து , இன் - சாரியைகள்) (வேற்றுமைப் புணர்ச்சி)

மரம் + புறம் = மரத்தின் புறம் (அத்து , இன் - சாரியைகள்) (வேற்றுமைப் புணர்ச்சி)

‘குளம் + புறம் = குளத்துப் புறம்  ’ எனவும் ஆகும் !  ‘அத்து’ வேற்றுமை உருபின் பணியைச் செய்கிறது ! (Inflectional particle does the job of Case marker)

இதைத்தான் இளம்பூரணர், ‘உருபிற்கு எய்திய அத்து’ என்கிறார் !

அல்வழியில் உகரச் சாரியை பெறுதலுக்குத் தொல்காப்பியர் விதி (புள்ளி. 106) வகுத்திருந்தார் ( ‘துள்ளுக் கடிது’) !

இங்கு இளம்பூரணர் , ஐகாரச் சாரியைக் கூடுதலாக வழங்குகிறார் ! :-

ஒருநாள் + குழவி = ஒரு நாளைக் குழவி (ஐ - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

மேலே ‘உசிலம்’ என்றொரு சொல்லைப் படித்திருப்பீர்கள் !

‘உசிலம்’ என்பது ஒரு மரமாகும் !
உசில மரத்தைப் பார்க்க ஆவலாக உள்ளதா?
[You must be registered and logged in to see this link.]
Courtesy – granny.com

இதுதான் உசில மரம் ! இதன் தாவரவியல் பெயர்- Albizzia amara . இதன் பொதுப் பெயர் -  Black sirissa . தமிழில் இம்மரம் ‘சீக்கிரி மரம்’ எனப்படுகிறது ! சோப்பு மரம் , உஞ்சை மரம், உசிலை மரம் என்றெல்லாம் அறியப்படுவது இதுதான் !இன்றைய உசிலம் பட்டியில் அந்தக் காலத்தில் உசில மரங்கள் மண்டியிருந்திருக்கவேண்டும் ! தொல்காப்பிய ஆய்வால் உசிலம் பட்டிக்காரர்களுக்கு ஒரு வரலாறு கிடைத்துள்ளது! அது மட்டுமல்ல , ‘உஞ்சேனை மாகாளம்’ என்று திருமுறை குறிக்கும் உஞ்சனை எனும் ஊர் காரைக்குடியை அடுத்து இருப்பதாக அக்கோவில் கல்வெட்டுச் சான்று கொண்டு சூரிய நாராயணன் என்ற வரலாற்றுத்துறைப் பேராசிரியர் எழுதியுள்ளார் !அவர் காரைக்குடி அழகப்பா கலைக் கல்லூரியில் ( ‘பல்கலைக் கழகம்’ ஆனதெல்லாம் பிறகுதான்) பணிபுரிந்தபோது இதை க் கண்டுபிடித்தார். இந்த உஞ்சனையிலும் இதே உஞ்சை மரங்கள் அந்தக் காலத்தில் நிறைந்திருந்திருக்க வேண்டும் !திண்டுக்கல் மாவட்டக் கோட்டைப் பட்டி என்ற ஊர்ப் பெருமாள் கோயில் தல மரமும் உசிலை தான் .



‘எலியாலம்’ என்றொரு சொல்லையும் மேலே கண்டிருப்பீர்கள் !
எலியாலத்தைப் பார்க்க ஆசையா ?
[You must be registered and logged in to see this link.]
Courtesy -afason.itrademarket.com
‘எலியாலம்’ என்பதும் தாவரப் பெயர்தான் ! இது வேறொன்றுமில்லை ! காட்டாமணக்குதான் ! ‘Physic nut’ அறியப்படும் இதன் தாவரவியல் பெயர் – Jatropha curcas . காட்டாமணக்கு விதை நச்சுத் தன்மை கொண்டது; ஆனால் தாவர எரிபொருள்களில் முன்னிலை வகிப்பது காட்டாமணக்கு!

புள்ளி மயங்கியல் இத்துடன் நிறைவடைகிறது !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 21, 2013 10:24 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (118)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

புள்ளி மயங்கியலை இதுவரை ஆய்ந்தோம் !

இதனை அடுத்து வருவது குற்றியலுகரப் புணரியல் (Combination of Abbreviate உ) !

எழுத்ததிகாரத்தில் 9ஆவது  இயலாகிய குற்றியலுகரப் புணரியலே எழுத்ததிகாரத்தின் கடைசி இயல் !

சொற்களின் ஈற்றில் குற்றியல் உகரம் இருந்தால் , அப்படிப் பட்ட சொற்கள் பிற சொற்களுடன் எப்படிப் புணரும் என்பதை விவரிக்கும் இயல் இது !

புணர்ச்சிகளில் தனிக் கவனத்திற்கு உரியது குற்றியலுகரப் புணர்ச்சி !

இதனால்தான் இதற்கு ஒரு தனி இயல் தேவைப்பட்டது தொல்காப்பியருக்கு !

முதல் நூற்பா !:-

“ஈரெழுத் தொருமொழி உயிர்த்தொட ரிடைத்தொடர்
ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர்
ஆயிரு மூன்றே யுகரங் குறுகிடன்”  (குற்றியலுகரப் புணரியல் 1)

                     இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளைப் பொருத்தினால் –

1 . ஈரெழுத்து ஒரு மொழி  - ‘நாகு’

2 . உயிர்த் தொடர் மொழி  -  ‘வரகு’

3 .  இடைத் தொடர் மொழி  -  ‘தெள்கு’

4 .  ஆய்தத் தொடர் மொழி  -  ‘எஃகு’

5 .  வன் தொடர் மொழி  -  ‘சொக்கு’

6 . மென் தொடர் மொழி  -  ‘குரங்கு’

இந்த ஆறு இடங்களில்தான் உகரமாகனது குறுகும் என்பதே தொல்காப்பியம் !

‘ஈரெழுத்து ஒரு மொழி  ’ முதலிய தொல்காப்பிய நடையைவிட்டுப் பரம்பரை இலக்கண ஆசிரியர்கள் நமக்குக் கற்றுத் தந்த நடையில் மேல் ஆறையும் வருமாறு வேறு எடுத்துக்காட்டுகளுடன் தரலாம் !:-

1 . பாடு  - நெடில் தொடர்க் குற்றியலுகரம்

2 . பழகு  - உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்

3 . மல்கு  -  இடைத் தொடர்க் குற்றியலுகரம்

4 . கஃசு  -  ஆஃதத் தொடர்க் குற்றியலுகரம்

5 . பாக்கு  -  வன் தொடர்க் குற்றியலுகரம்

6 .  கலங்கு   - மென் தொடர்க் குற்றியலுகரம்

குற்றியலுகரத்தை உச்சரித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டும் !

எப்படி?

‘பாக்கூ’ என்று முதலில் சொல்லுங்கள் ; பிறகு ‘பாக்கு’ என்று சொல்லுங்கள் ; இப்போது உங்களுக்கு ஈற்று உகரத்தில் ஒரு வேறுபாடு தெரியவரும் ! அதுதான் குற்றியலுகரம் ! ஈற்றுக் குகரத்தை முழுவதுமாக (முற்றியலுகரமாக)உச்சரித்தால் ,ஏறக்குறைய ‘கூ’ என்றுதான் கேட்கும்! அது விகாரமாக இருக்கும் ! அதனால்தான் அங்கே உகரத்தைச் சற்றுக் குறைத்து (குற்றியலுகரமாக) உச்சரிக்கவேண்டும் எனத் தமிழ் இலக்கணம் கூறுகிறது ! வேறு ஒன்றுமில்லை !

‘கு’ – இதிலுள்ள உகரம் , முற்றியலுகரம் .

‘புகு’ – இதிலுள்ள இரண்டு  உகரங்களும் முற்றியலுகரங்கள்!

‘குட்டு’ – இதிலுள்ள முதல் உகரம் (க் + உ) , முற்றியலுகரம் ; இரண்டாவது உகரம் (ட் + உ) குற்றியலுகரம் !

‘அது’ – இதிலுள்ள உகரம் , முற்றியலுகரம் ! ஏனெனில் , தனியாக நிற்கும் ஒரு குறிலை (அ) அடுத்துள்ள மெய் மீது ஏறி நிற்கிறது ‘உ’ . கன்னடத்தில் இன்றும் ‘அதூ’ என்றுதான் உச்சரிக்கிறார்கள் ! தொல் தமிழின் பழைய எச்சம் எப்போதுமே தென்னிந்திய மொழிகளில் இருக்கும் !

‘சுண்ணாம்பு ’ – இதிலுள்ள ஈற்று உகரம் (ப்+ உ), மென்றொடர்க் குற்றியலுகரம் .

குற்றியலுகரத்திற்குப் பெயர் கொடுக்கும்போது , எந்த எழுத்து மீது ‘உ’ ஏறி நிற்கிறதோ அதற்கு முன் நிற்கும் எழுத்தைப் பார்க்கவேண்டும் ! முன் நிற்கும் எழுத்து வல்லின மெய்யாக இருந்தால் , குற்றியலுகரத்தை வன்றொடர்க் குற்றியலுகரம் எனல்வேண்டும் ! முன் நிற்கும் எழுத்து ஒரு மெய் மீது ஏறிய உயிராக இருந்தால் , குற்றியலுகரத்தை , உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எனல்வேண்டும் !

‘விளாசு’ – இதிலுள்ள குற்றியலுகரம் நெடில்தொடர்க் குற்றியலுகரமா ?உயிர்த்தொடர்க் குற்றியலுகரமா?
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் !

எப்படி ? ‘ளா’ என்பது நெடில்தானே ?

‘ளா’ நெடில்தான் ! ஆனால் நெடில்தொடர்க் குற்றியலுகரம் என்பது , தனியாக , ஒற்றையாக , நிற்கும் நெடில் எழுத்தை அடுத்து வரவேண்டும் ! பாடு , வாடு , காடு – இவற்றிலுள்ள உகரங்களே நெடில்தொடர்க் குற்றியலுகரங்கள் ! ‘விளாசு’ என்பதிலுள்ள ‘ஆ’ , தனியாக நிற்கும் நெடிலாக இல்லாது , ‘வி’யை அடுத்து வந்துள்ளதால் , ‘ளா’ வில்  உள்ள ‘ஆ’தான் நமக்குக் கணக்கு ! ‘ஆ’ – உயிராக இருப்பதால் , உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் என்றே ஆகும் !

குற்றியலுகரத்திற்கு மாத்திரை – ½
நமக்கு – இதிலுள்ள ஈற்று உகரத்திற்கு  ½ மாத்திரை எனில் , அது ஏறி நிற்கிறதே ‘க்’ அதற்குத் தனியாக 1/2 மாத்திரை ஒதுக்கி , ½ + ½ = 1  மாத்திரை ‘கு’விற்குக் கூறவேண்டுமா ?

அல்ல !

மொத்தக் ‘கு’விற்குமே மாத்திரை ½ தான் !

சவ்வு – இதிலுள்ள உகரம் முற்றியலுகரமாதலால் , மொத்த ‘வு’விற்குமே மாத்திரை 1 .

இளம்பூரணர் நெடில் தொடர்க் குற்றியலுகரத்திற்குக் கூறிய ‘நாகு’ என்பது இளமரத்தைக் குறிக்கும் !

தாவரவியலில் இது குறிப்பிடத் தக்க செய்தி !

தாவரவியலார் (Botanists) இளமரத்தைச், சிறு மரம் என்று தோராயமாகத்தான் எழுதுகின்றனர் !

அருமையான ‘நாகு’  தமிழர்களுக்குத் தெரியவராமற் போனது !

தரையோடு படர்ந்திருக்கும் சிறு செடிகள் (சாரணத்தி போல்வன) , புல் போன்றவற்றைத் தமிழர்கள் ‘பூண்டு’ என்று குறித்தனர் ! இந்தச் சொல்லையும் தமிழர்கள் பயன்படுத்துவதில்லை !

இவற்றையெல்லாம் தமிழர்கள் வழக்கில் பயன்படுத்தவேண்டும் !

தொல்காப்பிய ஆய்வு , இவ்வாறு , பல்துறை ஆய்வாகச் செல்வதைக் காணலாம் !

இளம்பூரணர் குறித்த ‘தெள்கு’ (Flea) , ஒரு பூச்சியின் பெயராகும் !

இதன் விலங்கினப் பொதுப் பெயர் – Pulicidae .

தெள்குப் பூச்சி , மருவித் , ‘தெள்ளுப் பூச்சி’ என இன்று வழங்குகிறது ! ‘தெள்ளு மணி’ , வேறு ! தெள்ளு மணி – தெளிவான மணி .

இளம்பூரணர் குறித்த தெள்குப் பூச்சியைக் காண ஆசையா ?


[You must be registered and logged in to see this link.]
Courtesy - Terminixsisindia.com
இதுதான் தெள்குப் பூச்சி ! ‘உண்ணி’ என்பதும் இதுவே ! மனிதனிடத்தும் நாய் போன்ற விலங்குகளிட்தும் உட்கார்ந்துகொள்ளும் இது !
மனிதன் மீது அமரும் உண்ணி - Pulex irritans;நாய் மீது அமரும் உண்ணி -  Ctenocephalides spp.;எலி மீது அமரும் உண்ணி - Xenopsylla cheopis.
உண்ணி ,தோலைத் துளைத்து உட்பரப்பில் இனப் பெருக்கம் செய்து நோய்க் கட்டிகளை உண்டாக்கும்! பாலுண்ணி , குருணை உண்ணி முதலிய பெயர்களில் தமிழர்கள் அறிந்துள்ளார்கள் !

 

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 24, 2013 10:27 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (119)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

குற்றியலுகரப் புணரியலின் இரண்டாம் நூற்பா!:-

                              “அவற்றுள்
       ஈரொற்றுத் தொடர்மொழி யிடைத்தொட  ராகா”  (குற்றியலு.2)

‘ஈறொற்றுத் தொடர்மொழி’ – ர்க்கு , ய்க்கு , ழ்க்கு, போன்று இரு புள்ளி எழுத்துகளின் பின்னுள்ள மெய் மீது ஏறிய குற்றியலுகரம் !

‘இடைத் தொடர் ஆகா’ – வன்றொடர்க் குற்றியலுகரம், மென்றொடர்க் குற்றியலுகரம் தவிர , இடைத்தொடர்க் குற்றியலுகரம் அதற்கு முன்னுள்ள இடையின ஒற்றெழுத்துக்கு முன் வேறொரு ஒற்றெழுத்தைக் கொள்ளாது!  

ஈர்க்கு √  (வன்றொடர்க்  குற்றியலுகரம்)
ஈர்ய்கு ×  (இடைத்தொடர்க்  குற்றியலுகரமே; ஆனால் இப்படி ஒரு சொல் இல்லை)
ஈர்ல்கு ×  (இடைத்தொடர்க்  குற்றியலுகரமே; ஆனால்  இப்படி ஒரு சொல் இல்லை)
ஈர்வ்கு × (இடைத்தொடர்க்  குற்றியலுகரமே; ஆனால்  இப்படி ஒரு சொல் இல்லை)

                  மொய்ம்பு√  (மென்றொடர்க்  குற்றியலுகரம்)
மொய்ய்பு  ×  (இடைத்தொடர்க்  குற்றியலுகரமே; ஆனால்  இப்படி ஒரு சொல் இல்லை)
மொய்ர்பு ×  (இடைத்தொடர்க்  குற்றியலுகரமே; ஆனால்  இப்படி ஒரு சொல் இல்லை)
மொய்வ்பு × (இடைத்தொடர்க்  குற்றியலுகரமே; ஆனால்  இப்படி ஒரு சொல் இல்லை).

தமிழ்ச் சொற்கள் மீது தொல்காப்பியத்திற்கு உள்ள ஆளுமையைப் பார்த்தீர்களா?

வன்றொடர் , மென்றொடர்க் குற்றியலுகரங்கட்கு இல்லாத ஓர் இடைஞ்சல் இடைத்தொடர்க் குற்றியலுகரத்திற்கு உள்ளது!

தமிழ் ஒலி அமைப்பில் , வல்லின , மெல்லின உச்சரிப்பில் உள்ள எளிமை, இடையின எழுத்துகளில் இல்லை என்பதையே இது காட்டுகிறது !

ஒலியன்களின் மயக்கம் (Cluster of phonemes) என்ற வகையில் மொழியியலில் இது குறிப்பிடத் தக்கது !

இதனைத் தொடர்ந்து ,

“அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்
எல்லா விறுதியு முகர நிறையும்”                    (குற்றியலு. 3)

என்கிறார் தொல்காப்பியர் !

‘அல்லது கிளப்பினும் ’ – அல்வழிப் புணர்ச்சிகளிலும்

‘வேற்றுமைக் கண்ணும்’ – வேற்றுமைப் பொருட் புணர்ச்சிகளிலும்

‘உகரம் நிறையும்’ -  உகரமானது , நிறைந்த உகரமாகும் ; அஃதாவது முற்றியலுகரமாக நிற்கும் !

நாகு – நெடில்தொடர்க் குற்றியலுகரம்

நாகு + கடிது = நாகு கடிது   (அல்வழிப் புணர்ச்சி)

‘நாகு கடிது’ என்று சேர்ந்து வரும்போது  ‘கு’வின் உகரம் முற்றியலுகரம் ! ‘கு’வை முழுமையாக உச்சரித்தால்தான் அடுத்த எழுத்திற்குப் போகமுடியும் !

குற்றியலுகரப் புணரியல் நூற்பா ஒன்றில் ,தொல்காப்பியர் ,சொற்களின் ஈற்றில் வரும் குற்றியலுகரத்தையே நமக்கு அறிமுகப் படுத்தினார் என்பதை நினைத்தால் இந்த உண்மை விளங்கும் ! ஈற்றிலே குற்றியலுகரம் வந்தால் அதற்குமேல் போகவேண்டியிருக்காது அல்லவா?

நாகு + கடுமை = நாகு கடுமை  (வேற்றுமைப் பொருட் புணர்ச்சி)

‘நாகு கடுமை’ – இதிலுள்ள ‘கு’வின் உகரம் முற்றியலுகரம் !

வரகு – உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

வரகு + கடிது = வரகு கடிது (அல்வழிப் புணர்ச்சி)
‘வரகு கடிது’ – இதிலுள்ள ‘கு’வின் உகரம் , முற்றியலுகரம் !


வரகு + கடுமை = வரகு கடுமை (வேற்றுமைப் புணர்ச்சி)
‘வரகு கடுமை’யில் உள்ள  ‘கு’வின் உகரம், முற்றியலுகரம் !

வரகு               கடிது
பெயர்  +  குறிப்பு வினை முற்று
Noun +  Appellative finite verb

மேல்வந்த கூற்றியலுகரம் பற்றி மேலும் ஆயலாமா?

குத்து – ஈற்று உகரம் வன்றொடர்க் குற்றியலுகரம் (மாத்திரை 1/2)

குத்துப் பாட்டு – ‘து’வின் உகரம் முற்றியலுகரம் (மாத்திரை 1) (வேற்றுமைப் பொருட் புணர்ச்சி)

‘குத்துப் பாட்டு’ – சொல்லிப் பாருங்கள் ! ‘து’வை முழுதாக உச்சரித்தால்தான் அடுத்த சொல்லுக்குப் போகமுடியும் !
‘குத்துச் சண்டை’ -   ‘து’வை முழுதாக உச்சரித்தால்தான் அடுத்த சண்டைக்குப் போகமுடியும் !
‘குத்துக்கு’ – ‘து’வின் உகரம் , குற்றியலுகரம் ! (மாத்திரை 1/2); ஈற்றுக் ‘கு’வின் உகரமும் , குற்றியலுகரம் (மாத்திரை 1/2).

எப்படி? இங்குமட்டும் இடையிலே உள்ள ‘து’வின் உகரம் குற்றியலுகரமானது?

மேல்  உரையை மீண்டும் பாருங்கள் ! ‘வேற்றுமைப் பொருட் புணர்ச்சிகளிலும்’ என்றுள்ளதல்லவா? இளம்பூரணர் ஆட்சிதான் இது !

எனவே , ‘வேற்றுமைக்கண் உகரம் நிறையும்’ என்ற  விதி , குகரப் புணர்ச்சிக்குப் பொருந்தாது ! கு –  தனி வேற்றுமை உருபு .

கேட்டு – ஈற்று உகரம் வன்றொடர்க் குற்றியலுகரம் (மாத்திரை 1/2) .

‘கேட்டு வாங்கு ’- ‘டு’வின் உகரம் , முற்றியலுகரம் (மாத்திரை 1) (அல்வழிப் புணர்ச்சி); ‘கு’வின் உகரம் குற்றியலுகரம் (மாத்திரை 1/2) .

தமிழ் மக்கள் நாவில் உகரம் உச்சரிக்கப்பட்டதைத் துல்லியமாகப் பதிவு செய்து கொடுத்துள்ளது குற்றியலுகர இலக்கணம் ! இது பெரிய வியப்புதான் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 24, 2013 2:15 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (120)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

சென்ற கட்டுரையில் , ‘குத்துச் சண்டை’யில் ,‘து’விலுள்ள உகரம் முற்றியலுகரம் என்று பார்த்தோமல்லவா?

இவ்வாறு இடையிலே மாட்டிக்கொண்ட எல்லா உகரங்களுமே முற்றியலுகரங்களல்ல ; இதற்கு விதிவிலக்கு உண்டு என்று அடுத்த நூற்பாவில் உரைக்கிறார் !:-

“வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழி
தொல்லை யியற்கை நிலையலு முரித்தே”                  (குற்றியலு. 4)

‘வல்லொற்றுத் தொடர்மொழி’ -  வன்றொடர்க் குற்றியலுகரம்

‘வல்லெழுத்து வரும் வழி’  -  வல்லின எழுத்தை முதலாகக் கொண்ட சொல் வந்து புணர்ந்தால்

‘தொல்லை இயற்கை’ -  தொடக்கத்தில் (நூன் மரபு 12) கூறியபடி , குற்றியலுகரத்திற்கு ½ மாத்திரையே

‘நிலையலும் உரித்தே’ – வரலாம் , வராமல் 1 மாத்திரையும் பெறலாம் !

அஃதாவது , புணர்ச்சியின் நடுவே அகப்பட்ட  குற்றியல் உகரத்திற்கு  மாத்திரை 1 (குற்றியலு. 3) என்று தொல்காப்பியர் கூறியுள்ளார் ! ஒரு விதி விலக்காக , வன்றொடர்க் குற்றியலுகரத்திற்கு முன்பு வல்லெழுத்தை முதலாகக்கொண்ட சொல் வந்து புணரும் தருணத்தில் , குற்றியலுகரமானது ½ மாத்திரை பெறுதலும் உண்டு  என்பதே மேல் (குற்றியலு. 4) நூற்பாவின் கருத்து!

இதற்கு இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகள் !:-

கொக்கு + கடிது = கொக்குக் கடிது ( ‘கு’வின் உகர மாத்திரை 1/2) (அல்வழிப் புணர்ச்சி)

கொக்கு + கடுமை = கொக்குக் கடுமை ( ‘கு’வின் உகர மாத்திரை 1/2) (வேற்றுமைப் புணர்ச்சி)

‘கொக்குக் கடுமை’ – என்று சொல்லிப் பாருங்கள் !  ‘குக்’ என்பது ,ஏறத்தாழக் ‘கிக்’ என்றுதான் வரும் ! ‘கு’வின் உகரம் ½  மாத்திரை என்று இதனாலேதான் கூறமுடிகிறது !

‘குத்துப் பாட்டு’ என்பதிலுள்ள ‘து’ முழுமையாகவும் , ‘கொக்குக் கடுமை’ என்பதிலுள்ள ‘கு’ பாதியாகவும் உச்சரிப்பு வருவதை, நாம் இவற்றைச் சொல்லிச் சொல்லிப் பார்த்தால் விளங்கிக்கொள்ளலாம் !

மேல் நூற்பாவில் (குற்றியலு.4) ‘நிலையலும்’ என்று வந்ததல்லவா? இதிலுள்ள உம்மை , எதிர்மறை உம்மை !

இடையில் அகப்பட்ட குற்றியலுகரத்திற்கு 1 மாத்திரையும் இருக்கலாம் அப்படி இல்லாமல் ½ மாத்திரையும் இருக்கலாம் என்ற  பொருள் எடுப்பதற்கு உறுதுணையாக இருப்பது இந்த எதிர்மறை உம்மை !

மேல் நூற்பாவிற்கு வேறுவகையில் பொருள் கொண்டவர்கள் இந்த உம்மைக்கு விளக்கம் சொல்வதில்லை !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 24, 2013 8:31 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (121)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

குற்றியலுகரப் புணரியலில் ,அடுத்துத் தொல்காப்பியர் கூறுவது:-

“யகரம் வருவழி யிகரங் குறுகும்
உகரக் கிளவி துவரத் தோன்றாது”  (குற்றியலு. 5)

‘யகரம் வரும் வழி’ -  ‘ய’வை முதலாகக் கொண்ட சொல் வந்து, குற்றியலுகரத்தை ஈறாகக் கொண்ட சொல்லுடன் புணரும்போது ,

‘இகரம் குறுகும்’ – அங்கே தோன்றும் இகரம், குற்றிய லிகரமாகும்!

‘உகரக் கிளவி’ – குற்றியலுகரம்

‘துவரத் தோன்றாது’ – குற்றியலுகரமானது அங்கே இராது !

துவர – முற்றிலும் ; வினையெச்சம் (Verbal participle)

‘துவர’  என்பதிலுள்ள ஈற்று ‘அ’ , எச்ச விகுதி ;  ‘Participle marker’ எனப்படும்.

மேல் நூற்பாப்படி ,

நாகு + யாது =  நாகியாது  ( ‘கி’யின் இகரம் குற்றியலிகரம்)
(நாகு – இதிலுள்ள உகரம் நெடில்தொடர்க் குற்றியலுகரம்)

வரகு + யாது = வரகியாது ( ‘கி’யின் இகரம் குற்றியலிகரம்)
(வரகு – இதிலுள்ள உகரம் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்)

எஃகு + யாது = எஃகியாது ( ‘கி’யின் இகரம் குற்றியலிகரம்)
(எஃகு – இதிலுள்ள உகரம் ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்)

கொக்கு + யாது = கொக்கியாது ( ‘கி’யின் இகரம் குற்றியலிகரம்)
(கொக்கு – இதிலுள்ள உகரம் வன்றொடர்க் குற்றியலுகரம்)

குரங்கு + யாது = குரங்கியாது ( ‘கி’யின் இகரம் குற்றியலிகரம்)
(குரங்கு – இதிலுள்ள உகரம் மென்றொடர்க் குற்றியலுகரம்)

இந்த இடத்தில் இளம்பூரணர் தன் பாடசாலை மாணவர்களுக்குக் கூடுதலாக ஒரு கருத்தைச்  சொல்கிறார் !

உயிர் மயங்கியலில் (நூ. 24) ,  ‘பலா’ என்பதுபோன்ற , குறிலை அடுத்த நெடில் அமைந்த சொல், புணர்ச்சிகளில் ‘அ’ பெற்றுப் , ‘பலா + கோடு = பலாஅக் கோடு’ என வருவது போலத்தான் ,இங்கும் குற்றியல் உகரத்தைத் தொடர்ந்து இகரம் வந்தது என்று கருதிக்கொள்ளுங்கள்  என்கிறார் !

தமிழ் ஒலிப்பு முறையில் (Articulation of Tamil sounds) ஒரு மொழியியல் நுட்பத்தைச் சொல்லியுள்ளார் இளம்பூரணர் !

ஓர் உயிரை ஒலிக்கையில் , நிலைமைக்கு ஏற்றவாறு, இன்னோர் உயிர் தோன்ற வாய்ப்பு உண்டு என்பதே அந்த மொழியியல் நுட்பம் (Linguistic nuance)!

குற்றியலிகரம் பற்றி மேலும் சிறிது காணலாம் !

முள்ளு + யார் = முள்ளியார் (இ- குற்றியலிகரம் அல்ல)

‘ளி’ ஒலி நன்கு , முழுதாகக் காதில் கேட்கிறதா இல்லையா? முழுதாகக் கேட்கும் இகரம் எப்படிக் குற்றியலிகரமாகும் ?உங்கள் காதை முதலில் நம்புங்கள் ! அடுத்தவர் ஓதிய விளக்கம் அப்புறம் !

மேல் ‘ளு’ முற்றியலுகரம் ஆதலின் , குற்றியலிகரம் தோன்றவில்லை !

பற்று + யாது = பற்றியாது (இ- குற்றியலிகரம்)
‘று’ குற்றியலுகரமாதலின் , குற்றியலிகரம் தோன்றிற்று !
‘இ’ முற்றியலிகரமாயின் , சொல்லின் இறுதி ,‘ஈயாது’என்பதுபோல ஒலிக்கும் !

பட்டு + யார் = பட்டியார் (இ - குற்றியலிகரம்)
‘டு’ குற்றியலுகரமாதலின் , குற்றியலிகரம் தோன்றிற்று !
‘இ’ முற்றியலிகரமாயின் , சொல்லின் இறுதி ,‘ஈயார்’என்பதுபோல ஒலிக்கும் !

வடு + யார் = வடியார் (இ - முற்றியலிகரம்)
‘டு’ முற்றியலுகரமாதலின் , குற்றியலிகரம் தோன்றவில்லை !

வட்டு + யார் = வட்டியார் (இ - குற்றியலிகரம்)
‘டு’ குற்றியலுகரமாதலின் , குற்றியலிகரம் தோன்றிற்று !

‘வடியார்’ என்பதையும் ‘வட்டியார்’ என்பதையும் உச்சரித்துப் பாருங்கள் !

‘வடியார்’ என்பதில் ‘டி’ முழுமையாக ஒலிக்கும்; ‘வட்டியார்’ என்பதில் ‘டி’பாதிதான் ஒலிக்கும் !  இடை இகரம் ,முழுமையாக ஒலித்தால் அது முற்றியலிகரம்; பாதியாக ஒலித்தால் அது குற்றியலிகரம் ! அவ்வளவுதான் !

‘குடியார்’ – இகரம் முற்றியலிகரம் !

‘குட்டியார்’ – இகரம் குற்றியலிகரம் !

எனவே , இளம்பூரணர் உரையில் எந்தப் பிழையும் இல்லை !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 25, 2013 10:35 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (122)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

குற்றியலுகரப் புணரியலில் அடுத்த நூற்பா!:-

“ஈரெழுத்து மொழியு முயிர்த்தொடர் மொழியும்
 வேற்றுமை யாயி னொற்றிடை யினமிகத்
தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி”          (குற்றியலு. 6)

‘ஈரெழுத்து மொழி’ – நெடில் தொடர்க் குற்றியலுகரம்

‘உயிர்த்தொடர் மொழி’ -  உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

‘வேற்றுமை யாயின்’  -   வேற்றுமைப் பொருட் புணர்ச்சிகளில்

‘ஒற்றிடை இனமிக’   -   வருமொழி முதல் எழுத்தின் இன எழுத்து மிக

‘தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி’ – நிலைமொழி ஈறு இரட்டிக்கும் !

யாடு + கால் = யாட்டுக் கால் ( பகுதி ஒற்று இரட்டித்தது; இன எழுத்து  ‘க்’மிகுந்தது)
                 (யாடு – உகரம் , நெடில்தொடர்க் குற்றியலுகரம்) (வேற்றுமைப் புணர்ச்சி)

யாடு + செவி = யாட்டுச் செவி ( பகுதி ஒற்று இரட்டித்தது; இன எழுத்து ‘ச்’மிகுந்தது)
                                                             (வேற்றுமைப் புணர்ச்சி)

யாடு + தலை = யாட்டுத் தலை ( பகுதி ஒற்று இரட்டித்தது; இன எழுத்து ‘த்’ மிகுந்தது)
        (வேற்றுமைப் புணர்ச்சி)
யாடு + தலை = யாட்டுத் தலை ( பகுதி ஒற்று இரட்டித்தது; இன எழுத்து‘த்’ மிகுந்தது)
(வேற்றுமைப் புணர்ச்சி)

யாடு + புறம் = யாட்டுப் புறம் ( பகுதி ஒற்று இரட்டித்தது; இன எழுத்து‘ப்’ மிகுந்தது) )
(வேற்றுமைப்  புணர்ச்சி)

நெடில்தொடர்க் குற்றியலுகரச் சொற்களின் புணர்ச்சிகளை மேலே பார்த்தோம் ! கீழே உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் புணரும் வகை ! :-

முயிறு + கால் = முயிற்றுக் கால் (பகுதி ‘ற்’இரட்டித்தது; இன எழுத்து ‘க்’ மிகுந்தது)
(முயிறு – உகரம் ,உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்) (வேற்றுமைப் புணர்ச்சி)

முயிறு + சினை = முயிற்றுச் சினை (பகுதி ‘ற்’இரட்டித்தது; இன எழுத்து ‘ச்’ மிகுந்தது)
(வேற்றுமைப் புணர்ச்சி)

முயிறு + தலை = முயிற்றுத் தலை (பகுதி ‘ற்’இரட்டித்தது; இன எழுத்து ‘த்’ மிகுந்தது)
(வேற்றுமைப் புணர்ச்சி)

முயிறு + புறம் = முயிற்றுப் புறம் (பகுதி ‘ற்’இரட்டித்தது; இன எழுத்து ‘ப்’ மிகுந்தது)
(வேற்றுமைப் புணர்ச்சி)

இதுவரை , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்ததையே பார்த்தோம் !

மற்ற கணங்கள் ?

இளம்பூரணர் இவற்றுக்கும் குறிப்புத் தருகிறார் ! ‘இயல்புக் கணத்து முடிபு கொள்க’என்பது அவரின் உரைச் சூத்திரம் !
‘வன்கணம்’ தவிர்த்த ஏனைய மூன்று கணங்களும் இயல்புக் கணங்களே !

உயிர்க்கணம் (உயிரெழுத்து) , இடைக்கணம்(இடையெழுத்து), மென்கணம் (மெல்லெழுத்து) ஆகியவை இயல்புக் கணங்களே !

இவை புணருமாறு !:-

யாடு + ஞாற்சி = யாட்டு ஞாற்சி  (பகுதி ‘ட்’ இரட்டித்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)

யாடு + நீட்சி = யாட்டு நீட்சி  (பகுதி ‘ட்’ இரட்டித்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)
யாடு + மாட்சி = யாட்டு மாட்சி  (பகுதி ‘ட்’ இரட்டித்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)
யாடு + யாப்பு = யாட்டி யாப்பு  (பகுதி ‘ட்’ இரட்டித்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)
யாடு + வலிமை = யாட்டு வலிமை  (பகுதி ‘ட்’ இரட்டித்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)
யாடு + அடைவு = யாட் டடைவு  (பகுதி ‘ட்’ இரட்டித்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)
யாடு + ஆட்டம் = யாட்  டாட்டம்  (பகுதி ‘ட்’ இரட்டித்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)

மேலே யான் தந்துள்ளவை இளம்பூரணர் சுருக்கமாகத் தந்ததன் விரிவே !

இவை ஒவ்வொன்றும் ஒரு ‘சூத்திரம்’தான் ! புணர்ச்சிகளில் ஐயம் வரும்போதெல்லாம் இவற்றை நினைத்துக்கொள்ளவேண்டும் !

இளம்பூரணர் ‘முயிறு’ என ஒன்றைச் சொன்னாரல்லவா?
என்ன அது ?  கண்ணா ‘முயிறு’ பார்க்க ஆசையா ?

[You must be registered and logged in to see this link.]
Courtesy-jameswhiteants.com
இதுதான் முயிறு ! ‘முசுறு’ என்பதும் இதுவே ! ‘உறவி’ என்று சங்க இலக்கியத்தில்(அகம்399) குறிப்பிடப்படுவது எல்லா வகை எறும்புகளையும் குறிக்கும். முயிறின் விலங்கியல் பெயர் -  Oecophylla smaragdina ; பொதுப் பெயர்- Weaver ants ; கூடு கட்டும் இயல்பு கொண்டது முயிறு! முதலில் ராணி முயிறு ஒரு கொத்து முட்டைகளை ஓரிடத்தில் இடுமாம்; அம் , அக் குட்டி முயிறுகளே கூடு கட்டுமாம் ! கூட்டுப் பணிக்கு முயிறு சரியான உதாரணம் என்று வியக்கின்றனர் எறும்பு ஆய்வாளர்கள் !

முயிறு கட்டிய கூட்டைப் பார்க்க ஆசையா?
[You must be registered and logged in to see this link.]
படம் – முனைவர் சு . சௌந்தரபாண்டியன்  

இவ்வளவையும் படித்துவிட்டு ‘ஆள் சரியான முசுடு’ என்று கூறமாட்டீர்களே ?

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 26, 2013 9:40 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (123)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘யாடு + கால்’ என்பது , பகுதி ஒற்று இரட்டித்து , இன எழுத்துச் சந்தி பெற்று ‘யாட்டுக் கால்’ என ஆகும் என்று முன் கட்டுரையில் பார்த்தோம் !

இதைச் சொல்லிய கையோடு , ‘இதற்கு விதி விலக்கும் உண்டு !’ என்கிறார் தொல்காப்பியர் ! :-

“ஒற்றிடை யினமிகா மொழியுமா ருளவே
அத்திறத் தில்லை வல்லெழுத்து மிகலே”   (குற்றியலு.7)

‘விதி விலக்கு’ என்றால், ‘பகுதி ஒற்று இரட்டிக்கக் கூடாது , இன எழுத்துச் சந்தி மிகக் கூடாது’ இல்லையா?

பார்ப்போம் , இதற்கு என்ன எடுத்துக்காட்டுகளை இளம்பூரணர் தருகிறார் என்று ! :-

நாகு + கால் = நாகு கால் (வேற்றுமைப் புணர்ச்சி) (பகுதியும் இரட்டவில்லை, சந்தியும்  
மிகவில்லை)
(நாகு – உகரம் , நெடில்தொடர்க் குற்றியலுகரம்)

நாகு + சினை = நாகு சினை (வேற்றுமைப் புணர்ச்சி)
நாகு + தலை = நாகு தலை (வேற்றுமைப் புணர்ச்சி)
நாகு + புறம் = நாகு புறம் (வேற்றுமைப் புணர்ச்சி)

வரகு + கதிர் = வரகு கதிர் (வேற்றுமைப் புணர்ச்சி) (பகுதியும் இரட்டவில்லை, சந்தியும்  
மிகவில்லை)
(வரகு – உகரம் , உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்)

வரகு + சினை = வரகு சினை (வேற்றுமைப் புணர்ச்சி)
வரகு + தலை = வரகு தலை (வேற்றுமைப் புணர்ச்சி)
வரகு + புறம் = வரகு புறம் (வேற்றுமைப் புணர்ச்சி)

‘வரகு கதிர்’ என இடைச் சந்தி இல்லாமல் வருவதை ஏற்றுக்கொள்வது சற்றுக் கடினமே ! ஆனால் ‘விதி விலக்கு’ என்றுதானே தொல்காப்பியரும் அனுமதித்திருக்கிறார்?

தவிரவும் , பழந்தமிழர்கள் உச்சரித்த முறையையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் !
‘நாகு கால்’ என்று இடைவிடாமல் அன்று உச்சரித்துள்ளனர் !

‘வரகு கதிர்’ என்று  இடைவிடாமல் அன்று உச்சரித்துள்ளனர் !
      கிராமப் புறங்களில் இன்றும் இத்தகைய உச்சரிப்பைக் கேட்கலாம் !

தவிரவும் , ‘வரகு கதிர்’ என இடைச்சந்தி வராமல் இருப்பதில் உள்ள குழப்பத்தை நீக்க,இளம்பூரணர் உரையிலேயே ஒரு வழி உள்ளது !

அதன்படி, ‘இன்’ சாரியை சேர்ந்தால் குழப்பம் தீரும் !

வரகு + கால் = வரகின் கால்  (வேற்றுமைப் புணர்ச்சி)
நாகு + கால் = நாகின் கால் (வேற்றுமைப் புணர்ச்சி)
இந்த இடம் ஆழ்ந்து நோக்குதற்கு உரியது !
‘வரகு கதிர்’ என்ற சந்தியில்லாப் புணர்ச்சி ஒரு விதி விலக்குதான் !
உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் எல்லாமே இப்படித்தான் சந்தியில்லாமல் புணரும் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது ! அப்படி எடுத்தால் , ‘முயிறு + கால் = முயிறு கால்’ என்றுதானே வரும் ? ‘முயிறு’விலுள்ள உகரமும் உயிர்த்தொடர்க் குற்றியலுகம்தானே ?
விதிவிலக்கை விதியாக எடுத்துக்கொண்டு பலர் துன்புறுகின்றனர் !
துன்புற்றுப் , ‘பரிசு சீட்டு’ , ‘அரசு செயலர்’ , ‘அரசு பேருந்து’ என்றுதான் சந்தியில்லாது எழுதவேண்டும் என வாதிடுகின்றனர் !
தவறு இது !

பரிசு சீட்டு ×
பரிசுச் சீட்டு √

அரசு செயலர் ×
அரசுச் செயலர் √

அரசு பேருந்து ×
அரசுப் பேருந்து √      என்றுதான் வரவேண்டும் !

உகர ஈற்றுப் பெயர் ,  வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லெழுத்துச் சந்தி பெறும் என்பதற்கு விதி – உயிர் மயங்கியல் நூ.57 ( ‘வேற்றுமைக் கண்ணும் …’)
கடு + காய் = கடுக்காய் (வேற்றுமைப் புணர்ச்சி)
இன்னொரு விதி – உயிர் மயங்கியல் நூ- 57 ( ‘எருவுஞ்…’) .
செரு + களம் = செருக்களம் (வேற்றுமைப் புணர்ச்சி)
கடு , செரு – இவைகளில் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் இல்லை எனலாம் ! பொது விதிக்காகவே இவை காட்டப்பட்டன !  
சுருக்கமாகச் சொன்னால் , ‘உயிர்தொடர்க் குற்றியலுகரத்திற்கு அடுத்து ஒற்று வராது’ என்போர் கீழ்வரும் வடிவங்களுக்கு என்ன கூறுவர் ? :-

அழகு + பெண் = அழகுப் பெண் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(அழகு – உகரம், உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்)

தரிசு + பட்டா = தரிசுப் பட்டா √ (வேற்றுமைப் புணர்ச்சி)
பரசு + காம்பு = பரசுக் காம்பு √ (வேற்றுமைப் புணர்ச்சி)
துருசு + கட்டி = துருசுக் கட்டி √ (வேற்றுமைப் புணர்ச்சி)
சுளகு + காது = சுளகுக் காது √ (வேற்றுமைப் புணர்ச்சி)
பரிசு + பெட்டி = பரிசுப் பெட்டி √ (வேற்றுமைப் புணர்ச்சி)

இளம்பூரணர் குறித்த ‘வரகு கதிர்’ எப்படி இருக்கும் , பார்த்திருக்கிறீர்களா?
[You must be registered and logged in to see this link.]
Courtesy- icrisat.org

இதுதான் ‘வரகு கதிர்’ ! வரகுதான் ‘வரகரிசி’ எனப்படுகிறது! வரகின் தாவரவியல் பெயர் - Paspalum scrobiculatum ; இதன் பொதுப்பெயர் – Common millet ; வரகின் தாயகம் இந்தியா எனப் போனால் போகிறதென்று ஒத்துக்கொண்டுள்ளனர் ! இதைச் சற்று விரித்து ‘இந்தியாவில் எங்கே ? தமிழகமா?’என்று தமிழர்கள் கேட்க வேண்டும் ! 3000 ஆண்டு வரலாறு வரகுக்கு இருக்கிறது என்கின்றனர் ! தமிழர் நாகரிகம் தொன்மையானது என்ற கருத்தை இங்கு இணைத்து ஆயவேண்டும் ! வரகு வேறு , கேழ்வரகு வேறு ! கேழ்வரகு , கேப்பை , ராகி எல்லாம் ஒன்று!

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 05, 2013 9:28 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (124)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

தொல்காப்பிய நூற்பாவில் ‘இடையொற்றுத் தொடர்’ என்பது, இடைத்தொடர்க் குற்றியலுகரத்தைக் குறிக்கும் !
‘ஆய்தத் தொடர்’ என்பது , ஆய்த்த் தொடர்க் குற்றியலுகரத்தைக் குறிக்கும் !

இந்த இருவகைக் குற்றியலுகரங்களும் , வேற்றுமையில் ,மெய்யெழுத்துச் சந்தி பெற்றும் வரும் ,பெறாமலும் வரும் என்கிறார் தொல்காப்பியர் ! :-

“இடையொற்றுத் தொடரு மாய்தத் தொடரும்
நடையா யியல வென்மனார் புலவர்” (குற்றியலு.8)

‘நடை ஆயியல’ என்பது கவனிக்கத் தக்கது !

”இடைத்தொடர்க் குற்றியலுகரமும் , ஆய்தத் தொடர்க் குற்றியலுகரமும் , புணர்ச்சியில் வல்லெழுத்துச் சந்தி பெறாது” என்று தொல்காப்பியர் கூறவில்லை !

“இந்த இரு குற்றியலுகரங்களும் , விதி விலக்காகப், புணர்ச்சியில் சந்தி பெறாமலும் வரும் ” என்பதே தொல்காப்பியர் கூறியது !

‘ஆ’ – என்ற சுட்டுப் பெயர் (Demonstrative pronoun) , ‘அந்த’ எனும் பொருள் கொண்டது. அகரத்தின் நீட்சிதான் ‘ஆ’!

‘அந்த’ என்பது முன் நூற்பாவைச் சுட்டும் !

முன் நூற்பாவில் (குற்றியலு.7),  ‘ஒற்றிடை இனம் மிகா மொழியுமார் உளவே’
என்று கூறியதிலுள்ள , ‘மொழியும்’என்பது நோக்கற்பாலது ! இதிலுள்ள உம்மை , எதிர்மறை உம்மை ! பொருள் யாதெனில் , ‘ஒற்றிடை வராத புணர்ச்சிகளும் உள’ என்பதே ! அப்படியானால் , ஒற்று இடையே வருவதுதான் இயல்பு என்பதுதானே கருத்து ?

நாம் எடுத்துக் கொண்ட நூற்பாவுக்கு வருவோம் !

தொல்காப்பியர் கூறிய விதிவிலக்கை உரியவகையில் நோக்காது ,    ‘இடைத்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள்  , வேற்றுமைப் புணர்ச்சியில் , ஒற்றெழுத்துச் சந்தி பெறா’ என்ற கருத்து நிலைநாட்டப்பட்டுவிட்டது !

விதிவிலக்கை விதியாக இப்படி நிலைநாட்டியவர் நன்னூலார்தான் !

நன்னூலைப் (உயிரீற்றுப் புணரியல் 32) பின்பற்றி இன்று பரவலாக ‘இயல்பு புணர்ச்சி’ என்றே எழுதுகின்றனர் !

‘வேற்றுமைப் புணர்ச்சி’ , ‘அல்வழிப் புணர்ச்சி’ என்று சொல்லிய கையோடு ‘இயல்புப் புணர்ச்சி’ எனச் சொல்லிப்பாருங்கள் , உண்மை விளங்கும் !

‘இயல்புப் புணர்ச்சி’ என்று எழுதுவதில் எந்த இலக்கணப் பிழையும் வராது ! ஒலிப்புமுறை (Articulation) நோக்கிலும் பிழை வராது!

சில இடைத்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் புணர்வதைப்  பார்ப்போம் ! :-

மார்பு + கூடு = மார்புக் கூடு (வேற்றுமைப் புணர்ச்சி)
(மார்பு – உகரம் , இடைத்தொடர்க் குற்றியலுகரம்)

மார்பு + சளி = மார்புச் சளி (வேற்றுமைப் புணர்ச்சி)

மார்பு + தசை = மார்புத் தசை (வேற்றுமைப் புணர்ச்சி)

மார்பு + சங்கிலி = மார்புச் சங்கிலி (வேற்றுமைப் புணர்ச்சி)

மார்பு + கவசம் = மார்புக் கவசம் (வேற்றுமைப் புணர்ச்சி)

இயல்பு + குணம் = இயல்புக் குணம் (வேற்றுமைப் புணர்ச்சி)
இயல்பு + பண்பு = இயல்புப் பண்பு (வேற்றுமைப் புணர்ச்சி)

தொடர்பு + கடிதம் = தொடர்புக் கடிதம் (வேற்றுமைப் புணர்ச்சி)

கதழ்பு + செயல் = கதழ்புச் செயல் (வேற்றுமைப் புணர்ச்சி)
(கதழ்பு – விரைவு)

கேழ்பு + பண்பு = கேழ்புப் பண்பு (வேற்றுமைப் புணர்ச்சி)
(கேழ்பு – நன்மை ,blessing)

கீழ் வருவன உயிர்த்தொடர்க் குற்றியலுகரப் புணர்ச்சிகள் ! :-

உருபு + தொகை = உருபுத் தொகை (வேற்றுமைப் புணர்ச்சி)

வெருகு + கால் = வெருகுக் கால் (வேற்றுமைப் புணர்ச்சி)
(வெருகு – ஆண் பூனை )

உருது + புலவர் = உருதுப் புலவர் (வேற்றுமைப் புணர்ச்சி)

விருது + தேர்வு = விருதுத் தேர்வு (வேற்றுமைப் புணர்ச்சி)

விருது + சான்றிதழ் = விருதுச் சான்றிதழ் (வேற்றுமைப் புணர்ச்சி)

விருது + பட்டியல் = விருதுப் பட்டியல் (வேற்றுமைப் புணர்ச்சி)


கொலுசு + கால் = கொலுசுக் கால் (வேற்றுமைப் புணர்ச்சி)

வயது + பெண் = வயதுப் பெண் (வேற்றுமைப் புணர்ச்சி)

அறுகு + குப்பை = அறுகுக் குப்பை (வேற்றுமைப் புணர்ச்சி)
(அறுகு – புல் வகை)

அறுகு + குடிநீர் = அறுகுக் குடிநீர் (வேற்றுமைப் புணர்ச்சி)
(குடிநீர் – கஷாயம்)

மேலே கண்டவாறு ,இடைத்தொடர்க் குற்றியலுகரப் புணர்ச்சியாயினும் உயிர்த்தொடர்க் குற்றியலுகரப் புணர்ச்சியாயினும் மெய்யெழுத்துச் சந்தி பெறுதலே தமிழ் நாவின்  மரபு !

‘வயசுப் பெண்ணை வைத்துக்கொண்டு , இந்த ஆம்பிளைக்குக் கொஞ்ச மாவது பொறுப்பிருக்கா?’- முதியோள் வீட்டில் இரைவதை இலக்கணப் புலவர்கள் தடுக்கமுடியாது ! அவள் நாவில்  ‘வயசுப்’ என  ‘ப்’ ஒற்றெழுத்து வருகிறதே அதுதான் தமிழ் மரபு ! அதுதான் தமிழ் இலக்கணத்திற்கு அடிப்படையே ! (வயசு- உகரம் , உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்).

தமிழ்ப் பாட்டி எப்படிச் சொல்வாள்? ‘கருதுக் கம்பி’ என்றுதானே சொல்வாள்? (கருதுக் கம்பி – குத்துக் கம்பி). ‘கருது கம்பி’ என்றால் வினைத் தொகையாக அல்லவா நிற்கும் ? இலக்கண முரண் இல்லையா இஃது ? ! ‘கருதுக் கம்பி ’ என்றால்தானே பெயர்ச்சொல் கிடைக்கும் ? கருதுக் கம்பி – கூட்டுப் பெயர் (Compound noun ). இதை நாம் கருதக்கூடாதா? (கருது- உகரம் , உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்).


இடைத் தொடர்க் குற்றியலுகரச் சொல், புணர்ச்சியில், ஒற்றுப் பெறாது என்பதற்கு இளம்பூரணர் ‘தெள்கு கால்’ என்பதை எடுத்துக்காட்டாகத் தந்தார் ! ‘தெள்குக் கால்’என்றால் ‘தெள்கு’ என்ற பெயர்ச் சொல்லுக்கு  ஒரு வினைப் பண்பு (Verbal sense)  வரக் காணலாம் ! ‘நொண்டிக் கால் ’ என்பதுபோலத்  ‘தெள்குக் கால்’ அமைவதால் அதனைத் தவிர்ப்பதற்காகத் ‘தெள்கு கால்’ கொள்ளப்படுகிறது !  இது விதி விலக்கு ! விதி அல்ல !

அச்சில் உள்ள இளம்பூரணர் , நச்சினார்க்கினியர் உரைகளில் எல்லாம் ‘இயல்பு புணர்ச்சி’, ‘உருபு புணர்ச்சி’ என்றுதானே  உள்ளது ?

நல்ல கேள்வி !


உரையாசிரியர்கள் எழுதிய அதே சொல்லாட்சிகள்தாம் அச்சிட்ட பதிப்புகளில் வந்துள்ளன என்று யாராலும் கூற இயலாது ! நமக்குக் கிடைக்கும் உரையாசிரியர் நடை பதிப்பாசிரியரின் நடை கலந்ததுதான் !எனவே , பதிப்புகள் நமக்குச் சான்றாக அமையா!
இப்போது ஆய்தத் தொடர்க் குற்றியலுகரத்திற்கு வருவோம் !

இதுவும் , விதி விலக்காக , ‘ ஒற்றுச் சந்தி பெறாமலும் வரும்’என்றுதான் தொல்காப்பியர் கூறியுள்ளார் ! ‘எஃகு கால்’ என்ற இளம்பூரணரின் எடுத்துக்காட்டு ,விதிவிலக்கு எடுத்துக்காட்டுதான் !       ஆய்தம், அதனை அடுத்த குகரம், அதனைத் தொடரும் ககர நெடில் என மூன்று சிக்கலான ஒலிக்கூட்டத்தில் நான்காவதாக ‘க்’ சேர்வது பொருத்தமில்லைதான் ! எனவே ‘எஃகு கால்’ என்பதில் இடையொற்று வராது என்பதை விதிவிலக்காக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் ! இதற்குத்தான் தொல்காப்பியரும் நூற்பா யாத்தார் !

கீழ்வரும் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரப்  புணர்ச்சிகளைப் பாருங்கள் !:-

எஃகு + சட்டி = எஃகுச் சட்டி (வேற்றுமைப் புணர்ச்சி)

எஃகு + துறை = எஃகுத் துறை (வேற்றுமைப் புணர்ச்சி)

எஃகு + கம்பி = எஃகுக் கம்பி (வேற்றுமைப் புணர்ச்சி)

எஃகு + சட்டம் = எஃகுச் சட்டம் (வேற்றுமைப் புணர்ச்சி)

- இங்கெல்லாம் ஒற்று வரத்தானே வேண்டும் ?

‘இரும்புச் சட்டி’ என்று உச்சரித்த கையோடு ‘எஃகுச் சட்டி’ என உச்சரித்துப் பாருங்கள் ! உண்மை விளங்கும் !

‘எஃகு சட்டம் கொண்டுவந்தாள் ’ – என்றால் , அவள் கொண்டு வந்தது , எஃகா? சட்டமா?அல்லது இரண்டுமா? ‘எஃகுச் சட்டம் கொண்டு வந்தாள்’ என்றால் பொருளில் எந்தக் குழப்பமும் இல்லை !  ‘எஃகாலாகிய சட்டத்தைக் கொண்டுவந்தாள்’ என்ற ஒரு பொருள்தான் அங்கே வருகிறது ! மொழியின் அடிப்படை விதியே குழப்பம் இருக்கக்கூடாது என்பதுதானே ?

இன்னும் குழப்பம் தீரவில்லையா?

மேலும் ஆய்வோம் !

1 .   இயல்புப் புணர்ச்சியில் ஒரு மாணவி பிழை செய்துள்ளாள் ; இதைத் தொடரில் எழுதுங்கள் என்றால் நீங்கள் எப்படி எழுதுவீர்கள் ?

‘ இயல்பு புணர்ச்சிப் பிழை செய்தாள்’ – என எழுதுவீர்களா?
இப்படி எழுதினால் , ‘இயல்பு என்ற பெண் , புணர்ச்சியில் பிழை செய்தாள் ’ என்றுதானே ஆகும் ? இது பிழையானது ஆயிற்றே ?

நாம் பார்த்ததுபோல , ‘இயல்புப் புணர்ச்சிப் பிழை செய்தாள்’ என எழுதினால் , ஒரு குழப்பமும் வராது !
இப்போது நாம் பார்த்தது , இடைத்தொடர்க் குற்றியலுகரத்திற்கு ; இனி, உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்தைப் பார்ப்போம் !

2 . உருபுப் புணர்ச்சியில் ஒரு மாணவி பிழை செய்துள்ளாள் ; இதை எப்படி எழுதுவீர்கள் ?

‘உருபு புணர்ச்சிப் பிழை செய்தாள்’ – என எழுதுவீர்ளா?

இப்படி எழுதினால் , ‘உருபு என்ற பெயர் உள்ள பெண் புணர்ச்சியில் பிழை செய்தாள்’என்றுதானே ஆகும் ? பொருளே மாறிவிடுகிறதே ?

நாம் பார்த்தது போல ‘உருபுப் புணர்ச்சியில் பிழை செய்தாள்’ என எழுதிப் பாருங்கள் ; எந்தப் பிழையும் வராது !

இவற்றிலிருந்து நமது ஆய்வு சரிதான் என ஆகுமல்லவா?
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 05, 2013 9:40 pm

நன்றி அய்யா... தொடர்கிறோம் புன்னகை



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 17 of 84 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 50 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக