ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 ayyasamy ram

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 ayyasamy ram

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 krishnanramadurai

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 ayyasamy ram

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 ayyasamy ram

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 M.Jagadeesan

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 பழ.முத்துராமலிங்கம்

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 பழ.முத்துராமலிங்கம்

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 பழ.முத்துராமலிங்கம்

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 பழ.முத்துராமலிங்கம்

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

MGR நடிச்ச பாசமலர்
 மூர்த்தி

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 M.Jagadeesan

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 பழ.முத்துராமலிங்கம்

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 ayyasamy ram

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 ayyasamy ram

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

சமந்தா வரவேற்பு!
 ayyasamy ram

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 ayyasamy ram

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 ayyasamy ram

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 ayyasamy ram

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 பழ.முத்துராமலிங்கம்

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 பழ.முத்துராமலிங்கம்

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 M.Jagadeesan

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 T.N.Balasubramanian

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 பழ.முத்துராமலிங்கம்

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 ayyasamy ram

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 ayyasamy ram

சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல்
 ayyasamy ram

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 T.N.Balasubramanian

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 பழ.முத்துராமலிங்கம்

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 பழ.முத்துராமலிங்கம்

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்

View previous topic View next topic Go down

மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்

Post by balakarthik on Sat Apr 13, 2013 1:57 pm

இது தமிழ் ஹிந்து தளத்தில் 2009 ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தியை ஒட்டி வெளியான அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை.ஆண்டு 1872. காந்திக்கு வயது மூன்று. ராபர்ட் நைட் எனும் பிரிட்டிஷ் அதிகாரி எழுதினார்:
நம்முடைய அறுதியான நம்பிக்கை என்னவென்றால் இந்தியா தன்னுடைய வீழ்ச்சிக்கு காரணமான தன்னுடய பொய்யான மதத்தை இழந்து கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்ளும் வரை அதற்கு நாம் சுயராஜ்ஜியத்தை அளிக்க முடியாது.

ஒரு விதத்தில் காந்தியின் விடுதலைப் போராட்டமும் மதத்தில்தான் தொடங்கியது. இங்கிலாந்தில் காந்தி வாழ்ந்த காலகட்டத்தில் அவர் கிறிஸ்தவராக மதம் மாற பெரும் அழுத்தத்துக்கு உள்ளானார். அவர் அன்னை அவருக்கு அளித்த வைணவ மாலை ஒன்றை அவர் கழற்றிவிட வேண்டும் என்றும் ஒரு பண்பட்ட மனிதனுக்கு அத்தகைய மூடநம்பிக்கை அழகல்ல என்றும் ஒரு மிஷினரி கூறியபோது அவர் பெரும் மனவருத்தம் அடைந்தார். அந்தகால கட்டத்தில் அவருக்கு ஹிந்து தர்மத்தில் வேரூன்றி நிற்க பெரும் வலிமை அளித்தவர் ராஜ்சந்திரா என்கிற இளைஞர். ஜைனரான இவர் காந்தியிடம் சனாதன தர்மத்தின் பெருமையை விளக்கினார். பின்னாட்களின் காந்தியின் வாழ்க்கை ராஜ்சந்திராவின் வாழ்க்கையையே பிரதி எடுத்தது. 1900 இல் தம் இளவயதில் ராஜ்சந்திரா இறந்துவிட்டார்.
உண்மை என்பது ஒற்றைத்தன்மை கொண்டது அல்ல என்பதே மேற்கத்திய பண்பாட்டின் அடிநாதமாக விளங்கிய கிறிஸ்தவத்துக்கும் இந்திய பண்பாட்டின் அடிநாதமாக விளங்கும் ஹிந்து தருமத்துக்குமான அடிப்படை வேறுபாடு என்பதை காந்தி உணர்ந்துகொண்டார். ஆனால் இதனை அவர் வெறும் தத்துவமாக உணராமல் ஒவ்வொரு வாழ்க்கை வெளிப்பாட்டிலும் அது வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதை அவர் ராஜ்சந்திராவிடமே கண்டடைந்தார். பிரிட்டனில் இளைஞனாக கிறிஸ்தவ மிஷினரிகள் “நீ ஏன் இன்னும் ஹிந்துவாக இருக்கிறாய்?” என கேட்டதற்கு பதில் சொல்ல தெரியாமல் பெரும் மன வருத்ததுக்கு உள்ளான காந்தி பின்னாட்களில் எழுதினார்:

ஹிந்து தர்மமே மதங்கள் அனைத்திலும் மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட மதம். சித்தாந்த கட்டுப்பாடுகளிலிருந்து ஹிந்து தர்மம் தரும் சுதந்திரம் சுய வெளிப்பாட்டுக்கான மிகப்பெரிய வெளியை நமக்கு ஏற்படுத்தி தருகிறது. புறந்தள்ளும் தன்மை கொண்டதாக இல்லாத ஒரு தருமம் ஆனதால் ஹிந்து தருமம் பிற மதங்களை மதிப்பது மட்டுமல்லாமல் அவற்றின் நல்ல அம்சங்களை ஏற்றுக்கொள்ளவும் உட்கொள்ளவும் வழி வகுக்கிறது. அஹிம்சை என்பது எல்லா மதங்களிலும் உள்ளதுதான் ஆனால் ஹிந்து தர்மத்திலேயே அது அதன் மிகச்சிறந்த விதத்தில் வெளிப்படுகிறது. ஹிந்து தர்மம் மானுடம் மட்டுமல்லாது அனைத்து உயிரும் ஒன்று எனும் ஆன்ம ஒற்றுமையை வலியுறுத்துகிறது.

சூழலியல் சிந்தனை வட்டங்களில் இன்றைக்கு காந்திய கருத்துகளுக்கு பெரும் மதிப்பு உண்டு. பல சூழலியல் சிந்தனைகளின் முன்னோடித்தன்மையை காந்தியில் காணலாம். இதற்கு ஒரு முக்கிய காரணம் காந்தியின் உண்மையின் பன்மைத்தன்மை குறித்த அறிதலாகும். இந்த அறிதல் அவருக்கு ஆபிரகாமிய மதங்களின் ஒற்றைத்தன்மைக்கும் ஹிந்து ஞான மரபின் பன்மைத்தன்மைக்குமான போராட்டத்தை குறித்த அடிப்படையான அறிதலிலிருந்தே கிடைத்தது. ஹிந்து சிந்தனையை -ஒற்றைத்தன்மையற்ற பார்வையை- அவர் மானுடத்தின் சமுதாய பிரச்சனைகளுக்கு பயன்படுத்தினார். இதனால் கிடைத்த சாத்தியக்கூறுகளின் விதைகள் இன்னும் காந்திய சிந்தனையில் புதைந்து கிடக்கின்றன. அதனால், பணபலமும் அதிகாரபலமும் இல்லாமல் தர்மத்தை மட்டுமே நம்பி போராடும் எந்த மக்கள் கூட்டத்துக்கும் அவை மிகச்சிறந்த ஆயுதங்களாக உதவக்கூடியவை. இந்த விதத்தில் இன்றைய ஹிந்து சமுதாயத்துக்கு அவை இன்றியமையாதவை ஆகும்.


சூழலியல் சிந்தனைக்கான காந்திய பங்களிப்பைக் குறித்து பேசும் எவரும் அவரது நகர்ப்புற நாகரிகத்துக்கான எதிர்ப்பு மற்றும் இயந்திரங்களுக்கான அவரது எதிர்ப்பு ஆகியவற்றை மறக்காமல் குறிப்பிடுவார்கள். மேற்கத்திய சூழலில் தொழில் புரட்சியின் காலகட்டத்தில் ஏற்பட்ட இயந்திர வெறுப்பு, இயற்கை சார்ந்த வாழ்க்கைக்கான உடோ ப்பிய கனவுகள் ஆகியவற்றுடன் காந்தியின் இயந்திர-வெறுப்பும் கிராமிய குடியரசுக்கான கனவும் இணைத்து பேசப்படும். 1904 களில் தென்னாப்பிரிக்காவில் டர்பனின் அருகே காந்தி அமைத்த ஆசிரமம் இதற்கான தொடக்கப்புள்ளியாக கருதப்படும். தென்னாப்பிரிக்காவில் காந்தி டால்ஸ்டாயின் போதனைகளால் பெரிதும் கவரப்பட்டிருந்ததைக் காணமுடியும். ஆனால் காந்தி இந்திய பாரம்பரிய ஆன்மிக மரபை ஒரு வெகுஜன இயக்கமாக மாற்ற செய்த முயற்சியின் வெளிப்பாடே அவரது டால்ஸ்டாய் பண்ணை. இந்தியா வந்து அவர் மேற்கொண்ட பெரும் இந்திய பயணத்திலிருந்தே அவரது சமுதாய-சூழலிய கோட்பாடுகளின் பரிணாமத்தை நாம் முழுமையாக காணமுடியும். காந்தி அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் முன்னேற்றத்தையும் மறுக்கவில்லை என்பதையும் ஒரு பழமையான வாழ்க்கைக்கு நம் தேசத்தை அழைத்து செல்லவும் அவர் விரும்பவில்லை என்பதையும் நாம் அவரது சிந்தனையோட்டத்தில் காணமுடியும்.

காந்தி பாரம்பரியத்தின் வலிமைகளைக் கொண்டு முன்னேற வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். மேற்கத்திய முன்னேற்றமே முன்னேற்றத்துக்கான ஒரே மாதிரி என்பதை அவர் மறுத்தார். பொருளாதார சுகாதார ஆன்மிக மேம்பாட்டை மாற்றுவழிகளில் அடைய முடியும் என்பதை அவர் திட்டவட்டமாக உரைத்தார். உதாரணமாக பசு பாதுகாப்பு குறித்து அவர் பேசும் போது இந்தியாவெங்கும் மத நிறுவனங்களால் பாரம்பரியமாக நிர்வகிக்கப்படும் பசுக்களின் சரணாலயங்கள் (பசு மடங்கள்) கால்நடை ஆராய்ச்சி நிறுவனங்களாகவும் செயல்பட வேண்டும் எனக் கோரினார். இதன் மூலம் இந்தியாவின் பால் உற்பத்தியை அபரிமிதமாக அபிவிருத்தி செய்ய முடியுமென அவர் கருதினார், காந்திய சுதேசியின் ஒரு முக்கிய கோட்பாடாக அவர் தொழில்நுட்பத்தை வலியுறுத்தினார். ராட்டை ஒரு குவித்தன்மையற்ற தொழில்நுட்பத்தின் குறியீடாக அமைந்தது. அந்த ராட்டையின் செயல்திறமையை மேம்படுத்தும் மாதிரிகளுக்கான போட்டிகள் அவரால் நடத்தப்பட்டன. மில் துணிகள் இந்த தேசத்தின் இயற்கை வளம், தொழிலாளர்நலம் ஆகியவற்றின் மீது செலுத்தப்பட்ட காலனிய ஆக்கிரமிப்பு என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டால் அவரது ராட்டை எத்தகைய ஒரு தொழில்நுட்ப எதிர்ப்பு சின்னமாக விளங்கியது என்பது புரியும். சாண எரிவாயு, சூரிய ஒளி தொழில்நுட்பம் ஆகியவை காந்தியின் கனவுகளின் தொழில்நுட்ப வெளிப்பாடாகும்.

ஜேம்ஸ் லவ்லாக் இன்று ஒரு முக்கியமான உயிரியலாளராக கருதப்படுபவர். இந்த உலகின் புவியியல் மற்றும் உயிரியியல் செயல்பாடுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து முழுமையான ஒரு அதி-உயிரித்தன்மையுடன் செயல்படுவதை அவர் ஒரு கருதுகோளாக முன்வைத்தார். இது Gaia என அழைக்கப்படுகிறது. இக்கருதுகோள் பலத்த சர்ச்சைக்குள்ளாயிற்று என்ற போதிலும் உலகளாவிய சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் அறிவியலாளர்களுக்கும் இது ஒரு நல்ல புரிதல் சட்டகமாக இன்று விளங்குகிறது. இந்த கோட்பாட்டினை விளக்கும் அண்மை நூலில் லவ்லாக் இந்த புவி எனும் அதி-உயிரி இன்று எப்படி நோயடைந்திருக்கிறது என்பதையும் அந்த நோய்க்கு காரணம் மானுடத்தின் பொறுப்பற்ற செயல்பாடுகள் என்பதையும் இதனால் பல இயற்கை பேரிடர்கள் மானுடத்துக்கு ஏற்படும் என்பதையும் விளக்குகிறார். இதற்கான தீர்வில் நாம் என்ன பங்களிக்க முடியும் எனும் கேள்விக்கு அவர் கூறுகிறார்:

நமது பங்கு நம் வாழ்க்கையின் மூலம் ஒரு முன்மாதிரியை ஏற்படுத்துவதே ஆகும். முழுக்க முழுக்க மானுட விஷயங்களில் அவ்வாறு வாழ்வது எப்படி என்பதை காந்தி நமக்குக் காட்டினார். நமது நவீன சூழலுக்கான காந்திய மாதிரிகள் ஆழ்-சூழலியல் இயக்கத்திலிருந்து வரக்கூடும்.

நியூ சயிண்டிஸ்ட் பத்திரிகை ஜேம்ஸ் லவ்லாக்கின் கோட்பாட்டை காந்தியின் தத்துவங்களுடன் ஒப்பிட்டது. அரசியலில் காந்தி கண்டடைந்ததைப் போலவே ஜேம்ஸ் லவ்லாக்கும் சூழலியல் உண்மைகளைக் கண்டடைந்திருப்பதாக அப்பத்திரிகை எழுதியது.

சூழலியல் மட்டுமல்ல வரலாறு மானுடவியல் ஆகியவற்றிலும் காந்தியின் உள்ளுணர்வு சார்ந்த சில கருத்தாக்கங்கள் -அன்றைய காலனிய சூழலில் அறிவியலுக்கு பொருந்தாதவை போல தெரிந்தவை- இன்று மிகப்பெரிய மாற்று உண்மைகளை நமக்கு காட்டும் ஒளிவிளக்குகளாகியுள்ளன. உதாரணமாக இந்தியாவின் கல்வியறிவு வெள்ளையரின் காலனியாதிக்கத்துக்கு முன்னால் எவ்வாறு இருந்தது என்பதனைக் குறித்த தரம்பாலின் விரிவான ஆராய்ச்சி இங்கிலாந்தில் காலனிய ஆட்சியாளர்களுக்கு காந்தி அளித்த பதிலின் குறிப்புகளிலிருந்தே தொடங்குகிறது.

வனவாசிகளுக்கும் ஏனைய ஹிந்து சமுதாயத்துக்குமான மறுக்கவியலாத உறவை காந்தி மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். காலனிய மக்கட்தொகை அதிகாரிகளால் வேண்டுமென்றே மறுக்கப்பட்டு வந்த தொடர்பு அது. பின்னாட்களில் இந்தியா விடுதலை அடைந்தும் கூட ஆரிய இனவாத கோட்பாட்டு அறிதலின் அடிப்படையில் அந்த பிளவு பெரிதுபடுத்தப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்திய மரபணுவியல் கோட்பாடுகளும். சமூகவியல் ஆராய்ச்சிகளும் காந்தியின் புரிதலின் சரித்தன்மையை உணர்த்துகின்றன. சமுதாயத்தின் அடிப்படை அலகாகவும் சமுதாயத்தின் ஆகச்சிறந்த மாதிரியாகவும் காந்தி முன்வைத்த மற்றொரு உருவகம் பேராழி வட்டம் (Oceanic Circle) என்பதாகும். மேற்கத்திய மனம் எதையும் ஒரு கீழ் மேலான கூம்பு பிரமிடாகவே வகைப்படுத்துகிறது, சமுதாய உறவுகள் முதல் சூழலியல் மாதிரிகள் உளவியல் கருத்தாக்கங்கள் ஆகிய அனைத்துமே பிரமிடுகளாகவே அமைக்கப்படுகின்றன. அடித்தளத்தில் சக்தியற்ற பெரும்பான்மையும் மேலே சக்தி-அதிகாரம்-அதீத அனுபவித்தல் ஆகியவை கொண்ட சிறுபான்மையுமாக அமைக்கப்பட்ட கட்டுமானங்கள் அவை. காந்தி இக்கட்டுமானத்தை அடிப்படை அலகாகவும் ஆதார மாதிரியாகவும் கொள்ள மறுத்தார். பாரதப்பண்பாட்டின் உருவகங்களிலும் குறியீடுகளிலிமிருந்து பெறப்பட்ட அவரது பார்வை பின்வருமாறு:

இந்த அமைப்பில் எண்ணற்ற கிராமங்கள் இருக்கும். அவை விரிந்த படி இருக்கும் வட்டங்களாக இருக்குமேயன்றி ஒன்றின் மேல் ஒன்று ஏறுபவையாக இருக்காது. வாழ்க்கை என்பது அடிப்பகுதியால் தாங்கிப்பிடிக்கப்படும் உச்சிக் கூம்பு கொண்ட பிரமிடாக இருக்காது. ஆனால் அது ஒரு பேராழி வட்டமாக அமையும். அதன் மையமாக என்றென்றும் தனிமனிதன் இருப்பான். அவன் அவனைச் சுற்றி அமையும் கிராமத்துக்காகவும் ஒவ்வொரு கிராமமும் அக்கிராமங்களை சுற்றி அமையும் பிற கிராமங்களுக்காகவும் அமையும். இவ்வாறாக அனைத்தும் ஓருயிராக ஆணவத்தால் ஏற்படும் ஆக்கிரமிப்பு இல்லாததாக தன்னடக்கதுடன் பேராழி வட்டத்தின் மகோன்னத்தத்தின் பங்காளிகளாக, அதன் இணைபிரியாத உறுப்புகளாக அமையும்

அப்துல் கலாமின் புரா (PURA) இந்த பேராழி வட்டத்தின் தொழில் நுட்ப பரிமாணமே. காந்தியின் இந்த பார்வை அவரது அனைத்துயிரையும் ஒன்றாக காணும் சனாதன ஹிந்துவின் பார்வையே. இன்றைக்கும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் வளரும் நாட்டின் சமயமாக விளங்கும் ஹிந்து தருமத்தின் தொடர்ந்த ஜீவிதத்துக்கும், ஆக்கிரமிப்பு ஆங்கார இறையியல்களில் சிக்கித்தவிக்கும் மானுடத்தின் மீட்சிக்கும் காந்தியின் இந்த ஹிந்து தர்ம பார்வையை எல்லா துறைகளிலும் செயல்முறை படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று.


-அரவிந்தன் நீலகண்டன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்

Post by பிளேடு பக்கிரி on Sun Apr 14, 2013 2:36 am

ஹிந்து தர்மமே மதங்கள் அனைத்திலும் மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட மதம். புறந்தள்ளும் தன்மை கொண்டதாக இல்லாத ஒரு தருமம் ஆனதால் ஹிந்து தருமம் பிற மதங்களை மதிப்பது மட்டுமல்லாமல் அவற்றின் நல்ல அம்சங்களை ஏற்றுக்கொள்ளவும் உட்கொள்ளவும் வழி வகுக்கிறது. அஹிம்சை என்பது எல்லா மதங்களிலும் உள்ளதுதான் ஆனால் ஹிந்து தர்மத்திலேயே அது அதன் மிகச்சிறந்த விதத்தில் வெளிப்படுகிறது. ஹிந்து தர்மம் மானுடம் மட்டுமல்லாது அனைத்து உயிரும் ஒன்று எனும் ஆன்ம ஒற்றுமையை வலியுறுத்துகிறது. சூப்பருங்க
நன்றி பாலா மகிழ்ச்சிavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்

Post by balakarthik on Sun Apr 14, 2013 12:09 pm

நன்றி பிளேடு அது சரி ரொம்ப நாளா ஆளையே காணுமே எந்த சிறைச்சாலை உங்களை முடக்கியது அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்

Post by யினியவன் on Sun Apr 14, 2013 12:16 pm

முடக்கத்தான் பட்டியில் கைவரிசை காட்டினப்ப முடக்கிட்டாங்களாம் பாலாavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்

Post by balakarthik on Sun Apr 14, 2013 12:36 pm

வயசாயிடுச்சுல அதான் கை நடுக்கம் அதிகமாயிடுச்சு போல இப்பலாம் அதிகம் மாட்டிகிறாரே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்

Post by அன்பு தளபதி on Sun Apr 14, 2013 8:11 pm

வணக்கம் அண்ணா இப்படி ஒரு மொழிக்கு முதலில் மன்னியுங்கள் காரணம் நமது வரலாற்றை நாம் மறுபடியும் ஒரு முறை அலசினோம் என்றால் நாம் இன்று கொண்டாடும் பலருடைய சுயம் மிகவும் வெறுக்கத்தக்கதாக இருக்கும், அதில் காந்தியும் அடங்கும் முதலாவதாக காந்தி ஆரம்ப காலத்தில் வேண்டுமெனில் இந்து மதத்தின் மீது பற்று கொண்டவராக இருந்திருக்கலாம் ஆனாலும் பின் வந்த காலங்களில் தனது துறவி என்ற அந்த பாத்திரத்திற்கு எந்த பங்கமும் வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டி இந்து மதத்தை விட்டுகொடுத்தார் என்றே கூற வேண்டும், முதலாவாதாக காந்தி ராம ராம என்று கூறுவார் ஆனால் ஒரு முறை கூறியது நான் ராம ராம என கூறுவது தசரத ராமனை அல்ல என, வேறு தெனாலி ராமனை கூறினார என்பதும் தெரியவில்லை, இன்னுமொன்று பசும்பொன் தேவர் கூறியதாக சில தளங்களில் படித்தது காந்திஜி இந்து மத விரோதி என்று உண்மையில் காந்தியின் சில செயல்கள் அப்படித்தான் தோன்றுகிறது, என்னுடைய கோட்சே மொழிபெயர்ப்பு நாடகத்தில் பெரும்பாலான காட்சி வசனங்கள் இதை சுற்றியே நடைபெறும், மேலும் அரவிந்த நீலகண்டன் போன்றவர்கள் புதிய தலைமுறை இந்துத்துவ வாதிகள் கிட்டத்தட்ட இவர்கள் நடை முறை கிறித்துவ மிஷினரிகள் போல இருக்கும் தேவர் புகைப்படத்தையும் அம்பேத்காரின் புகைப்படத்தையும் ஒன்றே இணைத்து ஒரு சிக்னேச்சர் ஒன்று அவர்கள் முதலில் வைத்திருந்தனர் நான் கூட சில நாட்கள் ஏகரையில் என் கையெழுத்து பகுதியில் அதை வைத்திருந்தேன், உங்களிடம் நான் கேட்க்கும் ஒரு கேள்வி என்னவெனில் அம்பேத்க்கார் முன்னெடுத்து சென்ற சுதந்திர போராட்டங்கள் எத்தனை ? இரண்டாவது வெள்ளையன் காந்தியை ரயிலை விட்டு வெளியே தூக்கி எரியும் வரை அவருடைய சுதந்திர உணர்வு எங்கே போயிருந்தது? உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் இந்திய சுதந்திரம் இரண்டாம் உலக போரின் விளைவால் நிகழ்ந்ததா அல்லது காந்தியின் போராட்ட வெற்றியா? இந்திய வரலாறு தவறாகவே எழுதப்படுகிறது என்பது நீங்கள் நன்றாகவே அறிந்தவர் என்பதையும் நான் உணர்வேன் உங்கள் கருத்தையும் சொல்லுங்கள் அண்ணா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்

Post by balakarthik on Sun Apr 14, 2013 8:48 pm

முதலாவாதாக காந்தி ராம ராம என்று கூறுவார் ஆனால் ஒரு முறை கூறியது நான் ராம ராம என கூறுவது தசரத ராமனை அல்ல என, வேறு தெனாலி ராமனை கூறினார என்பதும் தெரியவில்லை
மணி நான் கேள்வி பட்டவரை காந்தி தசரத ராமர் மீது அளவில்லா பக்தியை கொண்டிருந்தார் என்றே நினைக்கிறேன் எப்போதும் அவர் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தவர் உயிர் துறக்கும் போதும் ராம நாமத்தை மகாத்மா காந்தி உச்சரித்துக்கொண்டே உயிர் துறந்தவர். என்னிடம் இருந்து எதை வேண்டுமானாலும் பறிக்கலாம், ஆனால் ராமரை பறித்துவிட்டால் எனது உயிர் இருக்காது என்று கூறியதாக கேள்விபட்டுள்ளேன்

காந்தி ஆரம்ப காலத்தில் வேண்டுமெனில் இந்து மதத்தின் மீது பற்று கொண்டவராக இருந்திருக்கலாம் ஆனாலும் பின் வந்த காலங்களில் தனது துறவி என்ற அந்த பாத்திரத்திற்கு எந்த பங்கமும் வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டி இந்து மதத்தை விட்டுகொடுத்தார் என்றே கூற வேண்டும்,

அடுத்து அவர் ஒருபொழுதும் இந்துமதத்தை விட்டுகொடுத்ததில்லை அவர் ஹிந்து மதம் மீது தீவிரமான நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும், பிற மதங்களை பெரிதும் மதித்தவர். காந்தி மதமாற்றம் நாட்டை அழிக்கக்கூடிய கடுமையான விஷம் கொண்ட ஆயுதம் போன்றது மதமாற்றம் உலக நாட்டின் கலாச்சாரங்களை அழிக்கக்கூடியது என்று கூறினார்

வெள்ளையன் காந்தியை ரயிலை விட்டு வெளியே தூக்கி எரியும் வரை அவருடைய சுதந்திர உணர்வு எங்கே போயிருந்தது?

உண்மைத்தான் அதுவரை அவர் அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த சாதாரண மனிதராகவே இருந்தார் ஆனால் தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், அந்த ரயில் அவமானம் போன்ற சம்பவங்கள் அவரை மாற்றி இருக்கலாம் யாரும் பிறக்கும் பொழுதே புரட்சியாளராக பிறப்பதில்லையே மணி சந்தர்ப்பங்களும் அனுபவங்களுமே ஒருவரை தலைவராகவும் , புரட்சியாளராகவும் உருவாக்குகிறது

இந்திய சுதந்திரம் இரண்டாம் உலக போரின் விளைவால் நிகழ்ந்ததா

அதுவும் ஒரு காரணமென்றே நான் கூறுவேன் அன்று நாட்டில் ஒத்துழையாமை இயக்கம், தண்டி யாத்திரை, சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய போராட்டங்கள் வெற்றிகரமாக நடத்தபட்டதும் பிரிட்டிஷ் அரசாங்கம் அதை தடுக்கமுடியாமல் இருந்த சூழ்நிலையில் இரண்டாம் உலகபோரும் அதில் பிரிட்டிஷுக்கு எங்கே இந்தியர்கள் ஒத்துழைக்காமல் போய்விடுவார்களோ என்ற பயமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றே நினைக்கிறேன் அதுமட்டுமன்றி இந்தியா சுதந்திரம் பெற்ற பொழுது அனௌஇவரும் அதை கொண்டாடியபோழுது காந்தி மட்டும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார் எது எப்படியோ இந்திய வரலாறு தவறாகவே எழுதப்படுகிறது என்ற கருத்தில் நிச்சயம் நான் உடன்படுகிறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்

Post by பிளேடு பக்கிரி on Mon Apr 15, 2013 2:43 am

@balakarthik wrote:நன்றி பிளேடு அது சரி ரொம்ப நாளா ஆளையே காணுமே எந்த சிறைச்சாலை உங்களை முடக்கியது அருமையிருக்கு
ஒரு பிசினஸ் விஷயமா வெளியூர் போயிருந்தேன்.. (நம்பிட்டாங்க) ஜாலிavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்

Post by அன்பு தளபதி on Sat Apr 20, 2013 8:28 pm

மணி நான் கேள்வி பட்டவரை காந்தி தசரத ராமர் மீது அளவில்லா பக்தியை கொண்டிருந்தார் என்றே நினைக்கிறேன் எப்போதும் அவர் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தவர் உயிர் துறக்கும் போதும் ராம நாமத்தை மகாத்மா காந்தி உச்சரித்துக்கொண்டே உயிர் துறந்தவர். என்னிடம் இருந்து எதை வேண்டுமானாலும் பறிக்கலாம், ஆனால் ராமரை பறித்துவிட்டால் எனது உயிர் இருக்காது என்று கூறியதாக கேள்விபட்டுள்ளேன்
கேரளாவை சேர்ந்த கல்யாணம் என்பவரது பேடியை சில வருடங்களுக்கு முன்பு டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டது அவர் காந்தி சுடப்பட்டபோது அருகில் இருந்த சாட்ச்சிகளில் ஒருவர் அவரது கூற்றுப்படி காந்தி இறக்கும் பொழுது ஹா என்றே கூறினார் என உறுதிபடுத்தி உள்ளார் , அவர் நான் சொன்னது தசரத மகன் ராமனை அல்ல என கூறியதாகவும் திரு நாகராஜன் அவர்கள் காந்தியின் ராமன் என்ற பெயரில் முன்பு ஒரு கட்டுரை நிலாச்சாரலில் வந்தது,

அடுத்து அவர் ஒருபொழுதும் இந்துமதத்தை விட்டுகொடுத்ததில்லை அவர் ஹிந்து மதம் மீது தீவிரமான நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும், பிற மதங்களை பெரிதும் மதித்தவர். காந்தி மதமாற்றம் நாட்டை அழிக்கக்கூடிய கடுமையான விஷம் கொண்ட ஆயுதம் போன்றது மதமாற்றம் உலக நாட்டின் கலாச்சாரங்களை அழிக்கக்கூடியது என்று கூறினார்

ஒரு வகையில் இது அவரது ஆரம்ப காலகட்ட செயல்களின் பிரதிபலிப்பாக இருக்காலாமே தவிர பின்வந்த காலங்களில் அவரது இமேஜ்(இதற்க்கு சரியான வார்த்தை தெரியவில்லை) எந்த விதத்திலும் பாதிப்படையா வண்ணம் நடந்து கொண்டார், அதாவது இந்து மக்களுக்கு அதிகம் பாதிப்பு வரும் விதமாக நடந்து கொண்டார், கிலாபத் இயக்க தோல்வியால் பர்மாவில் நடைபெற்ற கிளர்ச்சியில் இஸ்லாமிய வெறியர்களால் இந்துக்கள் கூட்டமாக படுகொலை செய்யப்பட்ட பொது அவர்களை எதிர்த்து ஒருவார்த்தை கூட கூற துணிவின்றி அவர்கள் இறைவனுக்கும் அஞ்சி நடப்பவர்கள் என தனது பத்திரிகையில் எழுதினர், இந்த சம்பவத்திற்காக அண்ணி பெசன்ட் அம்மையாரும், சர் கிருஷ்ணன் மேனனும் காந்திஜியை கடிந்து கொண்டனர் என்பதும் முக்கியமான வரலாறு, இரண்டாவது இஸ்லாமிய வெறியனால் சுவாமி ஷ்ராத்தானந்தா படுகொலை செய்யப்பட்ட பொது கொலைபுரிந்தவனை தனது சகோதரன் கூறினார் காந்தி ஆனால் மதம் மாறிய தனது மூத்த மகனை சென்று காணக்கூடாது தடுத்தவரும் இதே காந்தி என்பதும் இங்கே குறிப்பிட வேண்டும் காரணம், காந்தியின் இரட்டை வாழ்க்கை முறையை எல்லோரும் அறிய வேண்டும் அல்லவா ஆகவே தான்,

உண்மைத்தான் அதுவரை அவர் அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த சாதாரண மனிதராகவே இருந்தார் ஆனால் தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், அந்த ரயில் அவமானம் போன்ற சம்பவங்கள் அவரை மாற்றி இருக்கலாம் யாரும் பிறக்கும் பொழுதே புரட்சியாளராக பிறப்பதில்லையே மணி சந்தர்ப்பங்களும் அனுபவங்களுமே ஒருவரை தலைவராகவும் , புரட்சியாளராகவும் உருவாக்குகிறது


காந்திய வாதிகள் மட்டுமே இந்த நாட்டில் தியாகிகள் என போற்றப்படுகிறார்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு தீக்கதிர் பத்திர்க்கையில் திரு பாலபாரதி என எண்ணுகிறேன் , சட்டமன்ற உறுப்பினர் அல்ல எழுத்தாளர் அவர் பெயர் பாரதி என முடியும், அவரது ஒரு கட்டுரையில் மிக முக்கியமான ஒரு சம்பவத்தை குறிப்பிட்டிருந்தார் நேதாஜியின் இந்திய தேசிய படையை சேர்ந்தவர்கள் குற்றத்திற்காக இந்தியாவில் வெள்ளையன் ஆட்சி மரணத்தண்டை விதித்தது அதில் ஒருவர் பெயர் ராமு தேவர், அந்த ராமு தேவருக்கு அப்பொழுது வயது 17 மட்டுமே, மேலும் நேதாஜி இந்திய ஆட்சி பணிக்கு இங்கிலாந்தில் படித்து தேர்வானவர் , சுகமான சொகுசு வாழ்க்கை வாழ்ந்துருக்கலாம் ஆனாலும் உயிரை துச்சமென மதித்து அவர் நடத்திய போராட்டமே இந்திய வீரத்தை வெள்ளையனுக்கு எடுத்து காட்டியது , தொடை நடுங்க செய்தது,

அதுவும் ஒரு காரணமென்றே நான் கூறுவேன் அன்று நாட்டில் ஒத்துழையாமை இயக்கம், தண்டி யாத்திரை, சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய போராட்டங்கள் வெற்றிகரமாக நடத்தபட்டதும் பிரிட்டிஷ் அரசாங்கம் அதை தடுக்கமுடியாமல் இருந்த சூழ்நிலையில் இரண்டாம் உலகபோரும் அதில் பிரிட்டிஷுக்கு எங்கே இந்தியர்கள் ஒத்துழைக்காமல் போய்விடுவார்களோ என்ற பயமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றே நினைக்கிறேன் அதுமட்டுமன்றி இந்தியா சுதந்திரம் பெற்ற பொழுது அனௌஇவரும் அதை கொண்டாடியபோழுது காந்தி மட்டும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார் எது எப்படியோ இந்திய வரலாறு தவறாகவே எழுதப்படுகிறது என்ற கருத்தில் நிச்சயம் நான் உடன்படுகிறேன்

இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் பொது நாடே எரிந்து கொண்டிருந்தது ஆனால் காந்திஜி ஒரு அழகான பெண் அருகில் உடைகளின்றி உறங்கி அவளை தொடாமல் இருப்பது குறித்த அவசியாமான ஆராய்ச்சிகளை செய்து அதை ஹரிஜனிலும் எழுதியதாக கூட சிலர் கூறுவார்,

avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்

Post by balakarthik on Sun Apr 21, 2013 11:58 am

கேரளாவை சேர்ந்த கல்யாணம் என்பவரது பேடியை சில வருடங்களுக்கு முன்பு டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டது அவர் காந்தி சுடப்பட்டபோது அருகில் இருந்த சாட்ச்சிகளில் ஒருவர் அவரது கூற்றுப்படி காந்தி இறக்கும் பொழுது ஹா என்றே கூறினார் என உறுதிபடுத்தி உள்ளார் , அவர் நான் சொன்னது தசரத மகன் ராமனை அல்ல என கூறியதாகவும் திரு நாகராஜன் அவர்கள் காந்தியின் ராமன் என்ற பெயரில் முன்பு ஒரு கட்டுரை நிலாச்சாரலில் வந்தது

இதற்கான விளக்கத்தை இந்த தளத்தில் அளித்துள்ளார்கள் மணி படித்து பார்த்து சொல்லவும்

காந்தியின் (கி)ராம தரிசனம்

ஒரு வகையில் இது அவரது ஆரம்ப காலகட்ட செயல்களின் பிரதிபலிப்பாக இருக்காலாமே தவிர பின்வந்த காலங்களில் அவரது இமேஜ்(இதற்க்கு சரியான வார்த்தை தெரியவில்லை) எந்த விதத்திலும் பாதிப்படையா வண்ணம் நடந்து கொண்டார், அதாவது இந்து மக்களுக்கு அதிகம் பாதிப்பு வரும் விதமாக நடந்து கொண்டார், கிலாபத் இயக்க தோல்வியால் பர்மாவில் நடைபெற்ற கிளர்ச்சியில் இஸ்லாமிய வெறியர்களால் இந்துக்கள் கூட்டமாக படுகொலை செய்யப்பட்ட பொது அவர்களை எதிர்த்து ஒருவார்த்தை கூட கூற துணிவின்றி அவர்கள் இறைவனுக்கும் அஞ்சி நடப்பவர்கள் என தனது பத்திரிகையில் எழுதினர், இந்த சம்பவத்திற்காக அண்ணி பெசன்ட் அம்மையாரும், சர் கிருஷ்ணன் மேனனும் காந்திஜியை கடிந்து கொண்டனர் என்பதும் முக்கியமான வரலாறு, இரண்டாவது இஸ்லாமிய வெறியனால் சுவாமி ஷ்ராத்தானந்தா படுகொலை செய்யப்பட்ட பொது கொலைபுரிந்தவனை தனது சகோதரன் கூறினார் காந்தி ஆனால் மதம் மாறிய தனது மூத்த மகனை சென்று காணக்கூடாது தடுத்தவரும் இதே காந்தி என்பதும் இங்கே குறிப்பிட வேண்டும் காரணம், காந்தியின் இரட்டை வாழ்க்கை முறையை எல்லோரும் அறிய வேண்டும் அல்லவா ஆகவே தான்,
இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் பொது நாடே எரிந்து கொண்டிருந்தது ஆனால் காந்திஜி ஒரு அழகான பெண் அருகில் உடைகளின்றி உறங்கி அவளை தொடாமல் இருப்பது குறித்த அவசியாமான ஆராய்ச்சிகளை செய்து அதை ஹரிஜனிலும் எழுதியதாக கூட சிலர் கூறுவார்,
இந்த செய்து ஆதாரமில்லாத செய்தி என்றே நினைக்கிறேன் பிரிவினை சமயத்தில் பெண்கள் காமப் பலாத்காரத்திற்கு இரையாகும் போது, குழந்தைகள் கண்முன் கொலை செய்யப்படும் போது, உறவினர் தலைகள் சீவப்படும் போது, பழிவாங்க ஆய்தமோடு ஓடும் இந்துக்களைத் தடுத்துப் பொறுக்குமாறு, காந்தி கூறினார் அதற்க்கு ஹிந்துக்களிடையே பெரிய எதிர்ப்பு எழுந்தது பஞ்சாபில் இந்துக்களைக் கண்டதும் முஸ்லீம் ஆட்கள் கொலை செய்யும் போது, ஆயுதத்தைக் கைவிட நீங்கள் எப்படிச் சொல்லலாம் ? கசாப்புக் கடை ஆடுகளைப் போல எங்கள் தலைகள் அறுபட்டுக் கூறுபட வேண்டுமா ?” என்று புலம்பெயர்ந்த கூட்டத்தார் யாவரும் கத்தினார்கள் , காந்தி சாகட்டும் என்று கூச்சலிட்டார்கள் டெல்லியில் வாழும் காந்தியின் முஸ்லீம் நண்பர்கள் உயிருக்கு ஆபத்து என அறிந்தும் இந்தியாவிலே தங்குவதா இல்லை எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டுப் பாகிஸ்தானுக்கு ஓடுவதா என்று கேட்டால், ஓடிப் போகாமல் தங்கி மரண ஆபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்பது காந்தியின் பதிலாக இருந்தது என்று படித்திருக்கிறேன் ஆனால் போகப் போக, காந்தியின் அறிவுரை, அவரைப் பின்பற்றியவருக்கும் பிடிக்க வில்லை மேலும் அவர் எப்போதும் இஸ்லாமியருக்குப் பரிந்து பேசுவது பலருக்கு வெறுப்பூட்டின ஆனால் காந்தியோ முஸ்லீம்களுக்குப் பகைவன் எவனோ, அவன் இந்தியாவுக்கும் பகைவன். இந்தியா, பாகிஸ்தான் இரண்டிலும் ஒருங்கே அமைதி நிலவட்டும். நாம் ஒருவரை ஒருவர் பகைவராக எண்ணக் கூடாது என்றே கூரிவந்ததாகவும் கேள்விபட்டேன் நமது மதத்தை நாம் மதிப்பதுபோல் மற்றவர் மதங்களையும் மதிக்க வேண்டும் உயர்ந்த கருத்துக்கள் எந்த மொழியில் இருந்தாலேன அவை எல்லாமே நமக்கும் உலகத்திற்கும் நல்லறிவைத் தரவேண்டும் என்று சொன்னாராம்

காந்திய வாதிகள் மட்டுமே இந்த நாட்டில் தியாகிகள் என போற்றப்படுகிறார்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு தீக்கதிர் பத்திர்க்கையில் திரு பாலபாரதி என எண்ணுகிறேன் , சட்டமன்ற உறுப்பினர் அல்ல எழுத்தாளர் அவர் பெயர் பாரதி என முடியும், அவரது ஒரு கட்டுரையில் மிக முக்கியமான ஒரு சம்பவத்தை குறிப்பிட்டிருந்தார் நேதாஜியின் இந்திய தேசிய படையை சேர்ந்தவர்கள் குற்றத்திற்காக இந்தியாவில் வெள்ளையன் ஆட்சி மரணத்தண்டை விதித்தது அதில் ஒருவர் பெயர் ராமு தேவர், அந்த ராமு தேவருக்கு அப்பொழுது வயது 17 மட்டுமே, மேலும் நேதாஜி இந்திய ஆட்சி பணிக்கு இங்கிலாந்தில் படித்து தேர்வானவர் , சுகமான சொகுசு வாழ்க்கை வாழ்ந்துருக்கலாம் ஆனாலும் உயிரை துச்சமென மதித்து அவர் நடத்திய போராட்டமே இந்திய வீரத்தை வெள்ளையனுக்கு எடுத்து காட்டியது , தொடை நடுங்க செய்தது,

இந்த பதிவையும் பார்க்கவும் மணி
கற்றுக்கொடுக்கிறார் காந்திஜி -வெ.ஜீவகுமார்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Sat Apr 27, 2013 10:59 pm

காந்தியை புரிந்து கொள்வது சற்று சிரமமான விசயமே !

அவரது உள்ளார்ந்த ஆன்மீக தேடலில் அவரின் மீது அரசியல் பணி வந்து ஏறிக்கொண்டது !

அவர் அரசியல்வாதியல்ல ! அடிப்படை ஆன்மீகவாதி !

இந்து தர்மத்தின் அடித்தளத்தின் மீது நின்று சரியாகவே பைபிளையும் குரானையும் புரிந்து வைத்திருந்தார் !

மும்மதங்களையும் ஒரே புள்ளியில் இணைப்பதற்கான தெளிவும் முன்மாதிரியும் அவரிடமிருந்தது ! உலகம் முழுவதிலும் அவருக்கு அங்கீகாரமும் இருந்தது ! தங்களை அறிவின் சிகரமாக கருதிக்கொண்டிருந்த ஐரோப்பியர்களும் கூட அவருக்கு இடம் கொடுக்கும் மனநிலையில் இருந்தனர் !

உலகம் தழுவிய ஆன்மீகப்பேரலை என்பது இந்துமதத்தை கொண்டுபோய் மற்றவர்கள் மீது தினிப்பதாலோ அல்லது கிரிஸ்தவத்தை கொண்டுபோய் மற்றவர்கள் மீது தினிப்பதாலோ அல்லது இசுலாத்தை மற்றவர்கள் மீது தினிப்பதாலோ நடக்காது !

முன்று மதத்தையும் வேற்றுமைகளை விட்டு ஒற்றுமைகளில் மட்டும் இனைக்கவேண்டும் !

காந்தியின் இந்த சிந்தனை அவரை ஒவ்வொரு மதவாதிகளுக்கும் அவர் அடுத்த மதத்தை ஆதரிப்பதாக சந்தேகப்பட வைக்கிறது 1 ஆனால் உண்மை அதுவல்ல !

உண்மை உலகத்தின் தாய் மதமான இந்து தர்மத்தை பின்னால் வந்த வேதங்களின் அடிப்படையில் செழுமைப்படுத்த முயற்சி செய்ததே !

உலக ஆன்மீக தலைமையகமாக இந்தியா மாற காந்தியின் மூலமாக ஒரு சந்தர்ப்பம் இருந்ததை இந்தியா இழந்து போனது என்பதே உண்மை !

முழுமையடையாத காந்தியின் பணி மீண்டும் இந்தியாவிலிருந்து அவரது ஆத்துமாவின் மூலமாக -- அதாவது அவரது மறுபிறப்பின் மூலமாக வெற்றிகரமாக கடவுளின் பலத்தோடு தொடங்கும் !

அதற்காகவே உலகமும் காலமும் காத்திருக்கிறது !

ராம் என்றால் குமாரன் அதாவது அவதாரம் -- சற்குரு என்று பொருள் ! அது ராமராகவும் கிரிஸ்ணராகவும் இயேசுவாகவும் அவதரித்த நாராயணன் என்பது காந்திக்கு நன்கு தெரியும் ! அதனையே நான் சொல்லுகிற ராமன் தசரத ராமன் மட்டுமல்ல என்றார் !
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்

Post by எம். ராஜசிஙம் on Sun Apr 28, 2013 10:34 pm

ஹிந்து தர்மமே மதங்கள் அனைத்திலும் மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட மதம். புறந்தள்ளும் தன்மை கொண்டதாக இல்லாத ஒரு தருமம் ஆனதால் ஹிந்து தருமம் பிற மதங்களை மதிப்பது மட்டுமல்லாமல் அவற்றின் நல்ல அம்சங்களை ஏற்றுக்கொள்ளவும் உட்கொள்ளவும் வழி வகுக்கிறது. அஹிம்சை என்பது எல்லா மதங்களிலும் உள்ளதுதான் ஆனால் ஹிந்து தர்மத்திலேயே அது அதன் மிகச்சிறந்த விதத்தில் வெளிப்படுகிறது. ஹிந்து தர்மம் மானுடம் மட்டுமல்லாது அனைத்து உயிரும் ஒன்று எனும் ஆன்ம ஒற்றுமையை வலியுறுத்துகிறது.
----- இது யாரும் மறுக்க முடியாத உண்மை -----

எம். ராஜசிஙம்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 46
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Wed May 01, 2013 11:29 am

அனைத்து உயிரும் கடவுளின் ஆவியின் ஒரு பின்னம் ! அதேசமயம் அனைத்து சரீரங்களும் நாராயணனிலிருந்து வந்தவை
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Sat May 04, 2013 11:51 pm


நேற்று எனது குருநாதர்களில் ஒருவரான நாமக்கல் மகானை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது

அவரிடம் உலகில் வெளிப்பட உள்ள சமரச வேத்தைப்பற்றியும் அதனுடைய வழிகாட்டியாக காந்தியின் ஆத்மா மதுரையில் பிறவியெடுக்கும் என்பதான எனக்கு வெளிப்படுத்தப்பட்டதை அவரிடம் சமர்பித்தேன்

அதை சிலாகித்து நீ இவ்வளவு தெரிந்ததால் காந்தி முன் பிறவியில் குசேலர் என்பதையும் அறிந்துகொள் என்றார்

கிரிஷ்ணரோடு சாந்தினி முனிவரின் ஆசிரமத்தில் படித்த நண்பன் வேதமே மனிதனாக வந்திருந்தாலும் அவருக்கு வேதம் சொன்னால் ஆர்வமில்லாமல் இருப்பார் அப்போது குசேலர்தான் எல்லா வேலைகளும் செய்து தண்டனையிலிருந்து காப்பாற்றுவர்

போர்பந்தரில் மட்டுமே குசேலருக்கு கோயில் இருக்கிறது அங்கு இரண்டுநாட்கள் தங்கியிருந்தபோது இந்த ரகசியத்தை அறிந்தேன் என்றார்
தேசாந்திரிகளாய் சுற்றித்திரியும் மகான்கள் உணர்ந்தவை ஆதாரமற்றவை அல்ல !

அவரது இந்த சந்திப்பில் வெளிப்பட்ட இன்னொரு ரகசியம் ! ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் உறவிணர்களால் ஆதாமின் இரண்டு மக்களின் சமாதி பாதுகாக்கப்படுகிறது என்பது ! அந்த கைங்கர்யமே கலாமிற்கு பேரையும் புகழையும் பெற்றுத்தந்தது !

அப்துல்கலாம் வீட்டருகில் 60 அடி நீளம் உள்ள இரண்டு அண்ணன் தம்பிகளின் சமாதிகளை முஸ்லீம் குடும்பங்கள் பராமரித்து வருகின்றன ! ஆதி மனிதனான ஆதாமுக்கு இரண்டு ஆண்மக்கள் இருந்ததாக பைபிளும் குரானும் சொல்லுகிறது ! அந்த இருவரின் சமாதி ராமேஸ்வரத்தில் உள்ளது ! நான் இங்கு சென்றதில்லை ! ஆனால் விரைவில் சென்று இன்னும் பல விசயங்களை அறிந்து கொள்ள கடவுள் அருள்புரிவாராக !!

இதிலிருந்து ஆதி மனிதனான ஆதாம் தமிழன் என்ற எனது கருத்தியல் வலுப்பெருகிறது ! இலங்கையிலுள்ள ஸ்ரீபாதமலை அல்லது சிவனொளிபாத மலையே ஆதாம் பூமிக்கு வந்த முதல் இடம் ! அவரே பின்னாளில் சிவனாக உயர்த்தபட்டார் !
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum