புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 45 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 45 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 45 Poll_c10 
127 Posts - 54%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 45 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 45 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 45 Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 45 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 45 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 45 Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 45 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 45 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 45 Poll_c10 
9 Posts - 4%
prajai
உலகச் செய்திகள்!  - Page 45 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 45 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 45 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
உலகச் செய்திகள்!  - Page 45 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 45 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 45 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உலகச் செய்திகள்!  - Page 45 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 45 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 45 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 45 of 81 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 63 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 45 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 17, 2015 5:58 pm

ஒபாமாவின் உத்தரவுக்கு கோர்ட்டு அதிரடி தடை

சட்டவிரோதமாக குடியேறியவர்களில் 47 லட்சம் பேருக்கு சலுகை வழங்கி ஒபாமா பிறப்பித்த உத்தரவுக்கு அமெரிக்க கோர்ட்டு அதிரடியாக தடை பிறப்பித்துள்ளது.

அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக குடியிருக்கும் 4.5 லட்சம் இந்தியர்கள் உள்பட ஒரு கோடியே 10 லட்சம் வெளிநாட்டினரை அங்கிருந்து வெளியேற்றும் நிலை உருவானது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அங்கு சட்ட விரோதமாக குடியேறியவர்களில் 47 லட்சம் பேருக்கு சலுகை காட்டும் விதமாக, சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கி கடந்த நவம்பர் மாதம் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அமெரிக்க பாராளுமன்றத்தின் விருப்பத்துக்கு மாறாக அமைந்த இந்த உத்தரவு, பழமைவாதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஒபாமாவின் உத்தரவை எதிர்த்து அமெரிக்காவில் 26 மாகாணங்கள் ஒன்று திரண்டு, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடுத்தன. 'அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவானது, அரசியல் சட்டம் அவருக்கு வழங்கியுள்ள அதிகாரங்களை மீறிய செயல் ஆகும். அமெரிக்க அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பிரிவு மீறப்பட்டுள்ளது. இந்த உத்தரவினால் நாட்டில் சட்டம் - ஒழுங்கை அமல்படுத்துவதற்கும், சுகாதாரம், கல்வி திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் கூடுதல் முதலீடுகள் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். எனவே ஜனாதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' என்று மாகாணங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஜனாதிபதி ஒபாமாவின் உத்தரவை நிறைவேற்றுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என கூறி நீதிபதி இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார். ஆனால் வெள்ளை மாளிகை கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதியின் உத்தரவு சட்ட வரம்புக்கு அப்பாற்பட்டதல்ல. குடியுரிமை விதிகளை அமல்படுத்துவதில் முன்னுரிமைகளை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று அமெரிக்க சுப்ரீம்கோர்ட்டும், பாராளுமன்றமும் கூறி உள்ளன. ஜனாதிபதி தனது அதிகாரத்தை சரியாகவே பயன்படுத்தி உள்ளார். என்று கூறியது. இந்த தடைக்கு எதிராக மேல் - முறையீடு செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

ஒபாமாவின் அதிரடி உத்தரவின் மூலம், அமெரிக்காவில் வந்து குடியுரிமை பெற்றவர்களின் பெற்றோர்கள், சட்டப்படி நிரந்தரமாக தங்குகிற உரிமை பெற்றவர்களின் பெற்றோர்கள், சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள். அவர்கள் தற்காலிகமாக அமெரிக்காவில் வசிப்பதை தொடரலாம். அமெரிக்காவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்வந்து குடியேறியவர்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தும் என தகவல்கள் வெளியாகின.



உலகச் செய்திகள்!  - Page 45 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 17, 2015 6:32 pm

லிபியாவில் எகிப்து போர் விமானங்கள் குண்டு மழை, ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று குவிப்பு

லிபியாவில் எகிப்து போர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீசியதில் 64 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்துக்கு எகிப்து நாட்டின் மரபு வழி கிறிஸ்தவர்கள் 21 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் லிபியாவில் பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். கடத்திச்செல்லப்பட்ட 21 பேரின் கதியும் என்னவென்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் லிபியா நாட்டில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று 5 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு வீடியோ காட்சியை வெளியிட்டனர். லிபியாவில் 21 பேரை தலை துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் படுகொலை செய்த காட்சி பதிவாகியிருந்தது. இந்த கொடூர சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.

இதுவரை சிரியா, ஈராக் நாடுகளில்தான் பணயக்கைதிகளாக பிடித்தவர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். முதல் முறையாக இந்த 2 நாடுகளுக்கும் வெளியேயும் தீவிரவாதிகள் இதுபோன்ற அட்டூழியத்தில் ஈடுபட்டிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது. தனது நாட்டு மக்களுக்கு நேர்ந்த துயரம் குறித்து வேதனை அடைந்த எகிப்து அதிபர் அப்தெல் பட்டாஹ் அல்–சிசி தீவிரவாதிகளின் வெறிச்செயலுக்கு உடனடியாக கடும் கண்டனம் தெரிவித்தார்.

‘இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு சரியான நேரத்தில் தக்க பாடம் புகட்டுவோம்’ என்று எகிப்து எச்சரிக்கை விடுத்தது.

இதனிடையே, லிபியாவில் தீவிரவாதிகள் வசிக்கும் பகுதிகளிலும், அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் முகாம்களிலும் எகிப்து போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக எகிப்து ராணுவம் நடத்திய முதல் தாக்குதலில் 64 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியில் லிபியா ராணுவ உதவியுடன் எகிப்து தாக்குதல் நடத்தியுள்ளது. லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள், ஆயுத மையங்கள் மீது எகிப்து போர்விமானங்கள் குண்டுகளை சரமாரியாக வீசியது. தாக்குதலில் 12-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் காயம் அடைந்துள்ளனர் என்றும் லிபியா ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்து நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவன் பாஷிர் அல்-தெர்சி உள்பட 3 பேர் பலியாகினர் என்றும் உள்ளூர் மீடியா தகவல் வெளியிட்டுள்ளது. லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த உலக நாடுகளுக்கு எகிப்து அழைப்பு விடுத்துள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 45 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 17, 2015 6:47 pm

புத்தர் ஞானம் பெற்ற போதி மரம் அருகே 15 நிமிடம் வழிபாடு செய்த இலங்கை அதிபர் சிறிசேனா

அரச வம்சத்தில் சித்தார்த்தனாக பிறந்து பின்நாட்களில் கவுதமராக மாறிய புத்தர் தோற்றுவித்த புத்த சமயத்தின் நெறிமுறைகளை உலகின் பல நாடுகளில் வாழும் கோடானுக்கோடி மக்கள் கடைபிடித்து வருகின்றனர். குறிப்பாக, சீனா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற தெற்காசிய நாடுகளின் ஆட்சியாளர்களும் புத்த மதத்தை சார்ந்தவர்களாகவே உள்ளனர்.

இவ்வகையில், இலங்கையிலும் புத்த சமயத்தின் நெறிமுறைகளின் வழியொற்றியே ஆட்சி நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், புத்தபிரான் ஞானநிலையை அடைவதற்காக தவம் இருந்த போதி மரத்தை 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இன்று தரிசித்தார்.

பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கயாவில் இந்த வரலாற்று சிறப்புமிக்க போதி மரம் அமைந்துள்ள மஹாபோதி ஆலய வளாகத்தை சுமார் ஒரு மணி நேரம் அவர் சுற்றிப் பார்த்தார். இநத ஆலயம் அசோக மாமன்னரால் கி.பி.260-ம் ஆண்டு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த போதி மரத்தை அவர் 15 நிமிடங்கள் வழிபாடு செய்த சிறிசேனாவுக்கு மஹாபோதி அமைப்பின் சார்பில் தேனீர் விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்துக்கு பின்னர் இங்கிருந்து விமானம் மூலம் அவர் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றார். இன்று இரவு திருப்பதியில் தங்கும் அவர் நாளை அதிகாலை சுப்ரபாத சேவையின்போது திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கிறார்.



உலகச் செய்திகள்!  - Page 45 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Feb 17, 2015 7:23 pm

சிவா wrote:புத்தர் ஞானம் பெற்ற போதி மரம் அருகே 15 நிமிடம் வழிபாடு செய்த இலங்கை அதிபர் சிறிசேனா


பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கயாவில் இந்த வரலாற்று சிறப்புமிக்க போதி மரம் அமைந்துள்ள மஹாபோதி ஆலய வளாகத்தை சுமார் ஒரு மணி நேரம் அவர் சுற்றிப் பார்த்தார். இநத ஆலயம் அசோக மாமன்னரால் கி.பி.260-ம் ஆண்டு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

.
மேற்கோள் செய்த பதிவு: 1121085

தெரியாத தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி சிவா அன்பு மலர்



உலகச் செய்திகள்!  - Page 45 Aஉலகச் செய்திகள்!  - Page 45 Aஉலகச் செய்திகள்!  - Page 45 Tஉலகச் செய்திகள்!  - Page 45 Hஉலகச் செய்திகள்!  - Page 45 Iஉலகச் செய்திகள்!  - Page 45 Rஉலகச் செய்திகள்!  - Page 45 Aஉலகச் செய்திகள்!  - Page 45 Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 18, 2015 12:30 am

Aathira wrote:
சிவா wrote:புத்தர் ஞானம் பெற்ற போதி மரம் அருகே 15 நிமிடம் வழிபாடு செய்த இலங்கை அதிபர் சிறிசேனா


பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கயாவில் இந்த வரலாற்று சிறப்புமிக்க போதி மரம் அமைந்துள்ள மஹாபோதி ஆலய வளாகத்தை சுமார் ஒரு மணி நேரம் அவர் சுற்றிப் பார்த்தார். இநத ஆலயம் அசோக மாமன்னரால் கி.பி.260-ம் ஆண்டு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

.
மேற்கோள் செய்த பதிவு: 1121085

தெரியாத தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி சிவா அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1121092

அருமையான கோவில் அது ஆதிரா...எவ்வளவு பெரிய மரம் தெரியுமா அது?...நாங்க கயா ஸ்ரார்த்தம் செய்ய போனபோது பார்த்தோம்..............சிற்ப வேலைகளும் அந்த பளிங்கு புத்தரும் ரொம்ப அழகு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Feb 19, 2015 5:12 pm

மிக சிறந்த தகவல் தந்தமைக்கு நன்றி .............

புத்தர் ஞானம் பெற்ற இடமாகிய போதி மர தகவல் மிக அருமை....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

உலகச் செய்திகள்!  - Page 45 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 23, 2015 12:55 am

பாகிஸ்தானில் ஜனாதிபதி அதிரடி: 6 தீவிரவாதிகளின் கருணை மனுக்கள் தள்ளுபடி- 2 நாளில் தூக்கில்போட நடவடிக்கை

பாகிஸ்தானில், 2008-ம் ஆண்டு முதல் மரண தண்டனை கைதிகளின் தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்கப்பட்டு, அந்த உத்தரவு தொடர்ந்து 6 ஆண்டுகளாக அமலில் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 16-ந்தேதி, அங்கு பெஷாவர் ராணுவ பள்ளிக்கூடத்தில் தலீபான் தீவிரவாதிகள் அதிபயங்கர தாக்குதல்கள் நடத்தினார்கள். இந்த தாக்குதல்களில் 135 குழந்தைகள் உள்பட 148 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து தீவிரவாதிகளை ஒடுக்கும் விதத்தில், மரண தண்டனையை நிறைவேற்ற விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றுவது என்று பிரதமர் நவாஸ் ஷெரீப் முடிவு செய்தார். இந்த முடிவுக்கு டிசம்பர் 17-ந் தேதி ஜனாதிபதி மம்னூன் உசேன் ஒப்புதல் வழங்கினார். அதைத் தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதிகளின் தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதிகள் அசார் என்ற பாய் கான், அப்துல் அஜீஸ், பஷீர் அகமது, முகமது பைசல், முகமது அப்சல், முனாவர் அலி ஆகிய 6 பேர் ஜனாதிபதியிடம் கருணை மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை பரிசீலனை செய்த ஜனாதிபதி மம்னூன் உசேன், அவற்றை தள்ளுபடி செய்து நேற்று முன்தினம் மாலை உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தான் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள தீவிரவாதிகள் 6 பேரும் சிந்து மாகாணத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களது கருணை மனுக்கள், ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளது குறித்து, சிந்து மாகாண அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த அமைச்சகம், 6 தீவிரவாதிகளை 2 நாளில் தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சிறைத்துறை ஐ.ஜி.க்கு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் பாதுகாப்பு காரணங்களை காட்டி, இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

தீவிரவாதிகளை ஒழித்து கட்டுவதற்கு அரசு நிர்வாகம் எடுக்கிற அனைத்து முடிவுகளுக்கும் தனது ஆதரவு உண்டு என்று ஏற்கனவே ஜனாதிபதி மம்னூன் உசேன் அறிவித்துள்ளார். மரண தண்டனை கைதிகளின் கருணை மனுக்களை ஏற்பதில்லை என்றும் அவர் முடிவு செய்திருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



உலகச் செய்திகள்!  - Page 45 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 25, 2015 11:00 pm


மொசூல் நகரில் நூலகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் 8000 அரிய புத்தகங்கள் தீயில் எரிந்து சாம்பல்

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு நகரங்களை பிடித்து வைத்து உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் அவற்றை இஸ்லாமிய அரசாக அறிவித்து உள்ளனர். தங்கள் கடுப்பாட்டில் உள்ள மொசூல் நகரில் உள்ள நூலகம் மீது தாக்குதல் நடத்தினர் . அதில் இருந்த 8000 அரிய புத்தகங்கள் தீயில் எரிந்து சாம்பலானது.

பொது நூலகம் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் குண்டு வீசினர். இதில் அங்கிருந்த , புத்தகங்கள் எரிந்து சாமபலானதாக நூலகத்தின் இயக்குனர் ஹனிம்-அல்-தா தெரிவித்து உள்ளார்.

இந்த நூலகம் புதிதாக ஈராக் நகரம் உருவானதற்கு அடையாளமாக 1921 ஆண்டு தொடங்கபட்டது.இந்த தாக்குதலில் 18, 19 ஆம் நூற்றாண்டில் உள்ள அரிய புத்தகங்கள் மற்றும் பொருட்கள் சாம்பலானது.



உலகச் செய்திகள்!  - Page 45 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 25, 2015 11:00 pm


ஆப்கானிஸ்தானில் பனி சரிவு: 108 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் பனி பொழிவு அதிகரிப்பால் ஏற்பட்ட பனி சரிவில் 108 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோர் காபூல் நகருக்கு வடக்கே பஞ்ச்ஷீர் மாகாணத்தை சேர்ந்தவர்கள். கடந்த இரு நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் முக்கிய சாலைகள் முடங்கின. இதனால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மீட்பு பணியாளர்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

குளிர் காலங்களில் ஆப்கானிஸ்தானின் உயர்ந்த மலை பகுதிகளில் அபாயகரமான பனி சரிவுகள் ஏற்படுவது வழக்கம். கடந்த 2012ம் ஆண்டில் வடகிழக்கு பகுதிக்கு அதிக உள்ளடங்கிய தொலைவில் காணாமல் போன 145 பேர் மரணம் அடைந்தனர் என கருதப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் பேரிடர் மேலாண்மை கழகத்தின் துணை தலைவரான முகமது அஸ்லாம் சயாஸ் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பனி சரிவில் 108 பேர் பலியாகி உள்ளனர். எங்களது குழு தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என கூறியுள்ளார்.

இந்த பனி சரிவில் பஞ்ச்ஷீர் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. பஞ்ச்ஷீர் மாகாண ஆளுநர் அப்துல் ரஹ்மான் கபிரி கூறுகையில், மீட்பு பணிக்காக 300 பேரை நாங்கள் திரட்டினோம்.

ஆனால் எங்களுக்கு தேவையான உபகரணம் எங்களிடம் இல்லை. மக்கள் மண் வாரும் கருவியை உபயோகித்தும் மற்றும் வெறுங்கைகளுடன் சிக்கியிருந்த மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர் என அவர் கூறியுள்ளார். பனியால் பாதிக்கப்பட்டு காயமடைந்த 15 பேரை வெளியே இழுத்து மீட்டுள்ளோம் என ஆளுநர் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் மிதமான மற்றும் வறண்ட குளிர் அதிக அளவில் இருந்தாலும், வடக்கின் பெரும்பாலான பகுதிகள் கடந்த 2 நாட்களாக அதிக பனி பொழிவை சந்தித்துள்ளன. தலைநகர் காபூல் பகுதிகளில் நேற்று மின் வெட்டால் பாதிப்பு ஏற்பட்டது. பனி புயல் மற்றும் பனி சரிவால் சலங் பாஸ் பகுதியில் இன்று மின் கம்பிகள் பாதிப்படைந்தன.

இதனால் நாட்டின் வடக்கு பகுதியுடனான இணைப்பு பாதிப்படைந்தது. இந்த பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து இன்று மூடப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளிடமிருந்து, தலீபான்களின் சிதைவுக்கு பின்பு கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்பிலான நிதி உதவி அளிக்கப்பட்டாலும் உலகின் ஏழையான நாடு ஆக தொடர்ந்து ஆப்கானிஸ்தான் நீடித்து வருகிறது. மோசமான உட்கட்டமைப்பு வசதிகள், போதிய கருவிகள் இல்லாதது ஆகியவற்றால் மீட்பு குழுவினர் அப்பகுதிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 45 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 26, 2015 1:16 am

நைஜீரியாவில் 207 போகோ ஹராம் தீவிரவாதிகள் கொன்று குவிப்பு: சாட் ராணுவம் அதிரடி

நைஜீரியாவில் நடந்த சண்டையில் 207 போகோ ஹராம் தீவிரவாதிகளை சாட் ராணுவம் கொன்று குவித்துள்ளது.

நைஜீரியா மற்றும் அதன் அண்டை நாடுகளை அச்சுறுத்தி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த முயற்சியில் நைஜீரியாவுக்கு உதவி செய்வதற்காக நைஜர், கேமரூன் மற்றும் சாட் ஆகிய நாடுகளும் பிராந்திய ராணுவ நடவடிக்கையை தொடங்கி உள்ளன.

இந்நிலையில், எல்லை கடந்து தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு வரும் கேமரூன் படைகளுக்கு ஆதரவாக சாட் நாட்டின் படைகள் கடந்த மாதம் அனுப்பப்பட்டன. இந்த படை வீரர்கள், நேற்று நடந்த சண்டைகளில் 207 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.

கேமரூன் எல்லைக்கு மிக அருகில் நைஜீரிய பகுதியில் நடந்த இந்த சண்டைகளில் ராணுவம் தரப்பில் ஒரு வீரர் இறந்ததாகவும், 9 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான ஆயுதங்கள் மற்றும் இரண்டு வாகனங்களை கைப்பற்றியதாகவும் சாட் ராணுவம் தெரிவித்துள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 45 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 45 of 81 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 63 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக