புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_c10 
306 Posts - 42%
heezulia
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_c10 
6 Posts - 1%
prajai
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
manikavi
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24 அம்பிகா சிவம்


   
   

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Tue Feb 03, 2015 9:26 pm

First topic message reminder :

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் -1


ஆப்ரஹாம் லிங்கன்

ஒரு மனிதனால் எத்தனை தோல்விகளைத் தாங்க முடியும். ஒன்று இரண்டு அதற்குள்ளாகவே மனமொடிந்து விடுவார்கள். தங்கள் பாதையை மாற்றிக் கொள்வார்கள்.

ஆனால் தோல்விகளை தடைக்கற்களாகக் கருதாமல் அவற்றைப் படிக்கற்களாகக் கருதி தோல்விகளிலிருந்து பெற்ற  அனுபவங்களையே தன் வாழ்க்கையின் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்பவர்கள் புத்திசாலிகள்.

தோல்விகள் ஏற்பட்டால் துவண்டு விடுவார்கள் சாதாரண மனிதர்கள். அந்தத் தோல்வியையே துவண்டு போகச் செய்வார்கள் வெற்றிவீரர்கள்.

அப்படித் தோல்விக்கே தோல்வியைக் கொடுத்தவர்தான் ஆப்ரஹாம் லிங்கன்.

ஆம் அவர் காணாத தோல்விகள் இல்லை, ஆனால் அத்தனை தோல்விகளிலிருந்தும் மீண்டு வந்தார்.

தோல்விகளின் குழந்தை என்றுகூட அவரை செல்லமாக அழைத்தார்கள்.

அவரின் தோல்விகளிலிருந்து அவர் மட்டும் பாடம் கற்கவில்லை நாமும் கற்றுக் கொள்ளலாம்.

அவருடைய 22 வயதிலிருந்து 51 வயது வரை அவர் கண்ட தோல்விகள் ஏராளம்.

வியாபாரத்தில் தோல்வி, சட்டம் படிப்பதில் தோல்வி, தேர்தலில் தோல்வி, காதலில் தோல்வி, செனட் தேர்தலில் தோல்வி, துணை அதிபர் தேர்தலில் தோல்வி என்று அவர் தோல்வியின் அத்தனை பரிமாணங்களையும் கண்டார்.
ஆனால் அவர் அதற்காகவெல்லாம் அலட்டிக் கொள்ளவேயில்லை.

தன் கடமையை நேரம் தவறாமல் செய்துகொண்டே வந்தார். தினந்தோறும் அவரின் வேலைகளைச் செய்வதில் அவர் அயரவில்லை.

அவர் தோல்வியுற்றபோதெல்லாம் அவரைக் கேலிசெய்தவர்களைக் கண்டு அவர் மனம் நோகவில்லை. அவர்களின் எண்ணம் அப்படி, எனது எண்ணம் வெற்றியை அடைவதுதான் என்று அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருந்தார்.
கடைசியாக அவர் அத்தனை தோல்விகளுக்கு அப்புறமாக  அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார்.

ஆனால் அப்போதும் பலர் குறை சொன்னார்கள். நம்மைச்சுற்றி எப்போதும் குறைசொல்லவும், கிண்டலடிக்கவும் ஆட்கள் இருப்பார்கள்.

அதைத்தாண்டி வருவது மட்டுமே வெற்றியாளனாக நினைப்பவரின் வேலை.

நாம் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றிபெறுவது என்பது சாத்தியமல்ல. அதற்காக வேலை ஒன்றும் பார்க்காமல் இருப்பதும் புத்திசாலித்தனமல்ல.

இறங்கி வேலை பார்க்க வேண்டும், வழியில் முட்களும் இருக்கும், ரோஜாக்களும் இருக்கும். ரோஜாக்களை நினைத்துக் கொண்டே முட்களைக் கடக்க வேண்டும்.

லிங்கனின் கடைசி லட்சியமான அதிபர் பதவியை அவர் அடைவதற்கு முன் அவர் பட்ட தோல்விகளை நினைத்துப் பார்த்தால் சாதாரணக் காரியங்களுக்கு நாம் படும் துயரங்கள் எல்லாம் துச்சமாகத் தெரியும்.

வாழ்க்கையில் வீழ்வது என்பது பெரிய விஷயமல்ல, அந்த வீழ்ச்சியை நினைத்துக்கொண்டு வீழ்ந்தே கிடப்பதுதான்  முட்டாள்தனம்.

வீழ்ந்ததே தெரியாமல் உடனே எழுபவன்தான் வெற்றிக்கோட்டைத் தொடுகின்றான்.

தோல்வி என்பது நாம் துயரப்பட வருவதல்ல, நம்மை பலப்படுத்த வருவது. நம் மனதை மேலும் மேலும் வெற்றியை நோக்கிச் செலுத்த வருவது.

தோல்விகளைத் தட்டிவிட்டு விரைபவன் வெற்றிக்கனியை சுவைப்பான்.

தோல்வி தந்த சோகத்தில் ஆழ்பவன் , புதைகுழியில் வீழ்வான்.

தோல்வி வரும்போதெல்லாம் லிங்கனை நினைத்துக் கொள்ளுங்கள். எழுந்து வெற்றியை நோக்கிச் செல்லுங்கள்.

தோல்விகள் என்பவை தடைக்கற்கள் அல்ல, அவையே வெற்றிக்குப் படிக்கற்கள். தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் அந்தப் பாடத்தை உங்கள் வெற்றிக்குப் பயன்படுத்துங்கள்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 05, 2015 5:15 pm

subramaniansivam wrote:
சிவா wrote:தங்களின் இந்தப் பதிவுகள் அனைத்தும் அரிய பொக்கிஷங்கள்! அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டும்.

பகிர்வுக்கு நன்றி, மேலும் இதுபோன்ற ஆக்ககரமான பதிவுகளைத் தாருங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1119136

நிச்சயமாக. தொடர்ந்து 100 வரை எழுதலாம் என்றுதான் தொடங்கியுள்ளேன். தினமும் இல்லாவிட்டாலும் முடிந்தபோதெல்லாம் மொத்தமாகப் பதிவிட்டு விடுவேன். நன்றி நண்பரே
மேற்கோள் செய்த பதிவு: 1119137

அருமை சிவம் , நேற்று இரவே போன் இல் படித்த் விட்டேன்.....தொடருங்கள் , உங்கள் முயற்சி க்கு வாழ்த்துகள் !




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 05, 2015 5:17 pm

//தனக்கென்று எந்தவிதமான தனிப்பட்ட ஆசைகளும் இல்லாமல் நாட்டின் உயர்வே தன் உயர்வு என்று பாடுபட்டார்.//

அதனால் தானே அவர் நம் தேசப்பிதா புன்னகை .......பகிர்வுக்கு நன்றி சிவம் ! சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

//கடைசிவரை நாட்டு மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட காந்தியைப்போல் ஒரே இலக்கு, ஒரே லட்சியம் கொண்டு தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டால் வெற்றி உறுதி.//

இதைப்புரிந்து கொண்டதால் தான் ஒபாமா வும் நம் காந்தியை பின் பற்றுகிறார் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Fri Feb 06, 2015 3:20 pm

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 16

பாரக் ஒபாமா

ஒரு காலத்தில் கறுப்பினத்தவர்களை மனிதர்களாகவே மதிக்காத ஒரு தேசமாக இருந்த அமெரிக்காவில், கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் அதிபராகப் பொறுப்பேற்றுத் தன் இனத்திற்கே பெருமை சேர்த்தார்.
தன்னுடைய நாற்பது வயதுவரை அவர் அரசியலில் ஈடுபட்டதில்லை என்பது வியப்புக்குரிய செய்திதான்.

எந்த வயதிலும் உழைக்க முடியும், அதன் பயனாக வெற்றியையும் பெறமுடியும் என்று அவரின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

2008ம் ஆண்டு அவர் அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்றபோது அவரின் வயது 47.

ஒபாமாவின் தந்தை கென்யாவைச் சேர்ந்தவர். அவர் அமெரிக்காவிற்குப் படிக்கச் சென்றபோது ஒபாமாவின் தாயைப் பார்த்தார், காதல் வயப்பட்டார், மணந்தார். அவர்கள் இல்வாழ்க்கையின் பயனாக ஒபாமா பிறந்தார்.

சிறு வயதில் இந்தோனேஷியாவில் சிறிதுகாலம் வளர்ந்தார். பின்னர் அமெரிக்காவிற்குத் திரும்பினார். பாட்டி வீட்டில் வளர்ந்தார்.

சட்டம் படித்தார், அரசியல் சட்டமும் படித்தார். தொடர்ந்த முயற்சிகளின் விளைவாகப் பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டார். அனைவரிடமும் இயல்பாகப் பழகும் திறனை இளமைக்காலம் முதலே பெற்றிருந்தார்.
ஒடுக்கப்பட்ட ஓர் இனத்திலிருந்து மெல்ல மெல்ல முன்னேறி நாட்டின் அதிபராக உயர்ந்தார் என்பது படிக்கும்போது சாதாரணமாகத்தான் தெரியும். ஆனால் அவர் பட்ட கஷ்டங்கள் அவருக்குத்தான் தெரியும்.

சிக்கல்கள், சோதனைகள், போராட்டங்கள், பல்வேறு பிரச்சினைகள் ஆகியவற்றைத் தாண்டித்தான் சாதனைகள் படைக்க முடியும் என்பது வரலாறு கூறும் உண்மை.

வெற்றி அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடுமா? பொறுமை, விடாமுயற்சி போன்றவை சாதனையாளர்களுக்கு அவசியம் இருக்க வேண்டிய குணநலன்கள். அவை ஒபாமாவிடம் இருந்தன.
பேச்சாற்றல், தெளிவான இலக்கு, அதை அடைவதற்கான திட்டங்கள் போன்றவை அவரிடம் இருந்தன.

ஒட்டுமொத்த அமெரிக்கர்களையும் கவரும் விதத்தில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அவர் பிறந்த இனமான கறுப்பினத்தவர்க்கும் அந்த மந்திரச் சொல் தன்னம்பிக்கை அளித்தது.

தொடர்ந்த போர்களினால் அமெரிக்கா களைத்துப் போயிருந்தது. பொருளாதார வீழ்ச்சி ஒருபக்கம் மக்களை வாட்டியெடுத்தது. தங்களுக்கு எப்படியாவது விடிவுகாலம் பிறக்காதா என்ற¤ருந்த அவர்களுக்கு ஒபாமாவின் பேச்சுகள் நம்பிக்கையை அளித்தன.

அவரை அதிபராகத் தேர்ந்தெடுத்தபோது ஒட்டுமொத்த உலகமே அமெரிக்காவைத் திரும்பிப் பார்த்தது.

அமெரிக்க அதிபராக மிடுக்குடன் பொறுப்பேற்றுக் கொண்ட அவர் அந்த இடத்தை அடைவதற்குத் தன்னுடைய தன்னம்பிக்கையைப் பயன்படுத்திக்கொண்டார்.

தன்னம்பிக்கை இருந்தால் ஒரு மனிதன் எவ்வளவு உயரத்திற்கும் செல்லமுடியும் என்று நிரூபித்தார்.

அவர் எந்த விஷயத்திலும் பதற்றப்படாமல் நிதானமாகவே செயல்படுவார், ஓரிடத்தில் நிற்காமல் அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்லவேண்டும் என்பதைத் தன்னுடைய தாரக மந்திரமாகவே வைத்திருந்தார்.

கறுப்பின மக்கள் மட்டுமல்ல, அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்களும் அவரைப் பார்த்துக் கற்றுக்கொள்கிறார்கள்.

எப்படிப் பிறக்கிறோம் என்பது முக்கியமல்ல, என்ன செய்கிறோம், என்ன சாதித்தோம் என்பதைத்தான் மக்கள் பார்ப்பார்கள்.

உங்களிடம் உள்ள திறமையை மெருகேற்றுங்கள், தொடர் முயற்சியில் ஈடுபட்டபடி இருங்கள், உங்களாலும் எந்த உயரத்திற்கும் செல்லமுடியும்.

வாழ்க்கையில் அனைவருக்கும் பிரச்சினைகள் வரத்தான் செய்யும், அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்காமல் அதிலிருந்து மீண்டு வந்து உங்கள் வேலையை ஆர்வமுடன் செய்துவந்தால் வெற்றி தேவதை உங்களை அரவணைப்பாள்.


subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Fri Feb 06, 2015 3:20 pm

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 17

லெஷ்மி மிட்டல்

நீங்கள் இன்று எந்த நிலையில் இருந்தாலும் பரவாயில்லை, சாதனை படைப்போம் என்ற நம்பிக்கை மட்டும் உங்கள் மனதில் வேரூன்றி விட்டால் அதை முழு மனதாக நம்பி நீங்கள் செயல்பட்டால் போதும்.
உங்களாலும் வெற்றிபெற முடியும். சாதனை படைக்க முடியும். ஆம் சாதாரண மனிதர்களாலும் சாதனை படைத்துப் புகழ்பெற முடியும் என்று காட்டுவதற்கு வாழும் உதாரணமாகத் திகழ்பவர்தான் இரும்புலகின் மாமனிதர் லெஷ்மி மிட்டல்.

பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டபோது மிட்டலின் குடும்பம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயரவேண்டிய சூழல் ஏற்பட்டது.

வறுமையில் உழன்று கொண்டிருந்தபோதும், வாழ்க்கை வளமாக வேண்டுமானால் சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

அப்போது தேசம் வளர்ச்சியை நோக்கி வீறுநடை போட்டுக்கொண்டிருந்த நேரம். கட்டுமானப் பணிகள் ஏராளமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.

அதற்குத் தேவையான இரும்புப் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது, அப்போது அரசாங்கமே இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட இன்னபிற பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்துகொண்டிருந்தது.
அந்தச் சூழலில் லெஷ்மி மிட்டலின் தந்தை மோகன்லால் மிட்டல் கொல்கத்தாவில் ஒரு சிறிய இரும்பு ஆலையை நிறுவினார்.

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த லெஷ்மி மிட்டல் படித்துவிட்டு வந்தவுடன் தங்கள் இரும்பு ஆலைக்குச் சென்றுவிடுவார். குடும்பத்தின் நிலை அவருக்குத் தெளிவாகத் தெரிந்திருந்த காரணத்தால் அவர் உழைப்பதற்குத் தயங்கவில்லை. அவர் இளம் வயதிலேயே இரும்போடு பழகியதால் அதன்மேல் அவருக்குப் பாசம் ஏற்பட்டிருந்தது. தவிர தொழிலின் நேர்த்திகள் அவருக்கு அத்துப்படியாகியிருந்தன.

அவருக்குத் திருமணம் நடைபெற்றவுடன் அவரின் மாமனாரும், லெஷ்மி மிட்டலின் தந்தையும் இணைந்து இந்தோனேஷியாவில் ஒரு இரும்பு ஆலையைத் தொடங்கினார்கள்.
ஏற்கனவே பழகிய தொழில் என்பதால் லெஷ்மி மிட்டல் அந்த ஆலையைப் பார்த்துக் கொள்வது என்று முடிவானது.

சாதனையாளர்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அவர்கள் சில விஷயங்களில் மற்றவர்களைப்போல் சிந்தனை செய்யாமல் மாற்று யோசனையைப் பயன்படுத்துவது புரியும்.
மிட்டலும் அப்படித்தான், எந்த விஷயத்தையும் வேறு ஒரு கோணத்தில் பார்ப்பார். அது அவரின் வாழ்க்கை வெற்றிக்கு உதவியது என்று கூறினால் மிகையாகாது.

எதையும் தேவையில்லை என்று வீணாகத் தூக்கிப் போடுவதை அவர் ஒருபோதும் விரும்ப மாட்டார். எந்தப் பொருளுக்கும் ஒரு பயன் உண்டு என்பதை அறிந்தவர் அவர்.

இரும்புத் தொழிலில் சரியாக நடத்தப்பட முடியாமல் கைவிடப்பட்ட தொழிற்சாலைகளை நேரில் சென்று பார்ப்பார், அதற்கு ஒரு விலை கொடுத்து வாங்குவார். அதன்பின்னர் அது யாரும் எதிர்பாராமல் வளர்ச்சியை நோக்கி நகரத் தொடங்கும்.

நஷ்டத்தில் இயங்கும் தொழிற்சாலை என்பதால் அது மிகவும் குறைந்த விலைக்கே அவருக்குக் கிடைக்கும், அதைச் சரியாக நிர்வகித்து லாபம் ஈட்டுவது மட்டுமே அவரது வேலையாக இருந்தது.
ஓர் ஆலையை வாங்கியவுடன் அதில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்துவது அவரின் வெற்றி பார்முலாக்களில் ஒன்று.

அப்படிச் செய்யும்போது ஊழியர்களின் முழுத் திறமையும் நிறுவனத்திற்குப் பயன்படும் என்பது அவரது கணிப்பு, அது கடைசிவரை பொய்த்ததில்லை.

தொழிலாளர்களுக்கிடையில் இலக்கு நிர்ணயித்து, அவர்களின் வேலையை மிகவும் ஜாலியாக, இயல்பாக, வேலை பார்க்கிறோம் என்பதே தெரியாத வகையில் மாற்றியமைத்து விடுவதால் அவர்கள் நேரம் காலம் பார்க்காமல் நிறுவனத்திற்காக உழைப்பார்கள்.

பல நாடுகளில் இன்று அவருக்கு நிறுவனங்கள் உண்டு. மிகப்பெரிய கோடீஸ்வரரான அவர் உணர்ந்துகொண்டது, எதையும் தக்கபடி பயன்படுத்தினால் பலன் நிச்சயம்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 07, 2015 1:39 pm

நன்றி ! நன்றி !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 07, 2015 2:28 pm

வெற்றிகளுக்கு அடித்தளம் அமைப்பது  தோல்விகளே,
என்பதை விளக்க ஒரு உதாரணம் ,இவரது (ஆபிரகாம் லிங்கன் )வாழ்க்கை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 07, 2015 2:50 pm

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் --1 அம்பிகா சிவம் ,
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் --2 அம்பிகா சிவம் ,  
""
"""
"""
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் --17 அம்பிகா சிவம் ,
பதிவுகளில், மறவாது , அம்பிகா சிவம் பெயரை இணைக்கிறீர்கள்  

சுப்ரமணியம்சிவம்   நீங்கள் ,
அம்பிகா சிவம் என்று போட்டுக்கொள்வதன் பின்னணி என்னவோ ?

பகிர்வதில் , சந்தோஷம் எனில் பகிரவும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 07, 2015 3:02 pm

அருமை சிவம்..................நான் இவரைப்பற்றி படித்ததில்லை...............பகிர்வுக்கு மிக்க நன்றி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நம்ப ஊர் பெண்......தெரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டேனே ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 07, 2015 3:33 pm

//மிகப்பெரிய கோடீஸ்வரரான அவர் உணர்ந்துகொண்டது, எதையும் தக்கபடி பயன்படுத்தினால் பலன் நிச்சயம்.//

ம்.ரொம்ப சரியான formula புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 07, 2015 3:41 pm

//வாழ்க்கையில் அனைவருக்கும் பிரச்சினைகள் வரத்தான் செய்யும், அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்காமல் அதிலிருந்து மீண்டு வந்து உங்கள் வேலையை ஆர்வமுடன் செய்துவந்தால் வெற்றி தேவதை உங்களை அரவணைப்பாள்.//

ரொம்ப ஊக்கமான வார்த்தைகள்......பகிர்வுக்கு நன்றி சிவம் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக