புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_c10 
4 Posts - 27%
சிவா
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_c10 
310 Posts - 42%
heezulia
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_c10 
6 Posts - 1%
prajai
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_c10 
4 Posts - 1%
manikavi
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24 அம்பிகா சிவம்


   
   

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Tue Feb 03, 2015 9:26 pm

First topic message reminder :

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் -1


ஆப்ரஹாம் லிங்கன்

ஒரு மனிதனால் எத்தனை தோல்விகளைத் தாங்க முடியும். ஒன்று இரண்டு அதற்குள்ளாகவே மனமொடிந்து விடுவார்கள். தங்கள் பாதையை மாற்றிக் கொள்வார்கள்.

ஆனால் தோல்விகளை தடைக்கற்களாகக் கருதாமல் அவற்றைப் படிக்கற்களாகக் கருதி தோல்விகளிலிருந்து பெற்ற  அனுபவங்களையே தன் வாழ்க்கையின் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்பவர்கள் புத்திசாலிகள்.

தோல்விகள் ஏற்பட்டால் துவண்டு விடுவார்கள் சாதாரண மனிதர்கள். அந்தத் தோல்வியையே துவண்டு போகச் செய்வார்கள் வெற்றிவீரர்கள்.

அப்படித் தோல்விக்கே தோல்வியைக் கொடுத்தவர்தான் ஆப்ரஹாம் லிங்கன்.

ஆம் அவர் காணாத தோல்விகள் இல்லை, ஆனால் அத்தனை தோல்விகளிலிருந்தும் மீண்டு வந்தார்.

தோல்விகளின் குழந்தை என்றுகூட அவரை செல்லமாக அழைத்தார்கள்.

அவரின் தோல்விகளிலிருந்து அவர் மட்டும் பாடம் கற்கவில்லை நாமும் கற்றுக் கொள்ளலாம்.

அவருடைய 22 வயதிலிருந்து 51 வயது வரை அவர் கண்ட தோல்விகள் ஏராளம்.

வியாபாரத்தில் தோல்வி, சட்டம் படிப்பதில் தோல்வி, தேர்தலில் தோல்வி, காதலில் தோல்வி, செனட் தேர்தலில் தோல்வி, துணை அதிபர் தேர்தலில் தோல்வி என்று அவர் தோல்வியின் அத்தனை பரிமாணங்களையும் கண்டார்.
ஆனால் அவர் அதற்காகவெல்லாம் அலட்டிக் கொள்ளவேயில்லை.

தன் கடமையை நேரம் தவறாமல் செய்துகொண்டே வந்தார். தினந்தோறும் அவரின் வேலைகளைச் செய்வதில் அவர் அயரவில்லை.

அவர் தோல்வியுற்றபோதெல்லாம் அவரைக் கேலிசெய்தவர்களைக் கண்டு அவர் மனம் நோகவில்லை. அவர்களின் எண்ணம் அப்படி, எனது எண்ணம் வெற்றியை அடைவதுதான் என்று அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருந்தார்.
கடைசியாக அவர் அத்தனை தோல்விகளுக்கு அப்புறமாக  அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார்.

ஆனால் அப்போதும் பலர் குறை சொன்னார்கள். நம்மைச்சுற்றி எப்போதும் குறைசொல்லவும், கிண்டலடிக்கவும் ஆட்கள் இருப்பார்கள்.

அதைத்தாண்டி வருவது மட்டுமே வெற்றியாளனாக நினைப்பவரின் வேலை.

நாம் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றிபெறுவது என்பது சாத்தியமல்ல. அதற்காக வேலை ஒன்றும் பார்க்காமல் இருப்பதும் புத்திசாலித்தனமல்ல.

இறங்கி வேலை பார்க்க வேண்டும், வழியில் முட்களும் இருக்கும், ரோஜாக்களும் இருக்கும். ரோஜாக்களை நினைத்துக் கொண்டே முட்களைக் கடக்க வேண்டும்.

லிங்கனின் கடைசி லட்சியமான அதிபர் பதவியை அவர் அடைவதற்கு முன் அவர் பட்ட தோல்விகளை நினைத்துப் பார்த்தால் சாதாரணக் காரியங்களுக்கு நாம் படும் துயரங்கள் எல்லாம் துச்சமாகத் தெரியும்.

வாழ்க்கையில் வீழ்வது என்பது பெரிய விஷயமல்ல, அந்த வீழ்ச்சியை நினைத்துக்கொண்டு வீழ்ந்தே கிடப்பதுதான்  முட்டாள்தனம்.

வீழ்ந்ததே தெரியாமல் உடனே எழுபவன்தான் வெற்றிக்கோட்டைத் தொடுகின்றான்.

தோல்வி என்பது நாம் துயரப்பட வருவதல்ல, நம்மை பலப்படுத்த வருவது. நம் மனதை மேலும் மேலும் வெற்றியை நோக்கிச் செலுத்த வருவது.

தோல்விகளைத் தட்டிவிட்டு விரைபவன் வெற்றிக்கனியை சுவைப்பான்.

தோல்வி தந்த சோகத்தில் ஆழ்பவன் , புதைகுழியில் வீழ்வான்.

தோல்வி வரும்போதெல்லாம் லிங்கனை நினைத்துக் கொள்ளுங்கள். எழுந்து வெற்றியை நோக்கிச் செல்லுங்கள்.

தோல்விகள் என்பவை தடைக்கற்கள் அல்ல, அவையே வெற்றிக்குப் படிக்கற்கள். தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் அந்தப் பாடத்தை உங்கள் வெற்றிக்குப் பயன்படுத்துங்கள்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 10, 2015 12:01 am

அந்த' இரும்பு மனிதருக்கு' தலை வணங்குவோம் ................... நன்றி நன்றி நன்றி :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Tue Feb 10, 2015 12:39 pm

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 20

பில்கேட்ஸ்

இன்று கணிப்பொறியைப் பயன்படுத்தாத அலுவலகங்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்பவர் பில்கேட்ஸ். கணிப்பொறி உருவாக்கப்பட்ட காலத்தில் மிகவும் பெரியதாக, சிலர் மட்டுமே பயன்படுத்தும் விதத்தில் இருந்தது.

மக்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் விதத்தில் அதை மாற்றியவர் பில்கேட்ஸ்தான். இன்று மைக்ரோசாப்டில் வேலை பார்ப்பதையே பெரும் கௌரவமாகக் கருதக்கூடிய அளவிற்கு அந்த நிறுவனத்தின் புகழ் மூலைமுடுக்கெல்லாம் பரவிக் கிடக்கிறது.

பல வருடங்களாக உலகின் பெரிய பணக்காரர் என்ற புகழைப் பெற்றவர் அவர். 1955ம் ஆண்டு பில்கேட்ஸ் பிறந்தார். அவரின் இயற்பெயர் வில்லியம் ஹென்றி கேட்ஸ்.

சிறு வயதில் படிப்பில் அவருக்கு அவ்வளவாக ஆர்வம் இருக்கவில்லை. ஆனால் தொழில்நுட்பக் கல்வி அவருக்குக் கல்கண்டாக இனித்தது. அப்போது புதிய கண்டுபிடிப்பாக இருந்த கணிப்பொறியைக் கழற்றி மாற்றுவது அவருக்குப் பொழுதுபோக்காக இருந்தது.

அப்போதே அவர் பல கம்ப்யூட்டர் புரோக்ராம்களை எழுதிப் பார்ப்பதுண்டு. தொடர்ந்து அதில் ஈடுபட்டார். அதுதான் அவரை உலகப்புகழ் பெறவைத்தது.

அடித்தட்டு மக்களும் கம்ப்யூட்டர் பயன்படுத்த என்ன செய்யலாம் என்று ஓயாது யோசித்தபடியே இருப்பார்.

அவரின் சிந்தனைகளுக்கு ஏற்றவிதத்தில் பால் ஆலன் என்ற நண்பர் ஒருவர் கிடைத்தார். இருவரும் இணைந்து பேஸிக் புரோக்கிராம்களை எழுதிக் கொடுக்கத் தொடங்கினார்கள். வியாபாரம் நன்றாகவே இருப்பது தெரிந்தவுடன் படிப்பை விட்டுவிட்டு முழு வேகத்தில் வியாபாரத்தில் இறங்கினார்கள்.

அன்றைக்கு கம்ப்யூட்டர் உலகில் பெரிதும் மதிக்கப்பட்ட ஐ.பி.எம். நிறுவனம் அவர்களை அழைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றைத் தயாரித்துக் கொடுக்கும்படி கேட்டது அவர்களின் வெற்றி வாயிலை அகலமாகத் திறந்துவிட்டது.

ஐ.பி.எம¢முக்காக எம்.எஸ்.டாஸ் என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைச் சிறப்பாக எழுதிக் கொடுத்தார்கள்.

அதன்பிறகு அவர்களின் திறமை வெளியுலகிற்கு பரவலாகத் தெரிய ஆரம்பித்தது.

அதன்பிறகு அவர்களுக்குத் தொடர் வெற்றிதான்.

அதன்பின்னர் மைக்ரோசாப்ட் என்றொரு நிறுவனத்தை ஆரம்பித்தார் பில்கேட்ஸ். எளிய முறையிலான பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வெளியிட்டார்.

உலக மக்கள் அனைவரும் அவரைத் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள்.

கோடிக்கணக்கில் சம்பாதித்தார். அவர் வேலை பார்த்த நாட்களில் மைக்ரோசாப்டின் தலைமை மென்பொருள் வடிவமைப்பாளர் அவர்தான்.

நாம்தான் முதலாளியாகிவிட்டோமே என்று வேலை பார்க்காமல் இருப்பது அவருக்குப் பிடிக்காத விஷயம்.

பில்கேட்ஸைப் பிடிக்காதவர்களும் கணிப்பொறி உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களால் பில்கேட்ஸின் இமாலய வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

அவரின் வளர்ச்சி ஆர்வத்தின் காரணமாகக் கிடைத்தது. எளிய மக்களுக்குப் பயன்படும் விதத்தில், புரியும் விதத்தில் தன்னுடைய நிறுவனத்தால் தயாரிக்கப்படும் மென்பொருள் இருக்க வேண்டும் என்பதுதான் அவரின் லட்சியம். அதை அவர் சாதித்துக் காட்டியபோது அவரின¢ எதிர்ப்பாளர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் அவரின் புகழைக் குறைக்க முடியவில்லை.

மக்களுக்கு என்ன தேவை என்று பார்க்க வேண்டும், அன்றைய காலகட்டத்திற்கு எது தேவையென்று பார்க்க வேண்டும். அதே நேரத்தில் போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் உன்னிப்பாகக் கவனித்து அவர்களைவிட மேம்பட்ட தயாரிப்பை வழங்க வேண்டும். மற்றவர்கள் உங்கள்மேல் வைக்கும் விமர்சனங்களைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் அடுத்த அடியை எடுத்து வைத்து வெற்றியை நோக்கி முன்னேறிச் செல்லுங்கள். அவர்களின் விமர்சனங்கள் அனைத்திற்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் உங்களால் நல்லபடியாக முன்னேற முடியாது.

பணம் ஏராளமாகச் சேர்ந்துவிட்டால் அதில் ஒரு பகுதியை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். இவை பில்கேட்ஸ் கடைப்பிடித்தவை.


subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Tue Feb 10, 2015 12:41 pm

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 21

சுபாஷ் சந்திரபோஸ்

இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தகுந்தவர் நேதாஜி என்று அன்பாக அழைக்கப்படும் சுபாஷ் சந்திரபோஸ்.

காந்தியடிகள் அகிம்சை முறையில் போராடிக் கொண்டிருந்தபோது, ஆங்கிலேயர்களிடம் சுதந்திரம் வேண்டிக் கெஞ்சிக்கொண்டிருந்தால் கதைக்கு ஆகாது, அடிக்கு அடி கொடுத்தால்தான் நம்மைப் பார்த்து பயப்படுவார்கள் என்று வீரத்துடன் தன் போராட்டத்தைத் தொடங்கியவர் நேதாஜி.

நேதாஜி என்றால் தலைவர் என்று அர்த்தம். அன்றைக்கு இருந்த தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் இவரும் ஒருவர்.

காங்கிரஸில் இருந்த மிதவாதிகள், தீவிரவாதிகள் என்ற இரண்டு பிரிவுகளில் தீவிரவாதப் பிரிவில் முதன்மையான வீரர் என்று இவரைச் சொல்லலாம்.

வங்கத்து சிங்கம் நேதாஜி ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடுவதற்காக இந்திய தேசிய ராணுவம் என்ற ஓர் அமைப்பைத் தலைமையேற்று நடத்தியவர். சுதந்திரம் வருவதற்கு முன்னரே தனியாக அமைச்சரவை அமைத்து ஆட்சி நடத்தியவர் என்று இவரைப்பற்றி ஏராளமாகச் சொல்லமுடியும்.

மேற்கு வங்க மாநிலத்தில் 1897ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி ஜானகிநாத் போஸ், பிரபாவதி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் இவர். இவரின் சகோதரர் பெயர் சரத் சந்திரபோஸ்.

நேதாஜியின் சிறு வயதிலேயே காலரா நோய் பரவிய ஊர்களுக்குச் சென்று தொண்டு புரிந்திருக்கிறார்.

கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பயின்றார். பின்னர் நாட்டுநலப் பணிகளில் ஈடுபாடு கொண்டு விவேகானந்தர் போல் வாழ்க்கை நடத்த ஆசைப்பட்டார்.

மேல் படிப்பிற்காக இங்கிலாந¢திற்குச் சென்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஐ.சி.எஸ். தேறினார். இங்கிலாந்தில் உயர் பதவியும் கிடைத்தது. ஆனால் இந்தியாவில் இருந்த சமூக நிலை பற்றி நன்கு அறிந்திருந்த அவர் தன்னுடைய பதவியைத் துறந்து நாட்டு மக்களுக்காக உழைத்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு நாடு திரும்பினார்.

காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். வேகமாகச் செயல்பட்டு சுதந்திரமடைய வேண்டும் என்றே அவர் விரும்பினார்.

1924ம் ஆண்டு நடைபெற்ற கொல்கத்தா கார்ப்பரேஷன் தேர்தலில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிறிது காலம் மியான்மரில் உள்ள மாண்டலே சிறையில் இருந்தார். அதன்பிறகு பலமுறை தாய்நாட்டிற்காகப் போராடி சிறை சென்று திரும்பினார்.

வீட்டுச் சிறையில் சிறிதுகாலம் இருந்தார், அங்கிருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்றார்.

அவர் படாத சிரமமில்லை, தன் உடல்நலனைவிட மக்களின் நலனே முக்கியம் என்று அவர் நினைத்தார். தான் பட்ட சிரமங்களால் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தால் சரி என்றுதான் அவர் கடைசிவரை பாடுபட்டார்.

பார்வர்டு பிளாக் என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். சிங்கப்பூரிலிருந்த இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை வழிநடத்தினார். அவர்களின் படை டில்லி சலோ என்ற முழக்கத்தோடு புறப்பட்டு இந்தியாவிற்குள் ஊடுருவியது. ஆனால் சூழ்நிலை ஒத்துழைக்கவில்லை. போராட்டம் கைவிடப்பட்டது.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி ஜப்பான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக விமானத்தின் மூலம் புறப்பட்ட அவர் விமான விபத்தில் இறந்துபோனதாகக் கூறப்படுகிறது. அவரது மரணம் பற்றிய பல மர்மங்கள் இன்னும் நீடிக்கின்றன.

இந்தியா விடுதலை அடைய காந்தி அகிம்சை வழியில் போராடினார், நேதாஜி வீரத்தோடு போரிட்டார். இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல.

நீங்கள் செல்லும் வழி வேறுபடலாம், ஆனால் இலக்கு வேறுபடக்கூடாது. ஒரே இலக்கை நோக்கிச் சென்றுகொண்டே இருந்தால், எவ்வளவு சிரமப்பட்டாலும் கடைசியில் எப்படியாவது அதை அடைந்துவிட முடியும் என்பது மட்டும் நிச்சயம்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 10, 2015 6:04 pm

நல்ல செய்தி .

சாதிக்கப் பிறந்தவர்கள் ,தனித்தனி திரியாக இருக்கிறதே .
ஒரே திரியில் இணைக்கலாமே .
படிப்பதற்கு இலகுவாக இருக்குமே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Tue Feb 10, 2015 9:02 pm

T.N.Balasubramanian wrote:நல்ல செய்தி .

சாதிக்கப் பிறந்தவர்கள் ,தனித்தனி திரியாக இருக்கிறதே .
ஒரே திரியில் இணைக்கலாமே .
படிப்பதற்கு இலகுவாக இருக்குமே .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1119929

ஈகரைக்கு நான் புதிது நண்பரே எப்படி இணைப்பது என்பதைக் கூறினால் இணைத்துவிடுவேன். எனக்கும் அதுதான் ஆசை.

subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Tue Feb 10, 2015 9:08 pm

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 22

மைக்கேல் ஜோர்டான்

வாழ்வில் அனைவருமே வெற்றிபெற விரும்புபவர்கள்தான். ஆனால் எல்லோருக்கும் வெற்றி சாத்தியமாகி விடுவதில்லை. ஏன் அப்படி?

நமது லட்சியம் என்ன? அதற்காக நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நாம் வெற்றியடைய முடியும்.

ஆசையிருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க என்றொரு பழமொழி உண்டு. தாசில் பண்ண ஆசையிருப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும் அதைவிட்டுவிட்டு வெறுமனே ஆசைப்படுவதில் அர்த்தமில்லை என்பதைக் குறிப்பதற்கே அந்தப் பழமொழி.

முதலில் நமது லட்சியம் என்ன என்பதை தெளிவாக வரையறுக்க வேண்டும். பின்னர் படிப்படியாக அதை நோக்கிய பயணத்தில் தொடர் முயற்சி வேண்டும். விடாமுயற்சியுடன் தொடர்ந்து செயல்பட்டு வந்தால் வெற்றிக்கனியைப் பறிப்பது நிச்சயம்.

இலக்கை நிர்ணயிப்பதற்கு முன்னர் நமது திறமைகளை மதிப்பிட வேண்டும். இலக்கை நிர்ணயித்த அடுத்த நொடியிலிருந்து நமது திறமைகளை நாளுக்கு நாள் அதிகரிக்க வேண்டும்.

அப்படி விடாமுயற்சியுடன் தான் நினைத்ததை அடைந்த ஒருவர்தான் மைக்கேல் ஜோர்டான்.

இப்போது மாணவர்கள் மத்தியிலும் மற்றவர்கள் மத்தியிலும் பெரிதும் விரும்பப்படும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. ஆனால் மைக்கேல் ஜோர்டானின் வருகைக்குப் பின்பு கூடைப்பந்தாட்டத்திற்கே ஒரு பெருமை ஏற்பட்டது.

மைக்கேல் ஜோர்டான் பத்தாம் வகுப்பு படித்தபோது ஒரு சம்பவம் நடைபெற்றது. அவர் படித்த பள்ளியின் கூடைப்பந்தாட்ட அணியில் அவரை சேர்ப்பதற்கு மறுத்துவிட்டார்கள். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் “நீ ரொம்பக் குள்ளம்”

சராசரி மனிதர்களாக இருந்தால் அவர்கள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு மனம் சோர்வடைந்து போயிருப்பார்கள். ஆனால் மைக்கேல் ஜோர்டான் மனம் தளரவில்லை. பெரிய விளையாட்டு வீரனாக வேண்டும் என்ற ஆசை அவருக்குள் தகித்தது.

அவரின் தாய் மகனுக்கு உற்சாகமூட்டும் வார்த்தைகளைக் கூறினாள். “கடுமையான உழைப்பும், தொடர் முயற்சியும் இருந்தால் சாதிக்க முடியாத காரியமே உலகத்தில் இல்லை”
அந்த வார்த்தைகளை தன் வேதவாக்காக எடுத்துக் கொண்டு காரியத்தில் இறங்கினார் ஜோர்டான்.

நம்புவதற்கு சற்றுச் சிரமமான விஷயம்தான். ஆனால் அதுதான் உண்மை. ஆம் பள்ளியில் படிக்கும்போது 5.10 உயரமிருந்த அவர் கடுமையான பயிற்சியின் விளைவாக கல்லூரியில் படிக்கும்போது 6.3 ஆக உயர்ந்தார். மருத்துவ வல்லுநர்களே ஆச்சரியப்பட்டார்கள். பதினெட்டு வயதிற்குப் பிறகு ஒருவர் வளர்வதாவது என்று வியந்தார்கள்.

ஆனால் கடுமையான பயிற்சியின்மூலம் எதையும் சாதிக்கமுடியும் என்று அவர் நிரூபித்துக் காட்டினார்.

அதன்பிறகு அவர் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

பின்னர் அவர் பார்த்ததெல்லாம் வெற்றி ஒன்றைத்தான்.

அவரது கவனம் முழுவதும் சிறந்த வீரனாக உலகப் புகழ் பெற வேண்டும் என்பதில் மட்டுமே குவிக்கப்பட்டிருந்தது. அதுவே அவரை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது.

ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பர நிறுவனங்கள் அவரை அணுகி தங்கள் விளம்பரத்திற்கு மாடலாக நடிக்கும்படி கேட்டார்கள். ஆனால் அவர் சில விளம்பரங்களில் மட்டுமே நடித்தார். அவர் வாங்கும்படி கூறிய பொருட்களின் விற்பனை 40 சதவிகிதம் அதிகரித்ததாக தெரிவிக்கிறார்கள்.

கூடைப்பந்தாட்டத்திலிருந்து அவர் ஓய்வுபெற்று பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் அவருக்கான புகழ் இன்றும் யாராலும் முறியடிக்க முடியாததாகவே இருக்கிறது.

அதற்கு அவர் கூறும் ஒரே காரணம் “என்போல் சாதனைபுரிய யாராலும் முடியும். உங்கள் பணியில் உங்கள் மனதை முழுமையாக ஈடுபடுத்தினால்”
நாம் செய்யும் செயலில் மனதை ஒருமுகப்படுத்துவோம். வெற்றியை நம் வசமாக்குவோம்.


subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Tue Feb 10, 2015 9:09 pm


சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 23

தாமஸ் ஆல்வா எடிசன்

நம் வாழ்வில் எத்தனையோ துன்பங்கள், துயரங்கள், மன வேதனைகள் வரலாம். ஆனால் அவையெல்லாம் நம் வெற்றியை பாதித்து விடாது.

இன்ப,துன்பங்கள் கலந்ததுதான் வாழ்க்கை. வாழ்வில் சாதனைபுரிந்த அத்தனை பேருடைய வாழ்க்கையுமே பல கசப்பான அனுபவங்கள் நிறைந்ததுதான்.

யாரும் எடுத்தவுடனேயே உச்சத்தைத் தொட்டுவிடவில்லை. எத்தனை துன்பங்கள் வந்தாலும் அவற்றை எதிர்த்துப் போராடி வாழ்வின் உச்சத்தை அடைந்தே தீருவேன் என்ற நம்பிக்கையுடன் வாழ்பவர்கள்தான் தங்கள் துறையில் உச்சத்தைத் தொடமுடியும்.

அப்படி தான் ஈடுபட்ட துறைகளிலெல்லாம் புகழ்பெற்ற ஒருவர்தான் தாமஸ் ஆல்வா எடிசன். இன்றும் அவரது சாதனையை முறியடிக்க யாராலும் முடியவில்லை. அப்படி அவர் என்னதான் செய்தார்?

1093 கண்டுபிடிப்புகளுக்கான உரிமையை தன் பெயரில் பதிவு செய்திருந்தார். அவற்றில் பல மனிதகுலத்திற்கு மாபெரும் உதவியாக இன்றும் அவர் பெயர் சொல்லியபடி உள்ளன என்பதுதான் சிறப்பான ஒன்று.
முக்கியமாக அவர் கண்டுபிடித்த மின்சார விளக்குதான் இன்று உலகையே ஒளிவெள்ளத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது.

அவருடைய வாழ்க்கை மாணவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கைப் புத்தகம்.

சிறு வயதிலேயே ஒரு ரயில்வே ஊழியரிடம் அறை வாங்கியதன் காரணமாக தனது கேட்கும் திறனை இழந்தார். ஆனால் தன் மன உறுதியை அவர் இழக்கவில்லை.

தினந்தோறும் 18 மணிநேரம் உழைப்பதை தன் வழக்கமாகக் கொண்ட அவர் அதனால்தான் அத்தனை கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர் ஆனார்.

சிறு வயதில் அவரின் ஆசிரியர்களால் “மக்குப் பயல்” என்று கேலி செய்யப்பட்ட அவர் பிற்காலத்தில் பல ஆசிரியர்கள் அவரைப்பற்றி பாடம் நடத்தும் அளவிற்கு உயர்ந்தார் என்றால் அவரின் உழைப்பு எத்தகையது என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

சிறு வயதிலேயே அவரிடம் எதையும் ஆராய்ந்து பார்க்கும் குணம் இருந்தது. வாத்து முட்டையை வைத்து அதன்மேல் அமர்ந்து ஆராய்ச்சி செய்த சம்பவமும் நடைபெற்றது.

எடிசனுக்காக அவரது தாயார் வீட்டிலேயே ஒரு ஆராய்ச்சி சாலையை அமைத்துக் கொடுத்தார். அதில் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து பார்த்தார் எடிசன்.

ஒரு கட்டத்தில் ஆராய்ச்சிகளுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக தன் பெற்றோரிடம் பணம் கேட்க வேண்டியிருந்ததை நினைத்து வெட்கப்பட்ட அவர் தன் வீட்டிலேயே ஒரு தோட்டத்தை உருவாக்கி அதில் விளைந்த பொருட்களை பக்கத்து ஊர்களில் விற்று அதில் வந்த பணத்தைக் கொண்டு தனக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டார்.

சிறு வயதிலேயே அப்படி ஒரு பழக்கம் அவருக்கு ஏற்பட்டது. பெற்றோர்களின் சம்பாத்தியத்தில் காலம் முழுவதும் சாப்பிடும் இளைஞர்கள் பலரும் எடிசனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

ரயிலிலேயே அச்சடித்து, ரயிலிலேயே விற்பனை செய்யப்பட்ட பத்திரிகை ஒன்றையும் அவர் நடத்தினார்.

எடிசனின் கண்டுபிடிப்புகளில் சிலவற்றை மார்ஷல் என்பவர் விலைகொடுத்து வாங்கினார். அவற்றை விற்ற பணத்தைக் கொண்டு தனது முதல் ஆராய்ச்சிக்கூடத்தை எடிசன் உருவாக்கிக் கொண்டார்.

எந்த நேரமும் உழைப்பு, உழைப்பு, உழைப்பு. அதைத்தவிர வேறொன்றுமில்லை. சில சமயம் அவர் தனது குடும்பத்தாரின் பெயர்களைக்கூட மறந்துவிடுவதுண்டு என்று வேடிக்கையாகச் சொல்வார்கள்.
அந்த அளவிற்கு ஒருவரால் உழைக்க முடியுமா? முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர்தான் எடிசன்.

உண்மையான உழைப்பிற்கு உரிய பலன் என்றாவது ஒருநாள் கிடைத்தே தீரும். அந்தப் பலன் கிடைக்கும்வரை நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும் என்பதுதான் வெற்றிக்கான விதி.


subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Tue Feb 10, 2015 9:10 pm

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 24

அப்துல்கலாம்

சிலர் எதற்கெடுத்தாலும் ஏதாவது காரணம் சொல்கிறார்கள். நான் அப்படியிருந்திருந்தால் பெரிய ஆளாகியிருப்பேன், நான் அங்கு பிறந்திருந்தால் எப்படி ராஜவாழ்க்கை வாழ்ந்திருப்பேன் என்று கற்பனையில் மிதப்பதையே வாழ்க்கையாக வைத்துள்ளார்கள்.

பிறப்பது என்பது நம் கையில் இல்லை. எப்படி, எங்கே பிறந்தாலும் நம் மன வலிமையால் எத்தகைய உயர்ந்த பதவியை வேண்டுமானாலும் பெறமுடியும்.

நாம் இலக்கை நிர்ணயித்து அதைநோக்கிப் பயணிக்க ஆரம்பித்துவிட்டால் பிரபஞ்சமே நமக்கு உதவியாக பல்வேறு சூழ்நிலைகளை உருவாக்கும் என்பது மனோதத்துவ வல்லுநர்களின் கூற்று.
அது உண்மைதான் என்பதை நிரூபிப்பதற்காகவே இராமேஸ்வரத்தில் பிறந்தார் ஒருவர்.

இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவியை அடைந்தார். ஆனால் அந்தப் பதவியில் இருந்தபோதும் அவர் தன்னுடைய சுயநலத்திற்காக எதையுமே செய்துகொள்ளவில்லை.

அவர் மனதில் இருந்ததெல்லாம் நம் நாடு வல்லரசு ஆகவேண்டும். நாமும் மற்ற நாட்டினரைப்போல் பல்வேறு விஷயங்களில் சாதித்துக் காட்டவேண்டும்.

நாம் எந்த நாட்டினரையும்விட குறைந்தவர்கள் அல்ல. நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று அவர் நினைத்தார்.
அதேபோல் பல விஷயங்களை அவரால் சாதிக்கவும் முடிந்தது.

அவர் பிறந்தது என்னவோ சாதாரணக் குடும்பத்தில்தான்.
ஆனால் அவர் பிறந்த ராமேஸ்வரம் தீவே பெருமைப்படும் அளவிற்கு அவர் உயர்ந்தார்.

ஆரம்பத்தில் சிறுவயதில் அவர் பேப்பர் போட்டதுண்டு, படிக்கும் வயதில் ஆசிரியர்களிடத்தில் அளவுகடந்த மரியாதை வைத்திருந்ததுண்டு. பின்னர் மாணவர்களுக்கு மத்தியில் அவர் பேச்சுக்கு மரியாதை இருந்தபோதும் தனக்கு பாடம் போதித்த ஆசிரியர்களை நினைவுகூர்ந்ததுண்டு.

நாட்டின் உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவியைப் பெற்றபோதும், அந்தப் பதவியை நிறைவுசெய்தபோதும் அவர் எப்போதும் போல எளிமையாகவே வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.,

அவரின் சாதனையாக நாம் கருத எவ்வளவோ சம்பவங்கள் உண்டு. ஆனால் அவர் தன் சாதனையாகக் கருதுவது ஊனமுற்றவர்களுக்காக செய்த ஒரு கருவியைத்தான். ஆம் அந்த அளவிற்கு அவர் மற்றவர்களின் வேதனையைப் புரிந்து கொண்டிருந்தார்.

அவரின் சாதனைகள் என்றால் விண்கலங்கள் பலவற்றை செலுத்தியது, பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தியது என்று பலவற்றைக் கூறலாம்.
தனது சாதனைகளுடன் அவர் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் நிறைந்தவராக இருந்தார்.

எழுத்தாளராகவும் அவர் இருக்கிறார். அவர் எழுதிய அக்னிச் சிறகுகள் புத்தகம் இன்றுவரை மாணவர்கள் மத்தியிலும் ஆசிரியர்கள் மத்தியிலும் மிகவும் வரவேற்பைப் பெற்ற புத்தகமாகத் திகழ்கிறது.
ஒரு சாதாரண மனிதன் சாதனை மனிதனாக ஆவதற்கு வேண்டிய அத்தனையும் அந்தப் புத்தகத்தில் உள்ளது.

தன் சிறுவயது தோழர்கள் முதல் அவருக்கு உதவிய அத்தனை பேரையும் அதில் ஞாபகமாகச் சொல்லியிருக்கும் பண்பு அனைவருக்கும் இருப்பதில்லை.

கலாம் அவர்கள் இனம், மதம், மொழியைக் கடந்தவர். அவரிடம் அளவுகடந்த இறைபக்தியும் மற்றவர்களை நேசிக்கும் பண்பும் உண்டு.

மாணவர்களுக்கு அவர் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். கனவு காணுங்கள்.

ஆம் நீங்கள் காணும் கனவு உங்களையும் உயர்த்தும், உங்களைச் சார்ந்தவர்களையும் உயர்த்தும். நம் நாட்டையும் உயர்த்தும்.

சாதிக்க நினைப்பவர்களுக்கு வறுமை என்பது ஒரு தடையல்ல, கனவு காணுங்கள் நீங்கள் விரும்புவதை அடைவீர்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 10, 2015 9:31 pm

அப்துல்கலாம் பற்றிய கட்டுரை அருமை! அக்கினிச் சிறகுகள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்!



சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 10, 2015 10:15 pm

எவ்வளவு சிம்பிளான, 'மா மனிதர்'.....அவர் பெருமை நம் அரசியல் வாதிகளுக்கு புரியவில்லை என்றே தோன்றுகிறது ..............சோகம்
.
.
நல்ல பகிர்வு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக