புதிய பதிவுகள்
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 36 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 36 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 36 Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 36 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 36 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 36 Poll_c10 
283 Posts - 45%

268 Posts - 43%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 36 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 36 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 36 Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 36 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 36 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 36 Poll_c10 
16 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Page 36 of 40 Previous  1 ... 19 ... 35, 36, 37, 38, 39, 40  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 10:56 pm

First topic message reminder :

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! ஜாலி ஜாலி ஜாலி

krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?

சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1208345

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 36 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 36 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 36 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 10, 2022 10:43 pm

krishnaamma wrote:பெண் என்றால் இளக்காரமா?
சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், எங்கள் பகுதி மாவட்ட கவுன்சிலராக, வெற்றி பெற்றிருந்தாள், என் தோழி. அவளை வீட்டில் சந்தித்து, என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து, பணி சிறக்க வாழ்த்தினேன்.
'நீ நினைப்பது போல, நான் எந்த பணியையும் சுதந்திரமாக செய்துவிட முடியாது. பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்பதால், பெயருக்காக என்னை நிறுத்தி, வெற்றிபெற வைத்துள்ளார், கணவர். ஏதாவது கையெழுத்து போட வேண்டுமென்றால், என்னைப் பயன்படுத்தி எல்லா வேலைகளையும் செய்வது, அவரே தான்.
'கமிஷனுக்காக கணவர் செய்யும் காரியங்களில், எனக்கு உடன்பாடே இல்லை. அதேபோல், அவரை எதிர்த்து செயல்படவும் இயலவில்லை. நான் மட்டுமல்ல, இதுபோன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பெரும்பான்மையான பெண்களின் நிலையும் இது தான்.
'ஆணாதிக்கத்தோடு சர்வாதிகாரத்துடனும் செயல்படும் கணவர்களை மீறி, மனைவியரால் எதுவுமே செய்ய முடிவதில்லை...' என வருந்தி, கண் கலங்கினாள். இத்தனைக்கும், முதுகலை வரை படித்தவள், அவள். கல்லுாரியில் பயிலும்போது, மாணவர் பேரவை தலைவராக திறம்பட செயல்பட்டவள்.
என்ன தான் சட்டங்கள் வழி செய்து, பெண்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தந்தாலும், அவற்றை ஆணாதிக்க முட்டுக்கட்டை தடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்த நிலை மாறணும்...
- கே.கல்யாணி, விக்கிரவாண்டி.

இது ரொம்ப சகஜமாகி விட்டது...............என்று தான் மாறுமோ ?????

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 10, 2022 10:44 pm

வாசிப்பை வளர்க்கும், குடியிருப்பு!
சமீபத்தில், மாநகர் ஒன்றின் குடியிருப்பில் வசித்து வரும் உறவினர் ஒருவரை பார்க்கச் சென்றேன். நான் சென்ற நேரம், அக்குடியிருப்பின் செயலர் பொறுப்பில், குடியிருப்பு வளாகத்திலேயே புத்தகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நகரிலுள்ள பல பதிப்பகங்களின் கிளைகளிலிருந்து வந்திருந்த, பல்வேறு வகையிலான புத்தகங்களை, காட்சிக்கு வைத்து, விற்பனை செய்து கொண்டிருந்தனர். வயதான பெரியவர்களிலிருந்து, சின்னஞ்சிறு குழந்தைகள் வரை, குடியிருப்பிலிருந்த பலரும், தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை, மகிழ்ச்சியோடு வாங்கிச் செல்வதைக் கவனித்தேன்.
இதுபற்றி, உறவினரிடம் விசாரித்ததில், 'இக்குடியிருப்பின் செயலராக ஓய்வுபெற்ற கல்லுாரி பேராசிரியர், இருக்கிறார். வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காகவே, ஒவ்வொரு ஆண்டும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, குடியிருப்பு வளாகத்திலேயே, புத்தகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்கிறார்.
'அவரின் இந்த நல்ல முயற்சியால், குடியிருப்பிலுள்ள அனைவருமே வாசிப்புப் பழக்கத்தைத் தொடர்ந்து வருகிறோம்...' என்றார். மற்ற குடியிருப்புவாசிகளும், அவ்வப்போது புத்தகக் கண்காட்சி நடத்தி, வாசிப்பை வளர்த்தெடுக்க உதவலாமே!
- ஆர்.ஜெயசங்கரன், வானுார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 10, 2022 10:45 pm

மண் பானை பொங்கல்!
மண் பானை மற்றும் பித்தளை பானைகளில் பொங்கலிடுவது தமிழர்களின் பாரம்பரிய வழக்கம். தமிழகத்தில், பெரும்பாலும், மண் பானைகளிலேயே பொங்கலிடப்படுகிறது. பொங்கல் பானை வாங்கும்போது, அதன் மூன்று பக்கங்களிலும் விரல்களால் சுண்டிப் பார்த்து வாங்க வேண்டும். நாம் சுண்டும்போது, மூன்று பக்கமும் ஒரே மாதிரியான ஒலி வரவேண்டும்.
சில பானைகளில் ஒலியால் மாற்றத்தை அறிய முடியாத நிலை இருக்கலாம். அப்போது, பானையின் உள்புறமாக கூர்ந்து பார்த்து ஓட்டை உள்ளதா என, பரிசோதித்து கொள்ள வேண்டும். பொங்கல் பானையில் தண்ணீர் விட்டவுடன், நீர் கசிவு ஏற்பட்டால், பயப்பட வேண்டாம். மண்ணின் தன்மை மற்றும் அது வேக வைக்கப்பட்ட நிலை காரணமாக இருக்கும்.
சீதனமாக கொடுக்கப்படும் பானைகளில் கரும்பு, மஞ்சள், கோல ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும். பொங்கலுக்கு மண் பானை, மண் சட்டி, மண் அடுப்பு என, மண்ணால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கி, மண்பாண்ட தொழிலை ஆதரிப்போம்; சுற்றுச்சூழலை காப்போம்.
- ஆர். ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 19, 2022 8:55 pm

கவனம் மக்களே...
சமீபத்தில், ஒரு பிரபல துணிக்கடையில் துணிகள் வாங்கி, 'பில் கவுன்டரில்' பணம் கொடுக்கும்போது, 2,050 ரூபாய் கட்ட வேண்டி இருந்தது. நான், நான்கு 500 மற்றும் ஒரு, 100 ரூபாய் கொடுத்தபின், கவுன்டரில் இருந்த பெண், 'பில்'லில், 'கேஷ் பெய்டு' என்று, முத்திரை பதித்து கொடுத்தாள்.
'மீதி, 50 ரூபாய் எங்கே...' என்று கேட்டதும், 'நீங்க கரெக்டா தான் கொடுத்தீங்க...' என்று சாதித்தாள்.
'என்னிடம், 500ம், 100 ரூபாயும் தான் இருந்தது. 50 ரூபாய் இல்லை...' என்று அழுத்தமாகச் சொன்னேன்.
'மேடம், தயவுசெய்து இதைப் பெரிது படுத்தாதீங்க. நீங்க, 100 ரூபாய் கொடுத்திருந்தாலும், கம்ப்யூட்டரில், 50 ரூபாய் என்று போட்டு, 'பில்' பண்ணிட்டேன். இனி, மேனேஜர் தான் மாத்தணும். அப்படி செஞ்சா, என்னைத் திட்டி, வேலையை விட்டே துாக்கிடுவாங்க...' என்று கெஞ்சினார்.
போனால் போகட்டும் என்று விட்டு விட்டேன்.
இது, ஒரு நவீனத் திருட்டாகவும் இருக்கலாம் அல்லது அந்தப் பெண்ணின் கவனக்குறைவாகவும் இருக்கலாம். அன்றைய கணக்கை ஒப்படைக்கும்போது, அதிகப்படியான, 50 ரூபாயை அப்பெண்தானே எடுத்துக் கொள்வாள்; அது அவளுக்கும் தெரியும்தானே.
கடைகளில், 'பில்'லுக்கு பணம் கொடுத்த பின், மீதியை எண்ணிப் பார்க்காமல் வாங்கி பர்சில் வைப்பவர்கள் ஏராளம். அப்படி பலர் இருப்பதால்தான், இப்படி ஏமாற்றுவது சுலபமாகிறது.
வாசகர்களே... இதைப் படித்த பின்பாவது, மீதி பணத்தை எண்ணிப் பாருங்கள். மேலும், கடை ஊழியர்கள் வேலையைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் தான் கவனமாக வேலை செய்ய வேண்டும். நம் இரக்க குணம், நம்மை ஏமாளிகள் ஆக்கிவிடக் கூடாது.
- ஹேமலதா சீனிவாசன், சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 19, 2022 8:57 pm

krishnaamma wrote:கவனம் மக்களே...

அப்படியென்றால் அந்தப் பெண், தன்னிடமிருந்து 50 ரூபாயை தரவேண்டியது தானே.... கண்டிப்பாக இது ஏமாற்று வேலை தான்.... எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் சோகம்..... கோபம் கோபம் கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 19, 2022 9:03 pm

இப்படிச் செய்யலாமே!
உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்றவன், நான். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தகங்கரையில் உள்ளது, ஓய்வூதியர் சங்கம். சமீபகாலமாக ஒரு நற்பணியை திறம்பட செய்து வருகிறார், எங்கள் ஓய்வூதிய சங்க செயலர்.
ஒவ்வொரு மாதமும், உடன் இரு சங்க நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு, ஓய்வூதியர் சங்கத்தில், அதிக வயதுடைய மூன்று உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும், வெவ்வேறு நாட்களில் நேரில் சந்தித்து பேசுகிறார்.
ஓய்வூதியருக்கு, தோளில் ஒரு துண்டு போட்டு, அவருடன் சங்க நிர்வாகிகளை நிற்க வைத்து, புகைப்படம் எடுக்கிறார். பிறகு, அதை ஓய்வூதியர் சங்க, 'வாட்ஸ் ஆப்' குழுவில் பதிவிடுகிறார். வயது முதிர்ந்த ஓய்வூதியரிடம், ஒரு மணி நேரம் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்.
இதனால், வயது முதிர்ந்த ஓய்வூதியர்கள் அடையும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. பழைய நினைவுகளை பகிர்வதால், அவர்களின் மகிழ்ச்சி பன்மடங்கு அதிகரிக்கிறது. உடல் நலம் மேம்படுவதோடு, குடும்பத்தில் அவர்களின் மதிப்பு அதிகரிக்கிறது.
இதேபோல, ஓய்வூதியம் பெறாத பல முதியவர்கள், வீடுகளில் இருக்கின்றனர். சமூக நலனில் அக்கறை கொண்டோர், இவர்களை சந்தித்து, நம்பிக்கை வார்த்தைகளை கூறினால், அவர்களும் மகிழ்ச்சியடைவர், நம் சமுதாயமும் மேம்படும்.
ரா. வசந்தராசன், கிருஷ்ணகிரி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 19, 2022 9:04 pm

155377'ன் சேவை தெரியுமா?

நண்பரின் அப்பா, அரசு மருத்துவமனையில் இறந்து விட்டார். சொந்த ஊருக்கு உடலை எடுத்துச் செல்ல நிறைய செலவாகுமே என்று கவலையில் ஆழ்ந்தார், நண்பர்.
அரசின், '155377' என்ற எண்ணுள்ள ஆம்புலன்ஸ் சேவை பற்றி சொல்லி, 'அப்பாவின் உடலை, உங்கள் சொந்த ஊருக்கு எந்த செலவுமில்லாமல் இலவசமாக எடுத்துச் செல்லலாம்...' என்று கூறி ஆச்சரியப்படுத்தினர், மருத்துவர்கள்.
நமக்கு, '108' ஆம்புலன்ஸ் சேவை பற்றி மட்டுமே தெரியும். '155377' சேவையை பற்றி அதிகம் தெரியாது. 100 கி.மீ., வரை, இவர்கள், உடலை ஆம்புலன்சில் எடுத்துச் செல்வர். அதற்கு மேல் செல்ல வேண்டுமென்றால், ரயிலில் இலவசமாக எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்து தருவர். இறந்தவரின் உடலுடன் ஒருவர் செல்ல, அவருக்கான டிக்கெட்டும் எடுத்து தருகின்றனர்.
தமிழகத்தில் மட்டுமல்ல, வெளிநாட்டில் ஒருவர் இறந்தாலும் கூட, விமான நிலையத்திலிருந்து, உயிரிழந்தவரின் உடலை அவரின் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல, இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஜெ. கண்ணன், சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 22, 2022 8:34 pm

இப்படியும் செய்யலாமே!
தன் மகனின் பிறந்த நாளை, முதியோர் இல்லத்தில் கொண்டாட விரும்பினார், நண்பர். அங்குள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு, புத்தாடை மற்றும் அவர்கள் விரும்பும் உணவு வகைகளை வழங்கவும் எண்ணினார்.
ஒரு வாடகை வாகனத்தை ஏற்பாடு செய்து, முதியோர் இல்லத்திற்கு குடும்பத்தோடு சென்றார். அதன் நிர்வாகியிடம் விபரத்தைக் கூறி, அனுமதி பெற்று, முதியோர்களை வாகனத்தில் ஏற்றி, நகரின் முன்னணி துணிக்கடைக்கு சென்றார்.
தங்களுக்குப் பிடித்தமான உடைகளை, அவர்களை தேர்வு செய்து கொள்ள கூறி, வாங்கிக் கொடுத்தார். பிறகு, பிரபலமான முதல் தர உணவகத்திற்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை, 'ஆர்டர்' செய்து, சாப்பிடும்படி கூறினார்.
நிறைவாக, மீண்டும் முதியோர் இல்லத்திற்கு வந்து, தன் மகனின் பிறந்த நாளை, அவர்களோடு, 'கேக்' வெட்டி கொண்டாடினார். மனதில் மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும், முதியோர் அனைவரும், நண்பரின் மகனை மனதார வாழ்த்தினர்.
உடனிருந்து இவற்றை பார்த்த நான், ஆதரவற்றோரை விருந்தினர் போல நடத்தி, மனிதாபிமானத்தோடு செயல்பட்ட நண்பரை வாழ்த்தினேன்!
-எஸ்.விஜயன், கடலுார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 22, 2022 8:38 pm

பழைய துணிகள் என்றாலும்...
சமீபத்தில், திருப்பூருக்கு சென்றிருந்தேன். அங்கே சாலையின் மதில் சுவர் ஓரம், பழைய துணிகளை அடுக்கி வைத்திருந்தனர். சில துணிகள் நடைபாதையில் சிதறிக் கிடந்தன. அவற்றின் மீது சில தெரு நாய்கள் படுத்து துாங்கிக் கொண்டிருந்தன.
அது குறித்து, அருகிலிருந்த பெண்ணிடம் கேட்டேன்.
'எழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், பழைய துணிகளை இங்கே கொண்டு வந்து வைப்பர். தேவைப்படுவோர், அதை எடுத்துக் கொள்ளலாம்...' என்றார்.
சேவை எண்ணம் சிறந்தது தான். அதேசமயம், எந்த பாதுகாப்பும் இன்றி, இப்படி துணிகளை வைப்பது தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவைகள் மழை மற்றும் வெயிலால் பாதிக்கப்படும். மேலும், நாய், மாடு போன்றவை அதில் படுத்து துாங்குவதற்கு வசதியாகி விடும்.
மாறாக, இந்த துணிகளை எல்லாம் நுால் நிலையம் அல்லது இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் அட்டை பெட்டியிலோ அல்லது மர அலமாரிகளிலோ வைக்கலாம். இதனால், துணி வீணாவது தடுக்கப்படும்; தேவைப்படுவோர் எடுத்துச் சென்று பயன்படுத்துவர்.
என்ன நண்பர்களே... பழைய துணிகள் என்றாலும், அதை பாதுகாப்பான முறையில் தரலாமே; மற்றவர்களும் மனிதர்கள் தானே... சிந்தியுங்கள்!
அ.மீனாட்சி, கன்னியாகுமரி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 22, 2022 8:42 pm

krishnaamma wrote:பழைய துணிகள் என்றாலும்...
சமீபத்தில், திருப்பூருக்கு சென்றிருந்தேன். அங்கே சாலையின் மதில் சுவர் ஓரம், பழைய துணிகளை அடுக்கி வைத்திருந்தனர். சில துணிகள் நடைபாதையில் சிதறிக் கிடந்தன. அவற்றின் மீது சில தெரு நாய்கள் படுத்து துாங்கிக் கொண்டிருந்தன.
அது குறித்து, அருகிலிருந்த பெண்ணிடம் கேட்டேன்.
'எழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், பழைய துணிகளை இங்கே கொண்டு வந்து வைப்பர். தேவைப்படுவோர், அதை எடுத்துக் கொள்ளலாம்...' என்றார்.
சேவை எண்ணம் சிறந்தது தான். அதேசமயம், எந்த பாதுகாப்பும் இன்றி, இப்படி துணிகளை வைப்பது தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவைகள் மழை மற்றும் வெயிலால் பாதிக்கப்படும். மேலும், நாய், மாடு போன்றவை அதில் படுத்து துாங்குவதற்கு வசதியாகி விடும்.
மாறாக, இந்த துணிகளை எல்லாம் நுால் நிலையம் அல்லது இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் அட்டை பெட்டியிலோ அல்லது மர அலமாரிகளிலோ வைக்கலாம். இதனால், துணி வீணாவது தடுக்கப்படும்; தேவைப்படுவோர் எடுத்துச் சென்று பயன்படுத்துவர்.
என்ன நண்பர்களே... பழைய துணிகள் என்றாலும், அதை பாதுகாப்பான முறையில் தரலாமே; மற்றவர்களும் மனிதர்கள் தானே... சிந்தியுங்கள்!
அ.மீனாட்சி, கன்னியாகுமரி.

இங்கு பங்களூரிலும் இது போல உள்ளது, அவர்கள் நல்ல அலமாரிகளில் வைத்து அல்லது சனி ஞாயிறுகளில் மட்டும் சில அறைகளில் வைத்து , தேவையானவர்கள் எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 36 of 40 Previous  1 ... 19 ... 35, 36, 37, 38, 39, 40  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக