ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» எல்லாம் நன்மைக்கே
by SK Today at 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Today at 2:50 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by சிவனாசான் Today at 2:15 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:54 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by Dr.S.Soundarapandian Today at 12:48 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:10 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by krishnaamma Today at 11:39 am

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Today at 11:34 am

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 11:25 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Today at 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Today at 11:23 am

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by krishnaamma Today at 11:22 am

» அறிவு - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 11:19 am

» தூய்மை - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 11:16 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Today at 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Today at 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Today at 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Today at 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Today at 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Today at 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Today at 6:17 am

» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner
by velang Yesterday at 9:22 pm

» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.
by velang Yesterday at 9:15 pm

» டால்பின் சிரிக்குமா?…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!
by krishnaamma Yesterday at 9:15 pm

» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்
by krishnaamma Yesterday at 9:13 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:07 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by krishnaamma Yesterday at 8:44 pm

» கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை!
by krishnaamma Yesterday at 8:41 pm

» படித்ததில் பிடித்தது - II :) --வாழ்க கல்விச் சேவை!
by krishnaamma Yesterday at 8:35 pm

» வாழ்க்கை என்று வருகிறபோது தத்துவம் செல்லாக் காசாகும்!..
by krishnaamma Yesterday at 8:20 pm

» எலியா? ஆணா? - சத்குரு
by krishnaamma Yesterday at 8:12 pm

» ‘நூறாண்டு காலம் வாழ்க’: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!
by krishnaamma Yesterday at 8:09 pm

» அடுத்தடுத்து 4 படங்கள் ஓடிடியில் ரிலீஸ்...? விஜய் சேதுபதி திடீர் அப்செட்
by krishnaamma Yesterday at 8:05 pm

» வரி தாக்கல் சம்பந்தமாக 2019-2020 நிதியாண்டு
by krishnaamma Yesterday at 8:03 pm

» கன்யா மாச (புரட்டாசி மாத) பண்டிகை மற்றும் விரத நாட்கள்
by krishnaamma Yesterday at 8:02 pm

» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
by heezulia Yesterday at 7:45 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by krishnaamma Yesterday at 7:26 pm

» பிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள் !
by krishnaamma Yesterday at 7:08 pm

» பிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்...
by krishnaamma Yesterday at 7:03 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 6:52 pm

» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Yesterday at 6:51 pm

» ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார்
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» பா.ஜ.,வின் புதிய எம்.பி., கொரோனாவால் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» பாண்டிய முரசு -உதயணன் சரித்திர நாவல் .
by Guest Yesterday at 6:20 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» இது போதும் - பாலகுமாரன்
by ssk1 Yesterday at 3:50 pm

» ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது.
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» குழந்தை தவறவிட்ட மிட்டாய்!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by ayyasamy ram Yesterday at 7:59 am

Admins Online

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Page 34 of 37 Previous  1 ... 18 ... 33, 34, 35, 36, 37  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை

தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.

[You must be registered and logged in to see this image.]

Last edited by T.N.Balasubramanian on Fri Sep 04, 2020 5:42 pm; edited 1 time in total (Reason for editing : editting)
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15182
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Sep 16, 2020 4:59 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-9-உறுப்புநலனழிதல் -1240

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு

வாசிக்க
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே, ஒண்ணுதல் செய்தது கண்டு

தெளிவுரை
காதலியின் ஒளிபொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு,
அவளுடைய கண்களின் பசலையும் துன்பம் அடைந்துவிட்டது,

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15182
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Sep 16, 2020 5:13 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10- நெஞ்சொடுகிளத்தல் -1241

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கு மருந்து

வாசிக்க
நெஞ்சே, எவ்வநோய் தீர்க்கும் மருந்து ஒன்று, எனைத்து
ஒன்றும் நினைத்துச் சொல்லாயோ.

தெளிவுரை
நெஞ்சே! (காதலால் வளர்ந்த) இத் துன்பநோயைத் தீர்க்கும் மருந்து
ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்லமாட்டாயோ?

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15182
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by heezulia on Wed Sep 16, 2020 7:51 pm

16.09.2020

[You must be registered and logged in to see this link.] wrote:உன் கண்கள் அழகொழிந்து கருங்குவளை மலரைக் கண்டு நாணப்படுவன ஆயின. இங்கு இவள் முகம் கருங்குவளை மலர் கண்டு நாணப்படுவதாக உள்ளது. இவள் அழுது அழுது முகம் வாடி மலர் போன்ற மலர்ந்த முகம் வாடி நாணப்படுவதாக அறிய வேண்டும்

இதுல ஒரு குழப்பம் எனக்கு. நாணப்படுவன ஆயின, நாணப்படுவதாக உள்ளது, நாணப்படுவதாக அறிய வேண்டும் என்பது சரியா இல்லை நாணுகின்றன, நாணுவதாக உள்ளன, நாணுவதாக அறிய வேண்டும் என்பது சரியா.

அடுத்தது, முகம் நாணுகிறதா, கண்கள் நாணுகின்றனவா?

இவற்றிற்கான விளக்கங்களை நான் நான் அறிய வேண்டும்.

பேபி
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 958
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Sep 16, 2020 8:19 pm

[You must be registered and logged in to see this link.] wrote:16.09.2020

[You must be registered and logged in to see this link.] wrote:உன் கண்கள் அழகொழிந்து கருங்குவளை மலரைக் கண்டு நாணப்படுவன ஆயின. இங்கு இவள் முகம் கருங்குவளை மலர் கண்டு நாணப்படுவதாக உள்ளது. இவள் அழுது அழுது முகம் வாடி மலர் போன்ற மலர்ந்த முகம் வாடி நாணப்படுவதாக அறிய வேண்டும்

இதுல ஒரு குழப்பம் எனக்கு. நாணப்படுவன ஆயின, நாணப்படுவதாக உள்ளது, நாணப்படுவதாக அறிய வேண்டும் என்பது சரியா இல்லை நாணுகின்றன, நாணுவதாக உள்ளன, நாணுவதாக அறிய வேண்டும் என்பது சரியா.

அடுத்தது, முகம் நாணுகிறதா, கண்கள் நாணுகின்றனவா?

இவற்றிற்கான விளக்கங்களை நான் நான் அறிய வேண்டும்.

பேபி
[You must be registered and logged in to see this link.]
நாணப்படுவது கூட அற்புத பொருள் முன் இருக்க வேண்டும் என்று நறுமணமலராகிய கருங்குவளை முன்., தலைவரை நினைத்து அழுதலால் கண்கள் அழகிழந்து நல்ல மலர்களுக்கு நாணுகின்றன .
இதற்கு மேல் உங்கள் கேள்வி கணைகளால் நான் தான் நாணிக்குறுகவேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15182
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Sep 16, 2020 8:23 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10- நெஞ்சொடுகிளத்தல் -1242

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு

வாசிக்க
என் நெஞ்சு வாழி, அவர் காதல் இலராக நீ நோவது, பேதைமை

தெளிவுரை
என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க,
நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவதும் உன் அறியாமையே!

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15182
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by heezulia on Wed Sep 16, 2020 9:22 pm

16.09.2020

என்ன முத்து சார், அட் எ ஸ்ட்ரெச்ல படக்குனு 1241க்கு வந்துட்டீங்க. இன்னும் 88 குறள்கள்தான்.

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10-நெஞ்சொடுகிளத்தல்

அதிகாரம் 125
தன்னுடைய ஆற்றாமையை நெஞ்சுக்கு கூறுவது, நெஞ்சோடு பேசுவது

தலைவனின் பிரிவால் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கும் தலைவி, பிரிவாற்றாமையை பிறரிடம் கூற வெட்கப்படுகிறாள். [தோழி எங்கே?] அந்த சமயத்தில் தன் நெஞ்சைத் துணையாக நினைத்து தன் நெஞ்சோடு பேசுகிறாள், தன் வருத்தத்தைக் கூறுகிறாள். ஆறுதல் அடைகிறாள்.

[You must be registered and logged in to see this link.] wrote: (காதலால் வளர்ந்த) இத் துன்பநோயை"

காதலால் வளர்ந்த துன்ப நோயா அல்லது தலைவனின் பிரிவால் வளர்ந்த காதல் நோயா?

பேபி
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 958
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Sep 16, 2020 9:49 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10- நெஞ்சொடுகிளத்தல் -1243

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
இருந்துள்ளி என்பரித நெஞ்சே பரிந்துள்ளல்
பைதனோய் செய்தார்கண் இல்

வாசிக்க
நெஞ்சே இருந்து உள்ளிப் பரிதல் என், பைதல் நோய் செய்தார்கண் பரிந்து உள்ளல் இல்.

தெளிவுரை
நெஞ்சே!(என்னுடன்)இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15182
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Sep 16, 2020 10:02 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10- நெஞ்சொடுகிளத்தல் -1244

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று

வாசிக்க
நெஞ்சே கண்ணும் கொளச் சேறி, இவை அவர்க் காணல் உற்று என்னைத் தின்னும்.

தெளிவுரை
நெஞ்சே! நீ அவரிடம் செல்லும் போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காண வேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15182
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Sep 16, 2020 10:15 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10- நெஞ்சொடுகிளத்தல் -1245

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
செற்றா ரெனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்

வாசிக்க
நெஞ்சே, யாம் உற்றால் உறாஅதவர், செற்றார் எனக் கைவிடல் உண்டோ

தெளிவுரை
நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை
வெறுத்துவிட்டார் என்று எண்ணிக் கை விட முடியுமோ?

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15182
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Sep 16, 2020 10:34 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10- நெஞ்சொடுகிளத்தல் -1246

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கலந்துணர்த்துங் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு

வாசிக்க
என் நெஞ்சு, கலந்து உணர்த்தும் காதலர்க் கண்டால்
புலந்து உணராய், பொய்க் காய்வு காய்தி.

தெளிவுரை
என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்ட
போது நீ பிணங்கி உணரமாட்டாய்! பொய்யான சினங்கொண்டு காய்கின்றாய்.

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15182
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:57 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10- நெஞ்சொடுகிளத்தல் -1247

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேனிவ் விரண்டு

வாசிக்க
நல்நெஞ்சே, ஒன்றோ காமம் விடு, (ஒன்றோ) நாண் விடு, இவ்விரண்டு யான் பொறேன்

தெளிவுரை
நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டுவிடு;
இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15182
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:00 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10- நெஞ்சொடுகிளத்தல் -1248

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் நெஞ்சு

வாசிக்க
என் நெஞ்சு, அவர் பரிந்து அவர் நல்கார் என்று, பிரிந்தவர் பின் ஏங்கிச் செல்வாய் பேதை

தெளிவுரை
என் நெஞ்சே!
பிரிவுத் துன்பத்தால் வருத்தி அவர் வந்து அன்பு செய்யவில்லையே
என்று ஏங்கிப்பிரிந்தவரின் பின் செல்கின்றாய்! நீ பேதை.

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15182
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:20 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10- நெஞ்சொடுகிளத்தல் -1249

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு

வாசிக்க
என் நெஞ்சு, காதலவர் உள்ளத்தாராக, நீ உள்ளி யாருழைச் சேறி

தெளிவுரை
என் நெஞ்சே!
காதலர் உன் உள்ளததில் உள்ளவராக இருக்கும்போது
நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15182
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:48 am

[You must be registered and logged in to see this link.] wrote:16.09.2020

என்ன முத்து சார், அட் எ ஸ்ட்ரெச்ல படக்குனு 1241க்கு வந்துட்டீங்க. இன்னும் 88 குறள்கள்தான்.

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10-நெஞ்சொடுகிளத்தல்

அதிகாரம் 125
தன்னுடைய ஆற்றாமையை நெஞ்சுக்கு கூறுவது, நெஞ்சோடு பேசுவது

தலைவனின் பிரிவால் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கும் தலைவி, பிரிவாற்றாமையை பிறரிடம் கூற வெட்கப்படுகிறாள். [தோழி எங்கே?] அந்த சமயத்தில் தன் நெஞ்சைத் துணையாக நினைத்து தன் நெஞ்சோடு பேசுகிறாள், தன் வருத்தத்தைக் கூறுகிறாள். ஆறுதல் அடைகிறாள்.

[You must be registered and logged in to see this link.] wrote: (காதலால் வளர்ந்த) இத் துன்பநோயை"

காதலால் வளர்ந்த துன்ப நோயா அல்லது தலைவனின் பிரிவால் வளர்ந்த காதல் நோயா?

பேபி
[You must be registered and logged in to see this link.]
முதலில் காதல் வயப்பட்டு அவனை (கணவனாக) தலைவனாக ஏற்றுக் கொண்டாள்.
திருமணபந்ததிற்கு ஏற்படுவது அற்புமான காதல் அந்த காலக் கட்டதில் ஏற்படும் பிரிவு
பெருந்துன்பமே இங்கு காதலால் வந்த அல்லது வளர்ந்த துன்பமே., பிரிவு அதற்கு காரணமே. ஆதலால் காதலால் வளர்ந்த துன்பம் சரியன தோன்றுகிறது.
உங்கள் கண்ணோட்டத்தை பகிரலாம் பேபி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15182
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

heezulia likes this post

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:03 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10- நெஞ்சொடுகிளத்தல் -1250

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா
வின்னு மிழத்துங் கவின்

வாசிக்க
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா, இன்னும் கவின் இழத்தும்

தெளிவுரை
நம்மோடு பொருந்தியிருக்காமல் கைவிட்டுச் சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது, இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15182
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 34 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 34 of 37 Previous  1 ... 18 ... 33, 34, 35, 36, 37  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum