புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10 
31 Posts - 53%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10 
2 Posts - 3%
jairam
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10 
1 Post - 2%
சிவா
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10 
1 Post - 2%
Manimegala
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10 
13 Posts - 4%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10 
9 Posts - 3%
Jenila
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10 
4 Posts - 1%
Rutu
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10 
3 Posts - 1%
jairam
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 58 of 60 Previous  1 ... 30 ... 57, 58, 59, 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Sep 22, 2023 1:12 am

22.09.2023     

21.09.2023  - சிங்கீதம் சீனிவாசராவ் அவர்கள் பிறந்த நாள்       [1931]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Zm6EASl

தெலுங்கு பேசும் குடும்பத்தில பிறந்தார். தமிழ்ல பேச மட்டும்தான் தெரியும். படிக்க தெரியாது. இருந்தாலும் தமிழ்ல பல வெற்றி படங்களை கொடுத்தார். டைரக்ட்டர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், ம்யூஸிக் டைரக்ட்டர். ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியே உருவானவர். பேச்சைவிட செயலே முக்கியம்னு வேல செஞ்சவர். இவருக்கும், கமலுக்கு நல்ல புரிதல் உண்டுன்னு சிங்கீதம் சொன்னார். 

தமிழ்ல டைரக்ட்டின படங்கள் ரொம்ப கொஞ்சம்தான். அதிகமா டைரக்ட்டினது தெலுங்கு, கன்னட படங்கள். அப்பப்போ மலையாளம், ஹிந்தி படங்களையும் விடல. ஆரம்பத்தில தெலுங்கு டைரக்டர்கள்கிட்ட  ஜாய்ன்ட் டைரக்ட்டரா இருந்தார். டைரக் ஷனை கத்துக்கிட்டார். கமலின் ஆஸ்த்தான டைரக்ட்டர். 

சிங்கீதம் கமல் படங்களை டைரக்ட்டி நல்ல வசூல், ஏகப்பட்ட பாராட்டுக்கள் கெடச்சுது. கமலை வச்சு டைரக்ட்டின முதல் படம் 1981ல ராஜபார்வை. இதுல கமல்  பார்வை இல்லாதவர். 1989ல அபூர்வ சகோதரர்கள் முந்தைய சாதனைகளையெல்லாம் முறியடிச்ச, புதுசா சாதனை படச்ச படம். இதுல கமல் குள்ள மனிதரா நடிச்சார். 1987ல பேசும் படம் முழுசா வசனமே இல்லாத ஊமை படம். ஆனா படம் பேசுச்சு. கமல் நடிச்சது. சிங்கீதம் இணை தயாரிப்பு செஞ்சு, கதை, திரைக்கதை எழுதி, டைரக்ட்டின படம். 1990ல மைக்கேல், மதன, காம, ராஜன். திரைக்கதை கமல். டைரக் ஷன் சிங்கீதம். நாலு கமல். இந்த படத்தில டைட்டில் பாட்டுல ஆரம்பத்தில கொஞ்ச நேரம் வந்து சிங்கீதம் ஆடி பாடறார். 
கத கேளு கத கேளு சுகமான கத கேளு

சிங்கீதம் எடுத்த தெலுங்கு படங்கள்லாம் 100 நாள் ஓடிய, வெள்ளி விழா கொண்டாடிய படங்கள். 
திக்கற்ற பார்வதி 1974. இது ஒரு ஸ்பெஷல் படம். இந்திய திரைப்பட நிதி கழகத்தின் உதவி இந்த படத்துக்கு கெடச்சுது. அமரர் ராஜாஜி பொறந்த தொரப்பள்ளி க்ராமத்தில முழு படமும் எடுக்கப்பட்டுச்சு. ராஜாஜி எழுதிய கதையின் திரை ஓவியம் இந்த படம். ரெண்டு பாட்டுல ஒரு பாட்டு ராஜாஜி எழுதினார். சிங்கீதம் திரைக்கதை எழுதி & டைரக்ட் செஞ்ச முதல் தமிழ் படம்.  

காலைல ஷூட்டிங் போணுன்னா முந்தின நாளே எல்லாத்தையும் ப்ளான் செஞ்சுட்டு, ஷூட்டிங் எடுக்கும்போது கொஞ்சங்கூட டென்ஷனே இல்லாம ப்ளான் போட்டிருந்தபடி, ஸீன்லாம் ஈஸியா எடுத்து முடிச்சுருவார். அதுல சிங்கீதம் சூரர்னு கமல் பாராட்டியிருக்கார். கதை சொல்றதுக்கு தனக்குனு எந்த பாணியும்  வச்சுக்கிறதில்ல. ஒரு படத்த பாக்குறவங்க அதை ரசிக்கிறதுக்கு என்னென்ன பாணீல்லாம் தேவையோ, அதுதான் சிங்கீதம் படம் எடுக்கிற பாணீனு பஞ்சு அருணாசலம் சொன்னார். 

சிங்கீதம் தன்னோட முகநூல் பக்கத்தில அவர் சாவித்திரிகூட ஏன் போட்டோ எடுத்துக்கலன்னு பலர்  கேட்டதாவும், அந்த நேரத்தில எடுக்கல, இப்ப சாவித்திரிகூட போட்டோ எடுத்துகிட்டதாக சொல்லி 2018ல ஒரு போட்டோவ போட்டார்.  
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 4DdTxIE

விருதுகள் :
வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் - 2011 & 2021
தேசிய சினிமா விருது - சிறந்த டைரக்ட்டர் - திக்கற்ற பார்வதி 1973 & கன்னட படம் 1988
நந்தி விருதுகள் - 5 தெலுங்கு படங்கள் 
கர்நாடக மாநில சினிமா விருதுகள் - 3
ஃபிலிம்ஃபேர் விருதுகள் - சிறந்த படம் திக்கற்ற பார்வதி   1973, தெலுங்கு படம் 1 & கன்னட படம் 1

நன்றி : விக்கி, kamadenu, tamil.hindustantimes, cinemapettai, maalaimalar   


அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
ராஜ பார்வை                  1981

கத கேளு கத கேளு சுகமான கத கேளு சுவையோடு சுகமாக உருவான கத கேளு
மைக்கேல், மதன, காம, ராஜன்             1990

ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்ல நா தாஜா பண்ணி வச்சா வண்டி பேஜார் பண்ணதில்ல

அபூர்வ சகோதரர்கள்            1989

மொத்து மொத்துனு மொத்தணும் மொத்தணும் குத்து குத்துன்னு குத்தணும் குத்தணும் பாத்து மொகரய பாத்து

மகளிர் மட்டும்        1994


பேபி     மீண்டும் சந்திப்போம்  

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 23, 2023 9:09 am

23.09.2023     

22.09.2023     PB ஸ்ரீனிவாஸ் அவர்கள் பிறந்த நாள்         [1930 - 2013]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 TLT8OwP                                பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 JU4tTVT

பழம் பெரும் பின்னணி பாடகர். தங்க சரிகை தலப்பாக்கட்டு, பட்டு அங்கவஸ்திரம், கண்ணாடி, பாக்கெட்ல கலர்கலரா பேனா, இடது தோள்பட்டைல ஒரு ஜோல்னா பை. இந்த கெட்டப்ல இருந்தவர்தான் PB ஸ்ரீனிவாஸ். PBSக்கு நிஜமான பேர் என்னவோ  Pரதிவாதி  Baயங்கரம்  Sரீனிவாஸ்தான். ஆனா ஸ்ரீனிவாஸ் என்ன சொன்னார் தெரீமோ?  Play Back Singer. இப்படித்தான் ஸ்ரீனிவாஸ் சொன்னார். அவர் பின்னணி பாடகராக இருந்ததுல முழு நிறைவும், முழு சந்தோஷத்தையும் கண்டவர். 

ஆந்த்ரால பிறந்தார். அம்மாவுக்கு ம்யூஸிக் ரொம்ப பிடிக்குமாம். பாடகி.  அந்த தாக்கத்தாலதான் PBS பாடகராயிட்டார்போல. ஆனா அப்பாவுக்கு PBS கவர்மெண்ட் வேலைக்கு போகணும்னு ஆசப்பட்டார். BComமுடிச்சு, சட்டம் படிக்க வச்சார். PBஎஸ்ஸுக்கு பாடகராக ஆச. இவரோட ஆசைய தெரிஞ்சுக்கிட்ட அவரோட மாமா நடத்திட்டு இருந்த நாடகத்தில பாட்றதுக்கு PBSக்கு சான்ஸ் கொடுத்தார். அப்போ அவருக்கு 12 வயசு. இப்டித்தான் PBS பாட ஆரம்பிச்சார். முறையா ம்யூஸிக் கத்துக்கிட்டு சினிமால பாட வந்துட்டார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, துளு, கொங்கணி உட்பட 12 மொழிகள்ல பாட்டு பாடினார். இங்கிலிஷ், உருது உட்பட 8 மொழிகள்ல பல பாட்டுக்கள் எழுதினார். 1951ல முதல் முதலா ஹிந்தி படத்தில பாட ஆரம்பிச்சார். 1953ல ஜாதகம்ங்கிற தமிழ் படத்தில முதல் முதலா பாடினார். மதுவண்டு என்ற புனைபேர்ல  கவிதைகள் எழுதினார். கஸல் வகை பாட்டுக்களை பாடறதுல மன்னன். கர்னாடக இசை மட்டுமில்லாம, ஹிந்துஸ்தானி இசை பாட்றதுலயும் வல்லவர்.  

1980ல வறுமையின் நிறம் சிவப்பு, நண்டு படங்கள்ல இருக்கிற ஹிந்தி பாட்டுக்களை ஸ்ரீனிவாஸ் எழுதியது. TM சௌந்தரராஜன் உச்சத்தில் இருந்த சமயத்தில அவருக்கு அடுத்த இடத்தில PBS இருந்தார். ஹை பிச்சுல பாடிட்டு இருந்தவங்க மத்தியில PBS மென்மையான குரல்ல இனிக்க இனிக்க பாடி ஒரு புது பாணியை கொண்டு வந்தார். பாவமன்னிப்பு படத்தில *காலங்களில் அவள் வசந்தம்* பாட்டு பாடி ரொம்பவே ப்ரபலமானார். காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்கு முதல் முதலா பாடிய பாட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில "இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே".  AM ராஜா பாடிட்டு இருந்த காலத்துல  PBS அவருக்கு பாட வந்துட்டார். AM ராஜாவை தமிழ் சினிமால இன்ட்ரோ செஞ்ச SS வாசன்தான் PBSஐயும் இன்ட்ரோ செஞ்சார். ஏகப்பட்ட பாட்டு பாடினார். ஜெமினி கணேசனின் குரலாகவே மாறிப்போனார் PBS. ஜெமினி கணேசனுக்கு இவரோட குரல் கனகச்சிதம், இல்ல? கன்னடத்தில ராஜ்குமாருக்கு PBSதான் நிறைய பாடினார். 'சரீரம் என்னோடது, சாரீரம் PBஎஸ்ஸோடது"னு ராஜ்குமார் பல மேடைகள்ல புகழ்ந்து பேசினார். 

"நிலவே என்னிடம் நெருங்காதே பாட்டு எத்தன தடவ கேட்டாலும் கண் கலங்கிருவேன்"னு ஒரு இன்டர்வ்யூல PBS சொன்னார். இசை சம்பந்தப்பட்ட இதழ்களுக்கு ஹெட்மாஸ்ட்டரா இருந்த PBS இயல் இசை நாடக மன்றத்துக்கும் இவர்தான் தலைவர்.  

நாகேஷுக்கும் பாடினார், "தாமரை கன்னங்கள் தேன்மொழி கிண்ணங்கள்" எதிர்நீச்சல் படத்தில. மத்தவங்கள என்கரேஜ்  செஞ்சு பாராட்டும் நல்ல குணம் PBSக்கு அதிகம். தெரிஞ்சவங்களுக்கு பிறந்த நாள், கல்யாண நாள் வந்தா, அவங்களுக்கு வாழ்த்து பாட்டு எழுதி கொடுத்தார். 

சினிமால பாடி முடிச்ச பிறகு ஒரு TVல அவரை பேட்டி எடுத்த ஒரு பெண் "எப்டி நீங்க இவ்ளோ இளமையா இருக்கீங்க"னு கேட்டார். அதுக்கு PBS, "உடம்புக்குத்தானே வயசாகுது. மனசுக்கு இல்லேல்ல. நா என்னிக்குமே இளமையாத்தான் உணர்றேன்" னு சொன்னார். அவர்க்கு பேனான்னா ரொம்ப பிடிக்கும். பேனா பிரியர். எப்பவுமே தன் பாக்கெட்ல கலர்கலரா அஞ்சாறு பேனா எப்பவும் வச்சிருந்தார்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 0A7hYmC

அவர் குல்லாவும் போட்டிருந்தார். அதை பற்றி கேட்டவங்களுக்கு, "நா எனக்கு மட்டுமே குல்லா போட்டுக்குவேன். மத்தவங்க யாருக்கும் போடறதில்லே"னு சொன்னார். 
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 XoOthjo

இன்னும் இவரை பற்றி எக்கச்சக்கமா இருக்கு. 

விருதுகள் :
கர்நாடக மாநில விருதுகள் , கலைமாமணி விருது, கலைவாணர் விருது 

நன்றி : விக்கி,  Suryan Magic, itstamil, hindutamil, vikatan 


ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மை காதல் மாறிப்போகுமா 

மக்களை பெற்ற மகராசி       1957                   

தாமரை கன்னங்கள் தேன்மலர் கிண்ணங்கள் எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது பொங்கிடும் எண்ணங்கள் 

எதிர் நீச்சல்               1968             

என்னருகே நீயிருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன் உன்னருகே நானிருந்தால் உலகமெலாம் ஆடுவதேன் 

திருடாதே           1961


பேபி    அருமையிருக்கு

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 24, 2023 5:07 pm

24.09.2023     

23.09.2023          நடிகை ஷோபா பிறந்த நாள்         [1962 - 1980]
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 SQNUgTY                பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Gg1cURI

சொந்த பேர் மகாலட்சுமி மேனன். கேரளால பிறந்தார். அம்மா மலையாள பட நடிகை. டைரக்ட்டர் பாலு மகேந்திராவை ஷோபா 1978ல கல்யாணம் செஞ்சுக்கிட்டார். வெள்ளந்தி சிரிப்பு, கல்மிஷம், பொய், பாசாங்கு இதெல்லாம் இல்லாத மழலை முகம். மொத்தத்துல குழந்தை முகம் ஆனா முதிர்ச்சியான குரல், கருப்பு நிறம், ஹீரோயினுக்கு சூட் ஆகாத ஒருத்தர் புகழின் உச்சிக்கு போக முடியுமான்னா, ஆமா ஆமா ஆமா முடியும். எல்லார் மனதையும் கொள்ளையடித்து, மனசுக்குள் உக்காந்துக்கிட்ட  ஷோபா. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல ஷோபா நடிச்சார். 1965ல நாணல் தமிழ் படத்தில குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிச்சார். 1966ல தட்டுங்கள் திறக்கப்படும் படத்தில பேபி மகாலட்சுமிங்கிற பேர்ல குட்டிபொண்ணா  நடிகையர் திலகம் சாவித்திரி, சந்திரபாபுகூட  நடிச்சார்.
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 B4zi1jK                       பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 KhniI9N

நிறைய மலையாள படங்கள்ல குழந்தை நட்சத்திரமாவும், குட்டி பொண்ணாவும் நடிச்சார். வளந்த பிறகு நடிச்ச முதல் தமிழ் படம் 1978ல நிழல் நிஜமாகிறது. 

ஒல்லிகுச்சி உடம்பு, அதுக்கேத்த மாதிரி ஒடுக்கமான முகம், கலைந்த தலை. இந்த கெட்டப்புல குடும்பத்தை சுமக்கும் கேரக்ட்டர். வேறெந்த நடிகையும் நடிக்க தயங்கிய ரோல். ஷோபா துணிச்சலா நடிச்ச பசி படம். இதுல அவரோடு நடிச்ச பசி சத்யா ஷோபாவை பற்றி ஒரு இன்டர்வ்யூல சொன்னபோது, சத்யா மேல ஷோபா தனி அக்கறை வச்சு தன் கார்லியே கூட்டிட்டு போனதாவும்,  பசி படத்தில ரொம்ப நல்லா நடிச்சிருந்ததை பாத்து ரொம்ப ஆச்சரியப்பட்டதாவும் சொன்னார். 

1965ல நடிக்க ஆரம்பிச்சு 1980 வரை 15 வருஷம்தான் நடிச்சார். 

விருதுகள்
தேசிய சினிமா விருது - சிறந்த நடிகை - பசி 1979
ஃபிலிம்ஃபேர் விருதுகள் - சிறந்த நடிகர் - ஒரு கன்னட படம் & பசி தமிழ் படம் 1979
கேரள மாநில சினிமா விருதுகள் 3
ஊர்வசி விருது - பசி 1979       

நன்றி : விக்கி, tamil.filmibeat,  tamil.oneindia, cinemapettai


பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன தள்ளாடி நடப்பதென்ன

ஏணிப்படிகள்          1979 

என் இனிய பொன் நிலாவே பொன் நிலவில் என் கனாவே நினைவிலே புது சுகம் தரததத்தரா  

மூடுபனி            1980

ஆடல் பாடல் காதல் என்பது அப்போது ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது

வீட்டுக்கு வீடு வாசப்படி            1970   

முத்து ரதமோ முல்லை சரமோ மூன்று கனியோ பிள்ளை தமிழோ கண்ணே நீ விளையாடு 

பொன்னகரம்         1980


பேபி   பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 3838410834  

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 24, 2023 9:33 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 Image?url=https%3A%2F%2Fimages.hindustantimes.com%2Ftamil%2Fimg%2F2023%2F04%2F30%2F550x309%2FWhat_1682875458507_1682875458918

தமிழிலும் குழந்தை நட்சத்திரமாகத்தான் அறிமுகமானார்.
பிறகு ஓர் இடைவெளிக்குப் பிறகு, இயக்குநர் கே.பாலசந்தரின் படத்தில்
குமரியாக அறிமுகமானார்.

அந்தப் படம்... ‘நிழல் நிஜமாகிறது’.
ஆனால், இவரின் வாழ்வில் எதுவும் நிஜமாகாமல் நிழலாகவே போய்விட்டதுதான்
பெருஞ்சோகம்.

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Sep 25, 2023 8:57 pm

25.09.2023   

உடுமலை நாராயண கவி அவர்கள் பிறந்த நாள் 
 
      [1899 - 1981]   
 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 7PPf8El            பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 VFW2cuG

பாடலாசிரியர் & நாடக எழுத்தாளர். விடுதலை போராட்டத்தின்போது தேசிய உணர்வை தூண்டும் பாட்டுக்களை எழுதி மேடையெங்கும் முழங்கியவர். ஆரம்ப காலத்தில நாடகங்களுக்கு பாட்டு எழுதினார். 1933ல சினிமால பாட்டு எழுத ஆரம்பிச்சார். தானும் ஒரு கவிஞன்னு அடையாளம் காட்டி நாராயண கவி ஆனார். 

உடுமலைப்பேட்டைல பிறந்தார். பெத்தவங்க வச்ச பேர் நாராயணசாமி. அவங்க இல்லாததால சின்ன வயசிலேயே வறுமை. அண்ணன் ஆதரவுல வாழ்ந்தார். அக்கம்பக்கம் இருந்த சின்ன சின்ன ஊர்கள்ல தீப்பெட்டி சுமந்து வித்து பொழப்பு ஓடுச்சு. ஒரு நாளக்கி 25 பைசா கெடச்சுது. நாலாப்புக்கு மேல படிக்க முடீல. க்ராமிய கலைகள்ல கலந்துகிட்டார். 

மகாகவி பாரதியாரின் நட்பு கெடச்ச பிறகு, பக்தி பாட்டுக்களை எழுதிட்டு இருந்த உடுமலையார் பாமர ஜனங்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க சமுதாய பாட்டுக்களை எழுதினார். கலைவாணர் NSKக்கு கிந்தனார் கதாகாலேட்சபம் எழுதி கொடுத்தார். அதனால NSK அவரை குருவாக நெனச்சார். பாரதிதாசன், கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை, நாமக்கல் கவிஞர், அரசியல் தலைவர்கள், கலைஞர்கள் எல்லார்கூடவும் நல்ல நட்புடன் இருந்தார். 

இனிமையான சுபாவம் கொண்டவர்  உடுமலையார். நேர்மை, யாருக்கும் எதுக்காகவும் தலை வணங்காத உறுதி, உதவி செய்யும் மனம் போன்ற நல்ல குணங்களோடு வாழ்ந்தவர். சொல்திறமை உண்டு. சினிமா உலகத்தில தனக்கென ஒரு மதிப்பு, புகழ் உண்டாக்கிக்கிட்டார். பகுத்தறிவு கவிஞர். 

பக்கத்து ஊர்ல நடந்த ராம நாடகம்ங்கிற நாடகத்தில  லட்சுமணனா நடிச்சார். ஆரிய கான சபாவின் ஆசிரியரா இருந்த முத்துசாமி கவிராயர்னு ஒருத்தர்  உடுமலையாரின் நடிப்பை பாத்து அவரை தன்னோடு கூட்டிட்டு போய்ட்டார். 12 - 25 வயசு வரைக்கும் கவிராயர் எங்க போனாலும் அவர்கூடவே போயி  நடிச்சு, எழுதி, பாடி நாடகத்தை பத்தி முழுஸ்ஸா தெரிஞ்சுகிட்டார். 

வ்யாபாரத்ல ஏற்பட்ட நஷ்ட்டத்தால வந்துச்சு கடன் தொல்லை. இந்த கடனை எல்லாம் சரிகட்டின பிறகுதான் சொந்த ஊருக்கு திரும்புறதா சபதம் எடுத்துட்டு நாடக மன்றங்கள் நிறைந்த மதுரைக்கு போய்ட்டார். அங்க பல நாடகங்களுக்கு வசனம், பாட்டு எழுதி சம்பாதிச்சார். ஊருக்கு போயி, ஊருக்கு வெளியே நின்னு கடனையெல்லாம் அடச்சுட்டு ஊருக்குள்ள போனார் உடுமலையார். 

மதுரைல இருந்தபோது TKS நாடக குழுவுடன் தொடர்பு இருந்துச்சு. அப்போதான் NSK பழக்கமானார். க்ராமஃபோன் கம்பெனிக்கு பாட்டெழுதுறதுக்கு டைரக்ட்டர் A நாராயணன் சென்னைக்கு  உடுமலையாரை கூப்ட்டார். அப்டியே சினிமாவுக்கு பாட்டெழுத சான்ஸ் கெடச்சுது. அப்போ சினிமா உலகத்துக்கு இவர் கவிராயர் ஆயிட்டார். சினிமா தயாரிப்பாளர்கள் இவர்ட்ட பாட்டு எழுதி கேக்க, நடையோ நடைனு நடந்தாங்க. இவரோட பாட்டுக்களுக்கு அமோக வரவேற்பு. காரணம் இவரோட பாட்டுக்களின்  சீர்திருத்த கருத்துக்கள் ஜனங்களுக்கு விழிப்புணர்வு கொடுத்துச்சு. நாட்டுப்புற மெட்டுக்களை சினிமா பாட்டுக்கள்ல கொண்டு வந்தவர். 

உடுமலையார் முதல் முதலா 1936ல சந்திரமோகனா அல்லது சமூகத்தொண்டு படத்துக்கு பாட்டு எழுதினார். 1979ல சொந்த ஊருக்கு போயிட்டார். அறிஞர் அண்ணா இவரை பற்றி சொன்னபோது "நாங்க பக்கம் பக்கமா எழுதுற வசனங்களுக்கு வெறும் பத்து வார்த்தைகள்ல பாட்டுக்கள் மூலமா கருத்து சொல்லுவார்". கலைவாணரின் கணிப்புல,  உடுமலையார் திரையுலக பாரதி, பாட்டுக்கள் வயித்துல பகுத்தறிவு பால் வார்த்தவர், சினிமா பாட்டுகளுக்கு இலக்கிய மதிப்பு கொடுத்தவர். திருக்குறள் சிந்தனைகளை சினிமா பாட்டுக்கள்ல அதிகம் கலந்து எழுதியவர். 

2008ல இந்திய அரசு இவர் பேர்ல ஸ்டாம்ப் வெளியிட்டுச்சு. அவரோட ஊர் உடுமலைப்பேட்டைல தமிழக அரசு அவர் நினைவாக மணிமண்டபம் கட்டி, அங்க அவரோட மார்பளவு சிலையை நிறுவுச்சு. 1967ல சங்கீத நாடக சங்கத்தால சிறந்த பாடலாசிரியராக செலெக்ட் ஆனார். நீதிபதி கோகுலகிருஷ்ணன் இவருக்கு சாகித்யா ரத்னாகர்  பட்டம் கொடுத்தார்.  

நன்றி : விக்கி, pothunalam, dinamani, aniarticle 
  

வார்த்தையில் அடங்காது வர்ணிக்கவும் முடியாது வனிதை நின்போல் நீயே வேறேது 
சித்தூர் ராணி பத்மினி            1963

கெட்ட பெண்மணி புத்தி கெட்ட பெண்மணி தன் இஷ்ட்டம்போல அலைந்து வாழ்வை இழப்பவள் எவளோ அவளே கெட்ட பெண்மணி 

மங்கையர் திலகம்       1955 
              
உல்லாசமாகவே உலகத்தில் வாழவே மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும் கல்யாணம் ஆஹாஹா கல்யாணம் 

பெண்            1954         

நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும் நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும்

விவசாயி          1967 
    

பேபி   அருமையிருக்கு

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Oct 02, 2023 12:30 pm

02.10.2023

  ப நீலகண்டன் அவர்கள் பிறந்த நாள்      [1916 - 1992]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 YLSuRoE                 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 EmdPuB5

இவரோட நினைவு நாள் 03.09.2023. இவரை பற்றிய கட்டுரை, நாலு பாட்டு அன்னிக்கி  அனுப்பியிருக்கேன். 

நான் பாத்தா பைத்தியக்காரன் உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்

 நீதிக்கு தலை வணங்கு     [டைரக் ஷன்] 1976 

ஆயிரம் முத்தம் தருவேன் தருவேன் ஆனால் உனக்கல்ல 

 அவன் பித்தனா        [டைரக் ஷன்]   1966

ஆசை கொண்டேன் அமுதமே என் அன்பே ஆடும் தெய்வமே 

ஆட வந்த தெய்வம்      [டைரக் ஷன்]   1960


பேபி    பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 3838410834

சிவா, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 02, 2023 1:09 pm

தொடக்கத்தில் ‘முதல் தேதி’ போன்ற சிறந்த குடும்பக் கதைகளையே இயக்கினார்
நீலகண்டன்.

எம்.ஜி.ஆரை வைத்து முதன் முதலாக அவர் இயக்கிய ‘சக்கரவர்த்தி திருமகள்’ (1957)
அவரது திரை வாழ்க்கையையும் திரைமொழியையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டது.

உச்ச நட்சத்திரமாக வளர்ந்துவந்த எம்.ஜி.ஆருக்கு அந்தப் படம் மாபெரும் வெற்றியாக
அமைந்தது. இப்படத்தில் எம்.ஜி.ஆரை நன்றாக நடனமாடத் தெரிந்த நடிகராகவும்
காண்பித்தார் இயக்குநர் நீலகண்டன்.

முதல் படத்தில் எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட நட்பு, அவரை வைத்து 17 படங்களை இயக்கும்
அளவுக்குப் பிரிக்கமுடியாத பிணைப்புடன் இறுதிவரைத் தொடர்ந்தது.

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Oct 02, 2023 5:55 pm

02.10.2023

  நீனா பிறந்த நாள்        [1981]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 JcdMNFn                      பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 AtTLbhj

குழந்தை நட்சத்திரம். 1989ல தெலுங்கு படத்தில நடிக்க ஆரம்பிச்சார். TV சீரியல்கள்லயும் நடிச்சார்.தமிழ்ல நடிச்ச முதல் படம் 1990ல கேளடி கண்மணி. ஹீரோயினா நடிக்க நெறைய சான்ஸ் கெடச்சாலும், நீனா ஊஹும்ன்னுட்டார். 1997ல விடுகதை படத்தில  நடிச்சு ஏகப்பட்ட பாராட்டு வாங்கினார். முக்கியமா அவர் கேரக்ட்டருக்கு ஏத்த மாதிரி பேசிய வசனங்களின்  டெலிவரிக்காக. சித்தி, அண்ணாமலை போன்ற மெகா ஹிட் சீரியல்கள்ல நடிச்சார். 

1987ல நாயகன் படத்தில கமலின் மகள். 1997ல ராசி படத்தில அஜீத்தின் தங்கச்சி. விடுகதை படத்தில ப்ரகாஷ்ராஜின் ஜோடி. 

நன்றி : விக்கி, simplytamil, tamil.oneindia,


தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே மான்போல வந்தவனே யார் அடித்தாரோ 

நாயகன்               1987

என்னாச்சு தங்கச்சி வெட்கப்படலாமா காலாலே வீட்டுக்குள் கோலமிடலாமா 

ராசி                1997

இதயம் இதயம் இணைகிறதே இது ஒரு புதுக்கவிதை இனியும் இனியும் தொடர்ந்திடுமே 

விடுகதை             1997


பேபி    ஜாலி  மீண்டும் சந்திப்போம்  ஜாலி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Oct 04, 2023 2:05 pm

04.10.2023

03.10.2023    சத்தியராஜ் பிறந்த நாள்        [1954]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 NUuCMOH      பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 OTUXLo9

இவர் பேரை சொன்னாலே எனக்கு "என்னம்மா கண்ணு", 'தகடு தகடு", "ஏங்கேரக்டரையே  புரிஞ்சுக்கமாட்டேங்றியே" தான் ஞாபகத்துக்கு வரும். சொந்த பேர் ரெங்கராஜ். மொதல்ல நடிக்க ஆரம்பிச்சது வில்லனாத்தான். அப்புறமாத்தான் ஹீரோவா நடிச்சார்.  தமிழ், தெலுங்கு, மலையாள, ஒண்ரெண்டு  ஹிந்தி படங்கள்ல  நடிச்சிருக்கார். இவர் MGRஇன் தீவிரமான ரசிகர். சத்தியராஜின் மகன் சிபிராஜும்  நடிகர்தான். சத்தியராஜும், மணிவண்ணனும் ஒண்ணா படிச்சவங்க. இவங்க ரெண்டு பேரும் சேந்தும் படங்கள்ல நடிச்சிருக்காங்க. சத்யராஜ்  ஒண்ரெண்டு படங்களை தயாரிச்சும், டைரக்ட்டியும் இருக்கார். 

1976ல் நடிக்கிற ஆசைல வில்லன்களுக்கு அடியாளா நடிக்க ஆரம்பிச்சார். இப்டி அடியாளா முதல் முதலா நடிக்க ஆரம்பிச்ச படம் 1978ல சட்டம் என் கையில். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாஸன், விஜயகாந்த் நடிச்ச படங்கள்ல சின்ன சின்ன ரோல்ல நடிச்சார். அப்புறமா மெய்ன் வில்லன், துணை நடிகர், ஹீரோவா வளந்து சாதிச்சு, நட்சத்திரமா ஜொலித்தவர் சத்தியராஜ். நக்கலு, நையாண்டி செஞ்சு,  வில்லனா வேற மாதிரி நடிச்சார்னா அவர்  சத்தியராஜ் மட்டுமேதான். அவரை அடிச்சுக்க ஆளில்ல. சிறந்த ஹீரோவா ப்ரபலமான படம் 1986ல கடலோர கவிதைகள். வில்லனா நடிச்சு தனக்கென தனி ஸ்டைல், கெத்து வச்சு நடிச்சார். இதை பாக்குறதுக்காகவே தனி ரசிகர்கள் இருக்காங்க. இது மட்டுமில்லீங்க, காமெடீலயும்  கலக்கோ கலக்கல்தான். 2015ல பாகுபலி கட்டப்பா வேற லெவல். 

கவுண்டமணி, செந்தில்கூட சேந்து நடிச்ச படங்கள்ல லூட்டியோ லூட்டி. இப்படி அவர் நடிப்பை பற்றி ஒவ்வொரு படத்லயும் சொன்னா சொல்லிட்டே போவலாம். 

படங்களுக்கு பல லட்சம் வாங்கிய சத்தியராஜ், ஆரம்ப காலத்தில நாடகங்கள்ல நடிக்கிறதுக்கு வாங்கின சம்பளம் பத்தே ரூபாய்.
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 S5PvObt

2007ல பெரியார் படத்தில நடிக்கிறதுக்கு பணமே வாங்கல. 1985ல மட்டும் 27 படங்கள்ல நடிச்சார். 1986ல மிஸ்டர் பாரத் படத்தில ரஜினிக்கு அப்பாவா  நடிச்சார். 1995ல வில்லாதி வில்லன் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ட்டி, மூணு ரோல்ல நடிச்சார். 2010ல குரு சிஷ்யன் படத்தில சுந்தர் சிகூட ஒரு பாட்டு பாடியிருக்கார். 3 படங்களை தயாரிச்சார். 

2016ல ஜாக்ஸன் துரை படத்தில சத்தியராஜுக்கு ரெண்டு ரோல், பேய், சாதாரண மனுஷன். மகன் சிபிராஜ் போலீஸ் அதிகாரி. இருவது வருஷத்துக்கப்புறம், 1994ல அமைதிப்படை படத்துக்கப்புறம்  2015ல இசை என்ற படத்தில வில்லனா நடிச்சார். இதுக்கு ஊடால சில படங்கள்ல பெரிய தொகை சம்பளமா கொடுக்கிறதா சொல்லி வில்லனா நடிக்க கூப்ட்ருக்காங்க. சத்தியராஜ் ஊஹூம் சொல்லிட்டார். 

இன்னும் இவரை பற்றி சொல்ல நிறைய இருக்கு. 

நடிகர் சத்யன், தயாரிப்பாளர் மாதம்பட்டி சிவகுமார் சத்தியராஜின் சொந்தகாரங்க. 

நன்றி : விக்கி, hindutamil, cinema.vikatan, tamil.filmibeat


பொடி நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வாரேன் வேணாய்யா வீராப்பு 

கடலோரக் கவிதைகள்                1986

சின்ன சின்ன ரோஜாப்பூவே செல்ல கண்ணே நீ யாரு  

பூவிழி வாசலிலே                1987

அடி மத்தாளந்தான் அதிரும் குத்தாலந்தான் விட்டா ராவெல்லாம் தூங்காது ஊரு 

மல்லு வேட்டி மைனர்          1990 
  

பேபி   பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 3838410834  

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Oct 07, 2023 11:29 pm

07.10.2023

வைக்கம் விஜயலட்சுமி பிறந்த நாள்      [1981]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 O2tYYm5            பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 2PjAwa0

கேரளால பிறந்த பின்னணி பாடகி. காயத்ரி வீணை வாசிப்பதுல வல்லவர். முதல் முதலா சினிமால பின்னணி பாடியது 2013ல மலையாள படத்தில. தமிழ்ல முதல்ல பாடியது 2014ல குக்கூ படத்தில. ப்ரபலமானது 2016ல வீர சிவாஜி படத்தில "சொப்பன சுந்தரி நான்தானே" பாட்ல. பட்டிதொட்டீலல்லாம் இந்த பாட்டு ஆஹா ஓஹோதான். இவருக்கு நிறைய பாடணும்ங்கிறதுதான் பெரீய ஆச. 

இவர் பிறந்த ரெண்டு நாள்லயே கண்ணு தெரியாதுன்னு தகவல் தெரிஞ்சுது. அதுவும் அதை சரி செய்ய முடியாதுன்னு டாக்ட்டர் சொல்லிட்டாங்க. பாவம்ல. 

ரொம்ப சின்ன வயசிலேயே டேப்ல பாட்டு கேட்டு கேட்டு, ராகம் தாளம் பிசகாம பாட கத்துக்கிட்டார். அவரோட இந்த திறமையை பார்த்த அவரோட அப்பா ஊக்கப்படுத்தினார். 

சின்ன வயசில கெடச்ச ஒரு வீணைல பாட்டு வாசிக்க பழகினார். இதை பார்த்த அப்பா ஒரு கம்பி இருக்கிற ஒரு வீணையை செஞ்சு கொடுத்தார். அதனாலேயே விஜயலட்சுமிக்கு ஒற்றை கம்பி வீணை காயத்ரினு பேர் கெடச்சுது. குன்னக்குடி வைத்தியநாதன் இந்த வீணைக்கு காயத்ரி வீணைனு பேர் வச்சார்.  

விஜயலட்சுமி ரஜினியின் தீவிர ரசிகை. அவரை சந்திச்சு பேசணும், அவர் நடிக்கிற படத்தில ஒரு பாட்டாவது பாடணும்னு அவருக்கு பெரிய ஆசை இருக்கு. அதே மாதிரி AR ரஹ்மான், இளையராஜா கூடவும் பாடணும்னும் அவருக்கு ஆசைன்னு சொன்னார். 

விருதுகள் : கேரள மாநில சினிமா விருதுகள்,  ஃபிலிம்ஃபேர் விருதுகள், மிர்ச்சி ம்யூஸிக் விருது, ஏசியாநெட் சினிமா விருது இன்னும் பல விருதுகள் - சிறந்த பாடகிக்கானது - மலையாள பாட்டுக்களுக்கு 

நன்றி  : விக்கி, tamil.asianetnews


சொப்பன சுந்தரி நான்தானே நான் சொப்பன லோகத்தின் தேன்தானே 

வீர சிவாஜி          2016


பேபி    பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 58 3838410834 அருமையிருக்கு

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 58 of 60 Previous  1 ... 30 ... 57, 58, 59, 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக