புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
31 Posts - 53%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
1 Post - 2%
jairam
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
1 Post - 2%
சிவா
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
1 Post - 2%
Manimegala
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
13 Posts - 4%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
9 Posts - 3%
Jenila
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
4 Posts - 1%
Rutu
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
3 Posts - 1%
jairam
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 59 of 60 Previous  1 ... 31 ... 58, 59, 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Oct 18, 2023 11:07 am

18.10.2023

ஜோதிகா  பிறந்த நாள்      [1977]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 V7Wy0Tr                       பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 74UjweA

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 GdvvBur

சொந்த பேர் சாதனா. மும்பைல சைக்காலஜி படிச்சார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். நடிகர் சிவகுமாரின் மருமகள். நடிகர் சூர்யாவின் மனைவி. நடிகை நக்மா, நடிகை கார்த்திக் ஜோதிகாவின் சொந்தக்காரங்க. ஜோதிகாவின் அப்பா ஹிந்தி பட தயாரிப்பாளர். 

இவரோட குறுகுறு பார்வை, பப்லி முகம், குறும்புத்தனமான நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருக்கு. எல்லாருக்கும் செல்லமான ஜோ. கல்யாணத்துக்கு முன்னாலயே ஜோதிகாவும், சூர்யாவும் சேந்து நடிச்சாங்க. ஜோதிகா முதல் முதலா சினிமால நடிக்க ஆரம்பிச்சது 1998ல ஹிந்தி படத்துல. தமிழ்ல முதல் படம் 1999ல வாலி. குட்டியோண்டு ரோல். ப்ரபலமானது 2000ல நடிச்ச குஷி படத்துல. படம் ஆஹா ஓஹோதான். 2007ல வாய், காது இல்லாம எல்லாரும் அசந்து போற மாதிரி அட்டகாசமா நடிச்சார்.  அதாங்க, ஊமை & செவிட்டு பொண்ணா நடிச்சார். படம் மொழி. 

ஜோ குறும்படங்கள்லயும் நடிச்சிருக்கார். 2010கப்புறம் நடிப்புக்கு ஒரு ப்ரேக் கொடுத்தார். 2015ல 36 வயதினிலே படத்தில நடிக்க வந்தார். இப்ப ஹிந்தி படங்கள் உட்பட சில படங்கள்ல நடிச்சிட்ருக்கார்.

நடிகர் விக்ரம் ஜோவை லேடி கமலஹாசன்னு கூப்ட்டார். 

விருதுகள்
ஃபிலிம்ஃபேர் விருதுகள் - சிறந்த அறிமுக நடிகை & சிறந்த நடிகை - வாலி 1999, குஷி 2000
ஃபிலிம்ஃபேர் விமர்சகர் விருது - சிறந்த நடிகை - 36 வயதினிலே 2015
தினகரன் சினிமா விருதுகள் - சிறந்த நடிகை - வாலி 1999, குஷி 2000, பேரழகன் 2004, சந்திரமுகி 2005
சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது - சிறந்த நடிகை - குஷி 2000, ரிதம் 2000, பூவெல்லாம் உன் வாசம் 2001
சர்வதேச தமிழ் சினிமா விருது - சிறந்த நடிகை - தூள் 2003, காக்க காக்க 2003
தமிழ்நாடு மாநில சினிமா விருது - சிறந்த நடிகை - பேரழகன் 2004, சந்திரமுகி 2005, மொழி 2007
எடிசன் விருது - சிறந்த நடிகை - ராட்சசி 2019
ஆனந்த விகடன் சினிமா விருது - சிறந்த வில்லி - பச்சைக்கிளி முத்துச்சரம் ௨௦௦௭

இன்னும் சில விருதுகள் 

நன்றி  : விக்கி, tamil.news18, vikatan     


ஓ சோனா ஓ சோ.......னா ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூடா 
வாசல் வந்த வெண்ணிலவு அல்லவா அவள் வயதுக்கு வந்த தங்கம் அல்லவா 

வாலி                      1999

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதை தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா  

மொழி                     2007

மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும் முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும் 
அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா 

குஷி                     2000

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ சேதி கேட்ட சந்தோஷங்கோ ஹாய் ஹாய் 
பத்து கிலோ ஏறுதுங்கோ கால்கள் ரெண்டும் தரையிடம் 

தெனாலி                      2000

ரா ரா சரசுக்கு ரா ரா சிந்தக்கு சீரா தாளமே நீதிரா ஏழ்லுகோ ராகரா ஸ்வாசகம் ஸ்வாசமை ரா ரா 
சந்திரமுகி                 2005  

பேபி    பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 3838410834  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Oct 18, 2023 11:58 am

18.10.2023 

ராமராஜன் பிறந்த நாள்                [1954]     

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 7SOCCZK

நடிகர் & டைரக்ட்டர். மொதல்ல உதவி டைரக்டராயிருந்து, டைரக்ட்டரானார். சொந்த ஊர் மதுரை. ஸ்கூல் படிச்சு முடிச்சிட்டு அங்கேயுள்ள ஒரு சினிமா தியேட்டர்ல டிக்கெட் கிழிச்சு கொடுக்கிற வேல செஞ்சார். அப்புறமா அங்கயே ஃபிலிம் ஆப்பரேட்டர் வேல, கேஷியர் வேலனு ப்ரமோஷன் கெடச்சுது. ஸ்கூல் படிக்கும்போதே MGR படங்கள் அவருக்கு ரொம்ப பிடிக்கும். MGR படங்களை  சலிக்காம எத்தனை தடவ வேணுனாலும் பாத்தார். இவரோட சினிமா மோகத்தை பாத்த இவரோட நண்பர்கள் அவரை சென்னைக்கு அனுப்பி வச்சாங்க. 

நடிக்கிற ஆசைல சென்னைக்கு வந்தார். MGR மாதிரி பெரிய ஹீரோவாகணும்னு ஆச. ப்ரொடக் ஷன் பாயாக வேல செஞ்சு அப்புறமா தயாரிப்பாளர் & டைரக்ட்டர் ராம நாராயணன்கிட்ட 25 படங்களுக்கும் மேலா உதவி டைரக்ட்டரா வேல செஞ்சார். 

1977ல குட்டி குட்டி ரோல்ல நடிச்சு, ஹீரோவான முதல் படம் 1986ல நம்ம ஊரு நல்ல ஊரு. 1989ல இவர் நடிச்ச கரகாட்டக்காரன் படம்  பல ஊர்கள்ல 100 நாளுக்கு மேல, ஒரு வருஷம், 400 நாள்னு ஓடோ ஓடுன்னு ஓடுச்சு. கங்கை அமரன், ரங்கராஜன் டைரக்ட்டின படங்கள்ல நெறய நடிச்சார். ராமராஜன் டைரக்ட்டின முதல் படம் 1985ல  மண்ணுக்கேத்த பொண்ணு. 

க்ராம சம்பந்தமான, க்ராம சூழிநிலை கொண்ட கதைகளை படமாக எடுப்பதுலயும், அப்படிப்பட்ட படங்கள்ல நடிக்கிறதுலயும் இவருக்கு ரொம்ப இன்ட்ரெஸ்ட் உண்டு. அதுல ப்ரபலமும் ஆனார். கிராமத்து படம்னாலே ராமராஜன்தான் ஞாபகத்துக்கு வருவார். இந்த படங்கள் ராமராஜனின் தனி அடையாளம். இது தவிர நடிக்கும்போது டவுசர் போட்டு நடிச்சது எப்பவும் கலர்கலரா சட்டை போட்றது இவருக்கான இன்னொரு அடையாளம். 1988ல இவர் நடிச்ச எங்க ஊரு காவக்காரன் படத்தில இவருக்கு மக்கள் நாயகன் என்ற பட்டம் கெடச்சுது. 

தமிழ் சினிமால ரஜினி, கமல், விஜயகாந்த் இவங்களுக்கு ஈக்வலா தூள் கட்டி ரவுண்ட் கட்டி நடிச்சவர் ராமராஜன். மத்தவங்கள மாதிரி இவருக்கும் தனி ரசிகர் கூட்டம், ரசிகர் மன்றங்கள்  உண்டு. 

பின்னால, துணை நடிகரா நடிக்க கூப்ட்டாங்க. ஆனா ராமராஜன், நடிச்சா ஹீரோவாத்தான் நடிப்பேன்னு சொல்லிட்டார். இப்ப சாமானியன் படத்தில ஹீரோவா நடிச்சிட்ருக்கார். 
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 T0s6IM3                    பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 9etSCVl
இந்த படத்தின் கதை அவருக்கு பிடிச்சதால, அதை நம்பி இந்த படத்தில நடிக்க ஒத்துக்கிட்டார். இசைஞானி இளையராஜா ம்யூஸிக். ராமராஜனின் நிறைய படங்களுக்கு இளையராஜா ம்யூஸிக்தான். 

நடிகை நளினி ராமராஜனின் முன்னாள் மனைவி. 

நன்றி : விக்கி, dailythanthi, tamil.oneindia, cinemapettai 

பூத்த மல்லிகை காத்து நிக்கிது தன்னாலே 
காதல் வந்துடன் பேச எண்ணுது கண்ணாலே 

நம்ம ஊரு நல்ல ஊரு                1986

வட்டி எடுத்தே சோத்த போட்டுட்டே தண்ணி ஊத்துன உப்ப போட்டுட்டே 
தொட்டுகிற ஒண்ணும் இல்லயே நா உன்ன கொஞ்சம் தொட்டுகிறவா 

கிராமத்து மின்னல்           1987

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு உன்ன மாலையிட தேடி வரும் நாளும் எந்த நாளு 

காரகத்தைக்காரன்               1989

தாலாட்டு கேக்காத பேர் இங்கு யாரு
தாயாரின் தாலாட்டுபோல் வேறு ஏது 
பாட்டு நான் அடிமை அந்த பாட்டுக்கு நான் அடிமை 

பாட்டுக்கு நான் அடிமை                      1990
    

பேபி     சூப்பருங்க  மகிழ்ச்சி   சூப்பருங்க  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 27, 2023 11:14 am

27.10.2023

26.10.2023   -    நடிகை அசின் பிறந்த நாள்     [1985]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 PocJmSO

கேரளாக்காரர். நடிகை & பரதநாட்டிய கலைஞர். அம்மா டாக்ட்டர். அப்பா ரிட்டையர் ஆன சிபிஐ அதிகாரி. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி  படங்கள்ல நடிச்சிருக்கார். ஆரம்பத்தில விளம்பரங்கள்ல நடிச்சார். முதல்ல நடிக்க ஆரம்பிச்சது 2001ல மலையாளத்துல. குட்டி ரோல். அப்புறம் படிக்க போயிட்டார். 2003ல  தெலுங்குல  நடிக்க வந்தார். தமிழ்ல முதல் படம் M.குமரன் SON OF MAHALAKSHMI 2004. கேரளத்து பொண்ணாவே நடிச்சிருந்தார். படம் ஆஹா ஓஹோ. 2005ல நடிச்ச கஜினி அசினுக்கு ஒரு திருப்புமுனையாக இருந்துச்சு. அஜித், விஜய், சூர்யா, ஜெயம் ரவிகூடலாம் நடிச்சிருக்கார். 2015க்கப்புறம் நடிக்கல.   

வெளிநாடுகளுக்கு ஷூட்டிங் போனப்போ அப்பாவையும் கூட்டிட்டு போனார். அசின் தமிழ், தெலுங்கு, மலையாளம் சமஸ்க்ருதம், இங்கிலீஷ், ஹிந்தி, ஃப்ரென்ச் மொழிகள்ல சரளமா பேசுவார். கண்டதையும் சாப்டக்கூடாதுனு பாலிஸி அவருக்கு. அதனாலதான் ஒல்லியாவே இருந்தார்போல.

விஜய்கூட போக்கிரி படத்ல நடிச்சிட்ருக்கும்போது அசின் அடிக்கடி விஜய் வீட்டுக்கு போனார். விஜயின் அம்மா விஜய்க்கு பிரியாணி ரொம்ப பிடிக்கும்னு சமச்சார். அசின்  அங்க பிரியாணி சாப்ட்டு அவரும் பிரியாணிக்கு அடிமையாயிட்டார். பிரியாணி சாப்ட்றதுக்காகவே விஜய் வீட்டுக்கு போனார். இதை அசின் ஒரு பேட்டீல சொன்னார். 

சமூக சேவைகளையும் செஞ்சார். ரத்த தான முகாமுக்கு போயி ரத்ததானம் செஞ்சார். உடல் உறுப்புகள் தானத்துக்கு ரெஜிஸ்ட்டர் செஞ்சிருக்கார். 

விருதுகள்
ஃபிலிம்ஃபேர் விருதுகள் - சிறந்த நடிகை - தமிழ் கஜினி 2005 & சிறந்த அறிமுக நடிகை - ஹிந்தி கஜினி 2008, ஒரு தெலுங்கு படம் 
சர்வதேச இந்திய சினிமா அகாடமி விருது - ஹிந்தி கஜினி 2008
சர்வதேச தமிழ் சினிமா விருது - சிறந்த நடிகை - தசாவதாரம் 2008 
ஸ்க்ரீன் விருது - சிறந்த நடிகை - கஜினி 2008  
தென்னிந்திய சர்வதேச சினிமா விருது - சிறந்த நடிகை - காவலன் 2011
இன்னும் சில விருதுகள் 

நன்றி  : விக்கி, tamil.filmibeat, samayam, asianetnews, touringtalkies, thamizhstars.blogspot, dinamani


அய்யோ அய்யோ உன் கண்கள் அய்யய்யோ 
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே அய்யய்யோ 
M.குமரன் SON OF MAHALAKSHMI                  2004

ஒரு மாலை இளவெயில் நேரம் அழகான இலை உதிா் காலம் 
சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன் 

கஜினி                      2005

பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பூவே ஓடாதே 
காதல் தேனை சாப்பிடும்போது பேசக்கூடாதே

காவலன்                        2011


பேபி         பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 3838410834  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 27, 2023 12:54 pm

27.10.2023 

26.10.2023      -    மனோ பிறந்த நாள்     [1965]     
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 9YC1jWY    பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 UbQ4WvP

பின்னணி பாடகர், டப்பிங் குரல் கொடுப்பவர். ஆந்திரால பிறந்தார். அப்பா விஜயவாடா ரேடியோ நிலையத்துல வேல செஞ்சார். அம்மா மேடை நடிகை. அதனால சின்ன வயசிலிருந்தே மனோவுக்கு பாட்றதுலயும், நடிக்கிறதுலயும் இன்ட்ரெஸ்ட் வந்துச்சு. சின்ன வயசிலேயே அப்பாகிட்ட இருந்து  ஆர்மோனியம், ப்யானோ வாசிக்க கத்துக்கிட்டார். 

நடிக்க ஆசப்பட்டுதான்  சென்னைக்கு வந்தார். ஒரு ஹோட்டல்ல 30 ருவா சம்பளத்துக்கு பாடிட்டு இருந்தார். அதே சமயத்தில நடிக்கவும் சான்ஸ் தேடினார். எப்டியோ தெலுங்கு படத்ல நடிக்க சான்ஸ் கெடச்சுது. அவருக்கு பின்னணி பாட SPBக்கு சொல்லி வச்சிருந்தாங்க. ஆனா அந்த சமயத்தில SPB வரமுடீல. அதனால மனோ பாட வேண்டியதாயிருச்சு. அப்டி பாடித்தான் மனோ SPBயின் அசிஸ்டன்ட் ஆனார். 

SPB வராததால் அந்த படத்துக்கு ம்யூஸிக் போட்ட MS விஸ்வநாதன்கிட்ட எனக்கு கொஞ்சம் பாட தெரியும்னு மனோ சொன்னார். விஸ்வநாதனும் பாட வேண்டிய பாட்டை சொல்லி கொடுத்து மனோவை பாட சொன்னார். பாடியத கேட்டு அசந்து போயி தனக்கு உதவியாளராக வச்சுக்கிட்டார். 1982ல தெலுங்கு ம்யூஸிக் டைரக்ட்டர் சக்கரவர்த்திகிட்ட  வேல செஞ்சார். மனோ இவர்கிட்டயும் ரெண்டு வருஷம் இருந்தார். இதை மனோ ஒரு பேட்டீல சொன்னது. 

மனோ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஒரியா படங்கள்ல பாடியிருக்கார். TV ம்யூஸிக் நிகழ்ச்சிகள்ல ஜட்ஜாவும், கெஸ்ட்டாவும் இருந்திருக்கார். 

ஆரம்பத்தில பல மேடை நாடகங்கள்ல நடிச்சார். மேடை கச்சேரிகள்ல பாடியிருக்கார். பிறகு தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார்.
 
தமிழ்ல பாடிய முதல் பாட்டு 1986ல பூவிழி வாசலிலே படத்தில இசைஞானி ம்யூஸிக்ல "அண்ணே அண்ணே நீ என்னா சொன்னே" பாட்டு. ப்ரபலமானது 1991ல சின்னத்தம்பி படத்தில "தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே" பாட்டு பாடி. அதுக்கப்புறம் ஏகப்பட்ட பாட்டு ஆஹா ஓஹோன்னு சொல்றமாதிரியான பாட்டுக்கள்தான். இவரோட குரல் SPB குரலோடு ஒத்து போகுதுன்னு விமர்சனம்கூட வந்துச்சு. அந்த விமர்சனத்தையே தன்னோட முன்னேற்றமாக மனோ நெனச்சார். இளையராஜா மியூஸிக்லதான் நிறைய பாடியிருக்கார். இளையராஜாவின் மனம் கவர்ந்த பின்னணி பாடகர் மனோ. 

ஹிந்தி ப்ரபல ம்யூஸிக் டைரக்ட்டர் RD பர்மன் பாட்டுக்கள் மாதிரி வித்தியாசமான குரல்ல பாடி நல்ல பேர் வாங்கினார். அப்டி பாடிய பாடல்களுக்கு பெரிய சபாஷ் கெடச்சுது. இந்த பாட்டுக்கள் மாதிரியே வேற மொழிகள்லயும் பாடி பேர் வாங்கினார். இதே முறைல வித்யாசாகர், சிற்பி போன்ற ம்யூஸிக் டைரக்டர்களும் மனோவை பாட வச்சாங்க. 

ரஜினி தெலுங்குல நடிச்ச படங்களுக்கெல்லாம் மனோதான் டப்பிங். ரஜினிக்கு மனோவின் குரல் கனகச்சிதமா பொருந்தறதா சொன்னாங்க. கமலுக்கும் தெலுங்கு படங்கள்ல மனோ டப்பிங் பேசினார். தெலுங்கு படத்துக்கு ம்யூஸிக் போட்டிருக்கார், தயாரிச்சிருக்கார். கஜல் வகை பாட்டுக்களை விரும்பி கேப்பார். 
மனோ நடிச்ச முதல் தமிழ் படம் 1992ல கமல்கூட  சிங்காரவேலன். இந்த வருஷம் ரிலீஸ் ஆன மிர்ச்சி சிவா ஹீரோவா நடிச்ச சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படத்தில மனோ நடிச்சிருக்கார். மிர்ச்சி சிவா பேசும்போது, "26000 பாட்டு பாடிய மனோ தமிழ் சினிமாவின்  சொத்து"னு சொன்னார். 

ரிச்மாண்ட் கேப்ரியேல் பல்கலைக்கழகம் மனோவுக்கு கௌரவ டாக்ட்டர் பட்டம் கொடுத்துச்சு.  
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 F5No1lx

விருதுகள்    :
கலைமாமணி விருது 
தமிழ்நாடு மாநில சினிமா விருது - சிறந்த பாடகர் - சின்னத்தம்பி 1991 [தூளியிலே ஆட வந்த] & இன்னும் பல படங்களுக்கு 
ஃபிலிம்ஃபேர் விருது - தெலுங்கு படத்துக்கு 

இந்தியால பல ப்ரபல கலாச்சார சங்கங்கள் விருது கொடுத்துச்சு. 
கண்டசாலா விருது  & இன்னும் சில விருதுகள் 

நன்றி : விக்கி, nakkheeran, dailythanthi, tamil.oneindia, tamil.asianetnews


மனோ வித்தியாசமான குரல்ல முதல் முதலா பாட ட்ரை செஞ்ச பாட்டு 

வேதாளம் வந்திருக்குது வந்து தேவாரம் பாடி நிக்குது 
போயா ஹோய்ஹோய் வாயா இங்கே என்னோடு மல்லு கட்டு வாயா

சூரசம்ஹாரம்                    1988

இந்த பாட்டு மனோ பாட வந்தப்போ, கொஞ்சம் வித்தியாசமான குரல்ல பாடுங்கன்னு  AR ரஹ்மான் சொன்னதனால மனோ இப்டி பாடினார்.
 
முக்காலா முக்காபலா லைலா ஓ லைலா 
முக்காபுலா சொக்காமலா லைலா ஓ லைலா

காதலன்                            1994

வீட்டுக்கு விளக்கு ஏற்றி வைக்க வந்த பெண்பிள்ளையே பெண்பிள்ளையே 
பொறந்த வீடா புகுந்த வீடா                  1993

தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே 
ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே 
சின்ன தம்பி                          1991

வாலாட்டும் ஊர்க்குருவி சின்ன தாலாட்டு கேட்கிறது
தாலாட்டு கேட்கையிலே கொஞ்சம் வாலாட்ட பார்க்கிறது

என்னை விட்டுப் போகாதே                     1988


பேபி        மகிழ்ச்சி அருமையிருக்கு மகிழ்ச்சி  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Nov 08, 2023 11:55 pm

08.11.2023

07.11.2023                      கமல்ஹாசன் பிறந்த நாள்             1954

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 1mhIV2f

காதல் இளவரசன். நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், கதை, திரைக்கதை எழுத்தாளர், சினிமா பட விநியோகஸ்த்தர், டான்ஸ் மாஸ்ட்டர் & டைரக்ட்டர். அடே..........ங்கப்பா, சினிமால எவ்ளோ அவதாரங்களை எடுத்திருக்கார் !!! வித்தியாசமான ரோல்கள்ல நடிச்சு பேர் வாங்கியவர். 2019ல சினிமால 60 வருஷம் வேல செஞ்சவங்கள்ல இவரும் ஒருத்தர். 

சாருஹாசன், சந்திரஹாசன் ரெண்டு பேரும் கமலின் வக்கீல் அண்ணன்கள். சாருஹாசன் நடிகர், டைரக்ட்டர். அப்பா ஆசப்பட்டார்னு கமலுக்கு சினிமால நடிக்கிறதுலயும், டான்ஸ்லயும் ஒரு ஈடுபாடு வந்துச்சு. பரதம், கதகளி கத்துகிட்டார். 

குழந்தை நட்சத்திரம். AV மெய்யப்பன் அவர்களின் மகன் சரவணன் சிபாரிசுல 6 வயசுல களத்தூர் கண்ணம்மா படத்திலயிருந்து 5 படங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சார். களத்தூர் கண்ணம்மா படத்தில நடிச்சதுக்கு ஜனாதிபதி தங்க மெடல் வாங்கினார். வாலிபன் ஆன பிறகு நடிச்ச முதல் படம் 1973ல அரங்கேற்றம். 

இந்த படம் பேர் கமலுக்கு பொருத்தமா இருக்குல? 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, வங்காள படங்கள்ல நடிச்சார். வெள்ளி விழா கொண்டாடிய படங்கள் உண்டு. ஹீரோவா முதல்ல மலையாள படத்தில நடிக்க ஆரம்பிச்சார். இவரோட சினிமா தயாரிப்பு கம்பேனி பேரு ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்ட்டர்நேஷனல். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, இங்கிலீஷ் மொழிகள்ல சூப்பரா பேசுவார். இன்னும் வேற சில மொழிகளையும் கத்து வச்சிருக்கார். "கமல் எனும் கலைஞனுக்குள் இருக்கும் நடிப்பாற்றலை கண்டுபிடிச்சவர் டைரக்ட்டர் K பாலசந்தர்தான்"னு கமல் பல மேடைகள்ல  சொல்லியிருக்கார். 

1980கள்ல மய்யம் என்ற பத்திரிகைய தன் ரசிகர்கள் மன்றம் மூலமா ஆரம்பிச்சு நடத்தினார். சினிமா, போதை விழிப்புணர்வு போன்ற பல தலைப்புகள்ல கட்டுரைகள் எழுதி 'தேடி தீர்ப்போம் வா'னு புத்தகம் வெளியிட்டார். தொடர்கதை, தொடர்கள், கவிதை எழுதுறது, புத்தகம் வாசிப்பது கமலுக்கு ரொம்ப பிடிக்கும். தன்னோட ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமா மாத்தி நிறைய பொது நல வேலைகளை செஞ்சார். இவர் சினிமா உலகத்தில 64 வருஷம் ஆனதை வச்சு சினிமாக்காரங்க, ரசிகர்கள் வாழ்த்து சொல்லி,  'கமல்ஹாசன் 64'னு போஸ்டர் இணைய தளங்கள்ல வைரலாயிருக்கு. 
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Ujs3uw5

டைரக்ட்டர் மணிரத்தினமும், கமலும் சேந்த படம் நாயகன். இப்போ 35 வருஷத்துக்கப்புறம் அந்த ரெண்டு பேரும் ஜோடி போட்டிருக்காங்க. படம் பேர் KH234. கொஞ்ச நாளக்கி முன்னால இந்த படத்தின் துவக்க விழா நடந்துச்சு. ஷூட்டிங் தொடக்கிட்டாங்க. அவர் பிறந்த நாளான இன்னிக்கி அந்த படத்தின் விளம்பரத்த ரிலீஸ் செஞ்சிருக்காங்க. 
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 W1jywv8


விருதுகள்
கலைமாமணி 1980, பத்மஸ்ரீ 1990, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் விருது 1999, பத்மபூஷண் 2014, செவாலியே விருது 2016, கௌரவ விருது 2000 & 2010 - மேற்கு வங்கம் & கேரளா அரசு கொடுத்துச்சு
NTR தேசிய விருது 2014, கௌரவ டாக்ட்டர் பட்டங்கள் 2005 & ௨௦௧௯
ஆனந்த விகடன் சினிமா விருதுகள்    :
சிறந்த நடிகர் & சிறந்த கதாசிரியர் - தசாவதாரம் 2008
சிறந்த நடிகர் - விக்ரம் 2022 & SS வாசன் வாழ்நாள் சாதனையாளர் விருது 2016
சினிமா எக்ஸ்ப்ரஸ் விருதுகள்    :
சிறந்த நடிகர் - மூன்றாம் பிறை 1982, நாயகன் 1987, மைக்கேல் மதன காம ராஜன் 1990, குணா 1991, இந்தியன் 1996 
சிறந்த தயாரிப்பாளர் விருதுகள் : அபூர்வ சகோதரர்கள் 1989 & தேவர் மகன் 1992
சிறந்த படம் - குருதிப்புனல் 1995 - திரைக்கதை, வசனம் & இணை தயாரிப்பு 
சினிமா விசிறிகள் சங்கம் விருது    :
சிறந்த நடிகர் - வேட்டையாடு விளையாடு 2006 & தசாவதாரம் 2008
தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள்   
சிறந்த நடிகர்  - அபூர்வ ராகங்கள் 1975, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது 1976, 16 வயதினிலே 1977, சிகப்பு ரோஜாக்கள் 1978, ராஜ பார்வை 1981, குணா 1991, தேவர் மகன் 1992, குருதிப்புனல் 1995, இந்தியன் 1996, ஹேராம் 2000 
தேசிய விருதுகள்   
சிறந்த நடிகர் - மூன்றாம் பிறை 1982, நாயகன் 1987, இந்தியன் 1996
சிறந்த தமிழ் படம் - தேவர் மகன் 1992
ராஷ்ட்ரபதி விருது  :
சிறந்த குழந்தை நட்சத்திரம் - களத்தூர் கண்ணம்மா 1960
தமிழ்நாடு மாநில விருதுகள்    :
சிறந்த நடிகர் - 16 வயதினிலே, வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், இந்தியன், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம் 
சிறந்த படம் 2வது இடம் - தேவர் மகன் 

இன்னும் ஏ.....................கப்பட்ட விருதுகளும், பரிந்துரைகளும். 

நன்றி  : விக்கி,  vikatan, indiaglitz, nakkheeran, galatta, 

ஜானகிகூட கமல் பாடி நடிச்ச பாட்டு 
நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை  
பறக்கும் அது கலக்கும் தன் உறவை 
சிகப்பு ரோஜாக்கள்             1978  

ஒன்னவிட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல 
ஒன்னவிட ஒரு உறவுன்னு சொல்லிகிட யாருமில்ல யாருமில்ல 

விருமாண்டி                    2004

கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை   

அவள் ஒரு தொடர்கதை              1974    


பேபி         அருமையிருக்கு  மகிழ்ச்சி   

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 04, 2023 3:03 pm

04.12.2023

கண்டசாலா அவர்கள் பிறந்த நாள்    [1922 - 1974]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 2gHHLSD                   பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 QaPpb8e

பின்னணி பாடகர், ம்யூஸிக் டைரக்ட்டர். முழு பேர் கண்டசாலா வெங்கடேஸ்வரராவ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, ஹிந்தி படங்கள்ல பாடினார். சில படங்களுக்கு ம்யூஸிக்கும் போட்டார். சுமார் 100 படங்களுக்கு மேலா ம்யூஸிக் போட்டார். 1973 வரை தமிழ் படங்கள்ல பாடினார். 

அப்பா பாடகர். மிருதங்கமும் வாசிச்சார். கண்டசாலா அப்பாகூட நிகழ்ச்சிகளுக்கு போயி கலந்துக்கிட்டார். சின்ன வயசில அப்பா மிருதங்கம் வாசிக்க, தாளத்துக்கு தகுந்தாப்பல ஆடினார்.

அப்பாவுக்கப்புறம் தாய்மாமன்கிட்ட வளந்தார். நல்ல இசை கலைஞனாக வரணும்னு கண்டசாலாவுக்கு பெரிய ஆசை. சொந்தக்காரங்களுக்கு பிடிக்காட்டியும் விஜயநகரத்தில ம்யூஸிக் காலேஜ்ல கண்டசாலா ம்யூஸிக் கத்துகிட்டு, 'சங்கீத வித்வான்' பட்டம் வாங்கினார். 1942ல வெள்ளையனே வெளியேறு இயக்கத்தல கலந்துக்கிட்டு ஒண்ட்ர வருஷம் ஜெயில்ல இருந்தார். ரிலீஸ் ஆன பிறகு சினிமால பாட ட்ரை செஞ்சார். 

ஆரம்பத்தில ஆல் இண்டியா ரேடியோல பாடினார். அப்புறமா ஹெச் எம் வி ரெக்கார்ட் கம்பெனிக்காக சில பாட்டுக்கள் பாடினார். 1944ல சீதாராம ஜனனம் படத்ல சின்ன ரோல்ல நடிச்சார். கோரஸ் பாட்ற சான்சும் கெடச்சுது. அப்போ ம்யூஸிக் டைரக்ட்டர் CR சுப்பாராமன் போன்ற பிரபலங்களின் பழக்கம் ஏற்பட்டுச்சு. 1945ல தெலுங்கு சினிமால பின்னணி பாட ஆரம்பிச்சார். தெலுங்கு படங்கள்ல நிறைய முன்னணி நடிகர்களுக்கு பின்னணி பாடினார். தெலுங்கு சினிமா இசை உலகத்துல முடிசூடா மன்னனாக இருந்தார். ப்ரபலமானது 1951ல பாதாள பைரவி படத்துக்கு ம்யூஸிக் போட்டு, அதுல சில பாட்டு பாடி.  லக்ஸ்மம்மா படத்துக்கு முதல் முதலா ம்யூஸிக் போட்டார். 

வெளிநாடுகள்ல பல இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். ஐ நா சபைலகூட பாட்ற சான்ஸ் கெடச்சுது. அமெரிக்கால அவரை கௌரவிக்க நடந்த நிகழ்ச்சியில அவருக்கு தங்கத்திலான இசைத்தட்டு ஒன்றை பரிசா கொடுக்கப்பட்டுச்சு. கண்டசாலா அத அமெரிக்கால ஒரு கோயிலுக்கு தானமா கொடுத்துட்டார்.  ம்யூஸிக் டைரக்ட்டர் MB ஸ்ரீனிவாஸ்கூட சேந்து சினிமா இசை கலைஞர்களின் சங்கம் ஆரம்பிக்க காரணமாயிருந்து, அந்த சங்கத்துக்கு முதல் தலைவராவும் ஆனார். கனத்த சாரீரம் இருந்தாலும் தன் கவர்ச்சி குரலால ரசிகர்களை கட்டிப்போட்டார். கண்டசாலாவுக்கு பிடிச்ச பின்னணி பாடகர்கள் பாலமுரளிகிருஷ்ணா & ஜேசுதாஸ்னு அவரே சொன்னார். 

2003ல கண்டசாலா நினைவாக ஸ்டாம்ப் ரிலீஸ் செஞ்சாங்க. ஆந்திரால அவர் பிறந்த நாள், நினைவு நாள் ரெண்டு நாள்லயும் ரேடியோ, TVல அவர் பாடிய பாட்டுக்கள் போட்டுட்டு இருந்தாங்க. 05.12.2022ல இவரோட நூற்றாண்டு விழாவை சென்னைல கொண்டாடப்பட்டுச்சு. இவரோட சிலை சில இடங்கள்ல இருக்கு.  

கண்டசாலா நினைவாக இவங்களுக்கெல்லாம் விருது கொடுத்தாங்க :
ஜேசுதாஸ் 2005, MS விஸ்வநாதன் - 2006, S ஜானகி - 2007, P சுசீலா - 2007, மனோ - 2008, இன்னும் சிலர். 

இன்னும் இவரை பற்றி இருக்கு. 

விருதுகள் :  
பத்மஸ்ரீ 1970, ஒவ்வொரு வருஷமும் 30 வருஷங்களா சிறந்த பாடகருக்கான விருது 

நன்றி : விக்கி, hindutamil, thamizhstars, தமிழ்ஹெரிட்டேஜ்                  

ம்யூஸிக் போட்டு பாடியவர் கண்டசாலா 
அமைதியில்லாதென் மனமே என் மனமே 
அனுதினம் கண்முன் கனவேபோலே மனதே ப்ரேமை மந்திரத்தாலே 

பாதாள பைரவி                    1951

கோவிந்தராஜூலு நாயுடு கூட ம்யூஸிக் போட்டு பாடியவர் கண்டசாலா 
வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு 

கள்வனின் காதலி                    1955

முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக 
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக 

அன்புச் சகோதரர்கள்              1973

நீதானா என்னை நினைத்தது நீதானா என்னை அழைத்தது 
நீதானா என் இதயத்திலே நிலை தடுமாறிட உதவியது 

மாயா பஜார்                        1957


பேபி        மகிழ்ச்சி சூப்பருங்க

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 08, 2023 3:58 pm

08.12.2023

06.12.2023    -    சாவித்திரி அவர்கள் பிறந்த நாள்  [1936 - 1981]         

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Jhm7gVW                பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 WGJQx7E

நடிகையர் திலகம். மகா நடிகை. சொந்த பேர் சசிகலாவாணி. இடது கை பழக்கம் இருந்துச்சு. தெலுங்குக்காரர். ஆனா தமிழ் பொண்ணாவே  வளந்தார். காதல் மன்னன் ஜெமினி கணேசனின் மனைவி. ம்யூஸிக், டான்ஸ் கத்துகிட்டார். சின்ன வயசில மேடை நாடகங்கள்ல  நடிச்சார். சினிமால நடிக்க ஆசப்பட்டு சென்னைக்கு வந்து, சின்ன சின்ன ரோல்ல நடிச்சார். 

நடிகை, டைரக்ட்டர், தயாரிப்பாளர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். இந்த நடிகையர் திலகத்தை பற்றி நடிகர் திலகம் சொன்னது, "சகோதரி சாவித்திரிகூட நா நடிக்கும்போது ஜாக்கிரதையா இருப்பேன். நாங்க ரெண்டு பேரும் நடிக்கும்போது எங்களுக்கு நடுவே நடிப்பு போட்டி இருக்கும்".  

சாவித்திரி நடிச்ச முதல் படம் 1951ல பாதாள பைரவி, தமிழும், தெலுங்கும். ஒரு டான்ஸ் மட்டும் ஆடி நடிச்சார். முக்கியமான ரோல்ல நடிச்ச முதல் தமிழ் படம் 1952ல கல்யாணம் பண்ணிப்பார். இவரோட குணத்தையும், நடிப்பையும் கவனிச்ச கவிஞர் கண்ணதாசன் இவருக்குன்னே ஒரு பாட்டு எழுதினார். 1964ல கை கொடுத்த தெய்வம் படத்ல எழுதினார்ல, 
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ  உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ 

பாலினும் வெண்மை பனியிலும் வெண்மை  
அதுமாதிரிதான் அவர் வாழ்ந்தார். 

ஜெமினி நிறுவனம் தம் அடுத்த படத்துக்கு நடிகர்களை செலெக்ட் செய்றாங்கன்னு சாவித்திரியும் போனார். செலெக்ட் ஆகல. அங்க இருந்த ஒருத்தர், "ஏம்மா நீல்லாம் எதுக்கு நடிக்க வந்த?"னு கேட்டார். அவருக்கும் சாவித்திரிக்கும் அப்ப தெரீல, அவங்க ரெண்டு பேரும் பின்னால கல்யாணம் செஞ்சுக்க போறாங்கன்னு. ஆமாங்க சாவித்திரியை ரிஜெக்ட் செஞ்ச அந்த நிர்வாகி  சாட்சாத் ஜெமினி கணேசன்தான். 

LV ப்ரசாத் டைரக்ட்டின ஒரு படத்ல சாவித்திரி செகண்ட் ஹீரோயின். ரெண்டு நாள் ஷூட்டிங்க்கு அப்புறம் டைரக்ட்டருக்கும், ஹீரோயினுக்கும் முட்டிகிச்சு. அவ்ளோதான் சாவித்திரி ஹீரோயின் ஆயிட்டார். அடிச்சுது பாருங்க லக்கு. மத்தவங்க கூட டைரக்ட்டர்கிட்ட சொன்னாங்க, "எதாயிருந்தாலும் கொஞ்சம் யோசிச்சு  செஞ்சிருக்கலாமே"ன்ருக்காங்க. டைரக்ட்டர் கேக்கலியே. சாவித்திரிதான் ஹீரோயின். படம் தெரீமோ, மிஸ்ஸியம்மா 1955. சாவித்திரி இந்த படத்ல காதல், குறும்பு, கோபம், தாபம்னு நடிப்பை தெறிக்கவிட்டார். LV ப்ரசாத் அசந்துபோனார். ரொம்ப சந்தோஷப்பட்டார்.  அடுத்த 20 வருஷங்கள் சாவித்திரியின் வீட்ல எப்பவுமே தயாரிப்பாளர்கள் நெறஞ்சிருந்தாங்க. ப்ரபல ஹீரோக்களே சாவித்திரியை ஹீரோயினா போட தயாரிப்பாளர்கள்கிட்ட சொன்னாங்கன்னா பாத்துக்கோங்களேன். 

நடிக்காம பாதீல போன அந்த ஹீரோயினுக்கு LV ப்ரசாத் மனசுல நன்றி சொன்னார்னா, அந்த அளவுக்கு சாவித்திரி நடிச்சு புகழின் உச்சிக்கு போனார். ஒரே நாள்ல கெடச்ச அந்த புகழை தக்கவும் வச்சுக்கிட்டார். இந்த படம் முடியுற சமயத்துல ஜெமினி கணேசன் மேல லவ்வு வந்துச்சு, ஜெமினிக்கு ஏற்கனவே கல்யாணமானது தெரிஞ்சும். காதலுக்குத்தான் கண்ணில்லியே. படம் ரிலீஸ் ஆன கொஞ்ச மாசங்கள்ல ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க. 

சாவித்திரியின் நெருங்கிய தோழிகள் "உனக்கு இருக்கும் திறமைக்கு நீ படத்த தயாரிக்கலாமே"னு தூபம் போட்டாங்க. சாவித்திரியும் அவங்க பேச்சை கேட்டு சொந்தமா படம் எடுத்ததால ஏகப்பட்ட நஷ்ட்டம். ஆனா அந்த வறுமைல இருந்தபோதுகூட தன் ரசிகர் ஒருவருக்கு அவரோட அவசர தேவைக்காக தான் வாங்கிய ஷீல்டுக்குகளையெல்லாம் வித்து அவருக்கு உதவினார். நிறைய விலையுள்ள தன்னோட ஒரு பட்டு சேலைய வித்து ட்ரைவரின் மகள் கல்யாணத்துக்கு உதவினார். இதே மாதிரி பலருக்கு பலவகையிலும் உதவி செஞ்சார். அவ்ளோ தயாள குணம். அப்போ இருந்த ஹீரோயின்கள்ல முதல் முதலா கார் வாங்கியவரும், வீட்ல நீச்சல் குளம் வச்சிருந்தவரும் சாவித்திரிதான். 

2011ல இவர் நினைவாக இந்திய அரசு ஸ்டாம்ப் வெளியிட்டுச்சு.
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 KfW4ohw

1965ல ஒரு சமூகநல அமைப்பு ஏற்பாடு செஞ்ச சிறந்த ஜோடி தேர்வு நிகழ்ச்சியில சாவித்திரி - ஜெமினி கணேசன் தம்பதியர்  முதல் பரிசை தட்டினாங்க. சாவித்திரியின் வாழ்க்கையை பற்றிய சினிமா 2018ல மகாநதி பேர்ல தமிழ், தெலுங்குல ரிலீஸ் ஆச்சு. 

இன்னும் இவரை பற்றி நிறைய இருக்கு. 

விருதுகள் :
கலைமாமணி விருது, நந்தி விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள் 

நன்றி : விக்கி, nakkheeran, behindtalkies, cinema.vikatan, 


சாவித்திரி நடிச்ச முதல் படம் பாதாள பைரவி படத்ல டான்ஸ்க்கு மட்டும் 
நான் மாட்டேன் நீயும் பலே ஆளுதான் நீ கொக்கரிக்க கோழியல்ல நான் 

பாதாள பைரவி              1951

கொல்லிமலை சாரலம்மா குளிரடிக்கும் பூமியம்மா மங்கலமாய் அங்கு ஒரு மானிருந்தது
அந்த மானோடு ஆண் மானும் வாழ்ந்திருந்தது 

ஜக்கம்மா                  1973

சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னை தடவிகொண்டோடுத்து தென்னங்காத்து 

பிராப்தம்             1972

தயாரிப்பு, திரைக்கதை, டைரக் ஷன் & குட்டி ரோல்ல [டாக்ட்டர்] நடிப்பு - சாவித்திரி 
ஓ தர்மத்தின் தலைவனே உன் தனிமையை பாரடா 
உரிமை என்னும் விளக்கை நீ ஒளித்து வைத்ததேனடா 

குழந்தை உள்ளம்           1969 


பேபி     பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 3838410834  மகிழ்ச்சி  சூப்பருங்க      

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 10, 2023 12:38 pm

10.12.2023

09.12.2023   -   V தட்சிணாமூர்த்தி அவர்கள் பிறந்த நாள்   [1919 - 2013]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 JS1sBoi

மலையாள ம்யூஸிக் டைரக்ட்டர் & கர்னாடக இசை கலைஞர். மலையாள சினிமால இவரை சுவாமினு சொல்லுவாங்க. அங்க அவரை பிதாமகர்னு போற்றினாங்க. தாத்தா, அம்மா, தாய்மாமன்கள் எல்லாருமே இசை கலைஞர்கள். சின்ன வயசிலேயே தியாகராஜரின் கீர்த்தனைகளை அம்மா சொல்லிக்குடுத்தாங்க. சுவாமி அதைல்லாம் ஈஸியா கத்துக்கிட்டார். 13 வயசில  கோயில்ல  பாட ஆரம்பிச்சார். ஸ்கூல் படிப்பு முடிஞ்சதும் ம்யூஸிக்தான் தன் எதிர்காலமா நெனச்சார். கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். ஆரம்பத்துல  கேரளால ஏகப்பட்ட கர்னாடக சங்கீத கச்சேரிகள்ல  பாடினார். சென்னைக்கு வந்தபோது, ஆல் இண்டியா ரேடியோல 4 வருஷம் பாடினார். துபாய், அபுதாபி, குவைத், பெஹ்ரைன் போன்ற இடங்கள்லயும் பாடினார். 

ம்யூஸிக் போட ஆரம்பிச்சது 1948ல மலையாள படத்துக்கு. மலையாள சினிமால கர்னாடக சங்கீதத்தை கொண்டு வந்தவர். இசையரசி P சுசீலா, ஜேசுதாஸ், இளையராஜா,  இவங்களுக்கெல்லாம் சுவாமி குருவாக இருந்தவர். P சுசீலாவை மலையாள படத்துல அறிமுகப்படுத்தியவர். தமிழ்ல அறிமுகமானது 1976ல ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது படத்துக்கு ம்யூஸிக் போட்டு. 

ப்ரபல பின்னணி பாடகி P லீலாவுக்கு கர்னாடக சங்கீதம் சொல்லி கொடுத்தார். லீலாவின் அப்பா மூலமா சுவாமிக்கு சினிமால சான்ஸ் கெடச்சுது. AR ரஹ்மானின் தந்தை RK சேகரை சினிமால அறிமுகப்படுத்தியவர் சுவாமி. AR ரஹ்மான் சின்ன வயசுல சுவாமியின் மியூஸிக்ல கீபோர்ட் & இளையராஜா கிட்டார் வாசிச்சிருக்காங்க. இளையராஜாவின் மகள் பவதாரிணி கர்னாடக இசை இவரிடம் கத்துக்கிட்டார். பழம்பெரும் பாடகிகள் வசந்தகோகிலம், ML வசந்தகுமாரி, கல்யாணிமேனன் இவங்களுக்கும் சுவாமிதான் குரு. 

கேரள அரசு சுவாமி நினைவாக ஒரு மண்டபம் அமச்சிருக்கு.  

விருதுகள் :
சிறந்த ம்யூஸிக் டைரக்ட்டருக்கான கேரள மாநிலத்திலிருந்து ஏகப்பட்ட விருதுகள்,
மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்திலிருந்து கௌரவ டாக்ட்டர் பட்டம்

நன்றி : விக்கி,  cinemapluz, dinamani, hindutamil, radiospathy
 
கன்னுகுட்டி செல்லம்மா கள்ளமற்ற பொன்னம்மா 
நல்ல வழி சொல்லம்மா நானும் வாரேன் நில்லம்மா 

நந்தா என் நிலா              1977

சத்தம் செய்யாதே மங்கையின் காதலன் சங்கதி அறிந்து சந்திக்க வந்துவிட்டான் 

ஜீவநாடி              1970

ஆண்டியை அரசனாக்கிடுவேன் அரசனை ஆண்டியாக்கிடுவேன் 

சர்வாதிகாரி               1951


பேபி       அருமையிருக்கு  மகிழ்ச்சி    

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 10, 2023 9:53 pm

10.12.2023

   சுஜாதா பிறந்த நாள்   [1952 - 2011] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 R6ZVqll

நடிகை. சொந்த பேர் விஜயலட்சுமி. சிலோன்ல பிறந்தார். அப்பா காலேஜ்ல டீச்சரா வேல செஞ்சார். சுஜாதா சிலோன்ல பத்தாப்பு வரை படிச்சார். ஸ்கூல் மேடை நிகழ்ச்சி நாடகங்கள்ல  நடிச்சார். 14 வயசுல குடும்பத்துடன் கேரளாவுக்கு வந்து செட்டில் ஆயிட்டார். கொஞ்ச நாள் தையல் வேல செஞ்சார். மேல படிக்கலாம்னா, மகளை நடிகை ஆக்கணும்னு அம்மா ஆசைப்பட்டார். அது அப்பாவுக்கு பிடிக்கல. மலையாள வில்லன் நடிகர் ஒருத்தர் உதவியால சுஜாதா மலையாளத்துல நடிக்க ஆரம்பிச்சார். 

சுஜாதா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். ஆரம்பத்ல மலையாள நாடகத்துல நடிச்சார். 1971ல மலையாள படத்ல நடிக்க ஆரம்பிச்சார். தமிழ்ல முதல் படம் 1974ல இயக்குனர் சிகரம் K பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை. முதல் படத்திலேயே ப்ரபலமாய்ட்டார். மலையாள படங்கள்ல சுஜாதாவின் நடிப்பை பாத்து பாலசந்தர் அவருக்கு இந்த சான்ஸ் கொடுத்தார். 

பாலசந்தர் சுஜாதாவை இன்ட்டர்வ்யூ செய்யும்போது தமிழ் தெரியுமானு கேட்டார். சுஜாதா தெரியும், எழுத தெரியாதுனு சொன்னார். ஒரு வசனத்தை கொடுத்து பேச சொன்னார். சுஜாதா தடுமாறினார். இது பத்தாது. இன்னும் இம்ப்ரூவ் செய்யணும். உனக்கு சான்ஸ் இருக்கு. தமிழ் ந்யூஸ் பேப்பரை சத்தமா படிச்சு பழகு. தப்பில்லாம படி. தமிழ் உச்சரிப்பு நல்லா வந்தாகணும்னு  சொல்லி அனுப்பினார். சுஜாதாவும் அவர் சொன்னபடி செஞ்சு முன்னேறினார். 

அந்த சமயத்தில ஹிட் லிஸ்ட் நாயகிகள்ல ஒருத்தரா இருந்தார். நடிக்கணும்னு பெருசா ஆசை இல்லாட்டியும், நடிக்கிற சான்ஸ் அவரை தேடி வந்துச்சு. அநேகமா அவர் நடிச்சதெல்லாம் குடும்ப பாங்கானதும், சென்ட்டிமென்ட் கதையம்சம் கொண்ட படங்கள்ல. ஹீரோயினா ஓஹோன்னு பேர் வாங்கினது 1976ல இளையராஜாவின் முதல் படம் அன்னக்கிளி. 

பேட்டிகள்ல சுஜாதா பேசும்போது இப்டி சொன்னார் : தாய்மொழி மலையாளம். சொந்தக்காரங்க, நண்பர்கள்கிட்ட மலையாளத்ல  பேசுவேன். பொது இடங்கள்ல சிங்களம், இங்கிலீஷ்ல பேசுவேன். சிலோன்ல கொஞ்சமாத்தான் தமிழ் படம் ரிலீஸ் ஆகும். அதனால ஹிந்தி, சிங்களம், இங்கிலீஷ் படங்கள் பாப்பேன். நா பாத்த முதல் தமிழ் படம் தாய்க்குப்பின் தாரம். 

கல்யாணத்துக்கு அப்புறமா நடிக்கிறதுல கொஞ்சம் ப்ராப்ளம் இருந்தாலும் துணை கதாபாத்திரங்கள்ல நடிச்சார். 

நடிகை ஜெயப்ரதாவுக்கு இந்த படங்கள்ல டப்பிங் பேசினார் :
நினைத்தாலே இனிக்கும் 1979 & 47 நாட்கள் 1981

விருதுகள் :
கலைமாமணி விருது 
ஃபிலிம்ஃபேர் விருதுகள்
சிறந்த நடிகை - உறவு சொல்ல ஒருவன் 1975, அன்னக்கிளி 1976,
அவர்கள் 1977 & தெலுங்கு படம் 1979
நந்தி விருது
தமிழ்நாடு மாநில விருது :
சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது -
துணைவி 1981 & பரீட்சைக்கு நேரமாச்சு 1982

நன்றி : விக்கி, wowtam, tamilminutes


சந்திரனும் சூரியனும் கண்ணிரெண்டில் சிரிக்கும் புது சித்திரமே
உன்னழகு வானவில்லை பழிக்கும் 

வாட்ச்மேன் வடிவேல்          1994

ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு கொண்டாடும் இன்பங்கள் நெஞ்சோடு   

அன்புக்கு நான் அடிமை        1980        

வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது 
என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி 

பூந்தளிர்         
1979

அந்த மானை பாருங்கள் அழகு இளம் பாவை என்னோடு உறவு 
அந்த தென்னை தாலாட்டும் இளநீர் 

அந்தமான் காதலி             
1977


பேபி       பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 3838410834  மகிழ்ச்சி    

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 11, 2023 11:16 am

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 22-6315bd2e08f32
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 GkXGprW


Sponsored content

PostSponsored content



Page 59 of 60 Previous  1 ... 31 ... 58, 59, 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக