by சிவா Today at 3:13 am
» இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன்
by சிவா Today at 2:41 am
» புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள்
by சிவா Today at 2:14 am
» IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
by சிவா Today at 1:33 am
» எழுந்து விடு மனிதா
by சிவா Today at 1:18 am
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:35 pm
» அக்னிவீர் திட்டத்திற்கு அலைமோதும் இளைஞர்கள்.
by சிவா Yesterday at 9:26 pm
» நன்றாகத் தூங்குவது எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Yesterday at 8:33 pm
» விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள்
by சிவா Yesterday at 8:13 pm
» விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்'
by சிவா Yesterday at 8:09 pm
» தங்க நகைகளில் கட்டாயம் HUID குறியீடு
by சிவா Yesterday at 8:06 pm
» முடியின் pH சமநிலைக்கு கற்றாழை எண்ணெய்
by சிவா Yesterday at 8:02 pm
» கோயிலில் தோண்ட தோண்ட.. 2000 செம்மறி ஆடு தலைகள்
by சிவா Yesterday at 7:58 pm
» இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் என்ன செய்வது?
by சிவா Yesterday at 3:29 pm
» ஆசியாவின் பெரிய தேர்: பக்தர்கள் வெள்ளத்தில் திருவாரூர் ஆழித் தேரோட்டம்
by சிவா Yesterday at 3:04 pm
» நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் : நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:03 pm
» மன உறுதியை அதிகரிப்பது எப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:09 pm
» பெருங்காயத்தின் பயன்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:05 pm
» கருத்துப்படம் 01/04/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (19)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» சாவர்க்கர் எங்களுக்கு கடவுள் போன்றவர்
by சிவா Yesterday at 3:29 am
» தமிழகத்தில் மதமாற்றம் அதிகரிப்பு
by சிவா Yesterday at 3:19 am
» தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர்
by சிவா Fri Mar 31, 2023 9:44 pm
» Deja vu - தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா?
by சிவா Fri Mar 31, 2023 9:35 pm
» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Fri Mar 31, 2023 9:00 pm
» பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி?
by சிவா Fri Mar 31, 2023 8:54 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri Mar 31, 2023 8:28 pm
» மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by சிவா Fri Mar 31, 2023 7:05 pm
» IPL - ஐபிஎல் பற்றிய தகவல்களின் தொகுப்பு
by T.N.Balasubramanian Fri Mar 31, 2023 5:59 pm
» IPL Live Streaming செய்யும் இணையதளம்
by சிவா Fri Mar 31, 2023 4:58 pm
» காசி வாழ தேசம் வாழும்
by சிவா Fri Mar 31, 2023 4:46 pm
» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Fri Mar 31, 2023 3:10 pm
» [கட்டுரை] யாருக்காக ???
by rajuselvam Fri Mar 31, 2023 9:30 am
» வியர்க்குரு அல்லது வேர்க்குரு - இயற்கை வைத்தியங்கள்
by சிவா Fri Mar 31, 2023 12:47 am
» ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள்
by சிவா Fri Mar 31, 2023 12:23 am
» கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...
by சிவா Thu Mar 30, 2023 10:31 pm
» வெயில்கால தட்டம்மை நோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu Mar 30, 2023 10:15 pm
» பழைய சோறு... இது உணவல்ல, மருந்து
by சிவா Thu Mar 30, 2023 10:08 pm
» இட்டிலி மேல் இனிதான கவிதை
by சிவா Thu Mar 30, 2023 9:19 pm
» செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை
by சிவா Thu Mar 30, 2023 9:14 pm
» மோடியைத் தோற்கடிக்க இஸ்லாமிய வாக்காளர்களை அழைத்து வாருங்கள்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:52 pm
» இன்று உலக இட்லி தினம்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:10 pm
» நாவல் வேண்டும்
by Riha Thu Mar 30, 2023 4:37 pm
» ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்...
by சிவா Thu Mar 30, 2023 2:45 pm
» நோன்பு என்றால் என்ன? இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக அது எப்படி மாறியது?
by Dr.S.Soundarapandian Thu Mar 30, 2023 12:20 pm
» ஸ்ரீ ராம நவமித் திருநாள்
by சிவா Thu Mar 30, 2023 6:55 am
» கோடை கால பானங்கள்
by சிவா Thu Mar 30, 2023 12:16 am
» கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி?
by சிவா Thu Mar 30, 2023 12:13 am
» வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க!
by சிவா Wed Mar 29, 2023 10:40 pm
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Wed Mar 29, 2023 9:55 pm
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
தமிழ்வேங்கை |
| |||
mohamed nizamudeen |
| |||
eraeravi |
| |||
rajuselvam |
| |||
சரவிபி ரோசிசந்திரா |
| |||
eswari m |
| |||
ஜாஹீதாபானு |
|
சிவா |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
eraeravi |
| |||
சரவிபி ரோசிசந்திரா |
| |||
T.N.Balasubramanian |
|
[இலக்கியம்] நற்றிணை
Page 8 of 19 • 1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 19
முகவுரை
தமிழிலுள்ள நூல்களுள் காலத்தால் மிக முந்தியவை சங்க இலக்கியங்கள். கடைச் சங்க காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்த புலவர் பெருமக்களின் பாடல்களில் சிறந்தன பலவும் கடைச் சங்க காலத்தின் இறுதியில் ஒருங்கு தொகுக்கப்பட்டன. இவை தொகை நூல்கள் எனப்படுபவை. பாவகையாலும், பொருள் பட்டு, எட்டுத் தொகுதிகளாக அமைக்கப்பட்டன. இவற்றைப் பண்டைய உரையாசிரியர்கள் 'தொகை' என்றும், 'எண் பெருந்தொகை' என்றும், குறிப்பிட்டுள்ளனர்.
[You must be registered and logged in to see this link.] நூல்களாவன; [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] என்பனவாம். இவ் வரிசை,
நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு,
ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல்,
கற்றறிந்தார் ஏத்தும் கலியே, அகம், புறம், என்று
இத் திறத்த எட்டுத் தொகை.
என்ற பாடலில் காணும் அடைவுமுறையாகும். இம் முறையில் நூல்கள் தொகுக்கப்படவில்லை என்றும், தொகை நூல்களுள் குறுந்தொகை முதலாவதாகவும், ஏனைய நூல்கள் அதன் பின்னராகவும், தொகுக்கப்பட்டிருக்கலாம் என்றும், ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
ஒட்டுத் தொகையுள் ஒன்றாகிய நற்றிணை ஒன்பது முதல் பன்னிரண்டு அடி வரையிலுள்ள நானூறு அகவற் பாக்களின் தொகுதி. குறுந்தொகை, நெடுந்தொகை, இரண்டிற்கும் இடைப் பட்டு, அளவான அடிகளை உடைமையினால், இது 'நற்றிணை' என வழங்கப்பட்டது போலும்.
'நற்றிணை நானூறு' என்றும் இது வழங்கப்பெறும். 'இதனைத் தொகுப்பித்தான் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி' என்பது பழங் குறிப்பு. தொகுத்தாரது பெயர் தெரியவில்லை. நற்றிணைப் பாடல்களில் 234ஆம் பாடல் முற்றும் கிடைக்கவில்லை. 385ஆம் பாடலின் பிற்பகுதியும் மறைந்து போயிற்று. 56 பாடல்களின் ஆசிரியர் பெயர் காணப்பெறவில்லை. ஏனைய பாடல்களைப் பாடியவர்களின் தொகை 192.
நற்றிணைச் செய்யுட்களுக்குக் குறிஞ்சி, முல்லை, முதலிய ஐந்திணைப் பாகுபாடு ஏட்டுப் பிரதிகளில் காணப் பெறவில்லை. இவை பதிப்பாசிரியர்களால் ஊகித்துக் கொடுக்கப் பெற்றனவே. அகப் பொருட் பாடல்களின் பொருள் விளக்கத்திற்கு இத் திணை விளக்கம் இன்றியமையாதது என்னும் கருத்தாலும், அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியவற்றில் திணைப் பாகுபாடு பழமையாகவே உள்ளமையாலும், இந் நூலுக்கும் திணைப் பாகுபாடு பாடல்களின் தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பாடல்களின் அடியில் கொடுக்கப் பெற்றுள்ள கருத்துகள் பழமையானவை. அவை இந் நூலைத் தொகுத்தவராலேனும் பிற்காலத்தவராலேனும் அமைக்கப்பெற்றிருத்தல் வேண்டும்.
கடவுள் வாழ்த்து
'மா நிலம் சேவடி ஆக, தூ நீர்
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக,
பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக,
இயன்ற எல்லாம் பயின்று, அகத்து அடக்கிய
வேத முதல்வன்' - என்ப-
'தீது அற விளங்கிய திகிரியோனே.'
பாரதம் பாடிய பெருந்தேவனார்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
93. குறிஞ்சி
'பிரசம் தூங்க, பெரும் பழம் துணர,
வரை வெள் அருவி மாலையின் இழிதர,
கூலம் எல்லாம் புலம்புஉக, நாளும்
மல்லற்று அம்ம, இம் மலை கெழு வெற்பு!' எனப்
பிரிந்தோர் இரங்கும் பெருங் கல் நாட! 5
செல்கம்; எழுமோ; சிறக்க, நின் ஊழி!
மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத் தோள்,
நல்கூர் நுசுப்பின், மெல் இயல், குறுமகள்
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய
பழங்கண் மாமையும் உடைய; தழங்கு குரல் 10
மயிர்க் கண் முரசினோரும் முன்
உயிர்க் குறியெதிர்ப்பை பெறல் அருங்குரைத்தே.
கிளைதொறுந் தேனிறால் தொடுத்தன தூங்காநிற்பப் பெரிய பழங்கள் குலைகுலையாகப் பழுக்க வரையின்கணுள்ள வெளிய அருவி மாலை போல இழிந்துவர; சாரலிலுள்ள கொல்லைகள்தோறும் வரகுசாமை முதலாகிய பதினறு வகைக் கூலமும் விதைக்கப்பட்டுப் பொலிய; நாட எக்காலத்தும் சிறுகுன்றுகள் பொருந்திய இவ்வெற்பு வளப்பமுடையதென்று அதனைவிட்டுப் பிரிந்துசெல்பவர் இரங்கா நிற்கும் பெரிய மலைநாடனே !; யாம் செல்லுகின்றோம் எழுந்து போவாயாக ! நின் வாழ்நாள் நீடுவாழ்வதாக! மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத்தோள் நல்கூர் நுசுப்பின் மெல்லியல் குறுமகள் பக்கங்கள்¢ மறையப் பூண்ட திருந்திய கலன்களையுடைய முன்பு பருத்த தோளையும் நுணுகிய இடையையும் மெல்லிய சாயலையும் உடைய இவ்விளமகளுடைய; பூண் தாழ்ந்த கொங்கைகள் நாண் துன்புறுத்தலாலே வருத்தமுற்ற பழங்கண்கொண்ட பசலையையும் உடையன ஆதலால்; ஒலிக்கின்ற குரலையுடைய மயிர் சீவாத தோல் போர்த்த இடமகன்ற நின் மணமுரசொலி கேட்டலினாலே நம்மைக் காதலன் வரையவந்தனன் போலும் என்று கருதா நிற்கும் அந்நாள் அளவைக்குள்; இவளுக்கு உயிர் இருக்கும்படியான குறியைக் காணுதல் இனிப் பெறுதற்கரிய தொன்றாகுங்காண்;
வரைவு கடாயது. - மலையனார்
94. நெய்தல்
நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில்,
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்;
யானே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி-
கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ
மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப, குவி இணர்ப் 5
புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன்
என்ன மகன்கொல்- தோழி!- தன்வயின்
ஆர்வம் உடையர் ஆகி,
மார்பு அணங்குறுநரை அறியாதோனே!
தோழி ! காமநோயானது நிலைகுலைத்தலாலே கலக்கமுற்ற வலியழிந்த பொழுதில் அன்போடு வந்து அருகிலிருந்து நயமொழி கூறி ஆற்றுவித்தல் ஆண்மகனுக்குரிய சிறந்த பண்பாகும், அங்ஙனம் யான் காமநோயால் வருந்திய பொழுது நம் காதலன் அருகு வந்திருந்து ஆற்றினானுமல்லன்; கைத்தொழில் வல்ல கம்மியன் அழகு பொருந்தக் கழுவித் தூய்மை செய்யாத பசிய முத்து தனது மிக்க ஒளியை மறைத்துக் காட்டினாற்போல; யானும் புணர்ச்சியால் நிகழ்ந்த மிக்க நலனைப் புலப்படாமல் அரிதாகத் தாங்கி என் பெண் தன்மையாலே தகைத்துக்கொள்ளும்படியாக; அலராமற் குவிந்த பூங்ககொத்துக்களையுடைய புன்னையின் கண்ணே புலவு நாற்றத்தையுடைய நீர் தெறித்தலான் மலர்ந்த கடற்கரைத் தலைவனாகிய; முன்னமே அவன்பால் ஆர்வமுடையேனாக வேண்டி அவனது மார்பால் வருத்தமுற்ற என் இயல்பை அறியாத காதலன் என்ன மகன் எனக் கூறப்படுவானோ ?
தலைமகன்சிறைப்புறமாக, தலைவி, தோழிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது. - இளந்திரையனார்
95. குறிஞ்சி
கழை பாடு இரங்க, பல் இயம் கறங்க,
ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று,
அதவத் தீம் கனி அன்ன செம் முகத்
துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க,
கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து, 5
குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக்
குன்றகத்ததுவே, குழு மிளைச் சீறூர்;
சீறூரோளே, நாறு மயிர்க் கொடிச்சி;
கொடிச்சி கையகத்ததுவே, பிறர்
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே. 10
பக்கத்திலே குழலொலிப்பப் பலவாச்சியங்களு முழங்க ஆடுகின்ற கழைக்கூத்தி நடந்த முறுக்குண்ட புரியை யுடைய வலிய கயிற்றின் மீது; இனிய அத்திப் பழம் போன்ற சிவந்த முகத்தையும் பஞ்சுபோன்ற தலையையுமுடைய குரங்கினது வலிய குட்டி பற்றித் தூங்காநிற்ப; அதனைக் கண்ட குறச்சாதியாரின் இளமகார் பெரிய பாறையின்கணுள்ள மூங்கிலின்மேல் விசைத்து எழுந்து ஏறி நின்று தாளங் கொட்டாநிற்கும் அந்தக் குன்றின் இடத்துளதாகும்; கொழுவிய காவற்காடு சூழ்ந்த சீறூர்; என்னாற் காதலிக்கப்பட்ட நறுமணங் கமழுங் கூந்தலையுடைய கொடிச்சி அச் சீறூரின் கண் இருப்பவளாவாள்; அவளாலே பிணிப்புண்ட என்னெஞ்சமும் அக் கொடிச்சியின் கையகத்ததாயிராநின்றது; அவள் இரங்கி விடுத்தாலன்றி என்னெஞ்சம் பிறரால் விடுவித்தற்கும் இயலாதாகுங்காண்;
தலைமகன் பாங்கற்கு, 'இவ்விடத்து இத்தன்மைத்து' என உரைத்தது. - கோட்டம்பலவனார்
96. நெய்தல்
'இதுவே, நறு வீ ஞாழல் மா மலர்தாஅய்,
புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறை,
புதுவது புணர்ந்த பொழிலே; உதுவே,
பொம்மற் படு திரை நம்மோடு ஆடி,
புறம் தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால் 5
துவரினர் அருளிய துறையே; அதுவே,
கொடுங் கழி நிவந்த நெடுங் கால் நெய்தல்
அம் பகை நெறித் தழை அணி பெறத் தைஇ,
தமியர் சென்ற கானல்' என்று ஆங்கு
உள்ளுதோறு உள்ளுதோறு உருகி, 10
பைஇப் பையப் பசந்தனை பசப்பே.
தோழீ ! நறு மணம் கமழ்கின்ற பூவையுடைய ஞாழலின் சிறந்த மலரும் புன்னையின் சிறந்த மலரும் உதிர்ந்து பரவி நெருங்கிய வெளிய மணற்பரப்பினொருபால்; என்னைப் புதுவதாக இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த சோலை இதுவே என்றும்; பொலிவு பொருந்திய கடலில் நம்மோடு நீராடி என் முதுகிலே தாழ்ந்திருண்ட விளங்கிய ஐம்பாலாக வகுக்கும் கூந்தலைப் பிழிந்து துவட்டினராயருளிய துறை உதுவே என்றும்; வளைந்த தண்டு உயர்ந்த நீண்ட காம்புடைய நெய்தலின் அழகிய ஒன்றோடொன்று மாறுபடத் தொடுத்த நெறிப்பையுடைய தழையை அழகுபெற எனக்கு உடுப்பித்துத் தமியராய்ச் சென்றுவிட்ட கழிக்கரைச் சோலை அதுவே யென்றும்; அவ்வண்ணம் நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் உள்ளமுருகி மெல்ல மெல்லப் பசப்பை மேற்கொண்டு பசந்து காட்டினை; இனி எவ்வாறுய்குவாய்?;
சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு உரைப்பாளாய் வரைவு கடாயது. - கோக்குளமுற்றனார்
97. முல்லை
அழுந்து படு விழுப் புண் வழும்பு வாய்புலரா
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்கு,
பிரிவில புலம்பி நுவலும் குயிலினும்,
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே;
அதனினும் கொடியள் தானே, 'மதனின் 5
துய்த் தலை இதழ பைங் குருக்கத்தியொடு
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ?' என
வண்டு சூழ் வட்டியள் திரிதரும்
தண்டலை உழவர் தனி மட மகளே.
தோழீ ! நெடுங்காலம் முன்னுண்டாகி ஆழ்ந்த பெரிய புண்ணின் வாய் நிணங் காயாத துன்பத்தையுடைய மார்பினிடத்தில் வேற்படையைக் குற்றிப்பாய்ச்சினாற் போல; என் அருகிலிருந்து பிரியாதனவாய் வருந்திக் கூவுங் குயிலினுங் காட்டில் நன்றாகத் தௌ¤ந்த நீர் கெழுமி வருகின்ற யாறு மிகக் கொடியதாயிரா நின்றது; அழகுடைய பஞ்சு போன்ற மேலே புறவிதழையுடைய பசிய குருக்கத்திமலருடனே விரவிய சிறு சண்பக மலரையும் விலைக்குக் கொள்ளீரோ ? என்று; அம்மலர்களை இட்டு வைத்தலால் வண்டுகள் சூழ்கின்ற கடகப் பெட்டியைக் கைக்கொண்டு திரியாநிற்கும்; சோலையின்கணுள்ள உழுதுண்ணு மாக்களின் ஒப்பற்ற இளமகளாவாள்தான்; அவ் யாற்றினுங்காட்டில் மிகக் கொடியளாயிராநின்றாள்; இங்ஙனமாகையில் யான் எவ்வாறு ஆற்றியுய்குவன் ?
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்கு உரைத்தது. - மாறன் வழுதி
98. குறிஞ்சி
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின்
செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில், தாழாது
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென, 5
மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன்
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்!
எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த்
துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி,
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே- 10
வைகலும் பொருந்தல் ஒல்லாக்
கண்ணொடு, வாரா என் நார் இல் நெஞ்சே!
முள்ளம் பன்றியின் முட்போன்ற பருத்த மயிரையுடைய பிடரும் சிறிய கண்ணும் வயலிற் சென்றுண்ணும் விருப்பமுமுடைய பன்றி; உயர்ந்த மலையிடத்துள்ள இடமகன்ற தினைக் கொல்லையிலே சென்று மேயும் பொருட்டுப் பெரிய இயந்திரமமைந்த புழைவழியிலே சென்று புகும்பொழுது; தாழாது விரைந்து நல்ல பக்கத்திலிருந்து பல்லியடித்தலும் அதனை அறிந்து ஆங்குச் சென்றால் ஊறு நிகழும் என்று அஞ்சி; மெல்ல மெல்லப் பின்னே மீண்டுவந்து தன் கல்முழையிலுள்ள பள்ளியிடத்தே தங்காநிற்கும்; மலைநாடனே ! எந்தையாலே பாதுகாக்கப்படுகின்ற காவலையுடைய அகன்ற மாளிகையிடத்துத் துஞ்சாமற் காக்குங் காவலர்தாம் சிறிது அயர்ந்திருக்கும் பருவமறிந்து; நீ இரவின்கண் வந்து முயங்கிச் செல்லும் அதனினும் காட்டில் நாள்தோறும் நீ வரும் நெறியின் ஏதத்தைக் கருதுவதனாலே துயிலப் பெறாது என்கண்ணும் கொடிதாயிராநின்றது; அன்றியும் நின்பாற் சென்று வாராத என்பால் அன்பற்ற என்னெஞ்சமும் கொடிதாயிராநின்றது காண் !;
இரவுக்குறி வந்து ஒழுகும்தலைவனைத் தோழி வரைவு கடாயது. - உக்கிரப் பெருவழுதி
99. முல்லை
'நீர் அற வறந்த நிரம்பா நீள்இடை,
துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்,
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ் சுரம் இறந்தோர்
தாம் வரத் தௌத்த பருவம் காண்வர
இதுவோ?' என்றிசின்- மடந்தை!- மதி இன்று, 5
மறந்து கடல் முகந்த கமஞ் சூல் மா மழை
பொறுத்தல்செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல-
பிடவமும், கொன்றையும் கோடலும்-
மடவ ஆகலின், மலர்ந்தன பலவே. 10
மடந்தாய்! தண்ணிதாகிய நீர்மை முற்றும் இல்லாத சென்று கடக்க முடியாத நீண்ட நெறியில்; வெளிய ஆடையை விரித்தாற் போன்ற வெயில் வீசுகின்ற வெப்பத்தாலே நோக்குவார் அஞ்சும்படியாக நடுக்கத்தைச் செய்யும் கொடிய காட்டின்கண்ணே சென்ற காதலர்; தாம் வருவேமென்று அழகு பொருந்தத் தௌ¤யக் கூறிய பருவம் இதுதானோ ? என்று வினவாநின்றனை, இஃதன்று; அறிவில்லாது பருவகாலத்தை மறந்து கடனீரையுண்டதனாலாகிய நிறைந்த சூலையுடைய கரிய மேகம்; தான் தாங்கமாட்டாமே பெய்தொழித்த வளவிய மழையை நோக்கி இது கார்காலமென மறதியுற்றவுள்ளத்துடனே; அறியா தனவாய்ப் பிடவுங் கொன்றையுங் காந்தளும் இன்னும் பலவும்; அஃறிணையாகிய அறிவில்லாப் பொருள்களாதலின் மிக மலர்ந்துவிட்டன; அவற்றைக் கண்டு நீ கார்காலமென மயங்காதேகொள் !;
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறுத்தியது. - இளந்திரையனார்
100. மருதம்
உள்ளுதொறும் நகுவேன்- தோழி!- வள்உகிர்
மாரிக் கொக்கின் கூரல் அன்ன
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்
தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின்
வான் கோல் எல் வளை வெளவிய பூசல் 5
சினவிய முகத்து, 'சினவாது சென்று, நின்
மனையோட்கு உரைப்பல்' என்றலின், முனை ஊர்ப்
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்
தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப்
புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின் 10
மண் ஆர் கண்ணின் அதிரும்,
நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே.
தோழீ ! பெரிய உகிரையுடைய கார்காலத்து உலாவுங் கொக்கினது கூரிய மூக்குப்போன்ற ஆழ்ந்த நீரின் முளைத்த ஆம்பற் பூவையுடைய; தண்ணிய துறையையுடைய ஊரன் நெய்ம் மணங் கமழ்கின்ற என் கூந்தலைப் பற்றி யீர்த்து வைத்து என் கையிலுள்ள வெளிய கோற்றொழிலமைந்த ஒளியையுடைய வளையைக் கழற்றிக் கோடலினாகிய பூசலாலே; ஊர்முனையிலுள்ள பல நெடிய ஆனிரைகளை விற்போரால் வென்று செலுத்திக் கொண்டு வருகின்ற இரவலர்க்குத் தேர் கொடுக்கும் கை வண்மையுடைய மலையமான் திருவோலக்கத்தின் முன்பு; வேற்று நாட்டிருந்து வந்த பெரிய இசையையுடைய கூத்தர் நன்மையை விரும்பி முழக்குகின்ற மத்தளத்தின் மார்ச்சனை வைத்த பக்கம் அதிர்வதுபோலும் அதிர்ச்சியோடு; நன்மையை மேற்கொள்ளும் அவன் தான் நடுங்கிய வருத்தத்தையுற்ற நிலையை நினைக்குந்தோறும் நகை தோன்றுதலாலே யான் நகாநிற்பேன்காண் !;
பரத்தை, தலைவிக்குப்பாங்காயினார் கேட்ப, விறலிக்கு உடம்படச்சொல்லியது. - பரணர்
101. நெய்தல்
முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச்
சுற்றிய பிணர சூழ் கழி இறவின்
கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி,
புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும்
துறை நணி இருந்த பாக்கம் உம் உறை நனி 5
இனிதுமன்; அளிதோ தானே- துனி தீர்ந்து,
அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின்,
மீன் எறி பரதவர் மட மகள்
மான் அமர் நோக்கம் காணா ஊங்கே.
வருத்தமின்றி, அகன்ற அல்குலையும் மெல்லிதாயமைந்த இடையையுமுடைய மீன் பிடிக்கின்ற பரதவர்தம் இள மகளின் மான்போலும் ஒன்றோடொன்று மாறுபட்ட பார்வையைக் காணப்பெறாதமுன் உவ்விடத்தே: முற்றா மஞ்சள் பசும் புறங் கடுப்பச் சுற்றிய பிணர சூழ் கழி இறவின்முற்றாத இளமஞ்சட் கிழங்கின் பசிய புறத்தைப் போலச் சுற்றியிருக்கின்ற சருச்சரையையுடைய சூழ்ந்த கழியிடத்துள்ள இறாமீனின் கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கிகூட்டங் கொண்ட குவியல் காயும் வகையை ஆராய்ந்து; புன்னையினது அழகிய கொழுவிய நிழலின் எதிரே போகட்டுப் பரப்புந் துறைக்கு அணித்தாயிருந்த பாக்கமும; முறையே மிக இனிமையுடையதாயிருந்தது; அஃது இற்றைநாளால் அப்பரதவர் மகளின் நோக்கங் காணப்பெற்றமையாலே கழிந்து போகியதாகலின்; இரங்கத் தக்கதாயிராநின்றது;
பின்னின்ற தலைமகன், தோழி கேட்பச் சொல்லியது. - வெள்ளியந்தின்னனார்
102. குறிஞ்சி
கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப்பைங் கிளி!
அஞ்சல் ஓம்பி, ஆர் பதம் கொண்டு,
நின் குறை முடித்த பின்றை, என் குறை
செய்தல்வேண்டுமால்; கை தொழுது இரப்பல்;
பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு, 5
நின் கிளை மருங்கின், சேறிஆயின்,
அம் மலை கிழவோற்கு உரைமதி- இம் மலைக்
கானக் குறவர் மட மகள்
ஏனல் காவல் ஆயினள் எனவே.
வளைந்த தினைக் கதிர்களைக் கொய்துகொண்டு போகாநின்ற சிவந்த வாயையுடைய பசிய கிள்ளாய்; அஞ்சாதே கொள்! நீ இக்கதிர்களைக் கொய்தல் காரணமாக யாரேனும் நின்னை அச்சுறுத்துவார் கொல்லோ? என்னும் ஐயத்தைப் போக்கி ; வேண்டிய உணவைக் கொண்டுநின் குறையெல்லாம் முடித்த பின்பு; ஒழிவெய்திய காலத்தில் என்னுடைய குறைபாட்டைச் செய்து முடிக்க வேண்டும். இது நின்னை யான் என் கைகளைக் குவித்துத் தொழுது இரந்து கேட்கின்றேன்; அக்குறைபாடுதான் யாதோவெனின் பலவாய காய்களைக் காய்க்கின்ற பலா மரங்கள் மிக்க சாரலையுடைய அவர் நாட்டின்கணுள்ள நின் சுற்றத்தினிடத்து நீ ஒருபொழுது செல்லுவையாயின்; அம்மலைக்கு உரியராகிய எனது காதலரை நோக்கி இந்த மலையைச் சூழ்ந்த காட்டின்கணுள்ள குறவருடைய இளமகள் முன்போலவே; தினைக் கொல்லைக் காவலுக்கு அமைந்து ஆண்டிருக்கின்றாளென்று இவ்வொன்றனை மட்டும் உரைத்து என் இவ்வொரு குறையைச் செய்துமுடிப்பாயாக !
காமம் மிக்க கழிபடர்கிளவி. - செம்பியனார்
Page 8 of 19 • 1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 19
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்