புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_m10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10 
48 Posts - 45%
heezulia
சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_m10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_m10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_m10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_m10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10 
3 Posts - 3%
jairam
சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_m10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10 
2 Posts - 2%
சிவா
சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_m10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_m10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_m10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_m10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_m10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10 
14 Posts - 4%
prajai
சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_m10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_m10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10 
6 Posts - 2%
Jenila
சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_m10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_m10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_m10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Rutu
சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_m10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_m10சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41)


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 13, 2023 2:08 pm

First topic message reminder :

சொல் - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 2 Coq37Nv

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (1)
                                                                     - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

    #பாலி (Pali) – என்றதும்  ‘நமக்குத் தொடர்பில்லாதது’ என்றே தமிழர்கள் நினைத்துக் கொண்டுள்ளார்கள்! இந்த நினைப்பை முதலில் மாற்றவேண்டும்! இதற்கான ஒரு முயற்சியே இப் பதிவு!

   பாலி மொழிக்கு என்று தனி #எழுத்துமுறை (script) இல்லை . பாலி நூற்களிற் காணலாகும் மிகத் தொன்மையான எழுத்துமுறை யாதென்றால், #தமிழர்தம் #பிராமிதான்!

     கீழ்வரும் பாலிச் சொற்களை ஒவ்வொன்றாகப் பார்த்துவாருங்கள்:-

1 .  அக்கி  (பாலி)
அக்கினி என்பது பொருள்.
‘அக்கினிச் சட்டி எடுத்து ஆடுதல்’ நாம் அறிந்ததுதானே?

2 . அங்குசகா  (பாலி)
நம்மூர் யானைப் பாகன் கையில் கொண்டிருக்கும் அங்குசம்தான் இது!

3. அங்காரகன்    (பாலி)
நம் தமிழ்ச் சோதிடர்கள் கூறும் அதே ‘அங்காரகன்’தான்! செவ்வாய்க் கிரகத்தைக் குறிக்கும்.

4. அங்குட்டா  (பாலி)
‘அங்குஷ்டம்’ எனப் பழைய தமிழ் நூற்களில் வருவதுதான்; ‘கட்டை விரல்’ என்பது பொருள் .
மற்ற விரல்களைவிடப்  பார்வைக்குக்  குட்டையாக இருப்பது கட்டை விரல். ஆகவே இதன் அடிப்படையில்,  ‘குட்டை’ என்பது, ‘குட்டா’ எனப் பாலியிற் பயின்றுள்ளது; அவ்வளவுதான்! முன்னே உள்ள ‘அம்’ , முன்னொட்டு.
ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் சொற்கள் செல்லும்போது #முன்னொட்டு, #பின்னொட்டுகள் (prefix and suffixes) சேர்வது ஒரு  #மொழியியல் (Linguistics ) இயல்பு.
இப் பாலி ஆய்வால் நாம் அறிவது யாதென்றால், ‘அங்குஷ்டம்’ என்ற சொல்லுக்கு முன்னே தோன்றியது, ‘அங்குட்டம்’ எனும் தமிழ்ச் சொல்; ‘அங்குட்டம்’ என்பதனை வேறுவிதமாக உச்சரிக்க விழைந்த தமிழர்கள் ‘ஷ்’ சேர்த்து, ‘அங்குஷ்டம்’ எனலாயினர்!

5. அங்குலா (பாலி)
‘ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டுத்தர முடியாது!’ – சொல்கிறார்கள் அல்லவா? அதே ‘அங்குலம்’தான் , பாலியில் ’அங்குலா’!
நல்லவேளை , நம்மவர்கள் ‘அங்குஷ்லா’ என்றொரு சொல்லை உருவாக்கவில்லை!
இப்போதைக்கு , #ஈறுகளின் #மாற்றத்தை மட்டும் கவனியுங்கள்! தமிழின் #‘அம்’ #ஈறு, பாலியில் #‘ஆ’ #ஈறாகத் திரிந்துள்ளது! அவ்வளவுதான்!

6 . அஞ்னானா (பாலி)
‘அஞ்ஞானம்’ என்று நாமறிந்த சொல்தான் இது!
#‘அ’ #முன்னொட்டால் #எதிர்மறைப் #பொருள் #தமிழில் #ஏற்படும்!
சட்டைசெய் – உடன்பாட்டுச் சொல்
அசட்டைசெய் – எதிர்மறைச் சொல்
ஆகவே , ‘அ’ எனும் தமிழ் வேர்ச்சொல் தமிழுக்கும் பாலிக்கும் ஒன்றுதான்!

7 . அஞ்ஞானின் (பாலி)
ஞானி – உடன்பாட்டுச் சொல்
அஞ்ஞானி – எதிர்மறைச் சொல்
ஞானமற்றவன் , அஞ்ஞானி.
சற்றுமுன் சொன்னதுபோல, இங்கும் ‘அ’ முன்னொட்டு எதிமறைப் பொருளைத் தமிழில்  தந்துள்ளதைக் கவனிக்க!

8. அடவி  (பாலி)
காடு எனும் பொருள் தரும் அருமையான தமிழ்ச்சொல் ‘அடவி’!
தமிழ்ச்சொல் எந்த மாற்றமும் அடையாமல் , அப்படியே பாலியில் வந்துள்ளதைக் கவனியுங்கள்!
இங்கு நான் ஒன்றை உங்களுக்குக் கூறவேண்டும்!
பாலிச் சொற்களை ஆய்ந்தவர்கள், ‘இப் பாலிச்சொல்லுக்கு மூலம் சமஸ்கிருதமா ? இலத்தீனா? கிரேக்கமா?’ என்றெல்லாம் , பல சொற்களுக்கு , ஆய்வை ஓட்டியுள்ளார்களே தவிர ஒரு இடத்திற்கூட  ’தமிழிலிருந்து வந்திருக்குமா?’ என்று பார்க்கவே இல்லை! பாலி ஆய்வாளர்களுக்குத் தமிழ் என்று ஒரு மொழி இருப்பதே தெரியாதமாதிரித்தான் உள்ளது! தமிழை உலகளாவிய நிலையில்  நாம் எடுத்துச் செல்லவில்லை என்பதை இது தெரிவிக்கிறது!  ‘அவர் ஜெர்மனியில் வேலை செய்தவர்; இவர் கனடாவில் வேலை செய்தவர்’ என்று சில தமிழர்களைப் பற்றிக் கேள்விப்படுகிறோம்! ஆனால் , அவர்கள் வெகு கமுக்கமாக இருந்து, எங்கே, தமிழ் தொடர்பாக என்ன வேலை செய்கிறோம் என இங்கு மூச்சு விடமாட்டார்கள்! தமிழை உலகளாவிய நிலைக்கு நாம் எடுத்துச்சென்ற இலட்சணம் இதுதான்!

9 . அட்டா  (பாலி)
பரண் என்பது பொருள்.
‘தலையணை பாயை அட்டாலையில் போட்டியா?’ – சிற்றூர்களிற் பாட்டி இரைவாள்!
‘அட்டாலைப் பலகை’ என்பதும் இதுவே.
சதுர அல்லது செவ்வக வடிவில் , சட்டங்களால் அமைக்கப்பட்டு, நான்கு மூலைகளிலும் கயிற்றால் கட்டி உயரமாகத் தூக்கிக் கட்டியிருப்பர்; இதுவே  #‘அட்டாலை’. பாலி மொழி தமிழகத்தில் அறியப்பட்ட  காலத்தில் , தமிழர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது.

10 . அன்னா (பாலி)
அன்னம் – சோறு
தமிழ் ’அன்னம்’தான் , பாலி ‘அன்னா’! ‘அன்னமிட்ட வீட்டில் கன்னமிடாதே’ – தமிழ்ப் பழமொழி.
தமிழ் ‘அம்’மீறு , பாலியில் மாறும் வகையைப் பார்த்துக்கொண்டே வாருங்கள்.

(கருவி நூல் :  Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com).
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Mar 08, 2023 8:45 pm


பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (9)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
81. காரணா (பாலி)
காரணா – காரணம்
இப்படி விளக்குகிறது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி:
கரு - கார்
கார் + அணம் = காரணம்

82 . காரா (பாலி)
காரா – காரா கிருகம்
முன்னே பார்த்தது போலக் ‘கரு’தான் வேர்.
கரு – உலவ இடமில்லாமல் அடைத்து வைப்பது.; இதுவே ‘காரா’ என வந்து சிறையைக் குறித்தது. ‘காரா’என்பதே பழந்தமிழ்ச் சொல்; இதனை நமக்குக் #காட்டிக்கொடுப்பது #பாலிச் சொல்தான்!
பின்னாளில் , ’கிருகம்’ சேர்ந்து , ‘காராக் கிருகம்’ என்றாயிற்று; இதுவே பழக்கத்தில் நின்றுவிட்டது!

83.காள (பாலி)
காள – கறுப்பு
‘காள’ எனும் தமிழ்ச் சொல்லுக்குக் ‘கறுப்பு’ என்பதே பொருள்.
காள மேகம் – கரு மேகம் (காளமேகப் புலவர் நம் நண்பர்தானே?)
‘காள’ எனும் இதே வடிவம் தமிழிலும் பாலியிலும் அப்படியே சிதையாது வந்துள்ளதை நோக்குவீர்!

84 . ஈசா (பாலி)
ஈசா – ஈசன் (சிவன்)
‘ஈசன்’ , தமிழில் விளியாக வரும்போது ‘ஈசா’ என வந்தால் தவறில்லை.

85 . இசி (பாலி)
‘இசி’ , தற்போது நாம் ‘ரிஷி’ என எழுதப்படுவதே. இதைத் தெலுங்கில் ‘ருஷி’ என்பர்.
‘இருசி’ , ‘இருடி’ என்றெல்லாம் தமிழில் எழுதப்பெறுவது இதுவே!
‘அவளா? இரக்கமில்லா இருசி ஆயிற்றே?’ – கிராமத்து வழக்கு. ‘ஆசாபாசங்களுக்கு உட்படாதவள்’ என்பது பொருள்.
‘இசி’ என்பதே தமிழ் மூலமாக இருந்திருக்க வேண்டும்; அப்போது அது பாலிக்குச் சென்றிருக்க வேண்டும்.

86 . உச்சட்டா (பாலி)
உச்சட்டா – உயரம்
‘உச்சம்’தான் ‘உச்சட்டா’!

87. உபதேசா (பாலி)
உபதேசா – உபதேசம்
‘ஊருக்கு உபதேசம்’ – நாம் சொல்வதுதானே?

88 . உபமா (பாலி)
உபமா – உவமை
உவமை , தமிழ்ச் சொல்லே.
உவ + மை = உவமை (செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி)
‘உவமை’ யிலிருந்து கிளைத்ததே ‘உபமா’ எனும் பாலிச் சொல்.

89.உபமெய்யா (பாலி)
உபமெய்யா – உவமேயம்
‘கு.அழகிரிசாமியின் பேனா ஈட்டி போன்றது.’ – இதில் , ஈட்டி – உவமானம் ; பேனா – உவமேயம்.
பாலியில், ’மேயம்’ என உச்சரிப்பதைத் தவிர்த்து, ‘மெய்யம்’ ஆக்கியுள்ளனர்; அவ்வளவுதான்!
#சொல்லானது, #ஒரு #மொழியிலிருந்து #இன்னொரு #மொழிக்குப் #போகும் #போது, #இடர்ப்பாடான #உச்சரிப்பு #தவிர்க்கப்படுகிறது என்பது ஒரு #மொழியியல் #உண்மை ஆகும்(#Linguistic concept)!

90 . உபவனா (பாலி)
உபவனா – உவவனம்
உவவனம் - பொழில்
‘உவவனம்’ – இச் சொல் மணிமேகலையில் வந்துள்ளது.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியின் விளக்கம்:
உவ்வு - உவவு (மகிழ்வு) - உவ+ வனம் = உவவனம்
‘வனம்’ , என்ற தமிழ் பாலியில், ‘வனா’ ஆகியுள்ளது.
***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Mar 10, 2023 12:16 pm

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (10)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

91 . உபஹாரா (பாலி)
உபஹாரா – உபகாரம்
‘ஐயா, இந்த ஒரு உபகாரத்தை மட்டும் செய்யுங்க!’- நம்மவர் கெஞ்சுவரே!
உ – வேர்ச்சொல் ; ‘உதவி’, ‘துணை’ முதலிய பொருட்கள் இத தமிழ் வேருக்கு உண்டு.இந்த அடிப்படையில் எழுந்ததுதான் ‘உபகாரம்’! இதுவே ‘உபஹாரா’ எனப் பாலியில் வந்துள்ளது.

92. உபாயா (பாலி)
உபாயா – உபாயம்
“நான் உனக்கு ஒரு உபாயம் சொல்கிறேன்” என்று வீரமாமுனிவர் எழுதிய ‘பரமார்த்த குரு கதை’யில் வரும்! அந்த ‘உபாயம்’தான் இது.
சற்று முன் நாம் பார்த்த அதே வேர் ‘உ’தான் இங்கும்.

93 . உப்பன்னா (பாலி)
உப்பன்னா – உற்பத்தி
‘உற்பத்தி’ என்ற தமிழ் எப்படி ஓடி முடிந்துள்ளது பார்த்தீர்களா?
உற்பத்தி – உத்பன்னம் – உப்பன்னா !

94. உம்மட்டா (பாலி)
உம்மட்டா – உன்மத்தம்
தமிழ்ப் #பிங்கல #நிகண்டில், ‘உன்னுதல்’ என்பதற்குக் ‘கருதுதல்’ , ’நினைத்தல்’ என்றாங்கு பொருட்கள் உள.
வேறு ஒன்றையும் நினையாது, ஏதாவது ஒன்றைப் பற்றி மட்டும் நினைத்து அதிலேயே இலயித்திருந்தால், அதுவே ‘உன்மத்தம்’.
உன்மத்தம் – உம்மத்தம் – உம்மட்டா .

95.உய்யானா (பாலி)
உய்யானா – உய்யானம் – பூந்தோட்டம்
‘உய்’ எனும் தமிழ்ப் #பகுதி (#stem) அடியாகப் பிறந்த தமிழ்ச் சொல்லே ‘உய்யானம்’.
‘உய்யானத்தில் உன் கையைப் பற்றி நான் பேசவேண்டும் மங்கையே’ – பழைய நாடகத் தமிழ் வசனம்.

96. கம்சா (பாலி)
கம்சா – கஞ்சம் (bronze)
தமிழ் இசைக் கருகளில் ‘கஞ்சக் கருவி’ என்று குறிப்பது, வெண்கலத்தாலான இசைக் கருவியையே.
ஆனால் , இப் பாலிச் சொல்லானது, பாபிலோனிய மொழியிலிருந்து வந்திருக்க வேண்டும் எனத் தடிதடியான ஆங்கிலப் புத்தகங்களில் எழுதியுள்ளர்கள்! தமிழர்கள் தூங்குவதால் காலங்காலமாக இப்படித்தான் நடக்கிறது!.

தமிழ்த் திவாகர நிகண்டில் , ‘கஞ்சம் - வெண்கலம்’ எனப் பொருள் தரப்பட்டுள்ளது.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி விளக்கம் :
”கன் - கஞ்சு- கஞ்சம்; கன் – செம்பு
செம்பும் தகரமும் கலந்து கண்ணுத் தொழிலாளரால் (கன்னார்) செய்யப்பட்ட கலப்பு மாழையான வெண்கலம் கஞ்சம் எனப்பட்டது”
கன்னார் – விசுவகர்ம சாதியினரில் ஓர் உட்பிரிவார்.

97. கசா (பாலி)
கசா – கேசம் (மயிர்)
‘கேசம்’ எனும் தமிழ்ச் சொல் உருவான வரலாற்றைச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி வருமாறு ஆய்கிறது :
“கதி – கெதி – கேதம் – கேசம்.
கதித்தல் – முளைத்தல்”
#பாதாதி #கேசம் – பாதம் முதல் தலைமுடி வரை; #‘பாதாதி #கேச #உவமானம்’ என்றே தமிழில் சிறு நூலை யான் பதிப்பித்துள்ளேன் (1999).

98. காஞ்சனா (பாலி)
காஞ்சனா – காஞ்சனம் (பொன்)
‘காஞ்சனம்’ என்பதற்குப் பொன் எனும் பொருளைத் தருவது #திவாகரம் எனும் தமிழ் #நிகண்டு.
“காய் – காய்ச்சு – காய்ஞ்சு – காஞ்சு - காஞ்சனம்” என வருமுறை கூறுகிறது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி(2000).
காஞ்சன மாலை – தங்க மாலை

99 . குசுமா (பாலி)
குசுமா – குசுமம் (பூ)
இதழ்கள் குவிந்து இருப்பதால் , ‘கு’ எனும் தமிழ் வேரால் ‘குசுமம்’ எனும் சொல்லைத் தர முடிந்தது.

100. குசா (பாலி)
குசா – குசை (தருப்பைப் புல்)
“குல் – குய் – குயை - குசை” என்று விளக்கம் கொடுக்கிறது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி(2000).
***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 12, 2023 5:22 pm

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (11)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

101. குலாலா (பாலி)
குலாலா – குலாலர் (குயவர்)
“குலவு – குலாவு –குலாள் – குலாளன் - குலாலன்”- இப்படிக் கொண்டுபோகிறது செ.சொ. பேரகரமுதலி(2000).

102. குலா (பாலி)
குலா – குலம்
‘குலம் கோத்திரம் பார்த்துப் பெண் எடு’ – முதியவர்கள் இன்றும் கூறுகிறார்கள் அல்லவா? அதே ‘குலம்’தான்.
‘கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?’- ஒரு நாயனார் அன்று கேட்டார்! யார் காதிலும்அது விழவில்லை!
‘குலம்’ என்ற தமிழ்ச் சொல் , திருக்குறளில் (960) வந்துள்ளது.
கு – வேர்ச்சொல்; ‘குவிதல்’, ‘கும்பல்’ என்றெல்லாம் பொருண்மை கொண்டது இவ்வேர். இதனடியாகவே , ‘குலம்’ உண்டானது.

103 . குரூரா (பாலி)
குரூரா - குரூரன் (விகாரத் தோற்றம் தருபவன்)
கு – வேர்ச்சொல்
‘கு’ எனும் இந்தtஹ் தமிழ் வேர், ‘நல்ல முழுத்தோற்றம் அல்லாத குறைத் தோற்றம்’ என்ற பொருளைத் தரமுடிந்தது.
104 . காசா (பாலி)
காசா – காச நோய்
இரத்தம் தோய்ந்த சளியை இந்த நோயாளி அடிக்கடி துப்புவார்.
காலுதல் – துப்புதல் ; ‘கா’ – வேர்ச்சொல்.

105 . காருணிகா (பாலி)
காருணிகா – காருண்ணியன்
காருண்ணியன் - கருணை உள்ளவன்
‘கரு’ எனும் தமிழ்ப் #பகுதி(#stem)யானது, #ஆதி #நீழலாகக் ‘காரு’ ஆகியுள்ளது.

106. காரியா (பாலி)
காரியா – காரியம்
காரியம் – அலுவல் ; வேலை
‘என்ன காரியமாக வந்தீர்கள்?’ – நண்பர் கேட்பார்.
செய்கையை உள்ளடக்கி வருவது ‘காரியம்’. #‘காரியக்காரர்’ – ஒரு தமிழ்க் #கலைச்சொல்; #நிர்வாகக்காரர் என்பது பொருள்.

107. காரா (பாலி)
காரா – சிறை
‘காரா’ என்ற பழைய தமிழ் வடிவமானது, சற்று வளர்ந்து , தெளிவுபட்டுக், #‘காராக்கிருகம்’ ஆனது.
‘காரா’ என்ற பழந்தமிழ் வடிவம் மறைந்துவிட்டது; இன்று பாலி மொழியை ஆராயப்போக அது கிடைத்தது.
காராமணி – பயறுகள் அடைபட்டுக் கிடப்பதால் , ‘அடைபட்ட மணிகள்’ எனும் பொருளில் ‘காராமணி’ ஆயிற்று!
‘கார்’ என்பதே வேர்ச்சொல்.

108 . காரணா (பாலி)
காரணா – காரணம் (reason)
”கரு + அணம் = கரணம்; கரணம் - காரணம்” – இவ்வாறு ‘காரணம்’ எனும் தமிழ்ச் சொல்லைத் தெளிவாக்குவது செ.சொ. பேரகரமுதலி (2000).

109 . காயா (பாலி)
காயா – காயம் (உடல்)
‘காயமே இது பொய்யடா!’ – பாடியுள்ளார்களே.
கா – வேர் ; ‘பருத்தது’ என்பது பொருள்.

110. காமுகா (பாலி)
காமுகா – காமுகன்
காமுகன் – காமம் கொண்டவன்
‘காமுகர்’ எனக் கம்பராமாயணத்தில் வருகிறது.
காமம் மிக்குக் கொண்டவன் ‘காமுகன்’.
***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Mar 14, 2023 11:46 am

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (12)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

111. கிணி (பாலி)
கிணி – கிண்கிணி (மணியோசை)
ஒரு மொழியிலிருது மற்றொரு மொழிக்குச் சொற்கள் பயணம் செய்யும்போது எப்படிப்பட்ட சொற்கள் பயணம் செய்கின்றன என்று பார்த்துவாருங்கள்!

112.கிரணம் (பாலி)
கிரணம் – ஒளிக்கற்றை ;ஒளிக்கதிர்
‘சூரியக் கிணங்கள் காலையில் நம் மீது விழுந்தால் உடம்புக்கு நல்லது.’ – தமிழ்நாட்டில் கூற்று உண்டு.

113. கீடா (பாலி)
கீடா – கீடம் (புழு)
’கீடம்’ என்று தமிழ்ச் சித்த மருத்துவ நூற்களில் எழுதுவார்கள். #‘சாணத்தில் உள்ள #கீடம்’ என்பதுண்டு.

114 . குக்குடா (பாலி)
குக்குடா – குக்குடம் (கோழி)
#‘குக்குடக் #கொடியோன்’ – முருகன்
கோழி எழுப்பும் ஒலியான ‘கொக் கொக்’ என்பதன் அடியாக எழுந்த #தமிழ்ச் #சொல்லே #‘குக்குடம்’ என்கிறது செ.சொ. பேரகரமுதலி.

115 . குங்குமா (பாலி)
குங்குமா – குங்குமம்
’பெண்ணானவள் நெற்றியில் குங்குமம் இட வேண்டாமோ?’ – பாட்டி இரைவாள்.
‘குங்குமச் சிமிழ்’ , #‘குங்குமச் சம்பா’ – தமிழகத்தில் பழக்கமானவை!
#‘குக்குடப்புடம்’ போட்டு மருந்து தயாரித்தவர்கள் தமிழ்ச் #சித்தமருத்துவர்கள்.

116. குடா (பாலி)
குடா – குடம்
கு- தமிழ் வேர்
குழிவாக இருப்பதால் அது குடம்.
கு +ட் + அம் = குடம் ; கு – பகுதி ; ட் – எழுத்துப் பேறு ; அம் – சாரியை
தமிழகத்தின் ஒரே குளத்தில், குடம் கொண்டு , தமிழர்களும் பாலி எழுதிய புத்த மதத்தாரும் நீர் அள்ளியிருக்க வேண்டும்!

117 . குடி (பாலி)
குடி – குடிசை
குவிந்திருப்பதால் , அது குடிசை.
இலண்டனில், கி.மு. 3000த்தில் இருந்த மூதாதையர் வீடு என்று , குடிசை வீடுகளின் மாதிரிகளை (replica)செய்து வைத்துள்ளார்கள்! இதனால், தமிழகத்தில் , கி.மு. 3000க்கும்முந்தைய காலத்திலேயே குடிசைகள் இருந்தன என்று எடுத்துக்கொள்ள வேண்டும்!

118. கவாடா (பாலி)
கவாடா – கபாடம் (கதவு)
‘துங்கக் கபாடம் திறமினோ’ – #கலிங்கத்துப் பரணி.
‘காவடம்’ என்பது, ‘கவாடம்’ ஆகிக் ‘கபாடம்’ ஆனது என விளக்குவது செ.சொ. பேரகரமுதலி.

119. குண்டலா (பாலி)
குண்டலா – குண்டலம்
குண்டாக – உருண்டையாக – இருப்பதால் , அது ‘குண்டலம்’.
‘காதில் குண்டலம் அணிந்து அரசன் மிடுக்காகத் தோன்றினான்’ – பழைய #நாடகங்களில் வரும் #வசனம்.
‘குண்டல கேசி’ – நாம் அறிந்தது அல்லவா?

120 . குமாரா (பாலி)
குமாரா – குமாரன் (மகன்)
‘கும்’ என்றதன் அடியாகத் தோன்றிய தமிழ்ச் சொல் ‘குமரன்’ ; ‘குமரன்’ , ‘குமாரன் ’ ஆயிற்று என்பர்.
***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Mar 17, 2023 10:46 am

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (13)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
121 . குமாரீ (பாலி)
குமாரீ – குமாரி (இளம்பெண் ; மகள்)
‘கும்’ அடியாகப் பிறந்த தமிழ்ச் சொல் என விளக்குவது செ.சொ. பேரகரமுதலி.
‘குமரன்’ என்ற தமிழ்ப் பெயரே நமக்குக் ’குமரி’யும் தமிழ்ப் பெயர்தான் என்பதை நிறுவப் போதுமானது.
‘குமரி’என்றபோது பேசாமல் இருக்கும் தமிழர்கள், ‘குமாரி’ எனும்போது பயப்படுகிறார்கள்!

122 . குமுதா (பாலி)
குமுதா – குமுதம் (ஆம்பல்)
கு – வேர்ச்சொல்
குவிந்துகொண்டு இருப்பதால் அது ‘குமுதம்’.
கும் + உ + த் + அம் = குமுதம்
கும் – பகுதி ; உ – சாரியை ; த் – எழுத்துப் பேறு ; அம் – சாரியை விகுதி.

123 . கும்பா (பாலி)
கும்பா – கும்பம்
மதச் சடங்குகளில் , செம்பைச் சுற்றி நூல் வரிந்து, மேலே தேங்காய் வைத்துப் பூசை செய்வார்கள்.
இங்கும், வேர் ‘கு’தான்; பகுதி ‘கும்’தான்.

124 . குவளையா (பாலி)
குவளையா – குவளை (lily)
#‘ஆம்பல்’ எனப்படும் #குமுதமும், #குவளையும் பார்ப்பதற்கு ஒன்றுபோலவே இருக்கும்; குவளையில் மணம் இருக்கும், ஆம்பலில் மணம் இராது; இதுவே வேறுபாடு.
பல தமிழ் இலக்கியங்களில் இம் மலர்களைப் பற்றிய குறிப்புகள் உள.

125. கீலா (பாலி)
கீலா – கீல் (hinge)
குல் – கில் – கீல் , என வருவழி உரைப்பது செ.சொ.பேரகரமுதலி.

126 . கேளி (பாலி)
கேளி – கேளிக்கை (பொழுதுபோக்கு; விளையாட்டு)
‘களி’ என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து , ‘கேளி’ வந்து, பின்னர், ‘கேளிக்கை’ ஆனதாக நவில்வது செ.சொ.பேரகரமுதலி (2002) .
கேளிக்கை – தொழிற்பெயர்

127 . கோடி (பாலி)
கோடி – கோடி ; கடைசி (extreme end)
‘தெருக்கோடியில் ஒரு கடை இருக்கு; அங்க வாங்கு’ – வழக்கு.
தமிழ்ச் சொல்லானது அப்படியே , மாற்றம் இல்லாது பாலியில் வந்துள்ளதைக் கவனியுங்கள்!
#பாலிச் #சொற்கள் #எல்லாம் #வடமொழியிலிருந்து #வந்தவை #எனக் #கூற #முடியாது என்பதற்கு இந்த இடம் ஒரு சான்று!

128 . கோணா (பாலி)
கோணா – கோணம் (வளைவு)
’தமிழ் எழுதினால், இடப்புறம் இருந்து வலப்புறமாக நேரா வரணும்; கோணிக்கோண்டு போகக் கூடாது’ – தமிழாசிரியர் கத்துவார்.
கோ – வேர்ச்சொல் ; ‘கோடு’முதலிய பல சொற்களை ஈன்றுள்ளது இத் தமிழ் வேர்.
#தமிழுக்கும் #பாலிக்கும் #உள்ள #நேரடி #உறவை இந்த இடமும் காட்டுவதை நோக்குக.

129. கோபா (பாலி)
கோபா – கோபம்(சினம்)
‘நான் சொல்றதக் கோபப் படாம கேளுங்க!’ – கணவனிடம் மனைவி சொல்வாள்.
கோ + ப் + அம் = கோபம்

130. கோபீணா (பாலி)
கோபீணா – கௌபீணம்; கோவணம்
‘கோவணத்துடன் தண்டு கொண்டு ஆண்டி ஆனாய்!’ – கே.பி. சுந்தராம்பாள் இன்னிசை நம் காதுகளில் ஒலிக்கிறதே!
”கோ” அடியாகக் ‘கோவணம்’ ஆகி, அது ‘கோபீணம்’ , ‘கோபீணா’ என்று வந்து, பிறகு ‘கௌபீணம்’ என நின்றது.
‘கௌபீணம்’ வடிவத்துக்கு முன் ‘கோபீணம்’ என்ற வடிவம் வந்துள்ளது என்பதற்குச் சான்று பாலியின் ‘கோபீணா’ வே!
***





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:38 pm

சொல் 128 அருமை.

கோபீனா  (130) --ஸம்ஸ்க்ருதத்திலும் அதே அர்த்தம்தான்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 19, 2023 8:48 pm

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

131. காரா  (பாலி)
காரா – காரம் (pungency)
ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் சொற்கள் செல்லும்போது, #வழங்கு #மொழியின் #சுவைப் #பெயர்கள் #பெரும்பாலும் #மாறாமல் #செல்லும் #இயல்பின.
‘கரிப்பு’ என்பது , காரத்தையும் குறிக்கும், உப்பின் சுவையாகிய கரிப்பையும் குறிக்கும். ‘உவர்ப்பு’ என்பதும் உப்பின் சுவையாகிய கரிப்பைத்தான் குறிக்கும்.

132. கிலா (பாலி)
கிலா – கிலம் (நாசம்)
#காலின் #மெக்கன்சி (#Colin #Mackenzie) என்ற #ஸ்காட்லாந்துக்காரர் தொகுத்த தமிழ் ஆவணங்களில் ‘கோட்டை கிலமானது’ என்று அடிக்கடி வரும்! கிலமானது – நாசமானது.
மெக்கன்சியின் ஆவணங்கள் தற்போது , சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலகக் கட்டடத்திலுள்ள  #அரசினர் #கீழ்த்திசைச் #சுவடிகள் #நூலகம் #மற்றும் #ஆய்வு #மையம் (#Government #Oriental #Manuscripts #Library #and #Research #Centre ) என்ற நிறுவனத்தில் உள்ளன.

133 . ககனா  (பாலி)
ககனா – ககனம் (வானம்)
‘காரென்று பேர் படைத்தாய் ககனத் துறும்போது’- #காளமேகப் #புலவர் பாடல்  நாம் படித்ததுதானே?

134. கணா (பாலி)
கணா – கணம் (கூட்டம்)
‘பூதகணம்’ , ‘சிவகணம்’, ‘கணநாதன்’ – நாம் வழக்கமாக எழுதுபவைதாமே?
கணத்தல் – கூடுதல்
கூட்டப்பெறுவதால்  அது ‘கணக்கு’ (maths).
‘கணக்கு’ , தமிழாகும்போது ‘கணம்’ மட்டும் வேற்றுமொழி ஆகிடுமா? தமிழர்கள் சிந்தனையை ஓட்டவேண்டும்!

135. கணக்கா (பாலி)
கணக்கா – கணக்கன் (கணக்கு எழுதுபவன்)
‘கணக்கர்’ , ‘கணக்கப் பிள்ளை’ என்றெல்லாம் தமிழ்ச் சாதிகள் உள்ளனவே?

136. கதி (பாலி)
கதி – கதி (விரைவு)
‘கது’ அடிப்படையில் ‘கதி’ தோன்றியதாக விளக்குவது செ.சொ. பேரகரமுதலி (2000).

137. கந்தா (பாலி)
கந்தா – கந்தம் (மணம்)
‘கந்தமாமலர்’ என ஆழ்வார் பாடியுள்ளாரே!
கந்தம் விற்றோர் கந்திகள்.(கந்தம் – நறுமணத் திரவங்கள்(scents).
மகாத்மா காந்தியின் முன்னோர்கள் குலம் நறுமணத் திரவங்கள் விற்றதால் , ‘கந்தி’ ஆகிப் பின்னர் ‘காந்தி’ ஆனது என்பதை #வேட்டூரி #பிரபாகர #சாஸ்திரி என்பார் தெரிவித்ததாக  #என் #தெலுங்குக் #குருநாதராகிய #தீர்த்தம் #ஸ்ரீதரமூர்த்தி என்னிடம் கூறியுள்ளார்.

138. கந்தப்பா (பாலி)
கந்தப்பா – கந்தர்ப்பர் (’கந்தருவர்’)
‘கந்தர்ப்பர்’ , ‘கந்தர்ப்ப மகளிர்’ என்றெல்லாம் கம்பராமாயணத்தில் வருகின்றன. இவற்றையும், பாலிச் சொல்லான ‘கந்தப்பா’ என்பதற்கும் உள்ள சொல்லொற்றுமையைக் கவனிக்க.
#’கந்தரப்பம்’ என்றொரு இனிப்பு அப்பம் தமிழகத்தில் செய்வார்கள்; மிகவும் சுவையானது. நடுவிலே சற்று உப்பலாகத் தரித்து  இருப்பதால் ‘கந்து’ அடியாகியுள்ளது. கந்து – தடி ; கந்துடையவன் , கந்தன். ‘கந்தன்’தான்
மூலச் சொல்; ‘ஸ்கந்தன் அல்ல!’

139. கப்பா – (பாலி)
கப்பா – கர்ப்பம்
‘மகளுக்குக் கல்யாணமாகிப் பத்து வருடங்களாச்சு; இன்னும் கர்ப்பம் தரிக்கவில்லை’ – தமிழ்த்தாய் கலுழ்வாள்.
 ’கருப்பம் ’ என்றும் எழுதப்படும்.
‘கரு’ உண்டாவதால்,  ‘கருப்பம்’ பொருத்தமானதே.
பஞ்சாங்கத்தில் , ‘கெர்ப்போட்டம்’ , ‘கெற்போட்டம்’ என்றெல்லாம் போட்டிருப்பார்கள், கவனித்துள்ளீர்களா?
நீரைக் கருவில் தாங்கிய , கரும் மேக ஓட்டமே அது!

140 . கம்பீரா  (பாலி)
கம்பீரா – கம்பீரம்
‘இராசராச சோழன் வேடத்தில் சும்மா கம்பீரமாக வந்து நிற்பார் சிவாஜி கணேசன்’- பாராட்டாதார் இல்லை!
’கம்பு’  அடிப்படையில் உருவான தமிழ்ச் சொல்.
கம்பு எப்படி விறைப்பாக , வணங்காமல் நிற்கிறதோ அதுபோன்ற விறைப்புத் தோற்றமே கம்பீரத் தோற்றம்.

***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com)



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 19, 2023 8:54 pm

நன்றி இரமணியன் அவர்களே!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:04 pm

உங்கள் "பாலி மொழியும் தமிழர் அறிந்த சொல்லும் "பதிவுகளை 

படிக்கையில், பாலி தீவுகளுக்கு சென்றால் மொழிப்பிரச்னை வராது என எண்ணுகிறேன்.

@Dr.S.Soundarapandian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:28 pm


பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

141 . கருளா (பாலி)
கருளா – கருடன்
‘பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது, கருடா சௌக்கியமா?’ – நாம் பலகாலும் கேட்டுள்ளோமே! அதே கருடன்தான்!
‘கரு’ காரணமாக வந்த தமிழ்ச் சொல்தான் ‘கருடன்’.
அஃதாவது , வானில் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுற்றிச் சுற்றியே நீண்ட நேரம் பறக்கும் இயல்புடையது கருடன்; ’குறிப்பிட்ட இடம்’ என்றோமல்லவா? அதுவே ‘கரு’!

142 . கேடா (பாலி)
கேடா – கேடயம் (போரில் தன் மீது கத்தி வெட்டுப் படாவாறு வீரர் கைக்கொள்வது)
கிடுகு – கேடகம் – கேடயம் – இவ்வாறு வருவழி உரைப்பது செ.சொ.பேரகரமுதலி (2002).

143 . கப்பினீ (பாலி)
கப்பினீ – கர்ப்பிணி
‘கர்ப்பினீ’ என்ற பாலிச் சொல்லானது, ‘கர்ப்பிணி’ என்ற தமிழ்ச் சொல்லின் வழக்கு வடிவம்தான் என்பது இச் சொல்லைப் பார்த்தாலே தெரியவரும்!
தமிழ்ப் #பெண்பாற் #சொற்களுக்கே #உரிய #‘இ’கர #ஈறு அப்படியே பாலி மொழியாலும் கொள்ளப்பட்டுள்ளது.

144. காமகா (பாலி)
காமகா – கிராமத்தான்
‘பட்டணத்தான்’ , ‘பட்டணவன்’எனத் தமிழில் சுருங்கும்; அதுபோன்றே, ‘கிராமத்தான்’ என்பதும் பாலியில் #மரூவுடன் ’காமகா‘ ஆகியுள்ளது.

145. கிரி (பாலி)
கிரி – கிரி (மலை)
திருவண்ணாமலையில் நம் ஆட்கள் ’கிரி’வலம் வருவதை நாம் அறிவோமே!
கிரிவலம் – மலைவலம்; மலையை வலம் வருதல்.
‘வேங்கட கிரி’, ‘ஏலகிரி’ - செல்லாத தமிழர் உண்டா?
கிரி மல்லிகை – மலை மல்லிகை
கிரி வேம்பு – மலை வேம்பு
ஆதலால், தமிழகத்தில் தொன்றுதொட்டு இருந்துவரும் அழகிய தமிழ்ச் சொல்லே ‘கிரி’! இதைக் ‘Giri’ என்று உசாரித்த போதுதான் வந்தது சிக்கல்!
#சொற்களைத் #தவறாக #உச்சரித்தால் #அவை , கால அடைவில் ,#வேற்றுமொழிச் #சொற்களாகப் #போய்ச் #சேரும்!

146. கீதா (பாலி)
கீதா – கீதம் (பாட்டு)
கீ + த் + அம் = கீதம்
கீ – வேர்ச்சொல் ; த்- எழுத்துப் பேறு ; அம் – விகுதி
கீ – இந்த வேர்ச்சொல்லே ‘கீர்த்தி’ , ‘கீர்த்தனை’ ஆகிய சொற்களை உருவாக்கிற்று; ஒன்றைப்பற்றிப் புகழ்தல் என்பது இவ்வேரின் பொருண்மையாம். கீதங்கள், கீர்த்தனைகள் மனிதனையோ கடவுளையோ புகழ்ந்தே வரும் ! ‘மெய்க்கீர்த்தி’ என்பதையும் காண்க.
‘கீதம்’ என்று உச்சைத்தபோது சிக்கல் வரவில்லை; ‘geeth’ என்று உச்சரித்தபோது தமிழர்கள் ஏமாந்தார்கள்!

147.குரு (பாலி)
குரு – குரு (குருநாதர்)
‘குரு’ எனும் தமிழ்ச் சொல் அப்படியே மாறாமல் பாலியில் வந்துள்ளதை நோக்குவீர்!
‘கு’- இதுதான் வேர். ‘குன்று’ முதலிய தமிழ்ச் சொற்களைத் தந்தது இந்த வேர்தான். ‘உயரமானது’ ‘மேல்’ , ‘மேலானது’ என்றெல்லாம் பொருள்படும்.
தமிழ்ச் #சூடாமணி #நிகண்டில் , ‘குரு’ என்பதற்கு ’ஆசிரியன்’ என்றே பொரு தரப்பட்டுள்ளது.
‘குரு’ என்று தமிழோசையில் உச்சரிக்கவேண்டும்; ‘guru’ என உச்சரித்தால் மோசம்!

148 . குகா (பாலி)
குகா – குகை
‘கு’ என்பதே தமிழ் வேர். மலையானது குடைபடுவதால் , ‘குகை’ பொருந்துவதாயிற்று. ‘கு’ எனும் தமிழ் வேரே ‘குடைவு’ப் பொருளைத் தந்துள்ளது.
‘குகை’ எனும் தமிழோசையில் உச்சரிக்கவேண்டும். ‘guhai’ என நீங்களும் உச்சரிக்கக் கூடாது, வேண்டுமென்றே தமிழைத் திரித்து நாசமாக்கவேண்டும் என நினைப்பவர்களைக் கண்டுகொள்ளாமலும் இருக்கக் கூடாது!

149 . கோட்டா (பாலி)
கோட்டா – கோத்திரம்
பார்த்தீர்களா? தமிழ் பாலி உறவின் தொடக்கக் காலத்திலேயே தமிழர்களிடையியே #’கோத்திரம்# என்ற வகைப்பாடு இருந்துள்ளது!
‘கொத்து’ என்பதன் அடியாகக் ‘கோத்திரம்’ வந்துள்ளது. இன்றும்கூடச் சில தமிழ்ச் சாதியினரிடையே ‘நீங்கள் எந்தக் கொத்து?’ எனக் கேட்கும் முறை உள்ளது; பெரும்பாலும் மணம் பேசும்போது இப்படிப் பேச்சு வரும்.
‘குலம்’ என்பது பொதுவான பெயர்; தொழில் அடிப்படையில் வருவது.
‘விசுவகர்மர்’ – இது குலப்பெயர்.
‘சனாதன ரிசி கோத்திரம்’ – இது தச்சர் குடியை மட்டும் குறிப்பது. இதற்கு அடிப்படை என்னவென்றால், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே , தச்சுத்தொழில் செய்து, புகழ் பெற்ற ஒரு பெரியவர்தான் அடிப்படை. அந்தப் பெரியவருக்கு ‘முனிவர்’ (ரிசி) நிலையை மக்களே தருவார்கள். சனாதன ரிசி அப்படி வந்தவர்தான்.

150. கோ (பாலி)
கோ – கோ (பசு)
‘கோ’விலிருந்து வந்ததுதான் #‘கோவலர்’. ‘ஆ காத்து ஓம்புதல்’ இவர்தம் பணி.
பசு, காளை ஆகிய பெயர்கள் எல்லாம் தொல்காப்பியம் முதலான தொல்தமிழ் நூற்களில் பரக்கக் காணக்கிடக்கின்றன.
#மாற்றமிலாது #தமிழிலிருந்து #பாலி #சென்ற #சொற்களில் இதுவும் ஒன்று.
***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக