ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மத்யம லோகம் ! By Krishnaamma !
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:35 pm

» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்
by T.N.Balasubramanian Today at 3:52 pm

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by T.N.Balasubramanian Today at 3:49 pm

» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:
by ranhasan Today at 2:12 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:47 pm

» திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்
by velang Today at 7:35 am

» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்
by ayyasamy ram Today at 4:20 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by ayyasamy ram Today at 4:18 am

» புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)
by ayyasamy ram Today at 4:07 am

» ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ நுாலிலிருந்து,
by ayyasamy ram Today at 4:03 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 4:01 am

» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா
by ayyasamy ram Today at 3:50 am

» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு
by ayyasamy ram Today at 3:43 am

» வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி?
by ayyasamy ram Today at 3:32 am

» பாலாவின் படத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 3:24 am

» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது!
by ayyasamy ram Today at 3:22 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 9:59 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 9:07 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 9:04 pm

» புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு கோட்டை பெருமாளுக்கு 16 வகை திரவிய அபிஷேகம்
by krishnaamma Yesterday at 8:52 pm

» அறிமுகம்
by krishnaamma Yesterday at 8:51 pm

» அறிமுகம் --பாரதிசந்திரன்
by krishnaamma Yesterday at 8:49 pm

» ஆசிரியர் தினம்
by krishnaamma Yesterday at 8:28 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by krishnaamma Yesterday at 8:25 pm

» இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்-சவுக்கு சங்கர்-FREE PDF
by sncivil57 Yesterday at 8:12 pm

» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்
by krishnaamma Yesterday at 8:07 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by krishnaamma Yesterday at 7:47 pm

» இந்த வார சினிமா…
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 1:32 pm

» உயிரெழுத்து – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:49 am

» இதுதான் உலகம்..
by ayyasamy ram Yesterday at 11:27 am

» உலக அளவில் கரோனா பாதிப்பு 3.09 கோடி: பலி 9.61 லட்சமாக உயர்வு
by ayyasamy ram Yesterday at 11:24 am

» ட்விட்டரில் ரசித்தவை..
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லட்சியத்தில் உறுதி கொள்ளுங்கள்! – மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 11:08 am

» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…
by krishnaamma Sat Sep 19, 2020 8:42 pm

» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது
by krishnaamma Sat Sep 19, 2020 8:41 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Sat Sep 19, 2020 8:39 pm

» மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: சிரோமணி அகாலிதளம்
by ayyasamy ram Sat Sep 19, 2020 7:05 pm

» பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…
by ayyasamy ram Sat Sep 19, 2020 3:00 pm

» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து!
by ayyasamy ram Sat Sep 19, 2020 2:21 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Sep 19, 2020 1:59 pm

» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்
by ayyasamy ram Sat Sep 19, 2020 8:36 am

» சுப்ரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Sat Sep 19, 2020 8:27 am

» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு
by ayyasamy ram Sat Sep 19, 2020 8:18 am

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:05 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:02 pm

» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:12 pm

Admins Online

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 7 Empty கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 10:31 pm

First topic message reminder :

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு வைரமுத்து


'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் எழுதிய 'கருவாச்சி காவியம்' என்ற நூல் வெளியீட்டு விழா 2006 டிசம்பர் 16 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

கலைஞர் கருணாநிதி நூலை வெளியிட, முதல் நூலை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பெற்றுக் கொண்டார்.


[You must be registered and logged in to see this image.]


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down


கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 7 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:11 am

காளியாத்தா கோயிலுக்கு வந்து கண்ணு ரெண்டுலயும் அடைமழை கட்டி அழுகுறா கருவாச்சி. "நேர்த்திக்கடன முறிச்சிட்டேன்னா என் நெத்தியில அடிச்சுட்ட ஆத்தா? கோவம் எம் மேலன்னா என் ரெண்டு கண்ணுல ஒரு கண்ண எடுத்திருக்கலாம். ஆனா, என் ரெண்டு பிள்ளையில ஒரு பிள்ளையத் தண்டம் வாங்கிட்டியே! அது சரி, நேர்த்திக்கடன் கட்டாதவள நெஞ்சுல ஏறி மிதிச்சுட்டியே. ஒன் பொருள ஒச்சம் பண்ணுன ஆளுகள இன்னம் மிச்சம் வச்சிருக்கியே. எப்பத் தண்டம் வாங்கப்போற?" ஆத்தாகிட்ட ஒப்பிச்சுட்டு அவ அழுதுபோறா. கஞ்சி ஊத்துறவ பின்னாலயே ஒரு நொண்டி நாய்க்குட்டி அண்டிப்போற மாதிரி, வீரம் கொறஞ்சு வீரியம் கொறஞ்சு அவ கொசுவம் பாத்துக் கூடவே போகுது பூலித்தேவன்.

ஊரே வையுது கட்டையன.

"கருவாச்சி மேல இருக்கிற கோவத்துல கெடாயப் பொட்டையாக்கி விட்டுட்டானே பொண்டுகப் பய", "எதுத்துக் கேக்க ஆளு இல்ல. மொள்ளமாறிப் பயலுகளை எல்லாம் கஞ்சா வாங்கிக் குடுத்துக் கையில போட்டுக்கிட்டான். இப்படியேவா போயிரும் இவன் காலம்? எளைச்சவன வலுத்தவன் அடிச்சா வலுத்தவன வல்லூறு அடிக்காதா?" காத்து வழி வருது எல்லாம் கட்டையன் காதுக்கு. சிரிச்சுக்கிர்றான் அவன் சிரிச்சா நல்லால்ல, நரி சிரிச்சா நல்லாவா இருக்கும்?

கொளத்தங்கரையில அன்னைக்கி அப்படி ஒரு சம்பவமாகிப் போகும்னு கட்டையனும் நெனைக்கல ஆடுகளும் நெனைக்கல. களையெடுத்து முடிச்ச சோளக்காட்டப் பாத்துட்டு ஒத்தையில கரை வழியா வாரான் கட்டையன். வந்தவன் கரையிலயே ஒரு கிளுவம் புதரோரம் உக்காந்துட்டான் ஒண்ணுக்கிருக்க. கரை வழியா வந்த செம்பிலி மந்தைகள அவன் கவனிக்கல பாவம். உக்காந்தவன் தன்ன மறந்து தன் நாமம் கெட்டு அந்த இளம் சோகத்துல கரைஞ்சு கண்ண மூடி இருக்க, செம்பிலி ஆடுக ஒண்ணொண்ணாக் கடந்துபோகுதுக அவன் முதுக ஒரசிக்கிட்டு அவன் எந்திரிக்கல. அவனுக்கு என்னா நம்பிக்கைன்னா சொக்கத்தேவன்பட்டி சுத்துவட்டாரத்துல தன்ன முன்னுக்கப் பாத்தாலும் பின்னுக்கப் பாத்தாலும் ஆடு மாடு முதற்கொண்டு அத்தன சீவராசிகளுக்கும் அடையாளம் தெரியும். தான் ஒண்ணுக்கிருக்கிறதப் பாத்தா ஆனையே ஒதுங்கிப் போகுமே, ஆடா ஒதுங்கிப் போகாது? கட்டையன் நம்பிக்கை வீண் போகல. அவனக் கண்டு ஏதோ ஒரு கெட்ட ஆவி உக்காந்திருக் குன்னு எல்லா ஆடுகளும் ஒதுக்கித்தான் போச்சுக ஒரு ஓரமா. மந்தையில மையத்துல வருது பூலித்தேவன். அது கொம்பு நீளம் உடம்பு பெருசு கரை வேற சிறுசு. அது கொஞ்சம் ஒதுங்கிப்போனாலும் கொளத்துல விழுந்திரும். அதனால சித்தம் போக்கு சிவம் போக்குன்னு தன்போக்குல போகுது. அப்பத்தான் அந்தக் கதையாகிப்போச்சு.

கட்டையன அது கடக்க... அந்த நேரம் பாத்து அது மூக்கு மேல ஒரு முள்ளு ஒரச... அந்த அதிர்ச்சியில அது கொம்ப அங்கிட்டும் இங்கிட்டும் ஒரு ஆட்டு ஆட்ட... அது அவன் முதுகுல குத்திச் சட்டையக் கிழிக்க... அவன் என்னமோ ஏதோன்னு எந்திரிச்சுத் திரும்ப... அப்பக் கடந்து போன கனத்த வகுறு அவன எம்பி ஒரு தள்ளுத் தள்ள... நெல குலஞ்சு பள்ளத்துல சரிஞ்சு உருண்டு கத்தாழம் பொதர் ஓரமா காயாத நரகல் மேல விழுந்து போனான் கட்டையன்.

சீ! வேட்டியெல்லாம் ஆகிப்போச்சே வெளிக் கிருந்த பொருள்னு அருவருப்பாகி, உருண்டு பெரண்டு தடால்னு எந்திரிக்க இடுப்புல குத்தி இழுக்குது இண்டம் புதரு. முள்ளப்புடுங்கி எறிஞ்சிட்டு மூக்கு வெடைக்கிற கோபத்துல கரை மேல கண்ணச் செலுத்திப் பாக்குறான் கட்டையன். இந்தச் சம்பவத்துக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல சாமின்னு போயிக்கிட்டேயிருக்கு பூலித்தேவன்.

அஞ்சாறு நாளாவே சொகமில்ல பிள்ளைக்கு. அழுதுக்கிட்டே யிருக்கான் அழகுசிங்கம். ரவ்வும் பகலும் ஒறங்கல சோறுதண்ணி செல்லல இருட்டப் பாத்தா அலறி எந்திரிக்குது பிள்ள. வெளிச்சத்தப் பாத்தாலும் வீல்னு கத்துது. சுட்டுக் கெடக்கு நெத்தி குளுந்து கெடக்கு வகுறு. ஊர்ப்பட்ட மருந்து குடுத்துப் பாத்தா வைத்தியச்சி ஒண்ணும் ஆகல. "இருளடிச்சிருக்கு பிள்ள பயந்துபோயிருக்கு. இனிமே மருந்து மாயம் கேக்காது ஆத்தா மந்திரிச் சாத்தான் கேக்கும்." வைத்தியச்சியே இப்படிச் சொன்னதுக்கு அப்பறம் மறுபேச்சு இருக்கா? பிள்ளையத் தூக்கி நடந்துட்டா வடவீர நாயக்கன்பட்டிக்கு.

வடவீர நாயக்கன்பட்டி நாயக்கரு மந்திரிக்கிறதுல மன்னன். வேப்பங்கொழ நாயக்கருன்னுதான் சொல்றது அவர. சொந்தப் பேரு மறந்துபோற அளவுக்குத் தொழில் பெருத்த கையி. வத்திப் போனாலும் கரையெல்லாம் பச்சை கட்டி நிக்கிற ஆத்தாங்கர மாதிரி வயசானாலும் லட்சணம் மாறாத ஆளு. பச்ச உருமா செவப்புக் கடுக்கன் கரும்புச் சக்கை மாதிரி கனத்த மீசை. கழண்டு விழுந்திர்ற மாதிரி ரெண்டு கண்ணு ஈரக்கொலைய இழுத்து இறுக்கிப் புடிக்கிற பார்வை. கனத்த கம்பளிய விரிச்சு உட்காந்தாரு தாய் மடியில பிள்ளைய உட்காரவச்சாரு. பொங்கப் பானையில புதுத் தண்ணி ஊத்தி ஒடிச்ச வேப்பங்கொழைய ஊறப்போட்டாரு. கண்ண மூடி முணுமுணுமுணுன்னு எதோ மந்திரம் சொன்னாரு. வேப்பங்கொழையச் சட்டுன்னு எடுத்து, பிள்ள மூஞ்சியில தண்ணி தெறிக்க அடிச்சு மந்திரிச்சாரு. வேப்பங்கொழத் தண்ணிய நீ குடி மொதல்லன்னு தாய் குடிக்க வச்சாரு பிள்ளைக்கும் குடுன்னு குடுத்தாரு.

அழுகை அடங்கிப்போச்சு அழகுசிங்கத்துக்கு.

நாயக்கரு மந்திரிச்சதும் குணக் குறி தெரியுதேன்னு குளுந்துபோனா கருவாச்சி மந்திரம் போட்டு மந்திரிச்சதுல புடிச்ச பீடை விட்டுப்போச்சுங்கறது அவ கணக்கு. ஆனா அது இல்ல காரணம். குண்டாச்சட்டியத் தலையில கவுத்த மாதிரி நாயக்கரு கட்டியிருந்த உருமா, சிவீர்ன்னு கண்ணுல அடிக்கிற கடுக்கன், வாய மூடித் தாடையத் தடவுற மீச, அழுதேன்னா கொன்னேபுடு வேன்னு கண்டிப்பாச் சொல்ற கண்ணு... இதுகளை யெல்லாம் பாத்துப் பாத்து இந்தப் புது பயத்துல பழைய பயத்த மறந்துபோனான் பய.

இந்த நெசம் நாயக்கருக்கும் சின்னப்பயலுக்கும் மட்டும்தான் தெரியும். இது தெரியாததனால கண்ணீர் முட்டுது கருவாச்சிக்கு. இன்னதுதான் காணிக்கைங்கிறது இல்ல குடுத்தத வாங்கிக்கிட்டுக் கும்பிட்டு அனுப்பிருவாரு நாயக்கரு.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 7 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:11 am

"ஏதோ என்னால ஆனது"ன்னு காலே அரைக்கா ரூவா காணிக்கை வச்சா பிள்ளையத் தூக்கிட்டுப் புறப்பட்டு வந்துட்டா
.
வெள்ளையாங்கரட்டுல வெயில் தாந்திருச்சு. கரடுகள்ல ஆடு மாடு மேய்க்க வந்த ஆணும் பொண்ணும் நக்கிலிச்சாம் பாறையில மொது மொதுன்னு வந்து குமுஞ்சுபோச்சுக.

"பாறைக் கறி போடுறாகளாம்...
பாறைக் கறி போடுறாகளாம்..."

ரொம்ப நாளாக் கவுச்சி காணாத நாக்குல எல்லாம் எச்சி ஊறி ஒழுகுது. தின்டுபாத்த ஆளுகளுக்குத்தான் தெரியும் பாறைக் கறி மாதிரி ருசியான கறி அம்பத்தாறு தேசத்துலயும் இருக்க முடியாதுன்னு. அடுப்புங் கெடையாது சட்டியுங் கெடையாது ஆனாலுங் கறி திங்கலாம்.

என்ன பண்ணுவாக தெரியுமா?

ஒரு பாறையில தண்ணி ஊத்திக் கசகசன்னு கழுவி விடுவாக சுத்தமாயிடும் பாறை. பாறையக் காய விட்டு அது மேல கட்டையப் போடுவாக. கட்டையில தீ மூட்டி எரியவிடுவாக. கட்டை எரிய எரியச் சுட்டுப்போகும் பாறை. கட்டை எரியும்போதே, உப்பும் மொளகாத்தூளும் போட்டுப் பச்சைக் கறியப் பெரட்டு பெரட்டுன்னு பெரட்டி வச்சுக்கிரணும். கட்டை எரிஞ்சு ஓஞ்சதும் சாக்க எடுத்து ரெண்டு வீசு வீசுனா சாம்பல் பறந்திரும். கொதிச்சுக் கெடக்குமய்யா பாறை வெரல் தொட்டா நகம் வெந்துபோகும். பெரட்டி வச்ச கறிய அதுல அள்ளி எறியணும். சும்மா சொய்ங் சொய்ங்கிற சத்தத்தோட சுருங்கி வேகும் கறி. எண்ணெயெல்லாம் எதுக்கு? எல்லாக் கறித் துண்டுகள்லயும் உருகுற கொழுப்பு ஓடி ஓடிச் சேரும். வெந்ததும் உள்ளங்கையில எடுத்து ஊதி ஊதி வாயில போட்டா தேவாமிர்தம் தேவாமிர்தம்ங்கிறாகளே அதுகூட இம்புட்டுச் சூடா இருக்கு மான்னு தகவல் இல்ல இது இருக்கும்.

அன்னைக்குப் பாறைக் கறி போட ஆள் சேத்தான் கட்டையன். சுட்டுக்கிட்டிருக்கு பாறை உரிக்கப் போறாங்க ஆட்டை.

"ஏ பக்கிகளா! ஓடிப் போறீகளா இல்ல ஒங்களயும் பாறைக் கறி போட்டுப் பங்கு போடவா?" ஒரு அமட்டு அமட்ட வும், ஆடு மாடு மேய்க்கிற கூட்டம் ஒரே ஓட்டமா ஓடி எட்டி நின்னு வேடிக்கை பாக்குது.

பாறைக் கறி போடக் கொண்டாந்த ஆட்ட சடார்னு சாய்க்குறாக தரையில. அது மிசுங்காம இருக்க, பின்னங் கால் ரெண்டையும் பின்னிக் கொளம்போட கொளம்பு மூட்டி மாட்டிட்டாக. முன்னங்கால் ரெண்டுல ஒரு கால ஒதறவிட்டு, ஒரு கால மட்டும் அமுக்கிக் கிட்டு, பெருவிரல வச்சுக் கழுத்துல ஒரு அழுத்து அழுத்திச் சங்க லேசா ஒதுக்கிட்டு சங்குக்குக் கீழே கத்திவச்சான் சலம்பல் பாண்டி. ஆடு அறுக்கவே பெறந்தவன் அவன். ஆத்தா தொப்பூழ்க் கொடியக்கூட அவ அறுக்குமுன்ன இவன் அறுத்துட்டு வந்தவன்னு பேசுவாக ஊர்ல. அழுத்துன கத்தி அறுத்ததுமே பீச்சியடிக்குது ரத்தம். அமுக்குன ஆளுகளத் தூக்கித் தூக்கிப்போட்டுத் துடிக்குது ஆவி போற ஆடு.

பரம்பரையா ஆடு அறுக்கிறவன் மொத்த ரத்தத்தையும் கத்தி முனையிலேயே வடியவிடுவான் அப்படித்தான் வடியவிட்டான் அவனும். நெம்பிப்போச்சு சருவச்சட்டி. பீச்சியடிச்ச ரத்தவரத்து கம்மியானதும் அறுத்த சங்க மடக்குன்னு ஒடிக்க அது படக்குங்கிற சத்தத்தோட மிச்சமிருந்த ரத்தத்தையும் துப்பிருச்சு துப்பி. அறுபடுற எல்லா ஆட்டுக்கும் மொதல்ல ரத்தம் போயிரும் அப்புறம் சிறுநீர் பிரியும் சிறுநீர் பிரிய உயிரும் போயிரும்.

"உசுர் போயிருச்சு... உசுர் போயிருச்சு..."

எட்டி நின்னு கத்திக் கைதட்டுது ஆடு மாடு மேய்க்கிற கூட்டம்.

"அந்தா பாரு தோல உரிக்கிறாக..." பின்னங்கால் சப்பையில ஆரம்பிச்சுத் தொடை வழி புகுந்து சும்மா ஆகாயத்துல அம்பு போற மாதிரி பரபரபரன்னு பரவுது கத்தி. அதே மாதிரி மறு தொடையிலயும் கத்திவச்சுக் கீறிக் கிழிச்சு, கருவேலங்கிளையில தலைகீழாத் தொங்கவிட்டு என்னமோ வாழப்பழத்த உரிக்கிற மாதிரி மேலயிருந்து உரிச்சு வாரான் தோல. பெருவிரலச் சதையில பதிச்சு அழுத்தி அழுத்தி இழுத்தா சரசரன்னு வந்திரும் தோலு. ஆனா ரெண்டே ரெண்டு எடத்துல மட்டும் வர மாட்டேன்னு வம்பு பண்ணும். ஒண்ணு காயைக் கடக்கும்போது ரெண்டு நெஞ்சத் தாண்டும்போது. அந்த ரெண்டு எடத்துல மட்டும் லேசாக் கத்தி போட்டு ஓட்டை விழுகாம உரிக்கணும். ரெண்டு எடத்துலயும் முத்தம் வைக்கிற மாதிரி கத்தி வச்சு லேசா உருவணும். வெடலப்புள்ள மொதல்மொதல்ல கட்டின சீல அள்ளையில குத்துனா அவுந்திரும் பாருங்க... அப்படிக் கழண்டு துண்டா வந்து விழுந்துபோகும் தோலு. பெருங்கனம் கனக்குது தோலு தோல் மட்டும் பத்து வீச இருக்கும் போலருக்கு.

சும்மா வெண்ணெயப் பூசிவச்ச மாதிரி வெண் சவ்வும் செங்கறியுமாத் தொங்குற ஆட்ட உயிர்த்தலத்துல இருந்து நெஞ்சு வரைக்கும் ஒரு கீறுக் கீறி, அட்டத்துல ரெண்டு பக்கமும் ரெண்டு கீறு கீறவும் குபுக்குன்னு வெளிய வந்திருச்சு கொடலு. பெருங்கொடலச் சுத்திக் கொழுப்போ கொழுப்பு! கொழுப்புல ஒரு கீத்த அறுத்து வாயில போட்டுத் தேங்காச் சில்லு மாதிரி நறுச் நறுச்னு தின்னும் பாத்துக்கிட்டான் சலம்பல் பாண்டி.

கொடலு, ஈரலு, நுரையீரலு மூணையும் எடுத்துத் தனிச் சட்டியில துண்டாப் போட்டுட்டு, கழுத்துக் கறி, முன் சப்பைக் கறி நெஞ்சுக் கறி மூணையும் அறுத்தறுத்துச் சுடுபாறை யில எறியிறான் சலம்பல் பாண்டி. சதை சதையா வந்து விழுகவும் சங்கீதம் படிக்குது பாறை. கறிகறிப்ரியா ராகமோ என்னமோ?

"அண்ணனுக்கு மொதல்ல ஈரலச் சுட்டுக் குடுங்கடா..."


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 7 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:12 am

"தின்னும்போதே ரத்தம் ஊறுதடா"ன்னு வெறியேறிப் பேசுறான் கட்டையன்.

அப்புறம் என்ன சொல்ல! காடே கறி மணக்குது சாராயத்த ஊத்தித் தாளிச்சுப்பிட்டாங்க தாளிச்சு. வடவீர நாயக்கன் பட்டியில மந்திரிச்சு, பொடி நடையாப் பொழுசாய வீடு வந்து சேந்தகருவாச்சி பிள்ளையப் படுக்கப் போட்டுட்டு அடுப்புக் கூட்ட ஆரம்பிச்சா. நெய் மாதிரி லேசாச் சீமத்தண்ணி தெளிச்சுப் பருத்திமாரப் பத்தவச்சா. மேயப்போன தொழுமாடுகளும் மந்தையாடுகளும் ஊருக்குள்ள வந்திருச்சுக. மாட்டு மணிச் சத்தத்துல அந்தச் சாயங்காலமே நெம்பி வழியுது. இவ வீட்டு மாடு கன்டு மட்டும் காங்கல பூலித்தேவனும் வரல கொண்ண வாயனும் வந்து சேரல. புல்லுகில்லு சேத்துப் பொழுது போயி வருவான்னு இருந்தவளுக்கும் நேரம் ஆக ஆக நெஞ்சு பதறுது.

வாசலப் பாக்குறா வாசலத் தாண்டித் தெருவுக்கு ஓடி வாரா. தெருவுக்கு வந்து வந்து திரும்பித் திரும்பிப் போறா. வரல வர்ற அறிகுறியும் தெரியல. நல்லா இருட்டிருச்சு.தண்ணியக்கூட பத்தவச்சிரலாம், என்னியப் பத்தவைக்க முடியாதுன்னு முரண்டுபண்ற காடா வெளக்கத் திரியத் திரிச்சுவிட்டு, அடுப்புல கெடந்த நெருப்பெடுத்து அவ பத்தவைக்க... தெறந்த வாசல்ல தொப்புட்டீர்னு விழுந்துச்சு என்னமோ. என்னாது அது? நனஞ்ச சீலமாதிரி என்னமோ விழுந்துகெடக்கே. கையில புடிச்ச வெளக்கோட ஓடிவந்து பாத்தா. நெளிநெளிநெளின்னு கெடக்கு ஒரு பொருள் தரையில.

தொட்டுப் பாத்தா தோலு. எடுத்துப் பாத்தா ஆட்டுத் தோலு மோந்து பாத்தா "பூலித்தேவா!"

உசுர் கிழியக் கத்துனவ தோல் மேல மயக்கம் போட்டு விழுந்துட்டா மல்லாக்கா. விளக்கவிட்டு வெளிய குதிச்சு வாயிலயும் வயித்துலயும் அடிச்சுத் துடிச்சுத் துடிச்சு எரியுது திரியில இருந்த தீபக்கொழுந்து!

குய்யோ முறையோன்னு ஊரே கூடி நிக்குது கட்டையன் வீட்டு வாசல்ல. தகவல் தெரிஞ்சு மொதலக்கம்பட்டி ஆளுக வேற சாமியாடி வந்துட்டாக சண்ட புடிக்க.

"பொறுமையா இருங்கப்பா"ன்னு சொல்லிப்பாக்குதுக உள்ளூர்ப் பெருசுக.

"பொறுமை என்னய்யா பொறுமை. இன்னைக்கி ஆட்டக் கடிச்சான் நாளைக்கி மாட்டக் கடிச்சு மனு சனக் கடிப்பான்.பாத்துக்கிட்டே பல்லாங் குழி ஆடச் சொல்றீகளா?"

"பதறாதீகப்பா. பஞ்சாயத்துல பேசிக் கிருவோம்."

"பஞ்சாயத்தென் னய்யா பஞ்சாயத்து? ஒலக்கையக் கள வாண்டு புட்டான்னு பிராது குடுத்தா, துரும்பு அபராதம்னு தீர்ப்புச் சொல்ற பஞ்சாயத்து. விடுங்கய்யா, தகப்பனையும் மகனையும் சேத்துப் பாறைக்கறி போட்டு, காக்கா நீ தின்னு, கழுகு நீ தின்னுன்னு பரசி விட்டுப் போயிர்றோம் பரசி."

இம்புட்டுச் சலம்பல் நடக்குது. தகப்பனும் மகனும் வீட்டுக்குள்ள இருக்காங்களே தவிர வெளியே வந்தபாடக் காணம்.

"ஏ கூப்பிடுங்கடா அவன, இல்ல உள்ள வந்து கொல்லுவோம்."

"ஏம்ப்பா இந்தத் தவ்வுத் தவ்வுறீகளே, கொலக்குத்தமா ஆகிப்போச்சு?"

"ஒன் வீட்டு ஆட்ட நீ வெட்டிக்கிட்டா அது கொலை இல்ல என் வீட்டு ஆட்ட நீ வெட்னா அது கொலதான்."

கிறீச்னு தொறக்குது தலவாசக் கதவு. என்னமோ விருந்துக்கு வந்தவுகள விசாரிக்க வந்த மாதிரி சத்தமில்லாம நடந்து வாராரு சடையத்தேவரு. அவர் வழக்கமா வெத்தல இடிக்கிற கல்லுமேல தன்ன இடுப்புக்குக் கீழ கொஞ்சங் கொஞ்சமா எறக்கிவச்சு உக்காந்துட்டாரு. பையில இருந்த பாக்க எடுத்து வெத்தல ஒரல்ல போட்டு டொக்கு டொக்குனு தட்டிக்கிட்டே கேக்குறாரு: "ஆடு சுட்டுத் தின்டவன் என் மகன் தான்னு சாட்சி இருக்கா?"

"சாட்சி வேணுமா சாட்சி... வரச் சொல்லு ஒன் மகன வகுத்த வகுந்து உள்ளயிருக்குற ஈரல எடுத்து இந்தான்னு காமிக்கிறோம்."

"இருக்கலாம்... ஈரல்கூட இருக்கலாம். அது ஒங்க வீட்டு ஆடுன்னு எழுதியிருக்குமா ஈரல் மேல."

"யப்பா சடையத்தேவா! நீ வாய் பெருத்த ஆளு வக்கீல் மாதிரி பேசுவ. சாட்சி இல்லாம நியாயம் கேக்க வர மாட்டமப்பா" உருமாப் பெருமாத் தேவரு பொறுப்பா பதில் சொல்ல,

"என்ன சாட்சி?"னு சாணியில விழுந்த மறு மாத்தத்த எடுக்கிற மாதிரி சடையத்தேவரு அலட்சியமாக் கேட்கவும் கடுப்பாகிப் போனாரு காவக்கார சக்கணன்.

"கொண்ணவாயன அடிச்சு உப்பந்தரிசு ஓடையில போட்டது, மாடுகளப் புடிச்சு ஒடசாலி மரத்துல கட்டி வச்சது, கருவாச்சி கெடாய நக்கிலிச்சான் பாறையில வெட்டிப் பாறைக்கறி போட்டது எல்லாத்துக்கும் கண்ல பாத்த சாட்சி இருக்கு. என்னமோ நாங்கள்லாம் கேணப் பயக மாதிரி கிறுக்குக் குத்தாத பெருசு".

"இப்ப எல்லாரும் கூடி எதுக்கு வந்திருக்கீக?"

"தண்டம் வாங்க வந்திருக்கோம்" உள்ளூர்ப் பெருசு நிதானமாகச் சொல்ல, "தண்டத்த நீங்க வாங்கிக்கங்க, அவன் தலைய நாங்க வாங்கிக்கிறோம்"னு மொதலக்கம்பட்டி ஆளுகள்ல ஒருத்தன் எருமைத் தொண்டையில கரகரன்னு பேச, "எவன் தலையடா வாங்குவீக?"ன்னு வீச்சரிவாளோட வெளிய தவ்வி வந்துட்டான் கட்டையன்.

அதுக்குள்ள அவன் கைத்தடி களுக்குத் தகவல் போயி வேல்கம்பு வெட்டரிவாளோட வந்து குமுஞ்சு போனாக. அவன் ஒண்ணு சொல்ல, இவுக ஒண்ணு சொல்ல, அவன் அரிவாள் எடுக்க, இவுக சூரிய எடுக்க "வேணாம்டா வெட்டுப்பலி குத்துப்பலி ஆகிப்போச்சுன்னா ஏழு தலமொறைக் கும் எந்திரிக்க முடியாதடா"ன்னு பெருசுக சத்தம் போட்டு அமத்த, கடைசியில பதிமூணே கால் ரூவா தண்டத்தோட முடிஞ்சுபோச்சு பஞ்சாயத்து.

காளியம்மன் கோயில் வாசல்ல மொனையில்லாத மம்பட்டி, மூக்கில்லாத கடப்பாரைய வச்சுக் கண்ணீரு ஒழுக ஒழுகக் குழி தோண்டிக்கிட்டிருக்கா கருவாச்சி. கால்சட்ட வழியா ஒண்ணுக்குப் போயிக்கிட்டு மூக்கு ஒழுக அழுது நிக்கிறான் சின்னப் பய அழகுசிங்கம். பொணங் கெடக்குற மாதிரி அட்டத்துலேயே கெடக்கு பூலித்தேவன் தோலு.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 7 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:12 am

"நான் ஒன்னிய ஏய்க்க நெனைக்கல நீ என்னிய ஏச்சுப்பிட்டியே ஆத்தா. வளத்த பாசத்துல புத்தி மாறிட்டேன் வெட்ட மாட்டேன், விட்ருன்னேன். வெட்டவச்சுட்டியே. ஒன் வாசல்ல வந்து கெடா அறுத்திருந்தா ரத்தம் ஒனக்கு கறி எங்களுக்கு. இப்ப ஒனக்குக் காணிக்கை செலுத்த நான் புடிச்சு வளத்த பூலித்தேவன் தோல்தானாத்தா இருக்கு இந்தா ஏத்துக்க."தோலத் தூக்கிக் கடைசியா ஒரு தடவ மோந்து பாத்துட்டு அதுல மஞ்சத் தண்ணி தெளிச்சுக் கும்புட்டுப் போட்டா குழியில அழுதா. "வாடா மகனே"னு அவன இழுத்துப் பெறங்கையில மண்ணுத் தள்ளவச்சா. மிச்ச மண்ண மம்பட்டிவச்சு இழுத்தா குழிய மூடுனா. மம்பட்டிய எறிஞ்சிட்டு தலைப்பிள்ளையப் புதைச்சவ மாதிரி தலையில அடிச்சு அடிச்சு ஒப்புச் சொல்லிஅழுதா.

"பெத்தெடுத்து நான் வளத்த
பெரியமகன் மண்ணுத் தள்ள
தத்தெடுத்து நான் வளத்த
தங்கமகன் காங்கலையே!
புல்லு மணம் மாறலையே!
புழுக்கை இன்னும் காயலையே!
காயடிச்ச பிள்ளையப் போய்
நாயடிச்சுத் தின்னுருச்சே!
பெறவின்னு ஒண்ணிருந்தா
பிள்ளையாக நீ வாடா!
ஆடாகப் பெறந்தாலும்
அடிவயித்தில் சுமப்பனடா!"


குழி மேல விழுந்து அழுது கெடந்தவளப் பதறிப்போயித் தூக்குனாக பஞ்சாயத்துக்குப் போயி வந்த ஆளுக. "ஆத்தா செத்தே பொழச்சுக் காமிக்கிறவ ஆடு செத்தாப் பொழைக்க மாட்டியா? எந்திரி தாயி எந்திரி."

அவ கையில குடுத்த தண்டப் பணம் பதிமூணே கால் ரூவாயையும் காளியம்மன் கோயில் உண்டியல்ல போட்டுக் கண்ணத் தொடைச்சுக் கிட்டா கருவாச்சி. "பிள்ளைக்கும் சொகமில்ல ஒன் ஒடம்பும் சுடுது. வா எங்க வீட்டுல வந்து ரெண்டு நா இரு வா."

கனகாம்பரமும் பவளமும் கருவாச்சியக் கூட்டிட்டுப் போறாக கையோட.

"அழுகாதடா மகனே!"அழுகுசிங்கத்தத் தூக்கித் தோள்ல வச்சுக்கிட்டான் மொதலக்கம்பட்டி அன்னக்கொடி கருவாச்சியக் கட்டிக்கிற வேண்டிய மொறமாமன். மொதலக்கம்பட்டி அன்னக்கொடி நல்ல வளத்தி. ஆள் கறுப்புன்னாலும் அம்சமான அழகன். சின்ன வயசுல ஊளமூக்கு ஒழுக கருவாச்சிய மொதலக்கம்பட்டிக் குத் தூக்கிட்டுப் போறப்பவெல்லாம் "அந்தா பணியாரம் கேட்டு ஆத்தாகிட்ட அழுதுக்கிட்டிருக் கான் பாரு. அவன் தான்டி ஒம் புருசன்"னு அன்னக்கொடியக் காமிப்பா பெரியமூக்கி. குடும்பம் இடையில நொந்து நொடிச்சுப் போச்சு பஞ்சம் பொழைக்க, வடக்க கண்காணாத தேசத்துக்குப் போயித் தகவல் அத்துப் போச்சு. உண்மையா ஒழச்சு, நேர்மையாப் பொழைச்சு முறுக்குச் சுட்டு வித்து நிமிந்திருச்சு குடும்பம். காலுக்குச் செருப்பு, கைக்குக் கடிகாரம்னு ஏகத் தடபுடலாகி சொந்த ஊருக்குத் திரும்பி நெலபுலம் வாங்கி வட்டிவாசிக்கெல்லாம் குடுத்து, வாழ்வு பெருத்துப்போனாலும், பழைய பந்தம் பாசம் உறவு மட்டும் கரையாத கல்லா நெஞ்சுக்குழியிலயே கெடக்கு.

சுப்பஞ் செட்டியார் வீட்டு உள் திண்ணையில உக்காந்து அழகுசிங்கத்தை இழுத்து மடியில உக்காரவச்சுக்கிட்டு "முட்டாயி வாங்கிக்கடா மகனே முட்டாயி"ன்னு உள் பையில கைய விட்டு எட்டணாவ எடுத்து நீட்னான் அன்னக்கொடி. வாங்கக் கைய நீட்டிட்டு அன்னக் கொடிய ஒரு பார்வை, ஆத்தாள ஒரு பார்வை மாத்திமாத்திப் பாத்தான் அழகுசிங்கம்.

"நாங்க அசலாள் இல்லப்பா, ஒன் சித்தப்பன்தான் வாங்கிக்கடா ராசா வாங்கிக்க."

காசை அவன் சட்டைப் பையில போட்டுவிட்டுக் கண்ணையும் தொடச்சு விட்டான்.

"அழுகப் பெறந்த வம்ச மாடா, நீயும் ஒங்க ஆத்தாளும்? ஆம்பள இல்லாத வீடுன்னுதானடாஆட்டப் புலி அடிச்சுப் புடுச்சு. ஒன் சித்தப்பன் ஒன்கூடவே இருக்கேன்னு வச்சுக்க... இது நடந்திருக்குமா? ஒங்க வீட்டுச் சாணியிலயாச்சும் ஈ ஒட்டியிருக்குமா?"

கதவுல முதுகு சாச்சுக் கால்நீட்டி உள்வீட்டுல ஒக்காந்திருந்த கருவாச்சிக்குத் துணுக்குன்னுச்சு.

அவன் இன்னும் சத்தம் கூட்டிப் பேசுறான்... காது கேக்கட்டும் கருவாச்சிக் குன்னு. "எச்சிபட்டுப் பண்டம் பழுதாகிப் போச்சுன்னு நான் நெனைக்கலப்பா பொதைச்சு வச்சு எடுத்தாலும் தங்கம் தங்கந்தானடா மகனே. ஏங்கூடவே இருந்திர்றியா?"

பையில போட்ட துட்ட எடுத்துத் தொட்டுத் தொட்டுப் பாத்துக்கிட்டு ஆகட்டும்னு தலையாட்டினான் அழகுசிங்கம்.

உள்ளயிருந்து கத்திச் சொன்னா கருவாச்சி, "துட்டத் திருப்பிச் சித்தப்பன் பையிலயே போட்டுர்றா செல்லம்."

அவன் போடல கையில வச்சுக்கிட்டுக் கனாக் கண்டுக்கிட்டே யிருக்கான்.

"நீ வெவரமாயிருக்க. ஆத்தாளுக்குத் தான் பத்தாது... சின்ன வயசுலயே மனசுல முடிச்சுப் போட்டு விட்டாகளா... அவுத்தாலும் அவுக்க முடியல அத்தாலும் அக்க முடியல. மனசு மறுகுதடா மகனே. வசதி இருக்குடா சித்தப்பனுக்கு வந்திரு. அப்பன் நானிருக்க நீங்க அனாதை ஆகலா மாடா? நாளப்பின்னப் பள்ளிக்கூடத்துல போயிச் சேரப் போறன்னு வச்சுக்க ஒம் பேரு என்னான்னு கேட்டா என்ன சொல்லுவ?"

எழுத்துக்கூட்டி எழுத்துக்கூட்டி அந்தச் சின்னப்பய சொன்னான், "அ...ல...கு... சி...ங்...க...ம்..."

"சரி... என்னா அழுகுசிங்கம்னா என்ன சொல்லுவ?" பய மேலயும் கீழயும் முழிச்சான். உள்ளயிருந்து ஆத்தாகாரி கத்துனா "க.அழகுசிங்கம்!"

இதெல்லாம் கேட்டுக்கிட்டேயிருந்த பவளம் இப்ப உள்ள புகுந்தா. "இன்னும் பழச மறக்கல போலருக்கு. க... கட்டையன் தானே.?"

"இல்ல கருவாச்சி."

கொஞ்சநேரம் அது ஆளில்லாத வீடா அமைதியாகிப்போச்சு.

"குடுத்த துட்ட சித்தப்பன் பையில போடுறா"ன்னு போடச் சொல்லிட்டு, அவன அடிச்சு இழுத்துத் தூக்கி உள்ள ஓடிப்போனா கருவாச்சி.

சொக்கத்தேவன் பட்டியக் கடக்கிற வரைக் கும் அன்னக்கொடி குனிஞ்ச தல நிமிரல. கண்ணுல விழுந்த தூசியத் தொடைக்கிறவன் மாதிரி கண்ணீரையும் தொடைச் சுக்கிட்டான், தலையில கட்டுன துண்ட அவுத்து. அவ பொழப்புக்குள்ள வந்த ஒரு நல்ல ஆத்மாவும் வேட்டிய மடிச்சுக் கட்டிக் கிட்டுப் பொடி நடையாப் போயிருச்சு.

ரெண்டாம் நாளு கருவாச்சி லேசாப் பேச்சு குடுத்தா: "ஒம் புருசன் இங்க வாரதே இல்லையா கனகம்?"


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 7 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:13 am

"வருவாக. வாழப்பழச் சீப்பு ஒண்ணத் தோள்ல போட்டு, முறுக்கு மிச்சரு சிலேபின்னு வாங்கி ஒண்ணாச் சரடு சுத்தி ஒரே பையில போட்டு எப்பவுமே சாயங்காலம் வருவாக. என் பொண்டாட்டிய விடிஞ்சு கூட்டிட்டுப் போறேன்னு ராத் தங்கல் தங்குவாக. சோலி முடிஞ்சதும் சொல்லாமப் போயிருவாக."

"இது என்னாடி பொழப்பு..? வாழவும் வாழாம தீக்கவும் தீக்காம..? எதுக்கும் ஒரு முடிவு இருக்கு. இதுக்கு இருக்கா இல்லையா?"

"நான் ஒரு முடிவுக்கு வந்துட்டனக்கா. காஞ்ச கத்தாழ நாராப் போயிட்டாரு எங்கப்பன். ஒரு மகளக் கட்டிக் கொடுத்தும் வாழல ஒரு மகளக் கட்டிக் குடுக்கவே முடியல. நான் மண்டையக் கிண்டயப் போட்டுட்டாப் பொம்பளப் பிள்ளைக ரெண்டும் அனாதிக்காட்ல அலைஞ்சிருமேன்னு பொலம்பிப் பொலம்பி இத்துப் போனாரு. பொழப்பு தான் நல்ல பொழப்பா இல்லாமப் போச்சு அவருக்கு. சாவாவது நல்ல சாவு சாகட்டுமேன்னு அக்கா தங்கச்சிக கூடி ஒரு முடிவு பண்ணிட்டோம்."

"என்னா முடிவு பண்ணீக?"

என் புருசனுக்குக் கழுத்து நீட்ட என் தங்கச்சியச் சம்மதிக்கவச்சுப் புட்டேன்."

கருவாச்சி ஒரு பேச்சும் பேசல.

"ஒனக்கு அது புடிக்காத முடிவா இருக்கலாம். ஒம் பொழப்புலயும் எம் பொழப்புலயும் நம்மளுக்குப் புடிச்சதா நடந்துக்கிட்டிருக்கு?"

"இது ஒங்க அப்பனுக்குத் தெரியுமா?"

"தெரியும்."

"என்ன சொன்னாரு?"

"ஓட்டச் சட்டின்னாலும் கொழுக்கட்ட வெந்தாப் போதும்"னு பெருசா இழுத்துப் பெருமூச்சுவிட்டுச்சு பெருசு."

பொம்பளைக ரெண்டு பேரும் போயிட்டா, இந்தக் கெழவன் கதி என்னான்னு யோசிச்சு யோசிச்சு மண்ட காஞ்சுபோனா கருவாச்சி. மறுநாள் பொழுசாய வந்துட்டானய்யா முத்துக் காமு, காடுமேடு மேஞ்ச ஆடு மாடு வீடு சேர. இந்த மொற வாழப்பழச் சீப்பையும் முறுக்கையும் காணோம். செக்குல தலையக் குடுத்தவன் மாதிரி தலையில எண்ணெய் ஒழுக வந்தவன், கையில மஞ்ச மஞ்சேர்னு ஒரு மஞ்சப் பைய வச்சிருக்கான். பிரிச்சுப் பாத்தா அர வீசை ஆட்டுக் கறி எலும்பு கிலும்பு இல்லாம. "குழம்பு வை பாதிய வறுத்திரு பாதிய"ன்னு சொல்லிப்புட்டு வாசம் புடிக்க உக்காந்துட்டான் வாசல்லயே.

"யண்ணே! எப்பக் கூட்டிட்டுப் போகப் போற எங்க கனகத்த?"கருவாச்சி லேசா அவன அசைச்சுப் பாக்குறா.

"நானா மாட்டேங்குறன்...? ஒருத்திக்கு ரெண்டு பேரையும் வச்சுப் பொழைக்கிறேங்கறேன். மாமனுக்கும் மனசு இல்ல மச்சினிச்சிக்கும் மனசில்ல."

சுவர்ல பூச்சி புடிக்கிற பல்லிய வேடிக்கை பாத்துக்கிட்டிருந்த சுப்பஞ் செட்டியாரு, பல்லியப் பூச்சி முழுங்கினதும் பார்வையத் திருப்பினாரு. "மனசக் கல்லாக்கிக்கிட்டுச் சொல்றேன் தாயி. கல்யாணம் பண்ணி அவளயும் கூட்டிட்டுப் போகச் சொல்லு"இத்துப்போன போர்வையை இழுத்துப் பொத்தி இருமிக்கிட்டே சொன்னாரு சுப்பஞ் செட்டி.

"பழைய பாக்கியக் கழிச்சிவிட்ருங்க. பவளத்தையும் கூட்டிட்டுப் போயிடறேன்."

"பழைய பாக்கின்னா?" "வளவியிலேயே பொழங்கிப் பொழங்கி மாமனுக்கு வைர மோதிரம்ங்கிறது மறந்தே போச்சே."

"ஒரு ஈயச் சொம்பு வாங்கக்கூட வக்கில் லாமக் கெடக்கேன். வைரமோதிரத்துக்கு எங்க போவேன் மாப்பிள்ள?"

செத்தவடம் அங்க சத்தம் செத்துப்போச்சு யாரும் பேசல. தட்டுல வச்ச சோளக்களியில ஈ ஒண்ணு மாட்டிக்கிட்டு முழிக்கிறதப் பாத்துக் கிட்டே கழுத்துல கெடந்த தங்கச் சங்கிலியச் சப்பிக்கிட்டு நிக்கிறான் அழகுசிங்கம். அவன உத்து உத்துப் பாத்தா கருவாச்சி. அந்த மூணு பவுன் சங்கலிய படக்குன்னு கழத்துனா. அழுத பிள்ளைய அணச்சு வாயப் பொத்துனா. "இந்தாங்க இத வைங்க. நான் நகை போடப்போறதில்ல. நகை போட்டு அழகு பாக்க எனக்குப் பொம்பளப் பிள்ளையும் இல்ல. இத உருக்கி ஒரு மோதிரம் செஞ்சு குடுத்திருங்க. என் தங்கச்சிக பொழப்பு கரையேறிடும், இவளுக போனாப் போறாளுக. ஒங்களுக்கு என்னைக்கும் கூட இருக்கப்போற மக நாந்தான்."

படுத்துக்கெடந்த மனுசன் படார்னு எந்திரிச்சு அவ கையப் புடிச்சு மூஞ்சியில வச்சுக்கிட்டு மாடுமாதிரி அழுதாரு.

அக்கா தங்கச்சிக ரெண்டு பேரும் நெஞ்சுல கைவச்சு நின்னு போனாக.

"எங்களுக்குக் குடுத் துட்டு நீ என்ன செய்வ தாயி? என்ன செய்வ?" பொத்தல் விழுந்த போர்வைய எடுத்துக் கண்ணத் தொடச்சுக் கிட்டே கதர்றாரு சுப்பஞ் செட்டியாரு.

"எனக்கு என்னய்யா இருக்கு? ஒரு முழக் குச்சுன்னாலும் ஒழுகாத குச்சு கால் வயித்துக் கஞ்சின்னாலும் கடனில்லாத கஞ்சி."

இந்தக் குழப்பத்துல இன்னும் கறித்தண்ணி வைக்கலையேங்கிற கவலையில காதுல இருந்த அரைப்பீடி பத்தவச்சு, புண்பட்ட நெஞ்சப் புகையவிட்டு ஆத்துன்னு ஆத்திக்கிட்டி ருக்கான் முத்துக்காமு.

"கேட்டுக்க மாமு..." ஆரம்பிச்சான் முத்துக்காமு. "ஆனி இருவத்தேழு நாளு நல்லாயிருக்கு. அதுதான் கடைசி முகூர்த்தம். அதவிட்டா ஆடி வந்துரும். நாளைக்கு ஒரே நாள்தான் ஊட இருக்கு. ஒன்னிய நானு கொட்டுக்காரனக் கூப்பிடச் சொல்லல கூத்துக் காமிக்கச் சொல்லல பந்தல் போடச் சொல்லல பந்தி வைக்கச் சொல்லல மோதிரம் போட்டு ஓட்டிவிட்ரு கழுதைகள எங்கூடங்கறேன். ஆனி இருவத்தேழு போயிருச்சுன்னு வச்சுக்க, நான் போயிருவேன். அப்பொறம் ஒன் விக்காத வளவிக மாதிரி அவளுகள வீட்லயே வச்சுக்க நான் எவளையோ வச்சுக்கிர்றேன்." வீடே கேக்க வீர வசனம் பேசிட்டு, "வார வழியில பாத்தேன். அன்னஞ்சி யில ஆடு உரிக்கிறாக இன்னக்கி"ன்னு தணிஞ்ச குரல்ல சொன்னான்.

விடியுது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 7 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:13 am

சுப்பஞ் செட்டியார் ஆணியில தொங்குன சட்டைய எடுத்தாரு உள்ள கைய விட்டுப் புரட்டி தலை வழியாப் போட்டாரு. கழுத்தத் தாண்டி எறங்குறப்ப ஒரு இழு இழுத்தாரு பாருங்க... தோள்பட்டத் தையல் மூட்டு பிரிஞ்சு "இதுக்குமேல எங்களக் கொல்லாத சாமி"ன்னு சர்ருபுர்ருன்னு சத்தம் போட்டுருச்சு. தொத்தக் கொடையக் கையில எடுத்தாரு இத்த செருப்ப மாட்டிக்கிட்டாரு. சில வருசமாவே சீக்காக் கெடக்குற செருப்புக ஊசி குத்தாத எடம் ஒரு எடம் பாக்கியில்ல. "காதறுந்தும் ஒங்க பேச்சக் கேக்கறது நாங்க மட்டுந்தான்" இளிச்சுக்கிட்டே சோகமாச் சொல்லுதுக செருப்புக.

"போயிட்டு வாரேன் கண்ணுகளா... பொழுதிருக்க வந்திடறேன். உருமாப் பெருமாத் தேவருகிட்டச் சொல்லிருக்கேன். நாளைக்கி வீட்டளவுல விசேசம் வச்சுக்கிரலாம். கவுண்டர் வீட்டுல ஒரு கோழிக்குஞ்சு கடன் கேட்ருக்கேன் புடிச்ச மாதிரி செஞ்சு குடுங்க புதுமாப்ளைக்கு. நாளைக்கி ஒரு பொழுது மட்டும் பொறுத்துக்கச் சொல்லுங்க கல்யாண வீட்டுல கவிச்சி ஆகாது." பொடிநடையாப் புறப்பட்டாரு சுப்பஞ் செட்டியாரு.

பொன்னாசாரிக பெருத்த ஊரு நிலக்கோட்டை. முப்பது மைல் சுத்தளவுக்கு அங்கதான் எல்லாரும் நகை செய்ய வருவாக. அந்த ஊர் ஆசாரிககிட்ட தொழில் சுத்தமும் இருக்கும் நேர்மையும் இருக்கும். உமி ஓட்டுல ஊதி ஊதிக் கரியக் கங்காக்கிக்கிட்டிருந்த அங்காசாரி, சுப்பஞ் செட்டியாரப் பாத்ததும் "வாய்யா, வாய்யா, வாய்யா"ன்னாரு வாய் நெறைய.

"கடவுளா நெனச்சு வந்திருக்கேன் கைவிட்ராதய்யா." பையில கையவிட்டு எடுத்து நீட்டினாரு கருவாச்சி குடுத்த தங்கச் சங்கிலிய.

"என்ன பண்ணுவீகளோ, ஏது பண்ணுவீகளோ தெரியாது. இன்னைக்கிப் பொழுதுக்குள்ள ஒரு வைர மோதிரம் வேணும். கூலி குடுக்கச் சத்தில்ல குறுக்கொடிஞ்சு நிக்கறேன். செய்கூலி சேதாரம் இதுலயே கழிச்சிக்கிட்டு உள்ளதுக்குச் செஞ்சு குடுங்க ஒரு ஒத்தக் கல்லு மோதிரம்."

உள்ளங்கையில விழுந்த சங்கிலிய ஒரு புடிச்சபுடி புடிச்சுப் பாத்தாரு அங்காசாரி உள்ளங்கைய மூடிக்கிட்டுக் கண்ணையும் தெறக்காமச் சொல்றாரு "செட்டியாரய்யா ஒங்க சங்கிலி மூணு பவுன நெருங்கும் உருக்குனாச் சுருங்கும்." பொன்னாசாரிக அப்பப்ப தமிழ்லயும் கொஞ்சம் விளையாடிக்கிருவாக. அரிசியில சிற்பம் செய்யிற மாதிரி பொன்னத் தட்டிப் பூ வேல செய்யிற மனசா இல்லையா?

"ஏனய்யா நகை சுருங்குது?"ன்னு எதார்த்தமாக் கேட்டாரு சுப்பஞ் செட்டியாரு.

"அம்பில்லாத வில்லும் செம்பில்லாத பொன்னும் வேலைக்காகாது செட்டியாரய்யா. உருக்க உருக்கச் செம்பு ஒதுங்கிருமா இல்லையா..? சொக்கத் தங்கம் மட்டும் இதுல ரெண்டரை தேறும் இப்பப் பாருங்க." நான் பத்திக்கிட்டேன்னு செவப்பு முழி முழிச்சுக் காமிக்குது கரிக் கங்கு. ஆசாரி ஒரு மங்கொகைய எடுத்தாரு. சங்கிலிய அதுல போட்டாரு. ஒரு ஒல கொறடு எடுத்து மங்கொகையப் புடிச்சு நடு அடுப்புல வச்சாரு. ஊதுறாரு. உயிர் மூச்ச உள்ள ஊதுறாரு. குடுத்தா மட்டும் சிரிக்கிற மனுசப் பயக மாதிரி காத்து வந்தா மட்டும் கண்ணச் சிமிட்டுது கங்கு. முதுகத் தூக்கிச் சுவத்தில போட்டுட்டு மனசத் தூக்கி உமி ஓட்டுல போட்டுட்டு தங்க வேடிக்க பாக்கத் தயாராயிட்டாரு செட்டியாரு.

கால் மணி நேரத் துல உருகி உருகித் தண்ணியா ஓடுதய்யா தங்கம். தங்கம் தண்ணியாப் போனதும் பதறிப் போனாரு சுப்பஞ்செட்டியார். நெருப்புல போட்டாத் தங்கமே உருவழிஞ்சு தண்ணியா ஓடிப்போயிருது. இந்தச் சொத்த எலும்பும், சுருங்குன தசையும் என்னத்துக்காகும்? சுப்பஞ் செட்டியாரு சொல்லிப்பாத்துக்கிட்டாரு மனசுக்குள்ள சொல்லல வெளியில.

உருகுன தங்கத் தண்ணியில நவச்சாரத் தூள அள்ளி எறிஞ்சாரு ஆசாரி. பொண்ணு மாப்ளைய ஒண்ணு சேத்துவச்சுட்டு, கதவுக்கு வெளிய காணாமப் போற தாய்க் கெழவி மாதிரி, உருகுன தங்கத்த ஒண்ணு சேத்துவிட்டுட்டு போயிருச்சு நவச்சாரம். மங் கொகையில உருகுன தங்கத்த மாத்தி ஊத்த ஏனம் வேணுமா இல்லையா? உள்ளங்கை அகலத்துல இருந்த இரும்புப் பாளம் எடுத்தாரு. அதுல ஊத்துனவுடன் எட்டுத் தெசையும் எந் தெசைதான்னு அங்கிட்டும் இங்கிட்டுமா ஓடுது கழுத. ஓடுன தங்கத் தண்ணிய ஒரு பக்கமா அண கட்டி நிறுத்த அதுல உமியக் கொட்னாரு. இதப் பாத்ததும் சுளீர்னு யாரோ சவுக்க எடுத்து அடிச்ச மாதிரியிருந்துச்சு சுப்பஞ் செட்டியாருக்கு. ஒன்னியத் தங்கத்துக்கு வாங்குனாக என்னிய மட்டும் தவிட்டுக்கு வாங்குனாகளான்னு கேக்குறானே மனுசன், என்னமோ தங்கம் பெருசு தவிடு சிறுசுன்னு. இங்க வந்து பாருங்கடா, ஏலேய்! இங்க தவிடுதானடா தங்கத்துக்கே அண கட்டுது. ஏத்தமும் இறக்கமும் இடம் பொறுத்துத்தான்டா."

தங்கத்துல தத்துவார்த்தம் பாத்ததுல தன்னத்தானே மெச்சிக்கிட்டு உக்காந்திருக்காரு சுப்பஞ் செட்டியாரு.

சூடு ஆறவும் இரும்புப் பாளத்துல ஊத்திவச்ச தங்கத் தண்ணி செத்தவடத்துல கெட்டியாகிப்போச்சு அப்பறம் கெட்டி கட்டியாகிப் போச்சு.

இப்பத் தொழில் ரகசியம் சொல்றாரு ஆசாரி. "அய்யா செட்டியாரய்யா! நகையா இருக்கறபோது தங்கம் ஒவ்வொரு அங்குலத்துலயும் வேற வேற தரத்துல இருக்கும். உருக்கி ஒண்ணுசேத்தா ஒரே தரத்துக்கு வந்திருது."

"நெசந்தானய்யா. ?"


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 7 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:13 am

"இல்லய்யா. இதுல மாசு மருவு கலந்திருக்கு. இதச் சொக்கத் தங்கமாக்க இன்னும் ரெண்டு வேல பாக்கியிருக்கு. இந்தாங்க. காப்பித்தண்ணி குடிங்க. பாத்துக்கிட்டேயிருங்க." திரும்பவும் தங்கக் கட்டியச் சுட்டுப் பட்டறையில வச்சாரு. எடுத்தாரு சுத்தியல. அடிச்சாரு தங்கத்த. அது எங்க எளக்கம் குடுக்குது எங்க இறுக் கம் குடுக்குதுன்னு விரல் வழியா மூளைக்குச் சொல்லிக்கிட்டேயிருக்கு சுத்தியலு. இறுக்கம் குடுத்த தங்கத்த எடுத்தாரு இளஞ் சூடு காமிச்சாரு பொறிகாரத்துல போட்டுப் பெரட்டி எடுத்தாரு உலையில தூக்கிவச்சாரு உருகும் பதம் கண்டதும் உமியடிச்சாரு தண்ணிக்குள்ள முக்கினாரு சூடு அமத்திட்டாரு ஆறிப் போன தங்கத்த அடிச்சு அடிச்சு, தங்கக் கட்டியத் தகடா மாத்திப்பிட்டாரு. என்னமோ அருவாமணையில வெண்டக்காயக் குடுத்து வெட்டி எடுக்கிற மாதிரி நீண்டுபோன தங்கத்த அங்குல அங்குலமா வெட்னாரு அடுக்கியும் வச்சுக்கிட்டாரு. இப்பத்தான் புடம் போடப்போறாரு. சலிச்செடுத்தாரு செம் மண்ணை அதுல கரைச்சு ஊத்துனாரு புளிய உள்ள போட்டாரு உப்ப. மூணையும் கொழகொழன்னு கொழச்சாரு. களிப்பதம் வந்ததும் தங்கத் துண்டுகள்ல தடவிட்டாரு.

காப்பித் தண்ணியக் குடிச்சுக்கிட்டே கடைவாய்க்குள்ள சிரிச்சுக்கிட்டாரு சுப்பஞ் செட்டியாரு.

"ஏ பவுனு! நாந்தான் தங்கம்னு மேனாமினுக்கியா அலஞ்சியே! ஒங் கதியப் பாத்தியா? எங்க மனுசப் பொம்பளையெல்லாம் மஞ்சப்பூசிக் குளிக்கிறாக. நீ பாவம்! மண்ணப் பூசித்தானக் குளிக்கிற. ஒன் வகிசி தெரிஞ்சு போச்சடி பிள்ளா இனி வாயத் தெறக்காத." என்னமோ காலங்காலமாத் தங்கம் இவருகூட குடுமிப்பிடிச் சண்ட போட்டதாகவும் இன்னக்கி அது கொட்டத்த இவரு அடக்கிட்டதாகவும் ஏழக் கெழவனுக்கு ஒரு ராச சந்தோசம்.

மண் கொழச்சு அப்புன தங்கத் தகடுகள ஓட்டுல போட்டு ஒல மூடி வச்சு மூடி, அடியில எருக்கூட்டி எரிக்க ஆரம்பிச்சாரு ஆசாரி. சோறு வெந்துருச்சா கொழஞ்சுருச்சாங்கிறத குழவியில தொவையல் அரைச்சுக்கிட்டே சொல்ற கெழவிக மாதிரி, புடம் போட்ட தங்கம் வேக்காடு குடுத்துருச்சா இல்லயாங்கிறத அனுபவம் சொல்லுது ஆசாரிக்கு. ஒல மூடி தொறந்து பாத்தா தடவுன உப்பு, புளி, மண்ணு ஒண்ணையுங் காணோம். அத்தனையும் பஸ்மமாகி ஆவியாப் போக, சொதசொதன்னு கெடக்கு சொக்கத் தங்கம். ஆறவச்சு எடை போடுறாரு ஆசாரி.

"கை அளக்காததையா தராசு அளக்கப்போகுது? சொன்னது சொன்னதுதானய்யா. ரெண்டரைப் பவுனு."

"ஒங்க செய்கூலிக்குச் சேர வேண்டியத எடுத்துக்கிட்டு மிச்சத்துக்கு ஒரு வைர மோதிரம் செஞ்சா கணக்கு என்ன வரும்னு சொல்லுங்க, காதாரக் கேட்டுக்கிர்றேன்."

கண்ண மூடி வாய்க்குள்ளயே முணுமுணுத்து அவரா ஒரு கணக்குப் போட்டாரு ஆசாரி. "அய்யா, காப் பவுனு செய்கூலி முக்காப் பவுன் மதிப்புக்கு ஒரு வைரக் கல்லு... போக ஒன்றரைப் பவுன்ல மோதிரம் செய்யலாம்."

"செய்யுங்கய்யா. பொழுதிருக்கக் குடுத்திட்டாப் புண்ணியமாப் போகுமய்யா."

ரெண்டு மூணு வைரக் கல்ல எடுத்து கரும் புள்ளி இருக்கான்னு நீரோட்டம் பாத்து ஒரு கல்ல ஆசாரி ஒதுக்கிவைக்க, பட்டிவீரன் பட்டியிலிருந்து வந்துட்டான் ஒருத்தன் எழவு சொல்ல. அவுந்த வேட்டியக்கூட ஒழுங்காக் கட்டாம அலறிப்பதறி எந்திரிச்சிட்டாரு ஆசாரி.

"அய்யா! பட்டிவீரன்பட்டி மருதாசாரி அடியாகிப் போனாரு. அவரு எனக்குச் சித்தப்பன் மட்டுமில்ல. கொறடு புடிக்கச் சொல்லிக்குடுத்த குரு. ஒரு நாள் பொறுத்துக்குங்க. காரியம் முடியட்டும். வைர மோதிரத்தக் கையில குடுத்துடறேன்."

கனிஞ்சு எரிஞ்சுக்கிட்டிருந்த உமி ஓட்டுல விழுந்து எந்திருச்சு வந்துச்சு சுப்பஞ்செட்டியாரு உசுரு.

"அய்யா ஆசாரி அய்யா, கைவிட்றாதீக. விடிஞ்சாக் கல்யாணம். வைர மோதிரத்தோட நான் போகல எங்க வீட்லயும் ஏதாகிலும் ஒண்ணு ஆகிப்போகும். பெரிய மனசு பண்ணுங்கய்யா."

ஆசாரி யோசிச்சாரு. அங்கிட்டும் இங்கிட்டும் தலையாட்டுனாரு. ஆழமா ஒரு மூச்சு இழுத்து நீளமா வெளியவிட்டாரு. வீடும் பட்டறையும் ஒண்ணு அவருக்கு. பின்பக்கக் கதவு வழியா உள்ள போயி மேல் சட்ட போடாத பட்டு வேட்டி மட்டும் கட்ன ஒரு வாலிபப் பயலக் கையோட கூட்டியாந்தாரு.

"அய்யா செட்டியாரய்யா. இந்தப் பையன் என் புது மாப்ள. பரம்பரையாப் பொன்னாசாரிக இவுக குடும்பம். திருமல நாயக்கருக்கு செவப்புக் கடுக்கன் செஞ்சுக்குடுத்த வகையறா. மோதிரம் செய்யுறதுல மன்னன். எல்லா வெவரமும் சொல்லிருக்கேன். இருந்து வாங்கிட்டுப் போயிருங்க."

சுப்பஞ் செட்டியார் கையெடுத்துக் கும்பிடறதக்கூடக் கவனிக்காம வைரக் கல்ல மாப்பிள்ள கையில வச்சுட்டு அவசரமாப் போயிட்டாரு ஆசாரி.

வேட்டிய மடிச்சுக் கட்டி ஒழுங்காத் தான் உக்காந்தான் மாப்ள உலை முன்னுக்க. தக்காளிக்குத் தங்க முலாம் பூசுன மாதிரி தளதளன்னு இருந்தான் ஆளு.

ஒரு செப்புக் கம்பிய எடுத்தான் வளைச்சான். மோதிரத்துக்கு மாதிரி அளவெடுத்தான். தங்கக் கட்டி ரெண்டரையில ஒன்றரைய மட்டும் சதுரிச்சு எடுத்து ஒரு பவுனுக்கு ஒரு குண்டுமுத்து மேனிக்கு ஒன்றரைக் குண்டுமுத்து செம்பு கலந்தான். தங்கத்தத் தட்டித்தட்டி வளைச்சு வளைச்சு அடிச்சு அளவுக்குத் தக்கன வளையம் பண்ணுனான். மோதிர வளையம் இருபத்திரண்டு கேரட்டோ முன்னபின்னவோ இருக்கலாம். ஆனா வைரத்த உக்காரவைக்கிற மேல்தட்டு இருபத்துநாலு கேரட்டாத்தான் இருக்கணும். அந்தச் சொக்கத் தங்கத்துல சுத்துளி செலுத்தி, வைரம் ஒக்கார ஒரு தங்கப் பள்ளம் இழைக்க ஆரம்பிச்சானோ இல்லையோ வீட்டுக்குள்ளருந்து ஜல்ஜல்... ஜல்ஜல்னு சாடை பேசுது ஒரு சங்கீதச் சத்தம். குழியெடுக்க ஒக்காந்தவனக் கூப்பிடுது கொலுசுச் சத்தம். செதறுது கவனம் பயலுக்கு. தங்கத்து மேல தப்பாட்டம் ஆடுது சித்துளி. வேட்டி மனசு ரெண்டையும் இறுக்கிப்புடிச்சு ஒக்காந்தான். ஜல்ஜல்... ஜல்ஜல்... திரும்பவும் கூப்பிடுதய்யா கொல்லப் பெறந்த கொலுசு. இத்து விழுந்து நொறுங்குது இறுக்கிப் புடிச்ச மனசு. போட்டது போட்டபடி கெடக்க பொண்டாட்டிகிட்ட ஓடிப்போனான் புதுமாப்பிள.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 7 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:14 am

மத்தியானச் சாப்பாடும் இல்லாத சுப்பஞ் செட்டியாரு பகவானக் கும்புட்டுப் பலியாக்கெடக்காரு. புதுமாப்ள இல்லையா...போனவன், போனவன்தான். உலை ஓட்டுல சிவப்பா எரிஞ்ச கங்கு வெள்ளை பூத்துப்போன பெறகு வெளிய வாரான் பய. நெருப்புக்கு முன்னால உக்காந்தும் வேர்க்காதவன் உள்ளபோயி வேர்த்து வாரான். அவன் ஏற்கெனவே உக்காந்தபோது உள்கால் சட்டை பாத்ததா செட்டியாருக்கு ஞாபகம் இப்ப அது இல்ல. தங்கத் தகட்டுல உருண்ட அரம் போட்டுக் கொஞ்சமாக் குழியெடுத்துட்டுப் போன பய இப்ப ஆழந் தேடிப் போயி அரக்கிறான். வைரக் கல்லோட கனபரிமாணத்துக்குத் தக்கன குழியளவு சரியான்னு வச்சு வச்சு எடுக்கிறான் வைரத்த. கல்லுப் பதிச்ச பள்ளத்துக்கும் கல்லுக்கும் மத்தியில ஒரு சன்னமான நூலு ஊடாட முடிஞ்ச அளவுக்குத்தான் சந்து இருக்கணும். இப்ப எடுத்த குழியில சந்து பெருஞ் சந்தாகிப்போச்சு. அதனால போவரை உளியெடுத்துத் தங்கத்தச் செல்லமாச் செதுக்கி எளசா ஒரு இழையெடுத்துக் கல்லுக்கு ஆதரவா அணவு பண்ணணும்னு முடிவு பண்ணுனான். சித்துளி எடுத்து வைரக் கல்லச் சுத்தித் தங்கத்துல அடிச்சுக்கிட்டே வந்தா, தங்கம் ஒரு இத்துனூண்டு தகடா எந்திருக்கும். சித்துளி எடுத்து அவன் மொதத் தட்டு தட்டவும் க்ளிங் க்ளிங் க்ளிங் க்ளிங் வந்துட்டுப் போ ராசானு வளவி கூப்பிடுது. காலால கூப்பிட்ட சத்தத்துக்கே கரைஞ்சுபோயிப் போன பய, கை கூப்பிட்ட சத்தத்துக்குப் போகாம இருப்பானா? போயிட்டான்.

"யாத்தே! திரும்பவும் போயிட்டானே" உருமால அவுத்து மடியில போட்டுப் பெருமாளக் கும்பிட்டுக் கண்ண மூடிக்கிட்டாரு சுப்பஞ் செட்டியார்.

நேரஞ் சென்டு திரும்பி வந்தப்ப வேட்டியப் பெரட்டிக் கட்டியிருந்தான் பய. மேல் சட்டையில்லாத மேனி வேறயா, அவன் தொப்பூழ்ப் பள்ளத்துக்குள்ள தலயக் குடுத்துப் பச்சக் காம்ப மட்டும் வெளிய நீட்டிக்கிட்டிருக்கு மல்லியப்பூவு ஒண்ணு.

"பொழுதிருக்கப் போகணுமப்பா. தயவு பண்ணு ராசா."

"இருங்க பெருசு இப்பக் குடுத்திடறேன்."

கல் பதிக்கிறதுல முக்கியமான வேல மசை அடிக்கிறது. கல்லச் சுத்தி இருக்கிற தங்கத்த இழைச்சு எழுப்பி, மெருகு வலை வச்சு உருட்டி ஒரு துளித் தண்ணியும் உள்ள எறங்காத அளவுக்கு நெருக்கி அணைச்சுவிடுறதுதான் மசையடிக்கிறது. புதுப் பொண்டாட்டி சோங்கு... போயிட்டுப் போயிட்டு வந்த சொகம்... கண்ணு தங்கத்துல இருந்தாலும் கவனம் அவ மடியில இருந்த மயக்கம்... எல்லாம் சேந்து சரியா மசையடிக்காம மோதிரத்தத் தூக்கிக் கையில குடுத்துட்டான் பாவிப் பய.

அவன்குடுத்த மோதிரத்தக் கும்பிட்டு வாங்கி மடியில கட்டிப் புறப்பட்டாரு சுப்பஞ் செட்டியாரு.

அந்த வைரக் கல்லு, அணவு பத்தாம லொடக்கு லொடக்கு லொடக்கு லொடக்குன்னு சன்னமாச் சத்தம் போட்டுக்கிட்டே போகுது. இது சத்தமில்ல சாமி. ரெண்டு உசுருக்கு அடிக்கிற சங்குன்னு வழியெல்லாம் சொல்லிக் கிட்டே போகுது அந்த லொடக்கு, லொடக்கு.

கெட்டி ராத்திரி. நிலா இன்னும் எழும்பல. அழுகுணி வெளிச்சம் அடிச்சிட்டிருக்குக அங்கங்க மொளைச்ச வெள்ளிக. இடைகாட்டுப் பாதை வழி விழுந்து போறாரு சுப்பஞ் செட்டியாரு.

"கடவுளே! என்னியப் பொழுதோட சேத்திரு எம் பொருளோட சேத்திரு" ஆகாயம் பாத்துப் பெருமாளுக்குப் போட்டாரு ஒரு பெருங் கும்பிடு. "அந்து கிந்து என்னிய அநாதிக் காட்ல விட்றாத"கீழ குனிஞ்சு செருப்புக்கும் போட்டாரு ஒரு சின்னக் கும்பிடு. நிலக்கோட்டையிலயிருந்து கோட்டப் பட்டி மார்க்கமா குள்ளப்புரம் புடிச்சு, மெட்டூரு சாவடிப்பட்டி வழியா சொக்கத் தேவன்பட்டி எல்லைய மிதிக்க, தலைக்கோழி கூவிருச்சு.

அக்கா தங்கச்சிக ரெண்டு பேருக்கும் ஒரு சொட்டு ஒறக்கமில்ல. சாகப்போற நாளையில அப்பன் படுற பாட்ட நெனச்சு அழுது கண்ணு வீங்கிப்போனதுல முன் ஜாம ஒறக்கமில்ல. உள் திண்ணையில வெலகுன வேட்டி தெரியாம, கால் ரெண்டையும் அகட்டிப் படுத்துக்கெடக்குற முத்துக்காமு விட்டான் பாருங்க கூரையைப் பிரிக்கிற ஒரு கொறட்ட அந்தப் பெருங்கொண்ட ஓசையில பின் ஜாமத்துல ஒறக்கமில்ல.

சுப்பஞ் செட்டியாரு செருப்புச் சத்தம் கேட்டு எந்திருச்சு உக்காந்திருச்சு மொத்த வீடும்.

"வைர மோதிரம் வந்திருச்சா?" மூஞ்சி கழுவாத முத்துக்காமு கண்ணுல ஏறித் துடிக்குது இருதயம்.

உள் பையில கையவிட்டு உசுரையே வெளியே எடுக்கிற மாதிரி, பொத்துனாப்புல எடுக்கிறாரு செட்டியாரு பொத்திக் கொண்டுவந்த மோதிரத்த.

லாந்தர் வெளக்கு வெளிச் சத்துல மோதிரம் சுத்திவச்ச கருஞ்செவப்புக் காகிதத்த அவரு லேசா உரிச்சுக் காமிக்கவும், அவர் குடுக்கிற வரைக்கும் பொறுமையில்லாத பய வெடுக்குன்னு புடிங்கிப்புட்டான் மோதிரத்த. தொட்டுத்தொட்டுப் பாக்குறான் தடவித்தடவிப் பாக்குறான் கிட்ட வச்சுப் பாக்குறான் எட்டவச்சுப் பாக்குறான். மூக்குக்கிட்டக் கொண்டாந்து மோந்து மோந்தும் பாக்குறான். மோதிர விரல்ல போட்டுப் பாத்து மூஞ்சி மலந்துபோனவன் ஒவ்வொரு விரலாப் போட்டு உருவி உருவி எடுக்கிறான்.

ஒத்த வாழப் பழத்தக் கைப்பத் துன கொரங்கு, கூட்டத்துல சேட்ட பண்ணிக் கும்மாளமடிக்குமா இல்லையா... அப்படியிருக்கு அவன் கூத்து.

"இந்த முத்துக்காமு சொன்ன சொல்லு மாற மாட்டேன் மாமா கட்றேன் தாலிய."

"குடு மாப்ள எங்கையால நானே மாட்டிவிடுறேன் மோதிரத்த." அத வாங்கி அவன் இடது கை மோதிர வெரல்ல அவரு மாட்டவும், மூக்கு மேல கோவம் தவ்விருச்சு முத்துக்காமுக்கு.

"எங்க வம்சத்துல யாரும் போட்டதில்ல வைர மோதிரம். கடைசியில குண்டி கழுவுற கையில மாட்டிக் குடியக் கெடுத்துப்புட்டியே..?" அவர மடார்னு தள்ளி மோதிரத்தப் படார்னு உருவி வலது கை மோதிர வெரல்ல அவனா மாட்டிக்கிட்டு அழகு பாக்குறான் முத்துக்காமு.

கிறுக்குப்புடிச்ச புள்ள கிலுகிலுப்பை வச்சு வெளையாடுறத நீங்க பாத்திருக்கீங் களா..? அதப் பாக்கலேன்னா நீங்க இதப் பாக்கலாம்.

இது ரெண்டாம் கல்யாணம். ஊரே வா நாடே வான்னு ஓல விட முடியுமா? பழைய சோத்த உலையில கொதிக்கவச்சுப் பந்திவச்ச கதையாப் போயிரும். அளந்து அஞ்சு பேரக் கூப்பிட்டாரு சுப்பஞ் செட்டியாரு. உருமாப் பெருமாத் தேவரு, காவக்காரச் சக்கணன், சடையத் தேவரு, அம்மைய நாயக்கரு, கடப்பாரக் கவுண்டரு அஞ்சு பேரும் மொத்தமா வந்துட்டாக கெழக்கு வெளுக்க. மத்த நாலு பேரும் மனசால பெரிய மனுசக் கணக்குல வந்து சேந்துர்றாக வயசால பெரிய மனுசக் கணக்குல சேந்துர்றாரு சடையத் தேவரு.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 7 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:14 am

மரிக்கொழுந்துக் குஞ்சம்வச்ச ரெண்டு மல்லியப்பூ மால மஞ்சக் கெழங்கு முடிஞ்ச ஒரு மஞ்சக் கயித்துத் தாலி ஓலக் கொட்டான் ஒண்ணு உப்பு ரெண்டு படி இதானய்யா கல்யாணத்துக்கு அன்னைக்கித் தேதிக்கு உண்டானது.

குறுணிக் கேப்ப மாவு அரைப் படிப் பச்சரிசிக் குறுண மூஞ்சி செத்த கத்திரிக்கா ஒரு வீச முத்திப்போன முருங்கக்கா ஆறு அரைப் படித் துவரம் பருப்பு அரைக்காப் படி பசுமாட்டு நெய்யி பந்தியில விரிக்க இருளப்பக் கோடாங்கி இணுங்கிக் கொண்டாந்த ஆமணக்கு எல பதினாறு. இதான் கல்யாணப் பந்திக்கு உண்டான கணக்கு.

கருவாச்சி, ரங்கம்மா, முக்குறுணி, மூணு பேரும் மொடாவுல தண்ணி காயவச்சுக் கேப்ப மாவ உள்ள போட்டுக் கிண்டோகிண்டுன்னு கிண்டுறாக.

"பொழுது ஏறுபொழுதாயிட்டி ருக்கப்பா எடுங்க மாலைய கட்டுங்க தாலிய."

புதுச் சேல சுத்திப் பூவும் பொட்டும் வச்சுத் தங்கச்சியக் கூட்டிட்டு வாரா அக்காகாரி. தோழிப் பொண்ணுக்குத் தொணப் பொண்ணா வாரா கருவாச்சி.

"மாத்திக்குங்க மாலைய."

மாத்திக்கிட்டாக.

"ஓலக்கொட்டான்ல இருக்கிற உப்புல வலது காலவச்சுக் கட்டப்பா தாலிய."

கட்டிட்டான் தாலிய.

ஒரு முடிச்ச அவன் போட்டான் மிச்ச ரெண்டு முடிச்ச மூத்த பொண்டாட்டி வந்து முடிஞ்சு விட்டா.

கருவாச்சிக்கு மட்டும் தெரியிற மாதிரி அவளக் கையெடுத்துக் கும்புட்டாரு சுப்பஞ் செட்டியாரு. ஒடஞ்ச கண்ணுல ஒழுகுது தண்ணி. வந்திருக்கிற ஆளுகளுக்கெல்லாம் வைர மோதிரம் தெரியட் டும்னு அரிக்காத மூக்க அடிக்கடி சொறிஞ்சு நிக்கிறான் முத்துக்காமு.

"பெரிய மனுசங்க வாங்கப்பா. வாழப் போற வாழக்குருத்துகளுக்கு விபூதி வச்சு விடுங்கப்பா." அழுக்குத் துண்டெடுத்து அழுத கண்ணத் தொடச்சுக்கிட்டே கூப்பிட்டாரு சுப்பஞ் செட்டியாரு.

உருமாப் பெருமாத் தேவரும் சக்கணனும் அம்மைய நாயக்கரும் கடப்பாரக் கவுண்டரும் விபூதி வச்சுவிட்டு, கால்ல விழுந்தவுக கையில ரெண்டு, ஒண்ணே கால், ஒண்ணுன்னு செய்மொறை செய்ய, நல்லா இருங்கன்னு உக்காந்த எடத்துலயே சொல்லிட்டு ஒதுங்கி ஓரமாகி, செருப்பு மாட்டிக் கெளம்பிட்டாரு சடையத் தேவரு.

விரிச்ச ஆமணக்கு எலையில கேப்பக் களிய அகப்பையில அள்ளி மொத்தமொத்தமா மோந்துபோடவும் அவுகவுக பருப்புச் சாம்பாருக்குப் பள்ளம் பறிச்சுக்கிட்டாக நடுவுல. கேப்பக் களிச் சூட்டுல உருகி ஓடுது உள்ள போட்ட நெய்யி. யார் யாருக்கு ஜாதகத்துல அந்த வருசம் சுக்கிர தெசைன்னு போட்ருக்கோ அவுகளுக்கு மட்டும் விழுகுது முருங்கக்காத் துண்டும், கத்திரிக்காக் கீத்தும்.

இதப் பாத்ததும் கெட்ட கிறுக்கு வந்திருச்சு முத்துக்காமுக்கு.

"கல்யாணத்துக்கே நெல்லுக் கஞ்சி ஊத்த வக்கில்லாத மாமன், பொண்ணு எதுக்குப் பெத்த பொண்ணு?" பித்துப்புடிச்ச கொரங்கு மாதிரி பிச்சு எறிஞ்சான் மாலைய. அது ஓடி விழுந்துபோச்சு களிக்கிண்டிவச்ச அடுப்புல.

"எந்திரிங்கடி போகலாம். எங்கூருக்குப் போயாச்சும் நெல்லுச் சோறு திம்போம்."

ஒத்தப் பொண்ணக் கொடுத்தன்னைக்கே மனசுக்கு ஒத்தத் தாப்பாப் போட்டுக்கிட்டேன் இப்ப ரெட்டப் பொண்ணும் குடுத்ததனால ரெட்டத் தாப்பாப் போட்டுக்கிர வேண்டியது தான். நெனச்சாரு சொல்லல. இருதயத்துக்குள்ள உடைஞ்சுபோன சில்லுகளுக்கு மத்தியில சொல்லுகளும் மாட்டிக்கிருச்சு சுப்பஞ் செட்டியாருக்கு. மால மாத்துன பொம்பளையச் சீல மாத்தவிடல. அழுத்தித் தல வாரவிடல அழுது சொகங் காணவிடல பொருந்தி உக்காந்து பொண்டாட்டிக ரெண்டு பேரையும் களி திங்கவிடல. பட்டியில மாடுகளக் கெளப்புற மாதிரி பொண்டாட்டிக ரெண்டு பேரையும் முத்துக்காமு பத்திட்டான் பத்தி.

நெத்தி நெலப்படியில இடிக்க சாமி வீட்டுக்குள்ள புகுந்த சுப்பஞ் செட்டியாரு இத்துப்போன பழைய தகரப் பொட்டியத் தெறந்தாரு. அந்தப் பொட்டியப் பாத்தாக் களவாணிப் பயலுக்கும் கண்ணீர் வந்திரும். வந்தவன் கையில ஒண்ணு ரெண்டு இருந்தா அவன் போட்டுட்டுப் போயிரு வான். அந்தப் பொட்டி அடியில கெடந்த பழைய காகிதப் பொட்டலம் ஒண்ண எடுத்துப் பிரிச்சுக்கிட்டே, "இந்தா மகளே! இதுல காதோலையும் முருகுத் தட்டுமிருக்கு. ஆத்தா செத்தன்னைக்கி ஒம் பங்குக்குன்னு அப்பன் எடுத்துவச்சது." பசுமாடு செத்த வீட்ல கன்னுக்குட்டி கதர்ற மாதிரி ஓன்னு கதறி அழுது உசுர் வத்திப்போனா பவளம் அப்பன் சீதனம் தரச் சேத்துவச்சிருந்த பழைய குடத்தையும் வாங்கிக்கிட்டா.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 7 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:14 am

ஏறு வெயில்ல கொட புடிச்சு முத்துக் காமு முன்னப் போக, பொண்டாட்டிக ரெண்டு பேரும் ஆளுக்கொரு சுமை சொமந்து அவன் பின்னால போக, ஊர் எல்லையில ஓடக்கரைக் கருவேல மரத்தடியில கருவாச்சி கட்டிப்புடிச்சு அழுகுறா அக்கா தங்கச்சிக ரெண்டு பேரையும் அணச்சு. "ஒரு ஊர்ல பெறந்தோம் ஒண்ணாவே வளந்தோம். எந் துன்பம் கேட்டழுக நீங்க இருந்தீக ஒங்க துன்பம் கேட்டழுக நான் இருந்தேன் இன்னைக்கித்தாண்டி நான் நாதியில்லாம நிக்கிறேன் நடுத்தெருவுல. என்னிய மறந்துராதீங்கடீ. அப்பன் இல்லாத காலத்துலயும் நம்பி வாங்கடி நம்மூருக்கு கருவாச்சி இருக்கேன் கஞ்சி ஊத்த." மூணு பொம்பளைகளுக்கும் ஒண்ணு சொன்னாப்புல ஊத்துது கண்ணீரு. அதுக்கு மேல ஒரு பேச்சும் பேச முடியல உள்கூடு வேகுது.

"என்னமோ ராச்சியத்த எழந்து வார ராணிக மாதிரி இந்த ஏங்கு ஏங்குறீக. வாங்கடி ஏலா... வாங்கடி..."

புருசன் சத்தம் விடவும் கடைசியாக் கண்ணத் தொடச்சுப் பொறப்புடப்போன பொம்பளைக, ஒத்தக் கையில அவுந்த வேட்டியப் புடிச்சுக்கிட்டே அப்பன் ஓடி வாரதப் பாத்து, நின்ட எடத்துல நின்டு போனாளுக.

"மாப்ள! கேப்பக் களி போட்டுட்டான் மாமன்னு கேவலமா நெனச்சிராதீக. வீடு போய்ச் சேந்ததும் மொத வேலையா இத அடிச்சுக் கொழம்புவச்சு ஆசையாக் குடிங்க... இந்தாங்க." கெக்கக் கெக்க கெக்கன்னு கத்துற சேவலக் கால்ல சரடு கட்டிக் கொண்டாந்து நீட்டி மாப்பிள்ளைக்குச் சீர் செய்யிறாரு மாமனாரு.

சேவலப் பாத்ததும் கல்லு சிரிக்கிற மாதிரி சிரிக்குது இறுகிப்போன முத்துக்காமு மூஞ்சி. வலது கையில புடிச்ச குடைய மாத்தாம எடது கையில சேவல வாங்கி எடை போட்ட பய, ஒரு வீசைக்கு மேல ஒண்ணே காலுக்குள்ளன்னு முணுமுணுத்துக்கிட்டான் எச்சி ஊறுற வாயில. திடீர்னு அவன் மூஞ்சி மாறுது மேலுதட்டுல பெறந்த சிரிப்பு கீழுதட்டுல செத்துப்போகுது. "சேவல் இருக்கட்டும் மாமு. செய்முறைக் காச எவகிட்டக் குடுத்த? மூத்தவகிட்டயா? இளையவகிட்டயா?"

"மூத்தவகிட்டத்தான்."

செத்துப்போன ராமர் படை சஞ்சீவி மலை வந்தவுடன எந்திரிச்ச மாதிரி, அவன் உதட்டுல செத்துக்கெடந்த சிரிப்புக்கு உசுர் வந்திருச்சு திரும்பி.

பழனிசெட்டிபட்டி வந்து சேந்தப்ப கெடை மாடுக வீடு வார நேரமாகிப் போச்சு. வீடு தெறந்து உள்ள போனவுடன தங்கச்சிய வெளக்கேத்தச் சொன்னா அக்கா. திரியில கற்பூரம் வச்சுத் திரிச்சும்விட்டா.

"இந்தாங்கடி பசி உசுர்போகுது. பச்ச நெல்லக் குத்திக் கஞ்சி காச்சுங்க. நான் சேவல அடிச்சுப் பறிச்சு உரிச்சுக் குடுக்குறேன்." சொன்ன வேகத்துல முத்துக்காமு அருவாமணையில வச்சுக் கரகரகரன்னு கழுத்தறுத்தான் சேவல. ஒழுகுன ரத்தத்தைக் கரண்டியில புடிச்சு அதுல ரெண்டு மூணு உப்புக்கல்லும் போட்டு ஓரமாவச்சான். சேவலப் பறிச்சு வாட்டி அறுத்துக் குடுத்திட்டு கரண்டியில இருந்த கோழி ரத்தத்த அவனாப் பொரிச்சு அவனாத் தின்டுபுட்டான்.

"ஒங்க அப்பன் மாதிரியே சேவலும் கொஞ்சம் முத்தலாயிருக்கு தடியம்மா. ஒரு அடுப்பு சேத்தே எரிங்க"ன்னு சொல்லிப்பிட்டு வைர மோதிரத்தப் பட்டிதொட்டி யெல்லாம் காட்டிப் பகுமானம் பண்ண மந்தைக்குக் கெளம்பிட்டான் முத்துக்காமு.

பச்ச நெல்ல ஒரல்ல கொட்டி, மாத்திமாத்தி ஒலக்க போடுறாக அக்கா தங்கச்சிக ரெண்டு பேரும், புழுங்க நெல்லா இருந்தாப் போடுபோடுன்னு போடலாம் இது பச்ச நெல்லு. ஓங்கி ஒலக்க போட்டாக் குறுணையாப் போகும்னு தாங்கி ஒலக்க போடுறாக. ஒரல்ல குத்துனத அள்ளிப் பொடச்சதுல ஒன்றரைப் படி அரிசி தேறுது. அக்கா வச்ச ஒலையில சோறு கொதிக்க... தங்கச்சி வச்ச அடுப்புல கொழம்பு கொதிக்க... வந்துட்டா னய்யா மகராசன். முக்காக் கும்பாவுக்குச் சோத்த அமுக்கி, முழுக் கும்பாவுக்கும் கொழம்ப ஊத்தி, கறியையும் சோத்தையும் பெணைஞ்சு பெணைஞ்சு சாப்பாடுகூடச் சண்ட புடிக்கிறானய்யா முத்துக்காமு. சுடு சோத்துக்கு ஒடம்பெல்லாம் வேர்த்து ஊத்துது. ஒறச்ச கொழம்புக்குக் கண்ணெல்லாம் தண்ணி வடியுது மூக்கெல்லாம் நீர் ஒழுகுது.

கால் சப்பைக் கறிய ஒரே கடியில கடைவாய்ப் பல்லுல கடிச்சு இழுத்து, சொரசொர சொரன்னு சோத்த மெல்லவும் கடுக்குன்னு கடிபட்டுச்சு பல்லுல ஒரு கல்லு.

கடிக்கிறத நிறுத்திட்டுக் கண்ண மூடிக்கிட்டு யோசிச்சான். கல்லத் துப்புனாக் கறியும் சேந்து விழுந்திரும். கறியோட சேத்துக் கடிச்ச கல்லையும் முழுங்கிப்புட்டான்.

"அடியே பொண்டுகளா! நீங்க அரிசியில கல்லக் கொட்டிச் சோறாக்கிப் போட்டாலுஞ் சரி இல்ல கல்லையே கொட்டிச் சோறாக்கிப் போட்டாலுஞ் சரி முழுசாச் செமிக்காம விடமாட்டான் இந்த முத்துக்காமு." கையக் கழுவி வாய் கொப்புளிச்சுட்டுப் பவளத்தைப் பாத்துக் கண்ணடிச்சு உத்தரவு போட்டுட்டு, உள்ள படுக்கப் போயிட்டான் முத்துக்காமு.

தன் சோத்தையும் தன் பங்குக் கறியையும் தங்கச்சியச் சாப்பிடவச்சு, சுடவச்ச பாலச் சொம்புல குடுத்துத் தாராளமாப் போயிட்டு வாடீன்னா தங்கச்சிய அக்கா. பாயப் பகிர்ந்து கொடுத்தவ பாய் இல்லாமத் தலகாணி மட்டும் போட்டுப் படுத்துக்கிட்டா வெளியில.

மனசிலயும் ஒடம்புலயும் அலுப்பு கன்னத்துல ஒழுகின கண்ணீர்ல உப்பு ஒறையுமுன்ன ஒறங்கிப்போனா.

"யக்கா! மோசம் போயிட்டோம் யக்கா!"

விடிஞ்சும் விடியுமுன்ன பழனிசெட்டி பட்டியவே பொரட்டிப்போட்ட சத்தம் கேட்டுக் கலைஞ்ச சீலையையும் ஒடைஞ்ச உசுரையும் ஒண்ணு சேத்து எந்திரிச்சு உக்காந்தா கனகம்.

"என்னாடி? அடியே என்னாடி?"

உள்ள ஓடிப்போயிப் பாத்தா யானை செத்துக்கெடக்கிற மாதிரி பாயில பொணமாக் கெடக்கான் முத்துக்காமு.

"அய்யோ அய்யோ"ன்னு சுவர்ல முட்டி முட்டி அழுகுறா பவளம். "மாமா"ன்னு பொணத்தோட மார்ல விழுந்து கதர்றா கனகம். அவன் நெத்தி தடவி, மூஞ்சி தடவி, மாரத் தழுவி, தோளத் தடவி, கையத் தடவிக் கடைசியில பாத்தா அவன் வலது கையில மோதிர மிருக்கு வைரக் கல்லக் காணோம். சோத்துல கெடந்த கல்லுன்னு நெனச்சு வைர மோதிரத்திலிருந்து உதிந்து விழுந்த வைரக் கல்லக் கடிச்சும் கடிக்காம முழுங்கிருக் கான் பாவிப்பய. அது கொடல அறுத்துக் கொன்டுபுடிச்சு.

இந்த இழவுச் சேதி போச்சோ இல்லையோ, கிழிஞ்ச சட்டைக்கு ஊசிநூல் தச்சுக்கிட்டிருந்த சுப்பஞ் செட்டியாரு "எம் மக்கா"ன்னு கத்துனாரு வளவிப் பொதி மேல சுருண்டு விழுந்து செத்தேபோனாரு.

பெறந்துவாரது மட்டும் தானய்யா ஒரே வழி சாவுக்குப் பல வழி!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 7 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:15 am

காலம் இருக்கே காலம் அது ரெண்டு கையிலயும் புழுதியும் விபூதியும் புடிச்சு உக்காந்திருக்கு. எவ்வளவு பெரிய வெற்றியா இருக்கட்டும்... சீ! மறைஞ்சு போன்னு புழுதியடிச்சு வெற்றிய மறைச்சுவிட்டுப் போயிருது. எவ்வளவு பெரிய துன்பமாயிருக்கட்டும்... சூ! மறந்து போன்னு விபூதியடிச்சுத் துன்பத்த மறக்கடிச்சிட்டுப் போயிருது.

காலத்துக்குன்னு மாறாம இருக்கிற கொணம் இது ஒண்ணுதான். இன்னொண்ணும் கவனிக்கணும் நீங்க. காலம் செய்யிற வேலை என்ன தெரியுமா? மனுசப்பயலச் சன்னஞ் சன்னமாத் தடவிக் குடுத்து அவனச் சாவுக்குத் தயாரிக்கிறது தான்.

ஒரே நாள்ல சாவு வந்தா பயந்து கழிஞ்சிருவான் மனுசன்னு தெரியும் காலத்துக்கு. தோல்வி, கண்ணீரு, சிக்கல் சீக்கு ஏமாற்றம் பிரிவு உள்சாவு வெளிச் சாவு இடி மழை பூகம்பம் காத்து இது களக் காட்டிக்காட்டி மனுசனச் சின்னச் சின்னதாச் சாகவச்சு, கால் மாகாணி உசுரை மட்டும் விட்டுவச்சுருக்கு கடைசிச் சாவுக்கு. ஒவ்வொரு பிறப்பும் இந்த பூமிக்கு ஒரு படிப்புப் படிச்சுட்டுப் போக வருது ஒவ்வொரு இறப்பும் இந்த பூமிக்கு ஒரு பாடம் சொல்லிட்டுப் போகுது யாரு பெறந்தாலும் ஆகாயத்துல வெள்ளி மொளைக்கிறதுமில்ல யாரு செத்தாலும் சூரியன் நெஞ்சப் புடிச்சு நின்டுபோறதுமில்ல.

காலம்தான் ஞானம் காலத்தைப் போல மனசு வச்சிருக்கிறவன் ஞானி. காலம் வீசியடிச்ச விபூதியில ஆறே மாசத்துக்குள்ள அழுத கண்ணு காஞ்சுபோச்சு கனகத்துக்கும் பவளத்துக்கும். கல்லு விழுந்த மோதிரத்த கருவாச்சிக்கே அவுக திருப்பிக் குடுக்க, அவ அதை வித்து சொக்கத்தேவன்பட்டி யிலயே பொட்டிக்கடை போட்டுக் குடுத்தா கைம்பொண்டாட்டிக ரெண்டு பேருக்கும்.

அந்த வருசம் காடு வெளஞ்சுபோச்சு கருவாச்சிக்கு. வரவு வந்தா செலவும் சேந்து வருமா இல்லையா... வந்திருச்சு.

அழகுசிங்கத்தப் பள்ளிக்கூடம் சேக்கிறேன்னு ஆடம்பரம் பண்ணி அதிரி புதிரி பண்ணிப்புட்டா.

சாணி மொழுகின மூங்கில் மொறத்துல ஒரு சீப்பு வாழப்பழம் வச்சு, ஒரு செரட்டையில குங்குமம் நெப்பி, ஒரு செரட்டையில சந்தனம் கொழச்சு, அச்சுவெல்லம் பரப்பி, வெத்தல பாக்கு மேல தச்சண வச்சா ஒண்ணே கால் ரூவாய.

"எங் குலதெய்வமா நெனச்சுக் கும்புட றேன் சாமி உருப்படி பண்ணிவிட்ரு என் ஒத்தமகன" கண் ணெல்லாம் தண்ணி தவ்வக் கை புடிச்சுக் குடுத்தா கண்ணாடி வாத்தியார்கிட்ட. வாத்தியாரப் பாத்தவுடன பயந்துபோனான் பய. கண்ணாடி போட்ட சிங்கம் கையில பெரம்பு வச்சு நிக்கிற மாதிரியே இருக்கு அவரப் பாக்கையில அவனுக்கு. பாவப்பட்ட மொசக்குட்டிகளாத் தெரியிறாங்க பள்ளிக்கூடப் பயக.

"ஒம் பேர் சொல்லப்பா..."

தன் பேரு தனக்கு மறந்துபோனவன் மாதிரி ரொம்ப நேரம் யோசிச்சு அழக முழங்கிட்டுச் சிங்கத்தத் துப்பினான்.

"வயசு என்னம்மா பிள்ளைக்கு?"

"அஞ்சு முடிஞ்சிருச்சு பங்குனி யோட ஆறு ஆரம்பம்."

பயல உத்துஉத்துப் பாத்தாரு வாத்தியாரு.

சின்னக் கண்ணு மொக்க மூக்கு பட்ட நெத்தி பணியாரக் கன்னம் அழுத்தமான உதடு ஆத்தா நெறம் கல்லு ஒடம்பு கனத்த நெஞ்சுக்கூடு. சும்மா சொல்லக் கூடாது பஞ்சமில்லாமக் கஞ்சி ஊத்தி வஞ்சகமில்லாமத்தான் வளத்திருக்கா கருவாச்சி.

"அழகுசிங்கம்... சோத்தாங்கையத் தூக்கித் தலையச் சுத்தி மறு காதத் தொடு." செய்ய மாட்டேன்னு மொதல்ல கூனிக்குறுகிக் குன்னிப் போன பய அப்பறம் என்ன நெனச்சானோ ஏது நெனச்சானோ எக்கி எக்கித் தொட்டேபுட்டான்.

"நீ சொன்னது சரிதான். அஞ்சு வயசு ஆகாத கையி தலையச் சுத்திக் காது தொடாது தாயி நீ போயிட்டு வா. போப்பா... போயி உக்காரு."

உடம்புக்கு வெளிய புடைச்சு நிக்கிற புதுச்சட்ட மாதிரியே பொருந்தாமப் போயி உக்காந்தான் பாவம். அடிச்சு வளக்க அப்பனும் அணச்சு வளக்க ஆத்தாளும் இல்லாத பிள்ளைக பெரும்பாலும் புத்தியழிஞ்சு பொழப்பத்துப் போயிருதுக. அப்பன் இல்லாம ஆத்தாளோ, ஆத்தா இல்லாம அப்பனோ பிள்ள வளக்கிறது ஒத்தக் கையில தயிர் கடைஞ்ச கததான். வெண்ணெயும் தெரளாது வெளங்கவும் வெளங்காது.

தகப்பன் இல்லாத பிள்ளைன்னு தாங்கித் தாங்கி வளத்ததுல அழகுசிங்கம் அடிமாறிப் போறதக் கண்டுபுடிக்க மாட்டாமப் போனா கருவாச்சி. மொளைச்ச முள்ள மொளையிலயே கிள்ளாம, அவன் குத்தங்களக்கூட அவ கொண்டாட ஆரம்பிச்சது தப்பாப் போச்சு.

பசுமாட்டுல பால் பீச்சிக்கிட்டே யிருப்பா கருவாச்சி பாத்துக்கிட்டே யிருப்பான் அழகுசிங்கம். சீலயத் தெரட்டி ஏத்திக்கிட்டு ரெண்டு கால் இடுக்குல பித்தளச் செம்ப வச்சு, சொரசொரன்னு இருக்கிற காம்புல வெண்ணெயத் தடவி நீவிவிட்டு அவ சர்ருசர்ருன்னு பீச்சுற சத்தமிருக்கே, சரஸ்வதி வீணை வாசிச்சா அத நிறுத்திட்டு இங்க வந்து இதக் கேக்கணும்.

செம்பு நெறை யுதோ நெறையலயோ மூணு காம்பு எனக்கு ஒரு காம்பு ஒங் கன்டுக்குன்னு ஒதுக்கிவிட்டு எந்திரிச்சிருவா. கன்ட அவுத்துவிடு கண்ணு அழகுசிங்கம்னு சொல்லிட்டு அவ வேலயப் பாக்க அடுப்படிக்குப் போயிருவா. கொண்ணவாயன் அந்த நேரம் கூலம் புடுங்கப் போயிருவான்.

ரெண்டு மாசமாச்சு... மூணு மாச மாச்சு. தோலு மாதிரி சுருங்கிக்கிட்டே போகுது கன்டுக்குட்டி. சாலு மாதிரி விரிஞ்சுக்கிட்டே வாரான் அழகுசிங்கம். என்னா ஏதுன்னு கடைசியில கண்டு புடிச்சா... கன்டுக்குட்டியக் கொலபட்னி யாப் போட்டுப்புட்டு, உள்ள தலையச் செலுத்தி ஒத்தக் காம்புப் பால இவனா உறிஞ்சுக்குடிச்சிருக்கானய்யா இத்தன நாளா.

ஏண்டா! நீ கருவாச்சிக்குப் பொறந் தியா, காராம் பசுவுக்குப் பொறந் தியா?ன்னு அவனப் பாவப்பட்ட ஒரு பார்வை பாக்குது கன்னுக்குட்டி.

"எப்பிடிடா மகனே பசுமாட்டுக் கவுட்டுக்குள்ள பயப்படாமப் பாலு குடிக்கிற வித்தை படிச்ச?" விரல் தடம் பதிய அடிச்சிருக்க வேண்டிய காரியத்துக்கு, கன்னத்துல உதடு பதிய முத்தம் குடுத்து உச்சி குளுந்துபோனா கருவாச்சி. தப்ப மெச்சிக்கிட்டேயிருந்தா, அதுவே தர்மமாயிருதா இல்லையா. அந்தக் கணக்காகிப்போச்சு அழகுசிங்கம் கத.

முந்தானையில முடிஞ்சுவச்ச காச ஆத்தா அவுக்கிற வரைக்கும் பொறுமை யில்ல அறுத்துப்புடறான் அறுத்து. அடுப்புல கூட்டிவச்ச கறி வேகிற வரைக்கும் பொறுமையில்ல அகப்பைய அளாவி அரிச்சுப்புடறான் அரிச்சு. ஒடைச்ச தேங்காயில சில்லெடுக்கிற வரைக்கும் பொறுமையில்ல சிரட்டை யோட சேத்துக் கடிச்சுப்புடறான் கடிச்சு. வீட்ல வளக்குற புலி பம்முறதும் பாயறதும் செல்லச் சேட்ட பண்றதும் குட்டியா இருக்கி றப்ப கொண்டாட்ட மாத்தான் இருக்கும். மீசையும் நகமும் வளந்திருச்சுன்னா அப்பறம் அதப் பாயில போட்டுப் பக்கத்துலயா போயிப் படுக்க முடியும்?

கருவாச்சி ஒண்ணு நெனைக்க காலம் என்னமோ நெனைக் குது. விளையும் பயிர் மட்டுமா களையுந் தான் தெரிஞ்சு போகும் மொளை யிலயே.

"அடே அழகு சிங்கம்! வாடா இப்படி... அனா எழுதச் சொல்லித் தர்றேன்"வாஞ்சையாத்தான் கூப்பிட்டாரு வாத்தியாரு. வேப்ப மரத்து நெழலு வெள்ள மணலு. ஆனாலும் ஆணி மேல உக்காந் தவன் மாதிரிதான் உக்காந்தான் அழகுசிங்கம்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 7 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:16 am

"நல்லாப் பாத்துக்க"உள்ளங்கையில மெழுகி மணலச் சமம் பண்ணி நிதானமா அன்னு எழுதுனாரு எழுதி எழுதி அழிச்சாரு. அழிச்சு அழிச்சு எழுதுனாரு. கடைசியா எழுதுனத அழிச்சாரு. "இப்ப நீயே உன் கையால அனா எழுதி அந்த எழுத்து மேல இத அடுக்குடா"ன்னு புளிய வெதைகள அள்ளிப் போட்டாரு. எழுதுறான் பய எழுதுறான் விரல் வணங்கல. அவுக்கு ஆரம்பச் சுழியான அந்த வட்டமே வருவனாங்குது. இந்த அவுக்குள்ளயே ஆயுசு முடிஞ்சாலும் முடிஞ்சிரும்னு நெனைக்கிறான் பய. எல்லாப் பயலுகளும் அரைகுறையா எழுதிட் டானுக. புளிய வெதை யையும் எண்ணம் போல அடுக்கிட்டானுக. இவன் பொழப்பு சுழியிலயே மாட்டிக்கிட்டுச் சுத்துது. ரெட்டக் குழல் துப் பாக்கி மாதிரி அவனையே குறிவைக்குது கண்ணாடிக் குள்ள இருக்கிற வாத்தி யார் கண்ணு. முரட்டுப் பயதான் அன்னைக்கித் தான் மொதமொதலா வேர்த்துச்சு பாவம் அவனுக்கு. கையப் புடிச்சுப் புடிச்சு எழுதிக்காட்டி யும் கதை ஆகல கடைசியில வச்சாரு ஒரு குட்டு. தலைக்குள்ளயிருந்த ஒண்ணு பாக்கியில்லாம எல்லாம் செதறிச் சின்னாபின்னமாகி திரேகத்துக்குள்ள அங்கங்க போயி ஒதுங்கிட்ட மாதிரி பொறி கலங்கிப்போச்சு. வலி தெரிஞ்சதும் அவன் வம்சத்துக் குண்டன கோவம் உள்ளுக்கிருந்து எந்திரிச்சுருச்சு. வாத்தியார் அங்கிட்டுத் திரும்பவும் புளிய வெதைகள அள்ளி ரெண்டு கால் சட்டைப் பைகளுக்குள்ள யும் போட்டுக்கிட்டு விறுவிறுவிறுன்னு வீட்டுக்கு வந்துட்டான்.

கொண்ணவாயன விட்டுப் புளிய வெதைய வறுத்து ஊறவச்சான். விடிய்ய ஆத்தாகிட்டக் குடுத்து அவிச்சு அவனே தின்டுபுட்டான். அப்பறம்தான் தெரிஞ்சது அவன் அவிச்சுத் தின்னது பள்ளிக்கூடத் துப் புளிய வெதைன்னு. பெறகு என்ன பண்றது?

கூலிக்கு வந்த புளியம் பழத்தையெல்லாம் வாசல்ல போட்டு ஒரே தட்டாத் தட்டி ஓடெடுத் துப் பழத்தக் கோணி ஊசியில குத்திக்குத்தி வெத பிதுக்கியெடுத்து அரப்படி வெத சேத்து வாத்தியாருக்குக் குடுத்துக் கெஞ்சிக் கூத்தாடிப் பிள்ளைய மறுபடியும் சேத்துவிட்டா கருவாச்சி. ஆனா விதி விட்டுச்சா? எழுத்துல தீந்த பகை எண்ணுல வந்து முட்டிக் கிருச்சு. ஒண்ணு ரெண்டு மூணு சொல்லிக் குடுத்தாரு வாத்தியாரு. இவரு சொல்லச்சொல்ல பயக ஒரே குரல்ல மொத்தமாத் திருப்பிச் சொல்லணும். மொத்தமாச் சொல்றதுல ஒரு வசதி. சரியாச் சொல்லத் தெரியாத பயக கூட்டத்தோட கூட்டமா தப்ப நசுக்கிச் சத்தத்துல தேச்சுவிட்ரலாம்.

வாத்தியாரும் சின்னப் பிள்ளையில அப்படித் தேச்சுவிட்ட ஆள்தான..? "இப்பத் தனித்தனியாச் சொல்லுங்க"ன்னாரு அங்க மாட்னான் அழகுசிங்கம். ஒண்ணு ரெண்டு மூணு சொல்லி வந்ததுல இருவத்தி ஒம்போது வரைக்கும் ஆண்டவன் அருள் அவன் பக்கந்தானி ருந்துச்சு. முப்பது வந்தவுடன கடவுளே அவனக் கைவிட்ருச்சு. முப்பதுன்னு சொல்லத்தான் அவன் நெஞ்சு நெனைக்குது. ஆனா நுப்பதுன்னு தான் நாக்குல வருது.

"நுப்பது இல்லடா முப்பது."

"நுப்பது."

"மு...மு...மு...சொல்லு."

"மு...மு...மு."

"வந்திருச்சு இப்பச் சொல்லு. மு...மு...மு... முப்பது."

"மு...மு...மு... நுப்பது."

சில பொம்பளைக ஒழுங்காத்தான் தோச போடுவாக. பெரட்டிப் போடத் தெரியாமப் பிச்செடுத்துருவாக. அந்த மாதிரி இந்தப் பய எழுத்துல ஒழுங்கா இருக்கான் வார்த் தையில ஒலப்பிடுறானே!

அவன் பாவம் வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றான்? வரல. "இன்னைக்கு ஒனக்காச்சு எனக் காச்சுடா மகனே... பாத்திருவோம்." மனசுக்குள்ள வேட்டிய மடிச்சுக் கட்டி ஒரு மல்யுத்தத்துக்குத் தயாராயிட்டாரு வாத்தியாரு.

"இப்பச் சொல்றா மு...மு...மு... முப்பது."

"மு...மு...மு... நுப்பது."

என் முப்பத்தோரு வருச அனுபவத் தையும் இவன் வம்புக்கிழுக்கிறானே! தோல உரிச்சுக்க. நாக்கத் துண்டா அறுத்துட்டுப் போயி விடிய விடிய வீட்ல வச்சுச் சொல்லிக்குடு. வரவே வராதுங்கிறான் பய. அவன் கண்ணு ரெண்டும் கம்மாயாப் போச்சு. பொத்திப்பொத்தி வச்சிருந்த பொறுமை ஒடைஞ்சு வேர்வையா ஓடுது வாத்தியாருக்கு. கொதிக்கிற வெயில்ல குறுமணல்ல கடைசி மணி அடிக்கிற வரைக்கும் ஆள முட்டிக் கால் போடவச்சிட்டாரு. முழங்கால்ல முள்ளுத் தச்ச மாதிரி வலி. பள்ளிக் கூடத்துப் பயக நாப்பத்திரண்டு பேரும் கேவலமாப் பாக்கிறாங் களேங்கிற *உள்ளிங்கம். நம்ம நல்லதுக் குத்தான வாத்தியாரு செஞ்சாருன்னு நெனைக்காம, பழிவாங்குற எண்ணம் பதிபோட்டு உக்காந்திருச்சு அவன் மனசுல.

ஒவ்வொரு வகுப்பையும் ரெண்டு ரெண்டு வருசமாத் தாண்டி வந்ததுல அஞ்சாவது முடிக்குமுன்ன பதினாலு வயசாகிப் போச்சு அழகுசிங்கத்துக்கு. பதினாலு வயசுலேயே முக்கா ஆம்பளைக்கும் முழு ஆம்பிளைக்கும் மத்தியில தெரண்டு நிக்கிறான். கூடப் படிக்கிற பயலுக அவனப் பாத்துப் பயப்படறாங்க. வாத்தியாரப் பழி வாங்கணுங்கிற எண்ணம் மட்டும் தண்ணிக்குள்ள கெடக்கிற கல்லு மாதிரி அப்படியே கெடக்கு மனசுக்குள்ள.

காப்பரிச்சை லீவு. ஊருக்குப் போகலாம்னு அன்னஞ்சியில நிக்கி றாரு வாத்தியாரு. ஒரு நாளைக்கு ஒரே ஒரு பஸ்ஸுதான் அன்னஞ்சிக்குள்ள வந்து போகும் அத விட்டா அடுத்த நாளுதான். பொட்டிக்கடையில கூட்டாளிகளோட கடல உருண்ட வாங்கித் தின்னுக் கிட்டு வாத்தியாரையே பாக்குறான் அழகுசிங்கம்.

"இன்னைக்குப் பழிதீத்திர வேண்டியதுதான்."

வந்திருச்சு பஸ்ஸு.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 7 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:16 am

ஒரு கையில பொட்டியும் மறு கையில வாழத்தாரும் புடிச்சு அவரு ஏறப்போக மளார்னு தவ்வி ஓடி வந்து வாத்தியார் காலக் கெட்டியாப் புடிச்சுக்கிட்டு, "என்னிய மன்னிச்சிருங்கய்யா... என்னிய மன்னிச்சிருங் கய்யா"ன்னு கத்திக் குமிச்சுக் கதறி அழுகிறான் அழகுசிங்கம்.

"ஏய் விடப்பா... ஏய் விடப்பா."

"விட மாட்டேன்ய்யா... ஒங்க கால எங் கண்ணீர்ல கழுவுனாத்தான் எம் பாவம் போகும்."

புடிச்ச உடும்புப்பிடி இறுகிக்கிட்டே போகுது. தவறி விழுந்த பொட்டி தொறந்திருச்சு வாழத்தார்ல அஞ்சாறு காயி உதிந்திருச்சு. கண்டக்டர் பொறுத்துப் பொறுத்துப் பாத்தான். வாத்தியார் வாராப்ல இல்ல பையன் விடுறாப்ல இல்ல. "போலாம் ரைட்டு"ன்னு போயிட்டான் பாவம். பஸ்ஸு போகவும் ஒண்ணுமே நடக்காதது மாதிரி அவன்பாட்ல போயிட்டான் அழகுசிங்கம். அனாதிக் காட்ல நின்ன வாத்தியாரு அடுத்த நாள் வரைக்கும் காத்திருந்தாரு அடுத்த வண்டிக்கு.

இந்தச் சம்பவம் பட்டிதொட்டி யெல்லாம் பரவிப்போச்சு.

"யப்பா சடையத்தேவா! வம்சக் கூரோட பெறந்து வளந்திருக்கானப்பா ஒன் பேரன். குடும்பி பிடிக்காம விட மாட்டானப்பா ஒன் குடும்பத்த. சரிதான்! கரட்டுக்காட்டுக்கு மொரட்டு மம்பட்டி இனி என்னென்னா கூத்து நடத்தப்போறானோ... பாப்பம்."

காலம் ஒரு தார்முள்ளத் தயார் பண்ணிருச்சு சடையத்தேவரு கூன்ல அழுத்திக் குத்துறதுக்கு!

மேலுதட்டுல சாம்பல் பூத்த மாதிரி சன்னமா இருந்த மீச கரு கருன்னு கறுப்படிக்க அஞ்சாவது முடிச்சிட்டான் அழகுசிங்கம். கைக்குச் சிக்காத காத்து மாதிரி வசத்துக்கு வராத ஆளா வளந்து நிக்கிறான் பய. அவனுக்குக் காசு ஒண்ணுதான் கடவுள் தின்பண்டம் வாங்கித் தார ஆளு தெய்வம். அன்னாக்கயிறுங்கிறது அவனுக்கு வெறும் கோவணந் தாங்கின்னு நெனச்சீகளா? இல்ல... ஓட்டை முக்காத் துட்டக் கோர்த்துவைக்கிற உண்டியல்.

அவனுக்குப் புடிச்சது பணியாரம் புடிக்காதது பள்ளிக்கூட வாத்தியார். அவனளவுல ஆத்தா நல்லவ தான் பாவம் ஆனா உப்புக் கல்லுக்கு ஆகாதவ. அவனுக்குப் புடிச்ச பொழுது போக்கு கால்சட்டையக் கழத்தி இது என்னதில்லன்னு எறிஞ்சிட்டு முண்டமாக் கொளத்துல தவ்வி முங்கு நீச்சல் அடிக்கிறது. ஒரு பெரிய கெட்ட கொணம் இருக்கு அவன் பெறவியிலேயே... ஒரு ஆள மொத மொதலா மூஞ்சி பாக்குறப்ப அவனுக்கு என்ன தோணுதோ அது மண்டையப் போடற வரைக்கும் மாத்திக்கிரமாட்டான்.

ஒரு நல்ல கொணமும் இருக்கு. ஒரு காரியத்துக்குச் சரின்னு தலையாட்டிட்டான்னா ஆட்டுன தலைய அடகுவச்சா கிலும் அத முடிக்காம விட மாட்டான். அகமலையில ஒரு ஆளு கிட்டக் கஞ்சா வாங்கி, அல்லி நகரத்துல கொண்டாந்து ஒரு வீட்ல சேத்துட்டா, கால்ரூவா கூலிங்கிறது பேச்சு. அகமலக்காரன் குடுத்த கஞ்சாவப் பழைய துணியில பரப்பி, அத இடுப்பச் சுத்தி இறுக்கிக் கட்டி முடிபோட்டு, ஏத்துன சட்டைய இறக்கிவிட்டு, நான்தான் காந்தி மகாத்மான்னு ஒண்ணுந் தெரியாதவன் மாதிரி ஒத்தையடிப் பாதையப் புடிச்சு அல்லிநகரம் வந்து சேந்தான் அழகுசிங்கம். இடுப்புக் கஞ்சாவ அவுத்து நிறுத்துப் பாத்தான் அல்லிநகரத்து ஆளு. பாத்துட்டு இந்தாடா காசுன்னு குடுத் தான். எண்ணிப்பாத்தா முக்காலணா.

"கணக்குப்படி கால்ரூவா தரணுமே... என்னப்பா இது முக்காலணா..?" அவன் அப்பன் மாதிரியே மூக்கு மேல கோபம் முட்டிநிக்குது அழகு சிங்கத்துக்கு.

"கஞ்சா முழு வீச இல்லப்பா, நிறுத்தா முக்கா வீசதான் வருது."

"கொறைஞ்சா நானா பொறுப்பு..? குடுத்தவனக் கேளு."

"கொறையுதே கால் வீசக் கஞ்சா. அதக் குடுத்துட்டுக் காசு வாங்கிட்டுப் போ."

"அகமலையில குடுத்தத அல்லிநகரத் துல சேத்துட்டேன். நான் எதையும் எடுக்கல." "சத்தியமா எடுக்கல?" "எங்க ஆத்தா மேல சத்தியமா நான் எடுக்கல."

"பெறகென்ன அப்பன அறியாத நாயி... ஆத்தா மேலதான் சத்தியம் பண்ணுவ."

அம்புட்டுத்தான். அழகுசிங்கத்துக் குள்ள இருந்த இத்துனூண்டு மனுசனும் நான் போயிட்டு வாரேன்னு போயிர ஒறங்கிக்கிட்டிருந்த முக்கா மிருகம் முழிச்சிருச்சு. முட்டுக்கெடா மாதிரி தலையக் கவுந்து கஞ்சாக்காரன் நெஞ்சில முட்டித் தலைய விசுக்குன்னு தூக்கி அவன் தாடையில தட்டி மோவாயப் பேத்துட்டு இன்னது நடக்குதுன்னு தெளியுமுன்ன அவன் சில்லி மூக்க ஒடச்சு, எடது கையத் தூக்கிப் புலியடிச்சது மாதிரி அடிச்சான் பாருங்க... உதடு வெடிச்சு ஒழுகுது ரத்தம்.

அந்த முக்காலணாவ எறிஞ்சிட்டுக் கால்ரூவாய எடுத்துக்கிட்டு, "புடிங்கடா... புடிங்கடா..." ங்கிற சத்தம் அடங்குறதுக்குள்ள விசுக்குன்னு ஏறி வேலி தவ்விச் சோளக்காட்டு வழி ஓடிவந்துட்டான் சொக்கத்தேவன் பட்டிக்கு.

அப்பன் இல்லாத பயன்னு முதுகுக்குப் பின்னால லேசுபாசா பேசுவாகளே தவிர இப்படி மூஞ்சியில குத்துன மாதிரி ஒரு பய சொன்னதில்ல. பருத்திக் கெடங்குல தீ விழுந்த மாதிரி பத்திக்கிருச்சு இன்னைக்கு. அருள் வந்த கோடங்கி மாதிரி ஆவேசமா வாரான் ஊருக்குள்ள. களையெடுத்த காசுக்குச் சோள அரிசியும் சூத்தக் கத்தரிக்காயும் வாங்கி வீட்ல வச்சுட்டுக் கனகம் வீட்டுக்குப் போயிக் கரண்டியில எரவல் தீ வாங்கிட்டு எதுக்க வர்றா கருவாச்சி. ஊரே வேடிக்க பாக்க நடுத் தெருவுல ஆத்தாள வழிமறிக்கிறான் அழகுசிங்கம். என்னைக்குமில்லாம அன்னைக்கி அந்த வேசம் கட்டி வந்தவனப் பாத்து, கையில இருக்கிற நெருப்பு வயித்துலயும் எரிய நிக்கிறா கருவாச்சி.

"ஆத்தா! நீ நல்லவதான?"

"அய்யா அழகுசிங்கம் ! ஒனக்கு என்னய்யா ஆச்சு?"


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 7 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:16 am

"இந்த ஆச்சு போச்சுங்கிற பேச்ச விட்ரு சொல்லு, என்னிய நீ எவனுக்குப் பெத்த?"

"நீ என் மகன்டா ராசா." ஈரக்கொல நடுங்குது அவளுக்கு.

"ஆமா! பொட்டச்சி நீயே பெத்துக்கிட்டியாக்கும். இந்த நெருப்பு மேல சத்தியம் பண்ணு. என்னிய நீ யாருக்குப் பெத்த?" வில்லடிபட்ட மண்பான கடகட கடன்னு ஒழுகிற மாதிரி சொல்லடிபட்ட பொம்பள சொதசொதசொதன்னு அழுகுறா.

"சடையத்தேவரு மகன் கட்டையனுக் குத்தாண்டா மகனே ஒன்னிய ஒங்காத்தா பெத்தா."

"அவனுக்குத்தான் என்னியப் பெத்தேன்னு நீ சொல்ற. அவனுக்குத் தான் நான் பெறந்தேன்னு அவன் சொல்றானா?"

ஒரு பதினஞ்சு வயசுப் பய அப்பன அவன் இவன்னு சொல்லக் கேட்டு நெஞ்சுப் புடிச்சு நின்னு தெருவே வேடிக்க பாக்குது.

"சொல்லு, அவனுக்குத்தான் என்னியப் பெத்தேன்னு நீ சொல்ற... அவனுக்குத்தான் நான் பெறந்தேன்னு அவன் சொல்றானா?"

"இன்னைக்கி வரைக்கும் சொல்லல."

"சொல்ல வைக்கிறேன். நாந்தாண்டா ஓந் தகப்பன்னு சொல்ல வைக்கிறேன். சொல்ல வச்சுட்டு நான் இல்லடா ஒம் மகன்னு சொல்லிட்டும் வந்திடறேன்."

"அய்யா ராசா வேணாம்டா. அவனுங்க பழிபாவத்துக்கு அஞ்சாத பாவிகடா. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒன்னு வச்சிருக்கேன். கண்ணப் புடுங்கிக் காக்காய்க்குப் போட்ருவாங்கடா."

"ஆத்தா! சிங்கம்னு பேரு வச்சுப் பன்னிக் குட்டிக்கா பால் குடுத்து வளத்த? சடையத்தேவனச் சந்திக்கு இழுத்துக் கட்டையத்தேவன அவன் ஆத்தா குடுத்த பாலக் கக்க வைக்கல... நான் எங்க ஆத்தாளுக்குப் பெறந்தவன் இல்ல. இது இந்தத் தீ மேல சத்தியம்." ரெண்டு கையிலயும் இறுக்கிப் புடிச்சான் எரியிற தீக் கரண்டிய... கையி வெந்துபோச்சு கனல் அணஞ்சுபோச்சு.

காத்திக மாசம் பேத்திக்குக் காதுகுத்து வச்சாரு சக்கணன். காதுகுத்துங்கிறதுக்கு ரெண்டு மூணு கணக்கு இருக்கு ஊர் நாட்ல. காதுகுத்திட்டா ஒரு ஒச்சமாகிப் போகுமாம் பிள்ளைகளுக்கு. ஒச்சமான பிள்ளைகள எமன் ஏறெடுத்தும் பாக்க மாட்டானாம். காதுகுத்துக்கு இது ஒரு சாமி கணக்கு. காதுல ஓட்ட போட்டதும் சலசலசலன்னு ஒழுகுதா இல்லையா ரத்தம்.... ரத்தம் ஒழுங்கு மொறையா இருந்தா செத்தவெடத்துல ஒறையணும். அப்படி ஒறையற சக்தி இருக்கா இல்லையான்னு சோதிக்கிறதுதான் காதுகுத்தாம் இது ஒரு வைத்தியக் கணக்கு. ரெண்டுமில்லப்பா! அப்பன் சொத்துல பங்கு இல்லாத பொம்பள... பெத்த பிள்ளையச் சாக்கு வச்சு, தனக்கு உண்டானதுல ஒரு பங்கத் தாய்மாமன் மூலமா தண்டம் போட்டு வசூல் பண்றதுதானப்பா காது குத்து. இது காசு பணக் கணக்கு.

எந்தக் கணக்கா இருந்தா எங்களுக் கென்ன... எழுதற மொய்யிக்கு நெஞ்சு முட்ட நெல்லுச் சோறு திங்கலாமில்ல இது சொந்தபந்தம் போடுற சோத்துக் கணக்கு.

தாய்மாமன் ஊரு கெங்குவார்பட்டி பசப்பும் பசையும் உள்ள ஊர் அது. தண்ணி செழிச்ச பூமி. பதினோரு மரக்கா பச்ச நெல்லு, வாழப்பழத்தாரு, வகைவகையாச் சீரு. அய்யம்பாளையம் தேங்கா, பிறந்தவளுக்குச் சீல துணிமணி, மருமகளுக்குக் கொலுசுமணி எல்லாம் சொமந்து சொக்கத்தேவன்பட்டியையே ஒரு சுத்துச்சுத்தி சாதிசனமே பாத்துக்க... ஆடு மாடே பாத்துக்கே... கோழி குருமானே பாத்துக்கன்னு தாம்பாளத் தட்டத் தல மேல சொமந்து வாராக தாய்மாமன் வீட்டு ஆளுக.

மொட்டையடிச்ச தலையில சந்தனம் அப்பி, பகுமானமாப் பட்டுப் பாவாட சட்டை போட்டுத் தாய்மாமன் மடியில உக்கார வச்சு பொன்னாசாரி கடுக்கன எடுத்துத் திருகாணி கழத்தவும் கண்ணுல தண்ணி தவ்வ ஆரம்பிச் சிருச்சு காது குத்துற பிள்ளைக்கு. மாங்கொழுந்து மாதிரி இருக்கிற பிஞ்சுக் காதுமடல்ல குத்தாணி எடுத்துச் சுருக்குன்னு குத்தவும் கொதக் குன்னு குதிச்சிருச்சு ஒரு சொட்டு ரத்தம்.

வீல்னு சங்கூதுற மாதிரி கத்தி அழுகுது சின்னப் புள்ள. ரத்தத்துல தண்ணியடிச்சு, குத்து வாயில சந்தனம் தொட்டு வச்சும் அடங்கல பிள்ளைக்கு அழுக.

"ஏய் கத்துன... ஒன்னியக் கடிச்சுக் கொன்டேபுடுவேன்." அந்தப் பிள்ள அழுத கட்டைக்கு அடுத்த கட்டையில அமட்டுறான் தாய்மாமன்.

இன்னொரு காதுலயும் குத்திருங்க பொறுத்துக்கிர்றேன் இந்த ஆளமட்டும் அமட்டாம இருக்கச் சொல்லுங்கன்னு அதுக்கு மேல கத்துது பிள்ள.

முடிஞ்சது. எல்லாரும் நின்ட எடத்துலயே அங்கங்க ஒக்காந்தாக. எல தெரியாமச் சோறு வாங்கிச் சாப்பிட்டாக. இப்பத் திண்ணையோரமா ஆளுக்குப் பின்னால ஆளுகளா நிக்கிறாக மொய்யெழுத. இங்கதானய்யா சடையத்தேவர் மொதமொதலா மூஞ்சி பாக்குறாரு பேரன. அப்பப்ப எட்டத்துல பாத்தது. கிட்டத்துல பாக்கப் போறது இன்னைக்குத்தான். மொய்யெழுத முன்னுக்க நிக்கிது பெருசு பின்னுக்க நிக்கிறான் பேரன்.

"செல்லாண்டித்தேவர் மகன் சடையத்தேவர்... முழு ரூபா ஒண்ணு எழுதப்பா."

அவன் தன் பேரத்தான் எழுதறானான்னு எழுத்துக்கூட்டிப் படிச்சுக்கிட்டே சடையத்தேவரு நெஞ்சுக்கூட்டு உள் பையில கைவிட்டு, சில்லறைக்கு மத்தியில முழு ரூபாயத் தடவித் தடுமாற.... பின்னுக்கிருந்து ஒரு கொரல் கேக்குது:

"கட்டையத்தேவர் மகன் அழகுசிங்கம் ஒண்ணேகால்... எழுதப்பா."

தடவுன ரூபாய நழுவ விட்டுட்டு, கிழட்டு யான மாதிரி முழு ஒடம்பு திருப்பி எவண்டா அவன்னு பாத்தா அடிச்சு வச்ச கல்லுச் செல மாதிரி கையில ஒண்ணேகால் ரூவாயப் புடிச்சுக் கெழவன ஒரு ஒரசு ஒரசி நிக்கிறான் அழகுசிங்கம்.

தன்னையும் மகனையும் பெணைஞ்சு பெணைஞ்சு செஞ்ச பெறவின்னு ஒரே பார்வையில தெரிஞ்சுபோகுது கெழவனுக்கு. அவன் கண்ணுலயும் மூக்குலயும் அப்படியே அப்பன அப்பி வச்சிருக்க, நெத்தி காது இத்தியாதிகள்ல தன் அடையாளம் பாத்து மனசுல ஒரு இருட்டு மூலையில சந்தோசப்பட்டுக்கிருது கெழட்டு உசுரு.

இருந்தாலும் வைராக்கியத்த விடுமா வங்கெழடு?

மொய் எழுதுறவன் மூலமா எகத்தாளத்துக்கு எசப்பாட்டுக் கட்ட ஆரம்பிக்கிறாரு சடையத்தேவரு.

"காத்துவாக்குல யாரோ கட்டையத்தேவன் மகன்னு சொன்ன மாதிரி இருந்துச்சு. அது எந்தக் கட்டையத் தேவன்னு கேளுங்கப்பா."

படிக்காத சடையத்தேவ னுக்கே இந்த லந்துலகள இருந்துச்சுன்னா... அஞ்சாவது பத்து வருசம் படிச்சவனுக்கு எம்புட்டு இருக்கும்? அடிச்சான் திருப்பி அழகுசிங்கம். "இந்த ஊர்லயே சத்துக் கெட்டுப்போன சடையத்தேவர்ன்னு ஒரு ஆளு இருக்காரில்ல... அந்தச் சடையத் தேவன் மகன் கட்டையன்தான் எங்கப்பன்னு எழுதுங்கப்பா."


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 7 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:17 am

"சீலப்பேனு செந்தட்டி சொல்ற தெல்லாம் நம்பி எழுதாதீக. தம் மகன் யாருன்னு எம் மகன்தான் சொல்ல ணுமப்பா."

"கட்டையன்தான் எங்கப்பன்னு நான் சொல்றனப்பா."

"இப்படித்தான் அனாதிக அஞ்சாரு ஊர்ல சொல்லி அலையுது கப்பா."

"எங்க ஆத்தாளாத் தள்ளி வச்சிட்டாலும் அப்பன் இல்லேன்னு போயிராதப்பா."

"அப்பன் வேணும்ன்னு ஆசப் படற பயலுகளயெல்லாம் ஆத்தாளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லுங் களப்பா."

"கெழவா! ஒன்னியக் கொல்லாம விடமாட்டேன்." தத்துப்பித்துன்னு தவ்விட்டான் அழகுசிங்கம். "போடா! போடா! பொடிப் பயலே... சோத்துல கெடக்குற கல்லப் பெறக்க முடியாதவன்
சொக்கநாதர் கோயில் கல்லப் பெரட்டப் போறானாம்." கிண்டல் பண்ணுது கெழடு. கெழவனும் பேரனும் மொத மொதலா முட்டிக்கிட்டு நிக்கிறதப் பாத்ததும் பந்தியில இருந்த பாதி சனம் எந்திருச்சு வந்திருச்சு.

உருமாப் பெருமாத்தேவரு உள்ள வந்து விழுகிறாரு. "ஏம்ப்பா சடையத்தேவா! இதென்னப்பா சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு. அவன் ஒன் பேரன்தான்னு ஊருக்கே தெரியுமில்ல. உரிமை இல்லேன்னாலும் உறவு இல்லேன்னு போயிருமா?"

"அடப் போப்பா... வாந்தியெடுத்த பொருளத்தூக்கி வாய்க்குள்ள போட்டுக்கிர முடியுமா? விட்டா வெறும்பய வீட்டுக் குள்ள வந்திருவான் போலிருக்கே!"

"வர மாட்டேன்னு நெனைக்கிறியா? வாரேன்... விடிய்ய வாரேன்." முறுக்கி நிக்கிற பேரனையும் மூக்கு வெடைக்கிற தாத்தனையும் பக்குவமாப் பிரிச்சுவிட்டுட்டுப் பந்தியில போய் ஒக்காந்திருச்சு ஊரு.

"வேணாமடா மகனே! குடிக்கிற கூழுக்கும் குடியிருக்கிற வீட்டுக்கும் கேடு வந்திருமடா. பொறுமையாயிருந்து பொழைச்சுக் காமிக்கணுமடா"ராத்திரியெல்லாம் மகனக் கட்டிப்புடிச்சு அழுது கோழி கூப்புட ஒறங்கிப் போனா கருவாச்சி.

விடிய்ய... செங்கமங்கலா இருக்கிறப் பவே சடையத்தேவன் வீட்டுக் கதவ ஓங்கி ஒரு எத்து எத்தி உள்ள புகுந்துட் டான் அழகுசிங்கம்.

"ஏய் சடையத்தேவன் கெழவா... மகன் கூப்பிடுறான்னு எங்க அப்பன எழுப்புய்யா." காத்திக மாசக் குளிருக்குப் பயந்து கம்பளிக்குக் கீழே கெடக்கான் கெழவன் ஒண்ணும் பதிலக் காணோம்.

அம்மி மேல படுத்துக் கெடந்த நாய் மட்டும் உர்ருன்னுச்சு. திருகக் கல்லத் தூக்கி நாய் மேல போட்டான். வால் மட்டும் அந்து வள்வள்ன்னு கத்திக் கிட்டுத் தப்பிச்சு ஓடி ருச்சு நாயி. திருகக்கல் விழுந்ததுல ரெண்டா ஒடைஞ்சு துண்டா விழுந்திருச்சு அம்மி.

"இன்னைக்கு அம்மிக் கல்லு. நாளைக்கு ஒங்க தல." சொல்லிட்டு வெளியேறிருச்சு சூறாவளி.

சீ! வெளையாட்டுப் பயன்னு நெனைச்சது வெனையாப் போச்சே. "ஏலே... எந்த ஊர்ல எந்தத் தே...யா வீட்ல கெடக்கானோ? தூக்கிட்டு வாங்கடா கட்டையன." மசங்க வந்து சேந்தான் கட்டையன். "மகனே! மொத மொதலா அப்பனுக்கு அச்சம் வருதடா. பொழைச்ச பொழப் பெல்லாம் போயிரும் போலருக்குடா. மண்புழுவுன்னு நெனச்ச பய காலச்சுத்துற கட்டுவிரியனாகிப் போனாண்டா. என்னடா பண்ணப் போற?"

"அவனக் கண்டதுண்டமா வெட்டிக் கத்திரிக்காச் சாக்குல அள்ளி வருச நாட்டுச் சொனையில சொமந்து போட்டுட்டு வந்திரட்டுமா?"

"நீ செய்வ. அப்புறம் நீயும் நானும் இந்த ஊர்ல இருக்கணுமா இல்லையா..? மகனே சொல்றேன் கேளு. எம்பொழப்பு இன்னைக்கோ நாளைக்கோ. நீ ஊருக் கொரு பொம்பள வச்சு அலையிற. வீட்டுக் கொரு பொம்பள வேணாமா? வம்சத்துக் கொரு வாரிசு வேணாமா? ஒனக் கொண்ணும் வயசு போகல நாப்பத்தஞ்சு தான். இந்த ஊரே ஒண்ணு திரண்டு எதுத்தாலும் சரி கல்யாணம் பண்ணிவைக்கிறேன் கட்டிக்க. வருசத்துக்கொரு பிள்ளைன்னு வாரிசு குடு. நாலு தலமொறையாக் கட்டிக்காத்த சொத்துல ஒரு நாய் வந்து வாய்வைக்கிறதா? நம்ம பொழச்ச பொழப்பு நாறிப்போகாதா? சரி சொல்றா மகனே!"

கட்னவனுக்கு ஒரு பொண்டாட்டி கட்டாதவனுக்குப் பல பொண் டாட்டின்னு திரிஞ்ச கட்டையன் கடைசியில சரி சொல்லிட்டான். தை பெறக்க... வந்துட்டாளய்யா கட்டையன் கட்ன புதுப்பொண்டாட்டி எடது காலத் தூக்கி எட்டுவச்சு.

"ஏய் அங்க பார்ரா... கட்டையன் கட்ன புதுப் பொண்டாட்டிய..."

எரநூறு முந்நூறு வருசமிருக்கலாம் சொக்கத்தேவன்பட்டிங்கிற ஊரு உண்டாகி, அது ஆயுசுக்கும் பாத்ததில்ல அப்படி ஒரு பொம்பளைய. நாந்தான் சூரியன், பொம்பள வேசம் கட்டி பூமிக்கு வந்திருக்கேங்கிற மாதிரி அவ தெரு வழியா நடந்து போறதப் பாத்ததும் சொக்கத்தேவன்பட்டியே உத்து உத்துப் பாத்து சும்மா சொக்கிப்போச்சு சொக்கி.

மஞ்சக் குளிச்ச மாங்கொழுந்து மாதிரி ஒரு நெறம் வளந்து மலந்து நிக்கிற திரேகம் வசதியான ஒயரம் உருண்டை மூஞ்சி ஓயாமச் சிமிட்டுற கண்ணு அவ ஒதட்டுல வெத்தல புடிச்சிருக்கா இல்ல வெத்தலைய ஒதடு புடிச் சிருக்காங்கிற வெவகாரம் தீராத செவப்பு. நான் சண்டைக்குப் போற சாதிக் குதிரைன்னு போறா டக் டக்குன்னு எட்டுவச்சு. ஊருக்குள்ள ஒரு பொம்பள புதுசா வாரேன்னு தண்டோராப் போட்டுக் கிட்டே போகுது அவ தண்டைமணி. சீலக்கட்டு கெண்டைக் காலுக்குமேல அரையரைக்கா அடி ஏறி நிக்க பளீர்னு வந்து பச்சப் பாம்பு மாதிரி கண்ணக் கொத்திப்போகுது பச்ச நரம்பு. எத்தன பவுன் நகை போட்டு வந்திருக்கான்னு இவளக் கேக்காதீக இடுப்பு மட்டும் இருபது பவுனுன்னு கூப்பிட்டுக் கூப்பிட்டுச் சொல்லுது கொசுவம். தூக்காணாங்குருவிக் கூட்ட நிமித்தித் தூக்கிக் கட்ன மாதிரி இருக்கிற அவ கொண்டை என்னையும் சேத்துதான் இவ ஒயரத்த அளக்கணும்னு கூத்தடிக்குது கூத்து.

கட்டையன் பொண்டாட்டி ஊருக்குள்ள வந்ததுல ஒரு சரித்திர சம்பவம் என்னான்னா, லவுக்க போட்டு ஒரு பொம்பள ஊருக்குள்ள வந்தது அதான் மொதத் தடவை. அந்தக் கிளிப் பச்சை லவுக்க அவ திரேகத்த இந்த இறுக்கு இறுக்குதே... துணிய மேனியில போட்டு ஒட்டித் தச்சுக்கிட்டாளா? இல்ல லவுக்கக் குள்ள திரேகத்த நொழச்சுக்கிட் டாளா...? கிண்டல் பழுத்த பெருமூச்சுல கேக்குறாளுக கெழவிக. போறபோக்குல வகுத்துக் குள்ள வெரலவிட்டு, இறுக்கிப் புடிச்ச லவுக்கப்பட்டைய அவ ஒரு சுண்டு சுண்டுறதுல இடி தாக்கி நொறுங்கிக் கெறங்குதுக இளவட்டங்க, அவ வாளிப்பு முப்பதுன்னு மதிக்கச் சொன்னா லும் வயசு என்னமோ இருபத்தேழு தான்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 7 Empty Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum