புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
95 Posts - 52%
heezulia
Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
35 Posts - 58%
heezulia
Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 1 match for யாசிதி

Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Yazidi-women

கடந்த 2014ஆம் ஆண்டு, இராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசு (IS) குழு ஆயிரக்கணக்கான யாசிதி பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமைகளாகப் பிடித்தது.

அவர்களது சக யாசிதிகள் தாமதிக்காமல் மீட்பு முயற்சியைத் தொடங்கினர். ஆனால் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களின் பணி இன்னும் முடிவடையவில்லை.

நவம்பர் 2015இல், பஹாரும் அவரது மூன்று குழந்தைகளும் ஐந்தாவது முறையாக விற்கப்பட்டனர்.

வடக்கு இராக்கின் சின்ஜார் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்திற்குள் 18 மாதங்களுக்கு முன்பு நுழைந்த ஐ.எஸ் குழுவால் சிறைபிடிக்கப்பட்ட பல யாசிதி பெண்களில் பஹாரும் ஒருவர். ஏறக்குறைய 6,000 ஆண்டுகளாக இராக்கில் வாழும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த யாசிதிகள் ஐ.எஸ் போராளிகளால் ‘காஃபிர்’களாகக் (இஸ்லாத்துக்கு எதிரானவர்களாக) கருதப்பட்டனர்.

அவரது கணவர் மற்றும் மூத்த மகன் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் சுடப்பட்டு கூட்டுப்புதைகுழியில் புதைக்கப்பட்டதாக பஹார் நம்புகிறார்.

பஹாரும் அவரது மற்ற மூன்று குழந்தைகளும் எப்படி தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்படுவார்கள் என்று நினைத்து அழுதுகொண்டே ஓர் அறையில் வரிசையாக நின்றதை அவர் நினைவு கூர்ந்தார். ஆனால் அவர்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர்.

அப்போதுதான் உண்மையான கொடுங்கனவு தொடங்கியது. பஹார் தன்னை விலைகொடுத்து வாங்கிய ஐ.எஸ் போராளிகளுக்கு சேவை செய்ய வேண்டியிருந்தது.

"அவர்கள் விரும்பும்போது நான் அவர்களுடைய மனைவிகளைப் போல் நடிக்க வேண்டும். அவர்கள் விரும்பினால் என்னை அடிப்பார்கள்," என்கிறார். அவரது 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் தாக்கப்பட்டனர். அவரது மகள்களில் ஒருவரின் முகத்தில் ரைஃபிள் துப்பாக்கியின் கைப்பிடியால் அடிக்கப்பட்டதில், அவரது முகம் படுகாயமடைந்தது.

பஹாரின் நான்காவது ‘உரிமையாளர்’ அபு கட்டாப் என்று அழைக்கப்படும் துனிசிய தேசத்தைச் சேர்ந்தவர். "நாங்கள் அவரது வீட்டில் தங்கியிருந்தோம், ஆனால் அவர் வேறு இரண்டு ஐ.எஸ் தளங்களில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்ய என்னைக் கடனாகக் கொடுத்தார். இந்த எல்லா இடங்களிலும், நான் வேலைக்குச் செல்வேன், சுத்தம் செய்வேன், கற்பழிக்கப்படுவேன்,” என்கிறார் பஹார்.

“எல்லா நேரங்களிலும் விமானத் தாக்குதல்கள் நடந்தன. ஐ.எஸ் போராளிகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருப்பார்கள், ஆயுதங்களைப் கைமாற்றிக்கொள்வார்கள், அல்லது குண்டுவீச்சிலிருந்து மறைந்திருப்பார்கள். அந்தக் குழப்பம் ஒரு கொடுங்கனவைவிட மோசமானது."

ஒரு நாள், பஹாரும் அவரது குழந்தைகளும் அபு கத்தாபின் வீட்டில் இருந்தபோது, கறுப்புக் கண்ணாடிகள் கொண்ட வெள்ளை நிற கார் ஒன்று வந்து நின்றது. அதன் ஓட்டுநர் பல ஐ.எஸ் போராளிகளைப் போலவே நீண்ட தாடியுடன் கறுப்பு உடை அணிந்திருந்தார்.

தானும் தன் குழந்தைகளும் மீண்டும் விற்கப்படுவதை பஹார் உணர்ந்தார். இதற்கு மேல் தாங்க முடியாத பஹர், தன்னைக் கொன்றுவிடுமாறு அந்த நபரிடம் கத்தினார். ஆனால் அடுத்து நடந்தது எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

அவர்கள் காரை ஓட்டிச் செல்லும்போது, "உன்னை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன்" என்று டிரைவர் கூறினார். பஹாருக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை, அல்லது அவர் அந்த நபரை நம்பவில்லை. அவர் வெறி பிடித்தவராக மாறினார்.

அந்த நபர் காரை நிறுத்திவிட்டு யாரையோ போனில் அழைத்தார். பின்னர் அவர் தொலைபேசியை பஹாரிடம் கொடுத்தார்.

அதில் அபு ஷுஜாவின் குரல் கேட்டது. ஐ.எஸ் குழுக்களிடமிருந்து பல யாசிதி பெண்கள், குழந்தைகளை மீட்க ஏற்பாடு செய்தவர் அபு ஷுஜா. தானும் தன் குழந்தைகளும் மீட்கப்பட வேண்டும் என்பதற்காக டிரைவர் தன்னை விலைக்கு வாங்கியிருப்பதை பஹார் அப்போது உணர்ந்தார்.

பஹார், சிரியாவில் ரக்காவிற்கு அருகில் உள்ள ஒரு கட்டுமான தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். கார் ஓட்டுநர் அவரை இறக்கிவிட்டு, ஒருவர் வருவார் என்றும், ‘சயீத்’ என்ற குறியீட்டு வார்த்தையைச் சொல்லுமாறும் கூறினார். அவர் அந்த நபருடன் செல்ல வேண்டும்.

யாரோ ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, அந்த வார்த்தையை உச்சரித்தார். அவர் பஹாரையும் அவரது மூன்று குழந்தைகளையும் தனது மோட்டார் சைக்கிளில் ஏறச் சொல்லிவிட்டு, "நன்றாகக் கேளுங்கள், நாம் ஐ.எஸ் பிராந்தியத்தில் இருக்கிறோம், சோதனைச் சாவடிகள் உள்ளன, அவர்கள் உங்களிடம் ஏதாவது கேட்டால், ஒரு வார்த்தையும் சொல்லாதீர்கள். அவர்கள் உங்கள் யாசிதி உச்சரிப்பை அடையாளம் கண்டுவிடுவார்கள்," என்றார்.

Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Isis

இராக்கின் யாசிதிகளுக்கு என்ன ஆனது?


அந்த நபர் அவர்களைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக பஹார் கூறுகிறார்.

"அவர்கள் அங்கு எங்களை மிகவும் அருமையாக நடத்தினர். நாங்கள் குளித்தோம், அவர்கள் எங்களுக்கு உணவு மற்றும் வலி நிவாரணி மருந்துகளை வழங்கினர். மேலும் 'நீங்கள் இப்போது பாதுகாப்பான கைகளில் இருக்கிறீர்கள்' என்று எங்களிடம் சொன்னார்கள்."

மற்றொரு நபர் பஹார் மற்றும் அவரது குழந்தைகளை புகைப்படம் எடுத்து அபு ஷுஜாவுக்கு அனுப்பினார்.

மறுநாள் அதிகாலை 3 மணியளவில், பஹாரையும் அவரது குடும்பத்தினரையும் எழுப்பி, மீண்டும் பயணம் செய்யத் தயாராகும்படி சொன்னார்கள். யாருடைய வீட்டில் அவர்கள் தங்கியிருந்தனரோ அந்த நபர் தனது தாயின் அடையாள அட்டையை பஹாரிடம் கொடுத்து, யாரேனும் நிறுத்திக் கேட்டால், தன் மகனை டாக்டரிடம் அழைத்துச் செல்வதாகச் சொல்ல வேண்டும் என்றார். "நாங்கள் பல ஐ.எஸ் சோதனைச் சாவடிகள் வழியாகச் சென்றோம், ஆனால் யாரும் எங்களைத் தடுக்கவில்லை."

இறுதியாக அவர்கள் சிரியா-இராக் எல்லையில் உள்ள ஒரு கிராமத்திற்கு வந்தனர், பஹாரை அபு ஷுஜா மற்றும் அவரது சகோதரர்கள் சந்தித்தனர். "நான் மூர்ச்சையாகும் நிலையில் இருந்தேன். "அதற்குப் பிறகு நடந்த எதுவும் எனக்கு நினைவில் இல்லை," என்று அவர் கூறுகிறார்.

சின்ஜாரை ஐ.எஸ் கைப்பற்றிய பிறகு 6,400க்கும் மேற்பட்ட யாசிதி பெண்கள் மற்றும் குழந்தைகள் அடிமைகளாக விற்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. மேலும் 5,000 யாசிதிகள் படுகொலை செய்யப்பட்டனர், இதை ஐ.நா. ஓர் இனப்படுகொலை எனக் கூறுகிறது.

கடந்த 2017ஆம் ஐ.எஸ் தோற்கடிக்கப்பட்டதில் இருந்து, அரண்டு போயிருந்த யாசிதி சமூகம் மீள முயன்று வருகிறது.

ரேச்சல் ரைட் அறிக்கையின்படி, இன்னும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட யாசிதிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் முகாம்களில் சிக்கித் தவிக்கின்றனர்.

Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் 26cfc0e0-20d0-11ee-941e-23d1e9ab75fa

ஆன்லைனில் விற்கப்படும் பெண்கள்


பஹாரின் மீட்புக்கு ஏற்பாடு செய்த அபு ஷுஜா மட்டும், ஐ.எஸ் குழுவால் கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபடவில்லை. ஐ.எஸ் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே வாழ்ந்த தொழிலதிபர் பஹ்சாத் ஃபஹ்ரான், யாசிதி பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்பதற்காகவும், ஐ.எஸ் போராளிகளின் குற்றங்களைப் பதிவு செய்யவும் ‘கின்யாத்’ என்ற குழுவை அமைத்தார்.

கடத்தப்பட்ட யாசிதி பெண்களையும் குழந்தைகளையும் ஐ.எஸ் போராளிகள் ஆன்லைனில் குறிப்பாக டெலிகிராமில் வாங்கி விற்பதாக கின்யாட்டுக்கு தகவல் கிடைத்தது. "இந்த ஆன்லைன் குழுக்களில் கடன் வாங்கிய பெயர்கள் அல்லது ஐ.எஸ் போராளிகளின் பெயர்களைப் பயன்படுத்தி நாங்கள் ஊடுருவுவோம்," என்று பஹ்சாத் கூறுகிறார்.

இராக்கின் குர்திஷ் பகுதியில் உள்ள தனது அலுவலக சுவரில், அவர் பார்த்த டெலிகிராம் அரட்டைகளின் அச்சிடப்பட்ட ஸ்கிரீன் ஷாட்களை அவர் சுட்டிக்காட்டினார். அவற்றில் ஆங்கிலத்தில், "12 வயதான பெண், கன்னி இல்லை, ஆனால் அழகானவள்" என்று ஒரு விளம்பரம் குறிப்பிட்து. அவர் $13,000 (£10,000) செலவு செய்து சிரியாவில் ரக்காவில் இருந்தார். அவர் ஒரு சோபாவில் ஒரு மாடல் அழகியைப் போல் சாய்ந்து அமர்ந்திருந்த சிறுமியின் படத்தைக் காட்டினார்.

Topics tagged under யாசிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் 7b081e00-20d0-11ee-941e-23d1e9ab75fa

மீட்பு முயற்சிகள் எப்படிப்பட்டவை?


இந்த டெலிகிராம் விவாதங்கள் கடத்தப்பட்ட யாசிதிகள் எங்கிருந்தார்கள் என்ற விவரங்களைத் தரும் என்று பஹ்சாத் கூறுகிறார். "நாங்கள் அங்கு வசிக்கும் மக்களைத் தொடர்புகொண்டு, இந்தக் குழந்தையைத் தேடச் சொல்லுவோம்."

சிறுவர்கள் வீட்டைவிட்டு வெளியே அனுமதிக்கப்பட்டதால் அவர்களைக் கண்டுபிடிப்பது எளிதாக இருந்தது. “கடத்தப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கும் தகவல் அனுப்ப வேண்டும், அப்போதுதான் சிறுவர்களை எதிர்கொள்ளும்போது, நாங்கள் உண்மையானவர்கள் என்பதற்கான ஆதாரத்தை அவர்களுக்கு வழங்க முடியும்," என்கிறார் பஹ்சாத்.

"நாங்கள் குடும்பங்களையும், குழந்தைகளுடன் உள்ள பெண்களையும் மீட்கும்போது, அவர்களைக் காப்பாற்ற நாங்கள் இருக்கிறோம் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்தவும், அவர்கள் தனியாக இருக்கும்போது எங்களுக்குத் தெரியப்படுத்தவும் தொடர் குறியீடுகள் அல்லது சமிக்ஞைகளை நாங்கள் வைத்திருக்க வேண்டியிருந்தது,” என்கிறார்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தச் செயல்முறை வேறுபட்டது. ஆனால் ஒவ்வொன்றும் ஐ.எஸ் குழு சோதனைச் சாவடிகள் மூலம் பணம் மற்றும் போலி ஆவணங்களை உள்ளடக்கியது.

யாசிதிகள் ஐ.எஸ் பகுதிகளுக்குள் நுழைவது மிகவும் ஆபத்தானது, எனவே சிகரெட் மற்றும் தடைசெய்யப்பட்ட மதுவை மாற்றுவதற்கு அதிகம் பயன்படுத்தப்பட்ட உள்ளூர் கடத்தல்காரர்களின் மூலம் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தது.

"இவர்கள் எல்லாவற்றையும் பணத்திற்காகச் செய்தார்கள். அதுதான் அவர்களின் ஒரே நோக்கம். இந்தப் பெண்களை திரும்ப வாங்க பலருக்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் கொடுக்கப்பட்டது," என்கிறார் பஹ்சாத்.

சுமார் 6,417 யாசிதிகள் சிறைபிடிக்கப்பட்டனர், ஆனால் 3,568 பேர் தப்பியோடிவிட்டனர் அல்லது மீட்கப்பட்டனர் என்று கின்யாட் கூறுகிறது. பஹ்சாத் தானே 55 பேரைக் காப்பாற்றினார், ஆனால் ஐ.நா ஆதரவுடைய இடப்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின்படி (IOM), சுமார் 2,700 யாசிதி பெண்கள் மற்றும் குழந்தைகளை இன்னும் காணவில்லை. அவர்களில் பலர் இன்னும் கடத்தல்காரர்களுடன் இருக்கலாம், என்கிறது.

பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது மேலும் மேலும் சிக்கலாகிவிட்டது என்று பஹ்சாத் கூறுகிறார். ஐ.எஸ் தோற்கடிக்கப்பட்ட பிறகு, போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும் வேறு பகுதிகளுக்கு தப்பிச் சென்றுவிட்டனர். சிலர் துருக்கி, இராக், மற்றும் சிரியாவில் உள்ளனர், சிலர் ஐரோப்பாவிற்கும் சென்றனர்.

கடத்தப்பட்டபோது ஐந்து அல்லது ஆறு வயதுடைய யாசிதி குழந்தைகள் உள்ளனர். அவர்கள் தங்கள் மொழியை அல்லது அவர்கள் யார் என்பதை முற்றிலும் மறந்துவிட்டார்கள். "அவர்களுக்கு யாசிதி என்பது பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் தங்கள் குடும்பத்தையும்கூட மறந்துவிட்டார்கள்," என்று பஹ்சாத் கூறுகிறார்.

'நடைபிணமாக வாழ்கிறேன்'


யாசிதி மக்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது.

"யாசிதிகள் பல நூற்றாண்டுகளாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். முஸ்லீம் மக்கள் அவர்கள் மதம் மாறவேண்டும் அல்லது இறக்க வேண்டும் என்று இன்னும் நம்புகிறார்கள்.

அதனால்தான் ஐ.எஸ் என்பது அதன் முடிவு இல்லை என்று நாங்கள் நம்புகிறோம், அது யாசிதிகளுக்கு ஒரு பெரிய பயம்," என்கிறார் ஹைதர் எலியாஸ். இவர் மிகப்பெரிய யாசிதி வக்கீல் அமைப்பான யஸ்தாவின் தலைவர்.

சுமார் 300,000 யாசிதிகள் சின்ஜாரில் உள்ள தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். கிட்டத்தட்ட பாதிப் பேர் - பஹார் போன்றவர்கள் - இன்னும் இராக்கின் குர்திஷ் பிராந்தியத்தில் கூடார முகாம்களில் வாழ்கின்றனர். சின்ஜார் மாவட்டத்தில் உள்ள தங்கள் வீடுகளுக்கு அவர்களால் திரும்பிச் செல்ல முடியாது.

ஏனெனில் அது முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. மேலும் இராக்/சிரியா எல்லையில் அதன் மூலோபாய நிலை அதை ஆபத்தான பிரதேசமாக மாற்றுகிறது. ஐ.எஸ் அமைப்புடன் சண்டையிட வந்த போராளிகள் இப்போது மேலாதிக்கத்திற்காக ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறார்கள்.

எந்த நேரத்திலும் இன்னொரு படுகொலைக்கு ஆளாக நேரிடும் என்று சமூகம் அச்சமடைந்துள்ளதாகவும், தற்போது பல யாசிதிகள் இடம்பெயர்ந்து வருவதாகவும் எலியாஸ் கூறுகிறார். "அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வு மிகவும் முக்கியமானது. ஆனால், இப்போது அவர்கள் பாதுகாப்பாக உணரவில்லை."

பஹாரின் சுதந்திரத்தை வாங்குவதற்கு சுமார் £16,000 ($20,000) செலவானது. அவருக்கு இப்போது 40 வயதாகிறது. ஆனால் அதைவிட வயதானவராகத் தெரிகிறார். அவரது தலைமுடி இப்போது பெரும்பாலும் நரைத்திருக்கிறது.

அவர் மீட்கப்பட்டதில் இருந்து எட்டு ஆண்டுகளாக முகாமில் வாழ்கிறார். கூடாரத்தின் தரையில் மெல்லிய மெத்தையில் அமர்ந்து, காணாமல் போன தன் குடும்ப உறுப்பினர்களின் படங்களுடன் ஒரு பிளாஸ்டிக் கோப்புறையை எடுக்கிறார்.

தன் கணவனுக்கும் மூத்த மகனுக்கும் என்ன நடந்தது என்று தெரியாமலும், பலமுறை பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாலும் ஏற்பட்ட மன உளைச்சலைக் கையாள்வது, பஹாரை உடல்ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் மிகவும் மோசமாக்கியுள்ளது.

அவருடைய மற்ற குழந்தைகள் இன்னும் அவருடன் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இன்னும் அதிர்ச்சியில் இருப்பதாகவும், எல்லா நேரத்திலும் கவலையாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

"என் மகளுக்கு அவர்கள் அடித்த அடிகளால் காயங்கள் உள்ளன. நான் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் இந்த நேரத்தில், நான் இப்போது ஒரு நடைபிணமாக வாழ்கிறேன்," என்று அவர் கூறுகிறார்.

குறிச்சொற்கள் #ஐ.எஸ் #யாசிதி #பெண்கள் #இஸ்லாம் #பயங்கரவாதம்

பிபிசி

Back to top