புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10 
68 Posts - 45%
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10 
5 Posts - 3%
prajai
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10 
4 Posts - 3%
Jenila
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10 
2 Posts - 1%
jairam
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10 
2 Posts - 1%
M. Priya
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10 
1 Post - 1%
kargan86
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10 
9 Posts - 4%
prajai
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10 
6 Posts - 3%
Jenila
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10 
4 Posts - 2%
Rutu
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10 
2 Posts - 1%
jairam
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !


   
   

Page 19 of 26 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 22 ... 26  Next

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை




அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :



இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !



திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்







[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed Feb 25, 2015 4:41 pm

4. " பாலும் பழமும் கைகளில் ஏந்தி "




http://picosong.com/2Yb9/




கணவன் - மனைவி - இவர்கள்

ஒருவருக்கு ஒருவர் உதவிகளை செய்து

அன்பு கொண்டு வாழ்வதுதான் இல்வாழ்க்கை.


இவர்களில், மனைவி எனப்படுபவளின்

பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது !

வீட்டை நன்றாக நிர்வாகம் செய்பவளை : 'இல்லத்தரசி'

என்று சொல்கிறார்கள் !



'இல்லத்தரசன் '

என்கிற சொல்லே வழக்கில் இல்லை !



என் வீட்டில் , என்னுடைய மனைவி தன் அம்மா வீட்டுக்கு

சென்றால்.....

என் நிலைமை அதோ கதிதான் !




1. முதலில் சுவையான, சூடான உணவு போச் !


2. வீட்டை " கவனிப்பது " என்பது தலைவலி !


3. ஒரு தேனீர் தயாரித்து சாப்பிட வேண்டும்

என்றால் :

பால், சர்க்கரை , டீத்தூள் ,டீ பில்டர்

, டம்பளர் ( 2 - ஒன்று 'ஆத்துவதற்கு' )

தயாராக வைத்திருத்தல் வேண்டும் !



"காஸ்' ஐ 'பற்ற' வைக்கவேண்டும் !


'டீ" கொதிக்கும் வரை 'கூட' இருக்க வேண்டும் !

டீ யை வடிகட்டி பின்னர் மறக்காமல் 'காஸ்'

ஐ " ஆப் ' செய்யவேண்டும் !


அப்புறம் ?


'டீ குடிக்கவேண்டும் !

பின்னர் : ' சம்பந்தப்பட்ட ' பாத்திரங்களை " மரியாதை" யாக

கழுவேண்டும் !


ஒரு டீ சாப்பிடுவதற்கு இவ்வளவு :

சம்பிரதாயாங்கள் !




என் மனைவி இருந்தால்.....?


சூடான நுரையுடன் தேனீர், கம்புயூடர் முன்பு,

நான் ' ஈகரை முன்பு !



( வெளியே போய் டீ யை சாப்பிட்டால்.....

டீ யின் விலை என்னவோ

8 அல்லது 10 ரூபாய்கள்தான் ....ஆனால்


Food Poisin வந்து என்னை வேறு ( நல்ல) டாக்டரிடம்

தூக்கிக் கொண்டு போகவேண்டும் ! )




என் மனைவி ஊருக்குப் போய்விட்டால், காலயில்

" கிளினிக்" போவதற்கு முன்னர்,

என்னூடைய வழக்கமான குளிப்பது போன்ற வேலைகளைத்

தவிர .....

செய்யவேண்டிய வேலைகள் எத்தனை தெரியுமா ?


23 பணிகள் !




( சில எடுத்துக்காட்டுகள் :

1. Freezer உள்ள பால் பாக்கட் ஐ வெளியே 'எடுக்க'...'எடுக்க'...'எடுடுடுடுக்க்க'

வேண்டும்.....அவ்வளவு 'ஈஸி' இல்லை !


2. இன்று காலையில் வந்த பாலை Freezer இல் வைக்க வேண்டும்..

அல்லது 'தூக்கி' போடவேண்டும் ! )




என்னுடைய மனைவி சில நாட்களே

ஊருக்குப் போனாலே இந்த நிலைமை !


மனைவியை இழந்து விட்டால் ?


அதனை என்னால் இங்கே சொல்லமுடியவில்லை...

அந்த வேதனையை அனுபவித்து என்னிடம் வந்து

புலம்புவர்கள் சொல்லி நான் வருத்தம் அடைந்திருக்கிறேன்!




மொத்தத்தில்...



கணவனுக்கு முந்தி சுமங்கலியாக

" போக" வேண்டும் என்று நினைக்கும் மனைவிமார்கள்

சுயநலம் கொண்டவர்கள் என்று நான் நினைக்கிறேன்,


அப்படிப் பார்த்தால்.....


நானும் சுயநலம் கொண்டவன் தான்







பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 STx2ltBaT7G3Rk8rEZIW+hqdefault(10)





மிக உண்மையாக காதலிக்கும் இளம் மனைவி உடல்நலம்

பாதிக்கப்பட்டால்....


அவளையே நினைத்திருக்கும் காதல் கணவனின்

மனநிலை எப்படி இருந்திருக்கும் !



அவள், எப்படி தன்னை கவனித்துக்கொண்டாள் என்ற

நினைவுகளும்...

இன்று உடல்நலம் கெட்டதால் அமைதி இழந்து தூக்கம்

இன்றி தவிக்கும் :

அவளைப் பற்றிய கவலைகளும் நிறைந்த

கணவனின் சிந்தனைகள் எப்படி இருந்திருக்கும் ?





இதைத்தான் கவிஞர் கண்ணதாசன் இந்த

பாட்டில் சுவைபடா எழுதி உள்ளார் !




பாடலின் முதலில் வரும் மெல்லிய வயலின் இசையில்

மெல்லிசை மன்னர் டி கே ராமமூர்த்தி






பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 A2ReQstrQfiQny2Za9dH+images




மட்டுமா நினைவுக்கு வருகிறார்....



ஓர் அமைதியான பாட்டைக் கேட்கப் போகிறோம்

என்கிற உணர்வும் நினைவூக்கு வருகிறது அல்லவா !




" பாலும் பழமும் கைகளில் ஏந்தி "

பாடலில்....

கணவன், எப்படியெல்லாம் மனைவி மேல்

வைத்திருப்பான் என்பதைக் காட்டுகிறது அல்லவா !





" உண்ணும் அழகைப்

பார்த்திருப்பாயே ! "



இப்படி ஒரு வரி இந்த பாட்டில் உள்ளது !


அது எப்படி...

ஒருவர் சாப்பிடுவதை இன்னொருவர் வேடிக்கை பார்ப்பது....

அநாகரிகமான செயல் அல்லவா ?




ஒருவர் சாப்பிடுவதை இன்னொருவர்

பார்க்கக் கூடாது என்பது உண்மைதான்....


ஆனால்....





கணவன் சாப்பிடும் அழகை

மனைவி பார்க்கலாம் என்பது கண்கூடு !





கவிஞர் கண்ணதாசன் , தன் வாழ்வில்

நடந்ததைத்தான் இப்படி பாடலாக எழுதி உள்ளார் !




ராம. கண்ணப்பன் .


கவிஞர் கண்ணதாசனின் உதவியாளர் சொல்கிறார்.



" கவிஞரை பாராட்டி , சீராட்டி ஊட்டி வளர்த்ததில்

கண்னதாசனின் மனைவி பார்வதி அம்மையாருக்கு

பெரும் பங்கு உள்ளது ! "





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 JyYqd7U7RhuWt3plLyzg+DSC06932





" தன் கணவருக்கு சமைத்த உணவு

வகைகளை எல்லாம் தேவையான அளவுக்கு

பாத்திரங்களில் எடுத்துக்கொண்டு :

சேலை முந்தானையால் அவைகளை மூடியபடி

கவிஞரின் அறைக்குச் செல்வார் !


கவிஞர் சாப்பிடுவதை பிறர் காணக்கூடாது என்று தான்

அறைக்குள் சாப்பாடு !


பரிமாறும்போது.......


சிறிது சிறிதாகத்தான் உணவு வகைகளை எடுத்து இலையில்

வைக்கவேண்டும் !


அதிகம் வைத்தால் அவர்க்கு கோபம் வந்துவிடும் !


அவர் எதனை அதிகமாக விரும்பி சாப்பிடுகிறாரோ

அதனை குறிப்பறிந்து அளவாக ( ! ) வைக்க வேண்டும் !



ஆற அமர கவிஞர் சாப்பிடுவார் !


கடித்துத் துப்பிய எலும்புகளும்,

மீன் முள்களும்,

சுவைத்து துப்பிய காய்கறி தொலிகளுமாக

சாப்பாடு மேஜை ஒரு போக்களம் போன்று

காணப்படும் !


அவைகளை பின்னர் ஒரு குப்பைத்தொட்டியில் போட்டு

விட்டு மூடிவிடுவார்....

யார் கண்னும் பட்டுவிடக் கூடாது என்கிற எண்ணம்

அந்த அம்மையாருக்கு ! "




இப்படி எழுதியுள்ளார் ராம .கண்ணப்பன் !


இப்படி தன் அனுபவங்களைத்தான் கண்ணதாசன்

இப்படி பாட்டிலே எழுதியுள்ளார் !




" உங்கள் வீட்டில் எப்படி ? "

என்றா கேட்கிறீர்கள் ?


என் மனைவியும் நான்


" உண்ணும் அழகை "


பார்த்துக் கொண்டிருப்பாள்.... !


உண்ணும் அழகை - Inverted Comma வில் இப்பதைப் பார்க்கவும் !






இதோ, சில

" உண்ணும் அழகு"

- என்னை போல !






பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 O1AvHXLGSMixDzF2OsPL+DSC06937




( ' முதல் மரியாதை ' சிவாஜி கணேசன் ! )









பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 N3JD41bgQQKfBJIEdPDx+DSC06941






( ' எங்க வீட்டுப் பிள்ளை ' எம்ஜிஆர் ! )








பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 E73PnvfSN6yQrJOTaa5g+DSC06938


( " என்னய்யா, உங்க வூட்லே சாப்டா அழுவாங்களா? "

'சபாஷ் மீனா ' மூக்கன் !





" கண்ணை இமைபோல் காத்திருப்பாயே "

என்கிற வரிகளை, கவிஞருக்கு பிடித்த வரிகள்

என்பதை முன்னரே உங்களுக்கு சொல்லி இருந்தேன்.


" உயிரைக் கொடுத்தும் உன்னை நான் காப்பேன்"


என்கிற வரி என்ன சொல்கிறது ?


ஒருவர், தன் உயிரைக் கொடுத்து இன்னொரு உயிரைக்

காப்பாற்ற முடியுமா, என்ன ?


அப்படி இல்லை !


" அந்த அளவுக்கு உன்னை காக்க முயல்வேன் "


என்றுதான் அர்த்தம் !





இந்த பாட்டில் இன்னொரு சிறப்பு உண்டு!





" பாலும் பழமும் கைகளில் ஏந்தி "



மேற்கண்ட வரிகளை படித்தீர்களா ?


இப்போது சொல்கிறேன் :



இந்த பாடல் வரிகளைப் பயன்படுத்தியே

இந்த பாடல் முழுவதையும் பாடிவிடலாமே ! "





எடுத்துக்காட்டு :




" உண்ணும் அழகைப் பாத்திருப்பாயே !


உறங்கவைத்தே விழித்திருப்பாயே !


கண்ணை இமைபோல் காத்திருப்பாயே !


காதற்கொடியே கண் மலர்வாயே ! "





மேற்கண்ட வரிகளை இப்படி பாடுங்கள் !







" பாலும் பழமும் கைகளில் ஏந்தி !


பாலும் பழமும் கைகளில் ஏந்தி !


பாலும் பழமும் கைகளில் ஏந்தி !


பாலும் பழமும் கைகளில் ஏந்தி ! "




கமல்ஹாசன், முன்பு இருந்த :

" மெட்ரோ சானல்" இல்

இப்படி இந்த பாடலை மிக அற்புதமாத

பாடிக் காட்டினார் !







கணவன் , மனைவிய நோக்கி / நினைத்து

பாடும் சில பாடல்களில் எனக்குப் பிடித்தவை !




1. " சுமைதாங்கி சாய்ந்து போனால் " - " தங்கப் பதக்கம் "



2. " உன் கண்ணில் நீர் வழிந்தால் " - " வியட்நாம் வீடு "



4. " பொன்னை விரும்பும் பூமியில் " _ " ஆலைய மணி "



5. " துள்ளித் திரந்த பெண் ஒன்று " - " காத்திருந்த கண்கள் "



6. " தானே தனக்குள் ரசிக்கின்றாள்" - " பேரும் புகழும் "



7. " அடக் கொப்புரானே சத்தியமாய் " _ " காவல்காரன் "



8. " மலர் கொடுத்தேன் " - " திருசூலம் "



9. " பாவாடை தாவணியில் பார்த்த உருவமோ " _ " நிச்சயத்தாம்பூலம்"



10. " புன்னகையில் ஒரு பொருள் வந்தது " - " பவானி "



11. " இறைவனுக்கும் பாட்டு எழுதும் " - " நிமிர்ந்து நில்






5. " போனால் போகட்டும் போடா ! "






http://picosong.com/2Ybb/




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 0NyzEprRi6I2JxH39VW9+pppp






திரைப் படப் பாடல்கள் அனைத்துப் பாடல்களும் மிக

உயர்ந்ததாக அமையும் என்று சொல்லிவிடமுடியாது !

கதையின் போக்கு, காட்சி அமைப்பு போன்றவைகளால்

சில பாடல்கள் சில கவிஞர்களால் சாதாரணமாக போய் விடுவது

உண்டு.





ஆனால் எல்லோர் மனதிலும்

நீங்கா இடம் பெற்ற சில பாடல்கள் :


கதையின் படியும்,

நிஜ வாழ்க்கையில் நம் உள்ளத்தை தொடும்படியும்

அமைவதும் உண்டு !





இந்த பாடலும் அப்படித்தான்





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Fl0LzXwPRf2kZiJIoNMH+0(2)





ஒரு நாள்...



கவிஞர் கண்ணதாசனுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

அந்த செய்தி :



" திரு டி டி கிருஷ்ணமாச்சாரி ( டி டி கே)

உங்களை சந்திக்க விரும்பிகிறார், வரமுடியுமா





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 VvLFKV4qSKbMFy1wpuKS+ttk




டி டி கே பிரதமர் நேரு அவர்களின் மந்திரி

சபையில் நிதியமைச்சராக இருந்தவர்.

ஒரு நல்ல ரசிகர், சங்கீதத்தை விரும்புகிறவர் !

ஆனால் இந்த நிகழ்ச்சி நடக்கும் சமயத்தில் மத்திய மந்திரி

சபையில் இருந்து விலகி விட்டார்......


"இந்த சூழ்நிலையில் இவர் ஏன் என்னைப் பார்க்க

விரும்புகிறார் ? "


குழம்பினார் , கண்ணதாசன் !



டி டி கே வை சந்திக்க அவர் வீட்டுக்குச் சென்றார் கவிஞர்.


இவரைப் பார்த்த டி டி கே :


" வாங்க.....வாங்க....கண்ணதாசன் ! "


என்று வாஞ்சையுடன் அணைத்துக்கொண்டார் !




டி டி கே சொன்னார் :





" தவிர்க்க முடியாத வருத்தம் எனக்கு.

மந்திரி சபையில் இருந்து ராஜினாம செய்துவிட்டேன்.

ஏதோ இனம் தெரியாத அழுத்தம் !

யார் யாரோ எப்படியோ ஆறுதல் சொன்னாலும்

என் மனம் உடன் படவில்லை !

ஆனால் வீட்டுக்குள் நுழைந்த போது நீங்கள் எழுதிய

பாடல் : " போனால் போகட்டும் போடா ! "

வானொலியில் ஒலித்தது !

எனக்கு மனதை இதமாக வருடிக்கொடுத்த அனுபவம்

கிடைத்தது !

எனவே உங்களை சந்திக்க விரும்பினேன் !"



என்று சொன்னாராம் !



அவருக்கு மட்டுமா !




எதையும் இழந்து துயரில் வாடி நிற்கும்

எவருக்கும் ஆறுதல் தரும் பாட்டு....இன்றும்

ஆறுதல் பாட்டு இது !






பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Ge4GmqTQlm98cs7E4WKH+hqdefault(11)




" லட்சயவாதிகள் தன் சொந்த வாழ்க்கையில்

எந்த லாப நஷ்டம் வந்தாலும் :

" வந்தால் வரட்டும், போனால் போகட்ட்டும் "

என்ற இருப்பார்கள் ! "



என்கிற சாந்தியின் வரிகள் தான் டாக்டர் ரவியை :

வெறுப்புக்கு ஆளாக்கி விட்டது !



ரவியின் ஆராய்ச்சிக்கு தான் தடையாக இருப்பதை

சாந்தி விரும்பவில்லை.....

எனவே ரவியை விட்டு விலகுகிறாள், சாந்தி !



எனவேதான் :



" போனால் போகட்டும் போடா ! "



பாடல் வரிகளைப் படித்த மெல்லிசை மன்னர்,

" வாடா, போடா "

என்கிற சொற்களைப் பார்த்து அவைகளை

ஆட்சேபித்தாராம் !


ஆனால் கண்னதாசன் ஒத்துக்கொள்ள வில்லை !



இருவரின் நட்பு பலமாக

இருந்ததால் இப்படி பல பாட்டல்கள் நமக்கு

கிடைத்தன !





மிகக் குறைந்த வாத்தியங்கள்,

மரணத்தை பற்றிய பாடல் என்பதால்

மெல்லிசை மன்னரின் 'ஹம்மிங்க்' கூட

நம்மை இடுகாட்டுச் சூழலை எடுத்துக் காட்டியது !


வேறு ஏதாவது ?


நிறைய இருக்கின்றன......

கொஞ்சம் நீங்களும் எழுதுங்களேன் !



இதோ , அடுத்த பகுதி .........


எம்கேஆர்சாந்தாராம்


mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed Feb 25, 2015 4:43 pm

6. தொகையறா :


" தாவி வரும் மேகமே "


பாடல் : " காதல் சிறகை காற்றினில் விரித்து




http://picosong.com/2kyM/





இந்த பாடலைப் பற்றி எல்லோருக்கும் நன்றாகத்

தெரிந்திருக்கும் ! ஆனால் இந்த பாடலில் பொதிந்து

உள்ள முழு அர்த்தத்தை அடியேன் சொல்லவேண்டும்

என்றால் 2 கண்டிஷன் கள் போடவேண்டும் ! முதலில்

“ கிளினி” ஐ மூடிவிட வேண்டும் ! இரண்டாவது :

” மின் வெட்டு” இருக்கக்கூடாது!



ஏதோ அடியேனால் முடிந்த அளவுக்கு எழுதுகிறேன் !





” பிரிவு”

என்கிற சொல்லுக்கு அர்த்தம் தரும் வகையிலும் ,

விளக்கம் தரும் வகையிலும் தமிழ்ப் பாடல்கள்

நிறைய வந்துள்ளன !



“ காதல் கீதம் கேட்குமா” - “ கொஞ்சும் சலங்கை”


“ எங்கிருந்த போது உன்ன மறக்க முடியுமா”

- “ நீங்காத நினைவு “



“ ஒரே பாடல் உன்னை அழைக்கும் “ - “எங்கிருந்தோ

வந்தாள் “



“ நீ இல்லாத உலகத்திலே” - “ தெய்வத்தின் தெய்வம் “




“ அவள் பறந்து போனாளே” - “ பார் மகளே பார்”



“ நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே”

- “ சதாரம் “



இன்னும் எவ்வளவோ சொல்லலாம் !





இவைகளில் முதன்மையானது இந்த பாடல்!




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 PPpGoM8yR8iOE0ictI4L+hqdefault



காதலித்து , திருமணம் ஆன பின்னர் தொழிலில்

ஈடுபாடு இல்லாமல், தன்னயே சுற்றி வரும் கணவனை

விட்டு பிரிந்து விடும் மனைவி, தன் கணவனை

நினைத்து , ஏங்கி, பிரிவை

நினைத்து பாடும் பாடல் !

அவள் வெளி நாட்டில் இருக்கிறாள்.

பிரிவின் துயரை தவிர்க்க “ மேகத்தையே

தூதுவன்” ஆக “ போக மாட்டாயோ”

என்று ஏங்குகிறாள் !

அது மட்டுமா !

வெளிநாட்டில் இருக்கும் அவளுக்கு தூது

செல்ல யாரும் இல்லாத போது அவள் என்ன

சொல்கிறாள் - என்ன நினைக்கிறாள் ?


இந்த வரிகளை எந்த தமிழனும்

மறக்க மாட்டான் !








” எண்ணங்களாலே பாலம் அமைத்து

இரவிம் பகலும் நடக்கவா !

இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இரு கை

கொண்டு வணங்கவா! “



பிரிவின் துயரத்தை இன்னும் எப்படித்தான்

விவரிப்பது !



” பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது

அழுதால் கொஞ்சம் நிம்மதி !

பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான்

தெய்வத்தின் ச்ன்னிதி- அதுதான் காதல் சன்னதி ! “



இந்த மாதிரியான வரிகளை யார்தான் மறக்கமுடியும்






பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 QDZN5XOSUylUBFSAcaGz+B_SarojaDevi1






7 . " என்னை யார் என்று எண்ணி எண்ணி

நீ பார்க்கிறாய் !



http://picosong.com/2kkw/


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 V5V3yGDQRVuBskxf3NSQ+160x120-3Sl







இந்த பாடலை கவிஞர் எழுதிய விதம்

வியக்கத்தக்கது !

தான் பாடலை எழுதும் திரைப்படத்திற்கும் பொருத்தமாக

இருக்கவேண்டும், அதே சமயத்தில் தான் வாழ்க்கையில் பட்ட

அனுபவமாகவும் இருக்க வேண்டும் - இந்த இரண்டையும்

இவர் எப்படி 'பாலன்ஸ்' செய்தார் என்பது ஆச்சர்யத்தைத்

தரக்கூடியது !





ஒரு தடவை நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,

கண்ணதாசனைப் பார்த்து இப்படி கேட்டாராம் :



" எப்படி இவ்வளவு அற்புதமாக

பாடலை எழுதுகிறீர்கள் ? "



என்று கேட்டாராம் .




கண்ணதாசன் சொன்னாராம் :





" அப்படியா ?

உண்மையில் உங்களை மயக்கும் பாடல்களை

நானா எழுதுகிறேன் !


" என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் "


பாடலைக் கேளுங்கள் ! புரியும் !

நான் உண்மையில் அவளுக்காகவே

எழுதினேன் ! "



என்றாராம் !




கண்ணதாசன் சொல்கிறார் :




" நான் சிறுவயதில் ஒரு பெண்ணைக்

காதலித்தேன் .அவள் கெளரமான குடும்பப் பெண்.

எங்களுக்குள்ளே ரகசிய சந்திப்போ, பேச்சோ நிகழ்ந்த

தில்லை, நான் அவளைத் தொட்டதும் இல்லை !


முதன் முதலில் அந்த பெண் என்னைப் பார்த்து சிரித்தாள்!

அதன் பின்பு ஆயிரக்கணக்கான சிரிப்புகளை நான்

பார்த்திருக்கின்றேன், ஆனால் அவளின் சிரிப்பை

நான் மறக்கமுடியவில்லை ! அவள் சிரிப்புதான்

எனக்குப் பிடித்தது !


( ' ஓராயிரம் பார்வையில் உன் பாரவையை நான் மறவேன்! ' )


அந்த காதல்தான் என் கற்பனைக்கு வடிவமாகிறது.

என் கவிதைகளுக்கு அவள்தான் குரு !

இல்லையென்றால் கவிதை எழுதும் ஆசையே எனக்கு

இல்லையே ! "




இப்படி சொன்ன கண்ணதாசன் அந்த பெண் யார், அவள் பெயர்

என்ன என்பதை குறிப்பிடவே இல்லை !

ஏன் ?



அந்த காதல் அத்துடன் முறிந்து விட்டது !



இதெல்லாம் நடந்து முடிந்து சில வருடங்கள்

கழித்து.......


தமிழர்கள் வாழும் ஒரு வெளி நாட்டில்.....

கவிஞர் சென்றார்.

கவிஞர் மேடையில் பேசிக்கொண்டிருக்கிறார்.

எதிரில் , பெண்கள் அமரும் இடத்தில் கண்ணதாசனின்

விழிகள் அலைந்தன .

எதற்கு ?


அந்த பெண்ணின் விழிகளைத் தேடித்தான்!




( ' பாட்டும் பரதமும் ' படத்தில் நடிகர் திலகம் ஒவ்வொரு ஊரில்

நடனமாடும் போது, நிகழ்ச்சி நடக்கும் முன்பு , நாடகத் திரையை

விலக்கி தன் நாயகி ஜெயலலிதாவைத் தேடுவது போல ! )



அன்று ஒரு நாள் அவரின் ஏமாற்றம் நீங்கியது !


கவிஞர் பேசிய மேடைக்குப் பக்கத்திலேயே அந்த பெண் உட்கார்ந்து

அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள் !


எப்படி ?


வைத்த கண் வாங்காது அவரை உற்றுப் பார்த்துக்

கொண்டிருந்தாள் !



தன்னை கவிஞன் ஆக்கிய

காவிய நாயகியைக் கண்டதும் காவேரி வெள்ளம் போல்

உற்சாகம் கொண்டார்








" என்னை யார் என்று

எண்ணி எண்ணி நீ

பார்க்கிறாய் ! இது யார் பாடும் பாடல்

என்று நீ கேட்கிறாய் ! "






கவிஞர் மேடையில் பாடினார் !

ஒரே கரவொலி !

கவிஞர் மேலும் பல கவிதைகளை பாடினார் !




மேற்கண்ட சம்பவத்தை அவரால்

மறக்க முடியவில்லை !





மேற்படி சம்பவத்தை இந்த

" பாலும் பழமும் ' படத்தில்

இணைத்து விட்டார் !





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 5yI8dNIIRoiHa7SKzn07+ennai





' அவள் பேரை தினம்

பாடும் குயிலாக...'

கவிஞர் மாறிவிட்டார் !






விபத்தில் கணவனுக்கு கண் பறிபோகிறது.

மனைவி இறந்து விட்டாள் என்று அவன் நினைக்கிறான்.

தொல்லை காரணமாக வேறு பெண்னை மணக்கிறான், கணவன்.

இறந்து விட்டதாக கருதப்பட்ட மனைவி அவனுக்கு

நர்ஸ் ஆக வேலைக்கு வருகிறாள் !




அவளுக்கோ தான் யார் என்று வெளியே

சொல்லமுடியாத நிலை !






பாடலை கணவன் தொடங்குகிறான்





" என்னை யார் என்று எண்ணி எண்ணி

நீ பார்க்கிறாய் ?

இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய் ?


நான் அவள் பேரை தினம் பாடும் குயில் அல்லவா ?

என் பாடல் அவள் தந்த மொழியல்லவா ? "





மேற்கண்ட வரிகள் மட்டும் அல்ல...

முழுப் பாடலையும் கண்ணதாசன்





அந்த பெண்ணை நினைத்தே

எழுதியுள்ள்ளார் !




இந்த பாடலில்

சரணங்களை மாற்றிப்

பாடினால் நன்று !








முதலில்,

படத்தில் / இசைத்தட்டில்

இடம் பெற்ற முறையைப் பார்ப்போம் !





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 FFz3ol6Q06Tmo4kbwcqw+cover_m






பாரா - 1





" என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா..

சருகான மலர் மீண்டும் மலராதய்யா.....

கனவான கதை மீண்டும் தொடராதய்யா....

காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா ! "






பாரா - 2





" எந்தன் மனக் கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா..

மலரோடு மலராக மலர்ந்தாளம்மா...

கனவ்ர்ன்னும் தேர் ஏறி பறந்தாளம்மா..

காற்றோடு காற்றாக கலந்தாளம்மா ! "





கணவன் பேச பேச...



மனைவி பதில் சொல்ல ..சொல்ல







சரணங்கள் 'உல்ட்டா'

ஆகிவிட்டன !






" எப்படி ? "

என்கிறீர்களா , சொல்கிறேன் !




முதலில் பாரா 2 இல் கணவன் என்ன பாடுகிறான் ?



" எந்தன் மனக் கோயில் சிலையாக

வளர்ந்தாளம்மா! "




இதற்கு மனைவி தரும் பதில் பாரா - 1 வருகிறது !



" என்றும் சிலையான உன் தெய்வம்

பேசாதய்யா ! "








இது போல...

கணவன் பாடும் பாரா 2 முதலிலும்

மனைவி , கணவனுக்கு பதில்

சொல்லும் பாரா -1 , இரண்டாவகத்தான்

கவிஞர் எழுதியிருப்பார் !


திரைப்படப் பாடலாகும் போது....

அது மாறிவிட்டது !







மேலும் படியுங்கள் :





கணவன் - பாரா -2



" மலரோடு மலராக மலர்ந்தாளம்மா"



மனைவி பதில் - பாரா -1



" சருகான மலர் மீண்டும் மலராதய்யா"








கணவன் - பாரா -2



" 'கனவென்னும் தேர் ஏறி பறந்தாளம்மா"






மனைவி பதில் - பாரா -1



" கனவான கதை மீண்டும் தொடராதய்யா"








கணவன் - பாரா -2



" காற்றோடு காற்றாக கலந்தாளம்மா "






மனைவி பதில் - பாரா -1





" காற்றன அவள் வாழ்வு திரும்பாதய்யா "





இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று

நினைக்கிறேன் !






கடைசியாக :






" இன்று உனக்காக உயிர் வாழும் துணை

இல்லையா,


ஒளி வீசும் எழில் கொண்ட சிலையில்லையா...


அவள் வாழ்வு நீ தந்த வரம் அல்லவா....


அன்போடு அவளோடு மகிழ்வாய் அய்யா ! "




என்கிற வரிகள் முதல் மனைவி, இரண்டாவது மனைவி

செளகார் ஜானகிக்கு பரிந்து பேசும் வரிகள் தானே !







சாகா வரம் பெற்ற

கவிஞரின் முதல் காதல்

தந்த சாகா வரம் பெற்ற

பாடல் இது !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 ShURbUdVSpe5r8wLcuFN+f1fv





8. " தொகையறா :


" பாலும் பழமும் என "


பாடல் :

" இந்த நாடகம் அந்த மேடையில்





ஒரு மாறுதலுக்கு :


இந்த பாடலுக்கு விளக்கத்தை யாராவது ஒருவர்

எழுதுங்களேன் !







9 . " தென்றல் வரும் சேதி வரும் "




http://picosong.com/2kqL/



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 EIr23L0LRLqH67O0P2rz+pp5



இந்த அழகான பாட்டு, நீளம் கருதியோ என்னவோ

படத்தில் இருந்து நீக்கப்பட்டது.


இந்த பாடலுக்கான படப்பிடிப்பும் நடத்தப் படவில்லை

என்று தெரிகிறது !






10. " டைட்டில் இசை





http://picosong.com/2kqy/







அன்பர்களே !


" பாலும் பழமும் " படத்தைப் பற்றிய

தகவல்கள் இன்னும் ஏராளமாக உள்ளன !


சொல்லப்போனால்.......நான் எழுத நினைத்ததில்


பாதியைத்தான்


இப்போது எழுதியது !

நேரமின்னை காரணமாகவும்

வேறு கட்டுரைக்கு செல்ல வேண்டிய

அவசியத்தையும் கருதி இத்துடன்

நிறுத்திக்கொள்கிறேன் !



செய்திகளில், எழுத்துக்களில் தவறு இருந்தால்

திருத்தவும், சரி செய்து கொள்கிறேன்.






நன்றி !






@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@




அடுத்த கட்டுரை !







சில திரைப்படப் பாடல்களும்

அவை பின்னர் மறைந்திருக்கும்

சுவையான

செய்திகளும் !



பட்டுக்கோட்டையார் &

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 PNuyi5FT96KP7KeAkQuY+FL27kalyani_jpg_1942716g




கவியரசர் கண்ணதாசன்


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 CKwwVzEtSdGDq0TR59Xd+PoetKannadasan




மற்றும்

'வாலிப ' வாலியார்


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 3OGMSchRRKJQd57efPKn+Vaali1305_01



பாடல்களில் இருந்து !





எம்கேஆர்சாந்தாராம்


chittibabu
chittibabu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 23/05/2014

Postchittibabu Wed Feb 25, 2015 6:41 pm

வணக்கம் டாக்டர் சார்,

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் இழையில் விஜயம்.

கணவன் - மனைவி - இவர்கள்

ஒருவருக்கு ஒருவர் உதவிகளை செய்து

அன்பு கொண்டு வாழ்வதுதான் இல்வாழ்க்கை
.

எந்த ஒரு விசயத்தையும் கணவனுக்கு தெரியாமல் மனைவியோ அல்லது மனைவிக்கு தெரியாமல் கணவனோ செய்யாமல் இருப்பதே இல்வாழ்க்கையின் மற்றுமொரு அங்கம்

வாழ்த்துக்கள்..... தொடருங்கள்.....


என்றும் அன்புடன்
சிட்டிபாபு



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Feb 25, 2015 8:07 pm

நன்றி எம்.கே.ஆர். சாந்தாராம் அவர்களே !

எப்போதோ உண்ட உணவுக்கு இப்போது சுவை ஏற்றுகிறீர்கள் சாந்தாராம் ! விந்தைதான் ! மிகவும் பயனுள்ள அனுபவம் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Feb 26, 2015 8:42 am

சும்மா சொல்லக்கூடாது, டாக்டர் ஐயா அவர்கள் சற்றும் தளராமல் தமிழ் திரைப்படச் செய்திகளை அள்ளி வீசுகிறார். எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் நமது வேலை. மெதுவாக நேரம் கிடைக்கும் போது சுவைக்கலாம். நன்றி டாக்டர் ஐயா.


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Feb 26, 2015 4:06 pm

மிகவும் அருமையான தகவல்கள்...நான் இன்னும் பாலும்பழமும் படத்தை முழுமையாக பார்த்ததில்லை ... நீங்கள் கூறிய பிறகு ஏன் தான் நான் பார்க்காமல் இருந்தேன் என்று எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன்...

ஐயா, நீங்கள் பாடல்களை விளக்கிய விதம் மிகவும் ரசிக்க வைத்தது என்னை...தொடருங்கள் ஐயா உங்கள் கட்டுரையை..ஆர்வத்துடன் இருக்கிறேன் படிக்க .........

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 3838410834 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 3838410834 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 1571444738



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Mar 03, 2015 8:18 pm

எம்.கே.ஆர்.சாந்தாராம் அவர்களே !
நீங்கள் தரும் -
நல்ல நல்ல செய்திகளை நம்பி
ஒரு கூட்டமே இருக்குது குந்தி !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed Mar 11, 2015 5:24 pm

கடிதங்களை எழுதிய :



1. திரு. மாணிக்கம் நடேசன் :

அய்யா ! நீங்கள் தொடர்ந்து தரும் ஆதரவு மற்றும் ஊக்கம் என்னை

" மெர்சல் " ஆகி " இதுக்கும் மேலே " எழுத வைக்கிறீர்கள் !

' இதுக்கும் மேலே ' நிச்சயம் எழுதுவேன் !



2. திரு . சிட்டிபாபு !

அய்யா சிட்டி ! 'நல்லாக் கீறீங்க்களா !

ரொம்ப 'பிசியோ ? "

நீங்க எப்போவும் 'பிஸி' யாகத்தான் இருக்கணும் !




3. சகோதரி சரண்யா !

நீங்கள் இன்னும் " பாலும் பழமும் " படத்தை பார்க்கவில்லை

என்பதை அறிந்து வியப்பு அடைந்தேன் !

எனினும் அடியேன் எழுதிய கட்டுரை உங்களை நிச்சியம்

" பா . ப " படத்தை பார்க்கவைக்கும் !




4. திரு. டாக்டர் . செளந்திரபாண்டியனார் அவர்களே !


நீங்கள் ' குந்திக் கொண்டே ' என் கட்டுரையைப் படிக்கும் போதே

நான் நினைத்து விட்டேன் = நீங்களும் நம்ம சென்னை வாசிதான்

என்பதை !


' நா எய்துறதெ நல்லா படிங்க நயனா ......இல்லே .......

நான் எழுதுவதை நன்றாக படியுங்கள் , ஐயா !





அனைவருக்கும் நன்றி ! நன்றி ! நன்றி !





@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@





திரைப்படப் பாடல்களும்

சுவையான செய்திகளும் !



" டிரைலெர் "

( TRAILER )






" பார் மகளே பார் " ( 1963 )-


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 0zOvxkP2SSqsj0JJMTlH+download




சிவாஜி கணேசன் எறக்குறைய படம் முழுவதும் வயதான

'கேட் அப் ' இல் ஜமீன்தாராக 'பின்னிப் பெடல் ' எடுத்த படம் !

எனவே , சிவாஜி கணேசனுக்கு , இயக்குனர் பீம்சிங் ஆல்

" டூயட் "

அமைத்து படத்தில் இடம் தராத நிலைமை !



( எடுத்துக்காட்டாக : ' நவராத்திரி ' , ' சரஸ்வதி சபதம் '

"பழனி " , " பச்சை விளக்கு " ' சவாலே சமாளி '

ஆகிய மற்றும் வேறு பல படங்களுலும் சிவாஜிக்கு

இதே " கதி " தான் ! )


" பாடல் மகளே பார் " - படப்பிடிப்பு நடக்கும் முன்னர் பாடல்கள்

இசையமைப்பு நடைபெறும் சமயம் !


அங்கே , மெல்லிசை மன்னர்கள் , கண்ணதாசன் உடன் 'சீரியசாக '

பாடல்களுக்கு இசை அமைத்துக் கொண்டிருந்தனர் !


அப்போது :


' நடிகர் திலகம் ' - பீம் பாயுடன் ( ! ) அங்கே வந்தனர் !

மெல்லிசை மன்னர்கள் இசையமைப்பை இவர்கள் இருவரும்

வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர் !



" நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே ! "

பாடலுக்கு ஒத்திகை அங்கு நடந்து கொண்டிருந்தது !


" இந்த பாட்டு எப்போ படத்தில் வருகிறது , பீம் பாய் ? "

கேட்டது சிம்மக்குரலோன் !


" படத்தில் " உங்கள் மனைவுக்கு " ( செளகார் ஜானகி ! ) இரட்டை

குழந்தைகள் பிறந்த போது, உங்கள் " மனைவி " அந்த குழந்தைக்கு

" நீரோடும் வைகையிலே "

என்று தாலாட்டு பாட்டு பாடுகிறார் , கணேசா ! "

---- இது பீம்சிங் இன் பதில் !



" அப்போ , அங்கே எனக்கு என்ன வேலை ? "

- 'நடிகர் திலகம் ' கேள்வி !


" அங்கே , சுசீலா அம்மா பாடப் பாட , நீங்கள் இரவு உடை அணிந்து

கொண்டு


" விஸில் "


அடித்துக் கொண்டே இருக்கவேண்டும், அம்புட்டுத்தேன் ! "


- இது " பீம் பாய் ! "



" அடப் பாவிகளா !

எனக்கு இந்த படத்தில் 'டூயட் " பாடல் ஒன்று கூட இல்லை !

இந்த 'அழகில் ' விஸில் வேறு !

யோவ் பீம்பாய் ! பேசாம இந்த பாட்டை ஒரு டூயட் - கம் - தாலாட்டு

பாடலாக மாற்றி எனக்கு இந்த காட்சியில் பாட " சான்ஸ் "

கொடுக்கமுடியுமா ? "


- கெஞ்சினார் 'கலைக் குரிசில் ' !



யோசித்தார் பீம்பாய் !


மெல்லிசை மன்னர்களை நோக்கினார் பீம்பாய் !


மெல்லிசை மன்னர்கள் , கண்ணதாசனை நோக்கினார்கள் !


அப்புறம் என்ன !


பி. சுசீலா பாட ,

உடன்

டி எம் எஸ் , சிவாஜிக்கு குரல் கொடுக்க ,



" நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே ! "


ஒரு தாய் பாடும் தாலாட்டு பாடல் ,

கணவன் - மனை சேர்ந்து குழந்தைகளை கொஞ்சி



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 ZPjKWCmCSLOfkv8jysWX+images



பாடம் தாலாட்டு - டூயட் பாடலாக

மாற்றப்பட்டது ../..........

" அப்கோர்ஸ் "

" விஸில் "

ஒசைவுடன் !





விரைவில் ............!




எம்கே ஆர் சாந்தாராம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 11, 2015 7:20 pm

வாவ் .... " நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே ! " இந்த பாடலுக்கு பின்னாடி இப்படி ஒரு சுவையான சம்பவம் இருக்கிறதா புன்னகை

அறிய தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 13, 2015 10:22 pm

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 3838410834 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 3838410834 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 3838410834



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 19 of 26 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 22 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக