ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புதிய சமயங்கள்
 gayathri gopal

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 T.N.Balasubramanian

கடவுள் தந்த இருமலர்கள்...
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 T.N.Balasubramanian

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

சின்னச் சின்ன சிந்தனைகள்
 SK

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தமிழரின் தொன்மை
 M.Jagadeesan

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அய்யாவாடியில் அதிசயம் - ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி

View previous topic View next topic Go down

அய்யாவாடியில் அதிசயம் - ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி

Post by சிவா on Wed Jul 08, 2009 11:31 pm

பக்தன் பிரகலாதனுக்காக தூணிலிருந்து தோன்றிய நரசிம்மர், கொடுங்கோலன் இரண்யனை வயிற்றைக் கிழித்து, குடலை உருவி வதம் செய்தார். இரண்யனை கொன்ற பிறகும் பிரகலாதனுக்கு அவன் செய்த கொடுமைகளை நினைத்து உக்கிரம் தணியாமல் இருந்தார். பிரகலாதனும் மகாலட்சுமியும் ஒருபக்கம் அவருடைய கோபத்தைத் தணிக்க, சிவ அம்சமான சரபேஸ்வரர் அவருடைய கோபத்தை அப்படியே தான் உறிஞ்சிக் கொண்டதாக புராணம் கூறுகிறது.

அந்த சரபேஸ்வரரின் ஓர் இறக்கை அம்சம்தான் பிரத்யங்கிரா தேவி. பயங்கரமான உக்கிரம் கொண்ட அம்மன். தன் பக்தர்களைத் துன்புறுத்தும் வக்கிரங்களையும், கொடுவினைகளையும் தான் உறிஞ்சி எடுத்துக் கொண்டு பக்தர்கள் நல்வாழ்வு வாழ வழிகாட்டுபவள். இந்த அன்னைக்கு கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடியில் ஓர் அற்புத கோயில் இருக்கிறது. 11.6.09 அன்று இக்கோயிலுக்கு நடைபெற்ற கும்பாபிஷேகத்தைக் காண சூரியனே நேரடியாக இறங்கி வந்த காட்சி கண்டோரை மெய்சிலிர்க்க வைத்தது.

ஆமாம், பிரத்யங்கிராதேவி சந்நதி விமான கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றியபின் தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது சூரியனின் ஒளிக்கதிர் விமானத்தின் மீது ஒரே நேர்கோடாக விழுந்தது. பக்கத்தில் எங்கும் சூரிய ஒளி சிதறவில்லை!பில்லி, சூனியம், தீராத நோய், மரண பயம், 64 வகையான சாபங்கள், பெற்றோர் சாபம், மிருக, பறவைகள் சாபம் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்யும் அன்னையுடன் பக்தர்களைக் காக்க சூரியனும் இறங்கிவந்த அற்புதம், பார்த்தவர்களுக்கு என்றென்றும் நினைவில் நிற்கும்.
Last edited by சிவா on Fri Feb 06, 2015 12:38 pm; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அய்யாவாடியில் அதிசயம் - ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி

Post by செரின் on Wed Jul 08, 2009 11:34 pm

இது உண்மையா சிவா அண்ணா??? எப்ப நடந்தது??
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: அய்யாவாடியில் அதிசயம் - ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி

Post by சிவா on Wed Jul 08, 2009 11:41 pm

11.6.09 அன்று நடந்தது செரீன்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அய்யாவாடியில் அதிசயம் - ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி

Post by Guest on Thu Jul 09, 2009 8:52 am

வாவ் சூப்பர்

இறைவனின் திருவிளையாடல்

இறைவா உன் கருணையே தனிப் பெருங்கருணை

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அய்யாவாடியில் அதிசயம் - ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி

Post by சிவா on Fri Feb 06, 2015 12:31 pm

முகவரி: அருள்மிகு பிரத்தியங்கிரா தேவி திருக்கோயில், அய்யாவாடி – தஞ்சாவூர் மாவட்டம்.

எப்போதெல்லாம் அநீதிகள் நடக்கிறதோ அப்போதெல்லாம் தெய்வ அவதாரங்கள் உருவாகும். இதற்கு எடுத்துகாட்டாக பிரத்தியங்கிரா தேவி உருவானார். நல்லவர்கள் செய்யும் நல்லவற்றுக்கு துணை இருந்து, அவர்களை வெற்றியடைய செய்கிறாள். தீயவர்கள் இந்த தேவியை வணங்கினால் அவர்களுக்கு இந்த அம்மன் உதவி செய்வாரா என்றால் நிச்சயமாக இல்லை. நல்ல உள்ளத்தோடு வணங்கினால் அவர்களை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாதபடி நிழல் போல் தேவி துணை நின்று காப்பாள்.

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர்.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியவர்தான் பிரத்தியாங்கிர தேவி. ஆயிரம் சிங்கமுகங்கள், இரண்டாயிரம் கைகளுடன் தோன்றினார். தேவி தன் சக்தியால் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் உக்கிரத்தை தன்னுள் விழுங்கி, ஸ்ரீநரசிம்மரை அமைதிப்படுத்தி, அவரின் உக்கிரத்தை ஸ்ரீபிரத்தியங்கிரா ஏற்று, இன்றுவரை உக்கிரத்தின் உச்சியில் இருக்கிறார். சிவனால் தோன்றியதால் இந்த அம்மனுக்கு “சரபேஸ்வரி” என்ற பெயரும் இருக்கிறது.

ஸ்ரீராமரை வீழ்த்த “நிகும்பலா யாகம்” செய்த இந்திரஜித்

இராவணனால் கடத்தப்பட்ட சீதையை மீட்க, இராம-இராவண யுத்தம் நடந்தது. அந்த போரில் பலரை இழந்தான் இராவணன். இருந்தாலும் பின்வாங்காமல் தன் மகன் இந்திரஜித்தை போர் களம் அனுப்பி வைத்தான். ஆனாலும் ஏனோ இராவணனின் மனம் பயந்தது. தன் மகனையும் இழந்து விடுவோமோ என்று மனம் கலங்கினான். தன்னுடைய தவறுக்கு பல உயிர்களை இழந்து, இப்போது தன் மகனையே பலி அட்டைபோல் அனுப்புகிறோமே என்று அஞ்சினான் இராவணன். புலி வாலை பிடித்த கதையாகிவிட்டதே என்று நினைத்த இராவணன், போரில் தன் மகன் இந்திரஜித்தை இழந்து விடக் கூடாது. அதே சமயம் இராமனையும் வீழ்த்த வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என யோசித்தான். தன் மகன் இந்திரிஜித், “ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி பக்தன்” என்று ஞாபகம் வந்தது. அதை வைத்து ஒரு திட்டம் தீட்டினான் இராவணன்.

இந்திரிஜித்திடம் சொன்னான், “நீ ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியின் பக்தன். ஆகவே நீ வெற்றி பெற, எட்டுத்திசைகளில் மயான பூமியை தோன்றுவித்து, ஸ்ரீபிரத்தியங்கிர தேவிக்கு “நிகும்பலா யாகம்” நடத்து. இந்த யாகம் செய்த பிறகு யாராலும் உன்னை வீழ்த்த முடியாது” என்றான் இராவணன்

தன் தந்தை இராவணன் ஆலோசனைப்படி பிரம்மாண்டமான “நிகும்பலா யாகம்” யாகம் செய்தான் இந்திரஜித்.

ஸ்ரீராமரை எச்சரித்த அனுமார்

இராவணனின் திட்டத்தையும், இந்திரஜித்தின் நிகும்பலா யாகத்தையும் அறிந்தார் ஆஞ்சனேயர். உடனே இராமரிடம் விரைந்து வந்தார். “தங்களை வீழ்த்த இந்திரஜித் “நிகும்பலா யாகம்” செய்து ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியை தனக்கு உதவி செய்ய அழைக்கிறான்” என்று அனுமார் ஸ்ரீராமரிடம் எச்சரிக்கை செய்தார். இதை கேட்ட ஸ்ரீராமசந்திரர்,

“கவலை வேண்டாம். தேவி பிரத்தியங்கிரா, எப்போதும் நல்லமுறையில் நடப்பவர்களுக்குதான் துணை இருப்பாள். நேற்றுவரையில் இந்திரஜித் நல்லமுறையில் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியின் பக்தனாக இருந்தான். அதனால் அவனுக்கு தேவி துணை இருந்தாள். ஆனால் இன்றோ அவன் தவறான காரியத்துக்கு தேவியை துணைக்கு அழைக்கிறான். நிச்சயமாக அவன் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியின் அருள் பெற மாட்டான்.“ என்று கூறிய ஸ்ரீராமர், ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியை மனதால் வணங்கி நல்ல எண்ணத்தோடு பூஜை செய்தார்.

“ஸ்ரீஇராமர்-இந்திரஜித் ஆகிய இரண்டு பேரும் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியின் பக்தர்கள். இவர்களில் யாருக்கு ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி துணையிருந்து உதவி செய்வாள்?” என்று தேவலோகமே ஆர்வத்துடன் பார்த்து கொண்டு இருந்தது.

ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி இந்திரஜித்தின் முன் தோன்றினாள்.

“இந்திரஜித். நீ மிகச் சிறந்த என்னுடைய பக்தன். ஆனால் ஏன் உன் புத்தி இப்படி மாறியது.? தந்தையாக இருந்தாலும் இராவணனின் தீய எண்ணத்துக்கு நீ துணை போகலாமா.? நிகும்பலா யாகம் செய்தாலும் உன்னிடம் நியாயம் இல்லை. ஆகவே நான் உனக்கு துணை இருக்கமாட்டேன். இருந்தாலும் உலகம் இருக்கும்வரை உன் புகழ் இருக்கும். நீ யாகம் செய்த இந்த இடமும் உன் புகழ் பேசும்” என்று ஆசி வழங்கினாள் தேவி.

அத்துடன் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி, சீதைக்காக ஸ்ரீராமருக்கு துணையிருந்து வெற்றி பெற செய்தார்.

பாண்டவர்கள்

அதே போல் மகாபாரதத்தில் பாண்டவர்களும் இந்த ஊரில் உள்ள ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியை வணங்கி போருக்கு சென்று வெற்றி பெற்றார்கள்.

இந்திரஜித் யாகம் நடத்திய இடம்

இந்திரஜித் யாகம் நடத்திய இந்த இடம் “அய்யாவாடி” என்கிறது ஸ்தலபுராணம். அதனால்தான் இன்றுவரை அமாவாசைதோறும் “நிகும்பலா யாகம்” நடக்கிறது. இந்த யாகத்தில் மிளகாய் வத்தலை கூடை கூடையாக கொட்டுகிறார்கள். இருந்தாலும் எந்தவித மிளகாய் நெடியும் வராததை கண்டு பக்தர்கள் ஆச்சரியம் அடைகிறார்கள். இந்த யாகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

ஸ்ரீபிரத்யங்கிராதேவியை வணங்கினால் விரோதிகளின் தொல்லையும், செய்வினை தோஷங்களும், ஜாதக தோஷங்களும் விலகும். வீண் வழக்கு இருந்தாலும் அந்த வழக்கில் நியாயம் கிடைக்கும். இந்த ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி, உக்கிர சக்தி படைத்தவர் என்பதால், சூரியனை கண்டு இருள் விலகுவது போல், தன் பக்தர்களின் கஷ்டங்கள் என்கிற இருளை விலக்கி அவர்களுக்கு சகல நலங்களை அள்ளித் தருவாள் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி.!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அய்யாவாடியில் அதிசயம் - ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி

Post by சிவா on Fri Feb 06, 2015 12:34 pm

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அய்யாவாடியில் அதிசயம் - ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி

Post by விமந்தனி on Fri Feb 06, 2015 1:24 pm

ஆமாம். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். பாண்டிச்சேரி அருகில் மொரட்டாண்டி என்ற ஊரில் கூட ஒரு ப்ரிதியங்கார தேவி கோவில் இருக்கிறது. தேவி மிகவும் உக்கிரமாக இருப்பதால், நேருக்கு நேர் நிற்காமல் பக்கவாட்டில் நின்று தான் தரிசிக்கவேண்டுமாம். அந்த கோவிலில் சொன்னார்கள்.avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: அய்யாவாடியில் அதிசயம் - ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி

Post by சிவா on Fri Feb 06, 2015 11:58 pm

பிரத்யங்கிரா

பஞ்சபாண்டவர்கள் காட்டில் வசித்த போது, சக்திதேவியின் சிலையைக் கண்டனர். அந்த தேவியை பூஜிக்கபூக்களைத் தேடி அலைந்தனர். பூ கிடைக்காததால், ஒரு ஆலமரத்தின் இலைகளை பூக்களாக எண்ணித் தூவி தேவியை வணங்கினர். தேவியும் அவர்களுக்கு அருள்செய்தாள்.

பக்திக்கு தேவை இன்ன பொருள் என்பது முக்கியமல்ல. நிஜமான பக்தியுடன் எந்தப் பொருளை காணிக்கையாக்கினாலும் அதை இறைவன் ஏற்பான் என்பதற்கு இது உதாரணம்.

பஞ்சபாண்டவர் வழிபாடு செய்த இந்த இடம் தற்போது "அய்யாவாடி' என்று அழைக்கப்படுகிறது.

சிவனின் அம்சமான சரபேஸ்வர மூர்த்தியின் இரண்டு இறக்கைகளில் இரண்டு சக்திகள் உள்ளனர். ஒரு சக்தி சூலினி துர்க்கை. மற்றொரு சக்தி பிரத்யங்கிரா. இவளை "அதர்வண பத்ரகாளி' என்றும் அழைப்பர். எதிரிகளை ஒடுக்கி நம்மைக் காப்பவளாக விளங்கும் இவளை அமாவாசையன்று வழிபடுவது சிறப்பு.

ராவணனின் பிள்ளையான மேகநாதனுக்கு, தேவர்களின் தலைவனான இந்திரனை வெல்லும் சக்தியை பிரத்யங்கிராதேவியே அளித்தாள்.

அய்யாவாடியில் அமாவாசை நாளில் நடைபெறும் நிகும்பலா யாகத்தில் பழங்கள், பூக்களுடன், மிளகாய் வத்தலையும் யாகத்தீயில் இடுவர். எவ்வளவு வத்தலை தீயிலிட்டாலும் நெடி தெரிவதில்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அய்யாவாடியில் அதிசயம் - ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum