புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர் திருமணம் - Page 2 Poll_c10தமிழர் திருமணம் - Page 2 Poll_m10தமிழர் திருமணம் - Page 2 Poll_c10 
39 Posts - 49%
heezulia
தமிழர் திருமணம் - Page 2 Poll_c10தமிழர் திருமணம் - Page 2 Poll_m10தமிழர் திருமணம் - Page 2 Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
தமிழர் திருமணம் - Page 2 Poll_c10தமிழர் திருமணம் - Page 2 Poll_m10தமிழர் திருமணம் - Page 2 Poll_c10 
3 Posts - 4%
jairam
தமிழர் திருமணம் - Page 2 Poll_c10தமிழர் திருமணம் - Page 2 Poll_m10தமிழர் திருமணம் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
சிவா
தமிழர் திருமணம் - Page 2 Poll_c10தமிழர் திருமணம் - Page 2 Poll_m10தமிழர் திருமணம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
தமிழர் திருமணம் - Page 2 Poll_c10தமிழர் திருமணம் - Page 2 Poll_m10தமிழர் திருமணம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
தமிழர் திருமணம் - Page 2 Poll_c10தமிழர் திருமணம் - Page 2 Poll_m10தமிழர் திருமணம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழர் திருமணம் - Page 2 Poll_c10தமிழர் திருமணம் - Page 2 Poll_m10தமிழர் திருமணம் - Page 2 Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
தமிழர் திருமணம் - Page 2 Poll_c10தமிழர் திருமணம் - Page 2 Poll_m10தமிழர் திருமணம் - Page 2 Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
தமிழர் திருமணம் - Page 2 Poll_c10தமிழர் திருமணம் - Page 2 Poll_m10தமிழர் திருமணம் - Page 2 Poll_c10 
14 Posts - 4%
prajai
தமிழர் திருமணம் - Page 2 Poll_c10தமிழர் திருமணம் - Page 2 Poll_m10தமிழர் திருமணம் - Page 2 Poll_c10 
9 Posts - 3%
jairam
தமிழர் திருமணம் - Page 2 Poll_c10தமிழர் திருமணம் - Page 2 Poll_m10தமிழர் திருமணம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழர் திருமணம் - Page 2 Poll_c10தமிழர் திருமணம் - Page 2 Poll_m10தமிழர் திருமணம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
தமிழர் திருமணம் - Page 2 Poll_c10தமிழர் திருமணம் - Page 2 Poll_m10தமிழர் திருமணம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தமிழர் திருமணம் - Page 2 Poll_c10தமிழர் திருமணம் - Page 2 Poll_m10தமிழர் திருமணம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழர் திருமணம் - Page 2 Poll_c10தமிழர் திருமணம் - Page 2 Poll_m10தமிழர் திருமணம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தமிழர் திருமணம் - Page 2 Poll_c10தமிழர் திருமணம் - Page 2 Poll_m10தமிழர் திருமணம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் திருமணம்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 8:30 am

First topic message reminder :

1. பொற்காலம்

உலக வரலாற்றைப் படிப்பவர்கள் ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு பொற்காலம் இருந்திருப்பதை அறிந்து கொள்ளலாம்.

புதிய உலக நாகரீகத்தின் தொட்டில் என வர்ணிக்கப்படும் கிரேக்கர்களுக்கு கி.மு. 7ம் நூற்றாண்டு தொடக்கம் கி.மு. 4ம் நூற்றாண்டு வரையிலான காலம் பொற்காலமாக இருந்திருக்கிறது.

உலகம் மந்திரம், தந்திரம் மாயம் நிறைந்த சடப்பொருள் என்ற மாயையில் இருந்து விடுபட்டு உலகத் தோற்றம், வளர்ச்சி பற்றி அறிவியல் அடிப்படையில் ஆராய முற்பட்ட பெருமை கிரேக்கர்களையே சாரும். அறிவியல் சார்ந்த எல்லாத்துறைகளிலும் கிரேக்கர்களது கை வண்ணத்தையும் கலை வண்ணத்தையும் காணலாம்.

மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன் என்ற எண்ணத்தை மாற்றி கடவுளைத் தனது உருவத்தில் படைக்க ஆரம்பித்தவர்களும் கிரேக்கர்களே. உலகம் உட்பட எல்லாவற்றையும் எண்ணங்களாகவும் (concepts) உருவங்களாகவும் (figures) கிரேக்கர்கள் பார்த்தார்கள்.

இந்தக் கால கட்டத்திலேயே புகழ்பெற்ற தத்துவ ஞானிகளான தேல்ஸ் (Thales) ( கி.மு. 640-546), அறிவு ஆசான் சாக்கரட்டிஸ் (Socrates)( கி.மு. 469-399), பிளாட்டோ ( Plato)(கி.மு. 427-347)இ அரிஸ்ரோட்டல் (Aristotle)(கி.மு. 384-322), போன்றவர்கள் தோன்றினார்கள்.

"வரலாற்றின் தந்தை" ("Father of History") என அழைக்கப்படும் ஹெரடோரஸ் (Herodotus), சொற்பொழிவாளர் டெமொதீனஸ் (Demosthenes) (கி.மு. 384-322), "ஒவ்வொரு நோய்க்கும் இயற்கையான காரணம் உண்டு" ("every illness has a natural cause") என்று கூறிய மருத்துவத்தின் தந்தை ( "Father of Medicine") என்று போற்றப்பட்ட கிப்போகிறேட்ஸ் (Hippocrates) (கி.மு. 460-377) மகதீனஸ் (Magathenes)

இதே காலத்தைத் சேர்ந்தவர்கள்தான். கணித விற்பன்னர்களான பைத்தோகரஸ் (Pythagoras) , இகுலிட் (Euclid)இ ஆர்கிமிடிஸ் (Archimedes) போன்றவர்கள் வாழ்ந்த காலமும் இதுதான்.

எகிப்து, பாரசீகம், வட மேற்கு இந்தியா இவற்றின் மீது படையெடுத்து வெற்றி கண்ட மகா அலெக்சாந்தர் (Alexander the Great) காலமும் இதுதான். மகா அலெக்சாந்தரின் ஆசிரியர் அரிஸ்ரோட்டல் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தக் கால கட்டத்தில் எழுதப்பட்ட பௌதீகம், வேதியல், தத்துவம், கணிதம், மருத்துவம், இலக்கியம், சமயம், இசை, நாடகம், சிற்பம், ஓவியம் சம்மந்தமான நூல்களை மொழிபெயர்த்துப் படித்ததினாலேயே ஐரோப்பா அறியாமை என்ற இருண்ட காலத்தில் இருந்து (Dark Age) னு அறிவுடமை நிறைந்த நாகரிக உலகத்துக்கு (கி.பி. 4வது - 11வது நூற்றாண்டு) காலடி எடுத்து வைக்க முடிந்தது.

ஐரோப்பிய மொழிகளின் அரிச்சுவடி கிரேக்க மொழியிலிருந்து சிறிய மாறுதலுடன் உருவாக்கப் பட்டதாகும். ஆங்கிலத்தில் உள்ள பல கலைச்சொற்கள் ( democracy, aristocracy, psychology) கிரேக்கத்தில் இருந்து நேரடியாக ஒலிமாற்றம் செய்யப்பட்டவையாகும்.

மேற்கூறியவற்றிலிருந்து உலக நாகரிக வளர்ச்சிக்கு கிரேக்கர்களது பங்களிப்பை ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.

ஆங்கிலேயரை எடுத்துக் கொண்டால் அவர்களது பொற்காலம் விக்டோரியா அரசியாரின் (1819-1901) 65 ஆண்டு கால நீண்ட ஆட்சிக் காலம் (1837-1901)என்று சொல்லலாம். பிரித்தானியாவின் கடல் கடந்த சாம்ராஜ்யம் இவரது காலத்திலேயே வலுப்பெற்றது. இந்தியாவின் சக்கரவர்த்தினியாக 26 ஆண்டுகள் (1976-1901)அரசு கட்டிலில் இருந்திருக்கிறார். பிரித்தானியாவின் தொழிற்புரட்சி இவரது காலத்திலேயே ஏற்பட்டது. அறிவியல், போர், பொருளாதாரம், கலை, இலக்கியத் துறை போன்ற எல்லாத் துறைகளிலும் பிரித்தானியா கொடி கட்டிப்பறந்தது. உலக ஏகாதிபத்தியத்தின் மொத்த உருவமாக இருந்த பிரித்தானியா சூரியன் அஸ்தமிக்காத நாடு என்று வர்ணிக்கப் பட்டது.

தமிழினத்தைப் பொறுத்தளவில் சங்க காலமே தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. தமிழர்களது நீண்ட கால வரலாற்றை உய்த்து உணர்ந்து ஆராய்பவர்கள் இந்த உண்மையை எளிதில் ஒப்புக் கொள்வார்கள்.

சங்ககாலத்தில் ஆட்சி புரிந்த அரசர்களே தமிழ் மன்னர்களாக விளங்கினார்கள். அவர்கள் மட்டுமல்ல அவர்களது பெயர்களும் தூய தமிழில் இருந்தன.

சங்கப் புலவர்களால் படைக்கப் பட்ட எட்டுத்தொகை, பத்துப் பாட்டு நூல்களும், சங்கம் மருவிய காலத்தில் எழுந்த பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் தமிழர்களது நாகரிகச் சிறப்புக்கும், கலை, பண்பாட்டிற்கும், இயற்கையோடு இசைந்த வாழ்வுக்கும் கட்டியங் கூறுகின்றன.

சங்க காலத்தில் பிற்காலத்தில் பிறமொழிப் பண்பாட்டுப் படையெடுப்பால் எழுந்த சாதி, சமய, வேறுபாடுகள் இருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் அமைப்பு ரீதியான சமயம் இருக்கவில்லை. பேய், பிசாசு, மந்திர தந்திரம், சகுனம், மேல் உலகங்கள், கீழ் உலகங்கள், நரகம், சொர்க்கம் போன்ற மூடநம்பிக்கைகள் இருக்கவில்லை. பொது மக்கள் மத்தியில் இந்த நம்பிக்கைகள் இருந்திருக்கலாம். ஆனால் படித்தவர்கள் மத்தியில் இருக்கவில்லை.

மேலே குறிப்பிட்ட சங்க இலக்கியங்களை சமூகத்தின் பல படிகளிலும் இருந்த புலவர்கள் படைத்திருக்கிறார்கள். புவி ஆண்ட மன்னர்கள் தொடக்கம் கூலவாணிகர்கள் ஈறாக கவி பாடியுள்ளார்கள். ஆடவரும் பெண்டிரும், அந்தணரும், வணிகரும், குறவனும் குறத்தியும் என்று பல்வேறு பட்ட புலவர்கள் பாடல்கள் பாடியுள்ளார்கள். சங்கப் புலவர்களின் மொத்த எண்ணிக்கை 500க்கும் அதிகமாகும். வேறு எந்த நாட்டிலும் காணாதவாறு பெண்பால் புலவர்கள் மட்டும் 50க்கும் அதிகமாக இருந்திருக்கிறார்கள். இது சங்க காலத்தில் ஆண்களைப் போலவே பெண்களும் ஒத்த கல்விகற்று ஒத்த உரிமையோடு வாழ்ந்திருந்த உயர்ந்த வாழ்க்கைமுறையைக் காட்டுகிறது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 9:16 am

இனி பரிமேலளகர் - மணக்குடவர் இருவரது உரையிலும் குறள்கள் இடம்மாறி இருப்பதற்கு எடுத்துக் காட்டாக கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு என்ற முதல் இரண்டு அதிகாரங்களில் வரும் குறள் எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஏனைய அதிகாரங்களில் வரும் எண்களின் வரிசை வேறுபாட்டை மூல நூல்களைப் படித்து அறிந்து கொள்ளவும்.



பரிமேலளகர்க்கும் மணக்குடவர்க்கும் இடையில் திருக்குறளில் உள்ள பாடபேதத்திற்கு எடுத்துக்காட்டாக பின்வரும் குறள்களைக் கூறலாம்.

செய்யாமல் செய்த உதவிக்கு, வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது (குறள் 101)

மணக்குடவர் பாடம்செய்த திருக்குறளில் "செய்யாமல்" என்ற சொல் "செய்யாதார்" என்று காணப்படுகிறது. அதாவது "செய்யாதார் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது" என்று காணப்படுகிறது. இதே போல்-

இலனென்று தீயவை செய்யற்க, செய்யின்

இலனாகும் மற்றும் பெயர்த்து (குறள் 205)

மணக்குடவர் பாடம்செய்த உரையில் "இலன்" என்பது "இலம்" என்று காணப்படுகிறது. இவ்வாறே பெறல் -பெறற்கு(213 ), செயும் நீர- செயல்நீர் (219), வித்தகர்க்கு - வித்தகற்கு (235), ஒன்றன் - ஒன்றின் (259), ஆசையுள் - ஆசையில் (266) என்ற குறள்களில் பாட பேதம் காணப்படுகிறது.

பொதுவாக உரை என்பது ஒரு செய்யுளை எடுத்துக் கொண்டு அரும்பத உரை முதல் பொழிப்புரை வரை அனைத்தையும் விளக்கிப் பொருள் கூறுவதாகும். திருக்குறளுக்கு முதன் முதலில் உரை செய்தவர்கள் பதின்மர் (பத்துப்பேர்). அவர்கள் 1) தருமர், 2) மணக்குடவர், 3) தாமத்தர், 4) நச்சர், 5) பருதி, 6) திருமலையர், 7) மல்லர், 8) பரிப்பெருமான், 9)காலிங்கர், 10) பரிமேலளகர். இந்தப் பதின்மரில் திருக்குறளுக்கு முதலில் உரைசெய்தவர் தருமர். இறுதியாக உரைசெய்தவர் பரிமேலளகர் என்பதை அறிஞர் உலகம் நிறுவியுள்ளது. இவர்களது காலம் கி.பி. 10ம் நூற்றாண்டில் இருந்து 13ம் நூற்றாண்டு ஈறாக எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது திருவள்ளுவருக்குப்பின் ஆயிரம் ஆண்டு கழித்து வாழ்ந்தவர்களே திருக்குறளுக்கு உரை செய்துள்ளனர்.

திருவள்ளுவர் நூல் செய்த முறை, அவரது உண்மையான உள்ளக்கிடக்கை எது, அவர் கையாண்ட அறம், ஆதிபகவன், வடபுலத்தார், தென்புலத்தார், வானவர், விசும்பினர், இமயவர், தெய்வம், புத்தேள், தேவர், இம்மை, மறுமை, தாமரைக்கண்ணான் உலகு, ஆபயன், எழுமை, இப்படி எண்ணற்ற சொற்களுக்கான சரியான பொருள் என்ன என்பதில் அறிஞர்கள் மத்தியில் ஆழமான கருத்து வேறுபாடு நிலவுகிறது. இதற்கு ஒரு காரணம் குறளின் அமைப்பு. தமிழில் உள்ள மிகச் சிறிய யாப்பு இதுதான். அதனால் ஏற்பட்டுள்ள சொற்சிக்கனமும் பொருட் செறிவும். மற்றது இடம், பொருள், கால வேறுபாடு. ஒரு பெரிய கருதுகோளை ஏழுசீர் கொண்ட இரண்டு அடிக்குள் அடக்கி திருவள்ளுவர் குறள் செய்துள்ளார். அதனை விரிக்கப் போகும்போது கருத்து முரண்பாடு எழுகிறது. இதன் விளைவாகத்தான் இதுகாலவரை முந்நூற்றுக்கும் அதிகமானவர்கள் திருக்குறளுக்கு உரை செய்துள்ளார்கள். மிக அண்மையில் திருக்குறளுக்கு புதிய விளக்க நூல் ஒன்றை சாலமன் பாப்பையா எழுதி வெளியிட்டுள்ளார்.

திருவள்ளுவரது உள்ளக்கிடக்கை என்ன என்பதை, அவர் காலத்துப் பகைப்புலத்தில் வைத்து, அன்றைய சமூக பொருளாதார அமைப்பைக் கருத்தில் கொண்டு ஒரு உரை தமிழ் அறிஞர்கள் பெருமக்களால் ஆராய்ந்து உவத்தல் காய்தல் இன்றி உரை எழுதப் பட வேண்டும். அதில் மதவாடையும் இருக்கக் கூடாது, பகுத்தறிவு கண்ணோட்டமும் இருக்கக் கூடாது. திருவள்ளுவர் கூற வந்தது என்ன என்பதை உள்ளவாறு கூறவேண்டும். அவரது கருத்துக்கள் இந்தக் காலத்துக்குப் பொருந்திவரா என்பதற்காக அவரது கருத்துக்களைச் சிதைக்கக் கூடாது. அவரது கருத்துக்கள் பொருந்தி வராது விட்டால், பொருந்தி வராத குறள்கள் இருக்கின்றன, அவற்றை நாம் விட்டுவிடலாம். ஆனால் குரான் போன்று ஒரே ஒரு அங்கீகரிக்கப்பட்ட குறள் மட்டுமே இருக்க வேண்டும்.

எனது முன்னுரையில் குறிப்பிட்டது போல் தமிழர்களது வாழ்க்கை திருக்குறளின் அடிப்படையில் அமைய வேண்டும். திருக்குறளை ஒரு பூசைக்குரிய வழிபாட்டு நூலாகக் கொள்ளாமல் அதனை வாழ்க்கையின் வழிகாட்டு நூலாகத் தமிழர்கள் கைக்கொள்ள வேண்டும்.

திருக்குறள் எம்மிடம் உள்ள மதிப்பற்ற சொத்து மட்டும் அல்லாமல் அது தமிழர் உலகுக்கு கொடுத்த பொதுமறையுமாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 9:22 am

5. அகத்துறை- புறத்துறை இலக்கணம்

சங்ககாலப் புலவர்கள் வாழ்க்கையை அகம், புறம் என இரண்டாக வகுத்தனர். இன்பம் பற்றியவை அகம் என்றும் ( உள்ளத்தே எழும் உணர்வான காதல்பற்றியது) மற்றவை ( வீரம், புகழ், கல்வி, கொடை ) புறம் என்றும் பெயர் சூட்டப்பட்டன.

தொல்காப்பியருக்கு முற்பட்ட புலவர்களும் ஆசிரியர்களும் வகுத்த அகம், புறம் என்னும் வாழ்க்கை முறையை தம் காலத்து மாறுதல்களையும் உள்ளடக்கித்தான் தொல்காப்பியர் பொருள் இலக்கணம் எழுதினார். அதனை இலக்கணமாகவும், அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை முதலிய தொகை நூல்களையும், குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை முதலிய பத்துப்பாட்டு நூல்களையும் இலக்கியமாகவும் கொண்டு ஆராய்ந்தால் சங்ககாலத் தமிழர்கள் கட்டியெழுப்பிய அகப்பொருள் வாழ்க்கையைக் கண்டு களிக்கலாம்.

இவற்றோடு பக்தி இயக்கம் பரவிய காலத்தில் எழுந்த மாணிக்கவாசகரின் திருவெம்பாவை,திருக்கோவையையும் ஆண்டாளின் திருப்பாவைiயும் படித்தால் சங்ககால தலைவன் -தலைவி அகப்பொருள் இலக்கணத்தை எப்படி நாயகன் -நாயகி உறவுக்கு இவர்கள் உயிர்நாடியாகக் கொண்டிருந்தார்கள் என்பதை எளிதில் காணலாம்.

அரசனுக்குப் பதில் இறைவன் பாட்டுடைத் தலைவனாகப் கொண்டாடப்பட்டான். காதலுக்குப் பின்னணியாக இருந்த இயற்கை வர்ணனை இறைவனின் திருத்தலைத்தை வர்ணிக்க பயன்படுத்தப் பட்டது. அரசனின் கொடை, வீரம், ஆற்றல் இறைவனின் கருணை, திருவுருவ அழகு, திருவிளையாடல், திருவருட்செயல் இவற்றைப் போற்ற மேற்கொள்ளப்பட்டது. மானிடக் காதலை விளக்கிய அகத்திணை இலக்கணம் பக்தி உணர்வை எடுத்துச் சொல்லும் நாயக-நாயகி பாவமாக மாறியது. இந்த மாறுதல் தமிழில் பக்தி இலக்கியத்துக்கு வித்திட்டது.

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்

பேர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தார் ஆசார ரத்தை

தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்


தலைப்பட்டாள் நங்கை தலைவன் தானே !

(அப்பர் தேவாரம் -6501)

"வாரணம் ஆயிரம் சூழ வலஞ் செய்து

நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்

தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்"


(ஆண்டாள் பாசுரம் -557)

உலக மொழிகள் அத்தனையிலும் தமிழ்மொழியிலேயே அதிகளவு பக்தி இலக்கியம் இருக்கிறது என்ற உண்மை உணரத்தக்கது. நால்வர் என அழைக்கப்படும் சைவ நாயன்மார்கள் அப்பர், சுந்தரர், ஆளுடைப்பிள்ளையார், அருள்மொழிவாசகர் இயற்றிய தேவாரங்கள் அழிந்தது போக இன்று எஞ்சியிருப்பவை ஏறக்குறைய எண்ணாயிரம் ஆகும். பன்னிரு வைணவ ஆழ்வார்கள் பாடியவை நாலாயிரத் திவ்வியப்பிரபந்தமாகும். இது வைணவர்களால் (தென்கலை) தமிழ் வேதம் எனப் போற்றிப் புகழப்படுகிறது.

ஆண்டாளின் (ஆறாம் நூற்றாண்டு) திருப்பாவையும், மாணிக்கவாசகரின் (ஒன்பதாம் நூற்றாண்டு) திருவெம்பாவையும் சிறந்த தமிழ் இலக்கியமாகக் கருதப்படுகிறது. தமிழின் சொல்நயம், ஓசைநயம், பொருள் நயம் இவற்றிற்கு இந்த இரண்டு திருப்பள்ளியெழுச்சிப் பாவைகளும் எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றன.

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல் முகத்தாள்

நாராயணநே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய!;

என்று திருப்பாவை தொடங்குகிறது.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கன்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்மறந்து

போதார் அமளியின்மேன் நின்றும் புரண்டுஇங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடடந்தாள் என்னே னெ;னே

ஈதேஎம் தோழி பரிசுஎலோர் எம்பாவாய்!

என திருவெம்பாவை தொடங்குகிறது.



வாழ்க்கையை அகம், புறம் என இருவகையாகப் பிரித்த புலவர்கள் "இன்பம், என்பதை அகம் என்றும், ஏனைய "அறம், பொருள்" ஆகிய இரண்டையும் "புறம்" என்று வகுத்த பின்னர் புலவர்கள் அகத்தை மீண்டும் களவியல், கற்பியல் என இரண்டாகப் பிரித்தனர்.

களவியல், கற்பியல் பொருள் இலக்;கணம் பண்டைய தமிழ் மக்கள் மணம் செய்து கொண்ட முறைமை, அவர்தம் காதல் வாழ்க்கை, தலைவனையும் தலைவியையும் இணைத்து வைக்கும் பாங்கன், தோழி, களவுப் புணர்ச்சியில் தலைவனும் தோழியும் தலைவனைச் சோதிக்கும் முறைகள், தனக்கு ஏற்படும் துன்பங்களைப் பொருட்படுத்தாது தலைவியை அடைவதில் தலைவன் எடுத்துக் கொள்ளும் முயற்சி,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 9:31 am

காதல் வயப்பட்ட தலைவி பித்துப்பிடித்தவள்போல் இருப்பதைக் காணும் தாய் தன்மகளது "நோய்" இன்னதென்று அறியாதுஏதோ "பேய்"; பிடித்திருக்கலாம் என்ற நினைப்பில் வேலனை அழைத்து குறிகேட்கும் பேதமை, காதலர்க்குள் ஏற்பட்ட களவைத் தோழி தலைவியின் தாய்க்கு குறிப்பால் உணர்த்தும் திறமை, களவு வெளிப்படின் இருதிறத்துப் பெற்றோரும் ஒன்றுகூடி அவர்களுக்கு ஊரறிய திருமணம் செய்து வைக்கும் முறைகளையும், பெற்றோர் திருமணத்துக்கு உடன்படாது குறுக்கே நிற்கும் காலை தோழி தலைவியைத் தலைவனோடு கூட்டி அனுப்புதல், அங்ஙனம் சேர்த்து அனுப்பும் போது தோழி தலைவனிடம் எடுத்துக் கூறும் வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரை இவற்றையெல்லாம் அறிந்து கொள்ளலாம்.

தமிழ் மொழியில் இன்றுள்ள மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் களவியல், கற்பியல் திருமணங்களைப் பற்றி விரிவாகக் கூறுகி;ன்றது. தொல்காப்பியம் என்ற காலக் கண்ணாடி மூலம் தமிழ்ச் சமூகத்தின் பழைய நாகரிகம், பண்பாடு இவற்றைக் கண்டு மகிழவும் பெருமைப்படவும் வாய்ப்பளிக்கிறது.

உலகத்துப் பொருள்களை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என மூன்றாக இலக்கண நூலாசிரியர்கள் பகுத்தனர்.

முதற்பொருள் எனப்படுவன நிலமும் காலமும் ஆகும். கரிப்பொருளாவன உயிர்ப் பொருளும் (தெய்வம், மக்கள், விலங்குகள்,......)உயிரல் (மரம், செடி, கொடிகள், ஊர்....)பொருளும் ஆகும். உரிப்பொருளாவன மக்கட்கு உரிய பொருள், அஃது அகத்திணை, புறத்திணை எனப்படும். திணையென்றால் ஒழுக்கம். அகத்தில் நிலவும் ஒழுக்கத்தை அகத்திணைகள் என்றும் புறத்தில் நிகழும் நிகழ்ச்சிகளை புறத்திணை என்றும் கூறுவர்.

அகமாவது இன்பம் நுகர்தலால் உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளின் வெளிப்பாடு ஆகும்.அகத்தில் நிகழ்வதால் அகம் எனப் பட்டது. வேறு வார்த்தைகளில் சொன்னால் ஆணும் பெண்ணும் ஒன்றுகூடி அன்போடு வாழும் காதல் வாழ்க்கை.

முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே

நுவலுங்காலை முறை சிறந்தனவே

பாடலுள் பயின்றிவை நாடும் காலை.

(தொல்.பொருள் - அகத்திணை 3)

(கருத்துரை- முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என முறையாகச் சொல்லும் நிலையில், இலக்கியத்துள் வழங்கியவற்றைக் கருதி அமைத்துக் கொண்டனர்.)

அகம் களவியல், கற்பியல் என இரண்டாகப் பகுக்கப்படும். அகத்திணைகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என எழுவகைப்படும்.

இவற்றிற்கான உரிப்பொருள்கள் முறையே -

குறிஞ்சித் திணைக்குக் கூடல்-களவு திருமணத்துக்கு முதல் கூடி மகிழ்ந்திருத்தல்.

முல்லைத் திணைக்கு இருத்தல் - காதலன் பிரிந்தபோதும் ( ஓதல், பகை, பொருள், தூது, அறப்புறங் காவல் நிமித்தம் ) மீண்டும் வருவான் என்ற நம்பிக்கையோடு திரும்பி வரும்வரை காதலி பொறுமையுடன் காத்திருத்தல்.

மருதத் திணைக்கு ஊடல் - கூடியிருக்கும் போது ஒருவரோடு ஒருவர் காட்டும் பொய்க் கோபம், அல்லது பரத்தையோடு உறவு கொண்டுவிட்டுப் பின் இல்லம் திரும்பும் போது காதலி காதலனோடு கருவிக் கொள்வது..

நெய்தல் திணைக்கு இரங்கல்- தலைவன் பிரிவால் வாடிய தலைவி அவனது வருகைக்காக ஏங்கிக் கலங்கி அரற்றுதல், நைந்து உருகுதல்,

பாலைத் திணைக்குப் பிரிதல் - பொருள், தூது, கல்வி காரணமாகத் தலைவன் பிரிந்த போது பிரிவினால் காதலி கொள்ளும் வருத்தமும், வெம்மையும், புழுக்கமும்.

இந்த ஒழுகலாறுகளான கூடல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் ஐவகை நிலத்துக்கும் உரியனவேயாயினும் இலக்கிய மரபு ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு ஒழுக்கத்தினை சிறப்பித்துக் கூறியதாகப் பொருள் கொள்ளலாம்.

புறமாவது அறஞ்செய்தலும், மறஞ்செய்தலும், பொருளீட்டலும் ஆகும், அவற்றால் ஆய பயன் பிறர்க்குப் புலனாதலின் புறம் எனப் பட்டது.

அகம்போலவே புறத்திற்கான திணைகள் எழுவகைப்படும். அவையாவன வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்.

வெட்சித் திணை என்பது குறிஞ்சி என்ற அகத்திணைக்குப் புறத் திணை ஆகும்.

வஞ்சித் திணை முல்லைக்குப் புறத்திணை.

உழிஞை திணை மருதத்துக்குப் புறன்.

தும்பைத் திணை நெய்தலுக்குப் புறன்.

வாகை பாலைக்குப் புறத் திணை ஆகும்.

காஞ்சி பெருந்திணைக்குப் புறம்.

பாடாண் புறத்திணை கைக்கிளை என்ற அகத்திணைக்குப் புறன்.

அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் வாழ்க்கையின் உறுதிப் பொருள்கள் எனவும், ஒழுக்கலாறுகள் எனவும் பெயர் பெறும்.

முதற்பொருளின் ஒரு கூறாகச் சொல்லப்டும் நிலம் ஐவகையானது. இந்த ஐவகை நிலத்துக்குரிய தெய்வம், மக்கள், ஒழுக்கம்பற்றி தொல்காப்பியச் சூத்திரம் விரித்துக் கூறும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 9:31 am

மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே.

(தொல்.பொருள் 951)

(மாயோன் - திருமால், சேயோன் - முருகன், வேந்தன் - இந்திரன், மேய - விரும்புகின்ற, உலகம் - நிலம், மைவரை -மேகம் சூழந்த மலை, தீம்புனல் -மிகுந்த நீரையுடைய)

காடும் காடு சார்ந்த நிலம் முல்லை. மலையும் மலைசார்ந்த நிலம் குறிஞ்சி, வயலும் வயல்சார்ந்த நிலம் மருதம், கடலும் கடல் சார்ந்த நிலம் நெய்தல் எனப்படும்.

குறிஞ்சியும் முல்லையும் வானம் பொய்த்த காலத்தில் வரட்சியுற்று நிலைமாறும் போது அது பாலை எனப் பெயர் பெறும்.

அகத்திணை ஏழாகப் பிரிக்கப்பட்டது. ஒருவன் ஒருத்தி என்னும் இருவரிடையே உண்டாகும் கூட்டுறவை கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என வகுப்பது தொல்காப்பிய மரபு. அகத்திணைக்குரியார் தலைமக்கள் எனச் சுட்டப் பெற்றனர். கிழவன்-கிழத்தி, தலைவன்-தலைவி, தலைமகன்-தலைமகள் என்னும் சொல்லாட்சி இதன்வழி எண்ணப்பெற்றது.

கைக்கிளை ஒருதலைக் காமத்தைக் குறிக்கும். பெருந்திணை பொருந்தாக் காமத்தைக் குறிக்கும். எஞ்சிய திணைகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஐந்தும் அன்பின் ஐந்திணை எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருவரன்பும் ஒத்த நிலைமையாகிய நடுவண் ஐந்திணைக் கண்ணும் புணர்ப்பும், பிரிதலும்,இருத்தலும் இரங்கலும், ஊடலுமாகிய உரிப்பொருள் களவு, கற்பு என்னும் இருவகைக் கைகோளினும் நிகழும்.

"புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்

ஊடல், அவற்றின் நிமித்தம் என்றிவை, -

நேருங்காலை, - திணைக்குரிப் பொருளே.

(தொல்.பொருள் -அகத்திணை இயல் 16)

தொல்காப்பியர் தமிழ்மரபுக்குப் புறத்தான வடநூலார் வகுத்த எட்டுவகைத் திருமணங்களைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக் கோட்டம் காணும் காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணையமோர் இயல்பே.

(தொல்.பொருள் -களவியல் 3,1)

(மறையோர்- அந்தணர். தேஎம் - நூல்)

இன்பமும், பொருளும் அறமும் என்று சொல்லப்பெற்ற, அன்போடு இணைந்த ஐந்து ஒழுக்கங்களைப் பகுத்துரைத்தல் தமிழ் மரபு. பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், அசுரும், இராக்கதம், பைசாசம் என மணமுறைகளை எண்வகையாக பகுத்தோதல் ஆரியர் மரபு. எனவே இவ்வெண்வகை மணமுறைகளும் தமிழர்க்கு உரியனவல்ல என்பது போதரும்.

தமிழரின் களவு ஒழுக்கமும், ஆரியரின் கந்தருவ மணமும் ஒன்றென சில உரையாசிரியர்கள் குறிப்பிடுவர். ஆனால் உண்மை அதுவல்ல.

தமிழரின் களவு ஒழுக்கமும், ஆரியரின் கந்தருவ மணமும் நம்பியும் நங்கையும் தாமே ஒருவரை ஒருவர் சந்தித்துச் சேர்தல் என்ற ஒரு வகையில் மட்டுமே ஒத்திருப்பன, நடைமுறைகளும் நோக்கமும் முற்றிலும் வேறுபட்டவை. களவு மணம் தலைவனும் தலைவியும் மறைந்து சந்திப்பதாகிய தொடக்க நிலையை மட்டும் குறிக்கும். கந்தருவமோ பிறரறியாமர் இருவரும் திருமணம் செய்து கொள்வதைக் காட்டும்.

களவுச் சந்திப்பு உள்ளப் புணர்ச்சி ஒன்றையே குறிக்கும். ஊரறியத் திருமணம் நடைபெற்ற பின்னரே மக்கள்ப் பேற்றிற்கான உடல் கூடல் நிகழும். கந்தருவ மணத்தில் திருமணம் என்ற ஒன்று இல்லை. திருமணம் இன்றியே கூடுதல் நிகழ்ந்து விடுகிறது.

ஆரியக் கந்தருவம் கற்பின்றியும் அமையும். தமிழ்ப் பண்பாட்டிலே கற்பில்லாத களவு அறமாகக் கருதப் படுவதில்லை. அறம் என்ற ஆட்சியை ஒழுக்கம் என்ற பொருளிலேயே தொல்காப்பியரும் திருவள்ளுவரும் கையாண்டுள்ளனர். அறத்தைக் குறிக்கும் தர்மம் என்ற வட சொல் அறத்தின் சிறப்பை முழுதும் உணர்த்தாது.

மனதுக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன். அஃதொழிந்த சொல்லும் வேடமும் அறன் எனப்படாது என்பார் வள்ளுவர். மேலும் அழுக்காறு ( பொறாமை), அவா(பேராசை), வெகுளி ( கோபம்), இன்னாச்சொல் (கடுஞ்சொல்) இந்நான்கும் கடிந்து நடப்பதே அறமாகும் என்பார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 9:34 am

6. களவியல்- கற்பியல்

களவு என்பது வஞ்சனையாற் பிறர்க்குரிய பொருளைக் கவர்ந்து கொள்ளுதலாகிய உலகியல் களவல்ல. தலைவனும் தலைவியும் நல்லூழின் செயலால் தாமே எதிர்ப்பட்டு உலகத்தார்அறியாது மறைந்தொழுகுதல் ஆகும். பிறர் அறியாமல் உளங் கலந்து பழகும் பெருங்கேண்மையாதலால் இக்களவு அறத்தின் பாற்பட்டது. இக்களவினை மறைந்தொழுக்கம், மறை, அருமறை என்ற சொற்களால் வழங்குவர் தொல்காப்பியர்.

தமிழர் கூறும் களவொழுக்கம் அன்பின் மிகுதியால் தான் அவள் என்ற வேற்றுமையின்றி இருவரும் ஒருவராய் ஒழுகும் உள்ளப்புணர்ச்சியாகும். ஒருவரை ஒருவர் மணந்து வாழும் கற்பென்னும் திண்மை தமிழர் ஒழுகலாறாகிய களவொழுக்கத்தின் முடிந்த பயன் என்பர்.என்றும் கற்பினின்று வழுவாமல் அன்பினாற் இணையும் உள்ளப் புணர்ச்சியே களவொழுக்கத்தின் சிறப்பியலாகும். இதுவே தமிழியல் வழக்கமாகிய களவுக்கும் வடநூல் மணமாகிய கந்தருவத்துக்கும் உள்ள அடிப்டை வேறுபாடாகும்.

கற்பியல்

தலைவன் தன்னோடு அன்பு காட்டும் தலைவியைப் பெற்றோர் கொடுப்பப் பலர் அறிய மணந்து வாழும் மனைவாழ்க்கையே கற்பெனச் சிறப்பித்து உரைக்கப்படும். இதனைக் கரணம் என்ற சொல்லால் தொல்காப்பியர் வழங்குவார்.

கற்பு எனப்படுவது கரணமொடு புணரக்

கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுமே.

(தொல். பொருள் -கற்பியல் 4, சூத்திரம் 1)

கற்பு என்று கூறப்பெறுவது, வதுவைச் சடங்குடன் பொருந்திக் கொள்வதற்குரிய மரபினுடைய தலைவன், தலைவியைக் கொடுப்பதற்குரிய மரபினையுடையோர் கொடுப்பது கொள்ளவது.

(கரணம் - சடங்கு, வதுவை -மணம், கிழவன் கிழத்தி - தலைவன் தலைவி, )

கொடுப்போரின்றியும் மணம் உண்டு. பெற்றோரது உடன்பாடின்றி களவொழுக்கத்தில் இணைந்து தலைவனும் தலைவியும் ஊர்விட்டு ஊர் போதல் உண்டு. இது உடன்போக்கு எனப்படும்.

கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே

புணர்ந்து உடன் போகிய காலையான.


(தொல்.பொருள்-கற்பியல் 2)

தலைமகளது மனத்தின்கண் அமைந்த கலங்கா நிலையாகிய திண்மையே கற்பெனப்படுவது. தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்னரும் இத்திருமணச் சடங்கு எல்லா மக்களுக்கும் விதிக்கப் படவில்லை. சேர, சோழ, பாண்டியராகிய மூவேந்தர் குடும்பத்திற்கே முதன் முதல் விதிக்கப்பட்டது. பின்னர் ஏனையோர்க்கும் அது விதிக்கப்ட்டது.

களவு மணத்தில் பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் பெரியோர்கள் கணவனும் மனைவியும் பல்லோர் முன் இணைந்து வாழ்தற்குரிய மணச்சடங்கான கரணத்தை பெரியோர்கள் வகுத்தார்கள்.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப.

(தொல். பொருள் -கற்பியல் 4,- 4)

( வழு - குற்றம், ஐனர் - பெரியோர்)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 9:34 am

இல்லறம்

இல்லற வாழ்க்கையின் பயன் என்ன? இல்லற வாழ்க்கையின் இறுதிக் காலத்து, பெருமை பொரிந்திய மக்களுடன் நிறைந்து, அறத்தினை விரும்பிய சுற்றத்தோடு தலைவனும், தலைவியும், சிறந்ததாகிய செம்பொருளை இடைவிடாது நினைத்தல் மனையறத்தின் கடந்த காலப் பயனாகும். தமிழர்கள் இல்லறத்துக்குப் பின்புதான் துறவறத்தை மேற்கொண்டனர். குடும்பத்ததைப் பிரிந்து தனித்து வாழும் துறவறம் தமிழ் மக்களிடம் இருந்ததில்லை. இதனை-

காமம் சான்ற கடைக் கோட் காலை

ஏமம் சான்ற மக்களொடு துவன்றி

அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்

சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே

(தொல். கற்பியல் 4, - 51)

தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் தலைவன்-தலைவிக்கு இடையில் இருக்க வேண்டிய பத்துப் பொருத்தத்தை பின்வருமாறு கூறுவார்.

பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு,

உருவு, நிறுத்த காமவாயில்,

நிறையே, அருளே, உணர்வொடு, திருஎன

முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே

(தொல். பொருள்- மெய்ப்பாட்டியல் 6, சூத்திரம் 25)

(1. குலப்பிறப்பு 2. ஒழுக்கம் -பண்பாடு 3.ஆள்வினையுடைமை 4. வயது 5. வடிவம் -வனப்பு 6.காமஒழுக்கத்திற்குரிய உள்ளக் கிளர்ச்சி 7.சால்பு 8. அருளுடைமை 9. உள்ளக் குறிப்பை அறிந்தொழுகும் நுண்ணறிவு 10. தெய்வப்பொலிவு என்ற பத்துப் பொருத்தம்)

பிறப்பென்பது குடிப்பிறத்தல். அதற்குத்தக்க ஒழுக்கம் குடிமை எனப்படும். அடுத்து அறிவுடையோர் விலக்க வேண்டாதன பத்தும் எவையெவை என்பதனை தொல்காப்பியர் தொகுத்துச் சொல்வார்.

நிம்பிரி, கொடுமை, வியப்பொடு, புறமொழி:

வன்சொல், பொச்சாப்பு, மடிமையொடு குடிமை

இன்புறல், ஏழமை மறப்போடு, ஒப்புமை

என்றிவை இன்மை என்மனார் புலவர்

(தொல்.பொருள்- மெய்ப்பாட்டியல் 6 -சூத்திரம் 26)

நிம்பிரி - அழுக்காறு. கொடுமை - அறனழியப் பிறரைச் சூழும் சூழ்ச்சி.

வியப்பு - தம்மைப் பெரியராக நினைத்தல்

புறமொழி - புறங்கூறல்

வன்சொல் -கடும்சொல்

பொச்சாப்பு - சோர்வு

மடிமை - முயற்சியின்மை

குடிமை இன்புறல் - தன் குலத்தினாலும் தன் குடிப்பிறப்பினாலும் தம்மை மதித்து இன்புறல்

ஏழமை மறப்போடு - பணிவுடமையை மறத்தல்

தொல்காப்பியப் பொருளதிகாரம் ஒன்பது இயல்களில் முதல் ஆறு இயல்களும் அகத்திணை, புறத்திணை பற்றி விரித்துக் கூறுகின்றன. தமிழ்மொழியின் இலக்கணச் சிறப்பையும், தமிழர்களின் பண்பாடு, நாகரிகச் சிறப்புக்களையும் ஒல்காப்புகழ் தொல்காப்பியம் இலக்கிய நயத்தோடு விரிவாக எடுத்துக் கூறுகிறது. படித்துப் பொருள் கொள்வது அருமையாக இருந்தாலும் தொல்காப்பிய உரைகளின் துணையோடு அதனைப் படித்து மகிழலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 9:37 am

7. சங்க காலத் திருமணம்

தமிழினம் தொன்மை வாய்ந்த இனம். தமிழ்மொழி இன்று உயிர்த் துடிப்போடுள்ள உலக மொழிகளில், மிகப் பழமையான மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. தமிழ்; மொழிக்கு இருக்கும் இலக்கிய வளம் ஏனைய மொழி இலக்கியங்களைவிடச் சிறந்தது. உயர்வானது. இந்தியருள் தமிழர் மொழியாலும், நாகரிகத்தினாலும் சிறந்தவர் என்பது மொழி ஆராய்ச்சியாலும், அகழ்வாராய்ச்சியாலும் நிறுவப் பட்ட உண்மைகளாகும்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு -புகழ்க்

கம்பன் பிறந்த தமிழ்நாடு ...

வள்ளுவன் தன்னை உலகினிக்கே -தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு- நெஞ்சை

யள்ளும் சிலப்பதிகார மென்றோர்- மணி

யாரம் படைத்த தமிழ்நாடு


என்று மகாகவி பாரதியார் போற்றிப் பாடுவார்.

ஆனால் அவரே தன் காலத்துத் தமிழர்கள் தங்கள் பழம் பெருமையையும் புகழையும் தெரியாது நாமமது தமிழராய் இருப்பதையிட்டுக் கழிவிரக்கப்படுவார்.

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்

தெய்வ வள்ளுவன் வான்மறை கண்டதும்

பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்

பாரளித்ததும், தர்மம் வளர்த்ததும்

முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும்

மூண்டிருக்குமிந் நாளின் இகழ்ச்சியும்

அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்

தாங்கிலம்பயில் பள்ளியுட் போகுநர்!


ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு காலம் பொற்காலமாகத் திகழ்ந்திருக்கிறது. தமிழினத்தைப் பொறுத்தளவில் சங்ககாலமே தமிழரது பொற்காலமாகும். பாரதியார் வார்த்தையில் கூறவேண்டும் என்றால் உண்மை இது வெறும்புகழ்ச்சி இல்லை.

முடியுடை வேந்தர்கள் மூவரும் கொற்றம் வைத்து சீரோடும் சிறப்போடும், பேரோடும் புகழோடும், அறத்தோடும் மறத்தோடும் பாராண்ட காலம் அது.

சங்க இலக்கியங்களான எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள் தமிழரின் ஒப்பற்ற நாகரிகச் சிறப்புக்கு சான்று பகருவன.

கள்ளையும் தீயையும் சேர்த்து- நல்ல காற்றையும் வானவெளியையும் சேர்த்துத் தௌ;ளு தமிழ்ப் புலவோர் செய்த தீஞ்சுவைக் காவியங்களான ஐம்பெரும் காப்பியங்கள் தமிழ் அன்னையின் புகழை திக்கெட்டும்மணம்வீசிப் பரப்பின.

காலில் சிலம்பு, இடையில் மேகலை, காதில் குண்டலம், கையில் வளை, மார்பில் சிந்தாமணி அவளின் இயற்கை அழகுக்கு அழகு சேர்த்தன.

தமிழரின் மொழி வேறு, கலை வேறு, வாழ்க்கை முறை வேறு. தமிழர் ஆரியரின் ( வடமொழியாளரின்) நின்று முற்றிலும் வேறு பட்டவர் என்பது ஆராய்ச்சியால் போந்த உண்மை. பண்டைச் சங்க இலக்கியங்கள் இதற்கு சான்று பகருகின்றன.

இடைக்காலத்தில் தமிழ்மரபுக்கு மாறான வாழ்க்கைமுறை தமிழரிடம் புகுந்து விட்டது. தமிழரின் பழக்க வழக்கங்கள் மாறின. மணமுறை மாறிவிட்டது. பிற சடங்குகள் பெருகின. இவற்றின் பயனாக இன்றுள்ள தமிழர் நாமமது தமிழராக இருக்கின்றாரே தவிர மெய்த் தமிழராக -சங்ககால தமிழர்தம் வழித்தோன்றலாக இல்லை. இதனை நாம் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.

நாம் தாய்மொழியைப் போற்றாது விட்டோம். தமிழ்க் கலையை வளர்க்காது விட்டோம். தமிழினத்தின் மரபைக் காவாது விட்டோம். வடமொழிக்கு அடிமையானோம். எனவேதான் வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் மீண்டும் எழுச்சி வேண்டும், விசையொடிந்த தேகத்தில் வன்மை வேண்டும், சூழ்ச்சிதனை வஞ்சகத்தை பொறாமைதன்னைத் தொகையாக எதிர் நிறுத்தித் தூள் தூளாக்கும் காழ்ச் சிந்தை மறச் செயல்கள் மிகவும் வேண்டும் என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முழங்குவார்.

வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் மீண்டும் எழுச்சி வேண்டும்!

விசை ஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!

சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்

தொகையாக எதிர்நிறுத்தித் தூள் தூளாக்கும்

காழ்ச்சிந்தை, மறச் செயல்கள் மிகவும் வேண்டும்!

கடல்போல் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!

கீழ்ச் செயல்கள் விட வேண்டும்! இராவணன்தன்

கீர்த்தி சொல்லி அவன் நாமம் வாழ்த்த வேண்டும்!

(பாரதிதாசன் கவிதைகள்)

பாவேந்தர் பாரதிதாசனின் ஆசையை இன்று தமிழீழம்தான் செயல்படுத்தி நிறைவு செய்து வருகிறது. தமிழகம் பாரதி, பாரதிதாசன் காலத்திலேயே இன்றும் இருக்கிறது.

இன்றைய தமிழரின் மணமுறை பண்டைத் தமிழர் மரபுக்கு முற்றும் மாறானாதாக இருக்கிறது. இதனைத் தமிழ் இலக்கியச் சான்று கொண்டு காட்டலாம்.

அன்றைய தமிழருடைய திருமணம் எளிமையாக நிகழ்ந்தது. அதில் சடங்குகள் எதுவும்இல்லை. எரியோம்புதல் இல்லை. தீவலம் வருதல் இல்லை. புரோகிதர் இல்லை.

அகநாநூறு எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் உள்ள 400 பாடல்கள் வௌ;வேறு காலத்தில் வௌ;வேறு புலவர்களால் பாடப்பட்டவை. இதில் காணப்படும் இரண்டு பாடல்கள் பழந்தமிழரின் திருமணமுறையை வர்ணிக்கின்றன. அவற்றுள் ஒன்று நல்லாவூர் கிழார்என்ற செந்தமிழ்ப் புலவர் பாடிய பாடல். மணமகன் தனக்கு முன்பு நிகழ்ந்;த திருமணத்தைக் கூறுவதாகப் பாடப்பெற்றதாகும். இதனில் கூறப் பெறும் திருமணமுறையைக் காண்போம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 9:37 am

"உழுந்துதலைப் பெய்த கொழுந்கனி மிதவை

பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால்

தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமரி

மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்

கனையிருள் அகன்று கவின் பெறு காலைக்

கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்

கேடில் விழப்புகழ் நாடலை வந்தென

வுச்சிக் குடந்தர் புத்தகல் மண்டையர்

பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்

முன்னவும் பின்னவும் முறை முறை தாரத்தரப்

புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று

வாலிழை மகளிர் நால்வர் கூடிக்

"கற்பினின் வாழாஅ நற்பல வுதவிப்

பெற்றோற் பெட்கும் பிணையை ஆகென

நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி

பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க

வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்

கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து

"பேரில் கிழத்தி யாகென" தமர் தர

ஓரில் கூட்டிய வுடன்புணர் கங்குற்

கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்

தொடுங்கினள் கிடந்த வோர்புறந் தமீஇ

முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப

வஞ்சினள் உயிர்த்த காலை யாழநின்

நெஞ்சம் படர்ந்த தெஞ்சா துரையென

வின்னகை யிருக்கைப் பின்யான் வினவலிற்

செஞ்சூட் டொண்குழை வண்காது துயல்வர

அகமலி யுவகைய ளாகி முகனிகுத்

தொய்யென விறைஞ்சி யோளே மாவின்

மடங்கொண் மதைஇய நோக்கின்

ஒடுங்கீ தோதி மாஅ யோளே. "


(அகநானூறு பாடல் 86)

(கனையிருள் அகன்ற - பூர்வபக்கத்தையுடைய காலை. கொடும் புறம் - நாணத்தால் வளைந்த உடம்பு. சதுர்த்தியறை - நான்காம் நாள் பள்ளியறை.

மதை இங நோக்கு - செருக்கின பார்வை)

"எங்கள் திருமணநாளன்று உழுந்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த, பக்குவமாகக்
குழைந்த பொங்கலோடு, மலைபோல் குவிந்த பெருஞ் சோற்றினை உண்பவர்கள் கூட்டம்
நிறைந்திருந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 9:38 am

வரிசையாக கால்களை நட்டுக் குளிர்ந்த மணப் பந்தல் முழுதும் வெளியிலிருந்து கொண்டுவந்த வெண்மணல் பரப்பப் பட்டிருந்தது.

மனையில் விளக்கு ஏற்றி மலர் மாலைகளை பந்தல் முழுதும் நெருக்கமாகத் தொங்க விட்டு மிகஅழகாக அலங்கரித்துள்ளார்கள். திருமண வீட்டில் மனைவிளக்குகளை ஏற்றி வைத்து ஒளிபெறச் செய்துள்ளார்கள்.

புகழினையுடைய திங்களுடன் கூடிய உரோகிணி நன்னாள் குற்றமற்றதும் வாழ்விற்கு நல்லது பயக்கும் அடர்ந்த இருள் நீங்கி, விடியல் தொடங்கும் வனப்பு மிகு நேரத்தில் திருமண விழா தொடங்குகிறது.

தலையில் நன்நீர்க் குடத்தினைத் தாங்கியும், கையில் அகன்ற பாத்திரத்தை ஏந்திக் கொண்டும், திருமணத்தை செய்து வைக்கும், கலகலப்புடன் கூடிய முதிய மங்கல வாழ்வரசியர் நீர்க் குடங்களை முன்னேயும் பின்னேயும் முறைமுறையாகத் தந்திட மணமகளை நன் நீராட்டினர்.

நல்ல மக்களைப் பெற்று அடி வயிற்றில் வரி வரியாகத் தழும்புகள் கொண்ட மணிவயிறு வாய்ந்த மங்கல மகளிர் நால்வர் தூய ஆடைகளையும் அணிகளையும் அணிந்து கூடிநின்ற மணமகளிடம் 'உன்னை அடைந்த கணவனை விரும்பிக் கூடிக் "கற்பு நெறியின்றும் தவறாமல் நல்லறங்களைச் செய்து, கணவன் விரும்பத்தக்க மனைவியாhக அவனை வாழ்நாள் முழுதும் நன்கு பேணிக் காத்து வாழும் எண்ணத்தைக் கைக் கொண்டு வாழ்வாயாக!"

என்று நீருடன் குளிர்ந்த இதழ்கள் உள்ள பூக்களையும் புதிய நெல்லையும் தூவி வாழ்த்தியதால் மணமளின் அடர்த்தியான கரிய கூந்தலில் அவை தோற்றமளிக்க, திருமணம் இனிதே நிகழ்கிறது.

அதன்பின் ஆர்வத்துடனும், ஆரவாரத்துடனும் சூழ்ந்த உறவினர் 'இன்று முதல் நீயும் பெரிய மனைக் கிழத்தி ஆகிவிட்டாய்' என்று கேலி பேசி மணமகளுக்கு கோடியுடுத்தி மெல்லிய அலங்காரங்களைச் செய்து, வனப்புடன் கூடிய முதலிரவு அறைக்குள் உடன் கூடிய புணர்ச்சிக்குரிய அன்றிரவே அவளை அனுப்பி வைத்தனர். அவ்வறைக்குள் நுழையும் மணமகள் உடுத்திய புதிய புடவைக்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு, தன் இனிய கணவன் இருக்கும் இடம் நோக்கிச் செல்கின்றாள்.

அப்போது அவள் புத்தாடையில் ஒடுங்கி முகம் புதைத்துக் கிடந்தாள். அவளைத் தழுவும் விருப்பத்தோடு முகத்தை மூடிய துணியைச் சற்றே விலக்க அவள் அதற்கு அஞ்சி பெருமூச்சு விட்டாள். நடுங்கி ஒடுங்கினாள். "ஏன் பயந்தனை, உன் மனதில் உள்ளதை உள்ளவாறு என்னிடம் கூறு' என வினாவினேன்.

அப்போது மானைப்போல் மடமை கொண்டவளும், செருக்கினையுடைய நோக்கினையுடையவளும், குளிர்ந்த கூந்தலையுடையவளும், மாநிறத்தினையுடையவளுமாகிய மணமகள், அகம் மலர்ந்த மகிழ்ச்சியளாய் முகம் தாழ்த்தி என் காதலி மெலிந்த மடல் கொண்ட காதில் அணிந்திருந்த சிவந்த மணிகள் பதித்த அழகிய குழைகள் அசைய விரைந்து வந்து தனக்குரியவனை வணங்கினாள். ஆதலால் அவள் எக்காலத்தும் என்பால் அன்புடையவள். அதனை நீ அறியாய்" என்று தோழியிடம் கூறினான்.

(பதவுரை - உழுந்து - பருப்பு. களிமிதவை - குழைதலையுடைய கும்மாயம். கோள் -அசுப கிரகங்கள். கால் - இடம், சகடம். திங்களையுடைய நாள் - திருமண நாள். பொது - திருமமணம். எல்லாரும் புகுதற்கு யோக்கிய மாலால்ஈ அதனைச் செய்கிற ஆரவாத்தினையுடைய செவ்விப் பெண்டிர். முன்னவும் பின்னவும் - முற்படக் கொடுப்பனவும் பிற்படக் கொடுப்பனவும் முறை முறையாகக் கொடுக்க. புதல்வர் பயந்த - பிள்ளைகளைப் பெற்ற மகளிர். அலரி - பூ. ஓரில் சதுர்த்தி அறை. நெஞ்சம் நினைந்தது எஞ்சாதுரை - மறையாதுரை. )

சங்ககாலத் தமிழரது திருமண நெறியை பாடலில் படம்பிடித்து வைத்த புலவர் நல்லாவூர் கிழார் அவர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம். அவரது சொல்லோவியத்தைப் படிக்கும்போது எமது முன்னோரது நாகரிகச் சிறப்பை, பகுத்தறிவை எண்ணி மனம் பூரிப்படைகிறது.

புலவர் நல்லாவூர் கிழார் காதலால் பிணைக்கப்பட்ட தலைவன் - தலைவியது முதல் இரவை எப்படி மிக நாகரீகமாக, மிக நளினமாக தலைவன் கூற்றாகச் எடுத்துச் சொல்கிறார் என்பதும் எண்ணி மகிழத்தக்கது.

இந்த அகப்பாடல் புணர்தலைக் குறிப்பதால் முதலில் சொன்ன மருதத் திணைக்கு உரிய உரிப்பொருளாகும்.

வீட்டு முற்றத்தில் போடப்படும் திருமணப் பந்தலில் வெண்மணல் பரப்புவது, பூச்சரம் கட்டுவது இன்றும் யாழ்ப்பாணத்தில் வழக்கில் இருந்து வருவது எண்ணி வியக்கத் தக்கது.

மகமகளை வாழ்த்தும் போது 'இன்று முதல் நீயும் பெரிய மனக்கிழத்தி ஆகிவிட்டாய்" ('பேரில் கிழத்தி ஆகுஎனத்') இதில் வரும் பெரிய மனக்கிழத்தி என்ற சொல்லாட்சியை இன்றும் 'பெரிய பிள்ளையாகி விட்டாள்' என்று பெண் பூப்பெய்தும் போது சொல்லும் வழக்கில் காணலாம்.



அகநாநூற்றின் மற்றைய பாடலையும் இப்போது பார்ப்போம். இந்தப் பாடலைப் பாடியவர் விற்றூற்று மூதெய்யினார் என்ற சங்கப் புலவர். இதில் சொல்லப்படும் மணச் செய்தியும் மணமகன் சொல்வதாகவே புனையப்பட்டுள்ளது.

"மைப்புறப் புழுக்கி னெய்க்கனி வெண்சோறு

வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்

புள்ளுப் புணர்ந் தினிய வாகத் தௌ;ளொளி

அங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கள்

சகடம் மண்டிய துகடீர் கூட்டத்துக்;

கடிநகர் புனைந்து கடவுள் பேணிப்

படுமண முழவொடு பரூஉப்பணை யிமிழ

வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்

பூக்கணும் இமையார் நோக்குபு மறைய

மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை

பழங்கன்று கறிக்கும் பயம்பம லறுகை

தழங்குரல் வானின் தலைப்பெயற் கீன்ற

மண்ணுமணி யன்ன தாயிதழ்ப் பாவை

தண்ணறு முகையொடு வெண்ணூல் சூட்டித்

தூவுடைப் பொலிந்து மேவரத் துவன்றி

மழைபட் டன்ன மணமல்லி பந்தர்

இழையணி சிறப்பிற் பெயர்வியர்ப் பாற்றித்

தமர்நமக் கீந்த தலைநாள் இரவில்

நுவர் நீங்கு கற்பினெம் முயிருடம் படுவி

முருங்காக் கலிங்க முழுவதும் வளைஇப்

பெரும் புழுக் குற்றநின் பிறை நுதல் குறுவியர்

உறுவளி யாற்றச் சிறுவரை திறவென

வார்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்

உறைகழி சாளின் உருவு பெயர்ந் திமைப்ப

மறைதிற னறியா ளாகிப் பையென

நாணினள் இறைஞ்சி யோளே பேணிப்

பரூஉப்பகை யாம்பற் குரூஉத் தொடை நீவிச்

சுரும்பிமிர் ஆய்மலர் வேய்ந்த

இரும்பல் கூந்தல் இருண்மறை யொளித்தே.

(அகநானூறு பாடல் 136)


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 9:39 am

இதன் பொழிப்புரை பின்வருமாறு.

செம்மறியாட்டின் பின் சந்தினை ஆக்கிய கறியொடு நெய்யாளாய வெளிய சோற்றினை இவ்வளவினதென்று கூறப்படாத வண்மையுடனே ஆன்றோரை விரும்பியளித்து வண்டுகள் வந்து கூடி இனிய இசையெழுப்ப அழகிய இடமகன்ற ஆகாயம் விளக்கமடையத் திங்கள் உரோகிணியிற் சேர்தலால் தெளிந்த ஒளியுடைய குற்றந்தீருங் கூடுதலுடைய நாளிலேகாவலையுடைய மாளிகையை அலங்கரித்து வழிபடு கடவுளை வணங்கி மார்ச்சனையமைந்த குடமுழவும்,

மத்தளமும் பருத்த பலவாச்சியமும் ஒலிப்பஈ வதுவை நிமித்தமாக அலங்கரிக்கப் பெற்ற தாதர்கள் விருப்புற்றுப் பூப்போலும் கண்கள் இமையாமல் நோக்கி ஒதுங்க, மெல்லிய பூவையுடைய அறுகம் புல்லின் ஒலிக்கும் இடிக் குரலுடைய மேகத்தின் முதற் பெயல் பெய்து விட்டவுடன் முளைத்து வளந்த கடைந்த நீலமணியன்ன பெரிய இதழ்களை உடைய பாவை போன்ற பூவினது குளிர்ந்த நறிய அரும்புகளுடனே சேர வெள்ளிய நூலாற் கட்டியதனைச் சூட்டி தூய ஆடையை உடுத்தி பொருந்துதல் வர நெருங்கி வந்து வெளியே மேகத்தைப் பரப்பினால் ஒத்த மணல் பரப்பிய பந்தரின் கண்ணே கலன்களை நெருங்க அணிந்த சிறப்பினால் உண்டாகும் வியர்வையைப் போக்கி இவளை நோக்கி வெறுப்பொழிந்த கற்பினையுடைய எமது உயிருடன் பொருந்திய பெண்ணே!

வளையாத புதிய ஆடை முழுவதையும் உடுத்திக் கொண்டு பெரிய புழுக்கத்தையுற்ற நின் பிறை போன்ற நெற்றியின் கட்டோன்றிய வியர்ப்பை மிக்க காற்றினால் ஆற்றவேண்டிச் சிறிது பொழுது திறப்பாயாக,

என்ற ஆசையுற்ற நெஞ்சுடனே இவள் போர்த்திருந்த போர்வையை நான் வாங்குவதால் உடனே உறையின்று கழித்த வாளைப்போலக் கண் மருண்டு இமைப்ப அதனை மறைக்கும் திறத்தை அறியாளாய் விருப்ப மிகுத்துப் பருத்து எதிர் எதிர் பிணைத்த ஆம்பலின் அழகிய மாலையை நீக்கி, ஒலிக்கின்ற அழகிய மலரைச் சூடிய பெரிய பலவாகிய கூந்தலையுடையவள் இருளின் கண்ணே ஒதுங்கி ஒளித்து நின்று மெல்ல நாணமுற்றுத் தலை கவிழ்ந்து நின்றவள், இப்போது ஊடா நின்றனள் காண்.

(பதவுரை. மைப்புறப் புழுக்கின் - கருகப்புழுக்கின தூய நெய். பரூப்பணை- பெரிய முரசு ஒலிக்க. சகடம் - உரோகிணி. முழவு - மத்தளம். பயம்பு - குழி. அமலுதல்-நெருங்குதல், விதுப்பு - ஆசை. மேவர-பொருந்துதல் வர. துவன்றி - நெருங்கி. படுவி-விளி. முருங்கா-வளையாத. உருவு-இங்க கண்ணின் வடிவு. ஒய்யென - மெல்ல. )

தொல்காப்பியத்துக்கு உரைசெய்த நர்ச்சினார்க்கினியர் அகநாநூறு 86ம் பாடலையும், 136ம் பாடலையும் -

"கற்பு எனப்படுவது கரணமொடு புணரக்

கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுமே"

"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப"


என்னும் கற்பியல் சூத்திரங்களுக்கு எடுத்துக் காட்டாகக் காட்டியுள்ளார். காட்டி -"இதனுள் வதுவைக்கு ஏற்ற கரணங்கள் நிகழ்ந்தவாறும் தமர் கொடுத்தவாறும் காண்க. சுற்றம் சூழ்ந்து நின்றது. தமர் அறிய மணவறையை மணமக்கள் சேர்ந்தனர்" எனக் கூறியுள்ளார்.

முன்னர் கூறியவாறு இந்த இரண்டு சங்க காலத் திருமணங்களிலும் இன்றைய திருமணங்களில் உள்ள -

(1) பொருள் புரியாத வட மொழி மந்திரங்கள் இல்லை.

(2) புரோகிதர் இல்லை.

(3) எரி ஓம்பல் இல்லை.

(4) தீவலம் இல்லை.

(5) அம்மி மிதித்தல் இல்லை.

(6) அருந்ததி காட்டல் இல்லை.

(7) கோத்திரம் கூறல் முதலியன இல்லை.


இவ்விரு திருமணங்களைப் பற்றிக் கூறுமிடத்துக் காலம் சென்ற சரித்திரப் பேராசிரியர் திரு. பி.டி.சீனிவாச அய்யங்கார் அவர்கள் " இப்பண்டைத் திருமண நிகழ்ச்சிகளில் எரிவளர்த்தல் இல்லை, தீவலம் இல்லை, இது முற்றும் தமிழர்க்கே உரிய திருமணம்," எனக்குறித்திருத்தல் கவனிக்கத்தக்கது.

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக