புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Poll_c10 
30 Posts - 65%
heezulia
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Poll_c10 
15 Posts - 33%
mohamed nizamudeen
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Poll_c10 
72 Posts - 64%
heezulia
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Poll_c10 
36 Posts - 32%
mohamed nizamudeen
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி


   
   

Page 5 of 13 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 5:28 am

First topic message reminder :

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Uyir

பழங்கால இந்தியாவில் செக்ஸை வாழ்க்கையின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாக நினைத்தார்கள். சாப்பிடுவது, தூங்குவது மாதிரி அதுவும் ஒரு விஷயம். அதை ஒதுக்கி வைக்கவோ, ரகசிய பொருளாகப் பதுக்கி வைக்கவோ அவர்கள் நினைத்ததில்லை. ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அரும்பும் அன்பு, காதலாக மலர்ந்த பிறகு அவர்கள் இணைந்து நடத்தும் திருமண வாழ்க்கை இந்த உறவில்தான் முழுமை பெறுகிறது என்பது அவர்களுக்குப் புரிந்திருந்தது.

இல்லறத்தில் ஆண், பெண் இடையே இருக்கும் உறவு, ஒளிவு மறைவில்லாதது. அன்பு செலுத்துவது, உண்மையாக இருப்பது, மரியாதை தருவது என எதுவுமே ஒன்வே டிராஃபிக் இல்லை. செக்ஸிலும் இப்படித்தான்... அது இருவரின் தேவைகளையுமே முழுமையாக பூர்த்தி செய்யும்படி அமைய வேண்டும் என்றனர் ரிஷிகள். ‘பெண் என்பவகள் ஆணுக்கு படுக்கையில் சந்தோஷம் தருவதற்காகப் படைக்கப்பட்டவகள் இல்லை. அந்த உறவில் சுகம் தேடும் உரிமை அவளுக்கும் இருக்கிறது. அந்த இன்பம் கிடைக்காதபட்சத்தில் அவகள் திருமண உறவுக்கு வெளியில் அதைத் தேட தயங்க மாட்டாகள். அதனால் குடும்பத்தில் மட்டுமில்லை... சமூகத்திலும் பிரச்னைகள் உருவாகும்’ என்பது அந்த ரிஷிகள் சொன்ன வாக்கு.

முடிவாக அவர்கள் சொன்ன நீதி... ‘இந்த உறவில் கொடுப்பவர், எடுப்பவர் என்ற வித்தியாசம் இல்லை!’ நமது ரிஷிகள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்த உண்மைகளை நாற்பது வருடங்களுக்கு முன்புதான் தீவிர ஆராய்ச்சிகளின் வாயிலாக மேற்கத்திய நாகரிகம் புரிந்து கொண்டிருக்கிறது.
வாழ்க்கையின் முழுமையான பரிமாணத்தை நமது மதிப்புக்குரிய முன்னோர் காட்டினார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நமது இந்த மரபு வேரைப் பிடுங்கி எறிந்து, "பாலுணர்வு" என்பதையே ஒரு மிகப் பெரிய கவர்ச்சி அம்சம் போல ஆக்கி, "ஒருவனுக்கு ஒருத்தி" என்பதன் புனிதத்தையும் இல்லாமல் ஆக்கி, அவர்களது "டேக் இட் ஈஸி" கலாசாரத்தை நமக்கும் விதைத்து விட்டனர்.

இதிலிருந்து மீண்டு வர என்ன வழி? நமது பாரம்பரிய ஞானத்தின் வேர்களைத் தேடி, செக்ஸ் தொடர்பான சிக்கல்களுக்கு அறிவியல்ரீதியான தீர்வுகளைக் காணும் முயற்சி தான் இந்தத் தொடர். மிகுந்த கண்ணி யத்தோடும், அளவற்ற ஜாக்கிரதை உணர்வோடும் இந்தத் தொடரை அணுகியிருக்கிறார் தன் ஆராய்ச்சிகளின் மூலம் உலகளவில் புகழ்பெற்ற செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.

இந்தத் தொடரைப் படிக்கும் எவரும் "உணவு, தூக்கம் போலவே பாலுணர்வும்கூட உயிர்களின் தவிர்க்கமுடியாத அடிப்படைத் தேவை" என்பதையும், அதுபற்றி முழுமையாகத் தெரிந்து கொகள்வது எத்தனை அவசியம் என்பதையும் தெளிவாக உணர்வார்கள்.

அது ஒரு பெட்ரூம்... பகட்டான அலங்காரங்களோ, திகட்ட வைக்கும் ஆடம்பர வசதிகளோ இல்லாத மிகச் சாதாரணமான பெட்ரூம். ஆனாலும் அது சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டது. வெறும் பத்து ஆண்டுகளில் பத்தாயிரம் முறை பலபேர் வந்து பரவசமான கலவி இன்பத்தை அனுபவித்த படுக்கை அறை என்ற பெருமையை அது பெற்றது.

தங்கள் காதல் மனைவியைக் கட்டியணைத்தபடி வந்த அன்புக் கணவர்கள், கேர்கள் ஃபிரெண்டை முத்தமிட்டபடி நுழைந்த டீன்ஏஜ் காதலர்கள், தனியாக அறைக்குகள் நுழைந்து காத்திருந்து முன்பின் அறிமுகமில்லாத பெண்களை துணையாகத் தேடிக் கொண்டவர்கள், ‘வயது எங்கள் உணர்ச்சிகளுக்கு அணை போடவில்லை’ என்று நிரூபிக்கும் விதமாக தங்கள் மனைவியோடு வந்து அந்தப் படுக்கையைப் பயன்படுத்திக் கொண்ட கிழவர்கள், ‘எங்களுக்கு ஜோடியே தேவையில்லை’ என்ற படி தனி ஆட்களாக வந்து சுய இன்பத்தில் பரவசப்பட்டவர்கள்... இப்படி பலவிதமான மனிதர்களை அந்த அறை பத்து ஆண்டுகளில் பார்த்திருக்கிறது.

வெளிச்சம், இருட்டு என்ற வித்தியாசம் எல்லாம் அவர்களில் பலருக்கு இல்லை. ஒரேநாளில் வெவ்வேறு நேரங்களில் விதம்விதமான உணர்வுகளுடன் அந்த அறைக்கு பல ஜோடிகள் வந்தன. படுக்கை விரிப்பை மாற்றக்கூட அவகாசம் தராமல், அடுத்தடுத்து பத்து ஜோடிகள் வந்து போனதும் நடந்திருக்கிறது.
இவ்வளவு பிஸியான அந்த அறை.. ஒரு நட்சத்திர ஹோட் டலின் ‘தேனிலவு சூட்’ அல்லது ஏதாவது குளிர்பிரதேச சுற்றுலா தல ரிஸார்ட்ஸாக இருக்கும் என்று தானே நீங்கள் நினைத்தீர்கள்.

ஸாரி... அது தப்பு. அந்த அறை, ஒரு மருத்துவக் கல்லூரியின் பரிசோதனைக் கூடம். அங்கு இப்படி பத்தாயிரம் தடவை பலர் பரவச நிலையை அனுபவித்தது, ஓர் ஆராய்ச்சிக்காக! அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் இருக்கும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி... அதில் இருக்கும் மகப்பேறு மற்றும் பெண்கள்நலப் பிரிவில்தான் நடந்தது இந்த ஆராய்ச்சி.

‘இதில் போய் என்ன ஆராய்ச்சி!’ என முகத்தைச் சுளிப்பவர்கள், தவறாமல் அடுத்த பாராவுக்கு போங்கள்.

இந்த வித்தியாசமான ஆராய்ச்சி நடந்தது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்... ‘இருண்ட கண்டம்’ என பெயர்பெற்று மர்மப் பிரதேசமாக இருந்த ஆப்பிரிக்க கண்டத்தைக்கூட மனித இனம் அலசி ஆராய்ந்து விட்ட நேரம் அது. எங்கோ தொலைதூரத்தில் இருந்தபடி மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை
வகைப்படுத்தி பெயர் வைக்கும் அளவுக்கு அறிவியல் அப்போது உச்சத்தில் இருந்தது.

ஆனால், அப்போதும் புரியாத புதிராக இருந்தது, ஆண்பெண் நிகழ்த்தும் அந்தரங்க உறவின் அர்த்தங்கள். அந்த உறவின்போது எந்தெந்த உறுப்புகளுக்குகள் என்னவிதமான மாற்றங்கள் நிகழ்கின்றன? ஒட்டுமொத்த உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன? புதிய உயிரை உருவாக்கி அடுத்தடுத்த தலைமுறைகளை உலகுக்கு படைக்கும் ஆதார சக்தி எப்படி ஆணிடமிருந்து பெண்ணுக்குப் பரிமாறப்படுகிறது? பிரபஞ்சத்தை சிருஷ்டித்ததாகக் கூறப்படும் கடவுகள், ஒவ்வொரு ஜீவனையும் உயிர் கொடுத்து உருவாக்கும் பணியை மட்டும் ஏன் அந்தந்த ஜீவராசிகளிடமே கொடுத்தார்? அந்த உறவு என்பது வெறுமனே உயிர்களை உருவாக்க மட்டும்தானா? மனித இனத்தை எடுத்துக் கொண்டால், இதில் ஆணின் பங்கு என்ன... பெண்ணின் பங்கு என்ன? சுருக்கமாக சொல்லப் போனால் ஆண்களும், பெண்களும் இதை ஏன் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள்? இந்த உறவில் பலபேருக்கு நாட்டம் இல்லாமல் போவதற்கும், சிலர் மட்டும் எப்போதும் இதே நினைப்புடன் வெறியோடு திரிவதற்கும் காரணம் என்ன? பலபேருக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போவதற்கு என்ன காரணம்?



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 8:39 am

இதற்கு முன்பு வரை மனைவியு டன் படுக்கைக்குப் போகும்போது கணவன் நினைப்பு, ‘ஏற்கெனவே என்னால் முடியாமல் போச்சே... இப்போது முடியுமா... முடியாதா?’ என்ற கேள்வியில்தான் நிற்கும். இப்படி மனம் வேறு திசையில் பயணிக்கும்போது, அவருக்கு மனைவி எங்கு தொட்டாலும் உணர்ச்சிவசப்பட முடியாது. பதற்றத்தில் அவரால் இயல்பாக இயங்க முடியாது. இதனால் தோல்விதான் கிடைக்கும். ஆனால், எங்களுடைய அறிவுரைக்குப் பிறகு நிலைமையே வேறு. அவரது குறிக்கோள் செக்ஸ் இல்லை. சும்மா தொட்டு விளையாடுகிறார்... அவ்வளவுதான்! அதனால் டென்ஷன் இல்லாமல், முடியுமா& முடியாதா என்ற கேள்வி எழாமல் அவரால் ரிலாக்ஸாக இருக்க முடிகிறது. வெற்றி&தோல்வி பற்றிக் கவலைப்படாத தொடுதல் விளையாட்டு. இதில் முழு இன்பத்தையும் அவரால் அனுபவிக்க முடிகிறது. அதனால் பரவசப்பட முடிகிறது. பரவசமாகி விட்டோமே என்று உடனே செக்ஸை அவர் முயன்று பார்த்தால் ஆபத்து. ஆரம்பிக்கும் நிமிடத்திலேயே கேள்வி திரும்பவும் வந்து மனசில் உட்கார்ந்து கொள்ளும். அப்புறம் அவருக்கு சிகிச்சை அளிப்பதே சிரமமாகி விடும்.

ஆனால், கட்டுப்பாடோடு இருந்து அடுத்த தடவை சிகிச்சைக்கு வருகிறவர்களுக்கு, ‘டாக்டர் எப்போது கட்டுப்பாட்டைத் தளர்த்துவார். நாம் சந்தோஷத்தை அனுபவிக்கலாம்?’ என்ற கேள்வி மட்டும்தான் இருக்கும். பயமும், பதற்றமும் காணாமல் போயிருக்கும்.

இதில் பல நன்மைகள்... டாக்டர் ஓகே சொன்னதும் அவர் போய் உறவில் கலக்கும்போது தொடுதலில் இருந்து ஆரம்பிப்பார். ‘இவ்வளவு நாள் டாக்டர் தடுத்தார், இனி என்னைத் தடுக்க யார் இருக்கிறார்?’ என்ற கேள்வி மட்டுமே மனதில் இருக்கும். ‘முடியுமா& முடியாதா என்ற நினைப்பு வராது. அதோடு இத்தனை நாள் பரவசமாகி கட்டுப்பாடோடு இருந்ததால், துரிதஸ்கலிதம் ஆகாமல் உறவில் நீடிக்க முடியும். இதனால் சந்தோஷம் அதிகமாகும்.

இதெல்லாமே வாத்ஸாயனர் சொல்லி வைத் திருப்பதுதான். எல்லாவற்றையும் இந்தியர்கள் மறந்ததால் இப்போது புதுசாக மேற்கத்திய அறிஞர்கள் சொல்லி, இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

செக்ஸ் உறவில் கிடைக்கும் பரவசமான சுகம் எப்படி இருக்கும்? இதை வர்ணிக்க முயன்ற எல்லோருமே தோற்று விட்டார்கள். வாத்ஸாயனரும் இதற்கு விதிவிலக்கு இல்லை. ‘அது கிட்டத்தட்ட தும்மல் மாதிரி... ஆரம்பித்த பிறகு நிலைகொள்ளாமல் தவிக்க விடும். எப்போது வெளிப் படுமோ எனப் பதற்றம் அடைய வைக்கும்... முடிந்ததும் அடுத்த நொடி அமைதி யாகி விடும்’ எனச் சொல்கிறார் அவர்.

அப்படியும்கூட அவருக்கு சரியாக சொன்னோமா என்று குழப்பம் வருகிறது. அதனால், ‘அனுபவித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இது. இந்த சுகம் எப்படிப்பட்டது என்று கேட்டால், யாராலும் பதில் சொல்ல முடியாது. ஆணுக்கு விந்தணு வெளியேறுவதால் சுகம் கிடைக்கிறது. இந்த அனுபவம் எப்படி என்பது அவருடைய மனைவிக்குத் தெரியாது. ஆனால், பெண்களுக்கு அப்படி எந்த திரவமும் வெளியேற வாய்ப்பில்லை. அவர்களுக்கும் சுகம் கிடைக்கிறது. அது எப்படிப்பட்ட பரவசம் என்பது கணவனுக்குத் தெரி யாது. இப்படி இருக்க இதை எப்படி விவரிப்பது, என்ன எழுதுவது?’ என்ற கேள்வியோடு முடிக்கிறார். இதேபோல ‘செக்ஸ் உறவு எந்தக் கணத்தில் முழுமை பெறுகிறது’ என்பதையும் அலசுகிறார் அவர். ‘பரவசம் கிடைத்ததுமே பெண்ணிடமிருந்து ஆண் விலக முயற்சிப்பான். ஆனால், பெண் விடமாட்டாள். இறுக்கி அணைத்து, இன்னும் வேண்டும் என்பதுபோல செயல் படுவாள்’ என்கிறார் வாத்ஸாயனர். ‘செக்ஸ் உறவின் உச்சகட்டத்தில் ஆண்களுக்கு விந்தணு வருவதைப் போல பெண்களுக்கும் ஏதோ ஒரு திரவம் வெளியேறுகிறது’ என்று மேற்கத்திய நிபுணர்கள் ஐம்பது ஆண்டு களுக்கு முன்புவரைகூட நம்பினர்.

ஆனால், செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சியை நடத்தியவர் களான மாஸ்டர்ஸும், ஜான்சனும் நடத்திய படுக்கை அறை ஆராய்ச்சிக்குப் பிறகுதான் இது தவறு என்பது புரிந்தது.

‘ஆண்களுக்கு இருப்பது போல பெண்களுக்கு சில சுரப்பிகள் இல்லை. இதனால் பெண்களுக்கு எதுவும் வெளியேறுவது இல்லை’ என்ற அவர்கள், இன்னொரு விஷயத் தையும் சொன்னார்கள். ‘செக்ஸ் உறவில் ஆண் களுக்கும், பெண்களுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. ஆண்களுக்கு விந்து வெளியேறிய பிறகு கண்டிப்பாக ஓய்வு வேண்டும். திரும்பவும் அடுத்த ரவுண்டை ஆரம்பத்திலிருந்து துவங்க வேண்டும். ஆனால், பெண்கள் அப்படி இல்லை. அவர்களுக்குத் திரவமாக எதுவும் வெளியேறுவது இல்லை என்பதால், ஒரே நிமிடத்தில்கூட திரும்பவும் இன்னொரு முறை உறவில் ஈடுபட்டு உச்சகட்டத்தை அடைய அவர்களால் முடியும். இதனால்தான் உறவு முடிந்ததும் விலக முயற் சிக்கும் ஆணை இறுக்கமாக அணைக்கிறாள் பெண்’ என்று அவர்கள் கண்டுபிடித்துச் சொன்னார்கள்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 8:39 am

இதையெல்லாம் பல நூற்றாண்டுக்கும் முன்பே கண்டுபிடித்துச் சொல்லியிருப்பது மட்டுமில்லை, காம சூத்திரத்தின் சிறப்பு. கணவனும் மனைவியும் இல்லற வாழ்க்கையில் இரண்டறக் கலக்க நல்வழிகளைச் சொல்லும் ஓர் ஆசானாகவும் அது இருக்கிறது.

செக்ஸ் உறவு முடிந்த அடுத்த ஓரிரு நிமிடங்களில் குறட்டைவிடும் பழக்கம் பல பேருக்கு உண்டு. ‘இந்தியர் கள் தங்கள் மனைவியைத் தூக்க மாத்திரையாகப் பயன் படுத்துகிறார்கள்’ என்று செக்ஸாலஜி நிபுணர்கள் கிண்டலடிப்பார்கள். வாத்ஸாயனர் ‘இது ரொம்பத் தப்பு’ என்கிறார். ‘செக்ஸ் முடிந்த பிறகு களைப்பில் மனைவிக்கு முதுகு காட்டித் திரும்பிப் படுக்கக் கூடாது. இரண்டு பேரும் அன்போடு கட்டிப்பிடித்து முத்தத்தை பரிமாறிக்கொள்ள வேண்டும். பரவசத்தைத் தூண்டும் வெறித்தனமான முத்தம் தேவையில்லை. ஒரு குழந்தையை முத்தமிடும் போது காட்டும் களங்கமற்ற அன்புதான் அதில் கலந்திருக்க வேண்டும்.

செக்ஸ் உறவின் சிகரத்தைத் தொட்டுவிட்டு ஓய்வெடுக்கும்போது மனம் அமைதியில் மூழ்கியிருக்கும். இதுபோன்ற அமைதி வேறெந்த சந்தர்ப்பத்திலும் கிடைக்காது. அந்த நேரத்தில் மனம்விட்டுப் பேச வேண்டும். இப்படி பேசுவதுதான் பரஸ்பரம் இருவர் மனதிலும் அன்பை ஊற்றெடுக்க வைக்கும். பாசப் பிணைப்பை அதிகமாக்கும்’ என்கிறார் அவர். நவீன செக்ஸ் சிகிச்சையில் ‘கணவன்&மனைவி சண்டையைத் தவிர்க்க’ இந்த விஷயத்தைதான் டாக்டர்கள் செய்யச் சொல்கிறார்கள். ‘செக்ஸில் ஆணுக்குக் கிடைக்கும் இன்பத்தைவிட பெண் ணின் திருப்திதான் மிகவும் முக்கியம்’ என்பது வாத்ஸாயனர் கட்சி. இதற்காக அவர் நேரடியான செக்ஸ் உறவுக்கு மாற்று ஏற்பாடாக இருக்கும் பல முறைகள் பற்றி விளக்க மாகச் சொல்கிறார். இதில் முக்கியமானது, இப்போது ‘வைப் ரேட்டர்கள்’ என்ற பெயரில் மார்க்கெட்டில் விற்கப்படும் செயற்கை ஆண் உறுப்பு.

வாத்ஸாயனர் காலத்தில் இதற்கு ‘அப திரவியம்’ என்று பெயர். தங்கம், வெள்ளி, யானைத் தந்தம், பித்தளை, மரம் என வெவ்வேறு பொருட்களில் செய்யப்பட்டு இவைக் கிடைத்தன. செக்ஸ் உறவில் பரவசம் அடைய முடியாத பெண்கள் இவற்றைப் பயன்படுத்தினர்

(நவீன கால வைப்ரேட்டர்கள் 1869&ம் ஆண்டு அறிமுக மானது. நம் மண்ணில் இவை ஆறாயிரம் ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருக்கின்றன. சிந்து சமவெளி நாகரிகத்தின் தொட்டிலான ஹரப்பாவில் புதைபொருள் ஆராய்ச்சி செய்தபோது கிடைத்த புராதன பொக்கிஷங்களில் செயற்கை ஆண் உறுப்புகளும் அடக்கம்!).

அவர் சொல்லும் இன்னொரு விஷயம், ‘வாய்வழி உறவு.’ வழக்கமான செக்ஸில் பிரச்னை இருந்து, உறவு சாத்தியமில்லாமல் போனால், இந்த முறையைக் கையாண்டு பார்க்கலாம்... (நிறைய பேர் ஜனன உறுப்புகள் சுத்தமில்லாதவை என நினைக்கிறார்கள்.

ஆனால், உண்மையில் வாய்தான் அசுத்தமானது. எந்த நேரத்திலும் குறைந்தது நாற்பதாயிரம் பாக்டீரியாக்கள் வாயில் இருக்கும். ஜனன உறுப்புகளை, குளிக்கும்போது சுத்தம் செய்தால் போதும்).

இதுபோன்ற பல விஷ யங்களை நாசூக்காக விவ ரிக்கும் வாத்ஸாயனர், ‘இவற்றைக் கண்டிப்பாக பின் பற்றுங்கள் என சொல்லமாட்டேன். தேசம், சூழ்நிலை, வாழ்கிற காலம் ஆகியவற்றை மனசில் வைத்துக்கொண்டு, இது நல்லதா, கெட்டதா என தீர்மானியுங்கள்’ என முடிவெடுக்கும் பொறுப்பை வாசகரிடம் கொடுத்து விடுகிறார்.
ஒப்பனைக் கலை பற்றியும் வாத்ஸாயனர் விவரிக்கிறார். ‘கணவன்&மனைவி உறவில் சந்தோஷம் நீடிக்க, ஒருவர் மீது இன்னொருவர் கொண்டிருக்கும் கவர்ச்சி நீடிக்க வேண்டும். எனவே அலங்கரித்துக்கொள்ள மறக்காதீர்கள்’ என்பது அவரது அட்வைஸ். இன்னமும்கூட நிறைய பேர் தப்பு செய்வது இந்த விஷயத்தில்தான்.
திருமணத்துக்கு முன்பு அவர்கள் வெளியில்தான் சந்தித்து இருப்பார்கள். வாரிச் சீவிய தலை கலையாமல், பவுடர் பூச்சு, சென்ட் வாசனை என சந்திப்பு நிகழும். ‘இதுதான் தங்கள் ஜோடி’ என்ற பிம்பம் அவர்களது மனதில் பதிந்துவிடும்.

ஆனால், திருமணம் நடந்த மறுநாளே கணவன் ஒரு அழுக்குக் கைலியோடும், கிழிந்த பனியனோடும் வீட்டில் நடமாட, மனைவி தலைசீவாமல் சும்மா சுருட் டிக் கொண்டை போட்டுக்கொண்டு, எண்ணெய் வடியும் முகத்தோடு இருப்பார். இருவருக்குமே இது எதிர்பார்க் காத கோலமாக இருக்கும். தங்கள் மனதில் இருக் கும் பிம்பத்தோடு இந்த நிஜம் ஒத்துப் போகாத உறுத் தல், ஒவ்வொரு நாளும் அதிகமாகும். இந்த ஏக்கத்தில் இருக்கும் கணவன், ரோட்டில் முழு மேக்கப்போடு போகும் வேறொரு பெண்ணைப் பார்ப்பான். ‘அந்தப் பெண் அவரது சொந்த வீட்டில் எந்த கோலத்தில் இருப்பாள்’ என யோசிக்க தோன்றாது. ‘நம் மனைவியைவிட இவள் அழகு’ என்ற நினைப்புதான் வரும். சமயத்தில் இதே மாதிரி மனைவிக்கும் தோன்றக் கூடும். கவர்ச்சி இல்லா விட்டால், ஈர்ப்பு இருக்காது. செக்ஸிலும் ஆர்வம் வராது. எப்போதும் ‘பளிச்’சென இருந் தால் பிரச்னை இல்லை.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 8:40 am

இவ்வளவு வாழ்க்கை ரகசியங்களையும் சொன்ன வாத் ஸாயனர், காமசூத்திரத்தைப் பெண்களும் படிக்க வேண்டும் என விரும்பினார். ‘குடும்பப் பொறுப்பில் இருப்பது போல செக்ஸிலும் பெண்களுக்கு சமபங்கு உண்டு. அவர்களும் இதைப் படித்துக் கற்றுக் கொண்டால்தான் எப்படிப் பழக வேண்டும், எது செய்யக் கூடாத விஷயம் என புரியும். ஒரே நிபந்தனை... அவர்கள் தங்கள் கணவரிடம் அனுமதி பெற்ற பிறகே இதைப் படிக்க வேண்டும்’ என்றார் அவர்.

ஏன் அனுமதி? இல்லாவிட் டால் மனைவியின் நடத்தை குறித்துக் கணவன் சந்தேகப் பட வாய்ப்பு உண்டு என கவலைப்படுகிறார் அவர்.

இந்திய கலாசாரத்தில் காலப்போக்கில் ஏற்பட்ட மாற் றங்கள்தான் காமசூத்திரத்தை மறக்கடித்து விட்டது.

ஒரு பரிணாம விபத்தில் மனித இனம் தோன்றியது. வந்தநாள் முதல் மனித இனம் தனது அறிவு வழிநடத்தும் பாதையில் பயணித்து, எல்லாவற்றிலும் மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்த மாற்றங்களுக்குக் கல்வியும், கலாசாரமும் அடிப்படையாக இருக்கின்றன.

கல்வியின் மூலம் கிடைக்கும் அறிவு எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் கலாசாரம்... அது ஒரேமாதிரியாக இருக்காமல் காலப்போக்கில் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறுவிதமாக மாறிக்கொண்டே இருக்கிறது. குழப்பம் இதனால்தான் வருகிறது. ஒரு இடத்தில் சரியாகப் படுகிற விஷயம், இன்னொரு இடத்தில் கிரிமினல் குற்றமாக கருதப்பட காரணம் இதுதான்! உதாரணமாக, காதலர்களின் தேசமான ஃபிரான்ஸில் பொது இடங்களில் முத்தமிடுவது குற்றமில்லை. சாலை ஓரங்களில், பூங்காக் களில், சுற்றுலாத் தலங்களில், ஓடும் ரயில்களில்... இப்படி அநேக பொது இடங் களில் காதலர்கள் இறுக அணைத்தபடி, உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிட்டுக் கிறக்கத்தில் மூழ்கி இருப்பார்கள். பார்க்கிறவர்கள் அதை கேஷுவலாக ரசித்தபடி போய் விடுவார்கள்.

நம்ம ஊரில் பிஸியான ரோடுகளில் ஆடு, மாடுகள் சாவ தானமாக நடந்து டிராஃபிக் ஜாம் செய்வது மாதிரி அங்கே இது சகஜமான விஷயம். அது அவர்களின் கலாசாரம்.

ஆனால், சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை கரீனா கபூர் ஒரு பார்ட்டியில் தன் பாய்ஃபிரெண்டுக்கு உதட்டில் முத்தம் கொடுத்தது படம் பிடிக்கப்பட்டு, இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘இது அநாகரிகம்’ என கலாசாரப் பாது காவலர்கள் கண்டித்தனர்.

ஃபிரெஞ்சுக் காதலர்கள் இந்தியா வந்து இப்படி பொது இடத்தில் முத்த மிட்டுக் கொண்டால், நியூசென்ஸ் கேஸில் அவர்களை போலீஸ் உள்ளே தள்ளிவிடும்.
இரண்டு நாடுகளிலும் இருப்பவர்கள் மனிதர்கள்தான்... அதே உதடுகள்தான்... அதே முத்தம்தான்! ஆனால், ஒரு கலாசாரம் இதை நாகரிகம் என்கிறது. இன்னொன்று குற்றம் என்கிறது.

இதில் எது தப்பு... எது சரி... இதை விவாதம் செய்வது புத்திசாலித்தனம் இல்லை. இருக்கும் சூழ்நிலைக்கு எதுசரி என புரிந்துகொண்டு நடப்பதுதான் கற்றக் கல்விக்கு அர்த்தம்.

கலாசாரம் என்பதற்கு டிக் ஷனரி ஒரு அர்த்தம் தருகிறது. ‘ஒரு குறிப்பிட்ட பகுதியில் பெருவாரியான மக் களால் கடைபிடிக்கப்படும் சடங்குகளும், நம்பிக்கைகளும், பழக்கங்களுமே கலாசாரம்’ என்பது அந்த அர்த்தம். இதற்கு மொழியோ, இனமோ தடைபோட முடியாது. ஆந்திரத்தின் சித்தூர் பகுதிக்குப் போனால் தமிழக மக்கள் மத்தியில் புழங்கும் எல்லா நடைமுறைகளும் அங்கேயும் இருக்கும். கன்னியாகுமரி மாவட்டத்துக்குப் போனால் கேரள மணம் வீசும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, கலாசாரத்தின் அடிப்படை விஷயங்கள் இரண்டு. ஸ்ருதி, ஸ்மிருதி என சமஸ்கிருதத்தில் இதை சொல் வார்கள். ஸ்ருதி என்பது அறிவு சார்ந்தது. மனித இனம் உருவாகி நீண்டகாலம் கழித்தே மொழிகள் தோன்றின. ஆனால் அதற்கு முன்பே வேட்டையாடக் கற்ற மனிதன், குழுக்களாக வாழும் முறையையும் உருவாக்கினான். குழுவுக்கென்று ஒரு தலைமை... அதற்கென சில கட்டுப்பாடுகள்... இப்படி சட்டங்கள் தோன்றின. இந்த சட்டங்களைத் தங்களுக்குள் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டுமே! அப்போது கூச்சல், முனகல், ஆரவாரம் என சத்தங்களால் மனிதன் பேசினான். காலப்போக்கில் அவை மொழிகள் ஆகின.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 8:40 am

ஒவ்வொரு பொருளையும் கண்களால் பார்த்து, தொட்டு, வாசனை பிடித்து, ருசித்து, ரசித்து அவற்றை வர்ணித்து நூல்களை உருவாக்கினர் நம் மூதாதையர்கள். அவை ஆரம்பத்தில் எழுத்து வடிவம் பெறவில்லை. மொழிகளுக்கு அப்போது பேச்சுவடிவம் மட்டுமே இருந்தது! செவிவழியாகவே இவை குருவிடமிருந்து சீடர் களுக்குத் தலைமுறை தலைமுறையாகப் பரவின. இதில் ஒலிக்குறிப்புகள் முக்கியமானவை. உச்சரிப்பில் சின்ன பிழை இருந்தாலும் அர்த் தம் மாறிவிடும் (இன்றைக்கும் ஒரிஸ்ஸாவில் பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களுக்கு யாராவது அடையாளம் தெரியாத சாமியார் போனால், அவ்வளவுதான்! அவரை மடக்கிக் கல்லால் அடித்து மேல்வரிசை முன்பற்கள் இரண்டை உடைத்துப் பிடுங்கி விடுவார்கள். மந்திரஜாலம் செய்து பிள்ளைகளைப் பிடிக்க வந்திருக்கும் சண்டாளர்களாக இவர்களைக் கருதுகிறார்கள் பழங்குடிகள். ‘முன்பற்கள் இல்லாவிட்டால் மந்திரங்களைத் தெளிவாக சொல்ல முடியாது... அர்த்தம் மாறிவிடுவதால் அவை பலிக்காமல் போய்விடும்’ என்பது அவர்கள் நம்பிக்கை!).

நூல்களே அறிவுப் பெட்டகங்களாகவும், சட்டங்களாகவும் ஆகின. இதைதான் ஸ்ருதி என்கிறார்கள்.

அறிவு அப்படியே இருந்தால்என்ன புண்ணியம்? அதைப் பயன்படுத்தி னால்தானே மனிதகுலம் அறியும்! இப்படி பயன்படுத்துவதையே ஸ்மிருதி என்கிறார்கள். அறிவு சார்ந்த ஸ்ருதி மாறுவதில்லை. ஆனால், ஸ்மிருதி எனப்படும் பயன்பாடு காலப்போக்கில் மாற்றங்களைச் சந்திக்கிறது. அணுசக்தியை ஆரம்பத்தில் கண்டு பிடித்தபோது மக்களுக்கு அதன் வீரியம் புரியவில்லை. அமெரிக்கா, ‘அணுகுண்டு போடுவேன்’ என மிரட்டியபோது ஜப்பான் மசியவில்லை. ஆனால், ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களை அணுகுண்டு நிர்மூலமாக்கிய பிறகு உலகத்துக்கே அதன் குணம் தெரிந்துவிட்டது. அழிக்கப் பயன்படுத்திய அதே அணுசக்தியில் இப்போது மின்சாரம் தயாரிக்கிறார்கள்.

அறிவின் பயன்பாடு இப்படி மாறுவதைத்தான் கலாசார மாறுதல் என்கிறோம். ஓர் இடத்தில் இருக்கும் பழக்கம் இன்னோர் இடத்தில் மாறுகிறது. ஒரே இடத்திலேயே ஐம்பது வருஷங்களுக்கு முன்பு இருந்த பழக்கம் இப்போது மாறிவிடுகிறது. முன்பு இருந்ததுதான் சரி, இப்போது இருக்கும் பழக்கம் தப்பு என நினைக்கக் கூடாது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால், எந்த ஒரு இனமும் இருந்த சுவடு தெரியாமல் அழிந்து விடும்.

முன்னோர்கள் சொன்ன பல விஷயங்கள் இப்போது நமக்கு முரண்பட்டதாகத் தெரியலாம். ‘நிதானமே பிரதானம்’ என ஒரு பழமொழி இருக்கிறது. ‘எந்த ஒரு விஷயத்தையும் ஆற அமர யோசித்து, அதன் விளைவுகளைப் புரிந்துகொண்டு செய்ய வேண்டும்’ என்பது இந்தப் பழமொழி உணர்த்தும் நீதி. அதேசமயம், ‘ஆறின கஞ்சி பழங்கஞ்சி’ என இன்னொரு பழமொழியும் உண்டு. ‘எதையும் சீக்கிரமாக செய். இல்லாவிட்டால், அது எதிர்பார்த்த மாதிரி நடக்காது’ என்று இதற்கு அர்த்தம் வருகிறது.
இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை. இப்படி குழப்பமாகப் பழமொழி சொன்னால் எதைப் பின்பற்றுவது? எந்த ஒரு விஷயத்தையும் சூழ்நிலையை அனுசரித்து செய்ய வேண்டும் என்பது பழமொழியின் பின்பக்கம் ஒளிந்திருக்கும் உண்மை.

இவ்வளவு பீடிகையும் எதற்காக என்றால், இனி நாம் பார்க்கப் போவது கொஞ்சம் நெருடலான சமாச்சாரங்கள். ‘செக்ஸ் விஷயத்தில் ஒவ்வொரு கலாசாரத்திலும் பழங்காலத்தில் என்னவிதமான நம்பிக்கை இருந்தது? அது காலப்போக்கில் எப்படி மாறியது?’ என்று பார்க்க, காலச்சக்கரத்தில் கொஞ்சம் பின்னோக்கிப் பயணம் செய்து, திரும்பவும் நிகழ்காலத்துக்கு வரப் போகிறோம். நிறைய விஷயங்கள் அதிர்ச்சிதரும். சமயத்தில் கொஞ்சம் அருவருப்பாகக்கூட தோன்றலாம். இதில் ‘ஒரு சமுதாயம் செய்ததுதான் சரியானது... மற்றவர்கள் தப்பு செய்தார்கள்’ என நான் சொல்லப் போவதில்லை. நடந்த வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப்பார்த்து, அதை அறிவியல் கண்ணாடியால் அலசுகிறோம். இது தேவையா என்றால், ஆமாம். செக்ஸ் விஷயத்தில் அறிவியல் சொல்லும் உண்மைகளைப் புரிந்து கொண்டாலே மனிதவாழ்க்கை சுகமாக அமையும்.

அந்த அதிர்ச்சிப் பக்கங்களுக்குள் நுழைவோம், வாருங்கள்...



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 9:26 am

சுய இன்பம்.’ இதற்கு பேச்சுவழக்கில் பயங்கரமான பல பெயர்கள் உண்டு. படிக்கிற வயசில் இளைஞர்கள், பெண்கள் பலருக்கு இந்தப் பழக்கம் சுயமாக வந்து விடுகிறது. மிக நீண்ட நெடிய வரலாறு இந்தப் பழக்கத்துக்கு உண்டு. எப்படி செக்ஸைப் பற்றி ஏராளமான கட்டுக்கதைகள் உள்ளனவோ, அதேபோல சுய இன்பம் பற்றியும் கதைகள் உண்டு.
எல்லோரும் நினைக்கிற மாதிரி சுய இன்பம் அனுபவிப்பது, தப்பான விஷயம் இல்லை. அது ஒரு நோயும் இல்லை. ஆனால், இதைச் சொன்னால் ஏற்றுக் கொள்கிறவர்கள் குறைவு.

சமீபத்தில் இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் சொல்லியிருந்தேன். இதைப் படித்துவிட்டு ஒரு இளைஞர் என் மருத்துவமனைக்கு வந்தார். ‘‘நீங்க சொன்ன விஷயம் ரொம்ப கரெக்ட் சார்! துணிச்சலா சொல்லி இருக்கீங்க’’ என்றார்.

எனக்கு இதைக் கேட்டதில் மகிழ்ச்சி. ‘பரவாயில்லை... நாம் சொன்னதை இவர் ஒருத்தராவது சரியா புரிஞ்சிகிட்டாரே’ என நான் நினைக்கும்போதே அவர் பேசினார். ‘‘டாக்டர்! நீங்க ஆபத்தில்லைனு சொன்னாலும் எனக்குப் பயமா இருக்கு. நான் அந்தப் பிரச்னைக்காகதான் சிகிச்சைக்கு வந்தேன். நானும் இதுக்கு அதிகமா அடிமையாயிட்டேன் டாக்டர்! ஏதாவது மருந்து, மாத்திரை கொடுத்து என்னைக் காப்பாத்துங்க!’’

நான் வெறுத்துப் போனேன். படித்த வர்கள் என்றில்லை... பல டாக்டர்களேகூட இதை ஒரு நோயாகக் கருதுவதுதான் சோகமான உண்மை.

பிறப்பு உறுப்பை வலுக்கட்டாயமாகத் தூண்டிவிட்டு இன்பம் பெற முயற்சிப்பதுதான் ‘சுய இன்பம்’ எனப்படுகிறது. இதில் பலருக்குக் கட்டாயம் விந்தணு வெளியேற வேண்டும் என்றில்லை... சும்மா சுகம் அனுபவிப்பதே போதும் என்று நினைப்பார்கள்.

ஆங்கிலத்தில் இதை மாஸ்டர் பேஷன் (masturbation) என்று சொல்கிறார்கள். ‘இது இயற்கைக்கு முரணான செக்ஸ் பழக்கம்’ என முதலில் பிரகடனம் செய்தது மதத்தலைவர்கள். காரணம்... இந்த செயலால் சந்ததி உருவாக வாய்ப்பில்லை என்பது மட்டும்தான்!

சுய இன்பத்துக்கு ‘ஓனானிஸம்’ என இன்னொரு பெயரும் உண்டு. இப்படி பெயர்வரக் காரணம் ஓனான் என்ற யூத மன்னன். ஓனானின் அண்ணன் எர் என்பவர்தான் முதலில் நாட்டை ஆண்டு வந்தார். அவர் அகால மரணமடைந்து விட, ஓனான் முடிசூட்டிக் கொண்டான். அந்தக்கால மரபுப்படி இறந்த மன்னனின் மனைவியுடன் புதிய மன்னர் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இந்த உறவின் மூலம் மகாராணிக்குப் பிறக்கும் குழந்தை புதிய மன்னரின் வாரிசாகக் கருதப்படாது. இறந்த மன்னரின் கணக்கில்தான் வரவு வைக்கப்படும். ஓனான் தனது அழகான அண்ணி தமருடன் மரபுப்படி உறவு கொண்டான். ஆனால் ‘இந்த உறவின் மூலம் குழந்தை பிறந்து, அது அண்ணனின் வாரிசாக நாட்டை ஆள்வதா?’ என்ற கேள்வி அவனுக்குள் எழ, வித்தி யாசமான ஒரு உத்தியைக் கடைப்பிடித்தான். உறவின் கடைசித் தருணத்தில் விந்தை தரையில் விட்டுவிடுவான். இப்படியே அவன் தொடர்ந்து செய்ய, இந்தப் ‘பாவத்துக்கு’ தண்டனையாக கடவுள் அவனைக் கொன்றதாக பைபிள் சொல்கிறது. இதற்கும் சுய இன்பத்துக்கும் நேரடித் தொடர்பு இல்லை. ஆனால், ‘கருவுறுதலில் முடியாத உறவு ஓனானிஸம்’ என கருதப்பட்டு எல்லாப் பழக் கங்களுக்கும் அந்தப் பெயரையே வைத்து விட்டார்கள்.

பாவமாகவும், இயற்கைக்கு முரணான பழக்கமாகவும் கருதப்படும் சுய இன்பத்தை எத்தனை பேர் அனுபவிக்கிறார்கள்? கடந்த ஐம்பது ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பல செக்ஸ் சர்வேக்கள் அதிர்ச்சிதரும் உண்மைகளை அம்பலப்படுத்தின (பிரபல செக்ஸ் ஆராய்ச்சியாளர் கின்ஸி அமெரிக்காவில் எடுத்த சர்வேபடி, ‘ஆண்களில் 92 சதவிகிதம் பேரும், பெண்களில் 52 சதவிகிதம் பேரும் சுய இன்பத்தை அனுபவிக்கிறார்கள்’ என்பதை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்). ஷியரி ஹைட் என்ற பெண் உளவியல் நிபுணர், 76ம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு சர்வே எடுத் தார். ‘பெண்களில் 82 சதவிகிதம் பேர் சுய இன்பம் அனுபவிக்கிறார்கள்’ என்பது அவரது சர்வே முடிவு. 81ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்று, ‘ஆண்களில் 99 சதவிகிதம் பேர் சுய இன்பம் அனுப விக்கிறார்கள்’ என்று தெரிவித்தது.

நம் நாட்டிலும் நிலைமை கிட்டத்தட்ட இதுதான்! இப்படி உலகம் முழுக்க பெரும்பான்மை சதவிகிதத்தினர் அனுபவிக்கும் ஒரு பழக்கம்தான் ‘இயற்கைக்கு விரோதமானது’ என முத்திரை குத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் வரலாற்றைப் பார்த்தால், வெவ்வேறு காலகட்ட மக்களிடையே இந்தப் பழக்கம் இயல்பான ஒரு கலாசார வெளிப்பாடாக இருந்து உள்ளது புரியும். பழங்கால எகிப்து மக்களின் முதற்கடவுள் ஆடம். சுயம்புவாக உருவான கடவுள் இவர். இந்த உலகில் முதலில் தோன்றியவர் இவர்தான் என்பது எகிப்தியர்களின் நம்பிக்கை. ‘இந்த உலகமே உயிரினங்கள் எதுவும் இல்லாமல் வெற்றிடமாக அப்போது இருந்தது. அன்னு என்ற நகரில் நின்றுகொண்டு இவர் சுய இன்பம் அனுபவிக்க, அவரது உறுப்பிலிருந்து வெளியான விந்தணு உலகம் முழுக்க பரவியது. இதிலிருந்து முதலில் ஷ§ மற்றும் டெஃப்நட் ஆகிய கடவுளர்கள் தோன்றினர். அப்புறம் அவர்கள் எல்லா உயிரினங்களையும் படைத்தனர்’ என்கின்றன எகிப்திய புராணங்கள்.

‘ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் பழங்காலத்தில் சுய இன்பம் அனுபவித்தனர்’ என்கிறது, கிரேக்க சமூகவியல் வரலாறு. ‘ஒலிஸ்பாஸ்’ என்ற பெயரில் செயற்கை ஆண் உறுப்பு இதற்காகக் கடைகளில் விற்றது. திருமணம் மூலமாக செக்ஸ் இன்பம் பெற வாய்ப்பில்லாத நகரத்துப் பெண்கள் இதை வாங்கி சுய இன்பம் அனுபவிக்கப் பயன்படுத்தினர்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 9:27 am

நாகரிகம் அடைந்த மக்கள் என்றில்லை... பழங்குடியினரிடம்கூட இந்தப் பழக்கம் இருந்தது. உதாரணமாக தென் ஆப்பிரிக்காவில் வாழும் ஜூலு இன மக்கள். சிறுவர், சிறுமி களுக்கு வேட்டை மற்றும் போர்பயிற்சி தரும் போது கூடவே சுய இன்பம் செய்வது எப்படி என்றும் அப்பாஅம்மாவே கற்றுத் தருவார்கள். ‘பெரியவர்களாகித் திருமணம் நடந்ததும் இந்தப் பழக் கத்தை மறந்துவிட வேண்டும்’ என கண்டிப்போடு அட்வைஸ் செய்வார்கள்.

மருத்துவரீதியாக இதுபற்றி தவறான நம்பிக்கையை விதைத்தவர், நவீன மருத்துவ முறையின் தந்தை என புகழப்படும் ஹிப்போகிரேடஸ். அவரது காலத்தில் விந்தணு முதுகுத் தண்டில் சுரப்பதாக மருத்துவர்கள் நம்பிவந்தார்கள். ‘‘தொடர்ந்து ஒரு நபர் சுய இன்பத்தில் ஈடுபட்டு தனது செக்ஸ் திரவத்தை வீணாக்கி வந்தால், அவருக்கு முதுகெலும்பில் இருக்கும் திரவம் தீர்ந்து போய்விடும். அப்புறம் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு அவரது மனநிலை பாதிக்கப்படும்’’ என்றார் அவர். ‘சுய இன்பம் பாவம்’ என்ற மத நம்பிக்கை, ‘இது உடல்நலத்துக்கு கேடு’ என்ற மருத்துவ நம்பிக்கையாக மாறியது அப்போதுதான்!

அதன்பிறகு வந்த டாக்டர்கள் இதே ரூட்டில் தங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு இஷ்டத்துக்கு கதைவிட்டனர். 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுவிட் சர்லாந்து டாக்டர் டிஸ்ஸாட் என்பவர் சுய இன்பத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு என்னென்ன நோய்கள் வரும் என பெரிய பட்டியலே போட்டார். ‘ஆண்கள் இதில் ஈடுபட்டால் நரம்புத் தளர்ச்சி வந்து பைத்தியம் பிடிக்கும். காக்காவலிப்பு வரும். முகத்தில் பரு வரும். மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். கண்கள் உள்ளே போய்விடும். கண்களுக்குக் கீழே கருவளையம் விழும். கன்னங்கள் ஒடுங்கி நாக்கு வெளியில் தள்ளிவிடும். பெண்களுக்கு இதைவிட பயங்கரமான விளைவுகள் ஏற்படும்... தலைமுடி கொட்டி வழுக்கை விழும். மாதவிலக்கின் போது வலி கடுமையாக இருக்கும். குழந்தை பிறக்கும்போதும் பயங்கர வலி இருக்கும். குழந்தை செத்துப் பிறக்கும். கடும் வயிற்றுவலி ஏற்பட்டு கர்ப்பப்பை, பெண்குறி வழியாக வெளியில் வந்துவிடும்.’

இப்படி ஹோட்டல் மெனு கார்டு ரேஞ்சுக்கு இவர் பட்டியல் போட, மற்ற டாக்டர்கள் இதைவிட ஒருபடி மேலே சொல்ல வேண்டிய நிலை வந்தது.
இப்படி கற்பனையான விளைவுகளைச் சொல்லி, ‘சுய இன்பத்தைக் குணப்படுத்த’ இவர்கள் தந்த சிகிச்சைகள் பயங்கரமானவை.

சுய இன்பம் அனுபவித்தால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி டாக்டர்கள் வெளியிடும் பட்டியல் நீண்டுகொண்டே போக, பெற்றோர் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது. பலரும் ரகசியமாகத் தங்கள் பிள்ளைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தனர். இது நோய் என்று அறிவித்த பிறகு, இதற் கான சிகிச்சை என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும் அல்லவா? டாக்டர்கள் அதற்கான முயற்சியில் இறங்கினர்.

டாக்டர்கள் முதலில் குறிவைத்தது, உணவுப் பழக்கத்தை! அமெரிக்காவில் பிரபலமாக இருந்த டாக்டர் கார்கன் ‘நியூயார்க் மெடிக் கல் டைம்ஸ்’ பத்திரிகையில், 1896ல் ஒரு கட்டுரை எழுதினார். ‘‘திருமணம் ஆகாத இளைஞர்களும், பெண்களும் இரவு நேர சாப்பாட்டில் பாலாடை, முட்டை, உப்பு, மிளகு, மீன், சர்க்கரை, வெங்காயம், வாசனைத் திரவியங்கள்

ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். மது, காபி அருந்தக் கூடாது. இவை எல்லாம் நரம்புகளைத் தூண்டிவிட்டு செக்ஸ் உணர்வை ஏற்படுத்துகின்றன’’ என்றார் அவர். சில்வஸ்டர் கிரஹாம் என்ற மதபோதகர் செக்ஸ் உணர்வைக் கட்டுப்படுத்த,சைவ உணவை சாப்பிடச் சொன்னார். பாலீஷ்செய்யப்படாத கோதுமையை அரைத்து, அந்த மாவைசிறுசிறு வில்லைகள் போல் ஆக்கி, ‘கிரஹாம் கிராக்கர்ஸ்’ என்ற உணவை ஸ்பெஷலாக அவர் உருவாக்கினார். கிட்டத்தட்ட தவிடு மாதிரி இருக்கும். செக்ஸைக் குறைக்க இதை சாப்பிடச் சொன்னார் அவர். உப்பு, இனிப்பு எதுவும் இல்லாமல் இதை சாப்பிடுவதே ஒரு தண்டனை மாதிரி இருந்தது. போனால் போகிறது என்று, ‘கொஞ்சம் தேன் கலந்து சாப்பிடுங்கள்’ என விதிவிலக்கு அளித்தார். இன்னொரு பக்கம் சில டாக்டர்கள் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கினர். ‘என் பையன் தப்பு பண்றான்’ என கவலையோடு ஓர் இளைஞனை யாராவது டாக்டரிடம் கூட்டி வந்தால் போச்சு. அவன் மீது எல்லா பரிசோதனைகளையும் நடத்தி முடித்து விடுவார்கள். இதில் முதல்படி, குளியலில் ஆரம்பிக்கும். கொட்டும் பனியில், நடுக்கும் குளிரில், பச்சைத் தண்ணீரில் குளித்துவிட்டுப் பையனைத் தூங்கச் சொல்வார்கள். உடம்பே விறைத்துக்கொள்ள பையன் நடுநடுங்கி விடுவான். காமத்தீயை இந்தக் குளிர்ந்த நீர் அடக்கிவிடும் என நினைத்தார்கள்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 9:27 am

இதற்கும் அடங்காத பையனாக இருந்தால், அவன் நிலைமை பாவம். தடிமனான ஒரு போர்வையைத் தண்ணீரில் நனைத்து ஈரம் சொட்டச்சொட்ட அதை போர்த்திக்கொண்டு தூங்கச் சொல்வார்கள். ஏதோ ஃபிரிஜுக்குள் நுழைந்துவிட்டது மாதிரி உணர்வு வர, தூக்கம் எங்கே வரும்?

இன்னும் சில டாக்டர்கள் ஏதாவது கஷ்டமான உடற்பயிற்சியை சொல்லிக் கொடுத்து, ‘‘தூங்கறதுக்கு முன்னாடி இதை ஆயிரம் தடவை செய்துடு கண்ணா’’ என்று அனுப்பி வைப்பார்கள். அப்பா கண் காணிக்க, அவர் முன்னால் ஆயிரம் தடவை இதை செய்து முடித்ததும் கண்ணைச் சுழற்றிக்கொண்டு தூக்கம் வந்துவிடும். நடுவில் விழிப்பே வராது. அப்புறம் சுய இன்பத்துக்கு ஏது நேரம்?

வேறொரு சிகிச்சை... இரவு நேரத்தில் பையனை கைகளைப் பக்கவாட்டில் வைத்துக் கட்டிப்போட்டுத் தூங்க வைப்பது. கைகள் கட்டப்பட்டிருக்க, பையனின் ஜட்டிக்குள் ஒரு தடிமனான நூல் கட்டப்பட்டு, அதன் இன்னொரு முனை அப்பாவின் அறைக்கு செல்லும். அந்த முனையில் மணி கட்டித் தொங்கவிடப்பட்டு இருக்கும். பையன் ஏதாவது தப்பு செய்ய முயன்றால்,

அப்பாவின் அறையில் மணி அடிக்கும். பையன் மாட்டிக் கொள்வான். சிலர் இதையே மின்சார இணைப்பு கொடுத்து, அலாரம் இணைத்து வைத்தி ருந்தார்கள்.
இதைவிட கொடூரமான இன்னொரு சிகிச்சை இருந் தது. எலிப்பொறி மாதிரி கூரான பற்களோடு ஒரு வளையம் இருக்கும். இதை ஆணுறுப்பின் மீது மாட்டி, இடுப்போடு இணைத்து ஒரு பூட்டுப் போட்டுப் பூட்டி விடுவார்கள். சாவி அப்பா கையில் இருக்கும். பரவசமான செக்ஸ் உணர்வு கிளர்ந்தால், இந்தக் கூரான பற்கள் குத்திக் காயப்படுத்திவிடும். அதனால் பையன் அடங்கி இருப்பான்.

அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் வில்லியம் ஆக்டன் என்ற டாக்டர் இருந்தார். இவர் ‘சுய இன்பத்தை’ தடுக்கும் அறுவை சிகிச்சைகளில் புகழ் பெற்றவர். ஆணுறுப்பின் மேற்புறத் தோலுக்குள் ஆபரேஷன் மூலம் மெல்லிய வெள்ளிக் கம்பியை நுழைத்து விடுவார் இவர். சுய இன்பம் அனுபவிக்கும் நோக்கத்தில் பையன் தொட்டால், வலி உயிர் போகும். இந்த வலிக்குப் பயந்து பையன்கள் கையைக் கட்டிக் கொண்டு அடங்கி இருந்தார்கள்.

இளம்பெண்களும் கூட டாக்டர்களிடம் மாட்டிக் கொண்டு அவதிப்பட்டார்கள். இதில் பயங்கரமானது ‘கற்பு வளையம்’ எனப் படும் ஒரு பெல்ட். இரும்பில் செய்யபட்ட இந்த பெல்ட், ஒரு ஜட்டி மாதிரி இருக்கும். பெற்றோர்கள் பெண்ணுக்கு இதை மாட்டி விடுவார்கள். இடுப்புப் பக்கம் இருக்கும் வளையத்தை இறுக்கிப் பூட்டி விட்டால் அவிழ்க்க முடியாது. இயற்கை உபாதைக்காக சின்னதாக ஒரே ஒரு துவாரம் மட்டும் இருக்கும்.

இதுதவிர கொடூரங்கள் நீண்டன... பெண்ணுறுப்பில் சூடுவைத்துக் காய மாக்கி விடுவார்கள். காயமான இடத்தில் கைவைத்தால் வலிக்கும் என்பதால், பெண்கள் தொடமாட்டார்கள் என நினைத்தார்கள். இன்னும் சிலர் தையலே போட்டு பெண்ணுறுப்பை முக்கால்வாசி மூடினார்கள்.

1856ல் தொடங்கி 1932 வரை இந்த மாதிரி சுய இன்பத்தை தடுக்கும் கருவிகள் முப்பத்துமூன்றுக்கு அமெரிக்கக் காப்புரிமை அலுவலகம் உரிமை கொடுத்திருந்தது! இதுதவிரவும், இன்னும் பல மாடல் கருவிகள் மார்க் கெட்டில் விற்றன.

சிகிச்சை என்ற பெயரில் டாக்டர்கள் மேற்கொண்ட கொடூரங்களுக்குப் பயந்தே பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். இயல்பான ஒரு பழக்கத்தை நோய் என அடையாளம் காட்டி, ஆயிரக்கணக்கானவர்களை சாகடித்தது, வரலாற்றில் வேறு எப்போதும் நடக்காத கொடுமை.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் மருத்துவ உலகம் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. ஆராய்ந்து சொல்லப்படும் உண்மைகளை மட்டுமே நம்ப ஆரம்பித்தது. மருத்துவப் புத்தகங் களில் ‘சுய இன்பம் தப்பான விஷயம்... பயங்கரமான நோய்’ என்று இருந்த பாடத்தை, 1940ம் ஆண்டு நீக்கினர். அமெரிக்க அரசு வெளியிடும் ‘குழந்தைகள் பராமரிப்பு கையேட்டில்’ 1951ம் ஆண்டு புதிதாக ஒரு அறிவுரையைச் சேர்த்தனர். ‘பிள்ளைகள் சுய இன்பம் அனுபவித்தால் அதைத் தடுக்காதீர்கள்’ என்பதுதான் அந்தப் புதிய அட்வைஸ். 1972ம் ஆண்டு அமெரிக்க டாக்டர்கள் சங்கம், ‘சுய இன்பம் இயல்பான ஒரு பழக்கம்தான்’ என அறிவித்தது.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 9:28 am

இந்தியாவைப் பொறுத்தவரை சுய இன்பம் தப்பு என்றோ, சரி என்றோ மருத்துவ நூல்கள் சொல்லவில்லை. ஆயுர்வேத நூலான சரக சம்ஹிதையில், ‘இச்சைகளை அடக்கக் கூடாது’ என்று இருக்கிறது. பழங் கால சிற்பங்களில்கூட சுய இன்பம் அனுபவிப்பது மாதிரி காட்சிகளைப் பார்க்கமுடியும். இந்தப் பழக்கத்துக்கு ‘பாநி மந்தன்’ என பெயர் வைத் திருக்கும் வாத்ஸாயனர், வயதான காலத்தில் செக்ஸ் அனுபவிக்கும் ஆசை உள்ளவர்களுக்கு இதைத் ஒரு தீர்வாக சொல்கிறார்.

நவீன கால செக்ஸ் சிகிச்சையிலும்கூட, சுய இன்பம் ஒரு சிகிச்சை முறையாக இருக்கிறது. நோய் என்று கருதப்பட்ட ஒரு பழக்கம், இப்போது மருந்தாக மாறி இருப்பதற்குக் காரணம் அறிவியல்தான்.

ஆனாலும் சில நம்பிக்கைகளை மாற்றுவது கஷ்டம். இரண்டாயிரம் ஆண்டுகளாக இருக்கும் ஒரு நம்பிக்கையை ஐம்பது ஆண்டுகளில் மாற்றி விட முடியாது. ‘சுய இன்பம் தப்பில்லை’ என மக்கள் உணர்ந்து கொள்ள கொஞ்சம் காலம் பிடிக்கும்.

சுய இன்பம் அனுபவிப்பதைவிட, இது தப்பு என மனதில் தோன்றும் குற்ற உணர்வுதான் ஒருவரை மனநோயாளி ஆக்கும் அளவு ஆபத் தானது. விந்தணுவை ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே கொடுக்க, கடவுள் ரேஷன் ஆபீஸர் இல்லை. மனிதன் ஆரோக்கியமாக இருந்தால், அவன் சாகிற வரை இது சுரந்து கொண்டே இருக்கும். ஞாயிறு விடுமுறை எல்லாம் கிடையாது. அதனால் சுய இன் பத்தில் இது வீணாகி விட்டது என நினைக்க முடியாது.

ஆனால், மனதில் குற்ற உணர்வைக் கிளப்பி விட்டுக் காசு பார்க்க ஏகப்பட்ட போலி டாக்டர்கள் கிளம்பிவிட்டார்கள். ‘சுய இன்பம் அனுபவிப்பவர்களுக்கு ஆணுறுப்பு சிறியதாகிவிடும்’ என்பது உட்பட பல வதந்திகளைக் கிளப்பிவிட்டு இவர்கள் பணம் பறிக்கிறார்கள். இவர்கள் கிளப்பும் பீதியை வேதவாக்காக பலர் நம்பு கிறார்கள். சிகிச்சை செய்து கொள்ளும் வசதி இல்லையே என ஏங்கித் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்தக் குற்ற உணர்வு வரக்கூடாது என்பதற்காகவே இவ்வளவு விவரமாக சொல்கிறேன். மனிதர்கள் மட்டுமில்லை... குரங்கு, முள்ளம்பன்றி, யானை, பூனை, நாய் என பல விலங்குகளுக்கு இந்தப் பழக்கம் உண்டு.

திருமணத்துக்கு முன்பு இந்தப் பழக்கத்தைத் தவிர்க்க விரும்புகிறவர்கள், தனிமையில் இருக்கும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு தியானம், தோட்ட வேலை, பகுதி நேர வேலை என வேறு எதிலாவது மனதை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது. திருமணத்துக்குப் பிறகு இது சரியாகிவிடும். அப்படி சரியாகாவிட்டால், அதற்குதான் சிகிச்சை அவசியம். ஒவ்வொரு வயதிலும் ஒரு பழக்கத்தை கடந்து வருவது மனித இயல்பு. அப்படி ஒரு இயல்புதான் இது. ‘இளமையில் சுய இன்பம் அனுபவித்தது இல்லை’ என சொல்கிற ஆசாமிகளில் பலர்தான் செக்ஸ் பிரச்னை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

கன்னித்தன்மை, கற்பு... இந்த இரண்டு வார்த்தை களுக்கும் பழங்காலத்தில் அர்த்தமே வேறு. காலப் போக்கில்தான் ஒவ்வொரு சமூகமும் இந்த வார்த்தை களுக்கு கலாசார முகமூடி அணிவித்து, ஏராளமான பெண்களை இரக்கமில்லாமல் கொன்று போட்டிருக்கிறது. எந்த தப்பும் செய்யாத பெண்களைக்கூட ‘சோரம் போனவர்களாக’ முத்திரை குத்தி, உறவினர்களை விட்டே கல்லால் அடித்து சாகடித்த ரத்த வரலாறு பல நாடுகளுக்குச் சொந்தம்.

‘‘ஒரு பெண் செக்ஸ் உறவை ஒருமுறைகூட அனுபவித்தது இல்லை என்றால், அவரது பிறப்பு உறுப்பின் பாதுகாப்பு கவசமான ‘கன்னித்திரை’ கிழியாமல் இருக்கும். இப்படி கன்னித் திரை கிழியாமல் இருப்பவரே கன்னி’’ இதுதான் கன்னித் தன்மைக்கு இப்போது அர்த்தமாக சொல்லப்படுகிறது.

ஆனால், பழங்காலத்தில் எந்த ஓர் ஆணுடனும் திருமண உறவின் மூலமோ அல்லது வேறு வகையிலோ இணைந்து இல்லாமல் சுதந்திரமாக இருக்கும் ஒரு பெண்தான் கன்னி எனப்பட்டாள். உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் இதுதான் அர்த்தம்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 9:28 am

கன்னி என்பதற்கு ஆங்கிலத்தில் ‘வர்ஜின்’ (Vergin) என்று பெயர். கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில் புழக்கத் தில் இருக்கும் ‘வர்கோ’ என்ற வார்த்தையிலிருந்து ‘வர்ஜின்’ வந்தது. ‘யாரோடும் சேர்ந்திருக்காமல் தன் சொந்தக்காலில் நிற்கும் சக்திவாய்ந்த பெண்’ என்பது தான் இந்த வார்த்தையின் அர்த்தம்.

ஆர்டெமிஸ், ஹெஸ்டியா ஆகிய இரண்டு கிரேக்கப் பெண் தெய்வங்கள் ‘வர்ஜின்’களாகக் கருதப்பட்டன. ஆர்டெமிஸ் வேட்டைக்கான தெய்வம். ஹெஸ்டியா உடல் நலத்தைக் காக்கும் தெய்வம். கொடிய மிருகங்களை வேட்டையாடவும், பயங்கர நோய்களிலிருந்து மக்களைக் காக்கவும் சக்தி தேவை. அந்த சக்தி இரண்டு பெண் தெய்வங் களிடமும் இருந்தது. அது மட்டுமில்லை... கிரேக்க ஆண் தெய்வங்களில் பலர் முரட்டுத்தனமானவர்கள்.ஒரே ஆண் தெய்வம், பல பெண் தெய்வங்களை ஏமாற்றியோ மிரட்டியோ செக்ஸ் வைத்துக்கொண்டு, பிறகு மனைவியாக்கிக் கொண்டதாகப் புராணங்களில் இருக்கிறது. இத்தனை முரட்டு தெய்வங்களையும் சமாளித்து ஆர்டெமிஸ§ம், ஹெஸ்டியாவும் தனியாக இருந்தனர். இந்த சக்தியும், சுயேச்சையான தன்மையும்தான் ‘வர்ஜின்’ என்பதன் அடையாளம்.

காலப்போக்கில் மத நம்பிக்கைகள் ‘வர்ஜின்’ என்பதைக் கன்னித் தன்மையின் அடையாளமாக மாற்றிவிட்டன. ‘ஒரு பெண்ணுக்குக் கடவுள்தான் கன்னித் தன்மையை பரிசாகக் கொடுக்கிறார். அது ஒரு வகை வேலி. அந்தப் பரிசை அவள் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். திருமண உறவின் மூலம் அவளை அடையும் கணவன் மட்டுமே அந்த வேலியைத் தாண்டும் உரிமை உள்ளவன்’ என மத நூல்கள் வரையறுத்தன.

‘ஒரு பெண் முதல் தடவையாக செக்ஸ் உறவில் ஈடுபடும்போது லேசான ரத்தக் கசிவு இருக்கும். இதற்குக் காரணம், அந்த உறுப்பின் மேலுறை மாதிரி இருக்கும் மெல்லிய ஒரு கவசம் கிழிவதுதான்’ என்பது அந்தக்கால மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

அதற்கு பிறகுதான் கட்டுப்பாடு வந்தது. ‘திருமணத் துக்கு முன் பெண்கள் செக்ஸ் உறவில் ஈடுபடக் கூடாது. கணவனு டன் இணைந்து முதலிரவில்தான் அவள் முதல்முறையாக செக்ஸை அனுப விக்க வேண்டும். அப்போதுதான் அவளது பிறப்பு உறுப்பின் கவசம் கிழிய வேண்டும்’ எனக் கட்டுப் பாடு கொண்டு வந்தார்கள்.
அந்த கவசம்தான் கன்னித்திரை! இதற்கு ஆங்கிலத்தில் ‘ஹைமென்’ (Hemen) என்று பெயர். கிரேக்கர்களின் திருமணக் கடவுளான ‘ஹைமெனியஸ்’ பெயரிலிருந்து தான் இந்த வார்த்தை வந்தது. ஒரு கையில் தீப்பந்தமும், இன்னொரு கையில் பூமாலையும் ஏந்தியிருக்கும் ஹைமெனியஸ்தான் ஓர் ஆணை யும், பெண்ணையும் திருமண பந்தத்தில் இணைத்து வைப்பதாக கிரேக்கர்கள் நம்பினார்கள். திருமண உறவின் மூலம் கிழிய வேண்டிய திரை என்பதால், திரு மணக் கடவுளின் பெயரிலிருந்து ‘ஹைமென்’ என்று இதற்கு நாம கரணம் ஆனது.

இப்படி கன்னித்திரை கிழிவ தும், அதன்மூலம் ரத்தக் கசிவை ஏற்படுத்துவதும்தான் முதலிரவில் நிகழவேண்டிய முக்கியமான சடங்கு என பல நாடுகளில் வழக்கமாகிவிட் டது. பழங்குடிகள், நாகரிகம் அடைந்தவர்கள் என எந்த சமூகமும் இதற்கு விதிவிலக்கு இல்லை.

பழங்கால கிரீஸில் திருமணம் முடிந்த தும் பெண் வீட்டில்தான் முதலிரவு நடக்கும். முதலிரவுக்காகக் கட்டிலை அலங்கரிக்கும் போது தூய வெள்ளை நிறத்தில் படுக்கை விரிப்பை அதில் போடுவார்கள். மறுநாள் காலை பெண்ணின் அம்மாவும், மணமக னின் அம்மாவும் ஒன்றாகச் சேர்ந்து அந்த அறைக்குள் போவார்கள். பெண்ணின் கன்னித்திரை கிழிந்து, அந்த ரத்தக்கறை படிந்த படுக்கை விரிப்பை பத்திரமாக எடுத்து வருவார்கள். அதை ஏதோ காட்சிப் பொருள் மாதிரி வீட்டுப் பால்கனியில் அல்லது ஜன்னலில் கட்டித் தொங்க விடுவார்கள். ரோட்டில் போகிற வருகிற எல்லோரது பார்வையிலும் அது படும். ‘நாங்கள் எங்கள் பெண்ணைப் பரிசுத்தமாக வளர்த்து கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறோம்’ என அந்தக் குடும்பம் பெருமைப்பட்டுக் கொள்ள இது ஒரு வாய்ப்பு. எந்த வீட்டில் கல்யாணம் நடந்தாலும், ‘கறைபடிந்த படுக்கை விரிப்பு பால்கனியில் தொங்குகிறதா’ என்று மறுநாள் ஊர்க்காரர்கள் எல்லோரும் வந்து பார்ப்பது பழக்கமாக இருந்தது.

ஊர்க்காரர்கள் என்றில்லை... பெண்ணின் உறவினர்கள், மாப்பிள்ளையின் உறவினர்கள் என எல்லோரும் திருமணத்துக்கு மறுநாள் அந்த வீட்டுக்கு வருவார்கள். எல்லோருக்கும் விருந்து சாப்பாடு உண்டு. படுக்கை விரிப்பில் கறை படிந்திருப்பதை உறுதிசெய்து கொண்டு, விருந்தையும் சாப்பிட்ட பிறகு சந்தோஷமாக அவர்கள் கிளம்பிப் போவார்கள்.

இப்படி எல்லோரும் பார்த்து முடித்த பிறகு அந்த படுக்கை விரிப்பு பெண்ணின் சகோதரர் கையில் ஒப்படைக் கப்படும். அவர் அதை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். பின்னால் என்றைக்காவது சண்டை வந்தால், பஞ்சாயத்தில் அதை அவர் ஒரு ஆவணமாக ஒப்படைக்க வேண்டும். ஒரு பரிசுத்தமான கன்னிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவர் வாழ்நாள் முழுவதும் அவளை விவாகரத்து செய்வது சிரமம்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 9:29 am

ஒருவேளை ரத்தக்கறை இல்லை என்றால்... திருமண உறவை முறித்துக் கொள்ளும் உரிமை மணமகனின் வீட்டாருக்கு உண்டு. அது மட்டுமில்லை... அந்தப் பெண்ணின் குடும்பத்தை ஊரை விட்டே ஒதுக்கி வைப்பார்கள்.

இந்த பழக்கம் அப்படியே ரஷ்யா, எகிப்து, ஆப்பிரிக்கா, அரபு நாடுகள் என பல பகுதிகளுக்கும் பரவியது. ஒவ்வொரு இடத்திலும் புதுப்புது விஷயங்கள் சேர்க்கப் பட்டன.

அல்ஜீரியாவில் முதலிரவின்போது படுக்கை விரிப்பில் கறை படியவில்லை என்றால், பெண்ணை அவளது அப்பாவும், சகோதரர்களும் சேர்ந்து கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்.

அமெரிக்காவில் செவ்விந்திய இனத்தைச் சேர்ந்த அகோமாவி பழங்குடிகள் மத்தியில் ஒரு சம்பிரதாயம் இருக்கிறது. ஊரில் திருவிழா நடக்கும்போது கல்யாண வயசில் இருக்கும் பெண்களை அழைத்து நடனம் ஆடச் சொல்வார்கள். நடனம் ரொம்ப நேரத்துக்கு நீடிக்கும். யாராவது ஒரு பெண் களைப்பில் விழுந்து விட்டால் போச்சு... ‘அவள் கல்யாணத் துக்கு முன்பே ஏதோ தப்பு செய்து விட்டாள். அதனால்தான் கன்னிப் பெண்களுக்கான நடனத்தை அவளால் நீண்டநேரம் ஆட முடியவில்லை’ என தீர்மானித்து அவளுக்கு நூறு கசையடி கொடுப்பார்கள். அடிக்கும், பழிச்சொல்லுக்கும் பயந்தே எல்லாப் பெண்களும் உயிரைக் கொடுத்து ஆடுவார்கள்.

எகிப்தில் கன்னித்திரையைக் கிழிக்கும் உரிமை கணவனுக்கு இல்லை. கணவனின் கிராமத்தில் பிரசவம் பார்க்கும் தொழிலைச் செய்து வரும் தாதிக்குதான் அந்த உரிமை. முதலிரவுக்கு முன்னால் பெண் இருக்கும் அறைக்கு இந்த தாதி போவார். ஒரு மெல்லிய பட்டுத் துணி யைச் விரலில் சுற்றிக் கொண்டு கன்னித் திரையைக் கிழிப்பார். ரத்தக் கறை படிந்த அந்தப் பட்டுத்துணியை அவர் வெளியில் கொண்டுவந்து காட்டினால் தான் முதலிரவே நடக்கும். கறை இல்லா விட்டால் அந்தத் திருமணம் செல்லாது என அறிவிக்கப்படும். இந்தக் காலத்தில் கூட தொடரும் நடைமுறை இது! (இந்த சம்பிரதாயத்தை வைத்து பல தாதிகள் சம்பாதிக்கிறார்கள். ஒருவேளை, துணியில் கறை படியாவிட்டால் பெண்ணு டன் ரகசியமாகப் பேரம் பேசுவார் தாதி. பணமோ, நகையோ பரிசாக வாங்கிக் கொண்டு கறையை வரவழைப்பார். எப்படி? இடுப்பில் ஒரு சுருக்குப் பையில் இதற்காகத் தயாராகக் கண்ணாடித்தூள் வைத்திருப்பார். துணியில் அதைத் தூவிவிட்டு பிறகு அதைக் கொண்டு கீறி ரத்தம் வரவழைப்பார். பெண்ணுக்கு வலி உயிர் போகும்தான்... ஆனால் வாழ்க்கையே போவதைவிட இது எவ்வளவோ பரவாயில்லை என தாங்கிக் கொள்வார்கள்!).

நவீன யுகத்தில்கூட பழைய சம்பிர தாயங்களைக் கைவிட பலர் மறுக்கி றார்கள். இராக் தலைநகர் பாக்தாத் போன்ற பெரிய நகரங்களில் ஆடம் பர ஹோட்டல்கள் ஏராளம். புதுமணத் தம்பதிகள் முதலிரவையும், தேனிலவை யும் கொண்டாட அலங்கரிக்கப்பட்ட அறைகள் இங்கு உண்டு. இந்த அறை களில் வந்து தங்கும் ஜோடிகள் அறையைக் காலி செய்த பிறகு, அறையை சோதித் தால் படுக்கை விரிப்பு மட்டும் காணாமல் போயிருக்கும். கறைபடிந்த அதைத் தங்கள் கிழட்டு உறவினர்களிடம் காண் பிக்க அந்தத் தம்பதிகள் பத்திரமாக எடுத்துப் போயிருப்பார்கள்.

ஆனால், இப்படிப்பட்ட சடங்குகள் எவ்வளவு குருட்டுத்தனமானவை என் பதைக் கன்னித்திரை பற்றிய அறிவியல் உண்மைகள் புரிய வைத்திருக்கின்றன.
ஆசியக் கண்டத்தில் பழமைவாத கொள்கைகளில் இன்றைக்கும் பிடிவாதமாக இருக்கும் ஒரு சில நாடுகளில் திருமணமாகாத ஒரு பெண் பாதுகாக்க வேண்டிய முக்கியமான விஷயம் அவளது கன்னித்திரை! ‘அதுதான் ஒரு கன்னிப் பெண்ணின் முகம். முகமில் லாதவர்கள் வாழ முடியாது. கன்னித்திரை இல்லாத பெண்ணுக்கும் வாழ்க்கை இல்லை’ என்பார்கள்.

ஆனால், உடலைப் பொறுத்தவரை கன்னித்திரைக்கு எந்த வேலையும் இல்லை. உடலில் தேவையில்லாத உறுப்புகள் நிறைய இருக்கின்றன. குடல்வால் என ஒரு பகுதி உடலில் இருக்கிறதே... அதற்கு உடலின் செயல்பாட்டில் எந்த பங்கும் இல்லை. ஏதோ அலங்காரப் பொருள் மாதிரி வீணாக அது உடலில் இருக்கிறது. அது இல்லாமலேகூட உடல் இயல்பாக இருக்கும். அது மாதிரி கன்னித்திரையும் தேவை இல்லாத ஓர் உறுப்புதான்!

அது கிழியாமல் இருந்தால், அந்தப் பெண் மட்டும் இதுவரை செக்ஸ் அனுபவிக்காத கன்னிப் பெண் என்றும் அர்த்தமில்லை. (அதிர்ஷ்டவசமாக ஆண்களுக்கு இப்படி எந்த திரையையும் சிருஷ்டியில் வைக்கவில்லை. அதனால் அவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்!).



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 5 of 13 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக